Showing posts with label சுதந்திர தினம். Show all posts
Showing posts with label சுதந்திர தினம். Show all posts

Wednesday, 14 August 2024

இந்தியா உடைவது ஏன் தேவை

இந்தியா உடைவது ஏன் தேவை?!

 குழந்தையிலேயே பள்ளிகளில் மூளைச்சலவை செய்யப்பட்டு "இந்தியா ஒற்றை நாடு" என்று நம்ப வைக்கப்பட்டு போலி தேசபக்தி ஊட்டப்பட்ட அப்பாவி இளைஞர்கள் ஒரு நிமிடம் இதைப் படியுங்கள்!
 இன்று நமக்கு இருப்பது இரண்டே வழிதான்!
ஒன்று இந்தியா என்கிற பெயரும் அமைப்பும் வாழ வேண்டும்
அல்லது அந்த அமைப்பில் சிக்கியுள்ள 140 கோடி மக்கள் வாழ வேண்டும்!
 இதில் நாம் எந்த வழியைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?!
 இந்தியா என்கிற அமைப்பு நீடித்தால் அதன் பலன் சில லட்சம் எண்ணிக்கையுள்ள உயர்தட்டு ஹிந்தியர்களுக்கு மட்டுமே கிடைக்கும்! 
 இந்த அமைப்பை உடைத்து அதில் இருக்கும் இனங்களுக்கு நாடுகளை கொடுத்துவிட்டால் அந்த மாபெரும் அதிகாரப் பகிர்வு கோடிக்கணக்கான மக்களுக்கு அனைத்து வகையிலும் பலனளிக்கும்!
 வறுமை ஒழியும்! கல்வி கிடைக்கும்! பொருளாதாரம் மேம்படும்! வாழ்க்கைத் தரம் உயரும்! 
 ஆங்கிலேயர் காலத்தில் கூட இந்திய மன்னர்கள் ஆண்ட சமஸ்தானங்களில் காந்தி எந்த போராட்டமும் செய்யவில்லை!
 அன்று சமஸ்தானங்களுக்கு கிடைத்த அதிகாரப் பகிர்வு தரப்படும் என்றுதான் எல்லா இனங்களும் போராடியது!
 ஆனால் 1947 இல் அமைந்த இந்திய அரசமைப்பு அப்படியே ஆங்கிலேய சுரண்டல் அமைப்பின் நகலாக இருக்கிறது!
 அன்று தரப்பட்ட சில அதிகாரங்கள் கூட ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு விட்டன!
 நம் முன்னோர்கள் கனவு கண்ட இந்தியா இது இல்லை!
 அன்று நாம் எதிர்பார்த்து போல நமக்கு நாடு (அதாவது state) கிடைத்தது ஆனால் நாட்டுக்குரிய எந்த அதிகாரமும் இல்லாத நிர்வாகம் தரப்பட்டுள்ளது!
நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்!
 தமிழகத்தின் பார்வையில் பார்த்தால் மேலே ஹிந்திய மேல்தட்டு வர்க்கம் அது அப்பாவி ஹிந்திய மக்களை ஒன்று திரட்டி தென்னகத்தை ஒடுக்க அதை எதிர்க்காத தென்னைத்தார் இழப்பை ஈடுகட்ட தமிழகத்தை ஒடுக்குகின்றனர். தமிழக மக்கள் ஹிந்திய பொதுமக்களை விட மூன்று மடங்கு ஒடுக்குதலுக்கு ஆளாகின்றனர்.
 இது எல்லாமே இந்தியா என்கிற பெயரால் நடக்கிறது!
 இதன் மூலம் பெறப்படும் கொழுத்த லாபம் ஹிந்திய மேல்தட்டு வர்க்கத்தின் கருப்புப் பண சேமிப்பில் குவிகிறது.
 தமிழகத்தின் உள்ளேயும் ஒரு இந்திய சுரண்டல் அமைப்பு உள்ளது.
 இதில் மேல்தட்டு அதிகார வர்க்கம் கீழ்த்தட்டு பெரும்பான்மை மக்களை ஒடுக்கிறது. சாதி பேதமில்லாமல் தமிழக அடித்தட்டு மக்கள் நான்கு மடங்கு ஒடுக்கப் படுகின்றனர். இதற்குக் காரணம் இந்திய அமைப்பு மேல இருப்பதுதான்.
 இதற்கு வர்ணாசிரமம், பார்ப்பனீயம் என்று வெவ்வேறு பெயர் வைத்து திசைதிருப்பு கின்றனர்.
 உண்மையான ஆரியம் இன்றைய இந்திய அரசமைப்புதான்!
 இந்தியா என்கிற அமைப்பை உடைத்து மொழி அடிப்படையில் நாடுகளை அமைத்து அம்மொழி பேசும் இனங்களுக்கு தன்னாட்டை ஆளும் உரிமையையும் கொடுத்துவிட்டால் சில மோதல்கள் எழுந்தாலும் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்ந்துவிடும்! 95% இந்திய குடிமக்களுக்கு நன்மையே நடக்கும்!
 இந்தியாவை உடைக்காமல் திருத்திவிடலாம் என்பது கனவிலும் நடக்காது!
 இது ஒரு தானியங்கி அமைப்பு (automatic system) போன்றது!
 மனிதர்கள் மாறினாலும் அமைப்பு மாறாது!
 இந்தியா கையெழுத்து இட்டுள்ள சர்வதேச ஒப்பந்தங்கள் படி தன் குடிமக்களுக்கு பிரிந்துபோகும் உரிமை தரவேண்டும்!
 ஆனால் அதை மீறி பிரிவினைவாத தடுப்பு சட்டம் போட்டு நமக்கு பிரிவினை பேசும் உரிமையை முதலிலேயே பறித்துவிட்டனர்.
 கைக்கெட்டும் தூரத்தில் ஈழத் தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு கடைசியில் கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட்டபோது கூட நம்மால் சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாமல் நின்றோம்!
 பாராட்ட ஒரு காரணமும் இல்லாமல் இந்த நாட்டைப் போற்றிப் பாடு என்றால் எப்படி முடியும்?! 
 ஆண்டுக்கு ஒருநாள் கூடி கொடியேற்றி கையில் ஒரு இனிப்பை தந்துவிட்டால் தேசப்பற்று ஆகிவிடுமா?!
மீதி 364 நாட்களில் ஏன் இந்த உணர்ச்சி காணப்படுவதில்லை!?
ஏனென்றால் இது உண்மையான உணர்ச்சி இல்லை!
 தமிழின இளைஞர்களே சிந்திப்பீர்!
உங்களுக்கு இந்தியா என்கிற பெயர் வேண்டுமா?! அல்லது இந்திய குடிமக்கள் நலம்பெற வேண்டுமா?!
 இந்தத் துணைக்கண்டத்தில் மூத்த இனமான தமிழினம் இந்தியாவை உடைத்து இந்திய மக்களை காப்பாற்ற முதல் அடி எடுத்துவைக்கட்டும்!
 இன்று இந்தியன் என்று அதிக உணர்ச்சி காட்டுபவனை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள் அவன்தான் இதன் பலனை அனுபவிப்பவன்! 
 அவனைத்தான் நாம் எதிர்க்க வேண்டும்! 
அனைவருக்கும் "மீண்டும் அடிமைப்பட்ட நாள்" ஆறுதல்கள்! 

