Showing posts with label மரபணு. Show all posts
Showing posts with label மரபணு. Show all posts

Wednesday, 25 June 2025

யார்தான் ஆரியர்

யார்தான் ஆரியர்?
19.03.2017

ரொம்ப யோசிக்கவேண்டாம்
விடை அருகிலேயே உள்ளது.
இன்றும் கைபர்(khyber) போலன் (bolan) கணவாய்களின் அந்தப்பக்கம் வாழும் இனம் எது?

பெர்சிய மொழி பேசும் ஈரானிய இனம்தான்!

ஈரான் மக்கள் தம்மைத்தாமே ஏரியா (Aryia) என்றே இன்றும் அழைத்துக் கொள்கின்றனர்.

ஈரானிய மொழியில் ஏர்யன்(aryia) என்றால் உயர்ந்த அல்லது மாண்புள்ள என்றவாறு பொருள்படும்

இரான் (iran) என்ற சொல்லே ஏர்யன் என்ற சொல்லின் திரிபு என்கிறார்கள் (etymology of iran - Wikipedia). 

  இந்த ஏரியன் என்ற சொல்லைத்தான் ஆர்ய என்ற சொல்லுடன் திரித்து ஆங்கிலேயர் தமது அரசியலுக்காகப் பயன்படுத்தினர்.

(ஆங்கிலேயர் Aryan என்பதை ஏர்யன் என்றே உச்சரிப்பர்.
இது அரையர் என்ற தமிழ்ச்சொல்லுடனும் ஒத்துப்போகிறது.
தமிழகத்தில் அரிய என்று தொடங்கும் ஊர்களும் உண்டு.
அரியநாடு திருப்பதிக்கு அப்பால் அருவா என்றும்
அதற்கும் வடக்கே ஆரிய என்றும் திரிந்ததாக செந்தமிழ் பேரகராதி யில் பாவாணர் கூறுகிறார்)

ஆங்கிலேயர் கூறியபடி ஆரியர் கைபர் போலன் கணவாய் வழியே வந்தனர்.
இன்றும் ஈரானியப் பேரினமே கைபர் போலனுக்கு அந்தப் பக்கம் வாழ்கிறது.

இன்றும் கைபருக்கு அந்தப்பக்கம் ஈரானிய மூலமொழியான பெர்சிய மொழி.
போலனுக்கு அந்தப்பக்கம் பஷ்த்தோ எனும் ஈரானிய கிளைமொழி.
(பார்க்க: படத்தில் சிவப்புக்குறி)

(வேதகால)சமஸ்கிருதம் உட்பட அனைத்து வடஹிந்திய மொழிகளும் indo-aryan பிரிவின் கீழ் உள்ளன.
இந்த இந்தோ-ஆரியன் பிரிவே indo-iranian என்ற பிரிவின் கீழேதான் வருகிறது.
என்றால், ஆரியம் என்றாலே அது ஈரானுக்கு அடங்கியதுதான்.
அவற்றில் சமஸ்கிருதமும் உண்டு.

ஆரிய படையெடுப்பு என்பது 2600 ஆண்டுகள் முன்பு பாரசீக மன்னன் சைருஸ் (cyrus) இந்தியா மீது படையெடுத்து சிந்து நதிவரை கைப்பற்றியதைக் குறிக்கலாம்.
அல்லது அவருக்கு முன் ஈரானிய பழங்குடிகள் சிறிய அளவில் படையெடுத்திருக்கலாம்.

ஈரானியர் மட்டுமன்றி கிரேக்கத்திலிருந்து அலெக்சாண்டரும் தனது அரசாட்சியை ஹிந்தியா வரை பரப்புகிறார்.
இவர்களைப் பின்பற்றி பலரும் அடுத்தடுத்து மேற்கு ஹிந்தியாவை படையெடுத்து ஹிந்தியாவிற்குள் முன்னேறுகிறார்கள்.

ஹிந்தியாவின் முதல் ஆரிய அரசு ஆர்யாவர்த்த (Aryavarta) எனப்படும் அரசு இது கைபர் போலன் கணவாய்களுக்கு சற்று தள்ளி இன்றைய ராஜஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உருவாகிறது (அதாவது சிந்து சமவெளி).

அதாவது ஈரானிய இனம் தன் தாய்நிலத்தைத் தாண்டி சிந்து சமவெளிக்கு வருகிறது.
நாளடைவில் அது தாய்நிலத்திலிருந்து துண்டிக்கப்பட்டு அருகாமை பூர்வகுடிகளுடன் (தமிழர்களுடன்) கலந்து தனி இனமாக உருவாகிறது.

பிறகு தனக்கென தனி அரசையும் நிறுவிக்கொள்கிறது.
தாய்நிலத்தின் மொழி மற்றும் பழக்கவழக்கங்களைத் தழுவி தனக்கென தனி கலப்பு மொழியையும் தனி சமயத்தையும் அது ஏற்படுத்திக்கொள்கிறது.
(பாவாணர் கூற்றுப்படி சமஸ்கிருதத்தில் 5ல்2 பங்கு தமிழ்)

தம் மொழியில் உயர்ந்த சொல்லான ஏரியரைத் தழுவி ஆரியர் என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்கிறது.
ஆரியவர்த்த என்று தனது அரசாட்சிக்கு பெயரிடுகிறது.
பின்னர் நாளடைவில் அரசாட்சி வீழ்ந்து பூர்வகுடிகளுடன் கலந்து கரைந்துவிடுகிறது.

