Showing posts with label நீர்மேலாண்மை. Show all posts
Showing posts with label நீர்மேலாண்மை. Show all posts

Tuesday, 18 November 2025

இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்


இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்
16.10.2017

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பனிகடல் பருகி வலன்ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த
- முல்லைப்பாட்டு 1-6

இப்பாடலில் மேகத்தின் இயக்கம் அறிவியல் முறையில் விளக்கப்பட்டுள்ளது.  
கடலில் நீர் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது நெடுந்தொலைவு பயணித்து மலையில் தங்கி பெருமழையை பொழிந்தது
------------------

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே
- அகநானுறு183

குளிர்ந்த கடலில் நீரை மேகங்கள் குடிப்பது பற்றி வருகிறது
-----------

இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே
- நற்றிணை 329:11

கருமையான வானம் பெரும் சத்தத்துடன் இடி இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்துவரும் கார்காலம்.
(அதாவது மேகம் கடலில் இருந்து நீரை எடுத்து மழையாக பொழியும் மழைக்காலம்)
---------------

மின்னு வசிபு
அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
- நற்றிணை 228:1

மின்னலுடன் முழங்கும் பெரும் சத்தத்துடன் நீர் நிறைந்த மேகம்  பூமியிலிருந்து பெற்ற கடன் தீருமாறு மழையை கண்தெரியாத இருளடைந்த நடு இரவில் பொழியும்.
--------------------

இன் நீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர்
- நற்றிணை 115:3

மேகங்கள் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு, எஞ்சிய கடலின் நீர் சிறிது என்னும்படி கொணர்ந்தன.

(இது கடல் நீரை மேகங்கள் கொள்வதை சற்று மிகைப்படுத்திக் கூறுகிறது.
அதாவது பாதிக்கும் மேல் உறிஞ்சிவிட்டதாம்!)
-----------

நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே
- ஐங்குறுநூறு 492

மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுவதை கூறுகிறது
-----------

மேகங்களின் நகர்வு பற்றியும் குறித்துள்ளனர்,

வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்
- ஐங்குறுநூறு 469

பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ
- அகநானூறு 840

கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த
- நற்றிணை 140

கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு
- அகநானூறு 43

போன்ற பாடல்கள் கடலில் உருவான மழைமேகம் மேற்கு நோக்கி (வலப்பக்கமாக) நகர்வதாக குறித்துள்ளனர்.
அதாவது வடகிழக்குப் பருவக்காற்று பற்றி கூறப்பட்டுள்ளது.
--------------

நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து
- நற்றிணை 289

கடல் நீரைக் குடித்து செறிவு (அடர்த்தி) அதிகமான மேகம் மழை பொழிவதாகக் கூறுகிறது இப்பாடல்
-------------

கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே
- குறுந்தொகை - 287

அதாவது நிறைமாத சூலி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கி செல்கின்றன என்று கூறுகிறது.
----------

வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து
- நற்றிணை 261

வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்
- பதிற்றுப்பத்து 12

மேகங்கள் மலையில் மோதி மழைபொழிவதைக் கூறுகிறது
----------

பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை
எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன
- அகநானுறு 217

பெய்து தீர்த்த மேகம் வெண்மையான மென்பஞ்சுபோல ஆகிவிடும் என்று கூறுகிறது.
-----------

மேற்கண்டவற்றை ஆராய்ந்தால் சங்ககாலத்திலேயே தமிழர்கள் அனைவரும் மழை எவ்வாறு பொழிகிறது என்று அறிந்திருந்ததை உணரமுடிகிறது.

பெயிலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பிற் றுவலை கற்ப
- நெடுநெல்வாடை 20

மழை பெய்துவிட்ட வெண்மையான மேகம் மேலெழுந்து சாரலை ஏற்படுத்துவது பற்றி வருகிறது
-----------------------

மழைப்பொழிவை முன்பே கணித்த குறிப்புகளும் உண்டு,

பொய்யா எழிலி பெய்விட நோக்கி
முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்
சிறு நுண் ணெறும்பின்
- புறநானூறு 173

எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள்
-----------

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
- புறநானூறு 35:7

தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும்
- புறம் 117:2

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தனி உணவில்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
- பட்டினப்பாலை 1-6

மேற்கண்டவை உணர்த்தும் பொருள் யாதெனில்,
வானத்தில் வெள்ளி கோள் வடக்கு திசை நோக்கிச் சென்றால் மழைவளம் அதிகமாகும் என்றும்
தென்திசை நோக்கிச் சென்றால் மழைவளம் குறையும்
(ஆனாலும் காவிரி பொயக்காது)
----------
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
- பதிற்றுப்பத்து 13:25

செவ்வாய்க் கோள் சென்ற வழியில் வெள்ளி கோள் செல்லாததால் மழை தேவையான இடங்களிலெல்லாம் உன் நாட்டில் மழை பெய்கிறது.
(அதாவது வானில் கோள்கள் நகர்வு மூலம் மழையை கணித்துள்ளனர்)
----------

பழமையான மொழியான தமிழில் அறிவியல் இல்லை என்று சில பிறமொழி வந்தேறிகள் பிதற்றுகின்றனர்.

