Showing posts with label தேர்வு. Show all posts
Showing posts with label தேர்வு. Show all posts

Wednesday, 17 June 2020

தென்னக ரயில்வே பணியிடங்கள் 96 இல் 6 பேர் மட்டுமே தமிழர்கள்

தென்னக ரயில்வே பணியிடங்கள் 96 இல் 6 பேர் மட்டுமே தமிழர்கள்

தென்னக ரயில்வே துறை வேலை வாய்ப்புகளில், தமிழர்கள் புறக்கணிப்பு...
வலுக்கும் எதிர்ப்பு!
த.கதிரவன்

தென்னக ரயில்வே பணியிடங்களில் வட இந்தியருக்கே முன்னுரிமை கொடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், "தெற்கு ரயில்வே பணியில் தமிழருக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்கிறார் வானதி சீனிவாசன்.

தென்னக ரயில்வே துறை வேலைவாய்ப்புகளில், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
தற்போது, தென்னக ரயில்வேயின் சரக்கு வண்டிகளின் பாதுகாவலர் பணியிடங்களுக்கு துறைசார்ந்த தேர்வு நடைபெற்றது.
96 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்தத் தேர்வில், தென்னக ரயில்வேயில் பணிபுரிந்துவரும் சுமார் 5,000 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதில் 3,000 பேர் தமிழர்கள்.
96 பணியிடங்களுக்காக நடைபெற்ற இந்தத் தேர்வில், வெற்றி ய பெற்றவர்களில் 5 பேர் மட்டுமே தமிழர்கள்.
மீதம் உள்ள 91 நபர்களும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் அதிர்ச்சி செய்தி.

இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், தங்களது எதிர்ப்பை அறிக்கைகளாகப் பதிவு செய்துவருகின்றன.
பா.ம.க தரப்பில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"விடைத்தாள் முறையில் தேர்வை நடத்தாமல், ஆன் - லைனில் தேர்வு நடத்தியதால் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தெற்கு ரயில்வே துறை தேர்வாணையம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டாலும் வட இந்திய அதிகாரிகளின் முயற்சியால் வட இந்திய மாணவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படுத்தப்படுகிறது.
எனவே, இந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டு, விடை எழுதும் வகையில் மீண்டும் வெளிப்படையாக தேர்வு நடத்த வேண்டும்" என்று கோரியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசுகிற தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினரான ஹரிஹரன் பாபு,
"வட இந்தியர்களின் ஆதிக்கம், காலம் காலமாகவே தொடர்ந்து வருகிறதுதான்.
இதுகுறித்து நம்மூர் அரசியல் கட்சிகளும்கூட அறிக்கைகள் கொடுப்பதும் அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதுமாக முடித்துக்கொள்கிறார்கள்.
மற்றபடி மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சராக இருந்தபோது, `தமிழிலேயே ரயில்வே தேர்வை எழுதலாம்' என அறிவித்திருந்தார்.
ஆனாலும் அது நடைமுறையில் இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நடைபெறவேண்டிய தேர்வை எர்ணாகுளத்துக்கு மாற்றினார்கள்.

இப்படி நிறைய குளறுபடிகள் நடக்கின்றன.
இப்போதும், சரக்கு வண்டி பாதுகாவலர் பணித் தேர்விலும் வழக்கம்போல், வட இந்தியர் ஆதிக்கம்தான் அரங்கேறியிருக்கிறது.
ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற வகையில், இதுகுறித்து ரயில்வே அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கவனத்துக்கு கடிதம் எழுதவிருக்கிறேன்.'' என்றார்.

