ஆகஸ்ட் 15 சிறப்பு நிகழ்ச்சிகள்
ஏதுமறியா குழந்தைகளைக் காலையில் வரச்சொல்லி
வரிசையில் நிறுத்தி
புரியாத மொழியில் பாடி
மிட்டாய் கொடுத்துவிட்டு
வெறுமனே ஒரு உணர்வற்ற சடங்காக சுதந்திரத்தை கொண்டாடிவிட்டு போகும் கேவலமான நாடுகளில் ஹிந்தியா முதன்மையானது.
சிறுவனாக நெஞ்சிலே கொடியைக் குத்திக்கொண்டு ஏன் யாருக்குமே நாட்டுப்பற்றில்லை என்று கவலைப்பட்ட காலமுமுண்டு.
நான் என்ன செய்வேன்?!
நல்லது கெட்டது தெரியுமுன்னமே "இந்தியா என் தாய்நாடு" என்று என்னிடம் உறுதிமொழி வாங்கிவிட்டனர்.
குழந்தைகளை இவ்வாறு மூளைச்சலவை செய்துதான் இந்தியன் என்ற உணர்வு ஊட்டப்படுகிறது.
"ஹாப்பி இன்டிபென்டன்ட்ஸ் டே" என்று பிதற்றிக் கொண்டு அலையும் கிறுக்குகள் இன்றும் கணிசம்.
மற்றநாட்டு மக்கள் சுதந்திர தினம் அன்று மட்டுமாவது தங்கள் நாட்டுப்பற்றைக் காட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
தனது நாட்டு வரலாற்றைத் திரும்பிப் பார்க்கிறார்கள்.
தற்போதைய நாட்டுநிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்துப் பெருமைப்படும் அம்சங்களை நினைவுகூர்கின்றனர்
ஹிந்தியாவின் விடுதலை வரலாறு என்னவென்று யாராவது கேட்டால் வடிவேலு மாதிரி எப்படியெல்லாம் டிசைன் டிசைனாக அடிவாங்கினோம் என்ற வரலாறைத்தான் விளக்கவேண்டும்.
தற்போதைய இந்தியாவை சீர்தூக்கிப் பார்த்தோமேயானால் பெருமைக்குப் பதில் குமட்டல்தான் வரும்.
அதனால்தான் நண்பகல் வரை கூடத் தாங்காத 'சுதந்திரதின உணர்வு' ஹிந்தியாவில் காணப்படுகிறது.
குமட்டலை அடக்கிக் கொள்ளும் நிலை இருக்கிறது என்றால் அதற்கு தென்னிந்திய மாநிலங்கள்தான் காரணம்.
அவர்கள்தான் உழைத்துக்கொட்டி ஹிந்தியாவை வாழவைக்கின்றனர்.
அதனால் தென்னிந்தியாவிலும் வடகிழக்கிலும் நல்ல வெயில் வரும்வரை கூட 'சுதந்திரதின உணர்வு' நீடிப்பதில்லை.
உலகிலேயே மிக மொக்கையாக உப்புசப்பே இல்லாத வழியில் சுதந்திரம் அடைந்தது ஹிந்தியாதான் என்பதற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டு.
ஆகஸ்ட் 15 அன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் நாதஸ்வர இசை, கவர்ச்சி நடிகையின் பேட்டி, ஆண்களா பெண்களா பட்டிமன்றம், சின்னத்திரை நட்சத்திரங்கள் விளையாட்டு, ஒரு அர்ஜுன் படம், ஒரு காமெடி படம், ஒரு கமர்சியல் படம், வரப்போகும் திரைப்பட முன்னோட்டம் என என்னத்தையாவது போட்டு நிரப்புகிறார்கள்.
பல தொலைக்காட்சிகளில் வழக்கமான நிகழ்ச்சிகளில் இடையிடையே எதையாவது செருகி ஒப்பேற்றுகிறார்கள்.
அடிவாங்கிய வரலாற்றை நெஞ்சை நக்கும் விதத்தில் போட்டாலும் ரசிக்கும் அளவு நாட்டுப்பற்று யாரிடமும் இல்லை.
ஏனென்றால் அனைவருக்கும் தெரியும் அடிவாங்கி அடிவாங்கியே வெள்ளையரை நாம் விரட்டவில்லை.
அவனேதான் இரண்டாம் உலகப்போரில் திவாலாகி தானாகவே விட்டுவிட்டு போனான் என்பது.
அதனாலேயே இன்றும் ஆங்கிலேயரையும் ஆங்கிலத்தையும் மதிக்கும் மனநிலை உள்ளது.
இந்தியாவில் யாருக்குமே நாட்டுப்பற்றோ அல்லது இது ஒரு நாடு என்கிற உணர்வோ கிடையாது.
என்னசெய்வது வரலாறு என்ன வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கிறது?!
இது ஒரே நாடாக எப்போதும் இருந்தே இல்லையே!
ஒரு நாட்டுக்கான எந்த அம்சமும் இல்லையே?!
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!
இன்று ஒரு பெருநகரம் முழுவதும் சுற்றிவந்தாலும் மாணவர்கள் தவிர எவரும் தேசியகொடியுடன் காணப்பட மாட்டார்கள்.
பத்து இடங்களில் கூட தேசியக்கொடி பறக்காது.
'இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம்' உலகிலேயே மிகவும் கேவலமானது என்பதை பல்வேறு சான்றுகளுடன் ஏற்கனவே பலமுறை எழுதியாயிற்று.
தெரிந்துகொள்ள
http://vaettoli.blogspot.com/search/label/சுதந்திர%20தினம்?m=0
எனக்கு என்ன கவலை என்றால் தமிழர்களிடம் அடிவாங்கும் தகுதிகூட இல்லாத ஹிந்தியாவிடம் நாம் விடுதலை வாங்கினால் நமது சுதந்திர தினமும் இப்படி சுவாரசியமே இல்லாமல் கடந்து போகுமே என்பதுதான்.
Wednesday 15 August 2018
ஆகஸ்ட் 15 சிறப்பு நிகழ்ச்சிகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment