Sunday, 22 June 2025
அன்றைய காதல்
Friday, 23 May 2025
இதயத்துடிப்பு
Thursday, 19 April 2018
காதலும் திராவிடமும்
காதலும் திராவிடமும்
இன்று காதலுக்கு துணை நிற்கிறோம் என்ற பெயரில் ஈ.வே.ரா பக்தர்கள் செய்யும் அரசியல் சதிகளை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.
முதலில் இவர்களது வழிகாட்டி ஈ.வே.ரா காதல் பற்றி என்ன கூறியுள்ளார் என்று அறிவோம்.
அவர் எழுதியது வருமாறு,
** உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி,
அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து,
மக்களுக்குள் புகுத்தி,
அநாவசியமாய் ஆண் - பெண் கூட்டுவாழ்க்கையின் பயனை மயங்கச்செய்து,
காதலுக்காக என்று இன்பமில்லாமல் திருப்தி இல்லாமல் தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டும்.
ஆனால் காதல் என்றால் என்ன?
அதற்குள்ள சக்தி என்ன?
அது எப்படி உண்டாகின்றது?
அது எதுவரையில் இருக்கின்றது?
அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது?
அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது?
அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன?
என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால்,
காதல் என்பதின் சத்தற்ற தன்மையும்
பொருளற்ற தன்மையும்
உண்மையற்ற தன்மையும்
நித்தியமற்ற தன்மையும்
அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத்தனமும்
ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால், அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது?
உலக வழக்கில் அது எப்படி பயன்படுத்தப்பட்டு வருகின்றது?
இவற்றிற்கு என்ன ஆதாரம் என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள்,
"காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல.
அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு,
காதல் வேறு"
என்றும்,
"ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக்காரியத்திற்காக ஏற்படுவதாகும்"
என்றும்,
"அதுவும் இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்"
என்றும்,
"அக்காதலுக்கு இணையானது உலகத்தில் வேறு ஒன்றுமில்லை" என்றும்,
‘‘அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்"
என்றும்,
"அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால்,
பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது''
என்றும்,
‘‘அந்தப் படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டுவிட்டால் அது காதலாயிருக்க முடியாது.
அதை விபச்சாரம் என்றுதான் சொல்ல வேண்டுமேயொழிய, அது ஒருக்காலும் காதலாகாது'' என்றும்
‘‘ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு யாரிடமும் காமமோ, விரகமோ, மோகமோ என்றெல்லாம் ஏற்படாது''
என்றும் சொல்லப்படுகின்றது.
மேலும், இந்தக் காதல் காரணத்தினாலேயே
ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,
ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது. **
குடி அரசு (18.1.1931) இதழில் மேற்படி ஈ.வெ.ரா எழுதியுள்ளார்.
அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது தொல்லையென்றும்
அதற்கு அடிப்படையான காதல் என்பது உருவகப்படுத்தபட்ட போலி என்றும் ஈ.வே.ரா கூறுகிறார்.
சமீபத்தில் நடந்த உடுமலை சங்கர் கொலை உட்பட பல கொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்கள் ஏழையாக வேலைவெட்டி இல்லாதவர்களாகவும் வசதியான பெண்களைக் காதலித்திருப்பதும் தெரிகிறது.
திருமாவளவன் போன்றவர்கள் திராவிடக் கட்சிகளின் தூண்டுதலின்பேரில் சதி திட்டம் தீட்டி வேலைவெட்டியில்லாத இளைஞர்களைத் தூண்டிவிட்டு வசதியான வேற்றுசாதி மாணவிகளைத் துரத்தச்சொல்லி அனுப்புகின்றனர்.
ஒருவேளை அந்த பெண் ஒத்துக்கொண்டால் (தமது சாதி காவல்துறையினர் வழக்கறிஞர்கள் உள்ளடக்கிய) கட்டப் பஞ்சாயத்து குழுவின் உதவியுடன் திருமணம் செய்துவைப்பதும்
அந்த பெண் ஒத்துக்கொள்ளாவிட்டால் ஆசிட் வீசுவது, கொலைமிரட்டல் விடுவது, வன்கொடுமை செய்ததாக போலிப்புகார் அளிப்பது அல்லது பணம் பெற்றுக்கொண்டு விடயத்தை அமுக்குவது என பல அட்டூழியங்களில் ஈடுபடுகின்றனர்.
