ஷாங்காயிலிருந்து பெர்லின்
இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகும் ஜெர்மனி வல்லரசாகத் திகழக் காரணம் என்ன?
ஒரு நிகழ்ச்சியின் மூலம் விளக்கவா?
ஸார் (saar) என்ற பகுதி பிரான்சின் எல்லையைத் தொட்டவாறு இருக்கும் ஒரு ஜெர்மானியப் பகுதி;
நிலக்கரி வளமிக்கது இந்தப் பகுதி.
முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது; வழக்கம்போல போரில் தோற்ற மக்களின் தாய்நில வளங்களை வென்ற மக்கள் பங்குபோட்டுக் கொண்டனர்;
15ஆண்டுகளுக்குப் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியோடு ஸார் பகுதி ஜெர்மனியிடமிருந்து பறிக்கப்பட்டது;
15 ஆண்டுகள் வென்ற நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது; போரில் வென்ற பிரான்சு நிலக்கரியை தாராளமாக அள்ளிக்கொண்டிருந்தது;
அப்பகுதி ஜெர்மானியர்கள் ஓரளவு வேலைவாய்ப்பு கிடைத்து நோடிந்துபோகாத வாழ்க்கையைப் பெற்றனர்;
ஆனால் ஜெர்மனியின் நிலையோ மிக மோசமாக இருந்தது; அங்கே போருக்கு முன் ஒருவரின் ஒரு திங்களுக்கு(மாதத்திற்கு) போதுமான வருமானம், போருக்குப் பிறகு ஒரு நாளுக்குக்கூட போதவில்லை;
நாடே சின்னாபின்னமாகிக் கிடந்தது;
முதல் உலகப் போரில் தாய்மண்ணைக் காக்க ஆஸ்திரியா(அதுவும் ஜெர்மானிய நாடுதான்) நாட்டிலிருந்து வந்து போர்வீரனாகச் சேர்ந்து போராடிய ஹிட்லர் நாஜிக் கட்சியின் தலைவனாக ஆட்சியைப் பிடித்து ஜெர்மனியை மெல்ல மெல்ல சீர்செய்து கொண்டிருந்தார்;
பதினைந்து ஆண்டுகள் முடியும் தருவாயில் ஸார் பகுதியில் பொதுவுடைமையாளர்களும்(கம்யூனிஸ்ட்), கத்தோலிக்கர்களும், பிரான்சு முதலாளிகளும், ஸாரை ஆண்ட 'வென்ற நாடுகளின் கூட்டரசின்' அனைத்து அரசியல் இயந்திரங்களும் ஜெர்மானிய மக்களிடம் வாக்கெடுப்பின் மூலம் ஜெர்மனியுடன் இணையவேண்டாம் என்று தீவிர பரப்புரை செய்தனர்;
நாஜிக் கட்சியினர் யூதர்களை ஒடுக்கிவருவதைக் காட்டி அவர்கள் பேச்சைக் கேட்கவேண்டாம் என்றும் கூறினர்;
ஜெர்மனி பொருளாதாரத்தில் சீர்குலைந்திருப்பதையும் ஸார் ஜெர்மனியுடன் இணைந்தால் வறுமையை சந்திக்கவேண்டிவரும் என்றும் சுட்டிக்காட்டினர்;
மறுபடியும் போர் வந்தால் அழிவு நேரிடும் என்று கணித்துச் சொன்னார்கள்;
வென்ற நாடுகளின் கீழிருந்தால் தனி நாடாக அமையலாம் என்றும் ஆசை காட்டினர்.
நாஜிக் கட்சியினரால் வேறொரு ஆட்சியின் கீழ் இருக்கும் ஸார் மக்களிடம் நேரடியாகப் பெரிய அளவில் பரப்புரை செய்யமுடியாத நிலை.
வாக்கெடுப்பு நாளும் வந்தது;
யாருமே எதிர்பார்க்காத வண்ணம் 90% பேர் ஜெர்மனியுடன் இணைய வாக்களித்தனர்;
ஸார் பகுதியிலிருந்து வாழ்க்கை தேடி வெளியேறிய ஜெர்மானியர் பலரும் பெருமுயற்சி செய்து பல்வேறு வெளிநாடுகளில் இருந்து வந்து வாக்களித்தனர்;
நோயாளிகள் நாஜிக்கட்சியினரின் உதவியுடன் சென்று வாக்களித்தனர்;
எடுத்துக்காட்டாக, ஒரு வயதான பெண்மணி ஷாங்காயிலிருந்து பெர்லின் வந்தார்;
1935ல் இது 16நாட்கள் தொடர்வண்டிப் பயணமாகும்(!!);
அவர் பெர்லினுக்கு வாக்கெடுப்பின் கடைசிநாளில் வந்துசேர்ந்தார்;
நாஜிக்கள் உடனடியாக வானூர்தி மூலம் ஸார் பகுதிக்கு அழைத்துச்சென்று வாக்குபோட வைத்தார்கள்.
1935 மார்ச் 1, ஸார் பகுதி ஜெர்மனியுடன் மீண்டும் இணைந்தது;
இணைந்த பிறகு வென்ற நாடுகளின் கூட்டணி சொன்ன அத்தனையும் நடந்தது;
வறுமை வந்தது; நாஜிக்களின் ஆதரவாளர் என்ற விமர்சனம் வந்தது; போர் வந்தது; அழிவு வந்தது; அத்தனையும் அறிந்துதான் அவர்கள் ஜெர்மனியுடன் இணைந்தனர்.
கதை இங்கே முடியவில்லை; இரண்டாம் உலகப் போரில் மீண்டும் ஜெர்மனி தோற்றது;
முதல் உலகப் போரைவிட மிகப்பெரிய சேதம்;
அப்போதும் ஸார் பகுதி ஜெர்மனியிடமிருந்து பறிக்கப்பட்டது;
1947-1956 காலகட்டத்தில் தன்னாட்சி பெற்ற பகுதியாக பிரான்சு அரசின் கீழ் வந்தது;
அதே பழைய நிலை; ஜெர்மனி சின்னாபின்னமாகிக் கிடந்தது;
1955ல் 'மேற்கு ஐரோப்பிய கூட்டணியின்' கீழ் ஸார் பகுதி தனி நாடாக அறிவிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது;
68% ஜெர்மானியர் தனிநாடு வேண்டாம் என்று (ஜெர்மனியுடன்தான் இணைவோம் என்று) வாக்களித்தனர்;
1957ல் ஸார் பகுதி மீண்டும் தனது தாய்நிலத்துடன் இணைந்தது; வறுமையைச் சந்தித்தது; இன்னொரு போரைச் சந்திக்கவும் ஆயத்தமாக இருந்தது.
வென்ற நாடுகள் தூக்கிப்போட்ட எலும்புத்துண்டுகளுக்காக ஜெர்மானிய மக்கள் வாலாட்டவில்லை.
வல்லரசுகளின் அத்தனை தந்திரங்களும் ஜெர்மானியரின் இன்பற்றுக்கு முன்னே தோற்றுப்போனது.
ஜெர்மானியர் தமது தாய்நாட்டை வல்லரசாக அமைத்துக்கொண்டதில் என்ன வியப்பு?
https://m.facebook.com/photo.php?fbid=486678444769147&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr&refid=13
No comments:
Post a Comment