Tuesday, 22 July 2025
தமிழ்தேசிய சொர்க்கம்
Saturday, 8 September 2018
ஒரு மதம் ஒரு இனத்தை என்னவெல்லாம் செய்யமுடியும்?
ஒரு மதம் ஒரு இனத்தை என்னவெல்லாம் செய்யமுடியும்?
ஒரு கரும்புச்சாறு கடைக்குச் சென்றேன்.
பர்தா (புர்கா) போட்ட பெண்தான் அதை நடத்திவந்தார்.
நான் அவரை "அக்கா" என்றுஅழைத்தேன்.
அவர் புன்னகைத்தபடி "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டாள்.
பதிலாக "நான் முஸ்லீம் இல்லை" என்று கூறினேன்.
புரிந்துகொண்ட அந்த அக்கா கூறினார் சேலை மட்டும் கட்டி வந்தால் எல்லாரும் "அக்கா" என்று அழைப்பார்களாம்.
பர்தா போட்டுக்கொண்டு வந்தால் இசுலாமியர் மட்டுமே "அக்கா" என்று அழைப்பார்களாம்.
ஒரு உடை அது அளிக்கும் தோற்றம் ஒருவரது அடையாளத்தை மாற்றி பிறரிடமிருந்து அந்நியமாக்கிவிட்டது பார்த்தீர்களா?!
உறவினரல்லாதோரையும் முன்பின் தெரியாதோரையும் அக்கா, அண்ணா, அம்மா, ஐயா, தம்பி, மாமா என்று உறவுமுறை சொல்லி அழைப்பது நம் பண்பாடு.
அவ்வாறு இசுலாமியரல்லாத யாராவது ஒரு பர்தா போட்ட பெண்ணையோ அல்லது மீசையில்லாத தாடி வைத்த ஆணையோ சகோதர உறவு சொல்லி அழைத்து நீங்கள் பார்த்துள்ளீர்களா?!
பாய் என்று வேண்டுமானால் அழைப்பர்.
இது கவலைப்படவேண்டிய விடயம்.
நான் மட்டும் ஒரு இசுலாமியத் தமிழனாகப் பிறந்திருந்தால்,
"ஒரு மதம் ஒரு இனத்தை என்னவெல்லாம் செய்யமுடியும்"
என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருப்பேன்.
அதில் ஒரு இனத்து மக்களின் மீது 'ஒரு அந்நிய நாட்டு மதம்' அதன் அந்நிய மொழி, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கத்தைத் திணித்து சொந்த மண்ணிலேயே அம்மதத்தை தழுவியோரை எப்படி அகதிகளாக ஆக்குகிறது என்று விரிவாக எடுத்துரைப்பேன்.
அத்தோடு இசுலாமிய மதவெறியர்கள் இசுலாத்தில் சொல்லப்படாத மற்றும் கட்டாயமாக்கப்படாத விடயங்களையும் தன் மதத்தாரிடம் புகுத்தி எப்படி "பூமியில் ஒரு ஏலியன்" போல திரியவிடுகிறார்கள் என்பதையும் விரிவாக எழுதுவேன்.
நான் பிறந்த மதத்தைப் பற்றி இப்படி எழுதலாம் என்றால் அது ஒரு மதமே இல்லை.
அது மதமாகவே இருந்தாலும் எனது இனத்தின் பண்பாட்டை பெரிதாகப் பாதிக்கவும் இல்லை.
நான் பிறந்த மதத்தின் வெறியர்களும் இசுலாமியரைப் பார்த்து எதிர்வினையாக மதவெறியை வளர்த்துக் கொண்டார்களே தவிர தானே வெறிபிடித்து அலைவதும் இல்லை.
தமிழகத்தைப் போலவே ஈழத்திலும் 1984 வரை ஒன்றுக்குள் ஒன்றாக இருந்த சைவ-கிறித்துவ தமிழர்களும் இசுலாமியத் தமிழர்களும் அதன் பிறகு மிக எளிதாக பிரித்தாளப்பட்டு ஒருவரை ஒருவர் கொலை செய்துகொண்டனர்.
இன்று இருதரப்பினரும் பழைய கதைகளையெல்லாம் மறந்து ஒருவரை ஒருவர் கொல்லக் காத்திருக்கும் நிலை உள்ளது.
ஆக ஒரு இனத்தில் பின்பற்றப்படும் மதம் என்பது
ஒரு வீட்டில் வளரும் (காட்டு)யானை போன்றது.
எப்போது மதம் பிடித்து வீட்டை ரெண்டாக்கும் என்று தெரியாது.
