Showing posts with label மீனாட்சியம்மன் கோவில். Show all posts
Showing posts with label மீனாட்சியம்மன் கோவில். Show all posts

Sunday, 2 December 2018

ஆலயநுழைவு ஆதரவாளர் சாந்து பட்டர்

ஆலயநுழைவு ஆதரவாளர் சாந்து பட்டர்

இந்த புகைப்படத்தில் இருப்பவர்தான் சாந்துபட்டர்.

1939 இல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடந்த ஆலயப் போராட்டத்தின் பின்விளைவுகளை தன் வாழ்நாள் முழுவதும் சந்தித்தவர்.

ஆலயதுழைவுக்கு எதிராக அப்போது மீனாட்சியம்மன் கோவில் பூசாரிகள் 13 பேரில் 12 பேர் வேலைநிறுத்தம் தொடங்க தனியாளாக கோவிலை நடத்தியவர்.

திருநெல்வேலியில் இருந்து 12 பூசாரிகள் வரவழைக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் அனுமதி வழங்கி கோவில் தொடர்ந்து நடக்க முக்கிய காரணம் இவரே!

1945 இல் மற்ற பூசாரிகளும் வேலைக்கு வந்துவிட்டனர்!

போராட்டம் நடத்தியோர் பெயர் வாங்கிக்கொண்டு போய்விட்டனர்!

பட்டியல் மக்களும் ஆலயத்திற்கு வந்துபோக ஆரம்பித்துவிட்டனர்!

ஆனால் இவரது குடும்பம் மட்டும் அவரது சமூகத்திலிருந்தே ஒரு தலைமுறைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இவரது மரணத்திற்கு பிறகே இவரது குடும்பம் ஒதுக்கலில் இருந்து மீண்டது.

இது பற்றி விரிவாக "லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில்" மானுடவியல் பேராசிரியராக இருக்கும் சி.ஜே. ஃபுல்லர், தனது Servants of the Goddess புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

நன்றி: பிபிசி தமிழ்
தகவலுக்கு நன்றி: யோகேஸ்வரன்

Tuesday, 21 August 2018

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்

2021 இல் தமிழகத்தில் ஒன்றரை கோடி வந்தேறிகள்

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் மக்கட்தொகைக் கணக்கீட்டின் படி தமிழகத்தின் மக்கட்தொகையானது தமிழகப் பிறப்பு விகிதத்தின்படி 51 லட்சம் தான் அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால் தமிழக மக்கட்தொகை பத்தாண்டுகளில் 97 லட்சம் அதிகரித்துள்ளது.

அதாவது கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 50 லட்சம் பேர் தமிழகத்தில் குடிபுகுந்து ரேசன் கார்டு வாங்கியுள்ளனர்.

அதனாலேயே தமிழக குடிமக்களின் எண்ணிக்கை அரைக் கோடி கூடுதலாக அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் வடயிந்தியர் ஆவர்.

சென்னையையும் கோவையையும் குடியேறி நிறைத்த பிறகு தற்போது மதுரையை குறிவைத்துள்ளனர்.

மதுரையைச் சுற்றியுள்ள மாசி வீதிகளிலும் சித்திரை வீதிகளிலும் உள்ள அனைத்து கடைகள், கட்டிடங்கள், நிறுவனங்கள் அனைத்தையும் மார்வாடிகள் விலைக்கு வாங்கிவிட்டனர்.

இதற்கு காரணம் குஜராத்திய மக்களான சௌராஷ்டிர மக்கள் மதுரை முதல் திருமங்கலம் வரை தொடர்ச்சியாக பெரும்பான்மையுடன் குட்டி தாய்நிலம் அமைத்து வாழ்வதுதான்.

இங்கே தற்போது பெருகியுள்ள பாஜக ஆதரவும் மதுரை மார்வாடிகளின் பணமும் சேர்ந்து திட்டமிட்டு மதுரையில் ஹிந்தியரைக் குடியேற்றி மதுரையைத் தமக்குச் சொந்தமாக்கப் பார்க்கின்றனர்.
 
மதுரையில் குறிப்பிட்ட வார்டுகளில் வடயிந்தியரைக் குடியேற்றி வருகின்றனர்.
அங்கே மார்வாடிகளை நிறுத்தி வெற்றிபெற வைக்கவுள்ளனர்.

மதுரை 79 வது வார்டில் 600 பேராக இருந்த வடயிந்திய வாக்காளர்கள் தற்போது 4000 பேராகியுள்ளனர்.

