Showing posts with label இனக்கலப்பு. Show all posts
Showing posts with label இனக்கலப்பு. Show all posts

Wednesday, 21 June 2017

ஆரிய மரபணு ஆய்வு - ஒருவேளை உண்மையென்றாலும் அது ஹிந்தியருக்கு மட்டுமே பொருந்தும்

Gunaseelan Samuel
ஐரோப்பியர்கள் ஆழமாக நம்பவும், ஓரிரு நூற்றாண்டுகளாகப் பரப்பவும் செய்த ஆரியக் கோட்பாட்டை அண்மைக்கால ஆய்வுகள் புறந்தள்ளி மறுத்துள்ளன.

அதே ‘ஆரிய’ இனவியல் நிலைப்பாட்டில் இசுபென்சர் வெல்சு (Spencer Wells) என்பார் தொடங்கிய இருபுரி (DNA) வழிவந்த ஆய்வுகள் மெய்ப்பிக்க முயன்றன.

‘ஆப்பிரிக்காவிலிருந்து’ (Out of Africa) எனும் கோட்பாட்டைத் தழுவியே அந்த மரபணு ஆய்வுகள் அமைந்தன.
அவர் போன்றோரின் ஆய்வும்கூட ‘ஆரிய மேன்மைக்’ (Eugenics) கோட்பாட்டையே தழுவியவை.
அந்த ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாட்டைத் தழுவிக் குமரிக்கண்டக் கோட்பாட்டைத் தமிழர்கள் சிலரே மறுக்கவும் நகையாடவும் தொடங்கினர்.
தமிழரின் தொன்மையை எதிர்க்கும் பிராமண, திராவிட ஆய்வாளர்களுக்கும்கூட ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாடு ஒரு நல்ல பற்றுக்கோடாகப் பட்டது.

ஆரிய இனவியல் கோட்பாட்டை மெல்லப் புகுத்தும் ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ எனும் கோட்பாடு ஒரு குறைபிறவி என்பதையும்,
பெரிய இட்டுக்கட்டல் என்பதையும் காட்ட என்னுடைய “தமிழரின் தொன்மை” எனும் நூலில் மிக விரிவாக வழக்குரைத்துள்ளேன்.

‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாட்டை மறுப்பதற்கென்றே அந் நூலை எழுதினேன். முடிந்தால் பார்க்கவும்.

இந்து நாளேட்டில் வந்துள்ள செய்தியின்படி சமற்கிருதம் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவுக்குள் வந்த ஆரியரின் மொழியாயிருந்தது என்பது பெரிய பொய்.
கி. பி. 2ஆம் நூற்றாண்டுக்குமுன் சமற்கிருதம் எனும் மொழியே இல்லையென்பதை அண்மைக்கால ஆய்வுகள் தெளிவுறக் காட்டுகின்றன.
மேலும், சமற்கிருதம் என்றுமே மக்களால் பேசப்பட்ட மொழியேயன்று.
எசுப்பராந்தோவைப் (Esperanto) போன்று அஃது ஒரு செயற்கை மொழி.
அந்த மொழியைப் பேசியவர்கள்தாம் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் ‘ஆரியர்களாய்’ நுழைந்தனர் எனும் கூற்று அதனால் பொய்த்துப் போகிறது.

A Genetic Chronology for the Indian Subcontinent எனும் கட்டுரை ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதைப்போல் அதே ஆரிய மேன்மைக் கோட்பாட்டைத்தான் ஒப்புவிக்கிறது.
இதை அறியாது,
அக் கட்டுரையைத் தமிழர்களே புகழ்வது பெரிய நெருடலாகவும் வருத்தமாகவும் உள்ளது.
- குணா
------------------------
மேற்கண்டது அறிஞர் குணா அவர்களின் கருத்து.
தி ஹிந்து ஒரு நம்பத்தகுந்த ஊடகம் கிடையாது.
அதிலே இந்தியர்கள் என்று மொட்டையாக கூறி
அவர்களில் குறிப்பிட்ட ஆண்களிடம் மேற்கத்திய மரபணு தாக்கம் இருப்பதாகக் கூறுகிறது ஒரு கட்டுரை.

