Monday 20 August 2018

ஈழப் படுகொலையில் மலையாளிகளின் பங்கு

ஈழப் படுகொலையில்  மலையாளிகளின் பங்கு

2009 போரில் புலிகள் அழிக்கப்படவும் ஈழப் படுகொலையில் 1,75,000 தமிழர்கள் கொல்லப்படவும் மிக முக்கிய காரணம் இலங்கைக்கு இந்தியா செய்த உதவி.

அந்த உதவிகளுக்கு முக்கிய காரணம்  மலையாளிகள்.

அப்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஒரு மலையாளி.

பாதுகாப்பு செயலர் எம்.கே.நாராயணன் ஒரு மலையாளி.

வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனன் ஒரு மலையாளி.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலுக்கு செயலாளராக இருந்தவர் கிறிஷ்டி பெர்னாண்டஸ் ஒரு மலையாளி.

பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச்செயலாளராக இருந்தவர் டி.கே. நாயர் ஒரு மலையாளி.

பிரதமரின் அலுவலகத்தில் இவருக்கு அடுத்தப்படியான அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஒரு மலையாளி.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் செயலாளர் வின்சென்ட் ஜார்ஜ் ஒரு மலையாளி.

மத்திய அமைச்சரவை செயலாளர்  கே.எம். சந்திரசேகர் ஒரு மலையாளி.

உள்துறை செயலாளராக இருந்த சி.கே. பிள்ளை ஒரு மலையாளி.

வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா மேனன் ராவ் ஒரு மலையாளி.

தகவல் தொழில் நுட்பத்துறைச் செயலாளர் பி.கே.தாமஸ் ஒரு மலையாளி.

விவசாயம் மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் நந்தகுமார் ஒரு மலையாளி.

சிவில் விமானப்போக்குவரத்து துறை செயலாளர் மாதவன் நம்பியார் ஒரு மலையாளி.

செய்தி ஒலிபரப்பு துறை செயலாளர் ரகுமேனன் ஒரு மலையாளி.

  நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் ராமச்சந்திரன் ஒரு மலையாளி.

ஜவுளி துறை செயலாளர் ரீட்டாமேனன் ஒரு மலையாளி.

கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் கங்காதரன் ஒரு மலையாளி.

குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர் ஒரு மலையாளி

சட்டத்துறை செயலாளர் விசுவநாதன் ஒரு மலையாளி.

மத்திய அரசுத்துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் மலையாளிகள்.

அதாவது நாட்டு மக்கட்தொகையில் 3% கூட தேறாத மலையாளிகள் மத்திய இரண்டாம் நிலை அதிகாரத்தில் 33% இருந்தனர்!

(இதில் இருவர் தமிழகத்தின் தரப்பிலிருந்து சென்றவர்கள்)

இது போக  ஐ.நா. பொதுச்செயலரின் சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியார் ஒரு மலையாளி.

இவரது சகோதரர் சதீஷ் நம்பியார் இந்திய ராணுவத்தில் உயர் அதிகாரி.

2007 இல் இலங்கையில் போரை நடத்த திட்டமிட்ட இந்தியா அதற்கு அமைத்த ரகசிய குழுவில் 3ல் இருவர் மலையாளிகள்.

சிவசங்கர் மேனன், எம்.கே.நாராயணன் மற்றும் இவர்களுடன் பாதுகாப்புத்துறை செயலர் விஜய் சிங் என்பவரும் சேர்ந்து அந்த ரகசிய குழு அமைக்கப்பட்டது.

இக்குழு இதேபோல இலங்கையிலும் ராஜபக்ச அமைத்த (பசில், கோத்தபயா, லலித் வீரதுங்கா) மூவர் குழுவுடன் கூட்டாக இணைந்து
இலங்கையில் தமிழருக்கு எதிரான போரை வழி நடத்தியது.

அதாவது சிங்களவர் மூலம் தமிழர் மீது போரை நடத்தியதே இந்தியாவின் இந்த ரகசிய குழுதான்.
அப்போது இந்தியாவை கட்டுப்படுத்தியதே மலையாளிகள்தான்.

2007-2009 இல் இவ்விரு குழுக்களும் 8 நேரடிச் சந்திப்புகளையும் நடத்தியுள்ளன.

போர் சமயத்தில் ராஜபக்சவின் மூவர் குழு 5 முறை இந்தியா வந்துள்ளது.