இதேபோல 58 வது வார்டில் 7000 பேர் இருக்கிறார்கள்.

மதுரை மத்திய தொகுதியில் 20,000 வடயிந்திய வாக்காளர்கள் உள்ளனர்.

(இதிலே 18 வயதுக்கு குறைந்தோர் மற்றும் குடியுரிமை பெறாதோரைச் சேர்க்கவில்லை)

அதாவது ரேசன்கார்டு வாங்குவதற்கு நிரந்தர முகவரி தேவை அதனால் இப்போதெல்லாம் வடயிந்தியர்கள் முதலில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிடுகின்றனர்.

2016 செப்டம்பர் 1 அன்று மத்திய பா.ஜ.க அரசு தமிழக அரசின் மீது அழுத்தம் கொடுத்து ஓ.பன்னீர்செல்வம் மூலம் தமிழ் தெரியாதோரும் வெளிமாநிலத்தவரும் வெளிநாட்டவரும் கூட தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் சலுகையை அறிவித்தது.
(இதை தமிழ்தேசிய பேரியக்கம் தலைவர் பெ.மணியரசன் கடுமையாக எதிர்த்தது நினைவிருக்கலாம்)

கடந்த ஆண்டில் அரைகோடி பேர் குடிவந்தனர் என்றால் இந்த சலுகை இன்னும் பத்தாண்டுகளில் ஒரு கோடிபேர் குடிபுக வழிசெய்யும்.

மெல்ல மெல்ல தமிழர்கள் இங்கே சிறுபான்மை ஆக்கப்படுவர்.

தாய்நிலத்திற்கு ராணுவ வேலி போடாத இனத்திற்கு அதுதான் நடக்கும்

சில தகவல்களுக்கு நன்றி: நக்கீரன்

Wednesday, 26 April 2017

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை

திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,

மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்

இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்

என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!

திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.

மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.

இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.

கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!

வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி  வைத்துள்ளனர்.

Saturday, 9 August 2014

ஐயர் செய்த ஆலய நுழைவு

ஐயர் நடத்திய ஆலயநுழைவு
"திரு.வைத்தியநாதய்யர் அவர்கள், மீனாட்சியம்மன்
கோவிலுக்குள் ஹரிஜனங்களை அழைத்துக்கொண்டு
உள்ளே நுழையும்போது, சதிகாரர்களால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரவுடிகள் கலகம்
விளைவிக்கப் போவதாக அறிகிறேன். கோயிலுக்குள்
பிரவேசிக்கும் ஹரிஜனங்களை கத்தி, அரிவாள் போன்ற
பயங்கர ஆயுதங்களால்
தாக்கி கோயிலை ரத்தக்கறை படியச் செய்யப் போவதாகத்
தகவல் வந்துள்ளது. எதிரிகளால்
ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ரவுடிக்
கும்பலுக்கு எச்சரிக்கை விடுகிறேன்.
ஹரிஜனங்களுடன் வைத்தியநாதய்யர் மீனாட்சியம்மன்
ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது நானும் உடன்
வருவேன். ஏதாவது அசம்பாவிதம் நடக்குமானால் அந்த
ரவுடிகளை சந்திக்கும் விதத்தில் நானே சந்திப்பேன்."
மேற்கண்ட செய்தியானது துண்டு செய்திச்சீட்டாக
(பிரசுரம்) மதுரை வட்டாரம் முழுக்க பொதுமக்களிடம்
அளிக்கப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி எந்த அச்சமும் இல்லாமல் 8.7.1939-ல்
காலை 10 மணிக்கு கக்கன் , முருகானந்தம்,
பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர்
முத்து என ஐந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும்
விருதுநகர் நகராட்சி உறுப்பினராக இருந்த
எஸ்.எஸ்.சண்முக நாடாருடன் சேர்ந்து ஆறு பேர்
திரு.வைத்தியநாதன்(ஐயர்) உடன் ஆலயத்தில்
நுழைந்து வணங்க, திரளான தாழ்த்தப்பட்ட மக்கள்
அவர்களைத் தொடர்ந்து உள்ளே நுழைந்து வணங்கினர்;
ஆலயநுழைவு செய்தால் கொன்றுவிடுவதாகச் சிலர்
மிரட்டியிருந்தபடியால் வைத்தியநாதனார்
முத்துராமலிங்கனாரிடம் உதவி கோரிவே, மேற்கண்ட
துண்டு செய்திச்சீட்டை முத்துராமலிங்கனார்
பொதுமக்களிடம் பரவச்செய்தார்.
மதுரை நெசவாலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்
தொடர்பான வழக்கின் காரணமாக முத்துராமலிங்கனார்
அப்போது வரமுடியவில்லை;
ஆனாலும், அங்கே எந்த கோளாறும் நடக்கவில்லை;
அன்றுமட்டும் இல்லை அதன்பிறகு தாழ்த்தப்பட்டோர்
வழக்கமாக கோவிலுக்குச் சென்றுவந்தனர்; ஒரு சிறிய
சச்சரவுகூட வரவில்லை.
அதுதான் முத்துராமலிங்கனார்.
(சான்று: 'தேவர்- ஒரு வாழ்க்கை'_பாலு சத்யா;
கிழக்கு பதிப்பகம்)
ஆலய மேலாளர்களும் (பார்ப்பனப்)பூசாரிகளும்
இதை வரவேற்கவே செய்தனர்; சில பூசாரிகள்
கோவிலை விட்டு வெளியேறி நடேசய்யர்
என்பவரது பெரியவீட்டில் மீனாட்சியம்மன்
கோவிலை இடம்மாற்றி நடத்துவதாக அறிவித்தனர்;
அது கொஞ்ச ஆண்டுகளுக்கு தொடர்ந்தது; சில
பார்ப்பனர்கள் வைத்தியநாதனாரைச் சாதி விலக்கம்
செய்வதாக அறிவித்தனர்; ஆனால், அதுவும்
பிசுபிசுத்துப் போனது; தாழ்த்தப்பட்ட
மக்களின் உரிமைக்காக தீவிரமாகப் போராடிய அந்த
மாமனிதர் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்துக்காக
மறக்கடிக்கப்பட்டுள்ளார்;
இதென்ன கொடுமை?!
வைத்தியநாதன் தனது மனைவியையும்
போராடச்செய்தது உங்களுக்குத் தெரியாது; ஏனென்றால்
அவர் பார்ப்பனர்; ஆனால் ஈவேரா தனது மனைவியையும்
தங்கையையும் ஒரே ஒரு மறியல் போராட்டத்திற்கு
அழைத்துவந்தது தெரியும்.
1934ல் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்குத்
தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்ற
வைத்தியநாதனார் நாகநாதசுவாமி கோயிலில் வணங்கச்
செய்தது உங்களுக்குத் தெரியாது; ஏனென்றால் அவர்
பார்ப்பனர்; இதே 1924ல் (ஏற்கனவே டி.கே.மாதவன்
நடத்திவந்த) வைக்கம் போராட்டத்தில்
(பத்தோடு பதினொன்றாக)
ஈவேரா போராடியது உங்களுக்குத் தெரியும்.
(டி.கே.மாதவனுக்கு முன்பே 1854லேயே ஒரு தமிழன்,
ஐயா வைகுண்டர் என்றழைக்கப்படும் முத்துக்குட்டி ஆலய
நுழைவுப் போராட்டம் செய்தது இங்கே குறிப்பிடத்தக்க
து)
ராஜகோபாலாச்சாரி(ராஜாஜி) 1938ல் 'ஹரிஜன ஆலயப்
பிரவேச சட்டம்' கொண்டுவந்தது உங்களுக்குத்
தெரியாது; ஏனென்றால் அவர் பார்ப்பனர்; ஆனால், அவர்
குலக்கல்விச் சட்டம் கொண்டுவர முயற்சித்ததைக்
கண்டித்து ஈவேரா நடத்திய ஒரே ஒரு போராட்டம்
உங்களுக்குத் தெரியும்.
சுப்ரமணிய சாமி பேசுவான்; பார்ப்பான் பார்ப்பான்
என்று குதிப்பீர்கள்; ஏனென்றால் அவன் ஒரு பார்ப்பனன்;
ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனும் நாராயணசாமியும்
பேசினால் அவர்கள் சாதியைச் சொல்லித்
திட்டுவது கிடையாது.
திராவிடத்தை எதிர்க்கும் தமிழ் இளைஞர்களே !
நீங்கள் அதே திராவிடம் ஊட்டிய 'பார்ப்பனருக்கு
எதிரான சாதிவெறிக்கு' இரையாகியுள்ளீர்கள்;
அதிலிருந்து வெளியே வாருங்கள்;
""""பார்ப்பனர் தமிழரே"""
மேலும் அறிய,
http://ta.m.wikipedia.org/wiki/அ._வைத்தியநாதய்யர்
http://kelvipadhil.blogspot.com/2013/07/blog-
post_5.html?m=1

https://m.facebook.com/photo.php?fbid=474189339351391&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739