Showing posts with label மதவெறி. Show all posts
Showing posts with label மதவெறி. Show all posts

Friday, 14 May 2021

நோன்பு கட்டாயமா?

நோன்பு கட்டாயமா?

இசுலாமியர்கள் மீது திணிக்கப்படும் ஒரு பழக்கம்தான் இந்த ஒரு மாத நோன்பு.
ஆனால் இஸ்லாமிய கொள்கைப்படி இது இறை வழிபாடு என்கிற கணக்கில் வராது!
இசுலாமிய நோன்பு வைக்கும் முறை மக்கள் பசியை உணரவேண்டும் என்றோ இறைவனை நினைக்கவேண்டும் என்றோ உருவாக்கப்பட்டது இல்லை!
அரேபிய பாலைவனத்தில் வெயில் உச்சத்திற்கு செல்லும் மாதத்தில் பகலில் ஓய்வெடுத்துக்கொண்டு இரவில் இயங்குவது வழக்கம். அந்த வழக்கத்தை இசுலாம் சட்டமாக்கியது.
ரமளான் மாதம் பல்வேறு காலநிலையிலும் வருகிறதே என்று சிலர் கேட்கலாம்.
அரேபிய நாட்காட்டி படி ஒரு வருடத்திற்கு (29×6 மாதம் + 30×6 மாதம்) 354நாட்கள். மீதமாகும் 11 நாட்களை அவர்கள் 3 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதமாக ஆக்கி சேர்த்துக் கொள்வார்கள். அதாவது அந்த வருடத்திற்கு 13 மாதங்கள் இருக்கும்.
நபிகள் நாயகம் தவறுதலாக இந்த 13-வது மாதம் வேண்டாம் என்று விட்டுவிட சொல்லிவிட்டார். இதனால் இஸ்லாமிய நாட்காட்டி காலநிலையுடன் பொருந்தாமல் சுழன்றுகொண்டிருக்கிறது. இதனால்தான் ரமலான் மாதம் வெவ்வேறு கால நிலைகளில் வருகிறது.
நோன்பு இருக்கும் பழக்கம் எல்லா மதங்களிலும் இருக்கிறது. அது உடலுக்கு நல்லது. ஆனால் பாலைவன சூழலுக்கு தொடர்பில்லாத மக்கள் அதிலும் உழைக்கும் வர்க்கம் பகல் முழுவதும் உண்ணாமல் உழைப்பது அதுவும் ஒரு மாதத்திற்கு தொடர்வது உடலுக்கு நல்லது இல்லை. ஓரிரு நாட்கள் இருக்கலாம். இடைவெளி விட்டு அடிக்கடி கூட இருக்கலாம். வாரம் இரண்டு நாட்கள் இருக்கலாம்.
நோன்பை இஸ்லாத் கடமை என்று கூறுகிறது கட்டாயம் என்று கூறவில்லை. இதை கடைபிடிப்பதால் இறையருள் கிடைக்கும் என்றோ தவறினால் தண்டனை என்றோ கூறப்படவில்லை.
நம் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தினர் இவர்கள் நாள் முழுவதும் உண்ணாமல் உழைப்பது மிகவும் கடினம். எனவே உடலுழைப்பு அதிகம் செலுத்துபவர்கள் இதனை விட்டுவிடலாம் என்பது என் கருத்து.
மதவாதிகளின் பேச்சை எப்போதுமே கேட்காதீர்கள். சளியை விழுங்கக் கூடாது என்று பிற்கால இசுலாமிய நூல்களில் கூறியதை உமிழ்நீரைக்கூட விழுங்கக் கூடாது என்று இஸ்லாமிய வெறியர்கள் மாற்றிவிட்டார்கள்.
மதத்தின் பெயரால் மக்களை வதைப்பதில் இவர்களுக்குத்தான் என்னே இன்பம்?!

நோன்பை இப்படித்தான் கடைபிடிக்க வேண்டும், இப்படித்தான் முறிக்கவேண்டும், இவரிவருக்கு விலக்கு என்று பிற்காலத்தில் வந்த இஸ்லாமிய நூல்கள் விளக்கம் கூறுகின்றன. அதில் கூட பசியை உணர்வதற்கு என்கிற சிந்தனை இல்லை.
ஆனால் குர்ஆன் நோன்பு பற்றி இரண்டு வசனங்களில் கூறி முடித்து விடுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
- குர்ஆன் 2:184

இதில் இறைவன் என்ற சொல் புரிந்துகொள்ள மொழிபெயர்ப்பாளரால் சேர்க்கப்பட்டது. உங்கள் முன்னோர் மீது கடமையாக்கப்பட்டது என்று வருகிறது. அதற்கு முன் இசுலாம் கிடையாது. என்றால் முன்னோரை கடைபிடிக்கவைத்தது எது? அரேபிய கலாச்சார சட்டம் என்று புரிந்துகொள்ளலாம்.

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
- குர்ஆன் 2:185

முதலில் குறிப்பிட்ட நாட்களில் என்று கூறுகிறது. இரண்டாவது ஒரு மாதத்தில் என்று கூறுகிறது. மாதம் முழுவதுமா என்பதும் தெளிவாகக் கூறப்படவில்லை.

பிற்கால விளக்கவுரை நூல்கள் நோன்பு பற்றி பல விடயங்களைக் கூறுகின்றன. ஆனால் குரான் நோன்பைக் கடைபிடிக்க அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

மனிதத்திற்குப் பிறகுதான் மதம்!
பசியில் வாடும் சக மனிதர் மீதான அக்கறையில் எழுதப்பட்டது இந்த பதிவு.

Monday, 8 March 2021

அரேபிய கலாச்சாரம்

அரேபிய கலாச்சாரம்
------------

நாள்: 02.12.2047
நேரம்: இரவு 11 மணி...

