Thursday, 26 May 2016

2006ல் காலில்போட்டு மிதித்ததுடன் 2016ல் காறியும் துப்பிய மலையாளி

2006ல் காலில்போட்டு மிதித்ததுடன்
2016ல் காறியும் துப்பிய மலையாளி

தமிழகத்தின் எல்லைக்குள் புகுந்து செண்பகவல்லி அணையை உடைத்த மலையாள வனத்துறை.

சிவகிரி விவசாயிகள் சங்கம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு
8 வார காலத்திற்குள் அணைகட்ட 03.08.2006 அன்று உத்தரவிடப்பட்டது.

பத்து ஆண்டுகளாக அந்த தீர்ப்பை மதிக்கவில்லை மலையாள அரசு.

எட்டு வாரத்தை பத்து ஆண்டுகளாக எண்ணிக்கொண்டேயிருக்கும் கையாலாகாத உச்சநீதிமன்றமும் ஒன்றும் செய்யவில்லை.

தமிழக வந்தேறி அரசுகள் அதனைக் கண்டுகொள்ளவும் இல்லை.
என்ன செய்தன தெரியுமா?

1981ல் கேரள வனத்துறை தமிழக எல்லைக்குள் வந்து செண்பகவல்லி அணையை உடைத்துவிட்டு போனது.
அன்றைய முதல்வர் மலையாள எம்.ஜி.ஆர் அதைத் தட்டிக்கேட்கவில்லை.

கருணாநிதி 1987-1991 வரை மலையாளிகளை கெஞ்சிக்கொண்டிருந்தார்.
உடைந்த அணையையாவது கட்டித்தாருங்கள் என்று.

அதன்பிறகு ஜெயலலிதா 5,50,000 ரூபாய் பணம் கொடுத்து கெஞ்சினார்.

பணத்தையும் வாங்கிக்கொண்டு செண்பகவல்லி அணையைக் கட்டித்தரவும் இல்லை மலையாளிகள்.

வாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள்
சிவகிரி பகுதியில் 33 குளங்கள் நிரம்ப நீராதாரமாகவும்,

சங்கரன்கோயில் வட்டத்தில் 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும்,
அப்பகுதிக்கு மக்களுக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை இன்று இல்லை.

திருநெல்வேலிக்காரன் பெருமை பேசுபவர் இதனையும் சேர்த்து பேசுங்களேன்
மலையாளிகள் உங்கள் இடத்தில் புகுந்து உங்கள் சோற்றில் மண்ணள்ளிப் போட்டு வயிற்றில் அடித்ததை.

இது 1773ல் சிவகிரி ஜமீனால் கட்டப்பட்டது.
சிவகிரி ஜமீன் பற்றி பெருமையாக எழுதும் மறவர் சாதி வலைத்தளங்கள் இதனை மட்டும் ஏனப்பா குறிப்பிடவில்லை?

போனவாரம் அணையின் மீதமிருந்த தடுப்புச் சுவரையும் இடித்தது மலையாள அரசு.

கேரளாவில் பஞ்சமோ தண்ணீர் பற்றாக்குறையோ இல்லை.

  உச்சநீதி மன்றத்தை மதிக்காத
அப்பாவி தமிழ் மக்களின் உணவையும் தண்ணீரையும் பிடுங்கும் மலையாள அரசு.
இதன் மூலம் தமிழர்கள் மீதான இனவெறியைத்தான் காட்டுகிறது.

எட்டு கோடி தமிழர்களே
நீங்கள் ஒன்றரை கோடி சிங்களவனிடம் அடி வாங்குங்கள்.
அவனிடம் ஒரு இராணுவம் இருக்கிறது.

ஆனால் உணவுக்கு உங்களை நம்பியிருக்கும்
ஒன்றரை கோடி மலையாளிகளிடம்
அடிவாங்குவது
எந்த வகையிலும் சகிக்கவே முடியாதது.

No comments:

Post a Comment