இந்திய மூவர் குழு 3 முறை இலங்கை சென்றுள்ளது.

அதாவது தொலைதொடர்புகள் இருந்தாலும் நேரடி சந்திப்புகளும் நடந்தன.
இவை அனைத்தும் ரகசியமாக நடந்தன.

இக்குழு எவ்வாறு திட்டமிட்டு ஈழப் போராட்டத்தை ரத்த சகதியில் மூழ்கடித்தனர் என்று பார்ப்போம்.

இலங்கையில் ஓரளவு சுமூகமான சூழல் நிலவுவதாக உலகிற்குக் காட்ட 2008 சார்க் (SAARC) மாநாடு ஆசிய வல்லரசுகளால் இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இம்மாநாடு நடக்கும்வரை ஓரளவு முறையான மிதமான போரை நடத்தி அதன்பிறகு 2009 லோக்சபா தேர்தலுக்குள் இனப்படுகொலையுடன் முடியும் கொடூரமான போரை நடத்தி புலிகளை அழித்தொழிப்பதாகத் திட்டம் தீட்டினர்.

(அதாவது சார்க் மாநாடு முடிந்தபிறகு தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி சர்வதேச விதிகளை மீறி போர் நடந்தது)

  2004 இல் பா.ஜ.க அரசு போட்ட இந்தியா- இலங்கை free trade ஒப்பந்தப்படி எல்லா ராணுவ உதவிகளையும் செய்வோம் என வாக்குகொடுத்துவிட்டு வந்தது அக்குழு.

2007 இல் முதற்கட்டமாக இலங்கைக்கு ஐந்து எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்களை ரகசியமாக வழங்கிய இந்திய வான்படை அதில் இலங்கை சின்னத்தை பொறித்து பயன்படுத்தச் சொன்னது.

ஆனால் அடுத்து களமிறக்கப்பட்டது இந்திய கடற்படைதான்.
அது இந்தோனேசியா வையும் தாண்டி ஆஸ்திரேலியா வரை கண்கானித்து புலிகளுக்கு கடல் வழிகள் மூலம் வரும் ஆயுதங்களைத் துப்பறிந்து இலங்கைக்கு தகவல் கொடுத்தது.

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மையத்தை தலைமையாகக் கொண்டு   புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை ஒட்டிய கடலும் அவர்களது நடமாட்டமும் சக்தி வாய்ந்த ராடார்கள் மூலமும் ரோந்து கப்பல்கள் மூலமும் கண்கானிக்கப்பட்டு இலங்கைக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப் பட்டது.

அடுத்தடுத்து புலிகளுக்கு வந்த சிறிதும் பெரிதுமான பத்து கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.

2006 இலேயே புலிகளின் மிகப் பெரிய போர்க்கப்பல் மூழ்கடிப்பட்டபோதே புலிகள் இதில் இந்தியாவின் பங்கு இருக்கும் என்பதை யூகித்திருந்தனர்.

2007 தொடக்கத்தில் புலிகளின் மூன்று கப்பல்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட போது புலிகளுக்கு புரிந்துவிட்டது.

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்த இலங்கை கடற்படை முகாமைத் தாக்கிய புலிகள்,
இந்தியா வழங்கிய சக்தி வாய்ந்த ராடார் கோபுரம் மற்றும் தகவல் பரிமாற்ற அலுவலகம் ஆகியவற்றை தாக்கி அழித்தனர்.
7 வீரர்களைக் கொன்ற கடற்புலிகள், 2 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், 2 மெஷின் கன், ஒரு ஆர்பிஜி லாஞ்சர், எட்டு ரைபிள்களை கைப்பற்றிக் கொண்டு தப்பினர்.

இதன்பிறகு இந்திய கடற்படை முழுமூச்சாக களத்தில் இறங்கியது.

இப்போது புலிகள் தமிழகத்தின் உதவியை நாடினர்.
கனிமொழியைத் தொடர்புகொண்டு மத்திய அரசின் கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரினர்.

ஆனால் வந்தேறித் தெலுங்கரான கருணாநிதி அப்படி எதையும் செய்யவில்லை.

தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களையும் தமிழக மக்கள் அனுப்பும் உதவியையும் காவல்துறையைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தினார் அவர்.

