நமக்குத் தேவை
'விடுதலை நாள்'
'ஸ்வதந்த்ர தின்' அல்ல.
ஈழத்தில் தமிழர்களைக் கொன்றபோது ஹிந்தியா ஒன்றும் செய்யவில்லை;
அதில் ஒரு காரணம் உண்டு சிறிலங்கா அதற்கு ஒரு அண்டைநாடு;
ஒருவகையில் சரிதான்.
புலிகளை அழிக்க எல்லா உதவிகளையும் செய்தது ;
அதிலும் ஒரு காரணம் இருந்தது;
ஈழம் பிறந்தால் தமிழகமும் பிரிவினை கேட்கலாம்; ஒருவகையில்
சரிதான்.
இதுவரை சிறிலங்கா சுட்டும் வெட்டியும் தண்ணீரில் தள்ளியும் கொன்ற "தமிழக" மீனவனின் எண்ணிக்கை 600ஐத் தாண்டுகிறது;
காணாமல் போனோர் 200க்கும் மேல்;
கை, கால்களை இழந்து முடமானோர் 1700க்கும் மேல்;
படகைப் பறிகொடுத்தோர், நடுக்கடலில் வலையைப் பறிகொடுத்தோர், பொருட்களைப் பறிகொடுத்தோர், ஆடைகளை அவிழ்த்து மானக்கேடு அடைந்தோர் எண்ணிக்கையோ கணக்கிலடங்காது;
ஹிந்தியா ஒரு கண்டன அறிக்கையைக் கூட வாசித்ததில்லை;
இதற்கும் ஒரு காரணம் உண்டா என்று "ஒரு முக்கியமான காரணம்" உள்ளது.
பாகிஸ்தானும் ஹிந்தியாவும் பலமுறை மோதியுள்ளனர்;
ஆனால் சிந்து, ராவி, சட்லஜ், ஜீலம் போன்ற ஆறுகள் எந்த தடையும் இல்லாமல் எல்லைகடந்து பாய்கின்றன;
சீனாவுடன் ஹிந்தியாவுக்கு பல தகராறுகள் உள்ளன;
ஆனால் பிரம்மபுத்ரா,சிந்து,லோஹித்,சுபன்சிரி,லேங்சென் போன்ற ஆறுகள்
எல்லைகடந்து பாய்கின்றன;
ஆனால், 2கோடித் தமிழர்களின் குடிநீர், மற்றும்
உணவு காவிரியை நம்பி உள்ளது;
ஆனால், கர்நாடகம் அதை மறிக்கும் ஹிந்தியா வாயால்கூட ஒரு கண்டனம் தெரிவிக்காது; இதற்கும் "ஒரு முக்கியமான காரணம்" உள்ளது.
பங்களாதேஷுக்கும் மேற்குவங்கத்திற்கும் ஒரு தீஸ்த்தா நதிநீரைச் சொந்தம் கொண்டாடுவதில் தகராறு என்றால் ஹிந்தியப் பிரதமர் நேரில் சென்று தீர்த்துவைப்பார்; ஆனால், தமிழக அனைத்து கட்சி தீர்மானத்தைக் கொஞ்சமும் மதிக்காமல் சிறிலங்காவுக்குக் கச்சத்தீவைக் கொடுத்துவிட்டு அந்த தீவுக்கு போய்வர அளிக்கப்பட்டுள்ள உரிமைகூடக் கிடைக்காத தமிழர்கள் நீதிகேட்டால்
அதில் உங்களுக்கு உரிமையில்லை என்று ஹிந்தியா சொல்கிறது;
இதற்கும் "ஒரு முக்கியமான காரணம்" உள்ளது.
முல்லைப் பெரியாறை மறிக்கக்கூடாது என்று மத்ய அரசு சட்டம் போடும்;
அந்த சட்டம் இங்கே செல்லாது என்று கேரளா சட்டம் போட்டு முல்லைப்
பெரியாறு அணையை உடைக்க முயலும்.
ஆனால் ஹிந்தியா கேரள மாநில அரசைக் கலைத்து குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவராது;
இதற்கும் "ஒரு முக்கியமான காரணம்" உண்டு.
ஆந்திரா பாலாறை மறிக்கும், ஆந்திர மீனவர்கள் தமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழகக் காவல்துறையைத் தாக்கிவிட்டு சென்னை மீனவரைத் தாக்கி அவர்களது குடியிருப்புகளை நாசம் செய்துவிட்டு தெலுங்கு கொடியை நட்டுவிட்டுச்
செல்வார்கள்(2014ல்தான்);
ஒருவரும் வாய்திறக்கமாட்டார்கள்;
இதற்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு.
தமிழகத்தில் மத்ய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்
துறையில் ஆங்கிலம் நன்கறிந்த ஒரு சில தமிழர்கள்
நுழையும் முன்பே ஹிந்தியர்கள் தம் தாய்மொழியில்
தேர்வெழுதி எளிதாக நுழைந்துவிடுவார்கள்;
500பேர் உயிரைக் கொடுத்து 'தமிழுடன் 5%கூட
ஒத்துப்போகாத ஹிந்தியை' தமிழகத்தில் திணிக்கவிடாமல் காத்தார்கள்;
ஆனால், இன்று ஹிந்தி கட்டாயம் என்று மத்ய அரசு சட்டம்
போட்டுள்ளது;
இதற்கும் ஒரு முக்கியமான காரணம் உள்ளது.
2,00,000 ச.கீ.மி பரப்பளவு தமிழர்கள் வாழ்ந்த பகுதி தமிழகமான ஆக்கப்படாமல் அதில் காடு, மலை, வேளாண்மை,கனிம வளங்கள் நிறைந்த 70,000
ச.கீ.மி மற்ற மாநிலங்கள் எடுத்துக்கொண்டு,
1,30,000சகீமி நிலத்தை மட்டும் நமக்கு தமிழகம்
என்ற பெயரில் விட்டுவைத்துள்ளார்கள்;
திருவனந்தபுரம், மைசூர், பெங்களூர், திருப்பதி,
நெல்லூர், அந்தமான் என பல முக்கியமான தமிழருக்குச் சொந்தமான நகரங்கள் பறிபோயின;
1954ல் இப்படியாக மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது மற்ற
இனத்தவர்கள் கேட்ட தமிழகப் பகுதியெல்லாம் வாரி வழங்கியது மத்ய அரசு;
இதற்கும் "ஒரு முக்கிய காரணம்" உள்ளது.
இப்போது தமிழகத்தின் பேரரசனாக வடயிந்தியன்,
அவனுக்குக் கீழ் சிற்றரசர்களாக தமிழகத்தைச்
சுற்றி மாநில உரிமைகள் கொண்ட தென்னிந்தியர்கள்,
தமிழகத்தின் உள்ளே வாழும் வடயிந்தியனுக்குத்
தொழிலையும், தமிழகத்தின் உள்ளே வாழும்
தென்னிந்தியனுக்கு அரசியல் அதிகாரத்தையும்
தாரைவார்த்துவிட்டு ஓட்டாண்டியாகத் தமிழகத்
தமிழன்;
வீரத்துடன் போராடியும் உலகமே பார்த்துக்கொண்டிருக்க
பாதி கொல்லப்பட்டு மீதி நடைபிணமாக ஈழத்தமிழன்;
மற்ற மாநிலங்களில் எதிர்க்கப்பட்ட ஸ்டெர்லைட், கெயில், அணுவுலை எல்லாம் ஹிந்தியாவின் குப்பைத்தொட்டியான தமிழகத்தில் வந்துவிழுகின்றன; கூடியவிரைவில்
இனவழிப்பு இங்கே உறுதி;
இதற்கும் ஒரு முக்கியமான காரணம் உள்ளது.
அது என்னவென்றால் நமக்கு இனப்பற்று இல்லை என்பதுதான்.
இன்னமும் சொல்லிக்கோண்டே போகலாம்.
கதையா சொல்லிக்கொண்டிருக்கிறேன்
மெய்மறந்து படிக்க?
வேதனை ஐயா மனம் குமுறும் வேதனையைச் சொல்கிறேன்.