பிரபாகரன் படம் பொறித்த அந்த கார் ஆள் அரவமற்ற சாலையில் சென்று கொண்டிருந்தது.

"வேகமா போங்களேம்ப்பா"

"ஏன்டா?...
கார் ஓட்டும்போது இளையராஜா பாட்டு கேக்குறது என்ன ஒரு சுகம்?!"

ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்....

ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்

கொத்தமல்லி வாசம் ....
கொத்துகொத்தா வீசும்...
அப்படித்தான் மாமா அத்தமக நேசம்....
வெண்ணயிலே மாமா நெய்வாசம்...
எந் திண்ணையிலே மாமா உன் வாசம்...
ஹேய்...
வாம் முனிம்...

"என்னப்பா நிறுத்திட்டீங்க?"

"இந்த பாட்டு இந்த வரி வரைக்கும்தான் இளையராஜா பாட்டு மாதிரி இருக்கும்.
அப்பறம் கானா பாட்டா மாறிடும்.
தேவா மேல எனக்கு இது ஒரு பெரிய வருத்தம்.
அப்டியே முழு பாட்டா வந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்?!"

திடீரென்று கார் நிறுப்படுகிறது.
அதன் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

"என்னாச்சுப்பா?!"

(மென்மையான குரலில்)
"முகில்! மெதுவா எறங்கி கொஞ்சம் பின்னாடி போய் புதர்ல ஒழிஞ்சிக்கோ!
இந்தா என் செல்போன்.
இதுல சக்திவேல் னு ஒரு அவசர நம்பர் இருக்கா?!
அதுக்கு நாம இருக்குற எடத்த சொல்லி. ஒடனே ஆட்களோட வரச்சொல்லு.
சைலன்ட்ல போட்டுக்கோ!"

"அப்.."

"எதுவும் பேசாதே! சீக்கிரம் போ"

சிறுவன் இறங்கிக்கொள்ள

கார் பத்தடி முன்னே செல்கிறது.
திடீரென்று ஒரு சிறியரக சரக்கு வண்டி மறைவிலேயே வெளியே வந்து  சாலையை மறித்தவாறு நிற்க கார் நிறுத்தப்படுகிறது.
ஏழு பேர் கொண்ட கும்பல் வண்டியை சுற்றிவளைக்கிறது.

அதில் இருவருக்கு வயது நாற்பதுக்கு மேல்.
மற்றவர்களுக்கு பதினெட்டு முதல் இருபது வயது.
அனைவரும் அரைக்குல்லா, கண்மை, கொத்து தாடி, ஜிப்பா, முழங்காலுக்கு மேல் வெள்ளை லுங்கி என்று ஒரே மாதிரி உடை அணிந்திருந்தனர்.

"டேய் ரவூப்! கீழ எறங்குடா"

"ரவுப் இல்லடா! தமிழ்ச் செல்வன்! த்தூ!"

வண்டியை விட்டு தமிழ்ச் செல்வன் கீழே இறங்குகிறார்.

"ஏ இவன பாருங்கடா! நெத்தில சாணிப்பொடி!  பளபளனு சட்ட! ஜரிக வேட்டி! கழுத்துல வேல் ! இவன பாக்க நம்மாளு மாதிரி இருக்கா?! இருந்த கொஞ்ச நஞ்ச இரக்கமும் போச்சு"

"வேற எப்படிப்பா இருக்கணும்?! அல் கொய்தா கமான்டர் மாதிரி இருக்கணுமா?!
இப்பிடி மாறுவேசம் போட்டு அலையவா மார்க்கம் சொல்லுது?!
நீங்க பின்பற்றுரது இஸ்லாத் இல்ல அரேபிய கலாச்சாரம்.
வடக்க திருநீறு பூசின ஒரு இந்துவ காட்டு பாப்போம்!
நா இப்பவும் முஸ்லிம்தான்"

"கழுத்துல என்ன வேல்?! ஓகோ முப்பாட்டன் முருகனா?! அல்லாவுக்கு எதையும் இணைவைக்கலாமா?!"

"கடவுள் ஒருத்தர்தான்
அதுக்காக அம்மா அப்பா தாத்தா பாட்டியை நன்றியோட நினைக்கக்கூடாதுனு இருக்கா?!
முருகன் எங்க முப்பாட்டன்.
குரானும் பைபிளும் சொல்ற இப்ராகிமும் நோவாவும் மாதிரி முருகன் நம்ம முன்னோர்.
அவர் கடவுளா இருக்கார்னு நாங்க சொல்லலயே!
பிரபாகரன் மாதிரி அவரும் நமக்கு ஒரு வழிகாட்டி"

"ச்சீ வாய மூடு! நமக்குனு சொல்லாத! நாங்க வேற"

"ஒன்னோட மொகரய பாத்தாலே தெரியுது! நீ நம்மாளுதான்.
உன்னோட வீடு எந்த தெரு, உன் அப்பன் தாத்தன் என்ன தொழில்னு சொல்லு நீ என்ன ஆளுகனு சொல்றேன்.
இதோ இந்த செவத்தவன் பேச்ச கேக்காத.
இவன் வெளில இருந்த வந்த வந்தேறி"

"டேய்! யாரப் பாத்துடா வந்தேறின்ன அவர் நம்ம சமூகத்துக்கு எவ்வளவு செஞ்சிருக்காரு.
பச்ச துரோகி நீயெல்லாம் அவரப்பத்தி பேசலாமா?!"

