Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

Sunday, 19 August 2018

பேராசையில் மூழ்கிய மலையாளிகள்

பேராசையில் மூழ்கிய மலையாளிகள்

கேரளாவில் ஆண்டுதோறும் பெய்யும் மழையைப் போல இம்முறை 2.5 மடங்கு அதிகம் மழை பெய்துள்ளது.

வெள்ளத்திற்கு முக்கிய காரணம் இதுவல்ல.

1905 இல் கேரளாவின் மொத்த நிலப்பரப்பில் 44% காடுகள்.
(தமிழகத்திற்கு சேரவேண்டிய எல்லைப் பகுதிகளை கேரளாவோடு சேர்த்துக் கொண்டனர்)

இன்று காடுகளின் பரப்பு 29% ஆக சுருங்கிவிட்டது.

மலையாளிகளின் பேராசைக்கு இரையான அம்மாநில வளங்களில் காடுகள் உட்பட எதுவும் தப்பவில்லை.

ஏனென்றால் காட்டை அழித்து அதில் குடியிருப்புகள், சொகுசு விடுதிகள் என கட்டிக்கொண்டே போனார்கள்.

இது போக கணக்கு வழக்கில்லாமல் சுரங்கம் தோண்டி கனிமங்களை எடுத்து பணத்தில் கொழித்தார்கள்.

வளைகுடா நாடுகளுக்கு குறிப்பாக துபாய்க்கு (UAE) வேலைக்குச் சென்று நல்ல வருமானம் ஈட்டினர்.

போதாக்குறைக்கு அவர்கள் செய்யும் தம்மத்தூண்டு விவசாயத்திற்காக 42 அணைகள் கட்டி ஆற்று நீரையெல்லாம் தேவையில்லாமல் தேக்கிவைத்தனர்.

இவை பெரும்பாலும் தமிழகத்திற்கு செல்லும் தண்ணீரை மறிக்கும் நோக்கத்தில் கட்டியவை.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த நேரத்தில் ஊடகங்கள் கவனம் அங்கிருக்க அவசர அவசரமாக அணைகட்டி பவானி ஆற்றுத் தண்ணீரை மறித்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அணை கட்டி மறித்தது போக தமிழக எல்லைப் பகுதிக்குள் புகுந்து ஆக்கிரமிப்பு, வழிபாட்டிற்கு செல்லும் அப்பாவித் தமிழர்களைத் தாக்கி இனவெறியைத் தணித்துக் கொள்வது,
தமிழகத் தண்ணீரைத் தடுத்து தமிழகத்திற்கே திருப்பும் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க அலைந்தது,
மூணாறு தேயிலைத் தோட்டத்திற்கு சென்ற தமிழ்ப் பெண்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்தது என மலையாளி செய்யாத இனவெறிச் செயலே இல்லை.

2011 இல் மாதவ் கட்கில் தலைமையிலான குழு ஆய்வு செய்து கேரளா மேற்குத் தொடர்ச்சி மலையை வரைமுறையில்லாமல் அழித்துவருவதை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்தது.

அதன் பரிந்துரைகளைக் காலில் போட்டு மிதித்தது கேரளா.

2016 இல் கஸ்தூரிரங்கன் குழு கட்கில் பாதுகாக்கக் கூறிய பகுதிகளை பாதியாகக் குறைத்து இதை மட்டுமாவது மிச்சம் வையுங்கள் என்று கெஞ்சியது.

அப்போது 1700 குவாரிகள் அமைத்து வெறித்தனமாக மலைகளைக் குடைந்துகொண்டிருந்த மலையாளிகள் அந்த பரிந்துரையையும் குப்பைத் தொட்டியில் போட்டனர்.

பிற மாநிலங்களிலும் இத்தகைய இயற்கை அழிப்பு நடக்கிறது என்றால் அரசாங்கம் அதற்கு நேரடியாக ஒப்புதல் அளிப்பதில்லை.
ஆனால் கேரள அரசே முன்னின்றுதான் தனது வளங்களைச் சுரண்டிக்கொள்ளச் சொன்னது.

இப்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும்பாலும் ஏற்கனவே எச்சரிக்கப்பட்ட குடியேறவேகூடாத பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள்.

நிலச்சரிவு எல்லாம் ஏற்கனவே மூடச்சொன்ன குவாரிகள் குடைந்ததன் விளைவுதான்.

இயற்கையை அழித்து மலையாளிகள் சேர்த்த சொத்தெல்லாம்
அவர்கள் தேக்கிவைத்த பயன்படுத்தாத தண்ணீராலேயே அழிந்தது.

இப்போதுவரை நட்டம் 20,000 கோடியாம்.
2 லட்சம் மக்கள் வீடிழந்துள்ளனராம்.
பலி எண்ணிக்கை 200 வரை என்று சொல்கிறார்கள்.

   மழை அதிகம் பெய்யும் என்று முன்னெச்சரிக்கை விடுத்தும் மலையாளிகளின் தான்தோன்றித்தனமான, இயற்கையை மதிக்காத போக்கும்
மெத்தனமான, அசட்டையான மனப்பான்மையும்
இயற்கை தந்த அதிக மழையே வெள்ளமாக மாறி தண்டிக்க காரணமானது.

ஆ.. ஊ.. என்றால் கேரளாவைப் பார் என்று கைகாட்டிய மேதாவிகள்,
  பணவெறி பிடித்து
தனது மண்ணை அழித்து
அண்டை மாநிலமான தமிழகத்தைச் சுரண்டி
பணக் கொழுப்பெடுத்து
அடங்காத் திமிருடன் அலைந்த மலையாளிகளைத்தான் அப்போது உதாரணம் காட்டினோம் என்று இப்போது அறிந்திருப்பர்.

உண்மையிலேயே கேரளா கடவுளின் தேசமாகவே இருந்தாலும் இயற்கையின் முன் மண்டியிட்டுதான் ஆகவேண்டும்.

இத்தனை நடந்தும் மலையாளிகள் திருந்துவார்களா என்றால் நிச்சயம் திருந்தமாட்டார்கள்.

ஆனால் இது இயற்கை விடுத்த 'வரப்போகும் பிரளயத்தின்' முன்னறிவிப்பு மட்டும்தான்.

Monday, 16 October 2017

இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்

இலக்கியங்களில் மழை பற்றிய அறிவியல்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

பனிகடல் பருகி வலன்ஏர்பு
கோடு கொண்டெழுந்த கொடுஞ்செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த
- முல்லைப்பாட்டு 1-6

இப்பாடலில் மேகத்தின் இயக்கம் அறிவியல் முறையில் விளக்கப்பட்டுள்ளது.  
கடலில் நீர் பருகி வலப்புறமாக எழுந்த மேகமானது நெடுந்தொலைவு பயணித்து மலையில் தங்கி பெருமழையை பொழிந்தது
------------------

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகிக்
காலை வந்தன்றால் காரே
- அகநானுறு183

குளிர்ந்த கடலில் நீரை மேகங்கள் குடிப்பது பற்றி வருகிறது
-----------

இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே
- நற்றிணை 329:11

கருமையான வானம் பெரும் சத்தத்துடன் இடி இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்துவரும் கார்காலம்.
(அதாவது மேகம் கடலில் இருந்து நீரை எடுத்து மழையாக பொழியும் மழைக்காலம்)
---------------

மின்னு வசிபு
அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீர
கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
- நற்றிணை 228:1

மின்னலுடன் முழங்கும் பெரும் சத்தத்துடன் நீர் நிறைந்த மேகம்  பூமியிலிருந்து பெற்ற கடன் தீருமாறு மழையை கண்தெரியாத இருளடைந்த நடு இரவில் பொழியும்.
--------------------

இன் நீர்த்
தடங் கடல் வாயின் உண்டு சில் நீர்
- நற்றிணை 115:3

மேகங்கள் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டு, எஞ்சிய கடலின் நீர் சிறிது என்னும்படி கொணர்ந்தன.

(இது கடல் நீரை மேகங்கள் கொள்வதை சற்று மிகைப்படுத்திக் கூறுகிறது.
அதாவது பாதிக்கும் மேல் உறிஞ்சிவிட்டதாம்!)
-----------

நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே
- ஐங்குறுநூறு 492

மேகம் காற்றில் அடித்துச் செல்லப்படுவதை கூறுகிறது
-----------

மேகங்களின் நகர்வு பற்றியும் குறித்துள்ளனர்,

வலனேர்பு அங்கண் இரு விசும்பதிர
ஏறொரு பெயல் தொடங்கின்றே வானம்
- ஐங்குறுநூறு 469

பணை முழங்கு எழிலி பெளவம் வாங்கி
தாழ் பெயற் பெருநீர் வலன் ஏர்பு வளைஇ
- அகநானூறு 840

கொண்டல் மாமழை குடக்கு ஏர்பு குழைத்த
- நற்றிணை 140

கடல் முகந்து கொண்ட காமஞ் சூல்
மாமழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு
- அகநானூறு 43

போன்ற பாடல்கள் கடலில் உருவான மழைமேகம் மேற்கு நோக்கி (வலப்பக்கமாக) நகர்வதாக குறித்துள்ளனர்.
அதாவது வடகிழக்குப் பருவக்காற்று பற்றி கூறப்பட்டுள்ளது.
--------------

நளி கடல் முகந்து செறிதக இருளி
கனை பெயல் பொழிந்து
- நற்றிணை 289

கடல் நீரைக் குடித்து செறிவு (அடர்த்தி) அதிகமான மேகம் மழை பொழிவதாகக் கூறுகிறது இப்பாடல்
-------------

கடுஞ்சூல் மகளிர் போலநீர் கொண்டு
விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச்
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வான மேர்தரும் பொழுதே
- குறுந்தொகை - 287

அதாவது நிறைமாத சூலி போல நீரைச் சுமந்துகொண்டு எடையால் மேலே எழமுடியாமல் தாழ்ந்து பறந்து மழைமேகங்கள் மலையை நோக்கி செல்கின்றன என்று கூறுகிறது.
----------

வெஞ்சுடர் கரந்த காமஞ்சூல் வானம்
நெடும்பல் குன்றத்துக் குறும்பல மறுகி
தாஇல் பெரும்பெயல் தழைஇய யாமத்து
- நற்றிணை 261

வளிபொரு மின்னொடு வான்இருள் பரப்பி
விளிவுஉன்று கிளையொடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்
- பதிற்றுப்பத்து 12

மேகங்கள் மலையில் மோதி மழைபொழிவதைக் கூறுகிறது
----------

பெய்துபுலந் திறந்த பொங்கல் வெண்மழை
எஃகுஉறு பஞ்சித் துய்ப்பட் டன்ன
- அகநானுறு 217

பெய்து தீர்த்த மேகம் வெண்மையான மென்பஞ்சுபோல ஆகிவிடும் என்று கூறுகிறது.
-----------

மேற்கண்டவற்றை ஆராய்ந்தால் சங்ககாலத்திலேயே தமிழர்கள் அனைவரும் மழை எவ்வாறு பொழிகிறது என்று அறிந்திருந்ததை உணரமுடிகிறது.

பெயிலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பிற் றுவலை கற்ப
- நெடுநெல்வாடை 20

மழை பெய்துவிட்ட வெண்மையான மேகம் மேலெழுந்து சாரலை ஏற்படுத்துவது பற்றி வருகிறது
-----------------------

மழைப்பொழிவை முன்பே கணித்த குறிப்புகளும் உண்டு,

பொய்யா எழிலி பெய்விட நோக்கி
முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்
சிறு நுண் ணெறும்பின்
- புறநானூறு 173

எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள்
-----------

இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
- புறநானூறு 35:7

தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும்
- புறம் 117:2

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
திசை திரிந்து தெற்கு ஏகினும்
தற்பாடிய தனி உணவில்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
- பட்டினப்பாலை 1-6

மேற்கண்டவை உணர்த்தும் பொருள் யாதெனில்,
வானத்தில் வெள்ளி கோள் வடக்கு திசை நோக்கிச் சென்றால் மழைவளம் அதிகமாகும் என்றும்
தென்திசை நோக்கிச் சென்றால் மழைவளம் குறையும்
(ஆனாலும் காவிரி பொயக்காது)
----------
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
- பதிற்றுப்பத்து 13:25

செவ்வாய்க் கோள் சென்ற வழியில் வெள்ளி கோள் செல்லாததால் மழை தேவையான இடங்களிலெல்லாம் உன் நாட்டில் மழை பெய்கிறது.
(அதாவது வானில் கோள்கள் நகர்வு மூலம் மழையை கணித்துள்ளனர்)
----------

பழமையான மொழியான தமிழில் அறிவியல் இல்லை என்று சில பிறமொழி வந்தேறிகள் பிதற்றுகின்றனர்.

மேலே உள்ள மழை பற்றிய குறிப்புகள் மட்டுமே.
இதேபோல பல்வேறு விடயங்களை தமிழ் இலக்கியம் அறிவியல் பார்வையுடன் பதிவுசெய்துள்ளது.

வேறு எந்த மொழியினது தொடக்ககால இலக்கியத்திலும் இத்தகைய அறிவியல் பார்வை இருப்பதாகத் தெரியவில்லை.

Friday, 4 December 2015

முதல் ஆளாக வந்துநிற்கும் முஸ்லீம்கள்

முதல் ஆளாக உதவும் முஸ்லீம்கள்

வெள்ளபாதிப்புக்கு மற்றவர்களை முந்திக்கொண்டு முதல் ஆளாகப் பள்ளிவாசல்களைத் திறந்துவிட்டு உதவிகளைச் செய்ய ஆரம்பித்தது தமிழ் இசுலாமியர்களே.

இது ஒன்றும் புதிதில்லை.
ஆன்டன் பாலசிங்கம் சென்னையில் தங்கியிருந்தபோது அவர் வீட்டில் குண்டு வெடித்தது.

அதனை அடுத்து அவருக்கு
வீடுகொடுக்க பலரும் தயங்கியபோது வீடு தந்து அடைக்கலம் கொடுத்தோர் ஒரு இசுலாமித் தமிழ்க் குடும்பம்தான்.

தமிழினத்திற்கு ஆபத்து என்றால் முதலில் பாய்ந்து வருவது அவர்கள்தான்.