Saturday 16 August 2014

வவுனியாப் படுகொலை

வவுனியாப் படுகொலை

1985ல் இதே ஆகஸ்ட் 16ம் நாள்,

வவுனியா மாவட்டத்தில் தோனிக்கல் என்ற சிற்றூரில்
இருந்த சிங்களவர் முந்தைய நாளே வெளியேறினர்;
தமிழ் மக்களுக்கு ஏதோ நடக்கப்போவது புரிந்தது;
ஆற்றைக் கடக்க இருந்த
பாலத்தை வெடிவைத்து தகர்த்துவிட்டு சிங்கள
படை அச்சிற்றூரைச் சுற்றிவளைத்தது;
மக்களை பொதுஇடத்தில் கூடச்சொல்லி அதில் சிலரைத்
தேர்ந்தெடுத்து சுட்டுக்கொன்றனர்; சிலர் மறைந்த
ஈழத்தலைவர் சுந்தரலிங்கம் அவர்களின் பண்ணை வீட்டில்
கிட்டத்தட்ட 50 தமிழ்மக்கள் ஒளிந்துகொண்டிருந்தனர்;
அவர்களையும்
கண்டுபிடித்து அழைத்துவந்து சுட்டுக்கொன்றனர்;
சுடப்பட்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்; புலிகள்
இயக்கம் அப்போது வலுப்பெற்றுவந்த காலம்;
உறவினர்களிடம் இறந்தவர்களின் உடலை ஒப்படைக்காமல்
அவர்களை உடனடியாக அந்த
சிற்றூரை விட்டு வெளியேறச் சொன்னார்கள்; குடும்ப
உறுப்பினர்கள் கண்முன்னே செத்துக்கிடக்க
அங்கிருந்து அழுதபடி தமிழ்மக்கள் வெளியேறினர்;
பாவற்குளம், கம்பைமாடி, கத்திப் புலவை,
மூன்றுமுறிப்பு, சூசைப் பிள்ளையார்குளம்,
கோவில்குளம் என மொத்தம் 7சிற்றூர்களிலிர
ுந்து இதே பாணியில் பொதுமக்களுக்கு மரண அச்சம்
ஏற்படுத்தி வெளியேற்றிவிட்டு அந்த சிற்றூரில்
வீடுகளில் இருக்கும் உடைமைகளை சிறிலங்காப்
படையினர் கொள்ளையடித்து பங்குபோட்டுக்
கொண்டு இறநுதோர் உடல்களை மொத்தமாகப்
போட்டு எரித்துவிட்டு சிங்களமக்களை அழைத்துவந்து குடியேற்றி வீடுகளையும்
நிலங்களையும் அவர்களுக்குப் பங்குபோட்டுக்
கொடுத்தனர்;
அவர்களுக்கு அரசு ஆவணங்களும் பாதுகாப்பும்
உறுதிசெய்யப்பட்டு அச்சிற்றூர்கள் நிரந்தர சிங்கள
சிற்றூராக ஆக்கப்பட்டது.

(புலிகள் தாய்நிலத்தை மீட்டபோது வவுனியா நகரம்
தவிர்த்து வவுனியாவுக்கு மேலே வடக்குப்
பகுதி முழுக்க புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது;
மேற்கிலிருந்து வரும் மன்னார் வீதி ஏ30 மட்டும்
சிறிலங்கா கட்டுப்பாட்டிலும் அதன் இருபுறமும்
பெரிய நிலப்பகுதி புலிகளின் கையிலும் இருந்தன;
ஏ30 க்கு கீழே யாழ்-கண்டி வீதியான ஏ9 வுடன் ஏ30
இணையும் இடம் வரை புலிகள் எல்லை விரிந்திருந்திர
ுந்தது; மேலே சொன்ன சிற்றூர்கள் வவுனியாவுக்குத்
தெற்கே அந்தப் பகுதியில்தான் இருந்தன; அனேகமாக
அச்சிற்றூர்கள் மீண்டும் தமிழர்
கைக்கு வந்திருக்கவேண்டும்;
புலிகள் வவுனியா நகரத்தை மூன்றுபக்கம்
சூழ்ந்திருந்தனர்;கொஞ்சம் காலம்சென்றிருந்தால்
அதையும் மீட்டிருப்பார்கள்.
இப்போதுதான் எல்லாமே போய்விட்டதே?????!!!!!!!)

https://m.facebook.com/photo.php?fbid=477534289016896&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&_rdr

No comments:

Post a Comment