"யாரு?! நீ நம்ம தங்கப்பா பேரன்தானே?!
உன் தாத்தா முஸ்லீமா மாறியும் பேர மாத்தாம இருந்தவரு!
வாய்ல நுழையாத பேர வச்சாதான் அல்லா ஒத்துக்குவானானு கேப்பாரு!
நீயென்னடான்னா உன் பிள்ளைய தமிழ் படிக்க அனுப்பாம பள்ளிவாசல்ல உருது படிக்க அனுப்புற?!
நேத்து மதம் மாறின ஆட்கள்தான்டா ரொம்ப கொதிக்கிறீங்க!
நான் பரம்பரை முஸ்லீம்.
எங்க கட்சியோட துணைத்தலைவர் ஒரு மரைக்காயர்.
அவங்க ஆயிரம் வருசமா முஸ்லீம்.
அவர்ட்ட பேசுறியா?"

"யாரு முத்துமீரான சொல்றியா?!
அவனென்ன... உங்க பெரிய தலைவரே யாழ்ப்பாணத்துல இருந்து  எங்கள துரத்திதான விட்டாரு!
காத்தான்குடி கொலையை நாங்க மறக்கமாட்டோம்"

"என்னோட பெரிய தலைவன் அது பத்தி விளக்கம் கொடுத்து மன்னிப்பு கூட கேட்ருக்காரு.
எங்க அண்ணனும் பல தடவ வெளக்கம் சொல்லிட்டாரு.
சிங்கள பொதுமக்களயே கொல்லாத தலைவர் தன்னோட இனத்து முஸ்லீம்களையா கொல்வாரு.
எல்லாம் உங்கள மாதிரி மதவெறி பிடிச்ச ரவுடி கும்பல்களால வந்த வினை.
உங்களால இங்கயும் அதுதான் நடக்கும்.
உலகமே முஸ்லீம்கள கைவிட்டமாதிரி தமிழ்நாடும் கைவிடும்.
எங்கள மாதிரி தமிழ் கலாச்சாரத்துக்கு மாறிடுங்க.
நாலு சுவத்துக்குள்ள மதத்த வச்சிக்கோங்க.
எங்க அண்ணன்தான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு"

"பெரிய நொண்ணன்.
அந்த ஆமவாயன் பெரிய மாமா நீ சின்ன மாமா ரெண்டுபேரும் சேந்து கூட்டிக் கொடுக்குறீங்க.
இதோட எங்க பொண்ணுங்க நாலு பேர கைமாத்தி விட்ருக்க.
இப்ப கூட கூட்டிக்கொடுத்துட்டுதான வார.
இந்நேரம் ஒரு முஸ்லீம் ரத்தத்துல ஒரு சைத்தனோட விந்து கலந்திருக்கும்"

"ஹ... ஹ... என்னது ரத்தமா?! ரத்தத்துக்கும் மதத்துக்கும் என்னப்பா சம்பந்தம்.
உன்னோட ரத்தத்துல ஒன்னோட இனம் வேணா என்னனு பாக்கலாம்.
மதம் என்னனு பாக்கமுடியாது.
  ஆசப்பட்டவங்கள அவங்க பெத்தவங்க சம்மதத்தோட சேத்துவச்சேன்.
இதுல என்ன தப்பு?!
இதே நீங்க எத்தன பேருக்கு பொண்ணு கொடுத்து முஸ்லீமா மாத்திருக்கீங்க?!
எத்தன பொண்ணுகள மடக்கி மதம் மாத்தி கல்யாணம் பண்ணிருக்கீங்க?!
அதுக்கு பேரு என்ன?!
அதுக்கு கூலியா அல்லா சொர்க்கத்துல பொண்ணுங்கள.."

அதிலொரு இளைஞன் எறிந்த ஒரு பெரிய கல் தமிழ்ச் செல்வன் தலையில் விழ அவர் மயங்கி சரிகிறார்.

"டேய் உன்னாலதான்டா என் நிஷா எனக்கு கெடைக்காம போய்ட்டா?!
காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்துவந்தவன் கூட்டிட்டு போனானாம்.
ஒக்காலி சாவுடா! சாவுடா!"

என்றவாறு கத்தியால் வயிற்றில் பலமுறை குத்துகிறான்.

தூரத்தில் அதிவேகமாக கார் வரும் வெளிச்சம் தெரிகிறது.

ஒருவன் ஆடு வெட்டும் கத்தியால் தமிழ்ச் செல்வன் கழுத்தை வெட்டிவிட்டு தமிழ்ச் செல்வனது காரையும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடுகின்றனர்.

பின்னால் வந்த ஆட்டோ அங்கே வந்து நிற்கவும் இவர்கள் புறப்படவும் சரியாக இருக்கிறது.

"டேய் என் தம்பிக்கு மட்டும் எதாவது ஆச்சு உங்க வம்சமே இருக்காதுடா.."

என்கிற குரல் தப்பிச் செல்பவர்களின் காதில் விழுந்தது.

தமிழ்ச் செல்வனை தூக்கிக் கொண்டு ஆட்டோ எதிர்திசையில் பயணமானது.

காருக்குள் யாருமே பேசவில்லை சிறிது நேரம் கழித்து ஒருவன் பிளேயரை ஆன் செய்தான்.

ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்....

ஜிங்குன ஜிங்குன ஜனஜம்
தஜம்ஜம்
ஜிங்குன ஜிங்குன ஜனஜம்...

கொத்தமல்லி வாசம் ....
கொத்துகொத்தா வீசும்...
அப்படித்தான் மாமா அத்தமக நேசம்....

வெண்ணயிலே மாமா நெய்வாசம்...
எந் திண்ணையிலே மாமா உன் வாசம்...
ஹேய்... வாம் முனிம்மா வா...

"ச்ச எவ்வளவு நல்ல பாட்டுய்யா! இத அப்டியே முழுசா ஒரு பாட்டா போட்ருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்.
கெடுத்துட்டானுகளே..."

முகநூலில் 05.09.2021

Tuesday, 7 January 2020

கதிர்காமம் நமதே














கதிர்காமம் நமதே!

 இலங்கையில் தென்கோடியில் முழுக்க சிங்களவர் நிறைந்திருக்கும் பகுதியில் தமிழீழ எல்லைக்கு சற்று அப்பால் இருக்கிறது கதிர்காமம்.

 இங்கே இருக்கும் முருகன் கோவில் உலகப்புகழ் பெற்றது.

 திருப்பதி, காளத்தி, சபரிமலை போல வேற்றினத்தார் குடியேறி தமிழரிடமிருந்து ஆக்கிரமித்துக் கொண்ட மற்றொரு புனித மண்.

 இலங்கையில் பௌத்த மதவெறி தலைதூக்கும் முன் சிங்களவரும் தமிழரும் தமது மதம் தாண்டி பிறமத தெய்வங்களையும் வணங்கியே வந்துள்ளனர்.
 இசுலாமியர் கூட கதிர்காமம் வந்து வணங்கியுள்ளனர்.
 50 ஆண்டுகள் முன்புவரை கூட தீமிதிக்கும் சடங்கில் பங்கெடுத்துள்ளனர்.
 கைவிடப்பட்ட சிறிய தர்கா ஒன்று கோவில் வளாகத்தினுள் இருக்கிறது.

 கதிர் என்றால் சூரிய ஒளி.
காமம் என்றால் ஊர்.

 கதிர்காமம் மிகப்பழமையான பின்னணியைக் கொண்டது.
 என்றாலும் சான்றுகளின் படி தமிழருக்கு சாதகமான ஆதாரங்களே சிங்களவர் முன்வைக்கும் சான்றுகளை விட பழமையானவை.

 கி.பி. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் தாட்டியன் என்பவனின் கல்வெட்டு (Epigraphia Zeylonica, Vol 3, PP 216 - 219) கதிர்காமத்தில் உள்ளது.
 இதில் இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்றும் கிரிவிகாரை என்னும் புத்தமடத்திற்கு தானம் அளித்தான் என்றும் கூறப்பட்டுள்ளது.

   இலங்கையில் முருகன் பற்றிய முதல் குறிப்பு, கி.பி 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சூளவம்சத்தில் வருகின்றது.
 அதாவது இரண்டாம் காசிபனின் (கி.பி 652 – 661) மகனான மானவர்மன், குமாரனை வழிபட்ட செய்தி அதில் உண்டு.

 கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் ஒரு முக்கிய சான்று.

 அதில்,
 கருங்குரங்குகள் பலா மரத்தின் சுளைகளைக் கீறி சண்டையிட்டு உண்டபடி,
 மாமரங்களிலும் வாழை மரங்களிலும் பாயும்
அத்தகைய அழகிய ஈழநாட்டில் திர்காமம் அமைந்திருக்கிறது.
 அந்தக் கதிர்காமம் மிகப்பழைமையான ஊர்.
 அதனருகே வடக்கிலிருந்து வந்து பாயும் அழகான ஆறு உள்ளது.
 அதன் அலைகள் கதிர்காமத்தில் வீசுகின்றன.
 அந்த ஆறு, மாணிக்கங்களை உருட்டியபடி சரிவாக ஓடிவருகின்றது.
 யானைகள் நிறைந்த மலையில் வள்ளியை மணந்த பெருமான், பொன்மாணிக்க வடிவில் கதிர்காமத்தில் அமர்ந்திருக்கிறான்.
 அவன் வேல் தரித்தவன். அவ்விறைவனை அனுமான் வணங்கியுள்ளான்.
 ஆயிரம் கோவில்கள் இருக்க, கோடி மலைகள் இருக்க அவற்றையெல்லாம் விடுத்து கதிர்காமத்தில்தான் அடியவர்க்கு இரங்கிய முருகன் வருகிறான்.
 என்றெல்லாம் பாடுகிறார் அருணகிரியார்.

 திருப்புகழில் கதிரகாமம், கதிர்காமம், கதிரகாம மாநகர், கதிரகாம மூதூர், கதிர்க்காமம், கதிரகாமக் கிரி, கதிரகாம வெற்பு என்றெல்லாம் இத்தலம் போற்றப்படுகிறது.

 மேலும் அருணகிரிநாதர்,
கதிர்காமக் கந்தன் “வனமுறை வேடர் அருளிய பூசையில்” மகிழ்ந்தவன் என்று சொல்கிறார்.
 வாய்கட்டிப்பூசை, திரைமறைத்த கருவறை, அருவ வழிபாடு முதலான இன்றைய வழிபாட்டு முறைகளை அவர் பாடவில்லை.
 பழங்குடிகளான வேடர்களின் வழிபாடு பற்றி கூறியுள்ளார்.

 ஆனால் கோவிலும் சிலையும் இருந்துள்ளதை அவர் பாடியுள்ளார்.
 “கனகமாணிக்க வடிவம் கொண்டவன்” என்றும்,
 “கதிர்காமத்தின் மத்தியிலுள்ள சோதி மண்டபத்தில், இந்திரநீல மாணிக்கத்தால் செய்யப்பட்ட சிம்மாசனத்தில் வள்ளி, தெய்வானை, வேல் என்பன அருகிருக்க கதிர்காம நாதர் வீற்றிருக்கிறார்” என்றும் பாடியுள்ளார்.

 ஆங்கிலேய ஆட்சியின்போது இக்கோவிலை அரசிடம் ஒப்படைக்க ஆங்கிலேயர் வலியுறுத்தியபோது சர். பொன்னம்பலம் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தடுக்கப்பட்டது.

 கதிர்காமத்துக்கு 1819இல் வருகை தந்த “சர் ஜோன் டேர்வி” எனும் ஆங்கிலேயர்,
 “கிளர்ச்சிக் காலத்தில் இங்கிருந்த விக்கிரகம் அகற்றப்பட்டு காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
 எனினும் இன்றும் முன்பு போலவே கருவறையை மிகக் கடுமையாகப் பாதுகாத்து வருகிறார்கள்.”
 என்கிறார்.
 அவர் சொல்கின்ற கிளர்ச்சி 1818இல் இலங்கையையே உலுக்கிய ஊவா - வெல்லசை கலவரம் ஆகும்.

 இந்த கலவரத்தின்போது சிங்களவர்கள் கதிர்காம ஆலயத்தைக் கைப்பற்றினர்.
 தமிழ் அந்தணர்கள் கவர்னர் ராபர்ட் பிரவுன்ரிக் இடம் முறையிட்டதன் பேரில் சிங்களர்களை விரட்டிய ஆங்கிலேயர் மீண்டும் அந்தணர்களிடம் ஒப்படைத்து இராணுவ பாதுகாப்பு கொடுத்தனர்.

 சில காலம் கழித்து இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டதும் மீண்டும் சிங்களர் இதைக் கைப்பற்றினர்.

 இப்படித்தான் கதிர்காமம் சிங்களவரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

 ஆங்கிலேயர் வெளியேறிய பிறகு சிங்களவர்கள் கோவிலுக்கு வரும் மலைப்பாதையை அடைத்து பிரச்சனை செய்தனர்.

 இதனால் தத்தாராமகிரி சுவாமிகள் என்பவரது தலைமையில் ஆலயத்தை மீட்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 1946 இல் அவர் தலைமையில் மலையேறிய தமிழர்கள் தாக்கி விரட்டப்பட்டனர்.

 1960 களில் அரசாங்கம் இப்பகுதியை அபிவிருத்தி பிரதேசம் என்று அறிவித்தது.

 அதன்பிறகு தத்தாராமகிரி இருப்பிடமான கொழும்பில் உள்ள இராமகிருஷ்ண மடத்தை பல முறை தாக்கிய சிங்களர்கள் 1970 இல் இராணுவத்தினர் ஆதரவுடன் முற்றிலுமாக கொள்ளையடித்தனர்.

 1972 இல் தத்தாராமகிரி கோவிலைச் சுற்றி கட்டியிருந்த கட்டிடங்கள் அரசாங்கத்தால் இடிக்கப்பட்டது.
 கோவிலைச் சுற்றி தத்தாராமகிரி வசம் இருந்த நிலங்களையும் பிக்குகள் அரச ஆதரவுடன் ஆக்கிரமித்தனர்.

 சிங்கள பௌத்த பேரினவாதம் தலைதூக்கிய பிறகு ஜே.ஆர். ஜெயவர்த்தனா தேர்தல் வாக்குறுதியில் தனது முதல் கையெழுத்தே கதிர்காமத்தை சிங்களருக்கு எழுதி கொடுத்து போடுவதாக இருக்கும் என்று வாக்களித்தார்.

 1978 இல் இது பற்றி வெளியான செய்தியில் கதிர்காமத்தைக் கைப்பற்றி பௌத்த விகாரையாக மாற்றிக் கொண்டிருந்த சிங்கள மடாதிபதிகளுக்கு அக்கோவில் மற்றும் அதைச்சார்ந்த 200 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுப்பதாகவும்
 அதுவும் தலைமை மடாதிபதி 'ரத்மலானே ஸ்ரீ சித்தார்த்த தேரோ' என்ற பிக்குவின் பெயருக்கு தனிச்சொத்தாக கொடுப்பதாகவும் இருந்தது.

 ஆனால் பெரும் முயற்சிசெய்து இதை நடைபெற விடாமல் தமிழ் அரசியல்வாதிகள் அடங்காத் தமிழர் சுந்தரலிங்கம் தலைமையில் செயல்பட்டு தடுத்துவிட்டனர்.

 முதலில் நுழைவாயிலில் இருந்த தமிழ் ஓம் அகற்றப்பட்டது.

 இன்று கதிர்காமம் கோவில் நுழைவாயிலில் கொட்டையான சிங்கள எழுத்துகளில் ருகுணு மகா கடரகம என்று எழுதப்பட்டிருக்கிறது.

 உள்ளே நுழைந்ததும் காணப்படும் பிள்ளையார் இப்போது கண தெய்யோ ஆகிவிட்டார்.

 விஷ்ணு சிலை அகற்றப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

 கோவிலின் பத்துநாள் திருவிழா ஒவ்வொரு முறையும் பல மாற்றங்களை சந்தித்துவருகிறது.

 சிங்களவர் இவ்வளவு தீவிரமாக உரிமை கொண்டாட என்ன காரணம்?

 கதிர்காமம் சிங்களவருக்கு சொந்தம் என்பதற்கு அவர்கள் காட்டும் ஆதாரங்கள் இரண்டு.

 ஒன்று,
 எல்லாளனை வெல்வதற்காக உரோகண மன்னன் துட்டகைமுனு கதிர்காமக் கடவுளிடம் நேர்த்திக்கடன் வைத்து, வென்றபின் இக்கோவிலைக் கட்டியதாக 'கந்த உபாத' எனும் அண்மைய கால சிங்கள நூலில் சொல்லப்பட்ட கட்டுக் கதை.

 இன்னொன்று மகாசேன மன்னன் இறந்தபின்னர், இங்கு அவனுக்காக அமைக்கப்பட்ட நினைவாலயமே கதிர்காமம் என்கிற கட்டுக்கதை.

 இந்தக் கதைகள் எதுவும் பழைமையான நூல்கள் எதிலும் காணப்படவில்லை.