இவர்கள் கலவையாக உருவாக்கியதே இன்றைய அடிப்படை ஹிந்து மதம்.

ஈரானிய மொழிச்சொல்லான ஹிந்த், ஹிந்தூ, ஹிந்துஸ் போன்ற சொற்களே ஹிந்து என்பதன் வேர்ச்சொல்.
இவர்கள் தமிழ்க் கடவுளரை எடுத்துக்கொண்டு புதிய சமயத்தை உருவாக்கி வேதங்களை எழுதியுள்ளனர்.
இது காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்தது.
இதுவே இன்றைய ஹிந்து மதத்தின் அடிப்படை.

இதேபோல தமிழிலிருந்து வேர்ச்சொற்களை எடுத்து இவர்கள் உருவாக்கிய மொழியே சமஸ்கிருதம்.
இது காலப்போக்கில் பல மாற்றங்களைச் சந்தித்தது.
இதுவே வடயிந்திய மொழிகளுக்கு அடிப்படை.

மேலே சொன்னது ஈரானியர் ஏற்படுத்திய தாக்கம் மட்டுமே.

இதே போல கிரேக்கர், சகர்கள் (ஈரானியர்), பார்தியர்(ஈரானியர்), குஷாணர் (சீனர்), ஹூனர் (துருக்கிய மங்கோலியர்), அராபியர், முகலாயர் (துருக்கிய மங்கோலியர்) என வடக்கிலிருந்து பலரும் வரிசையாக மேற்கிலிருந்து படையெடுத்து கைப்பற்றி ஆட்சி செய்து தமது மொழி, மத, கலாச்சார அடையாளங்களைக் கலந்துவிட்டு காணாமல் போயினர்.

(வடக்கை ஆண்ட ஒரு சில மன்னர்கள் தெற்கு வரை முன்னேறினர்.
ஆனால் தமிழகத்தை என்றுமே கைப்பற்றியதில்லை)

 வடக்கே இமயமலை, தெற்கே விந்தியமலை வரை இந்த இனகலப்பு அதிகம் நடந்து நடந்து வடயிந்திய இனமே கலப்பினமாக மாறிவிடுகிறது.
 இதனால்தான் மரபணு படி தற்போதைய இந்தியாவின் வடயிந்தியருக்கும் தென்னிந்தியருக்கும் சம்பந்தமில்லை என்றே ஆய்வுகள் சொல்கின்றன.

பிறகு கடந்த 500 ஆண்டுகளாக ஐரோப்பியரின் கடல்வழி படையெடுப்பு நடந்தாலும் இனக்கலப்பு தவிர மற்ற தாக்கங்கள் இருந்தன.

ஆக வரலாற்றில் ஆரியர் ஏற்படுத்திய தாக்கம் மிக மிக சிறிய அளவிலானது.
ஆரியர் சிந்து சமவெளியை படையெடுத்து கைப்பற்றியதாகத் தோன்றவில்லை.
இயல்பான குடியேற்றம்தான் நடந்திருக்கவேண்டும்.
(சிங்களவர் இலங்கையில் குடியேறியதுபோல)

ஆரியர் என்பார் பழங்கால ஈரானியரே!

பிராமணரெல்லாம் ஆரியர் வம்சாவழிகள் என்பதே எந்த அடிப்படையும் இல்லாத கருத்து.

அதிலும் தமிழ்ப் பார்ப்பனர்?????

வாய்ப்பேயில்லை.

(பார்ப்பனர்கள் சோழர் காலம் வரை தமிழில் வழிபாடு செய்தனர்.
தாய்லாந்து வரை தமிழிலேயே சைவத்தைப் பரப்பினர்.
சமஸ்கிருதம் அவர்கள் மீது பிறகுதான் திணிக்கப்பட்து.
ஆனாலும் அவர்கள் தமிழை விட்டுக்கொடுத்ததே இல்லை).

ஐரோப்பியர் தமது ஆட்சியை நியாயப்படுத்த "நாங்கள் ஆரியர், ஏற்கனவே நாங்கள் ஆண்டோம், பிராமணர் எங்கள் இனம்" என்று மேக்ஸ்முல்லர் மூலம் கதைகட்டிவிட்டனர்.

 "ஆரியரை எதிர்த்தோர் திராவிடர், அவர்கள் வழிவந்தோரே தென்னிந்தியர்" என்று கால்டுவெல் மூலம் கதைகட்டி பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தினர்.

ஆரிய கருத்தியல் ஹிட்லர் போன்ற மனிதனை உருவாக்கும் என்றோ
திராவிடக் கருத்தியல் கருணாநிதி போன்ற மனிதனை உருவாக்கும் என்றோ அவர்கள் நினைக்கவில்லை.
இதே போலவே சமஸ்கிருத ஹிந்து சமயத்தை உருவாக்கிய ஆரியரும் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று யூகித்திருக்க வாய்ப்பில்லை.