மேலே உள்ள மழை பற்றிய குறிப்புகள் மட்டுமே.
இதேபோல பல்வேறு விடயங்களை தமிழ் இலக்கியம் அறிவியல் பார்வையுடன் பதிவுசெய்துள்ளது.

வேறு எந்த மொழியினது தொடக்ககால இலக்கியத்திலும் இத்தகைய அறிவியல் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை.

Saturday, 17 August 2024

அத்திக்கடவு அவிநாசி திட்டம் அறிவோம்

அத்திக்கடவு அவிநாசி திட்டம் அறிவோம் 

 காமராசர் வகுத்த திட்டம் வேறு!
இன்று நிறைவேறியிருப்பது  வேறு!

  மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றும் பவானி ஆறு மேட்டுப்பாளையத்திலுள்ள பில்லூர் அணைக்குப் பக்கத்திலிருக்கும் அத்திக்கடவுக்குள் நுழைகிறது. இந்த ஆறு ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையை அடைந்து, பின்னர் 75 கிலோமீட்டர் பயணித்து பவானியருகில் காவிரியில் கலக்கிறது.

 இப்படி கலக்கும் பவானி ஆற்றின் உபரிநீரை (அன்றைய ஒருங்கிணைந்த) கோவை மாவட்ட விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டுமென 1957 இல் காமராஜர் திட்டம் வகுத்தார்.

 அதாவது பவானி ஆற்றின் உபரிநீரை கால்வாய்கள் வெட்டி திசைதிருப்பி, அன்றைய கோவை மாவட்டத்திலுள்ள வறண்ட நீர்நிலைகளில் நிரப்ப வேண்டும் என்பது திட்டம்.

 காமராசருக்குப் பின் கிடப்பில் கிடந்த இத்திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ல் முதல்வராக இருந்த கருணாநிதியால் `அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் மறுசேர்ப்பு மற்றும் குடிநீர் வழங்கல் திட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
 
 பிறகு மீண்டும் 32 ஆண்டுகள் கழித்து கருணாநிதி ஆட்சியில் 2009-ல் நீரியல் வல்லுநர் மோகனகிருஷ்ணன் தலைமையில் ஒரு நிபுணர்குழு அமைக்கப்பட்டது. இக்குழு 'வெள்ளப் பெருக்கின்போது 2 டி.எம்.சி அடி நீரை திசைதிருப்ப முடியும்' என்று அறிக்கை கொடுத்தது. 
 "ஆகா அப்படியா அவ்வளவு நல்லது செய்ய நிதி இல்லை" என்று கிடப்பில் போட்டார் கருணாநிதி!

 பிறகு 5 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதா 2014-ல் (மனந்திருந்தி மக்கள் பக்கம் ஏறெடுத்துப் பார்த்த கடைசி காலம்) அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் இந்தத் திட்டம் நிறைவேறும் என்று அறிவித்தார்.

 பிறகும் 5 ஆண்டு கிடப்பு!  எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் திட்டம் அடிப்படையே மாற்றப்பட்டு உபரி நீர் கால்வாய்கள் மூலம் திருப்பப் படாமல் பவானி ஆற்றின் கீழுள்ள காளிங்கராயன் அணைக்கட்டுக்கு போய்ச் சேர்ந்த பின் அதிலிருந்து பம்பிங் செய்யப்பட்டு ஏரி, குளங்கள் நிரப்ப அனுப்பப்படும் திட்டம் வகுத்தார்.
 2019 இல் அடிக்கல் நாட்டி 80 சதவீத பணிகளை முடித்தார்.

 மீதி 20% பணிகள் முடிக்கப்பட்டு இந்த திட்டம் ஸ்டாலின் ஆட்சியில் தற்போது  நிறைவேற்றப்பட்டது.

 ஒரு நல்ல திட்டம் 65 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு அடிப்படையே தகர்க்கப் பட்டு நிறைவேறியுள்ளது.
 
 இருந்தாலும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள 1,045 குளம், குட்டைகளில் நீர் பாய்ச்ச இத்திட்டம் உதவும் என்பது மகிழ்ச்சி! 

