Showing posts with label சதுர்த்தி. Show all posts
Showing posts with label சதுர்த்தி. Show all posts

Friday, 25 January 2019

தமிழன் ஸ்டிக்கர்ஸ்

தமிழன் ஸ்டிக்கர்ஸ்

இந்த படம் எடுக்கப்பட்டது பழைய கேரளா-தமிழ்நாடு எல்லையான பிராணூர் எனுமிடத்தில்.
(இதைத் தற்போதும் பார்டர் என்றே அழைக்கின்றனர்)

தமிழன் என்ற பெயரிடப்பட்டுள்ள இக்கடையின் உரிமையாளர் ஒரு இசுலாமியர் ஆவார்
(படத்தில் உட்கார்ந்திருப்பவர்).

சரி இந்த செங்கோட்டையை மலையாளிகளிடமிருந்து மீட்டு தமிழகத்துடன் இணைத்தது யார்?

ஒரு கிறித்தவரும் அவருடைய தளபதியான ஒரு இசுலாமியரும்தான்.

அன்று மார்சல் நேசமணியும் அப்துல் ரசாக்கும் போராடவில்லை என்றால் இன்று இப்பகுதிவரை கேரளா என்றாகியிருக்கும்.

அவர்கள் நினைத்திருந்தால் இந்த பகுதியை மீட்ட பிறகு மீட்கப்பட்ட மற்றொரு பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்கியிருக்க முடியும்.
ஆனால் அவர்கள் இப்பகுதியை திருநெல்வேலிக்கே கொடுத்துவிட்டனர்.

இதை இந்நேரத்தில் பதிவிடுவது ஏனென்றால்,

எப்போதும் பொங்கல் விழாவினையொட்டி தெருவுக்கு தெரு விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்.
கடந்த விநாயகர் சதுர்த்தியில் இந்து-முஸ்லீம் மதமோதல் நடந்த பிறகு இம்முறை அவ்விளையாட்டுகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் செங்கோட்டை முழுவதுமே பொங்கல் களையிழந்து காணப்பட்டது.

திருநெல்வேலி முழுக்க எத்தனையோ இந்து பண்டிகைகளும் இந்து மத ஊர்வலங்களும் ஆண்டு முழுவதும் நடக்கின்றன.
எப்போதும் எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை.

திருநெல்வேலியில் தமிழகத்திலேயே அதிகமான முஸ்லீம்கள் வாழும் கிராமமான பொட்டல்புதூர் தர்காவில் நடக்கும் கந்தூரி (அல்லது சந்தனக்கூடு) விழாவில் லட்சக்கணக்கான இந்து மற்றும் முஸ்லீம்கள் ஒன்றுகூடி ஒற்றுமையாக கொண்டாடுகின்றனர்.
இதுவரை எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை.

ஆனால் பத்து ரவுடிப்பயல்களை கூட்டி இந்து முன்னணி நடத்தும் விநாயகர் ஊர்வலத்தில் மட்டும் எப்போதும் கலவரம் வரும் பதற்றம் இருக்கிறது.
இம்முறை செங்கோட்டையில் கலவரம் நடந்தேவிட்டது.

இனி செங்கோட்டை இந்து இளைஞர்கள் இசுலாமியரை நோக்கி விரல் நீட்டும் முன்,
கேரளாவின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எல்லைகடந்து தப்பி வந்து  ஒற்றை ஆளாக தமிழகம் முழுவதும் சென்று ஆதரவு திரட்டி டெல்லி வரை சென்று பேசி செங்கோட்டை உட்பட 5 தாலுகாக்களை தமிழ்நாடு ஆக்கிய அப்துல் ரசாக்கை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அப்படியே மண்மீட்பு போராட்டத்தில் மலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 11 பேரில் பீர் முகமது என்கிற பெயரும் இருப்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

அப்படியே இந்த "தமிழன்" கடையையும் நினைத்துப் பார்க்கவேண்டும்.

திருந்த வேண்டியது அவர்கள் மட்டும் இல்லை.

இதே பார்டர் அருகில் "அரபி பாடசாலை" நிறுவி பிறமொழி வளர்க்கும் இசுலாமியரும்
பார்க்கவே அல்-கொய்தா தளபதி போல தாடி ஜிப்பாவுடன் அலையும் இசுலாமிய இளைஞர்களும்தான்.

20 ஜனவரி, பிற்பகல் 2:30 ·
தனியுரிமை: பொது

Saturday, 15 September 2018

செங்கோட்டை மதமோதல்

செங்கோட்டை மதமோதல்

தமிழகத்தில் எத்தனையோ ஆன்மீக விழாக்களும் ஊர்வலங்களும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் எல்லா மதங்களிலும் உண்டு.

அப்போதெல்லாம் வராத கலவரம் விநாயகர் சதுர்த்தி நடக்கும்போது மட்டும் தவறாமல் வரும்.
சாதாரண பொதுமக்கள் 50,100 நிதி கொடுத்துவிட்டு பிள்ளையார் வந்ததும் போய் தோப்புகரணம் போட்டுவிட்டு பிரசாதம் வாங்கிக்கொண்டு வீட்டில் செய்துவைத்த கொழுக்கட்டையை சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவார்கள்.

ஆனால் பொறுக்கிகள் அப்படியில்லை.
மதுவருந்திவிட்டு குத்தாட்டத்தை தொடங்குவார்கள்.

இதை வழி நடத்துபவர்கள் ஒரு இந்துமத அமைப்பினர்.

அதன் வழிகாட்டுதலின் பேரில் வேண்டுமென்றே இசுலாமியர் தெருவழியாக ஊர்வலம் நடத்தி கலவரம் உருவாக்க வழி உண்டா என்று பார்ப்பார்கள்.

எப்போது விநாயகர் ஊர்வலம் நடந்தாலும் இரு தரப்பினர் அடித்துக் கொள்வது செங்கோட்டையில் வழக்கம்.
அந்த இரு தரப்பினரும் பெரும்பாலும் இந்துக்களாகவே இருப்பார்கள்.

வழக்கமாக இந்த தறுதலைக் கும்பல்கள்தான் ஏழரையைக் கூட்டுவார்கள்.

ஆனால் இந்தமுறை அப்படியில்லை.

செங்கோட்டை ஊரின் வரைபடம் தந்துள்ளேன்.
சிறுபான்மை இசுலாமியர் செறிவாக வாழும் பகுதி பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

ஊர்வலம் செல்லும் வழி சிவப்பில் காட்டப்பட்டுள்ளது.

பிரச்சனை நடந்த இடம் வட்டமிடப்படுள்ளது.

முன்பெல்லாம் இந்த விநாயகர் ஊர்வலம் நடக்கும்போது இசுலாமியர் பகுதிக்கு அருகே நுழைந்ததும் ஆமை வேகத்தில் நகரந்தபடி செண்டை மேளத்தை சத்தமாக அடித்தபடி இசுலாமியரைச் சீண்டும் வகையில் கோசம் போட்டுக்கொண்டு ஆரவாரத்துடன் செல்வர்.

ஆனால், இப்போதெல்லாம் அப்படியில்லை.
இசுலாமியர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து முறைப்படி இந்த விடயத்தை கையாண்டதால் காவல்துறை மூலம் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கண்கானிப்புடன் இவ்வூர்வலம் நடத்தப்படுகிறது.

முதலில் இசுலாமியர் மாற்றுப் பாதையில் செல்லவைக்க முயன்றனர்.
பொதுவழியில்தான் செல்கிறோம் என்று இந்து தரப்பு பாதையை மாற்ற மறுத்துவிட்டது.
அதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பெரிய சிலை வைக்கமுடியாது,
கோசம் போட முடியாது, வேகத்தைக் குறைக்கமுடியாது, ஆடுவது கத்துவது இருக்காது,
இவை மட்டுமில்லாது  போலீசார் முழு ஊர்வலத்தையும் 4,5 இடங்களில் வீடியோ எடுத்துக்கொண்டு இருப்பர்.
எவனாவது துள்ளினால் அவனை அங்கேயே 'கவனித்து' மறுநாளும் பிடித்துவந்து எச்சரித்து அனுப்பினர்.

நாளாக நாளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இந்து அமைப்பினர் பெயருக்கு ஏதோ ஒரு ஊர்வலம் என்று நடத்திவந்தனர்.
இளைஞர்களுக்கும் ஆர்வம் குறைந்து கூட்டமும் கணிசமாகக் குறைந்துவிட்டது.

பெரிதாகப் பேசப்பட்ட ராமர் ரத ஊர்வலம் கூட ஏதோ செங்கோட்டை வழியாக சவ ஊர்வலம் மாதிரி அனாதையாகத்தான் போனது.

ஆனாலும் 'உங்கத் தெரு பிள்ளையார் பெருசா' 'எங்கத் தெரு பிள்ளையார் பெருசா' என்கிற போட்டி மட்டும் இருந்தது.

ஆனால் இந்த முறை எந்த நோக்கத்திற்காக இந்த ஊர்வலம் நடத்தப்படுகிறதோ அது நடந்துவிட்டது.
சில இசுலாமிய இளைஞர்களின் முந்திரிக்கோட்டைத் தனத்தால்.

நான் கேள்விப்பட்டு விசாரித்தவரை நடந்தது இதுதான்.

உப்புசப்பில்லாது போய்விட்ட அந்த ஊர்வலம் வந்துகொண்டிருந்த போது மாலை எட்டுமணி அளவில் கீழப் பள்ளிவாசல் தெரு முக்கிய சாலையில் சந்திக்கும் இடத்தில் சில இசுலாமிய இளைஞர்கள் திடீரென்று வழியை மறித்துள்ளனர்.

போலீசார் அவர்களிடம் சென்று
"இது அனுமதி பெற்ற ஊர்வலம்,
கட்டுக்கோப்பாக நாங்கள் நடத்தித் தருகிறோம்,
உங்கள் தெருக்குள் வரவில்லை,
வழக்கம்போல பம்ப் ஹவுஸ் சாலை வழியாகத்தான் போகவுள்ளது,
காரணமின்றி இப்படி மறிப்பது சரியில்லை" என்று சமாதனம் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஊர்வலத்தில் எவனோ ஒரு பொட்டை கூட்டத்தில் ஒளிந்துநின்று "அல்லா ஒழிக" என்று கத்தியுள்ளான்.

பதிலுக்கு இந்த பக்கம் எவனோ ஒரு பொட்டை இருட்டில் கூட்டத்தின் மத்தியிலிருந்து  பிள்ளையார் சிலை மீது கல்லெறிந்துள்ளான்.

பொதுவழியில் ஊர்வலம் போகக்கூடாது என்று மறியல் செய்தது கூட பெரிய தவறில்லை.

அங்கே கல்லெறிந்து பத்துபேரின் மண்டையை உடைத்திருந்தால் கூட பிரச்சனை வந்திருக்காது.

ஆனால் கடவுள் சிலை மீது கல்லெறிந்து இந்து மக்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தியதன் மூலம் இசுலாமியத் தரப்பின் 20 ஆண்டுகால உழைப்பிலும் சகிப்புத்தன்மையிலும் மண்ணள்ளிப் போடப்பட்டு விட்டது.
(அது கரைக்கப்படவுள்ள சிலை என்றாலும் இப்போது அது புனிதமானதாகப் பார்க்கப்படுகிறது)

ஒருவன் கல்லெறிந்ததைத் தொடர்ந்து இந்து தரப்பினர் பதிலுக்கு இசுலாமிய தரப்பினர் மீது கல்லெறிய இசுலாமியர் பலரும் கற்களை சிலையை நோக்கி எறிய  நிலைமை கட்டுகடங்காது போய் இருதரப்பினருக்கும் நடந்த கைகலப்பில் பத்துபேர் காயமடைந்தனர்.
இசுலாமியர் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
கூடுதல் போலீஸ் வந்து தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துள்ளனர்.

உடனடியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருதரப்பு விசமிகளும் கைது செய்யப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

மீண்டும் சொலகிறேன்.
வழக்கமாக இந்து தரப்பு கும்பல்தான் வம்பிழுப்பார்கள்.
அடாவடியில் இறங்குவார்கள்.

ஆனால் இந்த முறை அப்படியில்லை.

இசுலாமிய இளைஞர்கள் அவசரப்பட்டுவிட்டனர்.

நடத்துவது ஒரு மதவெறி அமைப்பாகவே இருந்தாலும் ஜனநாயக நாட்டில் முக்கியமான ஒரு பொதுவழியில் ஒரு ஊர்வலம் போகக்கூடாது என்று கூறமுடியாது.

என்னதான் மாற்றுமதம் என்றாலும் அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவேண்டும்.

15 நிமிட சகிப்புத்தன்மை இல்லாததால் இன்று கலவரம் உருவாகும் சூழல்.

Thursday, 24 August 2017

சதுர்த்தி

சதுர்த்தி

முன்பு தமிழர்கள் களிமண்ணால் ஆன உருண்டையை அருகம்புல் அல்லது எருக்கம்பூ உடன் கிணறு, குளம், குட்டை போன்றவற்றில் கரைப்பார்கள்.
(அந்த உருண்டையை பிள்ளையார் என்று அழைப்பார்கள். திருமுருகாற்றுப்படை இலக்கியத்தில் முருகன்தான் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்)
இதற்கு பின்னால் என்ன அறிவியல் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் இதிலிருந்து தோன்றிய பண்டிகையான  விநாயகர் சதுர்த்தி இன்று தமிழரல்லாத வடயிந்திய இந்து மதவெறியர்களால் கொண்டாடப்படுகிறது.
பண்டிகை என்ற பெயரில் வளமான களிமண்ணை தோண்டியெடுத்து
அதில் பெயிண்ட், பிளாஸ்டிக் போன்றவற்றை கலந்து ஆற்றிலோ கடலிலோ கொண்டு கரைத்து  மாசாக்குவது எந்தவகையிலும் அறிவார்ந்த செயலாகத் தோன்றவில்லை.