Saturday 9 August 2014

ஐயர் செய்த ஆலய நுழைவு

ஐயர் நடத்திய ஆலயநுழைவு
"திரு.வைத்தியநாதய்யர் அவர்கள், மீனாட்சியம்மன்
கோவிலுக்குள் ஹரிஜனங்களை அழைத்துக்கொண்டு
உள்ளே நுழையும்போது, சதிகாரர்களால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரவுடிகள் கலகம்
விளைவிக்கப் போவதாக அறிகிறேன். கோயிலுக்குள்
பிரவேசிக்கும் ஹரிஜனங்களை கத்தி, அரிவாள் போன்ற
பயங்கர ஆயுதங்களால்
தாக்கி கோயிலை ரத்தக்கறை படியச் செய்யப் போவதாகத்
தகவல் வந்துள்ளது. எதிரிகளால்
ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ரவுடிக்
கும்பலுக்கு எச்சரிக்கை விடுகிறேன்.
ஹரிஜனங்களுடன் வைத்தியநாதய்யர் மீனாட்சியம்மன்
ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது நானும் உடன்
வருவேன். ஏதாவது அசம்பாவிதம் நடக்குமானால் அந்த
ரவுடிகளை சந்திக்கும் விதத்தில் நானே சந்திப்பேன்."
மேற்கண்ட செய்தியானது துண்டு செய்திச்சீட்டாக
(பிரசுரம்) மதுரை வட்டாரம் முழுக்க பொதுமக்களிடம்
அளிக்கப்பட்டிருந்தது.
திட்டமிட்டபடி எந்த அச்சமும் இல்லாமல் 8.7.1939-ல்
காலை 10 மணிக்கு கக்கன் , முருகானந்தம்,
பூவலிங்கம், சின்னையா, அரிசன தேவாலய ஊழியர்
முத்து என ஐந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும்
விருதுநகர் நகராட்சி உறுப்பினராக இருந்த
எஸ்.எஸ்.சண்முக நாடாருடன் சேர்ந்து ஆறு பேர்
திரு.வைத்தியநாதன்(ஐயர்) உடன் ஆலயத்தில்
நுழைந்து வணங்க, திரளான தாழ்த்தப்பட்ட மக்கள்
அவர்களைத் தொடர்ந்து உள்ளே நுழைந்து வணங்கினர்;
ஆலயநுழைவு செய்தால் கொன்றுவிடுவதாகச் சிலர்
மிரட்டியிருந்தபடியால் வைத்தியநாதனார்
முத்துராமலிங்கனாரிடம் உதவி கோரிவே, மேற்கண்ட
துண்டு செய்திச்சீட்டை முத்துராமலிங்கனார்
பொதுமக்களிடம் பரவச்செய்தார்.
மதுரை நெசவாலைத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்
தொடர்பான வழக்கின் காரணமாக முத்துராமலிங்கனார்
அப்போது வரமுடியவில்லை;
ஆனாலும், அங்கே எந்த கோளாறும் நடக்கவில்லை;
அன்றுமட்டும் இல்லை அதன்பிறகு தாழ்த்தப்பட்டோர்
வழக்கமாக கோவிலுக்குச் சென்றுவந்தனர்; ஒரு சிறிய
சச்சரவுகூட வரவில்லை.
அதுதான் முத்துராமலிங்கனார்.
(சான்று: 'தேவர்- ஒரு வாழ்க்கை'_பாலு சத்யா;
கிழக்கு பதிப்பகம்)
ஆலய மேலாளர்களும் (பார்ப்பனப்)பூசாரிகளும்
இதை வரவேற்கவே செய்தனர்; சில பூசாரிகள்
கோவிலை விட்டு வெளியேறி நடேசய்யர்
என்பவரது பெரியவீட்டில் மீனாட்சியம்மன்
கோவிலை இடம்மாற்றி நடத்துவதாக அறிவித்தனர்;
அது கொஞ்ச ஆண்டுகளுக்கு தொடர்ந்தது; சில
பார்ப்பனர்கள் வைத்தியநாதனாரைச் சாதி விலக்கம்
செய்வதாக அறிவித்தனர்; ஆனால், அதுவும்
பிசுபிசுத்துப் போனது; தாழ்த்தப்பட்ட
மக்களின் உரிமைக்காக தீவிரமாகப் போராடிய அந்த
மாமனிதர் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்துக்காக
மறக்கடிக்கப்பட்டுள்ளார்;
இதென்ன கொடுமை?!
வைத்தியநாதன் தனது மனைவியையும்
போராடச்செய்தது உங்களுக்குத் தெரியாது; ஏனென்றால்
அவர் பார்ப்பனர்; ஆனால் ஈவேரா தனது மனைவியையும்
தங்கையையும் ஒரே ஒரு மறியல் போராட்டத்திற்கு
அழைத்துவந்தது தெரியும்.
1934ல் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்குத்
தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்ற
வைத்தியநாதனார் நாகநாதசுவாமி கோயிலில் வணங்கச்
செய்தது உங்களுக்குத் தெரியாது; ஏனென்றால் அவர்
பார்ப்பனர்; இதே 1924ல் (ஏற்கனவே டி.கே.மாதவன்
நடத்திவந்த) வைக்கம் போராட்டத்தில்
(பத்தோடு பதினொன்றாக)
ஈவேரா போராடியது உங்களுக்குத் தெரியும்.
(டி.கே.மாதவனுக்கு முன்பே 1854லேயே ஒரு தமிழன்,
ஐயா வைகுண்டர் என்றழைக்கப்படும் முத்துக்குட்டி ஆலய
நுழைவுப் போராட்டம் செய்தது இங்கே குறிப்பிடத்தக்க
து)
ராஜகோபாலாச்சாரி(ராஜாஜி) 1938ல் 'ஹரிஜன ஆலயப்
பிரவேச சட்டம்' கொண்டுவந்தது உங்களுக்குத்
தெரியாது; ஏனென்றால் அவர் பார்ப்பனர்; ஆனால், அவர்
குலக்கல்விச் சட்டம் கொண்டுவர முயற்சித்ததைக்
கண்டித்து ஈவேரா நடத்திய ஒரே ஒரு போராட்டம்
உங்களுக்குத் தெரியும்.
சுப்ரமணிய சாமி பேசுவான்; பார்ப்பான் பார்ப்பான்
என்று குதிப்பீர்கள்; ஏனென்றால் அவன் ஒரு பார்ப்பனன்;
ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனும் நாராயணசாமியும்
பேசினால் அவர்கள் சாதியைச் சொல்லித்
திட்டுவது கிடையாது.
திராவிடத்தை எதிர்க்கும் தமிழ் இளைஞர்களே !
நீங்கள் அதே திராவிடம் ஊட்டிய 'பார்ப்பனருக்கு
எதிரான சாதிவெறிக்கு' இரையாகியுள்ளீர்கள்;
அதிலிருந்து வெளியே வாருங்கள்;
""""பார்ப்பனர் தமிழரே"""
மேலும் அறிய,
http://ta.m.wikipedia.org/wiki/அ._வைத்தியநாதய்யர்
http://kelvipadhil.blogspot.com/2013/07/blog-
post_5.html?m=1

https://m.facebook.com/photo.php?fbid=474189339351391&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

2 comments:

  1. நண்பரே.. இந்த பதிவை நான் கானொளியாக ஆவணம்படுத்தலாமா?

    ReplyDelete
  2. நண்பரே.. இந்த பதிவை நான் கானொளியாக ஆவணம்படுத்தலாமா?

    ReplyDelete