ஒரு இனத்தில் 5ல்3பேருக்கு உணவுக்கும்
பிழைப்புக்கும் மட்டும் வழிசெய்துவிட்டு
அவ்வினத்தை முடிந்த அளவு சுரண்டும் உத்தி மூலம்
தமிழகத்தில் இனவழிப்பு நடந்துவருகிறது;
5ல்2பேர் போராடுவார்கள் மீதி 3பேர் பேசாமல்
இருப்பார்கள்;
அந்த இரண்டுபேரும் களைப்படைந்து ஒன்று அழிவார்கள்
அல்லது எதிரிகளிடமே சரணடைவார்கள்;
பிறகு எஞ்சிய 3பேரை ஐந்தாகப் பிரித்து அதில்
5ல்3வருக்கு பிழைக்க மட்டும் வழிசெய்வார்கள்;
இது இன்றுநேற்றல்ல பலநூறாண்டுகளாக
நடந்துவருகிறது;
கோடிக்கணக்கில் இமயம் முதல் மூழ்கிய குமரிவரை இருந்த இனம்
இன்று சுருங்கி அழியும் தருவாய்க்கு வந்துவிட்டோம்.
சரி. நம்மைக் கொள்ளையடித்து அந்த இனமாவது வாழ்கிறதா என்றால் இல்லை;
அந்த இனத்தின் கொள்ளைக்காரர்கள் சிலர் அவ்வினத்தின் இனவுணர்வைத் தூண்டி வலிமை பெற்று நம் இனத்தின் சில கொள்ளையர்களை சேர்த்துக்கொண்டு நம்மைக்
கொள்ளையடிக்கிறார்கள்;
கொள்ளையடித்து நம் இனக்கொள்ளையருக்கு பத்தில் ஒரு பங்கையும் அவ்வின
மக்களுக்கு பத்தில் மூன்றுபங்கையும்
கொடுத்துவிட்டு மீதி ஆறுபங்கை அவ்வினக்
கொள்ளையர்கள் வைத்துக்கொள்கிறார்கள்.
மூன்றுவேளை உணவும் போதுமான அளவு(மட்டும்)
மாதவருமானமும் உள்ள 5ல்3பகுதியினரே!
உங்களை ஒன்று கேட்கிறேன்;
ஒரு பெண்ணை காதலிக்க வைக்கவும் கைப்பிடிக்கவும் உங்கள் வாழ்க்கையையே பணயம் வைக்க நீங்கள் தயங்குவதில்லை;
அவளுக்காக ஊரை எதிர்க்கவும், தாய்தந்தையை பிரியவும், உயிரைவிடவும் தயாராக இருக்கிறீர்கள்;
ஒரு பெண்ணுக்காக உயிரைவிடவும் தயாராக இருக்கும் நீங்கள் உங்களையும் உங்கள்
மூதாதையரையும் தாங்கிசுமந்து உங்களுத்தேவையான
அனைத்தையும் வழங்கிய தாய்மண்ணுக்காக ஏன் எதுவும் செய்யத் தயாராக இல்லை?
பெண்களையும் இதே கேள்வியைக் கேட்கிறேன்;
காதலிக்கும் ஆணைக் கரம்பிடிக்க வீட்டைவிட்டு ஓடிவரவும் தற்கொலை செய்துகொள்ளவும் தயாராக இருக்கும் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் சந்ததியினருக்கும் உணவு, உறைவிடம் என எல்லாமும் வழங்கப்போகிற இந்த மண்ணுக்காக ஏன் நீங்கள் எதுவும் செய்வதில்லை?
பெண்ணுரிமை கோரினால் மட்டும் போதுமா? தமிழரில் ஆண்கள் அளவுக்கு பெண்கள்
போராட்டசிந்தனை உடையவர்களாக ஏன் இல்லை?
பெற்றெடுத்தது வேண்டுமானால் தாயாக இருக்கலாம்;
ஆனால் கருவிலேயே நமக்கு தாய்வழி வந்த உணவும், நீரும், காற்றும் இந்த மண் வழங்கியது அல்லவா?
ஒரு பிஞ்சுக் குழந்தை எதிரில் அதன் தாயை "இது எங்க
அம்மா" என்று உங்கள் பக்கம் இழுத்துப்பாருங்கள் அந்தக்
குழந்தைக்கே கோபம் வரும்;
ஆனால், உங்களுக்கு தசையும்,எலும்பும், மூளையும், குருதியும் கொடுத்த உங்கள்
தாய்மண்ணை எவன் என்னசெய்தாலும் கவலையில்லை.
இதற்கும் மேல், 5ல்3பேர் இல்லை 5ல்5பேரையும் ஒழித்துவிட்டு ஒட்டுமொத்தமாகச் சுரண்டும் வெளிப்படையான இனவழிப்பு ஈழத்தில்
நடந்துவருகிறது;
இணையத்தில் தேடினால் ஆயிரக்கணக்கான இனவழிப்புச் சான்றுகள் இருக்கின்றன;
அவற்றினால் அந்த மக்களுக்கு காலணா பலன் கிடைத்ததா?
சரி இனத்திற்கும் மண்ணிற்கு என்ன தொடர்பு?
ஐயா, இனம் என்பது மண்ணின் தன்மைகளை உள்ளடக்கியடக்கியது;
ஆங்கிலேயன் நம்மை ஆண்டான் என்றால் நம் மக்கள்மீது ஆசைப்பட்டா வந்தான், இல்லை நமது வளங்களில் ஆசைபட்டுதான் வந்தான்;
ஒரு இனத்தின்மீது இன்னொரு இனத்தின் தொலையாதிக்கம்
(ஏகாதிபத்தியம்) என்பது அதன் மக்கள் மீது அல்ல அந்த மக்கள் வாழும் மண்ணின் மீதான அதிகாரத்தைக் கோருவதே ஆகும்;
இந்த மண்ணில் உள்ள தனிமங்கள்தான் நம் உடலிலும் உள்ளன;
இந்த மண்ணில் சுரந்த நீர்தான் நம் உடல் எடையில் முக்கால்வாசி;
இந்த மண்ணுக்கேற்ற நிறமும் உடலியக்கமும் குணங்களும் உடையும் பழக்கவழக்கங்களும் நம்மிடம் இருக்கின்றன;
வெப்பநாடுகளில் மக்கள் வணக்கம் சொல்கிறார்கள், குளிர்நாடுகளில் மக்கள்
கைகுலுக்குகிறார்கள்.
மண்ணுக்கு தொடர்பே இல்லாதவன் எப்படி அதைப் புரிந்துகொள்ளமுடியும்?
மண்ணை மண்ணின் மைந்தர் ஆள்வதுதான் உலக நடைமுறை;
அண்ணன் தம்பிகளுக்குள் சொத்துதகராறு என்றால் அடுத்தவன்
புகுந்து பங்கு கேட்பதா?
இப்படியெல்லாம் கேட்டால் உங்களுக்கு அறிவு வராது;
உங்களுக்கு அறிவு வர உங்கள் ஆண்மையையோ, அல்லது உங்கள் வீட்டுப் பெண்களின் நடத்தையையோ குத்திக் காட்டிப் பேசும்வரை உங்களுக்கு மானம் வராது.
சிங்களவன் அங்கே தமிழச்சிகளை கற்பழித்து மார்பறுத்து துன்புறுத்திக்
கொன்றதைச் சொன்னால் உனக்கு மானம் வருமா?
இல்லை வீரப்பனார் தேடுதல் வேட்டையில் சின்னாம்பதி என்ற மலை ஊரில் அத்தனைத்
தமிழ்ப்பெண்களையும் கற்பழித்தார்களே அதைச் சொன்னால் மானம் வருமா?
மலையாளிகள் தமிழச்சி மேலாடைகளையும் தாலிகளையும் அறுத்தெறிந்த தாலியறுத்தான்
சந்தை என்ற இடத்தை நினைவுபடுத்தினால் மானம் வருமா?
மதிப்புடன் வாழ்ந்த தேவரடியார்கள் தெலுங்கர் ஆட்சியில் தேவதாசிகளாக விபச்சாரம் செய்ய ஆக்கப்பட்டார்களே அதைச் சொன்னால் மானம் வருமா?
அல்லது ஹிந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில்
500க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்தார்களே
அதைக்குறிப்பிட்டால் மானம் வருமா?
உனக்கு உன் கூடப்பிறந்த அக்காதங்கை கற்பழிக்கப்பட்டாலாவது மானம் வருமா?
இப்படியே சும்மாயிருந்தால் அதுதான் நடக்கும்.
முடிவு செய்யுங்கள்.
(திருத்தப்படாத) தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடிக்கொண்டு தமிழனாக
தலைநிமிர்ந்து வாழப்போகிறீர்களா?
அல்லது 'ஜனகனமமன' என்று ரபீந்த்ரநாத் டெகூர் ஆங்கில மன்னன் ஐந்தாம் ஜார்ஜை புகழ்ந்து பாடிய மானங்கெட்ட பாடலைப் பாடிக்கொண்டு ஹிந்திய அடிமைகளாக இருக்கப்போகிறீர்களா?
https://m.facebook.com/photo.php?fbid=475448882558770&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
No comments:
Post a Comment