எழட்டும் தமிழினம்!
உடையட்டும் ஹிந்தியா!
மீளட்டும் துணைக்கண்ட இனங்கள்!
அமைப்போம் தனித் தமிழர்நாடு!

Tuesday, 15 August 2023

சக் தே இந்தியா

சக் தே இந்தியா

 ஹிந்தியில் மிகச்சிறந்த தேச பக்தி படம் 'சக் தே இந்தியா'.
 அதுவரை முழுக்க விளையாட்டை மையமான வைத்து  எந்த திரைப்படமும் வந்ததில்லை. இந்த படம் வந்த உடனேயே கிரிக்கெட் மாயையை உடைக்க முற்பட்டது.
 இதில் கேட்பாரற்றுக் கிடக்கும் மகளிர் ஹாக்கி அணியை மேம்படுத்தி கோப்பை வெல்ல வைப்பார் அதன் கோச்சாக வரும் ஷாருக் கான்.
மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் முதல் காட்சி இளம் வீராங்கனைகள் வரிசையாக நிற்பார்கள். சாருக் கான் வருவார். ஒவ்வொருவரும் ஒரு அடி முன்வந்து அறிமுகப்படுத்திக் கொள்ளும் காட்சி வரும். ஒவ்வொருவரும் neha from gujarat மாதிரி தனது பெயரையும் தனது மாநிலத்தின் பெயரையும் கூறுவார்கள்.  அப்பொழுது அவர் நீங்கள் எல்லோரும் இந்தியர்கள் எனவே நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று கூறுமாறு பணிப்பார்.
 உடனே அவரவர் தமது பெயரையும் தான் இந்தியாவில் இருந்து வருவதாகவும் முழு வேகத்துடன் கூறுவார்கள். 
பிறகு அந்த வீராங்கனைகள் தத்தமது இனத்துடன் தங்குவதை தடுப்பார்.
அதாவது  இரண்டு தமிழ்நாட்டு வீராங்கனைகள் ஒரே அறையில் தங்கியிருந்தால் அவர்களை பிரித்து வெவ்வேறு மாநில வீராங்கனைகளுடன் அறையில் தங்கும்படி செய்வார்.
 இதனால் வேற்றுமைகள் மறைந்து அவர்கள் இந்தியர் என்ற உணர்வுடன் விளையாடி கோப்பையை வெல்வதாக படம் செல்லும்.

  ஆக தேசிய இனங்களின் தனித்தன்மையை அழித்து புதிதான (போலியான) இந்தியா என்கிற அடையாளத்தின் கீழ் இணைப்பதன் மூலமே இந்த நாடு வெற்றி பெறும் என்பது ஆளும் வர்க்கத்தின் மனநிலை.
 தேசிய இனங்களின் தனித்தன்மையை பேணுவது அவர்கள் மொழியை கலாச்சாரத்தை பாதுகாப்பது இதெல்லாம் தேச பக்திக்கு எதிரான சிந்தனை என்பது தான் இந்தியாவை ஆளும் வர்க்கத்தின் உறுதியான நிலைப்பாடு .

நீங்கள் தமிழன் என்றால் உங்கள் மொழியையும் கலாச்சாரத்தையும் உரிமைகளையும் இந்தியா காவு கேட்கிறது  என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்!

  அதையெல்லாம் விட்டுக் கொடுக்க நீங்கள் தயாராக இருந்தால் தாராளமாக இந்தியன் என்று கூறிக் கொள்ளலாம்!

தமிழனாகவும் இருப்பேன் இந்தியனாகவும் இருப்பேன் என்பது கடுகளவும் சாத்தியமில்லை.