தகவல்களுக்கு நன்றி: விகடன்






 

Sunday, 19 August 2018

பேராசையில் மூழ்கிய மலையாளிகள்

பேராசையில் மூழ்கிய மலையாளிகள்

கேரளாவில் ஆண்டுதோறும் பெய்யும் மழையைப் போல இம்முறை 2.5 மடங்கு அதிகம் மழை பெய்துள்ளது.

வெள்ளத்திற்கு முக்கிய காரணம் இதுவல்ல.

1905 இல் கேரளாவின் மொத்த நிலப்பரப்பில் 44% காடுகள்.
(தமிழகத்திற்கு சேரவேண்டிய எல்லைப் பகுதிகளை கேரளாவோடு சேர்த்துக் கொண்டனர்)

இன்று காடுகளின் பரப்பு 29% ஆக சுருங்கிவிட்டது.

மலையாளிகளின் பேராசைக்கு இரையான அம்மாநில வளங்களில் காடுகள் உட்பட எதுவும் தப்பவில்லை.

ஏனென்றால் காட்டை அழித்து அதில் குடியிருப்புகள், சொகுசு விடுதிகள் என கட்டிக்கொண்டே போனார்கள்.

இது போக கணக்கு வழக்கில்லாமல் சுரங்கம் தோண்டி கனிமங்களை எடுத்து பணத்தில் கொழித்தார்கள்.

வளைகுடா நாடுகளுக்கு குறிப்பாக துபாய்க்கு (UAE) வேலைக்குச் சென்று நல்ல வருமானம் ஈட்டினர்.

போதாக்குறைக்கு அவர்கள் செய்யும் தம்மத்தூண்டு விவசாயத்திற்காக 42 அணைகள் கட்டி ஆற்று நீரையெல்லாம் தேவையில்லாமல் தேக்கிவைத்தனர்.

இவை பெரும்பாலும் தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை மறிக்கும் நோக்கத்தில் கட்டியவை.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் ஊடகங்கள் கவனம் அங்கிருக்க அவசர அவசரமாக அணைகட்டி பவானி ஆற்றுத் தண்ணீரை மறித்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அணை கட்டி மறித்தது போக தமிழக எல்லைப் பகுதிக்குள் புகுந்து ஆக்கிரமிப்பு, வழிபாட்டிற்கு செல்லும் அப்பாவித் தமிழர்களைத் தாக்கி இனவெறியைத் தணித்துக் கொள்வது,
தமிழகத் தண்ணீரைத் தடுத்து தமிழகத்திற்கே திருப்பும் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க அலைந்தது,
மூணாறு தேயிலைத் தோட்டத்திற்கு சென்ற தமிழ்ப் பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்தது என மலையாளி செய்யாத இனவெறிச் செயலே இல்லை.

2011 இல் மாதவ் கட்கில் தலைமையிலான குழு ஆய்வு செய்து கேரளா மேற்குத் தொடர்ச்சி மலையை வரைமுறையில்லாமல் அழித்துவருவதை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்தது.

அதன் பரிந்துரைகளைக் காலில் போட்டு மிதித்தது கேரளா.

2016 இல் கஸ்தூரிரங்கன் குழு கட்கில் பாதுகாக்கக் கூறிய பகுதிகளை பாதியாகக் குறைத்து இதை மட்டுமாவது மிச்சம் வையுங்கள் என்று கெஞ்சியது.

அப்போது 1700 குவாரிகள் அமைத்து வெறித்தனமாக மலைகளைக் குடைந்துகொண்டிருந்த மலையாளிகள் அந்த பரிந்துரையையும் குப்பைத் தொட்டியில் போட்டனர்.

பிற மாநிலங்களிலும் இத்தகைய இயற்கை அழிப்பு நடக்கிறது என்றால் அரசாங்கம் அதற்கு நேரடியாக ஒப்புதல் அளிப்பதில்லை.
ஆனால் கேரள அரசே முன்னின்றுதான் தனது வளங்களைச் சுரண்டிக்கொள்ளச் சொன்னது.

இப்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட குடியேறவேகூடாத பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள்.

நிலச்சரிவு எல்லாம் ஏற்கனவே மூடச்சொன்ன குவாரிகள் குடைந்ததன் விளைவுதான்.

இயற்கையை அழித்து மலையாளிகள் சேர்த்த சொத்தெல்லாம்
அவர்கள் தேக்கிவைத்த பயன்படுத்தாத தண்ணீராலேயே அழிந்தது.

