Friday, 25 April 2025

போலி சங்கராச்சாரி

 போலி சங்கராச்சாரி

காஞ்சி மடம் ஒரு சங்கர மடமே அல்ல!
அது ஆதிசங்கரர் நிறுவியது என்பது முழுப் பொய்! 

அதன் தலைமை மடாதிபதிகள் சங்கராச்சாரியார் என்ற பட்டத்தைப் பயன்படுத்துவதும் ஏமாற்று!

காஞ்சி காமகோடி மடம் சிருங்கேரி மடத்தின் கிளை என்று போலி சாமியார்களால் 1780களில் உருவாக்கப்பட்டது! 

 ஏழாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் நான்கு மடங்களை நிறுவினார்.
அவற்றுக்கும் காஞ்சி மடத்திற்கும் தொடர்பே கிடையாது.
 துவாரகா, சிருங்கேரி, ஜோஷி மடம், கோவர்த்தன பீடம் ஆகிய நான்கு மடங்களே ஆதிசங்கரர் நிறுவிய உண்மையான சங்கர மடங்கள்!
 அவை இன்றும் உண்மையான சங்கராச்சாரிகள் தலைமையில் இயங்கி வருகின்றன.

காஞ்சி சங்கராச்சாரிகள் அத்தனைபேரும் முழுப்பொய்யர்கள் என்பதையும் அவர்கள் கூறும் வரலாறு அனைத்துமே கட்டுக்கதை என்பதையும் இந்நான்கு மடங்களின் உண்மையான சங்கராச்சாரிகள் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

இதற்கெல்லாம் சான்று காஞ்சி சங்கராச்சாரிகள் பத்திரிக்கைகளில் எழுதிய தொடருக்கு வரிக்கு வரி பதிலடி கொடுத்து 'வாரணாசி ராஜ்கோபால் சர்மா' (பிராமணர்) எழுதிய "Kanchi Kamakoti Math - A Myth" என்ற புத்தகம்.

அந்த கொலகாரனுக மொதல்ல சங்கராச்சாரியே கெடையாது ஓய்!


24.01.2018 அன்றைய பதிவு
தலைப்பு: பொய்களின் மடம்

No comments:

Post a Comment