 கதிர்காமம் 'காஜரகாமம்' என்ற பெயரில் இரு தடவை மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 முதல் தடவை, சங்கமித்தை கொணர்ந்த வெள்ளரசுக் கிளையை நாட்டும் சடங்கில் காஜரகாம – சந்தனகாம சத்திரியர்கள் கலந்துகொண்டதைச் சொல்கின்றது.

 அடுத்தது தப்புல மன்னன், காஜரகாமத்தில் பௌத்த மடம் அமைத்தது பற்றிய செய்தி.

 [பௌத்தம் தமிழராலும் பின்பற்றப்பட்ட மதம்.
 மகாவம்சத்தில் சிங்களவர் பற்றி எதுவுமே இல்லை.
 அதில் வருவதெல்லாம் பௌத்தர் மற்றும் பிற சமயத்தினருக்குமான மோதல் மற்றும் பௌத்த சமயத்தின் இரு பிரிவுகளுக்கு இடையேயான மோதல் போன்றவையே.
 இதில் வரும் பௌத்தத்தை சிங்களமாக திரிக்கின்றனர்]

 கதிர்காமம் முழுக்க சிங்கள மயமாகிவிட்டாலும் இன்றும் அது முருகன் கோவில்தான்.

 அதில் வழிபாட்டு முறைகள் சிறிது திரிந்துவிட்டாலும் சிங்கள - பௌத்த பேரினவாத சக்தியால் அது முழுமையாக விழுங்கப்படவில்லை.

 மணிமேகலை காலம் முதல் ராஜராஜன் காலம் வரை பௌத்தத்தை பின்பற்றி வந்த தமிழர்கள் சைவ வைணவ எழுச்சிக்குப் பிறகு அம்மதத்தை முழுமையாக கைவிட்டபோது சிங்களவர்கள் அதைப் பற்றிக்கொண்டு பௌத்த வரலாற்றையே தமதாக்கிக் கொண்டனர்.

 கதிர்காம முருகனை தமதாக்கிக் கொண்டு முருகனாக ஏற்கவும் முடியாமல் பௌத்தமாக திரிக்கவும் முடியாமல் அல்லாடுகிறார்கள்.

 இதேபோல நம் கையைவிட்டுப்போன அனுராதபுரம் நம்முடையதுதான் என்பதற்கு அபயகிரி பௌத்த விகாரையில் காணப்படும் கிபி 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி கல்வெட்டு ஒன்று சான்றாக உள்ளது.

 கதிர்காமத்தைப் பொறுத்தவரை அது தோன்றிய காலத்தைய பழமையான சான்று  இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை.

 கதிர்காமத்தை மீட்டு முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தினால் கட்டாயம் ஒரு வலுவான சான்று நமக்குக் கிடைக்கும்.



Saturday, 15 September 2018

செங்கோட்டை மதமோதல்

செங்கோட்டை மதமோதல்

தமிழகத்தில் எத்தனையோ ஆன்மீக விழாக்களும் ஊர்வலங்களும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் எல்லா மதங்களிலும் உண்டு.

அப்போதெல்லாம் வராத கலவரம் விநாயகர் சதுர்த்தி நடக்கும்போது மட்டும் தவறாமல் வரும்.
சாதாரண பொதுமக்கள் 50,100 நிதி கொடுத்துவிட்டு பிள்ளையார் வந்ததும் போய் தோப்புகரணம் போட்டுவிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வீட்டில் செய்துவைத்த கொழுக்கட்டையை சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள்.

ஆனால் பொறுக்கிகள் அப்படியில்லை.
மதுவருந்திவிட்டு குத்தாட்டத்தை தொடங்குவார்கள்.

இதை வழி நடத்துபவர்கள் ஒரு இந்துமத அமைப்பினர்.

அதன் வழிகாட்டுதலின் பேரில் வேண்டுமென்றே இசுலாமியர் தெருவழியாக ஊர்வலம் நடத்தி கலவரம் உருவாக்க வழி உண்டா என்று பார்ப்பார்கள்.

எப்போது விநாயகர் ஊர்வலம் நடந்தாலும் இரு தரப்பினர் அடித்துக் கொள்வது செங்கோட்டையில் வழக்கம்.
அந்த இரு தரப்பினரும் பெரும்பாலும் இந்துக்களாகவே இருப்பார்கள்.

வழக்கமாக இந்த தறுதலைக் கும்பல்கள்தான் ஏழரையைக் கூட்டுவார்கள்.

ஆனால் இந்தமுறை அப்படியில்லை.

செங்கோட்டை ஊரின் வரைபடம் தந்துள்ளேன்.
சிறுபான்மை இசுலாமியர் செறிவாக வாழும் பகுதி பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

ஊர்வலம் செல்லும் வழி சிவப்பில் காட்டப்பட்டுள்ளது.

பிரச்சனை நடந்த இடம் வட்டமிடப்படுள்ளது.

முன்பெல்லாம் இந்த விநாயகர் ஊர்வலம் நடக்கும்போது இசுலாமியர் பகுதிக்கு அருகே நுழைந்ததும் ஆமை வேகத்தில் நகரந்தபடி செண்டை மேளத்தை சத்தமாக அடித்தபடி இசுலாமியரைச் சீண்டும் வகையில் கோசம் போட்டுக்கொண்டு ஆரவாரத்துடன் செல்வர்.

ஆனால், இப்போதெல்லாம் அப்படியில்லை.
இசுலாமியர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து முறைப்படி இந்த விடயத்தை கையாண்டதால் காவல்துறை மூலம் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கண்கானிப்புடன் இவ்வூர்வலம் நடத்தப்படுகிறது.

முதலில் இசுலாமியர் மாற்றுப் பாதையில் செல்லவைக்க முயன்றனர்.
பொதுவழியில்தான் செல்கிறோம் என்று இந்து தரப்பு பாதையை மாற்ற மறுத்துவிட்டது.
அதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பெரிய சிலை வைக்கமுடியாது,
கோசம் போட முடியாது, வேகத்தைக் குறைக்கமுடியாது, ஆடுவது கத்துவது இருக்காது,
இவை மட்டுமில்லாது  போலீசார் முழு ஊர்வலத்தையும் 4,5 இடங்களில் வீடியோ எடுத்துக்கொண்டு இருப்பர்.
எவனாவது துள்ளினால் அவனை அங்கேயே 'கவனித்து' மறுநாளும் பிடித்துவந்து எச்சரித்து அனுப்பினர்.

நாளாக நாளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இந்து அமைப்பினர் பெயருக்கு ஏதோ ஒரு ஊர்வலம் என்று நடத்திவந்தனர்.
இளைஞர்களுக்கும் ஆர்வம் குறைந்து கூட்டமும் கணிசமாகக் குறைந்துவிட்டது.

பெரிதாகப் பேசப்பட்ட ராமர் ரத ஊர்வலம் கூட ஏதோ செங்கோட்டை வழியாக சவ ஊர்வலம் மாதிரி அனாதையாகத்தான் போனது.

ஆனாலும் 'உங்கத் தெரு பிள்ளையார் பெருசா' 'எங்கத் தெரு பிள்ளையார் பெருசா' என்கிற போட்டி மட்டும் இருந்தது.

ஆனால் இந்த முறை எந்த நோக்கத்திற்காக இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறதோ அது நடந்துவிட்டது.
சில இசுலாமிய இளைஞர்களின் முந்திரிக்கோட்டைத் தனத்தால்.

நான் கேள்விப்பட்டு விசாரித்தவரை நடந்தது இதுதான்.

உப்புசப்பில்லாது போய்விட்ட அந்த ஊர்வலம் வந்துகொண்டிருந்த போது மாலை எட்டுமணி அளவில் கீழப் பள்ளிவாசல் தெரு முக்கிய சாலையில் சந்திக்கும் இடத்தில் சில இசுலாமிய இளைஞர்கள் திடீரென்று வழியை மறித்துள்ளனர்.

போலீசார் அவர்களிடம் சென்று
"இது அனுமதி பெற்ற ஊர்வலம்,
கட்டுக்கோப்பாக நாங்கள் நடத்தித் தருகிறோம்,
உங்கள் தெருக்குள் வரவில்லை,
வழக்கம்போல பம்ப் ஹவுஸ் சாலை வழியாகத்தான் போகவுள்ளது,
காரணமின்றி இப்படி மறிப்பது சரியில்லை" என்று சமாதனம் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஊர்வலத்தில் எவனோ ஒரு பொட்டை கூட்டத்தில் ஒளிந்துநின்று "அல்லா ஒழிக" என்று கத்தியுள்ளான்.

பதிலுக்கு இந்த பக்கம் எவனோ ஒரு பொட்டை இருட்டில் கூட்டத்தின் மத்தியிலிருந்து  பிள்ளையார் சிலை மீது கல்லெறிந்துள்ளான்.

பொதுவழியில் ஊர்வலம் போகக்கூடாது என்று மறியல் செய்தது கூட பெரிய தவறில்லை.

அங்கே கல்லெறிந்து பத்துபேரின் மண்டையை உடைத்திருந்தால் கூட பிரச்சனை வந்திருக்காது.

ஆனால் கடவுள் சிலை மீது கல்லெறிந்து இந்து மக்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தியதன் மூலம் இசுலாமியத் தரப்பின் 20 ஆண்டுகால உழைப்பிலும் சகிப்புத்தன்மையிலும் மண்ணள்ளிப் போடப்பட்டு விட்டது.
(அது கரைக்கப்படவுள்ள சிலை என்றாலும் இப்போது அது புனிதமானதாகப் பார்க்கப்படுகிறது)

ஒருவன் கல்லெறிந்ததைத் தொடர்ந்து இந்து தரப்பினர் பதிலுக்கு இசுலாமிய தரப்பினர் மீது கல்லெறிய இசுலாமியர் பலரும் கற்களை சிலையை நோக்கி எறிய  நிலைமை கட்டுகடங்காது போய் இருதரப்பினருக்கும் நடந்த கைகலப்பில் பத்துபேர் காயமடைந்தனர்.
இசுலாமியர் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
கூடுதல் போலீஸ் வந்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.

உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருதரப்பு விசமிகளும் கைது செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மீண்டும் சொலகிறேன்.
வழக்கமாக இந்து தரப்பு கும்பல்தான் வம்பிழுப்பார்கள்.
அடாவடியில் இறங்குவார்கள்.

ஆனால் இந்த முறை அப்படியில்லை.

இசுலாமிய இளைஞர்கள் அவசரப்பட்டுவிட்டனர்.

நடத்துவது ஒரு மதவெறி அமைப்பாகவே இருந்தாலும் ஜனநாயக நாட்டில் முக்கியமான ஒரு பொதுவழியில் ஒரு ஊர்வலம் போகக்கூடாது என்று கூறமுடியாது.

என்னதான் மாற்றுமதம் என்றாலும் அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும்.

15 நிமிட சகிப்புத்தன்மை இல்லாததால் இன்று கலவரம் உருவாகும் சூழல்.

Saturday, 8 September 2018

ஒரு மதம் ஒரு இனத்தை என்னவெல்லாம் செய்யமுடியும்?

ஒரு மதம் ஒரு இனத்தை என்னவெல்லாம் செய்யமுடியும்?


ஒரு கரும்புச்சாறு கடைக்குச் சென்றேன்.
பர்தா (புர்கா) போட்ட பெண்தான் அதை நடத்திவந்தார்.
நான் அவரை "அக்கா" என்றுஅழைத்தேன்.
அவர் புன்னகைத்தபடி "உங்கள் பெயர் என்ன?" என்று கேட்டாள்.
பதிலாக "நான் முஸ்லீம் இல்லை" என்று கூறினேன்.


புரிந்துகொண்ட அந்த அக்கா கூறினார் சேலை மட்டும் கட்டி வந்தால் எல்லாரும் "அக்கா" என்று அழைப்பார்களாம்.
பர்தா போட்டுக்கொண்டு வந்தால் இசுலாமியர் மட்டுமே "அக்கா" என்று அழைப்பார்களாம்.


ஒரு உடை அது அளிக்கும் தோற்றம் ஒருவரது அடையாளத்தை மாற்றி பிறரிடமிருந்து அந்நியமாக்கிவிட்டது பார்த்தீர்களா?!


உறவினரல்லாதோரையும் முன்பின் தெரியாதோரையும் அக்கா, அண்ணா, அம்மா, ஐயா, தம்பி, மாமா என்று உறவுமுறை சொல்லி அழைப்பது நம் பண்பாடு.


அவ்வாறு இசுலாமியரல்லாத யாராவது ஒரு பர்தா போட்ட பெண்ணையோ அல்லது மீசையில்லாத தாடி வைத்த ஆணையோ சகோதர உறவு சொல்லி அழைத்து நீங்கள் பார்த்துள்ளீர்களா?!


பாய் என்று வேண்டுமானால் அழைப்பர்.


இது கவலைப்படவேண்டிய விடயம்.


நான் மட்டும் ஒரு இசுலாமியத் தமிழனாகப் பிறந்திருந்தால்,
"ஒரு மதம் ஒரு இனத்தை என்னவெல்லாம் செய்யமுடியும்" 
என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருப்பேன்.


அதில் ஒரு இனத்து மக்களின் மீது 'ஒரு அந்நிய நாட்டு மதம்' அதன் அந்நிய மொழி, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கத்தைத் திணித்து சொந்த மண்ணிலேயே அம்மதத்தை தழுவியோரை எப்படி அகதிகளாக ஆக்குகிறது என்று விரிவாக எடுத்துரைப்பேன்.


அத்தோடு இசுலாமிய மதவெறியர்கள் இசுலாத்தில் சொல்லப்படாத மற்றும் கட்டாயமாக்கப்படாத விடயங்களையும் தன் மதத்தாரிடம் புகுத்தி எப்படி "பூமியில் ஒரு ஏலியன்" போல திரியவிடுகிறார்கள் என்பதையும் விரிவாக எழுதுவேன்.


நான் பிறந்த மதத்தைப் பற்றி இப்படி எழுதலாம் என்றால் அது ஒரு மதமே இல்லை.
அது மதமாகவே இருந்தாலும் எனது இனத்தின் பண்பாட்டை பெரிதாகப் பாதிக்கவும் இல்லை.


நான் பிறந்த மதத்தின் வெறியர்களும் இசுலாமியரைப் பார்த்து எதிர்வினையாக மதவெறியை வளர்த்துக் கொண்டார்களே தவிர தானே வெறிபிடித்து அலைவதும் இல்லை.


தமிழகத்தைப் போலவே ஈழத்திலும் 1984 வரை ஒன்றுக்குள் ஒன்றாக இருந்த சைவ-கிறித்துவ தமிழர்களும் இசுலாமியத் தமிழர்களும் அதன் பிறகு மிக எளிதாக பிரித்தாளப்பட்டு ஒருவரை ஒருவர் கொலை செய்துகொண்டனர்.
இன்று இருதரப்பினரும் பழைய கதைகளையெல்லாம் மறந்து ஒருவரை ஒருவர் கொல்லக் காத்திருக்கும் நிலை உள்ளது.


ஆக ஒரு இனத்தில் பின்பற்றப்படும் மதம் என்பது 
ஒரு வீட்டில் வளரும் (காட்டு)யானை போன்றது.
எப்போது மதம் பிடித்து வீட்டை ரெண்டாக்கும் என்று தெரியாது.


என்னைப் பொருத்தவரை வாழ்வதற்கு மதமோ கடவுளோ தேவையில்லை.


என் இனத்தில் அதன் பண்பாட்டில் அதன் கலாச்சாரத்தில் இல்லாத எந்த சிறப்பம்சம் ஒரு மதத்தில் உள்ளது என்று எனக்குப் புரியவில்லை.


இனத்தை துண்டாடும் மதங்கள் எனக்குப் பிடிப்பதில்லை.


குறிப்பாக இசுலாம் மதத்தை நான் அடியோடு வெறுக்கிறேன்.


ஆனால் இசுலாமியத் தமிழரை அல்ல!


இசுலாமியத் தமிழரை அவர்களது மதத்தை உதறித்தள்ளிவிட்டு வாருங்கள் என்றெல்லாம் நான் கூறமாட்டேன்.


மதம்தான் பெரிது இனம் பிறகுதான் என்பவன் எந்த மதத்தான் ஆனாலும் இனத்துரோகி ஆவான்.


தமிழகத்தில் பெரும்பான்மையான இசுலாமியர் அவ்வாறு இல்லை.
  அவர்கள் இப்படியே இருந்துவிட்டால் நம் இனத்திற்கு நல்லது.


அவ்வளவுதான்.


படம்:- 
கார்த்திகேயன் மற்றும் யாஸ்மினா திருமணத்தை விபச்சாரம் என்று கண்டிக்கும் திருவையாறு இசுலாமிய அமைப்பு