இப்போதுவரை நட்டம் 20,000 கோடியாம்.
2 லட்சம் மக்கள் வீடிழந்துள்ளனராம்.
பலி எண்ணிக்கை 200 வரை என்று சொல்கிறார்கள்.

   மழை அதிகம் பெய்யும் என்று முன்னெச்சரிக்கை விடுத்தும் மலையாளிகளின் தான்தோன்றித்தனமான, இயற்கையை மதிக்காத போக்கும்
மெத்தனமான, அசட்டையான மனப்பான்மையும்
இயற்கை தந்த அதிக மழையே வெள்ளமாக மாறி தண்டிக்க காரணமானது.

ஆ.. ஊ.. என்றால் கேரளாவைப் பார் என்று கைகாட்டிய மேதாவிகள்,
  பணவெறி பிடித்து
தனது மண்ணை அழித்து
அண்டை மாநிலமான தமிழகத்தைச் சுரண்டி
பணக் கொழுப்பெடுத்து
அடங்காத் திமிருடன் அலைந்த மலையாளிகளைத்தான் அப்போது உதாரணம் காட்டினோம் என்று இப்போது அறிந்திருப்பர்.

உண்மையிலேயே கேரளா கடவுளின் தேசமாகவே இருந்தாலும் இயற்கையின் முன் மண்டியிட்டுதான் ஆகவேண்டும்.

இத்தனை நடந்தும் மலையாளிகள் திருந்துவார்களா என்றால் நிச்சயம் திருந்தமாட்டார்கள்.

ஆனால் இது இயற்கை விடுத்த 'வரப்போகும் பிரளயத்தின்' முன்னறிவிப்பு மட்டும்தான்.

Saturday, 18 August 2018

சாகும்போதும் தமிழனைச் சீரழிப்பான் மலையாளி

சாகும்போதும் தமிழனைச் சீரழிப்பான் மலையாளி

முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது.
இது 100% உண்மை.

அது பலவீனமாக உள்ளது என்ற பொய்யை மலையாளிகள்,
பிரியங்கா பொண்ணு 'மன்னவன் பேரைச் சொல்லி' என்று பாடியதை விட அதிக தடவை கூறிவிட்டார்கள்.

முதலில் ஆய்வு நடந்து அணை பலமாக உள்ளது உறுதிசெய்யப்பட்டு
பிறகும் தமிழக அரசு பல கோடி செலவழித்து அணையை மேலும் பலப்படுத்தி
மீண்டும் ஆய்வுக்குழு பலத்தை உறுதி செய்து அறிக்கை தந்தும்
அணை நீர்மட்டத்தை 155 க்கு மேலே போக அனுமதி அளிக்கமாட்டோம் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான் மலையாளி.

40 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
மலையாளிகளில் மனிதநேயர் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு பேச்சுக்கு பூகம்பம் வந்து அணை உடைகிறது என்றே வைத்துக்கொள்வோம்,
சுற்றிலும் மலையாளிகளின் சொகுசு விடுதிகளைத் தவிர எந்த குடியிருப்புப் பகுதியும் கிடையாது.
எனவே எந்த உயிரிழப்பும் ஏற்படாது.

நீர் நேரடியாக இடுக்கி அணைக்கு வரும்.
இடுக்கி அணை மூன்று முல்லைப் பெரியாறு அணைகளுக்கு சமம்.
அவ்வளவு நீரை சேமிக்கலாம்.
அணை உடைந்து இடுக்கிக்கு நீர் வந்து சேருமுன் சரியாகத் திட்டமிட்டால் முல்லைப் பெரியாறு முழு கொள்ளளவையும் சமாளிக்கமுடியும்.

இப்போது மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டு 200 பேர் வரை இறந்துள்ளனர்.
காசர்கோடு தவிர அத்தனை கேரள மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் என அறிவிப்பு நடைமுறையில் உள்ளது.

இந்த இக்கட்டான நிலையிலும்
முல்லைப்பெரியாறு அணையின் தேக்கும் மட்டத்தை 142 ஆக குறைக்க வழக்கு போட்டுள்ளான் ஒரு மலையாளி.

அதாவது தான் சாகும் நிலையிலும் தமிழனுக்குக் கேடு செய்வதை மலையாளி கைவிடவில்லை.

தெலுங்கனும் கன்னடனும் தண்ணீரை மறித்து அவனுடைய விவசாயத்திற்கு பயன்படுத்த நினைக்கிறான்.
தன் மக்கள் வயிறுமுட்ட 6 வேளை சாப்பிட தமிழனின் சோற்றைப் பிடுங்குகிறான்.

ஆனால் மலையாளி தண்ணீரை மறுப்பது முழுக்க முழுக்க தனது இனவெறியைத் தீர்த்துக்கொள்ள மட்டுமே!