இந்த கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கும் வசதிமிக்க பெற்றோருக்கும் இடையேயான மோதல் இருசாதிகளுக்கு இடையான பிரச்சனையாக வெளியே காட்டப்படுகின்றன.
மேற்படியான மோதல்கள் பெரும்பாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படுபவை.
இதே தன் பெண்ணை விரும்புபவன் நல்ல படித்த பையனாக வசதியான பையனாக இருந்திருந்தால் பெற்றோர்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம்.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு சம்பவங்கள் இளவரசன் மற்றும் உடுமலை சங்கர் கொலைகள்.
இதில் இளவரசன் தமக்கு அதிகம் உதவியது வன்னியர் சாதி நண்பர்கள்தான் என்று கூறியுள்ளார்.
சங்கரின் கிராமமான (உடுமலை வட்டம்) கொமரலிங்கம் சாதி தாண்டி திருமணம் செய்த பல தம்பதிகளைக் கொண்டது.
ஆக இன்று கருப்பு சட்டை போட்டுக்கொண்டு சாதிதாண்டி காதல் செய்வதை ஊக்குவிக்கும் கூட்டத்தின் நோக்கம் காதலை வாழவைப்பதோ சாதியை ஒழிப்பதோ கிடையாது.
இவர்களின் நோக்கம் எதாவது ஒரு பிரச்சனையில் இருவேறு சாதியினர் சம்பந்தப்பட்டிருந்தால் அந்த தனிப்பட்ட பிரச்சனையை சாதி பிரச்சனை ஆக்கி இரு தமிழ்ச்சாதிகள் அடித்துக்கொண்டு சாகவேண்டும் என்பதுதான்.
எந்த கொலை நடந்தாலும் அதை சாதிய வன்முறை என்று உருவாக்க முயல்வதும்
அது ஒரே சாதிக்குள் நடந்தது என்று தெரியவந்தால் அப்படியே போட்டுவிட்டு நகர்வதும் திராவிடவாதிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது .
நெல்லை கந்துவட்டி தீக்குளிப்பு, வேலாம்புதூர் கொலைச் சம்பவம் போன்றவற்றை சாதிக்கொடுமை என்று வதந்தி பரப்பியதும் அதற்காகத்தான்.
ஸ்வாதி படுகொலையை கண்டுகொள்ளாமல் நகர்வதும் அதற்காகத்தான்.
'உயர்சாதிகளை எதிர்க்கிறோம்' என்ற பெயரில் அனைவரும் இந்த 'மானத்தில் கைவைக்கும் கூட்டத்துடன்' சேர்ந்துகொள்கின்றனர்.
விபரமே தெரியாத 15, 16 வயது மாணவிகள் பின்னால் 25,30 வயதுள்ள படிக்காத, வேலைவெட்டி இல்லாத, தறுதலை ஒருவனை பயிற்சி கொடுத்து விரட்ட அனுப்புவது உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத 'சாதி ஒழிப்பு திட்டம்' ஆகும்.
நாடக்ககாதல் பிரச்சனைகளை பொதுப்புத்தியுடன் அணுகாமல் பின்னால் இருக்கும் வந்தேறிகளின் சூழ்ச்சியை அறிந்து நடப்போம்.
Tuesday, 13 February 2018
தாஜ்மகாலைத் தோற்கடித்த பெண்ணின் காதல்
தாஜ்மகாலைத் தோற்கடித்த பெண்ணின் காதல்.
<3<3<3<3<3<3<3<3<3<3<3
காதல் என்றாலே மும்தாஜுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகால் நினைவுக்கு வருகிறது.
ஆனால், இது பெண்கள் காதலுக்காக எதுவும் செய்யவில்லை என்று கூறவும் வழி செய்கிறது.
இதற்கான பதிலடியானது தாஜ்மகாலுக்கு அருகிலேயே ஷாஜகானின் குடும்பத்திலேயே இருக்கிறது .
அதுதான் ஹுமாயூனுக்காக அவரது மனைவி கட்டிய தோட்டக்கல்லறை.
ஷாஜகானுக்கு 9மனைவிகள். அதில் அவருக்கு விருப்பமானவர் மும்தாஜ்.