இன்று நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கு என்றோ ஒழிந்துபோன ஆரியரை இழுப்பதும்,
ஆரியருக்கு தொடர்பே இல்லாத பார்ப்பன சமூகத்தின் மீது சாதிய வன்மத்தைக் கொட்டுவதும் எந்த வகையில் தீர்வாகும்?

தென்னிந்தியர் மீதான வெறுப்பின் மீது கட்டமைந்த வடயிந்திய ஆதிக்கமே நடைமுறை ஆரியம் என்று கொள்க.

   தமிழர் மீதான வெறுப்பின் மீது கட்டமைந்த தென்னிந்திய கூட்டு ஆதிக்கமே நடைமுறை திராவிடம் எனக்கொள்க

மேலே கூறிய கதை(?) நம்பும்படியாக இல்லையா!

கீழே உள்ள கதையைப் படிக்கவும்.

ஆரியர்கள் கைபர் போலன் வழியே ஆடுமாடு ஓட்டிக்கொண்டு வந்தார்கள்.
பெரிய அரசாங்கம் நடத்திய தமிழர்களை ஏமாற்றி பதவிகளில் அமர்ந்தனர்.
அவர்கள் சிவப்பாக இருந்தார்கள்.
அதனால் தமிழர்கள் அவர்கள் அழகில் மயங்கிவிட்டனர்.
அவர்கள் சமஸ்கிருதம் பேசினார்கள்.
அதிலே மந்திரம் எழுதி இதுதான் கடவுளுக்குப் புரியும் என்றனர். உடனே எல்லாரும் ஒத்துக்கொண்டனர்.
மனுதர்மம் என்ற நூல் எழுதினார்கள்.
அதில் சாதியை படைத்தனர்.
அதைப் படித்துவிட்டு எல்லாரும் உடனே சாதி படிநிலையை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு அடிமையாகிவிட்டனர்.
பிறகு அவர்கள் பூணூலைப் போட்டுக்கொண்டு பூசாரி ஆகி அனைவரையும் சாதியாகப் பிரித்து தொடர்ந்து இன்றுவரை ஆள்கிறார்கள்.
 இன்றும் சிவப்பாக இருக்கிறார்கள்.

இரண்டில் எதை நம்புவீர்கள்?!

Friday, 2 May 2025

மரபணு சோதனையின் அவசியம்

மரபணு சோதனையின் அவசியம்

 தமிழ் தேசியவாதிகளின் அன்பிற்குரிய நார்வே இங்கர்சால் அவர்கள் ஒரு தெலுங்கர் என்று யாரோ கிளப்பி விட அது தொடர்பாக ஒரு சிறிய உரையாடல் முகநூலில் நடந்தது.
நான் எப்போதும் போல அவருடன் இணைய வழி தொலைபேசும்போது இது பற்றி பேச்சு வந்தது.
 'தற்போது இனத்திற்கான ஒரே சான்று சாதி சான்றிதழ் மட்டுமே' என்று கூறி அதை காட்ட சொல்லி கேட்டேன்.
 முதலில் தயங்கினாலும் பிறகு தனது குடிச்சான்றை அவர் காட்டினார்.
  தமிழர்தான்!
 முழுமையான நம்பிக்கைக்கு உரியவர் ஆகிவிட்டார்!
 ஏன் இவ்வளவு தயக்கம் என்று கேட்டேன்.
 அதற்கு சாதி சான்றும் தற்போதைக்கு நம்ப தகுந்தது இல்லை என்றும் தன்னிடம் டி என் ஏ மேப்பிங் தொடர்பாக ஒரு யோசனை இருப்பதாகவும் அதன் மூலம் ஒரு ஆணினுடைய சந்ததியை அவர்களுடைய டி என் ஏ மரபணு மாதிரிகளை வைத்து வாழையடி வாழையாக கண்டுபிடித்து விடலாம் என்றும் அவ்வாறு செய்தால் நூறு சதவீதம் நம்ப முடியும் என்றும் கூறினார்.
 மரபணு ஆராய்ச்சி தற்போது உச்சத்தைத் தொட்டுவிட்டது. இத்தாலியில் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடையில் கிடைத்த சிறு சதைத் துணுக்கை வைத்து அருகிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் டிஎன்ஏ சோதனை செய்து அதில் ஓரளவு ஒத்துப்போன ஒரு நபரைப் பிடித்து அவரது தூரத்து பங்காளி வரை தேடி குற்றவாளியைப் பிடித்த சாதனை நடந்துள்ளது.
 அதாவது கொடிவழி, கொத்து, கூட்டம் என்று பலவாறு அழைக்கப்படும் தந்தையிடமிருந்து மகனுக்கு கடத்தப்படும் அந்த மரபு மிக முக்கியமானது!
கோத்திரம் என்றும் கூறுவர்! 
 இதேவழியில் தான் குடிப்பட்டமும் கடத்தப்படுகிறது!
 இதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்!
 ஒவ்வொரு குடியும் தனது dna sample ஐ ஆவணப்படுத்தி heritage map ஐ உருவாக்க வேண்டும்.
 இந்த சான்று இருந்தால் காகிதச் சான்றுகள் அவசியமில்லை! 
  ஆனால் அதுவரை சாதிச் சான்றுதான் ஒரே வழி!
 அண்ணன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது குடியை வெளிப்படுத்த தற்போது இயலாது!
 சக தமிழ்தேசியவாதிகள் மன்னிக்கவும்! 
 இங்கர்சால் ஒரு தகைசால் தமிழர்தான்!