என்னைப் பொருத்தவரை வாழ்வதற்கு மதமோ கடவுளோ தேவையில்லை.
என் இனத்தில் அதன் பண்பாட்டில் அதன் கலாச்சாரத்தில் இல்லாத எந்த சிறப்பம்சம் ஒரு மதத்தில் உள்ளது என்று எனக்குப் புரியவில்லை.
இனத்தை துண்டாடும் மதங்கள் எனக்குப் பிடிப்பதில்லை.
குறிப்பாக இசுலாம் மதத்தை நான் அடியோடு வெறுக்கிறேன்.
ஆனால் இசுலாமியத் தமிழரை அல்ல!
இசுலாமியத் தமிழரை அவர்களது மதத்தை உதறித்தள்ளிவிட்டு வாருங்கள் என்றெல்லாம் நான் கூறமாட்டேன்.
மதம்தான் பெரிது இனம் பிறகுதான் என்பவன் எந்த மதத்தான் ஆனாலும் இனத்துரோகி ஆவான்.
தமிழகத்தில் பெரும்பான்மையான இசுலாமியர் அவ்வாறு இல்லை.
அவர்கள் இப்படியே இருந்துவிட்டால் நம் இனத்திற்கு நல்லது.
அவ்வளவுதான்.
படம்:-
கார்த்திகேயன் மற்றும் யாஸ்மினா திருமணத்தை விபச்சாரம் என்று கண்டிக்கும் திருவையாறு இசுலாமிய அமைப்பு
Tuesday, 12 December 2017
உடுமலை சங்கரின் கிராமத்தில் சாதிமறுப்பு திருமணங்கள்
உடுமலை சங்கர்
படுகொலை செய்யப்பட்ட சங்கரின் கிராமம் உடுமலை அருகே கொமரலிங்கம்.
மொத்தம் 1600 குடும்பங்கள் வரையுள்ள அந்த கிராமத்திலேயே 30 குடும்பங்கள் வரை சாதி தாண்டி திருமணம் செய்தவர்கள் என்று
தலித்திய வெறி ஊடகமான வினவே பதிவு செய்துள்ளது.
(தலைப்பு: சங்கரின் கொமரலிங்கம் : தமிழகத்தின் பெருமை – நேரடி ரிப்போர்ட்)
வினவு செய்த ஒரு திரிபு வேலை அவரை பள்ளர் என்று பதிவு செய்தது.
(கொமரலிங்கம் 1500 குடும்பங்கள் வரை பள்ளர் வாழும் கிராமம்)
உண்மையில் சங்கர் ஒரு (தெலுங்கர்) சக்கிலியர் ஆவார்.
Tuesday, 21 June 2016
ஈழத்து முகாமிலிருந்து மருமகளை அழைத்துவந்த தமிழகம்
எங்கள் உறவுகள் எப்போது சுதந்திரமாக இருக்கப்
போகிறார்கள்?
தமிழகத்திற்கு மருமகளாக
வந்திருக்கும் வவுனியா விமலினியின் சோகம்!
23 08 12
மாமாவும் தமிழ் உறவுகளும் கூப்பிட்டனர்
என்று இங்கு வந்துவிட்டேன்.
ஆனாலும் ஆதரவற்ற
நிலையில் என் தங்கையும் தம்பிகளும்
அங்கு இருக்கிறார்கள்.
அவர்களை நினைத்தால்தான்
மனதுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.
இலங்கையின் வவுனியாவில் இருந்து தமிழகத்து மருமகளாக வந்து இருக்கும் விமலினியின் முகத்தில் கல்யாணக் களையைவிட உறவுகளின் மீதான கவலைதான் அதிகம்.
தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளரான பாலகுருவின் வீட்டுக்கு மருமகளாக வரப்போகிறார் விமலினி.
ஆகஸ்ட் 25-ம் தேதி இவருக்கும் பாலகுருவின் மூத்த மகனான பாண்டியனுக்கும் சென்னையில் திருமணம்!
2009-ம் ஆண்டு இலங்கையில் இறுதி யுத்தம் உக்கிரமாக நடந்தபோது முள்ளிவாய்க்கால் அருகே வட்டுவாகலில் பங்கர் ஒன்றில் பதுங்கியிருந்த விமலினியின் குடும்பத்தை பங்கரைத் துளைத்துக்கொண்டு வெடித்த குண்டொன்று சின்னாபின்னமாக்கியது.
விமலினியின் தாய் சரோஜாமலர், தந்தை இருதயராஜ் அங்கேயே இறந்துவிட...
தங்கை சரோஜினி, தம்பிகள் சதீவகாந்த், ஜீவகாந்த் ஆகியோருடன் உயிர்பிழைத்தார் விமலினி.