இவர் 13வது குழந்தையைப் பெறும்போது உதிரப்போக்கு காரணமாக இறந்துவிடுகிறார்.
இது ஷாஜகானை வேதனைகக்குள்ளாக்குகிறது.
உடனே 20,000 தொழிலாளர்களைக்கொண்டு 22ஆண்டுகள் பல்வேறு நாடுகளின் அறிஞர்களையும் பொருட்களையும் கலைகளையும் கொணர்ந்து பெரிய பொருட்செலவில் 1000 யானைகளை வைத்து நினைவிடம் கட்டிமுடிக்கப்பட்டது.
இதே போல் வேறொன்று உருவாகக்கூடாது என்று கட்டியவர்கள் கைகளை வெட்டினார் என்றும், மக்கள் மீது வரி மேல் வரி விதித்து படாதபாடு படுத்தினார் என்றும், மும்தாஜின் தங்கையின் கணவரைக் கொன்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
அத்தனையையும் விஞ்சி நிற்கிறது மும்தாஜ் மீதான அவரது காதல்.
ஆனால், 1571ல் அதாவது தாஜ்மகால் கட்டத் தொடங்குவதற்கு 61ஆண்டுகளுக்கு முன்பே ஹுமாயுன் நினைவிடம் கட்டப்பட்டுவிட்டது.
ஹுமாயூன் இறந்து 9ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதைக் கட்டத்தொடங்குகிறார்கள்.
அது ஏன்?
இதற்குப்பின்னால் ஒரு மாவீரனின் பெயர் ஒளிந்திருக்கிறது.
அவன் தான் வடஹிந்தியாவின் நெப்போலியன் என்றழைக்கப்படும் ஹேமு.
(தென்னிந்திய நெப்போலியன், மாமல்லனால் தோற்கடிக்கப்பட்ட புலிகேசி ஆவான்).
ஹேமு ஒரு நடுத்தர ஹிந்து குடும்பத்தில் பிறந்து ஆப்கானிய இசுலாமியரான ஷேர்கான் அரசில்(சுர் பேரரசு) அடிமட்டத்திலிருந்து பல்வேறு பதவிகள் வகித்து பிறகு படையமைச்சராக உயர்கிறான்.
அரசனுக்காக பல்வேறு போர்களில் பலரை தோற்கடித்து மாவீரன் என்று பெயர்பெறுகிறான்.
அரசனை விட செல்வாக்கு பெருகுகிறது.
அரசனின் இறப்புக்குப் பிறகு அரசனாக அரியணை ஏறுகிறான்.
இசுலாமிய ஹிந்து மக்களின் ஒருங்கிணைந்த ஆதரவுடன் வலிமை பொருந்திய மொகலாயர்களை எதிர்க்கிறான்.
இந்த நேரத்தில் முகலாயப் பேரரசனான ஹுமாயூன் இறந்துவிட வங்காளத்தில் இருந்த ஹேமு தன் படைகளோடு டெல்லிநோக்கி வருகிறான்.
ஹேமு பெயரைக் கேட்டதுமே எல்லாரும் ஓடிவிடுகிறார்கள்.
ஆக்ராவரை முன்னேறிய ஹேமு முகலாயர் தலைநகரான டெல்லியைத் தாக்கி கைப்பற்றுகிறான்.
அங்கே பேரரசனாக முடிசூட்டிக்கொள்கிறான்.
350 ஆண்டுகள் இசுலாமிய ஆட்சிக்குப் பிறகு ஒரு ஹிந்து அரசனாக வந்ததால் ஹிந்து புராணங்களின் வரும் அரசனான விக்ரமாதித்ய என்கிற பெயர் அவனுக்கு அளிக்கப்படுகிறது.
மொகலாயர்கள் மிகவும் சுருங்கி இறுதிப்போருக்கு ஆயத்தமாகிறார்கள்.
இரண்டாம் பானிபட் போர் துவங்குகிறது.
மொகலாயர்களிடம் இருந்தது வெறும் 20,000 வீரர்கள்.
எதிரே நிற்பதோ தொடர்ச்சியாக 22வெற்றிகளைக் கண்டவனும் தன் வாழ்நாளில் ஒரு தோல்வியையும் காணாதவனும் ஹிந்து இசுலாமிய கூட்டாதரவு பெற்ற நாயகனுமான ஹேமு.