மத்திய ரயில்வே துறையின் முன்னாள் இணை அமைச்சரும் பா.ம.க துணைப் பொதுச்செயலாளருமான ஏ.கே.மூர்த்தி, இது குறித்துப் பேசும்போது,
"இந்திய அளவில், தமிழ்நாடும் கேரளாவும்தான் கல்வியில் முதன்மையான மாநிலங்களாக இருந்துவருகின்றன.
ஆனால், ரயில்வே தேர்வு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் மட்டும் தமிழர்களின் தேர்ச்சி விகிதம் என்பது மிகமிகக் குறைவாகவே இருந்துவருகிறது.
இப்போது நடைபெற்றுள்ள இந்த ரயில்வே தேர்விலும்கூட 3,000 தமிழர்கள் கலந்துகொண்டு வெறும் 5 பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர் என்றால், நிச்சயம் இதில் முறைகேடு நடந்துள்ளது.
தெற்கு ரயில்வேயிலேயே தமிழர்கள் தேர்வு பெற முடியவில்லை என்றால், மேற்கு, வடக்கு என மற்ற ரயில்வேக்களில் நமக்கு எப்படி வேலைவாய்ப்பு கிடைக்கும்?
ரயில்வேயைப் பொறுத்தவரையில், அமைச்சரின் கவனத்துக்கு வராமல் அதிகாரிகளின் மட்டத்திலேயே இதுபோன்ற பாரபட்சங்கள் நடந்துவிடுகின்றன.
ஏற்கெனவே, வாரிசு அடிப்படையில் தந்தை, மகன், பேரன் என்று வழிவழியாக ரயில்வே வேலைவாய்ப்புகளில் வட இந்தியர்கள் இருந்துவந்த வரலாறெல்லாம் இந்திய ரயில்வேக்கு உண்டு.
அதாவது,
`இந்தியன் பாங்க்; இது உங்கள் பாங்க்'
என்ற விளம்பரத்தைப் போல்,
`இந்தியன் ரயில்வே; இது உங்கள் ரயில்வே'
என்று வட இந்தியர்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நிலைமை இருந்துவருகிறது.
இந்த வகையில், அதிகாரிகளே இதுபோன்று இனப்பாகுபாட்டோடு நடந்துகொள்வதால்தான், தமிழர்களுக்கான வாய்ப்புகள் பறிபோகின்றன.

இந்த முறைகேடுகளைத் தடுக்க வேண்டுமானால், முதற்கட்டமாக, ஆன்லைன் வழியிலான தேர்வுகளை ரத்து செய்து, எப்போதும்போல் விடைத்தாளில் நேரடியாக தேர்வு எழுதுகிற நடைமுறையைக் கொண்டுவரவேண்டும்.

அடுத்ததாக, தமிழகத்திலிருக்கிற 39 எம்.பி-க்களும், நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சரிடம் இந்த முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்.
வருகிற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எங்கள் கட்சியைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், நிச்சயம் இதுகுறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்புவார்'' என்றார் உறுதியாக.

இந்தப் பிரச்னையில், செய்தியாளர்களின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டுவந்த மதுரை எம்.பி-யும் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான சு.வெங்கடேசனிடம் பேசியபோது,
"ஆன்லைன் வழித் தேர்வு என்ற பெயரில், இப்போது நடைபெற்றிருக்கும் இந்த முறைகேடு பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதுகுறித்து ரயில்வே அமைச்சர் மற்றும் வாரியத் தலைவருக்கு கடிதம் எழுதவிருக்கிறேன்.
அடுத்ததாக, ஆன்லைன் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களையும், தேர்வெழுதியவர்களின் விடைத்தாள்களையும் வெளியிடக் கோரி கேட்கவுள்ளேன்'' என்றார் சுருக்கமாக.

இதையடுத்து, தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம், இப்பிரச்னை குறித்து மத்திய ரயில்வே அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பீர்களா என்ற கேள்வியை முன்வைத்தோம்...
"பொதுவாக யு.பி.எஸ்.சி போன்ற அகில இந்தியத் தேர்வுகளில் மாநில வாரியான பாகுபாடுகள் பார்க்கப்படுவது இல்லை.
ஆனால், ரயில்வே துறைக்கான தேர்வு என்கிறபோது, எந்தப் பணிகளுக்காக தேர்வு நடைபெற்றது, தமிழ்நாட்டிலிருந்து எவ்வளவு பேர் தேர்வில் கலந்துகொண்டனர் என்பதுபோன்ற விவரங்களையெல்லாம் பார்க்க வேண்டியதிருக்கிறது.
ஏனெனில், திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தில் மல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயின்றுவருகிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டிலிருந்து செல்லுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது.
காரணம், நம் மாணவர்கள், அதிகளவில் இந்தப் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பதே எனக்குக் கிடைத்த தகவலாக இருக்கிறது.
ரயில்வே, போஸ்டல் மற்றும் கஸ்டம்ஸ் போன்ற துறைகளில் அந்தந்த மொழிசார்ந்த நபர்களை பணியில் அமர்த்துகிறபோதுதான், நிர்வாகம் நல்லமுறையில் செயல்பட முடியும்.
உதாரணமாக, இன்கம்டாக்ஸ் ரெய்டு போகிற ஒரு சூழலில், உடனடியாக ஒரு ஸ்டேட்மென்ட்டை ரெக்கார்ட் செய்ய வேண்டும் என்றால்கூட சம்பந்தப்பட்ட மொழியைத் தெரிந்த அதிகாரியாக இருக்கவேண்டியது மிக முக்கியம்.
அதுவும் அல்லாமல், இது ரொம்பவும் சென்சிபிளான விஷயம் என்பதால், மத்திய அரசுத் துறையில் எங்கெங்கு இதற்கான மாற்றங்கள் தேவைப்படுகிறது என்பது குறித்து உறுதியாக நாங்கள் கேட்கவிருக்கிறோம்.
ரயில்வே மட்டுமன்றி, பொதுமக்களோடு அன்றாடம் நேரடியாகக் கலந்து பழகுகிற எந்தத் துறையாக இருந்தாலும் அவற்றில் உள்ளூர் மக்களை பணியில் அமர்த்துவதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்.
ஏற்கெனவே கஸ்டம்ஸ் மற்றும் கர்நாடக மாநில வங்கித் தேர்வுகளில் இதுபோன்ற பிரச்னைகள் வந்தபோது, நிதி அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம்.
உடனடியாக மாநில மொழிகளிலேயே சம்பந்தப்பட்டவர்கள் தேர்வெழுதலாம் என்ற அரசாணையை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதேபோல், இந்த விஷயத்திலும் ரயில்வே அமைச்சரைச் சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக பா.ஜ.க சார்பில், கேட்டுக்கொள்ளவிருக்கிறோம்.
அதேசமயம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு நாம் கொடுக்கும் அதே கவனத்தை, அகில இந்திய அளவிலான மற்ற போட்டித் தேர்வுகளுக்கும் கொடுக்க வேண்டும்.
அதற்கான பயிற்சியை மாநில அரசும் நம் மாணவர்களுக்கு கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்'' என்றார் கோரிக்கையாக.

Published:16 Jun 2020 4 PMUpdated:16 Jun 2020 4 PM
நன்றி: விகடன்

Wednesday, 18 September 2019

மதுரை ரயில்வே பணியிடங்கள் 572 இல் 10 தமிழர்!

மதுரை ரயில்வே பணியிடங்கள் 572 இல் 10 தமிழர்!

தொடரும் அயலார் ஆக்கிரமிப்பு!

இது நான்காவது முறை!

மதுரை ரயில்வே பணியாளர் தேர்வில் வேலைபெற்ற 572 பேரில் 10 பேர் கூட தமிழகத்தார் இல்லை!

90% ஹிந்தியர்!
8% தென்னிந்தியர்!
2% மட்டுமே தமிழகத்தவர்!
---------
(தினமணி செய்தி)

மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில் தேர்வானவர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள்

By DIN  |
18th September 2019 04:44 PM  |

மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில், தேர்வானவர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

நாடுமுழுவதும் ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான குரூப் டி தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் டிசம்பர் 17 ஆம் தேதி வரை நடைபெற்றதது.

அதில் மதுரை கோட்டத்தில் நடந்த ரயில்வே தேர்வில்,
தேர்வானவர்களில் 90 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
572 பணியிடங்களுக்கு நடந்த இந்த தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் குறைவானவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள், அதிகளவில், பங்கேற்காததே இதற்கு காரணம் என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
----
பாத்தீங்களா மக்களே?!

காரணமாவது ஒழுங்கா சொல்றானுகளானு...?!

Monday, 29 October 2018

வருமான வரித்துறை 95 சதவீதம் வடயிந்தியர்

வருமான வரித்துறை 95℅ வடயிந்தியர்

  கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த "வருமான வரித்துறை அதிகாரி" மற்றும் "உதவி வருமான வரித்துறை அதிகாரி" ஆகிய பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் சென்னை மண்டலத்திற்கு தேர்வான "வருமான வரித்துறை அதிகாரிகள்" 92 பேர்.

இதில் 5 பேர் மட்டுமே தமிழர்கள்.

அதேபோல சென்னை மண்டலத்திற்கு தேர்வான "உதவி வருமான வரித்துறை அதிகாரிகள்" 233 பேர்.

இதில் 17 பேர் மட்டுமே தமிழர்கள்.

தகவல்களுக்கு நன்றி: Sun News

எந்த மாநிலத்தை எடுத்தாலும் மத்திய அரசு பதவிகள் அனைத்திலும் ஹிந்தி பேசுவோரே நிறைந்து வழிகின்றனர்.

அத்தனைபேரும் குறுக்குவழியில் நுழைந்த திறமையற்ற நபர்கள்.

Tuesday, 19 June 2018

TNPSC தேர்வு எழுதிய வடமாநிலத்தாருக்கு சாதகமான வினாத்தாள் கிடைத்தது

TNPSC தேர்வு எழுதிய வமாநிலத்தாருக்கு சாதகமான வினாத்தாள் கிடைத்தது

TNPSC தேர்வு முடிவுகள் வரவுள்ள நிலையில் இது பற்றி அறிவோம்

குரூப் 4 தேர்வு எழுதிய வடமாநில இளைஞர்கள்!- வெடிக்கும் சர்ச்சை

தமிழகத்தில் நடந்த குரூப் 4 தேர்வில், மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலத்தை பூர்வீகமாகக்கொண்ட இளைஞர்கள் தேர்வு எழுதிய சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி யிருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 4 பணிகளுக்கான தேர்வை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
சுமார் 10 ஆயிரம் பணியிடங்களுக்கு நடந்த இந்தத் தேர்வை எழுத, 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். 

இதில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

வெளிமாநிலத்தவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்க அனுமதித்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு வைகோ உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் குரூப் 4 தேர்வு எழுதினார்கள்.
இதில், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடந்த குரூப் 4 தேர்வில், மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பங்கேற்றனர்.

இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்திருந்த, தமிழ்மொழி தெரியாத இவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதியுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் படித்துவிட்டு வேலை கிடைக்காத நிலையில், பொறியியல் பட்டதாரிகள்கூட துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கும் அவல நிலை உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அடிப்படை பணிகளுக்கான தேர்வுகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை அனுமதித்தது வேலையில்லா தமிழக இளைஞர்களையும், அவர்களது பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

16.02.2018
விகடன்
-------------

`யாருக்காக நடந்தது டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு?'
- தமிழக மாணவர்களைத் தவிக்க வைத்த வினாத்தாள்

தமிழக அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் வி.ஏ.ஓ பதவி உள்பட 9,351 பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது.

`வடமாநிலத்தவர்கள் மட்டுமே பயன் அடையும் வகையில் வினாத்தாள் அமைந்துவிட்டது.
மத்திய அரசின் திட்டங்கள்தான் இடம் பெற்றிருக்கிறதே தவிர, தமிழர் நாகரிகம், பண்பாடு குறித்தெல்லாம் எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை' எனக் குமுறுகின்றனர் கல்வியாளர்கள்.

ஒவ்வோர் ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் அறிவிக்கப்படும்போது, லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை வெளியானபோது, யாரும் எதிர்பாராத வகையில் 20,69,000 பேர் விண்ணப்பித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி வரலாற்றிலேயே இந்த அளவுக்கு விண்ணப்பங்கள் வந்து சேர்ந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு குவிந்தன.

நேற்று நடந்த இந்தத் தேர்வில் 17,52,000 பேர் எழுதினர்.
கடந்த ஆண்டுகளைப்போல் அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட தளத்தில் வினாத்தாள் அமைந்திருந்ததைத் தேர்வர்கள் எதிர்பார்க்கவில்லை.
குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்தில், 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் குரூப் 4 தேர்வை எழுதினார்கள்.

இதில், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடந்த குரூப் 4 தேர்வில் மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் பங்கேற்றனர்.
தமிழ் மொழி தெரியாத இவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதியுள்ளனர்.

வடமாநிலத்தவர்கள் திரண்டு வந்து தேர்வு எழுதியதைத் தமிழ் ஆர்வலர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
"தமிழ்மொழியை அறியாத இவர்கள், வி.ஏ.ஓ உள்ளிட்ட தேர்வுகளில் வெற்றி பெற்றால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
மாநிலத்தின் மொழிகளைப் பேசுபவர்களுக்கே அரசுப் பணிகளில் முக்கியத்துவம் தர வேண்டும்.
'டி.என்.பி.எஸ்.சி விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்' எனக் குரல் கொடுத்தும் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
தமிழர்களைப் புறக்கணிக்கும் ஒன்றாகவே இதைப் பார்க்க முடிகிறது" என்கின்றனர் வேதனையோடு.

"அரசுப் பணி கனவுடன் குரூப் 4 தேர்வுக்குத் தயாராகிவந்த லட்சக்கணக்கான கிராமத்து இளைஞர்களை வஞ்சித்திருக்கிறது தேர்வாணையம்.
தமிழக அரசுத் துறைகளில், தமிழ்நாட்டில் இருக்கும் பணிகளுக்கான போட்டித்தேர்வில், தமிழ்நாடு பற்றிய கேள்விகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
இந்திய சுதந்திரப் போராட்டம் (இந்திய விடுதலை இயக்கம்) தொடர்பாக ஒரு வினாகூட இல்லை.
அறிவுத் திறன் (aptitude test) பகுதியில், கணிதப் பாடத்துக்கு வெளியே கேள்விகளே இடம்பெறவில்லை.
இவற்றையெல்லாம்விடக் கொடுமை, தமிழக வரலாறு, தமிழர் நாகரிகம், தமிழர் கலைகள், பண்பாட்டு சின்னங்கள் பற்றி எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை.
தமிழக ஆறுகள், வளங்கள், தொழில்கள், தமிழ்நாட்டுப் பிரச்னைகள் பற்றிய எந்த வினாவும் இல்லை.
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கும் சேர்த்துதான் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
ஆனால், கிராமப்புற நிர்வாகம் பற்றிய கேள்விகளும் கேட்கப்படவில்லை"
என வேதனையோடு பேசுகிறார் கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

தொடர்ந்து நம்மிடம் விவரித்தார்.
"இந்தத் தேர்வில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தாலும் அதிர்ச்சியே மிஞ்சுகிறது. 'இந்தியா - மாலத்தீவு இடையிலான ராணுவ ஒத்திகைக்கு என்ன பெயர்' ;
'இந்திய விமானப்படையிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஊர்தியின் பெயர் என்ன' ;
'2017 அக்டோபரில் டெல்லியில் தொடங்கப்பட்ட நிறுவனம் எது'
இத்துடன், பல்வேறு யோஜனாக்கள் அறிவிக்கப்பட்ட ஆண்டுகள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வினாத்தாளை அப்படியே அச்சுப் பிசகாமல் ஏதேனும் ஒரு வட இந்திய மாநிலத்தில், வினாத்தாளாக வைத்திருந்தால் மதிப்பெண்களை அள்ளியிருப்பார்கள்.
அரசு நிர்வாகத்துக்கு யார் வர வேண்டும் என்பதைவிடவும் யார் வரக் கூடாது என்பதை மனதில் வைத்தே வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத்தான் தெரிகின்றன.
அறிவியல், கணிதப் பகுதிகளில் நேரடியாகப் பள்ளிப் புத்தகங்களிலிருந்து வந்த வினாக்கள் மட்டும்தான் சற்று ஆறுதலை அளித்துள்ளன.
ஆனால், பொது அறிவுப் பகுதியைக் கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத அளவுக்குக் கேள்விகள் வந்துள்ளன.
குறிப்பாக, முதல் தலைமுறைப் பட்டதாரி இளைஞர்களை, அரசுப்பணிப் பக்கம் வரவிடாமல் விரட்டுகின்ற முயற்சியாகவே பார்க்க முடிகிறது.
மிக நன்றாகத் திட்டமிட்டுத் துல்லியமாகத் தேர்வு நடத்துவதில் அபாரமான நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியுள்ள தேர்வாணையம், வினாத்தாள் அமைப்பதில் இந்த அளவுக்குச் சறுக்கியது ஏன்?
இப்படியொரு வினாத்தாளை வடிவமைத்தன் மூலம், தமிழக கிராமப்புற இளைஞர்களுக்கு மிகப் பெரிய அநீதி இழைத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
பொதுப் பாடப் பகுதியில் மட்டுமல்ல; மொழித் தாளிலும்கூட, ஒருவிதத் தவறான அணுகுமுறை தெரிகிறது.
விடையை நோக்கி இட்டுச் செல்வதாக வினா அமைய வேண்டும் என்பது பொது விதி.
ஆனால், சில வினாக்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம் (the structuring of the question) நகைப்புக்கு உரியதாக இருக்கிறது.
நடப்பு நிகழ்வுகள் பகுதியில், நாம் அதிகம் அறிந்திராத, தமிழ் நாளிதழ்களில் அதிகம் இடம் பெறாத செய்திகளைத் ‘தேடித் தேடி’ கேட்டிருக்கிறார்கள்.
ஏன் இந்த அநீதிப் போக்கு?  நகர்ப்புற இளைஞர்களில் யாருக்கெல்லாம் இணையம் வழியாகச் செய்திகளை வாசிக்கின்ற வழக்கம் இருக்கிறதோ அவர்களால் மட்டுமே சில வினாக்களுக்கு விடை அளிக்க முடியும்.
ஒவ்வொரு வினாவும் அது வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தையும் முழுமையாகப் பார்த்தால், கிராமத்து இளைஞர்கள் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரியும்" என்றார் வேதனையோடு.

விகடன்
(12.02.2018)

Sunday, 6 May 2018

அரசுப் பள்ளி மாணவரும் அலைக்கழிப்பு

அரசுப் பள்ளி மாணவரும் அலைக்கழிப்பு

CBSC மாணவர் மட்டுமே அதுவும் விருப்பத்தின் பேரில் வெளிமாநிலம் சென்றதாகக் கூறப்படுவது பொய்.

அரசுப் பள்ளிகளில் படித்த 39 மாணவர்களும் நீட் எழுத வெளிமாநிலங்களுக்கு அலைக்கழிந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து 3 மாணவர்கள் கர்நாடகா மைசூருக்கும், 1 மாணவர் பெங்களூருக்கும்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மாணவர்கள் திருவனந்தபுரத்திற்கும்,

ராமநாதபுரத்தில் இருந்து 1 மாணவர் எர்ணாகுளத்திற்கும்,

திருவாரூரில் இருந்து 2 மாணவர்கள் கொல்லத்திற்கும்,

திருநெல்வேலியில் இருந்து 5 மாணவர்கள் எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரத்திற்கும்,

திருச்சிராப்பள்ளியில் இருந்து 17 மாணவர்கள் திருவனந்தபுரத்திற்கும்  சென்றனர்

(source: பள்ளிக் கல்வித்துறை)

Wednesday, 27 September 2017

வங்கி வேலைக்கு தமிழ் கட்டாயமில்லை! இந்தி அரசின் அடுத்த ஆப்பு!

வங்கி வேலைக்கு தமிழ் கட்டாயமில்லை
இந்தி அரசின் அடுத்த ஆப்பு

தமிழ் கட்டாயமாக இருந்த தேர்வுகளிலேகூட தமிழே தெரியாத ஹிந்தி மாணவருக்கு தமிழில் நல்ல மதிப்பெண் வழங்கி வேலையில் அமர்த்திக்கொள்ளும் மத்திர அரசின் இந்தி இனவெறி அம்பலமானதால் தற்போது இந்த அதிரடி முடிவு!

பொதுத்துறை வங்கிகளில் உதவியாளர் பணியிடங்கள் 7883 இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் மட்டும் 1277 காலியாக உள்ளன.
தமிழகத்தில் பத்து லட்சம் பேர் இதற்கான தயாரிப்பில் உள்ளனர்.
தற்போது தமிழக பொதுத்துறை தமிழ்மொழி கட்டாயம் என்ற விதியை தளர்த்தியுள்ளது.

News18 செய்தி
https://m.facebook.com/story.php?story_fbid=1046364758800510&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.1046364758800510%3Atl_objid.1046364758800510%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1506841199%3A-37368577874997661&__tn__=%2AW-R&_rdr

மேலும் அறிய,
search மத்திய அரசு வேலையில் 0 தமிழர்கள் வேட்டொலி

search தமிழே தெரியாமல் தமிழில் 24/25, அரசு வேலையைத் தட்டிப்பறித்த ஹிந்தியர் வேட்டொலி