Showing posts with label வடயிந்தியர். Show all posts
Showing posts with label வடயிந்தியர். Show all posts

Monday, 29 October 2018

தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி

தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி

டெல்லியில் தமிழக மாணவி ஸ்ரீமதி தற்கொலை!

தொடரும் தமிழர் மீதான டெல்லியின் வன்மம்!

இது நான்காவது சம்பவம்!

2016 இல் திருப்பூரைச் சேர்ந்த மாணவர் "சரவணன்" வீச ஊசி போடப்பட்டு மர்மச்சாவு
[டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு]
இடதுகைப் பழக்கமில்லாத இவர் வலதுகையில் விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.
தற்கொலை என்று பதிவான வழக்கு பிரேத பரிசோதனைக்குப் பிறகு கொலைவழக்காக எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

2017 சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த "மாணவர் முத்துக்கிருஷ்ணன் (எ) ரஜினி கிரிஷ்" தூக்கில் தொங்கியநிலையில் மர்மச்சாவு
[டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் (JNU) பி.எச்.டி]
சேர்க்கையிலும் வாய்மொழித் தேர்விலும் பாரபட்சம் காட்டப்படுவதாக கடைசி முகநூல் பதிவு செய்துள்ளார்.

2018 திருப்பூரைச் சேர்ந்த மாணவர் "சரத் பிரபு" மர்மச்சாவு
[டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் (UCMS) மருத்துவ மேற்படிப்பு]
இவரது உடலில் காயங்கள் இருந்தன.

2018 பிப்ரவரியில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ண பிரசாத் மர்மச்சாவு
[பட்ட மேற்படிப்பிற்கான மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (PGIMER) சண்டீகர்]
இவர் மாணவர் தங்கும் விடுதியில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியநிலையில் இறந்து கிடந்தார்.
இந்தி தெரியாததால் தனிமைப்பட்டு மன உளைச்சலில் இருப்பதாக தன் தந்தையிடம் கடைசியாகப் பேசும்போது கூறியுள்ளார்.

இறந்த எவருமே கடிதம் எழுதிவைக்காமல் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.

இதேபோல 2018 ஜனவரியில் திருநெல்வேலியைச் சேர்ந்த "மாரிராஜ்" தற்கொலை முயற்சி
[அகமதாபாத் பி.ஜே மருத்துவக் கல்லூரி, குஜராத்]
சாதி மற்றும் இனத்தைக் காட்டி தொடர்ச்சியாக அவதானப்படுத்தியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக டெல்லியில் ஐ.ஏ.எஸ் தேர்வாகி பயிற்சியில் இருந்த சத்தியமங்கம் ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்த அதிர்ச்சியான செய்தி இன்று வெளியாகியுள்ளது.

வருமான வரித்துறை 95 சதவீதம் வடயிந்தியர்

வருமான வரித்துறை 95℅ வடயிந்தியர்

  கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த "வருமான வரித்துறை அதிகாரி" மற்றும் "உதவி வருமான வரித்துறை அதிகாரி" ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் சென்னை மண்டலத்திற்கு தேர்வான "வருமான வரித்துறை அதிகாரிகள்" 92 பேர்.

இதில் 5 பேர் மட்டுமே தமிழர்கள்.

அதேபோல சென்னை மண்டலத்திற்கு தேர்வான "உதவி வருமான வரித்துறை அதிகாரிகள்" 233 பேர்.

இதில் 17 பேர் மட்டுமே தமிழர்கள்.

தகவல்களுக்கு நன்றி: Sun News

எந்த மாநிலத்தை எடுத்தாலும் மத்திய அரசு பதவிகள் அனைத்திலும் ஹிந்தி பேசுவோரே நிறைந்து வழிகின்றனர்.

அத்தனைபேரும் குறுக்குவழியில் நுழைந்த திறமையற்ற நபர்கள்.

Saturday, 20 October 2018

தமிழகத்தில் வடவர் குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்

தமிழகத்தில் வடவர் குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்

“எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள்!"

என்ற தலைப்பில், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் குவிந்து வருவதைப் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அக்கட்டுரையில் தோழர் பெ. மணியரசன் அளித்துள்ள செவ்வியும் வெளியாகியுள்ளது.

அக்கட்டுரையின் முக்கிய கருத்துகள் கீழே,

//கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே "வெளிமாநிலத்தார் குடியேற்றத்தில்" தமிழகம் முதலிடம் //

 //2011 இல் மக்கட்தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்'  44 லட்சம்//

//தற்போது 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்' எண்ணிக்கை ஒரு கோடி தாண்டும்//

//கர்நாடகா, குஜராத், மேற்குவங்கம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் குடியேற்றம் தொடர்பாக கடுமையான சட்டம் வைத்துள்ளன//

//நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலபிரதேசம் ஆகியவற்றில் வெளியார் குடியேற 'இன்னர்லைன் பெர்மிட்' எனும் மத்திய நடுவணரசு அனுமதி கட்டாயம்//

//தமிழகத்தில் எந்த குடியேற்றக் கட்டுப்பாடும் இல்லை//

//வடவர் குற்றச்செயல்கள் பெருகிவருகின்றன//

//சென்னை பொருளாதாரம் பல ஆண்டுகளாக ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி பணக்காரர்கள் கைகளில்//

//அம்பத்தூர் தொழிற்பேட்டை வேலைவாய்ப்பு 70% வந்தேறி வடவர்களால் ஆக்கிரமிப்பு //

//சென்னை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர வேலைவாய்ப்பு 50% வடயிந்தியர் ஆக்கிரமிப்பு//

படம்: குமுதம் ரிப்போர்ட்டர் (23.10.2018)
தலைப்பு: எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள்! - சிக்கலில் தமிழகத் தொழிலாளர்கள்

இதேபோல நக்கீரன் வெளியிட்ட கட்டுரையைப் படிக்க,

"2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்" என்று தேடுக.

Tuesday, 21 August 2018

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கட்தொகைக் கணக்கீட்டின் படி தமிழகத்தின் மக்கட்தொகையானது தமிழகப் பிறப்பு விகிதத்தின்படி 51 லட்சம் தான் அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழக மக்கட்தொகை பத்தாண்டுகளில் 97 லட்சம் அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 50 லட்சம் பேர் தமிழகத்தில் குடிபுகுந்து ரேசன் கார்டு வாங்கியுள்ளனர்.

அதனாலேயே தமிழக குடிமக்களின் எண்ணிக்கை அரைக் கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் வடயிந்தியர் ஆவர்.

சென்னையையும் கோவையையும் குடியேறி நிறைத்த பிறகு தற்போது மதுரையை குறிவைத்துள்ளனர்.

மதுரையைச் சுற்றியுள்ள மாசி வீதிகளிலும் சித்திரை வீதிகளிலும் உள்ள அனைத்து கடைகள், கட்டிடங்கள், நிறுவனங்கள் அனைத்தையும் மார்வாடிகள் விலைக்கு வாங்கிவிட்டனர்.

இதற்கு காரணம் குஜராத்திய மக்களான சௌராஷ்டிர மக்கள் மதுரை முதல் திருமங்கலம் வரை தொடர்ச்சியாக பெரும்பான்மையுடன் குட்டி தாய்நிலம் அமைத்து வாழ்வதுதான்.

இங்கே தற்போது பெருகியுள்ள பாஜக ஆதரவும் மதுரை மார்வாடிகளின் பணமும் சேர்ந்து திட்டமிட்டு மதுரையில் ஹிந்தியரைக் குடியேற்றி மதுரையைத் தமக்குச் சொந்தமாக்கப் பார்க்கின்றனர்.
 
மதுரையில் குறிப்பிட்ட வார்டுகளில் வடயிந்தியரைக் குடியேற்றி வருகின்றனர்.
அங்கே மார்வாடிகளை நிறுத்தி வெற்றிபெற வைக்கவுள்ளனர்.

மதுரை 79 வது வார்டில் 600 பேராக இருந்த வடயிந்திய வாக்காளர்கள் தற்போது 4000 பேராகியுள்ளனர்.

இதேபோல 58 வது வார்டில் 7000 பேர் இருக்கிறார்கள்.

மதுரை மத்திய தொகுதியில் 20,000 வடயிந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

(இதிலே 18 வயதுக்கு குறைந்தோர் மற்றும் குடியுரிமை பெறாதோரைச் சேர்க்கவில்லை)

அதாவது ரேசன்கார்டு வாங்குவதற்கு நிரந்தர முகவரி தேவை அதனால் இப்போதெல்லாம் வடயிந்தியர்கள் முதலில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிடுகின்றனர்.

2016 செப்டம்பர் 1 அன்று மத்திய பா.ஜ.க அரசு தமிழக அரசின் மீது அழுத்தம் கொடுத்து ஓ.பன்னீர்செல்வம் மூலம் தமிழ் தெரியாதோரும் வெளிமாநிலத்தவரும் வெளிநாட்டவரும் கூட தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் சலுகையை அறிவித்தது.
(இதை தமிழ்தேசிய பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் கடுமையாக எதிர்த்தது நினைவிருக்கலாம்)

கடந்த ஆண்டில் அரைகோடி பேர் குடிவந்தனர் என்றால் இந்த சலுகை இன்னும் பத்தாண்டுகளில் ஒரு கோடிபேர் குடிபுக வழிசெய்யும்.

மெல்ல மெல்ல தமிழர்கள் இங்கே சிறுபான்மை ஆக்கப்படுவர்.

தாய்நிலத்திற்கு ராணுவ வேலி போடாத இனத்திற்கு அதுதான் நடக்கும்

சில தகவல்களுக்கு நன்றி: நக்கீரன்

Friday, 13 October 2017

ஹிந்தியன் கடைசி வரை நமக்கு உதவவேமாட்டானா?

ஹிந்தியன் கடைசி வரை நமக்கு உதவவேமாட்டானா?

உதவுவானே!
நாம் ஆயுதம் தாங்கி விடுதலைப் போர் புரியும்போது,
ஹிந்தியன் குறைந்த பணத்திற்கு வந்து கூலிப்படையாக வேலைசெய்வான்.

கடைநிலை சிப்பாயாக அவர்களை பயன்படுத்திக்கொண்டு
நாம் நமது நாட்டை கைப்பற்றிய பிறகு அவர்களுக்கு நல்ல பணம் கொடுத்து திருப்பி அனுப்பிடவேண்டும்.

நாம் தமிழர்நாட்டில் அவர்களை எக்காரணம் கொண்டும் குடிவைத்துக்கொள்ள கூடாது.

அவன் வெளிநாடு என்றால் வாயைப் பிளப்பவன்.
வெள்ளைக்கார நாடு எதற்காவது அனுப்பிவிடவேண்டும்.

Wednesday, 21 June 2017

ஆரிய மரபணு ஆய்வு - ஒருவேளை உண்மையென்றாலும் அது ஹிந்தியருக்கு மட்டுமே பொருந்தும்

Gunaseelan Samuel
ஐரோப்பியர்கள் ஆழமாக நம்பவும், ஓரிரு நூற்றாண்டுகளாகப் பரப்பவும் செய்த ஆரியக் கோட்பாட்டை அண்மைக்கால ஆய்வுகள் புறந்தள்ளி மறுத்துள்ளன.

அதே ‘ஆரிய’ இனவியல் நிலைப்பாட்டில் இசுபென்சர் வெல்சு (Spencer Wells) என்பார் தொடங்கிய இருபுரி (DNA) வழிவந்த ஆய்வுகள் மெய்ப்பிக்க முயன்றன.

‘ஆப்பிரிக்காவிலிருந்து’ (Out of Africa) எனும் கோட்பாட்டைத் தழுவியே அந்த மரபணு ஆய்வுகள் அமைந்தன.
அவர் போன்றோரின் ஆய்வும்கூட ‘ஆரிய மேன்மைக்’ (Eugenics) கோட்பாட்டையே தழுவியவை.
அந்த ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாட்டைத் தழுவிக் குமரிக்கண்டக் கோட்பாட்டைத் தமிழர்கள் சிலரே மறுக்கவும் நகையாடவும் தொடங்கினர்.
தமிழரின் தொன்மையை எதிர்க்கும் பிராமண, திராவிட ஆய்வாளர்களுக்கும்கூட ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாடு ஒரு நல்ல பற்றுக்கோடாகப் பட்டது.

ஆரிய இனவியல் கோட்பாட்டை மெல்லப் புகுத்தும் ‘ஆப்பிரிக்காவிலிருந்து’ எனும் கோட்பாடு ஒரு குறைபிறவி என்பதையும்,
பெரிய இட்டுக்கட்டல் என்பதையும் காட்ட என்னுடைய “தமிழரின் தொன்மை” எனும் நூலில் மிக விரிவாக வழக்குரைத்துள்ளேன்.

‘ஆப்பிரிக்காவிலிருந்து’ கோட்பாட்டை மறுப்பதற்கென்றே அந் நூலை எழுதினேன். முடிந்தால் பார்க்கவும்.

இந்து நாளேட்டில் வந்துள்ள செய்தியின்படி சமற்கிருதம் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியாவுக்குள் வந்த ஆரியரின் மொழியாயிருந்தது என்பது பெரிய பொய்.
கி. பி. 2ஆம் நூற்றாண்டுக்குமுன் சமற்கிருதம் எனும் மொழியே இல்லையென்பதை அண்மைக்கால ஆய்வுகள் தெளிவுறக் காட்டுகின்றன.
மேலும், சமற்கிருதம் என்றுமே மக்களால் பேசப்பட்ட மொழியேயன்று.
எசுப்பராந்தோவைப் (Esperanto) போன்று அஃது ஒரு செயற்கை மொழி.
அந்த மொழியைப் பேசியவர்கள்தாம் 4000-5000 ஆண்டுகளுக்குமுன் இந்தியத் துணைக்கண்டத்திற்குள் ‘ஆரியர்களாய்’ நுழைந்தனர் எனும் கூற்று அதனால் பொய்த்துப் போகிறது.

A Genetic Chronology for the Indian Subcontinent எனும் கட்டுரை ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்பதைப்போல் அதே ஆரிய மேன்மைக் கோட்பாட்டைத்தான் ஒப்புவிக்கிறது.
இதை அறியாது,
அக் கட்டுரையைத் தமிழர்களே புகழ்வது பெரிய நெருடலாகவும் வருத்தமாகவும் உள்ளது.
- குணா
------------------------
மேற்கண்டது அறிஞர் குணா அவர்களின் கருத்து.
தி ஹிந்து ஒரு நம்பத்தகுந்த ஊடகம் கிடையாது.
அதிலே இந்தியர்கள் என்று மொட்டையாக கூறி
அவர்களில் குறிப்பிட்ட ஆண்களிடம் மேற்கத்திய மரபணு தாக்கம் இருப்பதாகக் கூறுகிறது ஒரு கட்டுரை.

உடனே ஏதோ ஆரியர் நுழைந்தது உண்மை என்று உறுதியாகிவிட்டதாக கூத்தாடத் தொடங்கியுள்ளனர் மூளையை பயன்படுத்தாத கூட்டத்தினர்.

அக்கட்டுரையில் ஒரு இடத்தில் தென்னிந்தியர் கலப்பற்றோர் என்றும் வருகிறது.
பிராமணர் என்று எங்கும் வரவுமில்லை.

  அதிலேயே இது ஆரியநுழைவை ஆணித்தரமாக நிறுவப்போதாது என்றும் வருகிறது.

அதாவது பலரின் கருத்துகளை பதிவு செய்து குழப்புகிறார்கள்.

மேற்கண்ட கட்டுரை வடயிந்தியருக்கு பொருந்தலாம்.
தென்னிந்தியருக்கு அதிலும் குறிப்பாக தமிழருக்கு தொடர்பேயில்லாத கட்டுரை அது.

தமிழர்களை அதிலும் குறிப்பாக பார்ப்பனரையும் பறையரையும் தனியாக DNA ஆய்வு செய்யும்வரை இந்த ஆரியக் குழப்பம் தொடரும்.

அதுவரை இக்குழப்பம் திராவிடமும் இந்தியமும் வாழ வழிசெய்யும்.

Friday, 17 March 2017

தமிழே தெரியாமல் தமிழில் 24/25, அரசு வேலையைத் தட்டிப்பறித்த ஹிந்தியர்

'தமிழ் நஹி மாலும்' மாணவர்களுக்கு தமிழில் 25க்கு 24 மதிப்பெண்
தபால்துறைபோட்டித் தேர்வில் தமிழ் மாணவர்கள் புறக்கணிப்பு -செய்தி

தமிழில் 25க்கு 24 மதிப்பெண்கள் அரியானா மாணவர்கள் 'வாங்கினார்களா?' -செய்தி

ஹரியானா மாநிலத்தவர்கள் தமிழில் 25க்கு 24 மதிப்பெண்
தபால்துறை தேர்வில் முறைகேடு என ஆட்சியரிடம் புகார் - செய்தி

மதுரையில் நடந்த தமிழக தபால்துறை போஸ்ட்மேன் பணியிட நிரப்பலுக்கான தேர்வில் 300 காலியிடங்களுக்கு 50% வரை அரியானா மாநிலத்தவர் தேர்வாகியுள்ளனர்.
இவர்கள் போக மகாராஷ்ட்ர மாணவர்களும் பெருமளவில் தேர்வாகியுள்ளனர்.
இதில் பலர் தமிழில் 25க்கு 24 மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர்.

தமிழர்கள் 25%கூட தேர்வாகவில்லை.
இவ்வாறு பலமுறை நடந்துவிட்டது.

சென்ற மாதம் தென்னக ரயில்வேயில் (தமிழகம் மற்றும் கேரளா உள்ளடக்கியது) ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு எழுதப்படிக்கவே தெரியாத பீகாரிகள் 276 காலியிடங்களில் 274 இடங்களைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஞ்சிய இருவரும் மலையாளிகள்.
ஒரு தமிழர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

தமிழருக்கு எதிரான மத்திய அரசின் இந்த இனவெறிப்போக்கு தமிழகத்திற்கு வெளியே மத்திய அரசு வேலைகளில் தமிழர் இடம்பெற இயலாது தடுத்துவந்தது.

தற்போது தமிழகத்திற்கு உள்ளேயும் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளை தமிழருக்கு கிடைக்கவிடாமல் ஹிந்தியர் முறைகேடான வழியில் நிரப்பப்படுகின்றனர்.