ஹேமுவின் படையானது 30,000 வீரர்களையும், 1000யானைகளையும், 51 பீரங்கிகளையும் கொண்டது.
முகல் அரசு இத்தோடு முடிந்தது என்று எல்லாரும் முடிவே கட்டிவிட்டனர்.
இந்த இடத்தில்தான் வரலாறு எதிர்த்திசையில் திரும்புகிறது.
5, நவம்பர்,1556 இல் போர் தொடங்குகிறது.
முகலாயர்கள் தமது திறமையான வில்வீரர்களை பாதுகாப்பாக முன்னேற்றி அழைத்துச் சென்று யானை மேலிருந்து போரை வழிநடத்திவரும் ஹேமுவைக் கொல்லத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், ஹேமுவின் உடல் முழுவதும் கவசம் மூடியிருக்க அவர்கள் திட்டம் நிறைவேறவில்லை.
ஆனால், ஒரு மொகலாய வீரன் குறிபார்த்து ஹேமுவின் கண்ணில் அம்பு எய்துவிடுகிறான்.
அவன் விட்ட ஒரு அம்பு போரைத் தலைகீழாக மாற்றிவிடுகிறது.
ஹேமு நினைவிழந்துவிட படைகள் ஒருங்கிணைப்பு இழந்து சிதறுண்டன.
அதன்பிறகு மொகலாயர்கள் கை ஓங்கியது.
முகலாயர்கள் மாபெரும் வெற்றிபெற்றனர்.
ஹேமுவின் தலையை வெட்டி காபூலிலும் உடலை அவன் முடிசூடிய கோட்டையிலும் தொங்கவிடுகின்றனர்.
அவனுக்கு உதவிய அனைவரையும் துரத்தி துரத்தி படுகொலை செய்து தலையை வெட்டி மண்டையோடுகளால் கோபுரங்கள் அமைத்தனர்.
அதன் பிறகு மொகலாய ஆட்சியானது இன்றைய ஆப்கானிஸ்தான் தொடங்கி பங்களாதேஷ் வரை ஜம்மு தொடங்கி மதுரை வரை பரவுகிறது.
குறுக்கு வழியில் முன்னேறிய, இசுலாமியரை வெறுத்த சிவாஜியைக் கொண்டாடும் வடஹிந்திய ஹிந்து தலைவர்கள் தூயவீரனான ஹேமுவை கண்டுகொள்வதில்லை.
ஹேமுவை இன்று யாருக்குமே தெரியாது.
அவன் தோற்றுவிட்டானல்லவா? அவனது பெயர் வரலாற்றுப் பக்கங்களை மட்டுமே ஆள்கின்றது.
முகலாயர்கள் மீண்டும் தனது அரசை கைப்பற்றியபிறகு முகலாய அரசி பேகா பேகம் தனது காதல் கணவரான ஹுமாயுனுக்கான நினைவிடத்தை பாரசீகத்திலிருந்து (பெர்சியா) நிபுணர்களை வரவழைத்து பெரும்பொருட்செலவில் அமைத்து கணவரின் உடலை தோண்டியெடுத்து அதனுள் அடக்கம் செய்கிறார்.
இதுதான் தாஜ்மகாலை அமைக்கும் எண்ணத்தை ஷாஜகானுக்கு ஏற்படுத்தியது.
மகனால் சிறையில் தள்ளப்பட்ட ஷாஜகான் இறந்தபிறகு தாஜ்மகாலில் உள்ள மும்தாஜ் கல்லறைக்கு அருகிலேயே 1666ல் புதைக்கப்பட்டார்.
ஆனால், 1582லேயே தன் கணவருடன் தான் கட்டிய தோட்டக்கல்லறையில் புதைக்கப்பட்டிருந்தார் பேகா பேகம்.
பெண்களின் காதல் ஒன்றும் சளைத்தது அல்லவே!
(2 டிசம்பர் 2014 அன்று முகநூலில் இட்டது)
Monday, 17 April 2017
கரண் தப்பினால் மரணம்
'கரணம் தப்பினால் மரணம்'
இதில் கரணம் என்பது திருமணத்தைக் குறிக்கும்.
உலகில் திருமணம் என்ற சடங்கு தோன்றியிராத காலத்தில் (ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை இருந்தது)
பெண்ணும் ஆணும் களவு நெறியில் ஈடுபடுவர். (தற்போதைய மேலைநாட்டு வழக்கமான டேட்டிங் போல) இதன் விளைவாக பெண் கருவுறுவாள்.
ஒருவேளை அந்த ஆண் அவளோடு வாழமாட்டேன் என்று கைவிட்டுவிட்டால் அந்தப்பெண் தற்கொலை செய்துகொள்ளும் நிலை இருந்தது.
இதுதான் கரணம் தப்பினால் மரணம் (கரண் = திருமணம்).
இத்தகைய தற்கொலைகள் அதிகமானதால் ஊரறிய திருமணம் செய்துகொள்வது விதியாக்கப்பட்டது.
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரண் என்ப"
_தொல்காப்பியம்
Saturday, 13 February 2016
பழந்தமிழர் கொண்டாடாத காதலா?
பழந்தமிழர் கொண்டாடாத காதலா?
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
மல்கிய துருத்தியுள் மகிழ்
துணைப் புணர்ந்து அவர்
வில்லவன் விழவினுள்
விளையாடும் பொழுது அன்றோ
(கலித்தொகை 35:13-14)
"யாரும் வந்துபோகாத ஆற்றுத்தீவில் (ஆற்று நடுவில் இருக்கும் மணல் திட்டு) காதலனுடன் இன்பமாகத் தழுவிக்கொண்டு விளையாடவேண்டிய விழா நாள் அல்லவா இன்று?!" என காதலனைப் பிரிந்த காதலி ஏக்கத்துடன் தன் தோழியிடம் கூறுகிறாள்.
நாம் இல்லாப் புலம்பாயின்
நடுக்கம் செய் பொழுதாயின் காமவேள் விழவாயின்
கலங்குவள் பெரிதென ஏமுறுகடுந்திண்டேர்கடவி
நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே
(கலித்தொகை 27:24-26)
காதலன் இல்லாத அவள் தனியளாய் நடுக்கத்துடன் இந்த (காமன்)விழா நாளில் கலங்கிப்போய் குழம்பிக்கொண்டு இருப்பாள் என்று
காதலன் தன் தேரை விரைவாகச் செலுத்தி அவளுடன் உடனிருக்க வந்துவிட்டானாம்.
நன்றி: சங்ககாலத்தில் காதலர் தினம் _sishri org
Wednesday, 15 July 2015
சங்ககாலத்தில் காதல்திருமணம்
சங்ககாலத்தில் காதல்திருமணம்.
<B<B<B<B<B<B<B<B<B
உடன்போக்கு என்பது காதலனும் காதலியும் தத்தமது பெற்றோர் தம்மை சேர்த்துவைக்க விரும்பாத நிலையில் வீட்டைவிட்டு வெளியேறுவது,
பழந்தமிழ் இலக்கியமான கலித்தொகையில்,
ஒருவரை ஒருவர் காதலிக்கும் தலைவனும் தலைவியும் உடன்சென்ற பின்னர்,
தேடிவரும் செவிலித்தாய்(வளர்ப்புத்தாய், சித்தி) முக்கோற்பகவர் எனப்படும் துறவியர்களைக் காண்கிறாள்.
அவர்களிடம் இவ்வழியே சென்ற தன் மகளையும் அவளது காதலனையும் கண்டீர்களா என வினவுகிறாள்.
அதற்கு அவர்கள்,
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும்
ஆங்கு அனையளே.
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்
செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்
செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.
என்று பதிலுரைக்கிறார்கள்.
இதன் பொருள்,
சந்தனம் பூசிக்கொண்டவர்க்கு மணம் சேர்க்குமேயன்றி அது விளைந்த மலைக்கு அதனால் சிறப்புசெய்ய முடியுமா?
முத்து அணிந்து கொண்டவர்க்கு சிறப்பு செய்யுமேயன்றி அது தோன்றிய கடலுக்கு சிறப்பு செய்யமுடியுமா?
யாழிசை கேட்பவர்களுக்கு சிறப்பு செய்யுமேயன்றி யாழுக்கு சிறப்பு செய்யமுடியுமா?
அதுபோலத்தான் உன் மகள் தன் தலைவனுக்கு சிறப்பு செய்வாளேயன்றி உனக்கு சிறப்பு செய்யமாட்டாள்.