  இரண்டுமே நேர் எதிரானது!
இரண்டில் ஏதோ ஒன்று தான் உங்கள் அடையாளம்!

ஆனால் விபரம் தெரியும் முன்பே குழந்தைகளை சுதந்திர தினம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மூளைச்சலவை செய்து அவர்களை இந்தியர் என்று நம்ப வைத்து தேசபக்தியின் பெயரால் அவர்களது மொழியையும் இனத்தையும் வளத்தையும் தியாகம் செய்யச்சொல்லி கேட்கிறது இந்திய தேசம்!

  இப்படி தேசிய இனங்களின் தனித்தன்மையை விட்டுக்கொடுக்கச் சொல்வதில் இந்திய தேசியம், இந்துத்துவம், இஸ்லாமியம், தலித்தியம்,  கம்யூனிசம், திராவிடம் என அனைவருமே கைகோர்ப்பார்கள் !

 இந்த இந்திய தேசிய சிந்தனை வலிந்து திணிக்கபடுவதற்கும் ஒரு கன்னிப் பெண் கற்பழிக்கப்படுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை!

Wednesday, 15 August 2018

ஆகஸ்ட் 15 சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆகஸ்ட் 15 சிறப்பு நிகழ்ச்சிகள்

ஏதுமறியா குழந்தைகளைக் காலையில் வரச்சொல்லி
வரிசையில் நிறுத்தி
புரியாத மொழியில் பாடி
மிட்டாய் கொடுத்துவிட்டு
வெறுமனே ஒரு உணர்வற்ற சடங்காக சுதந்திரத்தை கொண்டாடிவிட்டு போகும் கேவலமான நாடுகளில் ஹிந்தியா முதன்மையானது.

சிறுவனாக நெஞ்சிலே கொடியைக் குத்திக்கொண்டு ஏன் யாருக்குமே நாட்டுப்பற்றில்லை என்று கவலைப்பட்ட காலமுமுண்டு.

நான் என்ன செய்வேன்?!
நல்லது கெட்டது தெரியுமுன்னமே "இந்தியா என் தாய்நாடு" என்று என்னிடம் உறுதிமொழி வாங்கிவிட்டனர்.

குழந்தைகளை இவ்வாறு மூளைச்சலவை செய்துதான் இந்தியன் என்ற உணர்வு ஊட்டப்படுகிறது.

"ஹாப்பி இன்டிபென்டன்ட்ஸ் டே" என்று பிதற்றிக் கொண்டு அலையும் கிறுக்குகள் இன்றும் கணிசம்.

மற்றநாட்டு மக்கள் சுதந்திர தினம் அன்று மட்டுமாவது தங்கள் நாட்டுப்பற்றைக் காட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

தனது நாட்டு வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறார்கள்.
தற்போதைய நாட்டுநிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்துப் பெருமைப்படும் அம்சங்களை நினைவுகூர்கின்றனர்

ஹிந்தியாவின் விடுதலை வரலாறு என்னவென்று யாராவது கேட்டால் வடிவேலு மாதிரி எப்படியெல்லாம் டிசைன் டிசைனாக அடிவாங்கினோம் என்ற வரலாறைத்தான் விளக்கவேண்டும்.

தற்போதைய இந்தியாவை சீர்தூக்கிப் பார்த்தோமேயானால் பெருமைக்குப் பதில் குமட்டல்தான் வரும்.

அதனால்தான் நண்பகல் வரை கூடத் தாங்காத 'சுதந்திரதின உணர்வு' ஹிந்தியாவில்  காணப்படுகிறது.

குமட்டலை அடக்கிக் கொள்ளும் நிலை இருக்கிறது என்றால் அதற்கு தென்னிந்திய மாநிலங்கள்தான் காரணம்.
அவர்கள்தான் உழைத்துக்கொட்டி ஹிந்தியாவை வாழவைக்கின்றனர்.

அதனால் தென்னிந்தியாவிலும் வடகிழக்கிலும் நல்ல வெயில் வரும்வரை கூட 'சுதந்திரதின உணர்வு' நீடிப்பதில்லை.

உலகிலேயே மிக மொக்கையாக உப்புசப்பே இல்லாத வழியில் சுதந்திரம் அடைந்தது ஹிந்தியாதான் என்பதற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டு.

ஆகஸ்ட் 15 அன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் நாதஸ்வர இசை, கவர்ச்சி நடிகையின் பேட்டி, ஆண்களா பெண்களா பட்டிமன்றம், சின்னத்திரை நட்சத்திரங்கள் விளையாட்டு, ஒரு அர்ஜுன் படம், ஒரு காமெடி படம், ஒரு கமர்சியல் படம், வரப்போகும் திரைப்பட முன்னோட்டம்  என என்னத்தையாவது போட்டு நிரப்புகிறார்கள்.

பல தொலைக்காட்சிகளில் வழக்கமான நிகழ்ச்சிகளில் இடையிடையே எதையாவது செருகி ஒப்பேற்றுகிறார்கள்.

அடிவாங்கிய வரலாற்றை நெஞ்சை நக்கும் விதத்தில் போட்டாலும் ரசிக்கும் அளவு நாட்டுப்பற்று யாரிடமும் இல்லை.

ஏனென்றால் அனைவருக்கும் தெரியும் அடிவாங்கி அடிவாங்கியே வெள்ளையரை நாம் விரட்டவில்லை.
அவனேதான் இரண்டாம் உலகப்போரில் திவாலாகி தானாகவே விட்டுவிட்டு போனான் என்பது.