உடனே ஏதோ ஆரியர் நுழைந்தது உண்மை என்று உறுதியாகிவிட்டதாக கூத்தாடத் தொடங்கியுள்ளனர் மூளையை பயன்படுத்தாத கூட்டத்தினர்.

அக்கட்டுரையில் ஒரு இடத்தில் தென்னிந்தியர் கலப்பற்றோர் என்றும் வருகிறது.
பிராமணர் என்று எங்கும் வரவுமில்லை.

  அதிலேயே இது ஆரியநுழைவை ஆணித்தரமாக நிறுவப்போதாது என்றும் வருகிறது.

அதாவது பலரின் கருத்துகளை பதிவு செய்து குழப்புகிறார்கள்.

மேற்கண்ட கட்டுரை வடயிந்தியருக்கு பொருந்தலாம்.
தென்னிந்தியருக்கு அதிலும் குறிப்பாக தமிழருக்கு தொடர்பேயில்லாத கட்டுரை அது.

தமிழர்களை அதிலும் குறிப்பாக பார்ப்பனரையும் பறையரையும் தனியாக DNA ஆய்வு செய்யும்வரை இந்த ஆரியக் குழப்பம் தொடரும்.

அதுவரை இக்குழப்பம் திராவிடமும் இந்தியமும் வாழ வழிசெய்யும்.

Tuesday, 10 May 2016

திராவிடலு பகுதி-2

திராவிடலு
பகுதி-2
************

தமிழர் அப்படி என்ன தவறு செய்தனர் என்று பார்ப்பதற்கு முன் இதையெல்லாம் ஏன் நான் பதிவிடுகிறேன் என்று கூறிவிடுகிறன்.

இன்றைய திராவிடக் கட்சிகளில் உள்ள சிலர் திராவிடம் என்பது சரியானக் கோட்பாடு என்றும் இன்று முன்னனியில் உள்ள திராவிடக்கட்சிகள் பெயருக்கு திராவிடத்தை வைத்திருப்பதாகவும் அவைகள் உண்மையான திராவிடக் கொள்கைகளை பின்பற்றவில்லை என்றும் திராவிட வழிநடக்கும் கட்சிகளே தமிழருக்கு நன்மை பயக்கும் என்றும் கூறுகின்றனர்.

உண்மையில் திராவிடம் எனும் கோட்பாடு தமிழரைச் சுரண்டி அடக்கியாளவே பிறந்தது என்பதையும் அதன் விளைவுகள் இன்னும் மோசமாகும் முன் தடுக்கவேண்டிய அவசியத்தை தமிழருக்கு உணர்த்தி திராவிடத்தின் தோலுரிக்கவே இதை எழுதுகிறேன்.
இப்போது விடயத்திற்கு வருவோம்.

அன்றையத் தமிழர் செய்த தவறு என்னவென்றால் ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட ஆங்கிலம் கற்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.

ஆனால் மாநில மொழிகளில் எதைவேண்டுமானாலும் கற்கலாம் என்கிற வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில் தமிழர்களில் கனிசமானோர் குறிப்பாக பிராமணர்கள் சமசுக்கிருதத்தையும் இசுலாமியர் அரபி அல்லது உருது போன்ற மொழிகளையும் கற்கலாயினர்.

இன்றும் இவ்விரு வகைத் தமிழரிடமும் மேற்கண்ட மொழிகள் வேறூன்றி உள்ளன.

ஆனால் இதனால் சில நன்மையும் ஏற்பட்டது வெளிமாநிலங்களில் குடியேறியத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியைக் கற்க வழியேற்பட்டது.

ஆம், வெளிமாநிலத்தமிழர் தமிழைக் கற்க, மாநிலத்தமிழர் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்து ஆங்கிலம் மட்டும், அல்லது அதோடு சேர்ந்து வேற்று மொழிகளைக்கற்கலாயினர்.

அத்தோடு தமிழகத்தின் எல்லைப்பகுதிகளில் அண்டைமாநிலத்தவர் வந்து குடியேறி குடியேறி தமது எண்ணிக்கை கிட்டத்தட்ட தமிழருக்கு இணையாக வர வழிசெய்திருந்தனர்.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.
இவ்வந்தேறு குடிகளும் தம் தாய்மொழியையே கற்க தமிழரும் அவர்கள் மொழியைக்கற்கலாயினர்.