காதலர்களின் வாழ்க்கையை முடிவுசெய்வதில் பெற்றோர் தலையிடக்கூடாது என்று துறவிகளே கூறுகின்றனர்.
http://m.youtube.com/watch?v=_fiR_CPBYZY
Thursday, 20 November 2014
பரத்தையும் பரத்தனும்
பரத்தையும் பரத்தனும்.
சங்ககாலத்தில்... என்றாலே
ஓடிவிடுகிறான் இன்றைய தமிழன்
வரலாறு படிப்பது ஏன் என்று கொஞ்சம் பார்ப்போமா?
நேரடியாக மோதமுடியாத வல்லரசான ரோமன் பேரரசை சுற்றுப்பாதையில் சென்று ஆல்ப்ஸ் பனிமலையை ஏறி இறங்கி ஹனிபல் நிர்மூலமாக்கினான்.
இது நடந்து 2000 ஆண்டுகள் கழித்து மாவீரன் நெப்போலியன் அதேபோல ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சுற்றுப்பாதையில் சென்று ஆஸ்திரியாவை வென்றான்.
ஐரோப்பா கண்டத்தையே கைப்பற்றினான்.
பிறகு நெப்போலியன் ரஷ்யநாட்டின் மீது குளிர்காலத்தில் படையெடுத்துச்சென்றதால் தோற்றான்.
இதுநடந்து 150ஆண்டுகள் கழித்து ஹிட்லர் ஐரோப்பா கண்டத்தையே கைப்பற்றினான். நெப்போலியனின் வரலாறை ஹிட்லர் கவனத்தில் கொண்டிருந்தால் வெற்றி மேல் வென்றி குவித்த நாஜிப்படைகள் வலிமைகுறைந்த ரஷ்ய படையிடம் குளிர்காலத்தில் தோற்று மண்ணைக்கவ்வியிருக்காது.
பழங்காலத்தில் நடந்ததை அறிவது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தவே ஐரோப்பாவரை செல்லவேண்டிவந்தது.
மற்றபடி இந்தப் பதிவு போர்பற்றியது அன்று. நாகரீகம் பற்றியது. இல்லறம் பற்றியது.
-----------------
சங்ககாலத்தில் குடும்பம் என்கிற அமைப்பு தோன்றாதபோது கூட்டமாக வாழ்ந்த இனங்களில் எவரும் எவருடனும் சேர்ந்து பிள்ளைபெறலாம் என்ற நிலை இருந்தது.
பிறகு ஒருவனுக்கு ஒருத்தி என்கிற முறை, திருமணம், நிலையான இடத்தில் வாழ்க்கை, குடும்ப அமைப்பு ஆகியன தோன்றின.
ஆனாலும், பழைய முறைப்படி திருமணம் முடிக்காமல் வாழ்ந்தவர்களும் இருந்தனர். இப்படிப்பட்டோர் பரத்தை என்றும் இவர் ஊரில் வாழ்ந்த பகுதி 'பரத்தைச் சேரி' (சேரி=சேர்ந்துவாழும் இடம்) அழைக்கப்பட்டது.
இவர்கள் குடும்பமாக வாழ்வோரைப் போலவே மதிக்கப்பட்டனர்.
--------------
பரத்தை ஒருத்தி தன் தோழியிடம் தன்னை நாடிவரும் தலைவனைப் பற்றிக் கேலியாகப் பின்வருமாறு கூறுகிறான்.
எம்இல் பெருமொழி கூறித் தம்இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே.
(குறுந்தொகை:8)
என் வீட்டிற்கு வந்தால், "தான் அப்படி, தான் இப்படி" என்றெல்லாம் ஓங்கி பேசுவான். ஆனால் தன் வீட்டிற்குப் போய் விட்டாலோ, அங்குள்ள தன் மகனின் தாயாகிய அவனது மனைவியிடம் எப்படி நடந்துகொள்வான் தெரியுமா?? நாம் நம் கையையும் காலையும் தூக்கத் தானும் அது போலவே தூக்கும், கண்ணாடியில் தெரியும் நிழற்பாவைபோல அவள் விருப்பப்படியெல்லாம் ஆடுவான்.
பரத்தைக்குத் தலைவன் வீட்டுக்குச் சென்றுவரும் உரிமைகூட இருந்ததோ என்னவோ?