Wednesday, 21 June 2017

ஆரிய மரபணு ஆய்வு - ஒருவேளை உண்மையென்றாலும் அது ஹிந்தியருக்கு மட்டுமே பொருந்தும்

Gunaseelan Samuel
ஐரோப்பியர்கள் ஆழமாக நம்பவும், ஓரிரு நூற்றாண்டுகளாகப் பரப்பவும் செய்த ஆரியக் கோட்பாட்டை அண்மைக்கால ஆய்வுகள் புறந்தள்ளி மறுத்துள்ளன.

அதே ‘ஆரிய’ இனவியல் நிலைப்பாட்டில் இசுபென்சர் வெல்சு (Spencer Wells) என்பார் தொடங்கிய இருபுரி (DNA) வழிவந்த ஆய்வுகள் மெய்ப்பிக்க முயன்றன.

‘ஆப்பிரிக்காவிலிருந்து’ (Out of Africa) எனும் கோட்பாட்டைத் தழுவியே அந்த மரபணு ஆய்வுகள் அமைந்தன.
அவர் போன்றோரின் ஆய்வும்கூட ‘ஆரிய மேன்மைக்’ (Eugenics) கோட்பாட்டையே தழுவியவை.
அந்த ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாட்டைத் தழுவிக் குமரிக்கண்டக் கோட்பாட்டைத் தமிழர்கள் சிலரே மறுக்கவும் நகையாடவும் தொடங்கினர்.
தமிழரின் தொன்மையை எதிர்க்கும் பிராமண, திராவிட ஆய்வாளர்களுக்கும்கூட ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாடு ஒரு நல்ல பற்றுக்கோடாகப் பட்டது.

ஆரிய இனவியல் கோட்பாட்டை மெல்லப் புகுத்தும் ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ எனும் கோட்பாடு ஒரு குறைபிறவி என்பதையும்,
பெரிய இட்டுக்கட்டல் என்பதையும் காட்ட என்னுடைய “தமிழரின் தொன்மை” எனும் நூலில் மிக விரிவாக வழக்குரைத்துள்ளேன்.

‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாட்டை மறுப்பதற்கென்றே அந் நூலை எழுதினேன். முடிந்தால் பார்க்கவும்.

இந்து நாளேட்டில் வந்துள்ள செய்தியின்படி சமற்கிருதம் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவுக்குள் வந்த ஆரியரின் மொழியாயிருந்தது என்பது பெரிய பொய்.
கி. பி. 2ஆம் நூற்றாண்டுக்குமுன் சமற்கிருதம் எனும் மொழியே இல்லையென்பதை அண்மைக்கால ஆய்வுகள் தெளிவுறக் காட்டுகின்றன.
மேலும், சமற்கிருதம் என்றுமே மக்களால் பேசப்பட்ட மொழியேயன்று.
எசுப்பராந்தோவைப் (Esperanto) போன்று அஃது ஒரு செயற்கை மொழி.
அந்த மொழியைப் பேசியவர்கள்தாம் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் ‘ஆரியர்களாய்’ நுழைந்தனர் எனும் கூற்று அதனால் பொய்த்துப் போகிறது.

A Genetic Chronology for the Indian Subcontinent எனும் கட்டுரை ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதைப்போல் அதே ஆரிய மேன்மைக் கோட்பாட்டைத்தான் ஒப்புவிக்கிறது.
இதை அறியாது,
அக் கட்டுரையைத் தமிழர்களே புகழ்வது பெரிய நெருடலாகவும் வருத்தமாகவும் உள்ளது.
- குணா
------------------------
மேற்கண்டது அறிஞர் குணா அவர்களின் கருத்து.
தி ஹிந்து ஒரு நம்பத்தகுந்த ஊடகம் கிடையாது.
அதிலே இந்தியர்கள் என்று மொட்டையாக கூறி
அவர்களில் குறிப்பிட்ட ஆண்களிடம் மேற்கத்திய மரபணு தாக்கம் இருப்பதாகக் கூறுகிறது ஒரு கட்டுரை.

உடனே ஏதோ ஆரியர் நுழைந்தது உண்மை என்று உறுதியாகிவிட்டதாக கூத்தாடத் தொடங்கியுள்ளனர் மூளையை பயன்படுத்தாத கூட்டத்தினர்.

அக்கட்டுரையில் ஒரு இடத்தில் தென்னிந்தியர் கலப்பற்றோர் என்றும் வருகிறது.
பிராமணர் என்று எங்கும் வரவுமில்லை.

  அதிலேயே இது ஆரியநுழைவை ஆணித்தரமாக நிறுவப்போதாது என்றும் வருகிறது.

அதாவது பலரின் கருத்துகளை பதிவு செய்து குழப்புகிறார்கள்.

மேற்கண்ட கட்டுரை வடயிந்தியருக்கு பொருந்தலாம்.
தென்னிந்தியருக்கு அதிலும் குறிப்பாக தமிழருக்கு தொடர்பேயில்லாத கட்டுரை அது.

தமிழர்களை அதிலும் குறிப்பாக பார்ப்பனரையும் பறையரையும் தனியாக DNA ஆய்வு செய்யும்வரை இந்த ஆரியக் குழப்பம் தொடரும்.

அதுவரை இக்குழப்பம் திராவிடமும் இந்தியமும் வாழ வழிசெய்யும்.

Sunday, 10 July 2016

ஆதாம், ஏவாள் மற்றும் நோவா ஆகியோரும் தமிழரே

ஆதாம், ஏவாள் மற்றும் நோவா ஆகியோரும் தமிழரே

££££££££££££££££££££££££££££

உலகில் முதல் மொழி தமிழ் என்று ஏற்காவிட்டாலும்
உலகின் முதல் மாந்தன் தமிழன் என்று ஏற்காவிட்டாலும்

60,000 ஆண்டுகளுக்கு முன் உலகம் அழிவைச் சந்தித்தபோது தப்பிப் பிழைத்த ஒரு மாந்தர் குடும்பம் மீண்டும் இனப்பெருக்கம் செய்து உலகம் முழுவதும் பரவியது என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர். ஸ்பென்ஸர் வெல்ஸ் கூறியுள்ளார்.

அந்த குடும்பமும் ஒரு தமிழ்க் குடும்பம்தான்.
இதை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆம். மேலும் இதுபற்றி அறிவோம்.

மனித வரலாறு காலம் பின் செல்லச் செல்ல மங்கி தெளிவில்லாமல் ஆகிவிடுகிறது.

ஆனால் எழுதும் வழக்கம் வரும் முன்னே நடந்த நிகழ்வுகளின் எச்சங்கள் செவிவழிப் பழங்கதைகளாக, புராணங்களாக, இதிகாசங்களாக, தொன்மங்களாக, நாடகமாக, இலக்கியமாக இன்றும் பல்வேறு மாய மந்திரங்களுடன் விரவப்பட்டு இன்றும் உள்ளன.

உலகில் தொன்மையான இனங்களின் புராணங்களில் ஒரு நிகழ்வு மட்டும் தவறாமல் இடம்பெருகிறது.

அது உலகம் நீரில் மூழ்குவதும் அதிலிருந்து குறிப்பிட்ட மக்கள் பிழைப்பதும் ஆகும்.

இது பைபிளில் நோவா கதையாக உள்ளது.
குரானில் நூ கதையாக உள்ளது.
தமிழ் இலக்கியத்தில் குமரிக்கண்டம் மூழ்கியபோது மக்களை காப்பாற்றிய நெடியோன் கதையாக உள்ளது.

இது தவிர பைபிள் கூறும் முதல் மனிதன் ஆதாம். இவன் தமிழனே.
“ தேவனாகிய கர்த்தர் மனிதனை கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே…” - ஆதியாகமம் (2-8)
கிறித்தவ மதம் தோன்றியது மத்திய ஆசியா.
அதற்கு கிழக்கே பழமையான குடியாக தமிழர்கள்தான் இருக்கிறோம்.

ஆதாம் என்ற பெயர் ஆதிமனிதன் என்று பொருள்படும் வகையில் உள்ளது.
ஆதி என்றால் தொடக்கம்.

ஆதாம் வாழ்ந்த இடம் இலங்கைத் தீவில் இன்றும் உள்ளது.
அதனை 'ஆதாம் சிகரம்' (Adams peak) என்று அழைக்கின்றனர்.
தமிழர்கள் இதனை 'சிவனொளிபாத மலை' என்று அழைக்கின்றனர்.
மலையின் உச்சியில் மனிதப் பாத வடிவில் ஒரு பள்ளம் காணப்படுகிறது.

மார்க்கபோலோ (சுமார் கி.பி. 1293) 'ஆதம் மலையில் நமது முதல் தந்தையான ஆதத்தின் கல்லறை இருக்கிறது' என்று குறிப்பிடுகிறார்.

(இந்த மலையின் அடிப் பகுதியில் உள்ள ஒரு குகையின் வாசலில் ‘மனித குலத்தின் தந்தை’என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் இருக்கிறதாம்.
இது உறுதியாகத் தெரியவில்லை.
இதை பிற்காலத்தில் யாராவது வைத்திருக்கலாம்)

‘ஆதன்’என்பது தமிழில் வழங்கிய மிகப் பழைய பெயர்களுள் ஒன்று.
ஆதன் அவினி, ஆதன் அழிசி, ஆதனுங்கன், ஆதன் எழினி என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

தந்தையைக் குறிக்கும் ‘அத்தன்’, ‘அத்தா’என்ற சொற்கள் 'ஆதன்’என்ற சொல்லில் இருந்து தோன்றியவையே.
கந்த புராணத்தில் "ஈன்ற ஔவையும் அத்தனும்" என்று வருகிறது.

"ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்றுப் பெயரிட்டான்.
ஏனெனில் அவன் உயிருல்லோருக்கெல்லாம் தாயானவள்” - ஆதியாகமம் (3 - 20 )

ஏவாள் என்றால் தாய் என்று பொருளாம்.
ஈவே (Eve) என்பது பைபிளை மொழிபெயர்க்கும்போது ஏவாள் என்று ஆக்கப்பட்டது.
பைபிள் எபிரேய மொழியில் (ஹீப்ரு) இருந்துதான் மற்ற மொழிகளுக்கு சென்றது.
ஈவே என்பதும் மொழிபெயர்ப்பு திரிபு.
முதல் பைபிள் ஏவாளை ஆயா என்று கூறிப்பிடுகிறது.
ஆயா, ஆய் என்பன தாயையோ அல்லது தாயின் தாயையோ குறிக்கும் தமிழ்ச்சொல்.
குரான் ஹவ்வா என்று குறிப்பிடுகிறது.
இது ஔவை என்பதன் திரிபு.