இதனால் நாயகர், செட்டியார் போன்ற தமது சாதிப்பெயரையும் மாற்றி தெலுங்கரின் நாய்க்கர்,ஸெட்டி போன்ற பெயர்களையும் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினர்.
தமிழகத்தின் 35% பூர்வீக மண் இலட்சக்கணக்கானத் தமிழரோடு அண்டை மாநிலங்களால் ஆக்கிரமிக்கப்பட அடிகோலினர்.

ஆனால் தமிழகத்தின் உட்பகுதியில் சில நூற்றாண்டுகளாக வாழ்ந்துவரும் வந்தேறுகுடிகள் தமிழைக் கற்கலாயினர் என்பதையும் இங்கு கூறத்தான் வேண்டும்.

மற்ற எந்தவொரு மக்களைவிடவும் தங்கள் தாய்மொழியைப் புறக்கணித்தப் பெரும்பிழையைச் செய்தனர் தமிழ்மக்கள்.

இன்று ஈழப்பிரச்சனையின் ஆரம்பம் என்பது அக்காலத்தில் ஆங்கிலக் கல்வியை கற்று உயர்ந்த பதவிகள் பெற்று அதிகாரவர்க்கமாக மாறிய வடக்குப்பகுதித் தமிழர் மீது சிங்களவருக்கு ஏற்பட்ட வெறுப்பே ஆகும்.

தமிழர் ஆதிகாலத்திலிருந்தே இப்பிழையைச் செய்தே வந்துள்ளனர்.

தமிழரின் தனித்தன்மை(?)  என்பது 'இனப்பற்று இல்லாமை' ஆகும்.

அதனாலேயே ஆங்கிலேயர் மற்ற எவரையும் விடத் தமிழரையே ஆயிரக்கணக்கில் அடிமைகளாக கூலிகளாக தாங்கள் ஆளும் தேசமெல்லாம் கொண்டு செல்வது சுலபமானது.

அவர்கள் அனைவரும் தமது தாய்மண்ணின் ஆதரவு கிடைக்காமல் இன்றும் அதேநிலையில் உள்ளனர் என்பதே கசப்பான உண்மையாகும்.

காரணம் தமிழர் அனைவரும் வேற்றினத்தாரின் இரும்புப்பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

தமிழர் பெரும்பான்மையாக வாழும் தமிழகத்தலேயே மற்ற இனத்தவர் எப்படி நம்மை ஆளமுடிகிறது?

இதற்குக் காரணம் யார்?

இதில் திராவிடத்தின் பங்கு என்ன?
தொடரும். . . .

Saturday, 7 May 2016

யாரெல்லாம் தமிழர்?

யாரெல்லாம் தமிழர்?

இன்று நிறைய அறிவாளிகள் கேட்கும் கேள்வி
"யார் தமிழர்" என்பது?

பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் குடியேறிய வேற்றின மக்கள் இன்று வீட்டுக்குள்ளும் தமிழ் பேச ஆரம்பித்துவிட்டனரே
அவர்கள் தமிழரா?

பல நூற்றாண்டுகளுக்கு முன் வேற்றினத்தவர் மத்தியில் உலகம் முழுவதும் குடியேறிய தமிழரில் சிலர் இன்று தமிழும் வேறுமொழியும் கலந்த மொழியில் பேசுகின்றனரே
அவர்கள் தமிழரா?

உலகின் மொழியாராய்ச்சியாளரில் கிட்டத்தட்ட அனைவரும் தமிழைக் கற்றுள்ளனர்,
அவர்களில் சிலர் தமிழரைவிட சிறப்பாக தமிழுக்குத் தொண்டு செய்கின்றனரே
அவர்கள் தமிழரா?

வெளிநாடுகளில் குடியேறி வேற்றினப் பெண்ணை மணந்து அங்கேயே தங்கிவிட்டவரின் பிள்ளைகள் தமிழரா?

எத்தனையோ வேற்றின அரசர்கள் தமிழரை ஆண்டனர்,
அப்போது வலுக்கட்டாய இனக்கலப்பு ஏற்பட்டிருக்கலாம்தானே?

தமிழர் வேற்றினத்தவரைத் திருமணம் செய்வதை தனித்தமிழியம்(தமிழ்த் தேசியம்) மறுக்குமானால் இது இனவெறி என்று ஆகாதா?

முதலில் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்,
தமிழ் பேசுபவரெல்லாம் தமிழரல்லர்.

தமிழர் ,
அவர் பார்ப்பனரோ,
இசுலாமியரோ,
கிறித்தவரோ,
ஆதித்தமிழரோ,
மலைவாசியோ,
வெளிநாட்டில் வாழ்பவரோ,
தமிழ் தெரியாதவரோ,
வேற்றினத்தில் மணமுடித்தவரோ,
தொழிலாளியோ ,
முதலாளியோ,
வேறுநாட்டில் தாம் தமிழ்வழிப் பரம்பரை என்று தெரியாதவரோ,
'தமிழன் தமிழனே'.

இனம் என்பது பிறப்புவழி வருவது.
அதை நினைத்தாலும் மாற்றவியலாது.

முதலில் யார் தமிழர் என்று வரையறுப்போம்.
இப்போது எடுத்துக்காட்டாக,
நான் ஒரு மராட்டிப் பெண்ணை திருமணம் செய்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

எங்கள் குழந்தைக்கு தமிழ்ப்பண்பாட்டைக் கொண்டுசேர்க்க எந்த அளவு உரிமை எனக்குள்ளதோ
அதே அளவு மராத்திய பண்பாட்டைக் கொண்டு சேர்க்க என் மனைவிக்கு உரிமை உள்ளது.
எனவே, எனது குழந்தை இரு பண்பாடும் கொண்டதாக  வளரும்.

எங்கள் வாரிசு முழுத் தமிழராகவோ அல்லது முழு மராத்தியாகவோ ஏற்கப்படமாட்டார்.

இப்போது எனது வாரிசு ஒரு தமிழருடன் திருமணம் புரிந்தால் எங்கள் பேரப்பிள்ளை தமிழராக ஏற்கப்படும்.
இதே எங்கள் பிள்ளை மராத்தியரை திருமணம் செய்ய எங்கள் பேரப்பிள்ளை மராத்தியாக ஏற்கப்படும்.

பாட்டி தாத்தா இருவரில் ஒருவர் வேற்றினத்தவர் என்பதால் தலைமுறையே வேற்றினமென்று ஆகாது.
குருதிவழிக் கலப்பு என்று எதுவும் கிடையாது.

தனித்தமிழ்க்கொள்கை அதாவது தமிழ்த்தேசியம் வேற்றினத்தவருடன் திருமணம் செய்துகொள்வதை எதிர்க்கவும் இல்லை.

(25 ஜூன் 2013 அன்று இட்ட முகநூல் பதிவு)

Friday, 29 April 2016

கண்டி நாயக்கரும் கண்டி சிங்களவரும்

கண்டி நாயக்கரும்
கண்டி சிங்களவரும்

ஆண்டு 1814.

கொலைஞர்கள் உறுவிய வாளுடன் நின்றிருந்தனர்.

குமாரிஹாமி என்ற சிங்களப் பெண் மார்பில் பால் குடிக்கும் குழந்தையுடன் இழுத்துவரப்பட்டாள்.
கூடவே அவள் பெற்ற மூன்று சிறுவர்களும்.

கண்டியின் ராணிமாளிகை முன்னால் நாத தேவாலயம் மற்றறும் விஷ்ணு தேவாலயம் இரண்டிற்கும் மத்தியில் அவர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர்.

மக்கள் அங்கே குழுமிவிட்டனர்.

கண்டியின் கடைசி (தெலுங்கு நாயக்க) மன்னனான கண்ணுச்சாமி நாயுடு (விக்கிரம ராஜ சிம்மன்) உத்தரவு நிறைவேற்றப்பட்டது.

முதலில் மூத்தமகன் பதினோரு வயது பாலகன் லொக்குபண்டாவை இழுத்து வந்து தலையை வெட்டினர்.

பிறகு இரண்டாவது மகன் ஒன்பது வயது சிறுவன் தானே முன்வந்து நின்றான்.
அவன் தலையையும் வெட்டப்பட்டது.