அதனாலேயே இன்றும் ஆங்கிலேயரையும் ஆங்கிலத்தையும் மதிக்கும் மனநிலை உள்ளது.

இந்தியாவில் யாருக்குமே நாட்டுப்பற்றோ அல்லது இது ஒரு நாடு என்கிற உணர்வோ கிடையாது.

என்னசெய்வது வரலாறு என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறது?!

இது ஒரே நாடாக எப்போதும் இருந்தே இல்லையே!

ஒரு நாட்டுக்கான எந்த அம்சமும் இல்லையே?!

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!

இன்று ஒரு பெருநகரம் முழுவதும் சுற்றிவந்தாலும் மாணவர்கள் தவிர எவரும் தேசியகொடியுடன் காணப்பட மாட்டார்கள்.

பத்து இடங்களில் கூட தேசியக்கொடி பறக்காது.

'இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம்' உலகிலேயே மிகவும் கேவலமானது என்பதை பல்வேறு சான்றுகளுடன் ஏற்கனவே பலமுறை எழுதியாயிற்று.

தெரிந்துகொள்ள
http://vaettoli.blogspot.com/search/label/சுதந்திர%20தினம்?m=0

எனக்கு என்ன கவலை என்றால் தமிழர்களிடம் அடிவாங்கும் தகுதிகூட இல்லாத ஹிந்தியாவிடம் நாம் விடுதலை வாங்கினால் நமது சுதந்திர தினமும் இப்படி சுவாரசியமே இல்லாமல் கடந்து போகுமே என்பதுதான்.

Thursday, 27 April 2017

இலங்கைக்கு ஏன் ஆறுமாதம் கழித்து சுதந்திரம்?

இலங்கைக்கு ஏன் ஆறுமாதம் கழித்து சுதந்திரம்?

ஆங்கிலேயன் இந்தி'யாவுக்கு 1947 ஆகஸ்ட் 15 அன்று விடுதலை கொடுத்தான்.

வெறும் 6 மாதம் கழித்து இலங்கைக்கு 1948 பிப்ரவரி 4 அன்று விடுதலை கொடுத்தான்.

ஏன் தெரியுமா?

ஆங்கிலேயனின் பிரித்தாளும் தந்திரம் என்பது எளிமையானது போலத் தெரியும்.
ஆனால் உண்மையில் அது கடினமான வேலை.

தொடர்பே இல்லாத பல்வேறு மக்களை போலியான இரு அடையாளங்களுக்குள் அடைக்கவேண்டும்.
பிறகு இல்லாத அடையாளத்துடன் அவர்களை அடித்துக்கொள்ள வைக்கவேண்டும்.

ஆங்கிலேயனின் இந்து-முஸ்லீம் பிரித்தாளுதல் கொள்கை தமிழகத்தைத் தவிர மற்ற இடங்களில் நன்றாக வேலை செய்தது.
  அது காலம் கடந்து ஈழத்தில் கூட வேலை செய்கிறது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் மதப்பிரிவினை ஆங்கிலேயன் எவ்வளவோ முக்கியும் வேலை செய்யவே இல்லை.

அதனால் இங்கே ஆரியர் - திராவிடர் பிரிவினைக் கருத்தியல் வந்தேறிகளைக் கொண்டு விதைக்கப்பட்டது.

வடயிந்தியரை சமாளிக்க தென்னிந்தியரைக் கேடயமாக்கிக்கொள்ள தமிழர்களுக்கும் இது தேவைப்பட்டது.
அதனால் திராவிடத்தை ஆதரித்தனர்.

அதுவேலை செய்தாலும் ஆங்கிலேயர் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

தமிழர்கள் மீது ஆங்கிலேயருக்கு எப்போதும் அடங்காத எரிச்சல் இருந்தது. இருக்கிறது.

ஏனென்றால் தமிழ்மண்ணைக் கைப்பற்றுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை.

ஆங்கிலேயப் பேரரசு வீழ்ந்ததற்குக் காரணம் உலகப்போர்,
இதைத் தூண்டியதும் ஒரு தமிழனே!
ஆங்கிலேயரின் எதிரிநாடாக ஜெர்மனிக்குப் போய் அதன் அரசரின் வலதுகரமாகி இங்கிலாந்தோடு போரிடத் தூண்டியவன் செண்பகராமன் என்ற தமிழன்.
இவரே நேதாஜியின் குரு.
இவரே ஜெர்மனியிலிருந்து எம்டன் கப்பலில் சென்னை வந்து ஜார்ஜ் கோட்டையில் குண்டுபோட்டது.

ஜெர்மனி தோல்வியடைந்தாலும் செண்பகராமனை இங்கிலாந்திடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது.

நேதாஜியை உருவாக்கியதும் தமிழரே.
அவரது படையிலும் பெரும்பாலும் தமிழர்.

நேதாஜி மட்டுமல்லாமல்,
காந்தியை (21 ஆண்டுகளில்) மகாத்மாவாக உருவாக்கியதும் தென்னாப்பிரிக்கத் தமிழர்களே.
அவரது அகிம்சை வழிமுறையும் தமிழர்களின் கருத்தியலே.

அதாவது வடயிந்தியர்களை தலைவனாக்கி அவனையே கேடயமாக்கி பின்னால் தமிழர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

ஆங்கிலேயர் மீது அறவழி ஆயுதவழி என்று இருமுனைத் தாக்குதல்.

