Friday, 2 May 2025

மரபணு சோதனையின் அவசியம்

மரபணு சோதனையின் அவசியம்

 தமிழ் தேசியவாதிகளின் அன்பிற்குரிய நார்வே இங்கர்சால் அவர்கள் ஒரு தெலுங்கர் என்று யாரோ கிளப்பி விட அது தொடர்பாக ஒரு சிறிய உரையாடல் முகநூலில் நடந்தது.
நான் எப்போதும் போல அவருடன் இணைய வழி தொலைபேசும்போது இது பற்றி பேச்சு வந்தது.
 'தற்போது இனத்திற்கான ஒரே சான்று சாதி சான்றிதழ் மட்டுமே' என்று கூறி அதை காட்ட சொல்லி கேட்டேன்.
 முதலில் தயங்கினாலும் பிறகு தனது குடிச்சான்றை அவர் காட்டினார்.
  தமிழர்தான்!
 முழுமையான நம்பிக்கைக்கு உரியவர் ஆகிவிட்டார்!
 ஏன் இவ்வளவு தயக்கம் என்று கேட்டேன்.
 அதற்கு சாதி சான்றும் தற்போதைக்கு நம்ப தகுந்தது இல்லை என்றும் தன்னிடம் டி என் ஏ மேப்பிங் தொடர்பாக ஒரு யோசனை இருப்பதாகவும் அதன் மூலம் ஒரு ஆணினுடைய சந்ததியை அவர்களுடைய டி என் ஏ மரபணு மாதிரிகளை வைத்து வாழையடி வாழையாக கண்டுபிடித்து விடலாம் என்றும் அவ்வாறு செய்தால் நூறு சதவீதம் நம்ப முடியும் என்றும் கூறினார்.
 மரபணு ஆராய்ச்சி தற்போது உச்சத்தைத் தொட்டுவிட்டது. இத்தாலியில் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் உடையில் கிடைத்த சிறு சதைத் துணுக்கை வைத்து அருகிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் டிஎன்ஏ சோதனை செய்து அதில் ஓரளவு ஒத்துப்போன ஒரு நபரைப் பிடித்து அவரது தூரத்து பங்காளி வரை தேடி குற்றவாளியைப் பிடித்த சாதனை நடந்துள்ளது.
 அதாவது கொடிவழி, கொத்து, கூட்டம் என்று பலவாறு அழைக்கப்படும் தந்தையிடமிருந்து மகனுக்கு கடத்தப்படும் அந்த மரபு மிக முக்கியமானது!
கோத்திரம் என்றும் கூறுவர்! 
 இதேவழியில் தான் குடிப்பட்டமும் கடத்தப்படுகிறது!
 இதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும்!
 ஒவ்வொரு குடியும் தனது dna sample ஐ ஆவணப்படுத்தி heritage map ஐ உருவாக்க வேண்டும்.
 இந்த சான்று இருந்தால் காகிதச் சான்றுகள் அவசியமில்லை! 
  ஆனால் அதுவரை சாதிச் சான்றுதான் ஒரே வழி!
 அண்ணன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரது குடியை வெளிப்படுத்த தற்போது இயலாது!
 சக தமிழ்தேசியவாதிகள் மன்னிக்கவும்! 
 இங்கர்சால் ஒரு தகைசால் தமிழர்தான்!

No comments:

Post a Comment