மூன்றாவது மகன் டிங்கிரி மெனிக்கே.
அக்குழந்தை தாயை இறுகப் பற்றிக்கொண்டு கதறி அழுதுகொண்டிருந்தது.
அதையும் இழுத்துவந்து தலையை வெட்டினார்கள்.

மார்பில் இறுக்கமாக அணைத்துக்கொண்டு இந்த குழந்தையையாவது விடும்படி கேட்டாள் அந்த தாய்.
வடுக மன்னன் மனம் இரங்கவில்லை.
பறித்து வந்து அதன் தலையையும் வெட்டினர்.

வெறியடங்காத மன்னன் தலைகளை எடுத்து உரலில் போட்டு இடிக்கச் சொன்னான்.
தெருவில் உருண்டுசென்று கிடந்த தலைகள் எடுத்துவரப்பட்டு உரலில் போட்டு இடித்து சிதைக்கப்பட்டன.

கூடியிருந்த மக்கள் மூச்சுவிட மறந்திருந்தனர்.
அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து சிலைகளாகினர்.
அடுத்து என்ன செய்வார்கள் என்று யோசிக்கும் நிலையில் யாரும் இல்லை.

"ராஜதுரோகத்திற்கு இதுதான் தண்டனை" என்று கூறினான் கண்ணுச்சாமி.

குமாரிஹாமியும் மேலும் இருபெண்களும் கைகால்கள் கட்டப்பட்டு வண்டியில் தூக்கிப்போடப்பட்டனர்.

கணமான கல்வைத்து கட்டப்பட்டு நுவரவாவியில் மூன்று பெண்களும் வீசப்பட்டதை மக்கள் கண்டார்கள்.

இந்த கண்ணுச்சாமி என்ற தெலுங்கனுக்குதான் தமிழகத்தில் தெலுங்கினத் தலைவன் கருணாநிதி மணிமண்டபம் கட்டியுள்ளான்.
--------------------
ஏன் இந்த கொடூரமான கொலைகள் நடந்தன என்றறிய வரலாற்றில் இன்னும் சற்று பின்னோக்கி சென்று பார்ப்போம்.

தமிழகத்தில் தெலுங்கு ஆட்சி வந்தபிறகு தெலுங்கு நாயக்க மன்னர்கள், கண்டி சிங்கள மன்னருக்கு தமது பெண்களை மணமுடித்துக் கொடுத்து வந்தனர்.

பெண்களுடன் சில உறவினர்களும் கண்டி சென்று தங்கினர்.
நாளடைவில் அவர்கள் மந்திரி சபையிலும் படையிலும் பதவிகள் பெற்றனர்.
இதன்மூலம் கண்டி அரசில் தெலுங்கர் ஆதிக்கம் தலைதூக்கியது.
சிங்களவருக்கும் தெலுங்கருக்கும் புகைச்சல் ஏற்பட்டது.

கண்டி தெலுங்கர்கள் புத்தமதத்தைத் தழுவிக்கொண்டு சிங்கள மொழியை பேசினாலும் சிங்களவர் அவர்களைத் தங்கள் இனமாக எண்ணவில்லை.

சிங்களம் பேசும் தெலுங்கர், "சிங்கள இனவெறி" என்ற முகமூடியை அணிந்துகொண்டு தமிழர்கள் மீது இனப்படுகொலையை ஏவும்வரை சிங்களவர்கள் அவர்களிடம் ஏமாறவில்லை.

மேலும் கண்டி தெலுங்கர் தமிழகத் தெலுங்கருடன் தொடர்பினைத் தொடர்ந்து பேணிவந்தனர்.
குறிப்பாக மதுரை மற்றும் தஞ்சை நாயக்கர்களுடன் தொடர்ச்சியாக கொடுக்கல் வாங்கல் இருந்தது.

திருமலை நாயக்கரின் உறவினர் நரேனப்பநாயக்கர் சிங்கள மன்னனுக்கு பெண் கொடுக்கும்போதே தன் மகன்களுடன் கண்டிக்கு வந்து அங்கேயே தங்கி இருந்தார்.

