Friday 1 August 2014

பெரும்பாகன் கதை

பெரும்பாகன் கதை

ஓர் ஊரில் பெரும்பாகன் என்றொரு பெரியவர் இருந்தார்;
அந்த ஊரிலேயே சுற்றிவாழ்ந்த எவரையும் விட
தாராளமனம் படைத்தவராக இருந்தார்;
அவருக்கு மாறப்பன், தமிழ்க்கோ, திருவல்லன்
என்று மூன்று பிள்ளைகள் இருந்தனர்;
அவருக்கு பக்கத்து வீட்டில் ஜக்கம்மா,
கோண்டய்யா பெற்றோருக்கு ராஜூ என்ற மகன் இருந்தான்;
ஒரு நாள் விபத்தில் ராஜூ வின் பெற்றோர்
தவறிவிட்டனர்; மற்ற சொந்தக்காரர்கள் கண்டுகொள்ளமல்
விட்டுவிட பெரும்பாகன் ராஜூவை கவனிக்கலானார்;
கல்வி, பணம், இருப்பிடம் உட்பட அத்தனையும்
பெறச்செய்தார்; பெரும்பாகன் வயது முதிர்ந்த
நிலையில்
தமது சொத்துக்களை பங்கு வைக்கும்போது ராஜூ அதில்
பங்கு கேட்டான்; பெரும்பாகன்
அவனுக்கு புரியவைக்கமுயன்றார்; ஆனால் அவனோ "ஐயா,
நானும் உங்கள் பிள்ளை மாதிரிதான்; பெரிய
மனது படைத்த நீங்களே பிறப்பால்
ஏற்றத்தாழ்வு பார்க்கலாமா? உங்கள் மகன்களுக்கும்
எனக்கும் என்ன வேறுபாடு?" என்று கேட்டான்;
பெரும்பாகனின் மகன்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்; ராஜூ தான் செய்த
சின்னசின்ன உதவிகளையெல்லாம் சொல்லிக்காட்டினான்;
கடைசியில் ராஜூமேல் இரக்கம்கொண்டு ஒரு வீடும்
சிறிய காணிநிலமும் மட்டும் கொடுத்தனர்;
அது போதாது என்றான் ராஜூ; ஊர்மக்கள்
பெரும்பாகனுக்கே ஆதரவாக இருந்ததால்
வேறுவழியின்றி ஒத்துக்கொண்டான்;
தற்போது பெரும்பாகனின் சொத்துக்கள்
எல்லாமே ராஜூவின் வாரிசுகள் கையில் வந்துவிட்டது;
பெரும்பாகன் வாரிசுகள் கூலிகளாக அவர்களிடம்
வேலை செய்கின்றனர்; சிலர் ராஜூதான் பெரும்பாகனின்
மூத்தமகன் என்கின்றனர்; சிலர் ராஜூவும்
பெரும்பாகனும் ஒருதாய்ப் பிள்ளைகள் என்கின்றனர்;
ராஜூவின் வாரிசுகளோ பெரும்பாகனை ராஜூதான்
ஆதரவு காட்டி வளர்த்ததாகச் சொல்கின்றனர்;
பெரும்பாகன் வாரிசுகளோ எங்கள் சகோதரர்களிடம்தான்
வேலைசெய்கிறோம்; நாங்கள் ஒரே குடும்பம் என்கின்றனர்;
ஒரே குடும்பம் என்றால் அவர்கள் ஆண்டானாகவும் நீங்கள்
அடிமையாகவும் ஏன் இருக்கிறீர்கள் ? அவர்களிடம்
மாடமாளிகையும் கூடகோபுரமும்
இருக்கும்போது உங்களிடம் கோவணம் மட்டும்
எஞ்சியிருக்கிறதே என்று கேட்டேன்; அவர்கள்
சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
https://m.facebook.com/photo.php?fbid=417503455019980&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment