Friday, 1 August 2014

குஜராத் கலவரம்

//பயங்கரமும் படுகொலையும் தாண்டவமாடிய
குஜராத்திலிருந்து வருகிறேன். வெறுப்பாலும்
அச்சத்தாலும் நான் மரத்துப் போய்விட்டேன்.
என் இதயம்
நோயுற்று ஆன்மா நைந்து விட்டது.
குற்றவுணர்வையும் அவமானத்தையும்
சுமக்கும் வலிமையின்றி என் தோள்கள்
வலிக்கின்றன.
அகமாதபாத் கலவரத்தில் தப்பிப் பிழைத்த
அகதிகள் சுமார் 53,000 பேர். சாக்குக்
கூரைகளின் கீழே ஒண்டிக்கொண்டிருக்கும்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்….
அவர்களது முகத்தில் ததும்பும் துயரம்…
இப்படியொரு துக்கத்தை நான்
இதுவரை கண்டதில்லை.//
// பெண்களின் மீதான பாலியல்
வன்முறை வேறு எந்தக் கலவரத்தின் போதும்
இவ்வளவு கொடூரமாக நடந்ததில்லை.
குடும்ப உறுப்பினர்கள், சிறுவர் சிறுமிகளின்
கண் முன்னே பெண்களைக் கும்பல் கும்பலாகக்
கற்பழித்திருக்கிறார்கள்.
கற்பழிப்பு முடிந்தவுடன் அந்தப்
பெண்களை எரித்துக் கொன்றிருக்கிறார்கள்;
சுத்தியலால் மண்டையில்
அடித்தே கொன்றிருக்கிறார்கள்; ஒரு இடத்தில்
ஸ்குரூ டிரைவரால்
குத்தியே கொன்றிருக்கிறார்கள்.
அமன் சௌக் முகாமிலிருந்த பெண்கள்
கூறியவற்றைக்
கேட்கவே குலை நடுங்குகிறது. திடீரென
வீடு புகுந்த கும்பல், பெண்களின்
முன்னே தங்கள் ஆடைகளை ஒவ்வொன்றாய்க்
களைந்து விட்டு கையில் பயங்கரமான
ஆயுதங்களுடன் அம்மணமாக
நின்று பெண்களை நடுங்கச்
செய்து பணியவைத்திருக்கிறது.
அகமதாபாத்தில் நான் சந்தித்த
பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்கள், உயிர்
பிழைத்த மக்கள் ஆகிய அனைவரும்
கூறுவது இதுதான். ”குஜராத்தில்
நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத்
தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை”.
ஒரு இராணுவத் தாக்குதலைப் போல
எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது//
// கைகளில் முசுலீம்
குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம்
அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள்
வைத்திருந்தார்கள்… இந்து – முசுலீம்
கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் யார்,
அவர்களில் யாரைத் தாக்க வேண்டும்
என்பது வரை துல்லியமான விவரங்கள்
அவர்கள் கையில் இருந்தன//
நன்றி: http://www.vinavu.com/2013/03/14/
gujarat-genocide-harsh-mander/
( https://m.facebook.com/photo.php?fbid=416998918403767&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )

No comments:

Post a Comment