மூழ்கிய குமரிக்கண்டத்தின் எஞ்சிய ஒரு பகுதி குமரி மாவட்டம்.
இம்மாவட்டத்தில் ஔவைச் கோயில்கள் இருக்கின்றன.
தோவாளை வட பகுதியில் அழகிய பாண்டிபுரத்தை அடுத்துள்ள குறத்தியறையில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும்,
குறத்தியறையில் இருந்து தெற்கே தாழக்குடியில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும்,
முப்பந்தலில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும் அமைந்திருக்கின்றன.
குமரி மாவட்டத்து தமிழ் இசுலாமியர்கள் ‘ஆதம் பாவா’ என்ற பெயரை சூடிக்கொள்கின்றனர்.
(‘பாவா’என்றால் தந்தை என்று பொருள்)

ஆதமின் புதல்வர்கள் ஆபில் மற்றும் காபில் இவர்களின் கல்லறைகள் தமிழகத்தில் இராமேஸ்வரத்தில் உள்ளன.
அதுதான் ஆபில்காபில் தர்கா.
  இதுபற்றி இதுவரை யாரும் ஆய்வு செய்யவேயில்லை என்பது பெரிய வேதனை.
ஆபில் காபில் தர்காவில் அடக்கமாகி உள்ள உடலை தோண்டி ஆராய்ந்தால் உண்மை தெரியவரும்.

ஆதாம் மற்றும் அவரது குடும்பம் வாழ்ந்த சுவடுகள் உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை அறிக.

  பிரளயத்தில் தப்பித்த நோவாவும் அவரு டைய குடும்பமும் தமிழினத்தைச் சார்ந்தவர்களே என்பதைக் காட்டும் அரிய சான்று ஐயனாரிதனார் இயற்றிய 'புறப்பொருள் வெண்பா மாலை’ நூலில் காணப்படுகிறது.

' பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலகக் கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி.’

‘பூமியைப் போர்த்தியிருந்த வெள்ளம் வடிந்த போது,
கல் அதாவது மலை நீரிலிருந்து வெளிப் பட்டு,
மண் அதாவது தரை வெளிப்படாதிருந்த காலத்தில் கையில் வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’
என்பது இதன் பொருள்.

நோவா கதையில் அவர்தான் உலகிலேயே கப்பல் கட்டிய முதல் மனிதர்.
அதேபோல உலகிலேயே முதன்முதலாகக் கப்பல் கட்டிய இனம் தமிழினம்.
நோவா என்ற பெயர் நாவாய் என்ற தமிழ்ப் பெயருடன் ஒத்துப்போகிறது.
நாவாய் என்றால் நா+வாய்.
அதாவது நாக்கின் முன்புறம்.
கப்பலின் அமைப்பை இது கூறுகிறது.
  இதுதான் ஆங்கிலத்தில் Navy ஆனது.
ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் கப்பலைக் குறிக்க இச்சொல் சிறுசிறு மாற்றத்துடன் வழங்கப்படுகிறது.

உலகின் பழைய துறைமுகங்கள் அனைத்தும் தமிழ்ப் பெயரையே கொண்டுள்ளன.
உலகின் அனைத்து மொழிகளிலும் கப்பல் தொடர்பான சொற்கள் தமிழ்வடிவத்திலேயே உள்ளன.

“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.”
-ஆதியாகமம் 1

நோவா கோபர் மரத்தில் கப்பல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
கோபர் என்ற சொல் மத்திய ஆசிய மொழிகளில் குறிப்பிட்ட பொருளைத் தரவில்லை.
தமிழில் காப்பெரு மரமாக இருக்கலாம்.
காப்பெரு என்றால் பெரிய காட்டுமரம் என்ற பொருள்.

நோவாவின் புதல்வர்கள் ‘ஷெம்’, ‘ஹாம்’
நோவா ‘வெள்ளம் வற்றிக் கரையேறும் வரை சுத்தபத்தமாக இருக்க வேண்டும்’ என்று ஆணையிட்டாராம்
ஆனால் ஹாம் அவர் கட்டளையை மீறித் தன் மனைவியோடு உடலுறவு கொண்டான்.
அதனால் கோபம் கொண்ட நோவா,
காமனும் அவன் சந்ததியினரும் கருநிறம் பெறுவார்கள் என்றும், அவர்கள் வெண்ணிறம் உடைய ஷெம் சந்ததியினருக்கு அடிமைகளாக இருப்பர் என்றும் சபித்தார்.
  இதில் நோவாவின் ஒரு மகன் கறுப்பாகவும் மற்றொருவர் வெண்மையாகவும் இருந்ததாக அறிகிறோம்.
திருத்தக்க தேவர் தனது சீவக சிந்தாமணியில் வெள்ளை நிறமும், கருப்பு நிறமும் உடைய இரு காளைகளை ஏரில் பூட்டும் காட்சியை வர்ணிக்கும்போது அவை ‘காமனும் சாமனும்’ (ஹாம், ஷெம்) போல இருந்ததாகக் கூறுகிறார்.

மனு எனும் அரசன் ஒரு பேசும் மீனை கண்டறிந்து வளர்ந்தானாம்.
அது பெரிதாக வளர்ந்துகொண்டே போனதால் கடலில் கொண்டுவிட்டானாம்.
பிரளயம் வந்ததும் மனுவின் கப்பலை இழுத்துக்கொண்டு போய் வடமலையில் சேர்த்தது என்று சதபதப் பிரமாணம்
கூறுகிறது.

மகாபாரதத்தில் வைவசுத
மனு வைசால வனத்தில் தவம் செய்யும்போது அருகில் இருந்த ஆற்றில் வந்த மீன் பிரளயம் பற்றி எச்சரித்துத் தோணி செய்யச் சொன்னது.
பிரளயம் வந்தபோது வைவசுத மனு ஏழு முனிவர்களோடும், பலவகை விதைகளோடும் தோணியில் ஏறியதாகவும், தோணியை மீன் இமயமலையில் சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சீர்காழி என்னும் ஊர் ‘தோணிபுரம்’ எனப்படுகிறது.
அவ்வூர்க் கோயிலில் உள்ள சிவபெருமான் ‘தோணியப்பர்’ எனப்படுகிறார்.
சிவபெருமான் பிரளயத்தின்போது ‘ஓம்’ என்னும் பிரணவத்தைத் தோணியாக்கிப் பயணம் செய்தார் என்று அருணாசலக் கவிராயர் ‘சீர்காழித் தலபுராண’த்தில் (2.15.4) கூறுகிறார்.

தமிழ் இலக்கியங்கள் நெடியோன் என்ற பாண்டிய மன்னன் குமரிக்கண்டம் மூழ்கியதும் கப்பலில் தப்பித்து வடக்கே பண்டைய தமிழகத்திற்கு வந்து தமிழ்மன்னர்களுடன் போரிட்டு தன் ஆட்சியைப் பரப்பி, மக்களைக் குடிவைத்து, பிறகு கப்பலில் சென்று தற்போதைய இந்தோனேசியாவின் சாலியூரைத் தாக்கி கைப்பற்றி விதைநெல் கொண்டுவந்தது வேளாண்மையை பெருக்கினான் என்று கூறுகின்றன.

மச்சபுராணத்திலும், பாகவத புராணத்திலும் இதே போன்ற மீன் கதை உள்ளது.

குரானிலும் நூ கதை நோவா கதையையே ஒத்துள்ளது.
(மலைமேல் நோவா விட்டுச் சென்ற கப்பல் துருக்கியில் அராரத் மலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினர்.
ஆனால் அது கப்பல் இல்லை எரிமலைப் படிவம் என்று பிறகு தெரியவந்தது)

உலகத்தின் பழைய நாகரிகங்கள் அனைத்திலும் பிரளயத் தொன்மம் காணப்படுகிறது.
‘கில்கமெஷ்’ என்ற புராதனப் பாபிலோனியக் காவியத்தில் ‘உட்னா பிஷ்டிம்’ என்பவர் தெய்விக வழிகாட்டுதலின்படி கப்பல் கட்டிப் பிரளயம் வந்த போது அதில் ஏறித் தப்பித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

மற்றொரு பாபி லோனியக் கதையில் பிரளயத்தில் கப்பல் ஏறித் தப்பித்தவர் ஸிஸோத் ராஸ் (xisouthros) என்று இருக்கிறது.

சுமேரியக் கதை யில் தப்பித்தவர் பெயர் ஸியூ சுத்ரா (Zi-u-Sud-ra) என்று குறிக்கப்பட்டிருக்கிறது.
இது மேற் கண்ட பெயரோடு பெரும்பாலும் ஒன்றுபடுகிறது.

ஹுர்ரியக் கதையில் தப்பித் தவர் பெயர் ‘நாஹ்- மொலெல்’ என்றிருக்கிறது.

கண்டம் மூழ்கிய கதைகளும் உலக தொன்மங்களில் காணக்கிடைக்கின்றன.
கிரேக்கரான ஓமர் - அட்டுலாண்டிசு என்னும் கண்டம் கடலில் மூழ்கியதாக தன்னுடைய ஒடிசி என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

பிளாடோ - அட்டுலாண்டிசு என்னும் ஒரு பலம் மிகுந்த கடற்ப் படையினைக் கொண்டு இருந்த கண்டம் கடலில் அழிந்ததாக கூறி இருக்கின்றார்.

நோவா கப்பலில் இருந்து இறங்கிய மக்கள் செங்கலை அறுத்து கட்டிடம் செய்ததாகக் கூறுகிறது பைபிள்.

உலகில் முதன்முதலாகச் செங்கல் கட்டிடம் காணப்படுவதும் தமிழர் நாகரீக தளமான சிந்துசமவெளியில்தான்.

ஆக உலகில் மனிதர்கள் தோன்றிய இடம் குமரிக்கண்டம்.
அதிலேயே மாந்த இனம் வாழ்ந்து வந்தது.
அங்கே பேசப்பட்ட மொழி தமிழ்.
அக்கண்டம் மூழ்கிய பிறகு சொற்ப எண்ணிக்கையில் தப்பித்த மக்கள் உலகம் முழுவதும் பரவி குடியேறி உள்ளனர்.

