Showing posts with label சுதந்திரம். Show all posts
Showing posts with label சுதந்திரம். Show all posts

Monday, 2 October 2017

காந்தியின் அகிம்சை

காந்தியின் அகிம்சை
***********************

கே: காந்தியை உருவாக்கியது தமிழர்கள் என்கிறீர்கள்!
ஆனால் அவரது வழி தவறு என்கிறீர்கள்!
இது முரணாக இருக்கிறதே?!

ப: காந்தியை ஒரு அகிம்சை போராளியாக உருவாக்கியது தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்தான்.
இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
அகிம்சை போராட்டம் ஆயுத போராட்டத்திற்கு சற்றும் சளைத்தது இல்லை.

ஆனால் தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் போராடியது சம உரிமைக்காக
அதனால் அகிம்சை வழி சரியாக இருந்தது.

ஆனால் விடுதலை எப்போதும் அகிம்சை மூலம் கிடைக்காது.
இதுதான் வரலாறு நமக்கு தரும் பாடம்.

  சம உரிமை பெற காந்திக்கு தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் கற்றுக்கொடுத்த அகிம்சை வழியை
அவர் இங்கே வந்து ஆங்கிலேயரிடம் விடுதலை பெற பயன்படுத்தினார்.

இது ஆங்கிலேயருக்கு வசதியாகப் போய்விட்டது.

ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு போக முதல் காரணம் அவர்கள் உலககம் முழுவதும் சுரண்டி சேர்த்துவைத்த செல்வமெல்லாம் இரண்டு உலகப்போர்களில் காலியானதுதான்.

இதற்கு காரணம் ஜெர்மனி.
ஜெர்மனியை ஆங்கிலேயர் மீது ஏவியது ஒரு தமிழரான செண்பகராமன் பிள்ளை மற்றும் அவரது வழிநடந்த நேதாஜி (மற்றும் அவர் படையிலிருந்த தமிழர்கள்)

ஜெர்மனியை பிரிட்டிஷ் இரண்டு உலகப்போர்களிலும் தோற்கடித்தாலும் தனது செல்வம் அனைத்தையும் இழந்து அதன் பொருளாதாரம் வீழ்ந்தது.
  உலக நாடுகளை அடக்கி சுரண்டும் வலு அதனிடம் இல்லை.
அதனால் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் இருந்து காலி செய்தனர்.
காந்தியால் சுதந்திரம் கிடைத்தது என்பது 1% கூட உண்மை இல்லை.
------------
மேலும் அறிய,
search காந்தியை உருவாக்கிய தென்னாப்பிரிக்க தமிழர் வேட்டொலி

search இலங்கைக்கு ஏன் ஆறுமாதம கழித்து சுதந்திரம்? வேட்டொலி

search எம்டன் செண்பகராமன் ஹிட்லரை அடக்கிய நேதாஜியின் குரு வேட்டொலி

search அறவழி விடுதலை அடைய உதவுமா வேட்டொலி

Thursday, 27 April 2017

இலங்கைக்கு ஏன் ஆறுமாதம் கழித்து சுதந்திரம்?

இலங்கைக்கு ஏன் ஆறுமாதம் கழித்து சுதந்திரம்?

ஆங்கிலேயன் இந்தி'யாவுக்கு 1947 ஆகஸ்ட் 15 அன்று விடுதலை கொடுத்தான்.

வெறும் 6 மாதம் கழித்து இலங்கைக்கு 1948 பிப்ரவரி 4 அன்று விடுதலை கொடுத்தான்.

ஏன் தெரியுமா?

ஆங்கிலேயனின் பிரித்தாளும் தந்திரம் என்பது எளிமையானது போலத் தெரியும்.
ஆனால் உண்மையில் அது கடினமான வேலை.

தொடர்பே இல்லாத பல்வேறு மக்களை போலியான இரு அடையாளங்களுக்குள் அடைக்கவேண்டும்.
பிறகு இல்லாத அடையாளத்துடன் அவர்களை அடித்துக்கொள்ள வைக்கவேண்டும்.

ஆங்கிலேயனின் இந்து-முஸ்லீம் பிரித்தாளுதல் கொள்கை தமிழகத்தைத் தவிர மற்ற இடங்களில் நன்றாக வேலை செய்தது.
  அது காலம் கடந்து ஈழத்தில் கூட வேலை செய்கிறது.

ஆனால் தமிழகத்தில் மட்டும் மதப்பிரிவினை ஆங்கிலேயன் எவ்வளவோ முக்கியும் வேலை செய்யவே இல்லை.

அதனால் இங்கே ஆரியர் - திராவிடர் பிரிவினைக் கருத்தியல் வந்தேறிகளைக் கொண்டு விதைக்கப்பட்டது.

வடயிந்தியரை சமாளிக்க தென்னிந்தியரைக் கேடயமாக்கிக்கொள்ள தமிழர்களுக்கும் இது தேவைப்பட்டது.
அதனால் திராவிடத்தை ஆதரித்தனர்.

அதுவேலை செய்தாலும் ஆங்கிலேயர் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

தமிழர்கள் மீது ஆங்கிலேயருக்கு எப்போதும் அடங்காத எரிச்சல் இருந்தது. இருக்கிறது.

ஏனென்றால் தமிழ்மண்ணைக் கைப்பற்றுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை.