விமலினிக்குத் தலை, நெஞ்சு, இடுப்பு, கால் பகுதியில் கூரிய உலோகங்கள் துளைத்து இருந்தன.
''எங்களை இலங்கை இராணுவம் பம்பைமடு முகாமில்
கொண்டுவந்து வைத்திருந்தது.
என் அண்ணன்
கமலகாந்த் புலி போராளி என்பதால்,
மற்றவர்களைவிட எங்களுக்குச் சித்திரவதைகள்
அதிகம்.
அந்த முகாமில் வைத்துதான்
மாமாவை (பாலகுரு) முதல்முறையாகப்
பார்த்தேன்.
(அவர் உறவுக்கார மாமா இல்லை)
அவர் தமிழகத்தில் இருந்து மக்களனைவருக்கும் ஆறுதல் சொல்ல
வந்திருந்தார்.
எங்களுக்கு ஆறுதல் கூறியவர்,
மறுநாள் என்னிடம் வந்து,
தமிழ்நாட்டு மருமகளாக வரச் சம்மதமா?
என்
மகனைத் திருமணம் செய்துகொள்கிறாயா?’
என்று கேட்டார்.
பதில் சொல்லும் சூழலில் நான்
அப்போது இல்லை.
அப்போது என் பின்னங்காலில் நுழைந்த குண்டின்
பாகங்களை அகற்றி சதையை வெட்டி எடுத்து இருந்தார்கள்.
எதிர்காலத்தில் என்னால் நடக்க
இயலுமா என்று கூடத் தெரியாமல் இருந்தேன்.
சிகிச்சை அளித்த செவிலியர்களோ தலையிலும் நெஞ்சிலும் இருக்கும் உலோகத் துண்டுகளை அகற்றும் வசதி அங்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
நான் உயிரோடு இருப்பேனா என்றுகூட எனக்குத் தெரியாது.
அந்தச் சூழலில் மாமா இப்படிக் கேட்டால், என்ன
பதில் சொல்லுவேன்?
நானும் சென்றுவிட்டால் என்
தம்பிகளையும் தங்கையையும் யார் பார்த்துக்கொள்வார்கள்?
அதனால் மாமாவிடம் நான் மறுக்கவும் இல்லை,
சம்மதிக்கவும் இல்லை.
மாமா கிளம்பிச்
சென்றுவிட்டார்.
என் தம்பிகளும் தங்கையும், ஏன்
அக்கா, பேசாமல் சென்னை சென்று இருக்கலாம்
அல்லவா?
அங்குதான் சண்டை இல்லை;
சித்திரவதை இல்லை;
யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். தினமும்
நிம்மதியாகக் குளிக்கலாம்.
உணவு உண்ணலாம்...’
என்று சொன்னார்கள்.
கண்ணீரைத் தவிர என்னிடம்
வேறு பதில் இல்லை.
இடையில் ஓர் ஆண்டு ஓடிவிட்டது.
அதற்குள்
நாங்கள் முகாமில் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சநஞ்சம் அல்ல.
இராணுவத்தினர் தலையில்
முகமூடி அணிவித்த
ஆட்களை அடிக்கடி அழைத்து வருவார்கள்.
எங்களில் கொஞ்சம் களையாக இருக்கும் பெண்களை வரிசையாக நிற்கவைத்து, அவர்களிடம் அடையாள அணிவகுப்பு நடத்துவார்கள்.
முகமூடி நபர், தலையை 'ஆம்’ என்று ஆட்டினால்
அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
அவள் அவ்வளவுதான்.
இப்படிச் சென்ற யாரும்
திரும்பி வந்ததே இல்லை.
நமக்கும்
இப்படி ஒருநாள் நடக்கும் என்றுதான்
நினைத்து இருந்தேன்.
அங்கு விடியும்
ஒவ்வொரு விடியலும் எமக்குச் சொந்தம் இல்லை.
இராணுவத்தினர் சொல்லும் நேரத்தில்தான் குளிக்க
வேண்டும்.
20, 30 பேராகச் சேர்ந்து குளிக்க
வேண்டும்.
சுற்றிலும் பிளாஸ்டிக் பேப்பர்
வைத்து மூடி இருந்தாலும்
மேலே திறந்தவெளியாகத்தான் இருக்கும்.
பக்கத்தில் உயரமான பகுதியில் இருந்து நாங்கள்
குளிப்பதைப் பார்த்துக்கொண்டும் ஏதோ கதைத்துக்
கொண்டும்தான் இருப்பார்கள்.