தமிழர்களின் அரசியல் நகர்வுகளால் எதிர்விளைவுகளும் நடந்தன.
அதனாலும் இழப்புகள் ஏற்பட்டன, ஏற்படுகின்றன.

ஆங்கிலேயருக்கு உண்மையான தோல்வியைத் தந்த தமிழர்களை ஆங்கிலேயர் பண்ணாத கொடுமைகள் இல்லை.
அவர்களின் மிகமோசமான அடக்குமுறையை மிக நீண்டகாலம் தாங்கியவர்கள் தமிழர்கள்.

ஆனாலும் ஈ.வே.ரா, அம்பேத்கர், நேரு, (பிற்கால) காந்தி ஆகியோரைப் போல ஆங்கிலேயருக்கு விசுவாசமான ஒரு அடிமை தமிழினத்தில் அவர்களுக்குக் கடைசிவரை கிடைக்கவேயில்லை.

(இதில் ஆங்கிலேயர் இடத்தில் ஹிந்தியரும்
வடயிந்தியர் இடத்தில் திராவிடரும் இப்போது இருக்கிறார்கள்)

ஆங்கிலேயன் தன் படுதோல்விக்கு பழிவாங்கத்தான்,
இங்கிலாந்தை விடப் பெரியநாடான தமிழர்நாட்டை இரண்டாக உடைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும்தான் இலங்கையை தனிநாடு ஆக்கிவிட்டு போனார்கள்.

என்ன செய்வது இடையில் கடல் புகுந்துவிட்டதே?!

இயற்கையை வெல்ல முடியுமா?

முடியும்.

நிலம் பிரிந்து இருந்தால்தானே இரண்டு நாடு ஆகும்.

கடலையே மண் போட்டு நிரப்பி நிலத்தொடர்பை ஏற்படுத்திவிட்டால்?!

முடியாது என்று எதுவுமில்லை.
கடலையும் நிரப்ப முடியும்.

நிரப்பிக் காட்டியிருக்கிறார்கள்.

நெல்லூர் முதல் அம்பாறை வரை,
பாலக்காடு முதல் புத்தளம் வரை,
பெங்களூரில் இருந்து அனுராதபுரம் வரை,
தமிழர்நாடு ஒரே நிலமாக,
உலகின் 77வது பெரிய நாடாக,
எல்லா வளங்களுடன்,
முப்படைகளுடன்,
வல்லரசாக,
ஒரு நல்லரசாக
இப்புவியில் வீற்றிருக்கும்.

Sunday, 14 August 2016

1945 ஆகஸ்ட் 15

1945 ஆகஸ்ட் 15
வெள்ளைக்காரன் உலகப்போரை வென்ற நாள்.

அதாவது ஜப்பான் அதிகாரப்பூர்வமாக சரணடைந்த நாள்.

ஆனால் உலகப்போரில் பெரும்பணம் செலவானதால் தொலைவில் உள்ள நாடுகளை சுரண்டி கொண்டுவர போதுமான வசதி இல்லாமல் போனது.
ஆதலால் அவனே இங்கேயிருந்து கிளம்பினான்.

போகும்போது தன் வெற்றிநாளை கொண்டாடுமாறு கட்டளை போட்டுவிட்டு போனான்.

அதை இன்று வரை, அதுவும் 'ஜன கன மன' என்று ஆங்கில மன்னன் ஐந்தாம் ஜார்ஜை வாழ்த்தி தாகூர் பாடிய பாடலைப் பாடி, 
விசுவாசத்தில் இம்மி பிசகாமல் நன்றியோடு இருக்கும் ஆங்கில அடிமைகளான ஹிந்தியர்களுக்கும் அவர்களின்  அடிவருடிகளுக்கும்
சுதந்திரநாள் வாழ்த்து.

நாம வழக்கம்போல திராவிடத்த கிழிப்போம்.
சாயங்காலம் வந்து பாருங்க.

Saturday, 15 August 2015

Tuesday, 12 August 2014

நமக்குத் தேவை ஸ்வதந்த்ர தின் அல்ல

நமக்குத் தேவை 

'விடுதலை நாள்' 


'ஸ்வதந்த்ர தின்' அல்ல. 


ஈழத்தில் தமிழர்களைக் கொன்றபோது ஹிந்தியா ஒன்றும்  செய்யவில்லை; 

அதில் ஒரு காரணம் உண்டு சிறிலங்கா அதற்கு ஒரு அண்டைநாடு;  

ஒருவகையில் சரிதான். 


புலிகளை அழிக்க எல்லா உதவிகளையும் செய்தது ; 
அதிலும் ஒரு காரணம் இருந்தது; 

ஈழம் பிறந்தால் தமிழகமும் பிரிவினை கேட்கலாம்; ஒருவகையில் 
சரிதான். 
இதுவரை சிறிலங்கா சுட்டும் வெட்டியும் தண்ணீரில் தள்ளியும் கொன்ற "தமிழக" மீனவனின் எண்ணிக்கை 600ஐத் தாண்டுகிறது; 

காணாமல் போனோர் 200க்கும் மேல்; 

கை, கால்களை இழந்து முடமானோர் 1700க்கும் மேல்; 

படகைப் பறிகொடுத்தோர், நடுக்கடலில் வலையைப் பறிகொடுத்தோர், பொருட்களைப் பறிகொடுத்தோர், ஆடைகளை அவிழ்த்து மானக்கேடு அடைந்தோர் எண்ணிக்கையோ கணக்கிலடங்காது; 

ஹிந்தியா ஒரு கண்டன அறிக்கையைக் கூட வாசித்ததில்லை; 

இதற்கும் ஒரு காரணம் உண்டா என்று "ஒரு முக்கியமான காரணம்" உள்ளது. 