----------------------
தலைவன் பரத்தையை நாடிச் சென்றுவிட்டு வீடு திரும்புகிறான். அவனை வீட்டுவாசலிலேயே நிறுத்தி தலைவி கேள்வி கேட்கிறாள். தலைவன் உடனே தலைவியின் காலில் விழுந்து தான் பரத்தை வீட்டுக்குச் சென்றது தவறுதான் என்றும் அதற்காக பொறுத்தருளுமாறும் மன்றாடுகிறான். உள்ளம் உருகிப்போன தலைவி அவனை தூக்கி "நீ இப்படிக் காலில் விழுவதை நீ காதல் கொண்ட என் தங்கைகளான பரத்தைகள் கண்டால் சிரிப்பார்களே?!" என்று கேலியாகக் கூறுகிறாள்.
அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கி
காதல் எங்கையர் காணின் நன்று என...
தொல்காப்பியம் (கற்பியல்:6)
பரத்தைகளை தங்கைகள் என்று அக்காலப்பெண்கள் குறிப்பிடும் அளவுக்கு அப்பெண்களுக்கு மதிப்பு இருந்துள்ளது.
---------------
மேற்கண்ட இருபாடல்களிலிருந்தும் ஆண்கள் வீட்டில் பெண்களுக்கு அடங்கிநடந்தது தெரிகிறது. அதுபோல, அக்காலத்தில் வேட்டையாடுதலிலும் போர்புரிவதலிலும் ஆண்கள் ஈடுபட்டதால் ஆண்களின் உயிரிழப்பு பெண்களின் உயிரிழப்பைவிட அதிகமாக இருந்திருக்கலாம். அதனால் பெண்கள் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகமாக இருந்திருக்கும். அப்போது தலைவன்(கிழவன் அதாவது ஆண்) தலைவி(கிழத்தி)யை மணமுடித்தோடு காமக் கிழத்தி (வைப்பாட்டி)கூட வைத்துக்கொண்டனர்.
அப்போதைய சூழலுக்கு அது சரியாக இருந்தது.
இதனால் பெண்கள் அடிமைநிலையில் வாழ்ந்ததாகத் தெரியவில்லை.
திருமணச்சீர் (வரதட்சணை) வாங்கும் பழக்கமானது அப்போது இல்லை. மாறாக பரிசம் (பணம்) கொடுத்து மணப்பெண்ணை அழைத்துவரும் முறை இருந்துள்ளது.
-------------------
பரத்தைப் பெண்கள் மட்டுமன்றி ஆண் பரத்தர்களும் இருந்துள்ளனர்.
பெண்ணியலா ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
திருக்குறள்:1311
'புலவி நுணுக்கம்' என்ற அதிகாரத்தில் வள்ளுவர் பெண்கள் எப்படியெல்லாம் சின்னச் சின்ன காரணங்களைக்கொண்டு தலைவனிடம் ஊடல் செய்வார்கள் என்று விவரிக்கிறார். அதில் மேற்காணும் குறள் வருகிறது.
தலைவனை பெண்கள் பலரும் விரும்புவதைக் கண்டு பொறாமை கொண்டு தலைவி தலைவனிடம்,
பெண் இயல்பு உள்ள அனைவரும் பொதுப்பொருள் போல உன்னை தன் கண்களால் விழுங்குகிறார்கள் (பார்த்து ரசிக்கிறார்கள்) பரத்தனுக்கு ஈடான உன்னை (உன் மார்பை) நான் இனித் தழுவமாட்டேன்" என்று சினந்துகூறுகிறாள்.
சிலப்பதிகாரத்தில் . "வம்பப் பரத்தர் வறுமொழி யாளர்' என்ற சொற்றொடர் வருகிறது.
கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும்போது, கவுந்தியடிகளும் சேர்ந்துகொண்டார். அப்போது வழியில் இரு பரத்தர்கள் அவர்களைச் சந்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, சங்ககாலத்தில் தமிழர் வாழ்வியலில் பெண்ணடிமை நிலவியதாகக் கூறவியலாது.
கற்பு என்பது காலத்திற்கு காலம் மாறுவது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது.
போரும் அரசியலும் கற்பியலும் மிகப் பழமையானவையும் நெருங்கிய தொடர்புடையவையும் ஆகும்.
Politics is war without blood,war is politics with blood.
Politics is the second oldest profession,and the first is prostitution.