அணைகள் இருப்பது அனைத்துமே தமிழர்களின் பகுதிகள்.
தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய பகுதிகள்.
அந்த எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து அங்கே உள்ள அணைகளை மூடி இனவெறி அரிப்பைத் தீர்த்துக் கொள்கிறான்.

முல்லைப்பெரியாறு அணை இல்லையென்றால் தண்ணீரை இடுக்கி அணைக்குக் கொண்டுவந்து அதைக் கடலில் விட்டு அதிலிருந்து கரண்ட் எடுக்கமுடியும்.
இதுதான் உண்மையான காரணம்.

தமிழ் மக்களின் வயிற்றில் அடித்து மின்சாரம் எடுப்பது எந்த வகையில் நியாயம் என்று "மலையாள சகோதரர்களுக்கு" உதவச் சொல்லும் "மனிதநேயப் போராளிகள்" சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மனிதநேயம் காட்ட மலையாளிகள் ஒன்றும் மனிதர்கள் இல்லை.

மலையாளிகள் இன்று தனி இனம்.
அவர்களிடம் உள்ள தமிழ் எச்சங்களை வைத்துக்கொண்டு அவர்களை பாதித் தமிழர்களாகப் பார்ப்பது முட்டாள்த்தனம்.

மலையாளிகள் மற்ற எவரையும் விட தமிழர்களுக்கு எதிரானவர்கள்.

கேரளாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதுடன்,
மலையாளிகளுக்கு உணவு ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதும் இதற்கான நிரந்தரத் தீர்வு ஆகும்.

Thursday, 24 August 2017

சதுர்த்தி

சதுர்த்தி

முன்பு தமிழர்கள் களிமண்ணால் ஆன உருண்டையை அருகம்புல் அல்லது எருக்கம்பூ உடன் கிணறு, குளம், குட்டை போன்றவற்றில் கரைப்பார்கள்.
(அந்த உருண்டையை பிள்ளையார் என்று அழைப்பார்கள். திருமுருகாற்றுப்படை இலக்கியத்தில் முருகன்தான் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார்)
இதற்கு பின்னால் என்ன அறிவியல் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் இதிலிருந்து தோன்றிய பண்டிகையான  விநாயகர் சதுர்த்தி இன்று தமிழரல்லாத வடயிந்திய இந்து மதவெறியர்களால் கொண்டாடப்படுகிறது.
பண்டிகை என்ற பெயரில் வளமான களிமண்ணை தோண்டியெடுத்து
அதில் பெயிண்ட், பிளாஸ்டிக் போன்றவற்றை கலந்து ஆற்றிலோ கடலிலோ கொண்டு கரைத்து  மாசாக்குவது எந்தவகையிலும் அறிவார்ந்த செயலாகத் தோன்றவில்லை.

Tuesday, 2 May 2017

நதிகள் இணைப்பு நன்மையைத் தராது

சந்திரபாபு நாயுடு செய்தது இயற்கைக்கு எதிரான திட்டம்

கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆறுகளுக்கு இடையில் செயற்கையாக இணைப்பை ஏற்படுத்தி ஆற்றுநீர் கடலில் கலப்பதை பெருமளவில் குறைத்துள்ளனர்.

இதனால் கடல்நீர் கடற்கரையை ஒட்டிய நிலத்தடியில் ஊடுருவும்

இணைப்புக்கு இந்தப்பக்கம் இருக்கும் பகுதி விரைவில் உவர்நிலமாகும்.

எதற்குமே பணம் கொடுக்காத,
பேரிடர் வந்தாலும் கிள்ளிக்கொடுக்கிற பெருஞ்கஞ்சன் சிவாஜிராவ் கெய்க்வாட் (ரஜினிகாந்த்) நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி கொடுப்பேன் என்று கூறியதும்
மோடியை சந்தித்து பேசியதும் மக்களின் நன்மைக்காகவா?

அவன் என்று மக்களின் நன்மையை நினைத்தான்?

நதிநீர் இணைப்பு என்பதே ஒரு முட்டாள்த்தனமான திட்டம்.

ஆறு கடலில் கலந்தேயாகவேண்டும்.

தமிழகத்தில் அணை கட்ட யாரும் அக்கறை காட்டாதது உண்மையில் தமிழர்களுக்கு நன்மையில் முடிந்தது.
அதனால்தான் கர்நாடகா தண்ணீரை அடைத்தாலும் நம் டெல்டா பகுதியில் கடல் உட்புகவில்லை.

நாமும் அணைகட்டி தடுத்தால் நம் நெற்களஞ்சியம் அழிவது உறுதி.