1708 ல் ஆண்வாரிசு இல்லாத கண்டி மன்னன், தமிழகத்திலிருந்து வந்திருந்த மைத்துனனை அரசனாக்கினான்.
இவனே சிங்களக் கலப்பில்லாத முழு தெலுங்கன்.
விஜயபாலன் என்ற இயற்பெயரை மறைத்து சிறீ விஜயராஜ சிம்மன் என்ற சிங்களப் பெயரை சூட்டிக்கொண்டு அரியணை ஏறினான்.
(அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய வடுக வீரபாகு என ஏற்கனவே முகநூலில் இது தொடர்பான பதிவு வளையவந்தது நினைவிருக்கலாம்)

சிங்கள அமைச்சர்கள் மன்னனின் வைப்பாட்டிக்குப் பிறந்த உனம்பு பண்டாரவுக்கு முடிசூட்ட வலியுறுத்தினர்.
இது நடக்கவில்லை.

சிங்களவரைச் சரிகட்ட தமிழர் மட்டுமே வணங்கிவந்த சிவனொளிபாத மலையை பௌத்தருக்கும் சொந்தம் என அறிவித்து சிங்களவருக்குத் திறந்துவிட்டான்.

நில நிர்வாக அதிகாரங்கள் நரேந்திரசிம்மன் என்ற தெலுங்கனுக்கு வழங்கப்பட்டது.
சிங்கள பிரதானிகள் இவருக்கு எதிராக ஒன்று திரண்டனர்.

இந்த நேரத்தில் மேற்கு இலங்கையை டச்சுக்காரர்கள் பிடித்திருந்தனர்.

இவனுக்கு அடுத்து அவனது சகோதரன் கீர்த்தி சிறீராஜ சிம்மன் அரியணை ஏறினான்.
இவனும் தமிழகத்தில் பிறந்த தெலுங்கனே.
தமிழக நடுகாட்டுச்சாமியார் என்ற வடுகரின் மகளை 1749 ல் திருமணம் செய்தான்.
நடுகாட்டு சாமி குடும்பமும் கண்டிக்கு வந்து தங்கியது.
கண்டியின் ஒரு பகுதியே தெலுங்கு மயமானது.

இந்த கீர்த்தி ராஜசிம்மனைக் கொல்ல சிங்கள மந்திரிகள் திட்டம் தீட்டினர்.
இது அரசனுக்குத் தெரிந்துவிட்டது.
மொலதந்த ரட்டராலே, கடுவெனராலே, மதினப்பொல திசாவ ஆகிய சிங்கள மந்திரிகள் தலைவெட்டி கொல்லப்பட்டனர்.

இவர்களுடன் சதியில் ஈடுபட்ட புத்த மதகுருவும் சங்கராஜா என்பவரும் தலைவெட்டிக்கொல்லப்பட்டனர்  பிறகு அரியணை ஏறிய இரண்டாம் ராஜசிம்மன் என்பவனால்.
கண்டியில் தெலுங்கு ஆதிக்கம் உச்சநிலையை அடைந்தது.

1764 டச்சு படையெடுப்பு வானென்
என்பவன் தலைமையில் நடந்தது.
மன்னன் ஓடிப்போய் தலைமறைவு ஆனான்.
கண்டியை டச்சுக்காரர்கள் பிடித்தனர்.
ஆனால் மழை பெருமளவில் பெய்து வெள்ளம் ஏற்பட்டது.
டச்சுக்காரர்களுக்கு மக்கள் எதிர்ப்பு இருந்தது.
1766 டச்சுக்காரர்கள் மன்னனுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு பின்வாங்கினர்.

கீர்த்தி ராஜசிம்மன் மீண்டும் அரியணை ஏறினான்.
இவனுக்குப்பின் இவனது சகோதரன் ராஜாதி ராஜசிம்மன் என்ற தமிழகத்தில் பிறந்த தெலுங்கன் அரியணை ஏறினான்.

1795 திருகோணமலை டச்சுக்காரர்கள் பிடித்தனர்.
கண்டியுடன் சமாதானமாக இருக்க தூது அனுப்பினர்.
இது சிங்கள அமைச்சரான பிலிமத்தலாவை மூலம் நடந்தது.
மன்னனுக்கு அடுத்த செல்வாக்கு பெறலானார் பிலிமத்தலாவை என்னும் இந்த சிங்களர்.
கண்டி மன்னன் மரணமடைந்தான்.

இதுவரை காத்திருந்த சிங்களர்கள் காய்நகர்த்தினர்.
அரியணைக்கு வரவேண்டிய மூத்தவரான முத்துசாமி என்ற தெலுங்கரை கொலை செய்ய முயற்சித்தனர்.
பயந்துபோன முத்துசாமி ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்தான்.
தெலுங்கு மந்திரிகள் ஆவேசம் கொண்டனர்.
இதைச் சரிகட்ட
மன்னனின் எட்டு வாரிசுகளில் கடைசியானவனும் வயதில் இளையவனுமான கண்ணுச்சாமியை அரியணையில் பெயருக்கு உட்காரவைத்துவிட்டு மூடிசூடா மன்னராக விளங்கினான் பிலிமத்தலாவை.

தனக்கு மைத்துன முறைகொண்ட எகலப்பொல என்ற சிங்கள இளைஞனை முக்கிய பொறுப்பில் நியமித்தான்.
முன்னாள் அரசியை சிறையிலிட்டான்.
மன்னனின் தெலுங்கு  உறவினர் பலரையும் சிறையிலடைத்தான்.
கம்பளை நாயக்கர் என்ற செல்வாக்கு மிக்க தெலுங்கரையும் சிறையிலடைத்தான்.
அரவாளை என்பவரைக் கொலை செய்தான்.
பல மன்னர் குடும்ப உறவினர்கள் ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்தனர்.

கண்டியில் மீண்டும் சிங்கள ஆதிக்கம் கை ஓங்கியது.

ஆங்கிலேயர் பிரட்ரிக் நோர்த் என்பவன் தலைமையில் கண்டிமீது  படையெடுத்தனர்.

இந்த முறையும் மன்னன் ஓடி ஒளிந்தான்.
கண்டி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது.

தங்களிடம் தஞ்சமடைந்திருந்த முத்துசாமியை மன்னன் ஆக்கினர்.
டச்சுக்காரர்களைப் போல மக்கள் ஆங்கிலேயரையும் வெறுத்தனர்.
இந்த முறை மழை பெய்ததோடு நில்லாமல் காட்டு மலேரியா பரவியது.

இந்தநிலையை பயன்படுத்திக்கொண்டு பிலிமாத்தலாவை சிங்கள மக்களின் ஆதரவுடன் படையைத் திரட்டி ஆங்கிலேயரைத் தோற்கடித்தான்.
கண்டியை மீண்டும் கைப்பற்றினான்.
தெலுங்கன் முத்துசாமியை தலையை வெட்டிக் கொன்றான்.
இது நடந்தது 1803.

விக்கிரம ராஜசிங்கன் (கண்ணுசாமி) மீண்டும் அரியணை ஏற்றப்பட்டான்.
பிலிமத்தலாவை தெலுங்கர் வழியிலேயே சென்று தலைமையைக் கைப்பற்ற நினைத்தான்.
தன் மகளை மன்னனுக்கு மணமுடித்துவைத்தான்.

பிறகு மன்னனைக் கொல்ல சதி செய்தான்.
மூன்றுமுறை முயற்சி செய்தும் மருமகனை கொலை செய்யும் திட்டம் வெற்றிபெறவில்லை.

இதை அறிந்த கண்ணுச்சாமி பிலிமத்தலாவையை தலையை வெட்டிக் கொன்றான்.

கொதித்துப்போயிருந்த சிங்களவரைச் சரிகட்ட பிலிமத்தலாவை அரசு பதவியில் நியமித்த அவனது மைத்துனனான எகலபொல அவனது இடத்தில் நியமிக்கப்பட்டான்.

எகலபொல மன்னனுக்கு அடுத்த இடத்தில் இருந்தான்.
மன்னனை மதிக்காமல் மன்னனைப் போலவே நடந்துகொண்டான்.
அவனது அதிகாரமே எங்கும் கொடிகட்டிப்பறந்தது.
சிங்கள மந்திரி பிரதானிகள் இன்னொரு பிலிமத்தலாவையாக எண்ணி இவனுக்கு ஆதரவு தந்தனர்.

  கண்ணுச்சாமிக்கும் எகலபொலவுக்கும் மோதல் அதிகரித்தது.

எகலபொல ஆங்கிலேயர் உதவியுடன் மன்னனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தான்.

இதையறிந்த மன்னன் எகலபொல குடும்பத்தை சிறையடைத்தான்.
ஆங்கிலேயருடன் படை திரட்டிக்கொண்டு கண்டி நோக்கி முன்னேறினான் எகலபொல.
தமிழக தெலுங்கு மன்னர்களும் வலு இழந்துவிட்ட காலம்.
இருந்தாலும் அவர்கள் 300 போர்வீரர்களையும் சில உதவிகளையும் அனுப்பினர்.

அப்போதுதான் எகலபொல குடும்பத்தைக் கொலை கொடூரமாகக் கொலை செய்தான் கண்ணுசாமி.
இதனால் இம்முறை மக்கள் ஆங்கிலேயரை ஆதரித்தனர்.
கண்ணுச்சாமி வழக்கம்போல ஓடிப்போய் தலைமறைவானான்.

ஒரு குகையில் தன் மூன்று மனைவிகளுடன் மறைந்திருந்தான்.
ஆங்கிலேயருடன் எகலபொல படையில் இருந்த சிங்கள படைவீரர்கள் அவனைக் கண்டுபிடித்து அடித்து துவைத்தனர்.

ஆங்கிலேயர் வந்து அவன் உயிரைக் காப்பாற்றினர்.
"தண்ணீர் வேண்டுமா?" எனக் கேட்டனர்.
"இல்லை மது வேண்டும்" என்றான். மது கொடுத்து பல்லக்கில் மரியாதையுடன் அழைத்துச் சென்று தமிழக சிறையில் அடைத்தனர்.
அவனை அழைத்துச் செல்லப்பட்ட கப்பலில் மன்னனுடன் ஏறத்தாழ முப்பது மனைவிகளும் மாமியாரும் உறவினருமாக பெரிய கூட்டம் ஏற்றப்பட்டது.
இது நடந்தது 1815.

எகலபொல தன்னை ஆங்கிலேயர் அரசனாக்குவர் என்று எதிர்பார்த்தான்.
ஆனால் அது நடக்கவில்லை.
ஆங்கிலேயர் தமது நேரடி ஆட்சியை அங்கே ஏற்படுத்தினர்.

17 ஆண்டுகள் சிறையில் முழு குடும்பத்துடனும் தாராளமான மதுவுடனும் இராஜவாழ்க்கை வாழ்ந்தான் கண்ணுச்சாமி.
சிறையில் அவனுக்கு குழந்தைகளும் பிறந்தன.
அளவுக்கதிமாக மது குடித்ததாலேயே இறந்தும் போனான்.

கண்டி நாயக்கர் கதையில் தெலுங்கருக்கு ஆதரவாகவும் விசுவாசமாகவும் இருந்த சிங்களர் இருக்கின்றனர்.
ஆனால் சிங்களுக்கு ஆதரவான ஒரு தெலுங்கர் கூட இல்லை.
சிங்களரை விடவும் இனப்பற்று உள்ளவராக தெலுங்கர்கள் இருக்கின்றனர்.

கண்ணுசாமியின்  வீர(?)வரலாறு மறக்காமல் இருக்கத்தான் இலங்கையின் கடைசித் தமிழ்(?)மன்னன் என்று தெட்சிணாமூர்த்தி (கருணாநிதி) தமிழகத்தில் மணிமண்டபம் கட்டியுள்ளான்.

இதன் மூலம் இவன் சிங்களருக்குச் செய்த கொடுமைகள் தமிழர் தலையில் வந்து விழுந்தன.

கண்டியில் குடியேறிய தெலுங்கு குடும்ப வாரிசுகளே இன்று இலங்கையில் அரசு செய்யும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும்.

பண்டாரநாயக, சேனநாயக, ராஜபக்ச ஆகிய குடும்பங்கள் சிங்களம் பேசும் தெலுங்கரே.

300 ஆண்டுகள் முன்பு இலங்கைக்கு வந்த இந்த வந்தேறிகள்,
2500 ஆண்டுகள் முன்பு குடிவந்த சிங்களவருக்குள் மறைந்துகொண்டு "இனவெறி" முகமூடியை அணிந்துகொண்டு
இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களை இனவழிப்பு செய்துவருகின்றனர்.