Sunday, 22 May 2016

வங்காள இனப்பற்று

வங்காள இனப்பற்று
.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.ஃ.

மேற்கு வங்க மாநிலமும் வங்கதேசநாடும் வங்காள மொழிபேசும் ஒரே இனத்தவர்.

ஆனால் வெவ்வேறு மதத்தவர்.

பங்களாதேசிலிருந்து இந்தியாவிற்குள் அகதிகள் நுழைவது அதிகரித்து வருவதை ஒட்டி

மேற்குவங்கத்தில் பாஸ்போட் இன்றி ஊடுருவியுள்ள பங்களாதேஸ் நாட்டினரை வெளியேற்றுவேன் என்று மோடி கூறினார்.

இதனால் கோபமடைந்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி
"எங்கள் சகோதரர்களை வெளியேற்ற மோடி யார்"

"துணிச்சலிருந்தால் தொட்டுப்பார்"
என்று கடுமையாக சாடியுள்ளார்.

The BJP's prime ministerial candidate had threatened to deport illegal immigrants from the neighbouring country if his party won the Lok Sabha elections.

"Modi has no right to say he will oust Bangladeshis from West Bengal. Who is he? He is nobody," Banerjee, chief of the Trinamool Congress, said.

"I dare you to touch them [Bangladeshis]. Modi is playing divisive politics in West Bengal," said Banerjee, whose state borders Bangladesh.

முன்பாவது இந்தியா பங்களாதேஷ் எல்லைகள் சரியாக வரையறுக்கப்படாமல் இருந்தன.
இருதரப்பிலும் சில கிராமங்கள் எல்லைதாண்டி இருந்தன.
எல்லைதாண்டிய கிராமங்களை  அவரவர்களே எடுத்துக்கொள்ளுமாறு செய்து மோடி அரசு அதனை சரி செய்தது.

அதன்பிறகும் வங்காளதேச மக்கள் இந்தியாவிற்குள் எந்த தடையுமில்லாமல் வந்து போவதற்குக் காரணம் மேற்குவங்க மாநிலத்தின் இனப்பாசம்தான்.

ம.பொ.சி கூறினார். வங்காளியரின் இனப்பற்றுக்கு ஈடான ஒன்று இந்த உலகில் உண்டோ?

அந்த இனப்பற்றுதானேஅந்தமானைத் தமிழரிடமிருந்து அவர்கள் பறித்துக்கொள்ள உதவியது?!

நான் நமது ஈழத்தமிழனை நினைத்து கண்ணீர் விட்டேன்.

-ஆதி பேரொளி

No comments:

Post a Comment