அப்போது தமிழக நிலை பற்றி அறிய முதலமைச்சரைச் சந்தித்த சிவசங்கர் மேனனிடம் புலிகளை எப்படியாவது ஒழித்துவிடுமாறு கருணாநிதி கெஞ்சியுள்ளார்.
[சான்று நூல்:
Choices: Inside the Making of India's Foreign Policy - Shivshankar menon]

இந்தியா உதவினாலும் பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமும் ராஜபக்ச சில உதவிகளை வாங்க சிவசங்கர் மேனன் கோபித்துக்கொண்ட நிகழ்வும் நடந்தது.

ராஜபக்ச ஆரம்பத்தில் கேட்ட வான் பாதுகாப்பு சாதனங்கள், ஆர்ட்டில்லரி துப்பாக்கிகள், ஆளில்லாத உளவு விமானங்கள் (நிஷாந்த்), லேசர் சாதனங்கள் ஆகியன அனுப்பிவைக்கப் பட்டன.

2008 இல் இந்திய கடற்படையின் பேராதரவுடனும் கூட்டு ரோந்துப் பணிகளின் மூலமாகவும் ஒரே ஆண்டில் புலிகளுக்குச் சொந்தமான 10,000 டன் ராணுவ தளவாடங்களை மூழ்கடித்துள்ளதாகவும்
புலிகளிடம் தற்போது கப்பல்களோ படகுகளோ இல்லை என்றும்
அதனால் புலிகளின் கடற்படை பலம் தற்போது இல்லை என்றும் இலங்கை கடற்படை தளபதி கரன்னகோடா அறிவித்தார்.

இங்கே கவனிக்க வேண்டியது அப்போது இலங்கைக்கு சொந்தமான ஒரு போர்க்கப்பல் கூட இல்லை என்பது.

இலங்கை கடற்படையை விட வலிமையான புலிகளின் கடற்படையை
கூட்டுரோந்து என்ற பெயரில் இந்தியா அனுப்பிவைத்த மூன்று அதிவிரைவு படகுகள் மற்றும் ஒரு ஏவுகணை பொருத்தப்பட்ட கப்பல் மூலமே அழித்தது இலங்கை.
இதுபோக வாஜ்பாய் காலத்தில் தரப்பட்ட அதிநவீன கடல்ரோந்து படகான சுகன்யாவும் பயன்படுத்தப்பட்டது.

சார்க் மாநாடு 2008 ஆகஸ்ட் இல் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு மாநகரில் நடந்து முடிந்தது.
இந்த பாதுகாப்பு இந்திய ராணுவம் இலங்கை சென்று கொடுத்ததாகும்.

மாநாட்டுக்கு சென்ற இந்தியக் குழு அங்கேயே தங்கி பொன்சேகா இலங்கை ராணுவ தளபதி பொன்சேகா, கடற்படைத் தளபதி கரன்னகோடா ஆகியோரைச் சந்தித்து ராணுவ திட்டங்களை குறித்து விவாதித்தது.

2 லட்சம் உயிர்கள் போகும் என கணிக்கப்பட்டு கடைசிக் கட்ட தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்துவிட்டு வந்தது.

பிறகு நடந்த கொடூரமான தாக்குதலில் கொத்துகொத்தாக மக்கள் மடிந்தனர்.

அப்போது  பிரிட்டனின் இலங்கைக்கான தூதுவர் இந்தியாவின் நிலைப்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தியபோது
சிவசங்கர் மேனன்,
புலிகளை அழிப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும்
போர்நிறுத்தத்தை  இந்தியா விரும்பவில்லை என்றும் 
இந்திய அரசின் சார்பில் தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

கடைசி நேரத்தில் வாக்குறுதி கொடுத்து புலித் தளபதிகளை சரணடைய சம்மதிக்கவைத்து
நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்​டோர் வெள்ளைக்கொடியுடன் வந்தபோது அவர்களைக் கொன்றுவிட்டு பூசி மெழுகியது ஐ.நா சிறப்புத் தூதுவர் விஜய் நம்பியார் ஆவார்.

போர் முடிந்த பிறகு பொன்சேகாவை உலகிலேயே சிறந்த தளபதி என்று சிவ்சங்கர் மேனன் புகழ்ந்தார்.

இலங்கைக்கு இந்தியா 100 கோடி சன்மானம் கொடுத்தது.

2009 இல் சர்வதேச சக்திகள் நடத்திய ஈழ இனப்படுகொலை பாவத்தில் நேரடி மற்றும் பெரும்பான்மையான பங்கு மலையாளிகளுடையது.

No comments:

Post a Comment