சிறு கற்களை எங்கள்
மீது எறிவார்கள்.
நாங்கள் சோப்பு போட்ட
பின்பு பாதியில் தண்ணீரை நிறுத்திவிடுவார்கள். எல்லாவற்றையும் சகித்துக்கொள்ள வேண்டும்.
2011-ல் மாமா மீண்டும் வந்து என்னிடம்
அதே கேள்வியைக் கேட்டார்.
தம்பிகளும் தங்கையும்
என்னிடம், அக்கா போய்விடு அக்கா.
சென்னை நல்ல
ஊர்.
நம் மக்கள் அவர்கள்.
நம் சகோதர, சகோதரிகள்.
உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள்’
என்று அன்று இரவு முழுவதும்
சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
மறுநாள் மாமா வந்தபோது தம்பிகள் எப்படியும்
பிழைத்துக்கொள்வார்கள்.
தங்கையை நினைத்தால்தான்
கவலையாக இருக்கிறது.
அவளுக்குப்
பாதுகாப்பான வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்தால்
வருகிறேன் என்றேன்.
தாராளமாகச் செய்கிறேன் என்றார்.
அதன்
பின்பே திருமணத்துக்குச் சம்மதித்தேன்.
விடயம்
தெரிந்தால் அவ்வளவுதான்.
இராணுவத்தினர்
சும்மா விட மாட்டார்கள்.
அதனால், இரகசியமாக
வைத்து இருந்தோம்.
ஒரு ஆண்டாக முகாமில் இருந்து என்னை அழைத்துச்
செல்ல ஏதேதோ காரணங்களைச் சொல்லியும்
இலங்கை அரசு விசா கொடுக்கவில்லை.
மாமா ஏதேதோ முயற்சிகள் எடுத்து ஜூலை மாதம் எனக்கு சுற்றுலா விசா வாங்கினார்.
ஜூலை 15-ம் தேதி அத்தான்
வந்து என்னை அழைத்து வந்தார்.
கிளம்பும்போதுகூட மனம் இல்லை.
இந்த மண்ணுக்காகத்தானே அத்தனை பேரும்
போராடினார்கள்!
பல ஆயிரம் பேர் உயிர்கொடுத்தார்கள்.
இந்த மண்ணைவிட்டுக்
கிளம்பிவருகிறோமே என்று வருத்தமாக
இருந்தது.
சென்னைக்கு இப்போதுதான் முதல்முறையாக
வந்து இருக்கிறேன்.
இங்கு இருக்கும்
சூழலே அமைதியாக இருக்கிறது.
அத்தான்
என்னை மெரினா பீச்சுக்கு அழைத்துப்போனார்.
மகாபலிபுரம் கூட்டிச் சென்று சிற்பங்களைக்
காட்டினார்.
ஊரை எல்லாம் சுற்றிக் காட்டினார்.
இந்த ஊரில் நீங்கள் எல்லாம்
எவ்வளவு மகிழ்ச்சியாக...
எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறீர்கள்?
எங்கள்
ஊரில் மட்டும் ஏன் அப்படி?
எங்கள் உறவுகள் எப்போது சுதந்திரமாக,
மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள்?’
என்று அத்தானிடம் கேட்டேன்.
அத்தானிடம் பதில் இல்லை!
நன்றி:-
ஆனந்த விகடன்
ஈழ மகான் தமிழ்
Saturday, 7 May 2016
யாரெல்லாம் தமிழர்?
யாரெல்லாம் தமிழர்?
இன்று நிறைய அறிவாளிகள் கேட்கும் கேள்வி
"யார் தமிழர்" என்பது?
பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் குடியேறிய வேற்றின மக்கள் இன்று வீட்டுக்குள்ளும் தமிழ் பேச ஆரம்பித்துவிட்டனரே
அவர்கள் தமிழரா?
பல நூற்றாண்டுகளுக்கு முன் வேற்றினத்தவர் மத்தியில் உலகம் முழுவதும் குடியேறிய தமிழரில் சிலர் இன்று தமிழும் வேறுமொழியும் கலந்த மொழியில் பேசுகின்றனரே
அவர்கள் தமிழரா?
உலகின் மொழியாராய்ச்சியாளரில் கிட்டத்தட்ட அனைவரும் தமிழைக் கற்றுள்ளனர்,
அவர்களில் சிலர் தமிழரைவிட சிறப்பாக தமிழுக்குத் தொண்டு செய்கின்றனரே
அவர்கள் தமிழரா?
வெளிநாடுகளில் குடியேறி வேற்றினப் பெண்ணை மணந்து அங்கேயே தங்கிவிட்டவரின் பிள்ளைகள் தமிழரா?
