Wednesday, 27 August 2014

கோடியில் ஒருவன் -இறைமறுப்பாளன் (பகுதி-1/2)

கோடியில் ஒருவன்
இறைமறுப்பாளன்
!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!;!
ஒரு இடர்(விபத்து) நடந்தது;
ஒரு சரக்குந்தும்(லாரி) மகிழுந்தும்(கார்)
நேருக்கு நேர் மோதிக்கொண்டன;
தவறு என்னவோ சரக்குந்து ஓட்டுனர் மீதுதான்;
மகிழுந்தில் பயணம் செய்தோர் நான்குபேர்; ஒருவர்
நிகழ்விடத்திலேயே
உயிரிழந்தார், ஒருவர்
படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர
முயற்சிக்குப்
பிறகு உயிர்பிழைத்தார்; ஒருவர் இருகைகளையும்
இழந்தார்; ஒருவருக்கு சிறிய
காயம் மட்டும் பட்டது.
சிறிய காயம் அடைந்தவரைக் கேட்டால் 'கடவுள்
காப்பாற்றினார்' என்றார்;
இருகைகளையும் இழந்தவர் 'என் உயிரைக் கடவுள்
காப்பாற்றினார்' என்றார்;
படுகாயமடைந்து பிழைத்தவர் 'கடவுள் அருளால்
பிழைத்தேன்' என்றார்;
உயிரிழந்தவரின் குடும்பத்தினர் 'அவரைக் கடவுள்
அழைத்துக்கொண்டார்'
என்றனர்;
சரக்குந்து எண் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்ட
ு சரக்குந்தின் உரிமையாளர்
மீதும் ஓட்டுநர் மீதும் வழக்குபோடப்பட்டது.
இப்போது சிந்தியுங்கள்;
பிழைத்தவனைக் காப்பாற்றியது கடவுள் என்றால்
உயிரிழந்தவனை சாகடித்தது யார்?
இடரிலிருந்து பிழைக்கவைத்தது கடவுள் என்றால் இந்த
இடரை நிகழ்த்தியது யார்?
உயிர்பிழைத்தவர் கடவுளுக்கு நேர்த்திக்கடன்
செலுத்துவது சரி என்றால்
கைகளை இழந்தவன் கடவுளைக் குற்றம்சாட்டவேண்டும்?
சரக்குந்து ஓட்டுநர் மீது ஏன் வழக்கு போடுகிறான்?
நல்லது நடந்தால் அதற்கு கடவுள் காரணம்,
கெட்டது நடந்தால் அதற்கு மட்டும்
மானிடனே காரணமா?
*எல்லா சமயக்காரர்களும் இதையே பின்பற்றுகிறார்கள்;
கடவுள் எனக்கு எல்லாம் கொடுத்தார்
என்று நன்றி சொல்வார்கள்;
உங்களுக்கு வாழ்க்கை கிடைத்ததற்காக
நன்றி செலுத்தும் நீங்கள் எதுவுமே
கிடைக்காத மற்றவனுக்காக கடவுளைக் குற்றம்சாட்டியத
ு உண்டா?
இது தன்னலமன்றி வேறென்ன?
*அது நடக்கவேண்டும் இது நடக்கவேண்டும்
என்று வேண்டுகிறீர்கள்;
வேண்டுதலால் என்ன பயன், நடப்பது எல்லாம் ஏற்கனவே
தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்கிறீர்கள்; அப்புறம்
எப்படி உங்கள்
வேண்டுதல்கள் அதை மாற்றும்?
*கடவுள் என்று ஒருவர் இல்லை என்று சொன்னால்
அதை மறுக்க இரண்டு செயல்களை
செய்வார்கள்;
ஒன்று தொடர்பே இல்லாத
ஒன்றை கொண்டுவந்து அதை நிறுவச்சொல்வார்கள், அல்லது
எங்கேயோ எப்போதோ நடந்த அரியநிகழ்வை சான்றாகக்
காட்டுவார்கள்;
அதையும் தீர்த்துவிட்டால் மேலும்
எதிர்கேள்வி கேட்பார்களேயன்றி சிந்திக்க
மட்டும் செய்யமாட்டார்கள்.
ஒருவர் கூறுகிறார்; 'நீங்கள் புத்தரைப்
பார்த்ததேயில்லை; ஆனாலும் அவர்
இருப்பதாக நம்புகிறீர்களே அதேபோல நானும்
கடவுளைப் பார்க்காமலேயே
நம்புகிறேன்' என்றார்;
எனது பதில் "நான் புத்தர் 'இருந்தார்' என்றுதான்
நம்புகிறேன்
'இருக்கிறார்' என்று நம்பவில்லை; என் வாழ்க்கையில்
நடக்கும் எந்த
நிகழ்வையும் நான் புத்தருடன் தொடர்புபடுத்துவ
தில்லை; சரி நான் அவரை
நம்புவதை விட்டுவிடுகிறேன்; நீங்களும்
கடவுளை நம்புவதை விட்டுவீர்களா?".
*கடவுளை வேண்டியதால் நோய் சரியானது என்கிறீர்கள்;
சரி தீராத
நோயாளிகளையெல்லாம் உங்களிடம் அழைத்துவந்தால்
வேண்டுதல் செய்து அதைச்
சரிசெய்துவிடுவீர்களா?
*ஒரு சமயத்தைப் பின்பற்றுபவன் பிற சமயத்தின்
கடவுள்களையும் சடங்குகளையும்
நம்பிக்கைகளையும் நம்புவது கிடையாது; அப்படிப்
பார்த்தால் ஒரு
சமயத்தானைப் பொறுத்தவரை மற்ற சமயத்தவன்
இறைமறுப்பாளன்; மற்ற சமயத்தானைப்
பொறுத்தவரை இவன் இறைமறுப்பாளன்.
*எல்லா சமயத்தானும் அவன் சமயம் உலகம் முழுவதும்
வாழ்பவருக்கானது
என்கிறார்; எந்த ஒரு சமயத்தின் நூல்களும் உலகம்
முழுவதும் தொட்டு
எழுதப்படவில்லை; எந்த ஒரு சமய நூலிலும்
பனிக்கரடியும் எஸ்கிமோ மக்களும்
வருவதில்லை; கங்காருவும் ஆஸ்திரேலியப்
பழங்குடிகளும் வருவதில்லை; சனிக்
கோளைச் சுற்றியிருக்கும் வளையம் பற்றியோ ஆழ்கடலில்
வாழும் ஜெல்லி மீன்கள்
பற்றியோ உலகின் வேறொரு மூலையில் இருக்கும் மக்கள்
பேசும் மொழிபற்றியோ
வருவதில்லை;
சமயநூல்களில் வரும் மானிடரும், மரங்களும்,
விலங்குகளும், இடங்களும் ஒரு
குறிப்பிட்ட பகுதியில் உள்ளவையே; அந்த நூல்
எப்படி உலக மக்கள்
அனைவருக்குமான சமயநூல் ஆகும்?
*சமயம்(மதம்) என்பது ஏன் ஏற்படுத்தப்பட்ட
து தெரியுமா?
கண்ணெதிரே நடக்கும் கொடுமையை மானிடனின் உள்ளம்
சகித்துக்கொள்ளாது; அது
தவிக்கும்; அந்த தவிப்பை உதறித்தள்ள ஏற்படுத்தப்பட்ட
தே சமயம்;
'அவன் சாகிறானா அது அவன் தலைவிதி அவன் செய்த
தீமைகளுக்காகவே அவன்
துன்படுகிறான் நீ அதைப் பற்றிக் கவலைப் படாமல்
கடவுளை நினைத்துக்கொண்டு
பத்திரமாக மேலுலகம் சென்றுவிடு'
என்று கற்றுத்தருகிறது;
*அவரவர் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்பத்தான்
கூலி கிடைக்கிறது என்றால்
நிலநடுக்கம், ஆழிப்பேரலை, புயல் போன்ற
இயற்கை சீற்றங்களால் கொல்லப்பட்ட
மக்கள் அனைவருமே தீவினை செய்தவர்களா?
இன்னொன்று 'நல்லது இறுதியில் வெல்லும்' என்பது,
அமெரிக்க நாடுகளிலும் ஆஸ்திரேலிய நாடுகளிலும்
மற்றும் பல தீவுகளிலும்
ஐரோப்பியர் பூர்விகமாக வாழும் மக்களைப்
பூண்டோடு கொலைசெய்துவிட்டு
குடியேறி இன்றும் வாழ்வாங்கு வாழ்ந்துவருகின்றனர்;
அமெரிக்காவில்
1500லிருந்து 1900வரை ஆப்பிரிக்காவிலி
ருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு
காலம் முழுக்க ஊதியமே இல்லாமல் இருவேளை மட்டும்
உணவு கொடுக்கப்பட்டு ஒரு
நாளைக்கு 20மணிநேரம் உழைத்து உழைத்தே செத்தவர்கள்
மட்டும் ஏறத்தாழ
5கோடிபேர்;

No comments:

Post a Comment