பாகிஸ்தானும் ஹிந்தியாவும் பலமுறை மோதியுள்ளனர்; 

ஆனால் சிந்து, ராவி, சட்லஜ், ஜீலம் போன்ற ஆறுகள் எந்த தடையும் இல்லாமல் எல்லைகடந்து பாய்கின்றன; 
சீனாவுடன் ஹிந்தியாவுக்கு பல தகராறுகள் உள்ளன; 

ஆனால் பிரம்மபுத்ரா,சிந்து,லோஹித்,சுபன்சிரி,லேங்சென் போன்ற ஆறுகள் 
எல்லைகடந்து பாய்கின்றன; 

ஆனால், 2கோடித் தமிழர்களின் குடிநீர், மற்றும் 
உணவு காவிரியை நம்பி உள்ளது; 

ஆனால், கர்நாடகம் அதை மறிக்கும் ஹிந்தியா வாயால்கூட ஒரு கண்டனம் தெரிவிக்காது; இதற்கும் "ஒரு முக்கியமான காரணம்" உள்ளது. 


பங்களாதேஷுக்கும் மேற்குவங்கத்திற்கும் ஒரு தீஸ்த்தா நதிநீரைச் சொந்தம் கொண்டாடுவதில் தகராறு என்றால் ஹிந்தியப் பிரதமர் நேரில் சென்று தீர்த்துவைப்பார்; ஆனால், தமிழக அனைத்து கட்சி தீர்மானத்தைக் கொஞ்சமும் மதிக்காமல் சிறிலங்காவுக்குக் கச்சத்தீவைக் கொடுத்துவிட்டு அந்த தீவுக்கு போய்வர அளிக்கப்பட்டுள்ள உரிமைகூடக் கிடைக்காத தமிழர்கள் நீதிகேட்டால் 

அதில் உங்களுக்கு உரிமையில்லை என்று ஹிந்தியா சொல்கிறது; 

இதற்கும் "ஒரு முக்கியமான காரணம்" உள்ளது. 


முல்லைப் பெரியாறை மறிக்கக்கூடாது என்று மத்ய அரசு சட்டம் போடும்; 

அந்த சட்டம் இங்கே செல்லாது என்று கேரளா சட்டம் போட்டு முல்லைப் 
பெரியாறு அணையை உடைக்க முயலும்.

ஆனால் ஹிந்தியா கேரள மாநில அரசைக் கலைத்து குடியரசுத்தலைவர் ஆட்சியை கொண்டுவராது; 

இதற்கும் "ஒரு முக்கியமான காரணம்" உண்டு. 


ஆந்திரா பாலாறை மறிக்கும், ஆந்திர மீனவர்கள் தமிழக எல்லைக்குள் நுழைந்து தமிழகக் காவல்துறையைத் தாக்கிவிட்டு சென்னை மீனவரைத் தாக்கி அவர்களது குடியிருப்புகளை நாசம் செய்துவிட்டு தெலுங்கு கொடியை நட்டுவிட்டுச் 
செல்வார்கள்(2014ல்தான்); 

ஒருவரும் வாய்திறக்கமாட்டார்கள்; 

இதற்கும் ஒரு முக்கிய காரணம் உண்டு. 


தமிழகத்தில் மத்ய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 
துறையில் ஆங்கிலம் நன்கறிந்த ஒரு சில தமிழர்கள் 
நுழையும் முன்பே ஹிந்தியர்கள் தம் தாய்மொழியில் 
தேர்வெழுதி எளிதாக நுழைந்துவிடுவார்கள்; 


500பேர் உயிரைக் கொடுத்து 'தமிழுடன் 5%கூட 
ஒத்துப்போகாத ஹிந்தியை' தமிழகத்தில் திணிக்கவிடாமல் காத்தார்கள்; 

ஆனால், இன்று ஹிந்தி கட்டாயம் என்று மத்ய அரசு சட்டம் 
போட்டுள்ளது; 

இதற்கும் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. 


2,00,000 ச.கீ.மி பரப்பளவு தமிழர்கள் வாழ்ந்த பகுதி தமிழகமான ஆக்கப்படாமல் அதில் காடு, மலை, வேளாண்மை,கனிம வளங்கள் நிறைந்த 70,000 
ச.கீ.மி மற்ற மாநிலங்கள் எடுத்துக்கொண்டு,

1,30,000சகீமி நிலத்தை மட்டும் நமக்கு தமிழகம் 
என்ற பெயரில் விட்டுவைத்துள்ளார்கள்; 

திருவனந்தபுரம், மைசூர், பெங்களூர், திருப்பதி, 
நெல்லூர், அந்தமான் என பல முக்கியமான தமிழருக்குச் சொந்தமான நகரங்கள் பறிபோயின; 

1954ல் இப்படியாக மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது மற்ற 
இனத்தவர்கள் கேட்ட தமிழகப் பகுதியெல்லாம்  வாரி வழங்கியது மத்ய அரசு; 

இதற்கும் "ஒரு முக்கிய காரணம்" உள்ளது. 


இப்போது தமிழகத்தின் பேரரசனாக வடயிந்தியன், 
அவனுக்குக் கீழ் சிற்றரசர்களாக தமிழகத்தைச் 
சுற்றி மாநில உரிமைகள் கொண்ட தென்னிந்தியர்கள், 
தமிழகத்தின் உள்ளே வாழும் வடயிந்தியனுக்குத் 
தொழிலையும், தமிழகத்தின் உள்ளே வாழும் 
தென்னிந்தியனுக்கு அரசியல் அதிகாரத்தையும் 
தாரைவார்த்துவிட்டு ஓட்டாண்டியாகத் தமிழகத் 
தமிழன்; 

வீரத்துடன் போராடியும் உலகமே பார்த்துக்கொண்டிருக்க 
பாதி கொல்லப்பட்டு மீதி நடைபிணமாக ஈழத்தமிழன்; 


மற்ற மாநிலங்களில் எதிர்க்கப்பட்ட ஸ்டெர்லைட், கெயில், அணுவுலை எல்லாம் ஹிந்தியாவின் குப்பைத்தொட்டியான தமிழகத்தில் வந்துவிழுகின்றன; கூடியவிரைவில் 

இனவழிப்பு இங்கே உறுதி; 
இதற்கும் ஒரு முக்கியமான காரணம் உள்ளது. 


அது என்னவென்றால் நமக்கு இனப்பற்று இல்லை என்பதுதான். 

இன்னமும் சொல்லிக்கோண்டே போகலாம். 


கதையா சொல்லிக்கொண்டிருக்கிறேன் 
மெய்மறந்து படிக்க? 


வேதனை ஐயா மனம் குமுறும் வேதனையைச் சொல்கிறேன்.


ஒரு இனத்தில் 5ல்3பேருக்கு உணவுக்கும் 
பிழைப்புக்கும் மட்டும் வழிசெய்துவிட்டு 
அவ்வினத்தை முடிந்த அளவு சுரண்டும் உத்தி மூலம் 
தமிழகத்தில் இனவழிப்பு நடந்துவருகிறது; 


5ல்2பேர் போராடுவார்கள் மீதி 3பேர் பேசாமல் 
இருப்பார்கள்; 

அந்த இரண்டுபேரும் களைப்படைந்து ஒன்று அழிவார்கள் 
அல்லது எதிரிகளிடமே சரணடைவார்கள்; 

பிறகு எஞ்சிய 3பேரை ஐந்தாகப் பிரித்து அதில் 
5ல்3வருக்கு பிழைக்க மட்டும் வழிசெய்வார்கள்; 

இது இன்றுநேற்றல்ல பலநூறாண்டுகளாக 
நடந்துவருகிறது;

 கோடிக்கணக்கில் இமயம் முதல் மூழ்கிய குமரிவரை இருந்த இனம் 
இன்று சுருங்கி அழியும் தருவாய்க்கு வந்துவிட்டோம்.


சரி. நம்மைக் கொள்ளையடித்து அந்த இனமாவது வாழ்கிறதா என்றால் இல்லை; 

அந்த இனத்தின் கொள்ளைக்காரர்கள் சிலர் அவ்வினத்தின் இனவுணர்வைத் தூண்டி வலிமை பெற்று நம் இனத்தின் சில கொள்ளையர்களை சேர்த்துக்கொண்டு நம்மைக் 
கொள்ளையடிக்கிறார்கள்; 

கொள்ளையடித்து நம் இனக்கொள்ளையருக்கு பத்தில் ஒரு பங்கையும் அவ்வின 
மக்களுக்கு பத்தில் மூன்றுபங்கையும் 
கொடுத்துவிட்டு மீதி ஆறுபங்கை அவ்வினக் 
கொள்ளையர்கள் வைத்துக்கொள்கிறார்கள். 


மூன்றுவேளை உணவும் போதுமான அளவு(மட்டும்) 
மாதவருமானமும் உள்ள 5ல்3பகுதியினரே!

 உங்களை ஒன்று கேட்கிறேன்; 
ஒரு பெண்ணை காதலிக்க வைக்கவும் கைப்பிடிக்கவும் உங்கள் வாழ்க்கையையே பணயம் வைக்க நீங்கள் தயங்குவதில்லை; 

அவளுக்காக ஊரை எதிர்க்கவும், தாய்தந்தையை பிரியவும், உயிரைவிடவும் தயாராக இருக்கிறீர்கள்; 

ஒரு பெண்ணுக்காக உயிரைவிடவும் தயாராக இருக்கும் நீங்கள் உங்களையும் உங்கள் 
மூதாதையரையும் தாங்கிசுமந்து உங்களுத்தேவையான 
அனைத்தையும் வழங்கிய தாய்மண்ணுக்காக ஏன் எதுவும் செய்யத் தயாராக இல்லை?


பெண்களையும் இதே கேள்வியைக் கேட்கிறேன்; 

காதலிக்கும் ஆணைக் கரம்பிடிக்க வீட்டைவிட்டு ஓடிவரவும் தற்கொலை செய்துகொள்ளவும் தயாராக இருக்கும் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் சந்ததியினருக்கும் உணவு, உறைவிடம் என எல்லாமும்  வழங்கப்போகிற இந்த மண்ணுக்காக ஏன் நீங்கள் எதுவும் செய்வதில்லை?
பெண்ணுரிமை கோரினால் மட்டும் போதுமா? தமிழரில் ஆண்கள் அளவுக்கு பெண்கள் 
போராட்டசிந்தனை உடையவர்களாக ஏன் இல்லை?
பெற்றெடுத்தது வேண்டுமானால் தாயாக இருக்கலாம்; 
ஆனால் கருவிலேயே நமக்கு தாய்வழி வந்த உணவும், நீரும், காற்றும் இந்த மண் வழங்கியது அல்லவா? 


ஒரு பிஞ்சுக் குழந்தை எதிரில் அதன் தாயை "இது எங்க 
அம்மா" என்று உங்கள் பக்கம் இழுத்துப்பாருங்கள் அந்தக் 
குழந்தைக்கே கோபம் வரும்; 

ஆனால், உங்களுக்கு தசையும்,எலும்பும், மூளையும், குருதியும் கொடுத்த உங்கள் 
தாய்மண்ணை எவன் என்னசெய்தாலும் கவலையில்லை.


இதற்கும் மேல், 5ல்3பேர் இல்லை 5ல்5பேரையும் ஒழித்துவிட்டு ஒட்டுமொத்தமாகச் சுரண்டும் வெளிப்படையான இனவழிப்பு ஈழத்தில் 
நடந்துவருகிறது; 

இணையத்தில் தேடினால் ஆயிரக்கணக்கான இனவழிப்புச் சான்றுகள் இருக்கின்றன; 

அவற்றினால் அந்த மக்களுக்கு காலணா பலன் கிடைத்ததா? 


சரி இனத்திற்கும் மண்ணிற்கு என்ன தொடர்பு? 


ஐயா, இனம் என்பது மண்ணின் தன்மைகளை உள்ளடக்கியடக்கியது; 

ஆங்கிலேயன் நம்மை ஆண்டான் என்றால் நம் மக்கள்மீது ஆசைப்பட்டா வந்தான், இல்லை நமது வளங்களில் ஆசைபட்டுதான் வந்தான்; 


ஒரு இனத்தின்மீது இன்னொரு இனத்தின் தொலையாதிக்கம் 
(ஏகாதிபத்தியம்) என்பது அதன் மக்கள் மீது அல்ல அந்த மக்கள் வாழும் மண்ணின் மீதான அதிகாரத்தைக் கோருவதே ஆகும்; 


இந்த மண்ணில் உள்ள தனிமங்கள்தான் நம் உடலிலும் உள்ளன; 

இந்த மண்ணில் சுரந்த நீர்தான் நம் உடல் எடையில் முக்கால்வாசி;

 இந்த மண்ணுக்கேற்ற நிறமும் உடலியக்கமும் குணங்களும் உடையும் பழக்கவழக்கங்களும் நம்மிடம் இருக்கின்றன; 

வெப்பநாடுகளில் மக்கள் வணக்கம் சொல்கிறார்கள், குளிர்நாடுகளில் மக்கள் 

கைகுலுக்குகிறார்கள்.


மண்ணுக்கு தொடர்பே இல்லாதவன் எப்படி அதைப் புரிந்துகொள்ளமுடியும்?

மண்ணை மண்ணின் மைந்தர் ஆள்வதுதான் உலக நடைமுறை;

 அண்ணன் தம்பிகளுக்குள் சொத்துதகராறு என்றால் அடுத்தவன் 
புகுந்து பங்கு கேட்பதா? 


இப்படியெல்லாம் கேட்டால் உங்களுக்கு அறிவு வராது; 

உங்களுக்கு அறிவு வர உங்கள் ஆண்மையையோ, அல்லது உங்கள் வீட்டுப் பெண்களின் நடத்தையையோ குத்திக் காட்டிப் பேசும்வரை உங்களுக்கு மானம் வராது.


சிங்களவன் அங்கே தமிழச்சிகளை கற்பழித்து மார்பறுத்து துன்புறுத்திக் 
கொன்றதைச் சொன்னால் உனக்கு மானம் வருமா? 


இல்லை வீரப்பனார் தேடுதல் வேட்டையில் சின்னாம்பதி என்ற மலை ஊரில் அத்தனைத் 
தமிழ்ப்பெண்களையும் கற்பழித்தார்களே அதைச் சொன்னால் மானம் வருமா? 


மலையாளிகள் தமிழச்சி மேலாடைகளையும் தாலிகளையும் அறுத்தெறிந்த தாலியறுத்தான் 
சந்தை என்ற இடத்தை நினைவுபடுத்தினால் மானம் வருமா? 


மதிப்புடன் வாழ்ந்த தேவரடியார்கள் தெலுங்கர் ஆட்சியில் தேவதாசிகளாக விபச்சாரம் செய்ய ஆக்கப்பட்டார்களே அதைச் சொன்னால் மானம் வருமா? 


அல்லது ஹிந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் 
500க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்தார்களே

 அதைக்குறிப்பிட்டால் மானம் வருமா? 


உனக்கு உன் கூடப்பிறந்த அக்காதங்கை கற்பழிக்கப்பட்டாலாவது மானம் வருமா? 


இப்படியே சும்மாயிருந்தால் அதுதான் நடக்கும்.


முடிவு செய்யுங்கள்.
(திருத்தப்படாத) தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடிக்கொண்டு தமிழனாக 
தலைநிமிர்ந்து வாழப்போகிறீர்களா? 


அல்லது 'ஜனகனமமன' என்று ரபீந்த்ரநாத் டெகூர் ஆங்கில மன்னன் ஐந்தாம் ஜார்ஜை புகழ்ந்து பாடிய மானங்கெட்ட பாடலைப் பாடிக்கொண்டு ஹிந்திய அடிமைகளாக இருக்கப்போகிறீர்களா? 


https://m.facebook.com/photo.php?fbid=475448882558770&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739