எத்தனையோ வேற்றின அரசர்கள் தமிழரை ஆண்டனர்,
அப்போது வலுக்கட்டாய இனக்கலப்பு ஏற்பட்டிருக்கலாம்தானே?
தமிழர் வேற்றினத்தவரைத் திருமணம் செய்வதை தனித்தமிழியம்(தமிழ்த் தேசியம்) மறுக்குமானால் இது இனவெறி என்று ஆகாதா?
முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்,
தமிழ் பேசுபவரெல்லாம் தமிழரல்லர்.
தமிழர் ,
அவர் பார்ப்பனரோ,
இசுலாமியரோ,
கிறித்தவரோ,
ஆதித்தமிழரோ,
மலைவாசியோ,
வெளிநாட்டில் வாழ்பவரோ,
தமிழ் தெரியாதவரோ,
வேற்றினத்தில் மணமுடித்தவரோ,
தொழிலாளியோ ,
முதலாளியோ,
வேறுநாட்டில் தாம் தமிழ்வழிப் பரம்பரை என்று தெரியாதவரோ,
'தமிழன் தமிழனே'.
இனம் என்பது பிறப்புவழி வருவது.
அதை நினைத்தாலும் மாற்றவியலாது.
முதலில் யார் தமிழர் என்று வரையறுப்போம்.
இப்போது எடுத்துக்காட்டாக,
நான் ஒரு மராட்டிப் பெண்ணை திருமணம் செய்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
எங்கள் குழந்தைக்கு தமிழ்ப்பண்பாட்டைக் கொண்டுசேர்க்க எந்த அளவு உரிமை எனக்குள்ளதோ
அதே அளவு மராத்திய பண்பாட்டைக் கொண்டு சேர்க்க என் மனைவிக்கு உரிமை உள்ளது.
எனவே, எனது குழந்தை இரு பண்பாடும் கொண்டதாக வளரும்.
எங்கள் வாரிசு முழுத் தமிழராகவோ அல்லது முழு மராத்தியாகவோ ஏற்கப்படமாட்டார்.
இப்போது எனது வாரிசு ஒரு தமிழருடன் திருமணம் புரிந்தால் எங்கள் பேரப்பிள்ளை தமிழராக ஏற்கப்படும்.
இதே எங்கள் பிள்ளை மராத்தியரை திருமணம் செய்ய எங்கள் பேரப்பிள்ளை மராத்தியாக ஏற்கப்படும்.
பாட்டி தாத்தா இருவரில் ஒருவர் வேற்றினத்தவர் என்பதால் தலைமுறையே வேற்றினமென்று ஆகாது.
குருதிவழிக் கலப்பு என்று எதுவும் கிடையாது.
தனித்தமிழ்க்கொள்கை அதாவது தமிழ்த்தேசியம் வேற்றினத்தவருடன் திருமணம் செய்துகொள்வதை எதிர்க்கவும் இல்லை.
(25 ஜூன் 2013 அன்று இட்ட முகநூல் பதிவு)
Saturday, 13 February 2016
பழந்தமிழர் கொண்டாடாத காதலா?
பழந்தமிழர் கொண்டாடாத காதலா?
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
மல்கிய துருத்தியுள் மகிழ்
துணைப் புணர்ந்து அவர்
வில்லவன் விழவினுள்
விளையாடும் பொழுது அன்றோ
(கலித்தொகை 35:13-14)
"யாரும் வந்துபோகாத ஆற்றுத்தீவில் (ஆற்று நடுவில் இருக்கும் மணல் திட்டு) காதலனுடன் இன்பமாகத் தழுவிக்கொண்டு விளையாடவேண்டிய விழா நாள் அல்லவா இன்று?!" என காதலனைப் பிரிந்த காதலி ஏக்கத்துடன் தன் தோழியிடம் கூறுகிறாள்.
நாம் இல்லாப் புலம்பாயின்
நடுக்கம் செய் பொழுதாயின் காமவேள் விழவாயின்
கலங்குவள் பெரிதென ஏமுறுகடுந்திண்டேர்கடவி
நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே
(கலித்தொகை 27:24-26)
காதலன் இல்லாத அவள் தனியளாய் நடுக்கத்துடன் இந்த (காமன்)விழா நாளில் கலங்கிப்போய் குழம்பிக்கொண்டு இருப்பாள் என்று
காதலன் தன் தேரை விரைவாகச் செலுத்தி அவளுடன் உடனிருக்க வந்துவிட்டானாம்.
நன்றி: சங்ககாலத்தில் காதலர் தினம் _sishri org