ஆங்கிலேயப் பேரரசு வீழ்ந்ததற்குக் காரணம் உலகப்போர்,
இதைத் தூண்டியதும் ஒரு தமிழனே!
ஆங்கிலேயரின் எதிரிநாடாக ஜெர்மனிக்குப் போய் அதன் அரசரின் வலதுகரமாகி இங்கிலாந்தோடு போரிடத் தூண்டியவன் செண்பகராமன் என்ற தமிழன்.
இவரே நேதாஜியின் குரு.
இவரே ஜெர்மனியிலிருந்து எம்டன் கப்பலில் சென்னை வந்து ஜார்ஜ் கோட்டையில் குண்டுபோட்டது.

ஜெர்மனி தோல்வியடைந்தாலும் செண்பகராமனை இங்கிலாந்திடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது.

நேதாஜியை உருவாக்கியதும் தமிழரே.
அவரது படையிலும் பெரும்பாலும் தமிழர்.

நேதாஜி மட்டுமல்லாமல்,
காந்தியை (21 ஆண்டுகளில்) மகாத்மாவாக உருவாக்கியதும் தென்னாப்பிரிக்கத் தமிழர்களே.
அவரது அகிம்சை வழிமுறையும் தமிழர்களின் கருத்தியலே.

அதாவது வடயிந்தியர்களை தலைவனாக்கி அவனையே கேடயமாக்கி பின்னால் தமிழர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

ஆங்கிலேயர் மீது அறவழி ஆயுதவழி என்று இருமுனைத் தாக்குதல்.

தமிழர்களின் அரசியல் நகர்வுகளால் எதிர்விளைவுகளும் நடந்தன.
அதனாலும் இழப்புகள் ஏற்பட்டன, ஏற்படுகின்றன.

ஆங்கிலேயருக்கு உண்மையான தோல்வியைத் தந்த தமிழர்களை ஆங்கிலேயர் பண்ணாத கொடுமைகள் இல்லை.
அவர்களின் மிகமோசமான அடக்குமுறையை மிக நீண்டகாலம் தாங்கியவர்கள் தமிழர்கள்.

ஆனாலும் ஈ.வே.ரா, அம்பேத்கர், நேரு, (பிற்கால) காந்தி ஆகியோரைப் போல ஆங்கிலேயருக்கு விசுவாசமான ஒரு அடிமை தமிழினத்தில் அவர்களுக்குக் கடைசிவரை கிடைக்கவேயில்லை.

(இதில் ஆங்கிலேயர் இடத்தில் ஹிந்தியரும்
வடயிந்தியர் இடத்தில் திராவிடரும் இப்போது இருக்கிறார்கள்)

ஆங்கிலேயன் தன் படுதோல்விக்கு பழிவாங்கத்தான்,
இங்கிலாந்தை விடப் பெரியநாடான தமிழர்நாட்டை இரண்டாக உடைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டும்தான் இலங்கையை தனிநாடு ஆக்கிவிட்டு போனார்கள்.

என்ன செய்வது இடையில் கடல் புகுந்துவிட்டதே?!

இயற்கையை வெல்ல முடியுமா?

முடியும்.

நிலம் பிரிந்து இருந்தால்தானே இரண்டு நாடு ஆகும்.

கடலையே மண் போட்டு நிரப்பி நிலத்தொடர்பை ஏற்படுத்திவிட்டால்?!

முடியாது என்று எதுவுமில்லை.
கடலையும் நிரப்ப முடியும்.

நிரப்பிக் காட்டியிருக்கிறார்கள்.

நெல்லூர் முதல் அம்பாறை வரை,
பாலக்காடு முதல் புத்தளம் வரை,
பெங்களூரில் இருந்து அனுராதபுரம் வரை,
தமிழர்நாடு ஒரே நிலமாக,
உலகின் 77வது பெரிய நாடாக,
எல்லா வளங்களுடன்,
முப்படைகளுடன்,
வல்லரசாக,
ஒரு நல்லரசாக
இப்புவியில் வீற்றிருக்கும்.

Wednesday, 3 February 2016

வெள்ளையன் வெளியேறினால் விஞ்ஞானம் வெளியேறிவிடும் _அறிஞர்(?) அண்ணாதுரை

1942ல் காந்தி
“வெள்ளையனே வெளியேறு” இயக்கம் தொடங்கி
“செய்யுங்கள் இல்லை செத்துமடியுங்கள்” என்றார்.
அப்போது அண்ணா, என்ன சொன்னார்
“தம்பி(கருணாநிதி?!) காந்தியாருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது.
இவரைக் குணப்படுத்த இங்கிலாந்து தேசத்து வைத்தியர்கள் தேவை.
வெள்ளையர்கள் வெளியேறினால், விஞ்ஞானமும் வெளியேறிவிடும்.
கார் ஓடாது,
பஸ் ஓடாது,
ரயில் ஓடாது,
தந்தி கூட இருக்காது,
ஏரொப்ளேன் இருக்காது.

ஆல மரத்தையும், அரச மரத்தையும் சுற்றிக் கும்பிட்டு,
பருந்தைக் கண்டால் கன்னத்தில் போட்டுக் கொள்ளத்தான் முடியும்.
நம் மக்களால் குண்டூசி கூட செய்ய முடியாது” என்றார்.

இவர் அறிஞராம்?!
ப்ப்ப்ப்பா
அடிக்கிற வெயிலில் கறுப்புச்சட்டை போடும் திராவிட பகுத்தறிவு ?!!!