வரலாறு அறிந்த முதல் மனிதன் ஆதன்.
அவன் பேசியமொழி தமிழ்.
மூழ்கிய கண்டம் குமரிக்கண்டம்.
அதிலிருந்து மக்களைக் காப்பாற்றியவன் நெடியோன்.

நன்றி:
1) முத்துக்குளிக்க வாரீகளா?! (தொடர்)
_கவிக்கோ அப்துர் ரகுமான்
2) ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி! (தொடர்)
_யாழறிவன்
3) மற்றும் பல்வேறு வலைத்தளங்கள்

Saturday, 30 January 2016

தமிழர் மரபணு

தமிழர் மரபணு

மதுரை அருகே ஜோதிமாணிக்கம் சிற்றூரைச் சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு பழமையான M130 மரபணுவுடன் ஒத்துப்போவதாக ஆக்ஸ்போர்டு ஆய்வறிக்கை கூறுகிறது.
இது 70,000 ஆண்டுகள் பழமையான மரபணு.

"Journey of Man" என்ற National Geographic தொலைக்காட்சியின் ஒளிபரப்பில் 'பிறமலைக் கள்ளர்' மரபணுவானது 60,000 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகிறது.
மதுரை காமராஜ் பல்கலைகழகத்தின் பேராசியர் ஆர்.எம்.பச்சையப்பன் திரட்டிய ஆதாரங்கள் மூலம் இது கண்டறியப்பட்டது.
இதன்பிறகு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த Dr. Spencer Wells என்பவர் மேற்கொண்டு விரிவான ஆய்வு செய்து தனது  'Deep Ancestry' என்ற புத்தகத்தில் எழுதினார்.

பிறகு 2010 ஜூன் மாதம், இங்கிலாந்திலுள்ள 'ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில்' நடந்த 'உலக மரபணு ஆராய்ச்சியாளர்கள்' மாநாட்டில்,
மனித இனத்தின் முதல் குடும்பங்களில் ஒன்று தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

இதன்படி இந்தியத்துணைக் கண்டத்திலேயே பழமையான மூத்தகுடி தமிழரே என்பது விளங்கும்.

இதுமட்டுமல்லாது,
2011 ஆம் ஆண்டு Indian Academy of Sciences வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையானது,
'பரயர்' (பறையர்) மற்றும் 'முத்தரையர்களை' பழைய கற்கால(Paleolithic period) மனிதர்கள் என்று சொல்கின்றது.
(பழைய கற்காலம் என்பது 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்,
இருபது லட்சம் ஆண்டுகள் வரை இந்த காலகட்டம் நீள்கிறது)

மேற்கண்ட மரபணுக்கள் ஆப்பிரிக்கருடன் ஒத்துப்போகின்றன.

இதேபோல ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மரபணுவானது குறும்பர்களுடன் ஒத்துப்போகின்றன.

அதாவது Y குரோமோசோமில் உள்ள M130 haplotype உள்ள சில பொருட்கள் ஆஸ்திரேலிய அபாரிஜின் மக்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவாக உள்ளன.
இதைக் கண்டறிந்தவர் Anthropological Survey of India ஜச் சேர்ந்த Dr.Raghavendra Rao என்பவர் ஆவார்.
இந்த அபாரிஜின்களும் பழமையான மரபணுவைக் கொண்டவர்களே ஆவர்.

மேலும் பறையர்களின் Y-குரோமோசோமில்  G2a3b1 ஆனது
ஐரோப்பிய மூதாதைய இனமான Caucasians மரபணுவிலும் காணப்படுகிறது.
இது 10% ஐயர்களிடமும் 13% ஐயங்கார்களிடமும் காணப்படுகிறது.

மேலும் ஆய்வுகள் பல செய்யவேண்டியுள்ளன.
அதைச் செய்துவிட்டால் உலகின் பழமையான மரபணு தமிழர்களிடம் உள்ளதையும்
உலக மக்கள் அனைவரிடமும் தமிழர்கள் நேரடியாக மரபணுத் தொடர்பு உள்ளவர்கள் என்பதையும் நிறுவ இயலும்.

இதன்மூலம்
முன்தோன்றிய மூத்தகுடி என்பது வெறும் சொற்றொடர் அல்ல அது முற்றிலும் உண்மை என்று புலப்படும்.

Saturday, 2 January 2016

ஆஸ்திரேலியா தமிழர் தொடர்பு

ஆஸ்திரேலியாவுடன் தமிழருக்கான தொடர்பு

1.ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மொழியில் தமிழ் வேர்ச்சொற்கள்

2.ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் மரபணு தமிழ்ப் பழங்குடிகளான குறும்பர்களுடன் ஒத்துப்போவது

3.தொல்காப்பியம் குறிப்பிடும் நீர்நாயும் காரன்னமும் இன்று ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கிடைத்தல்

4.நியூசிலாந்து அருகே கடலில் கிடைத்த முகமது வக்குசு கப்பலின் மணி

5.தற்போது அங்கே வசிக்கும் 1,00,000 தமிழர்கள்