Tuesday 14 August 2018

1978 இல் தனிநாடு கோரிக்கை

1978 இல் தனிநாடு கோரிக்கை

1978 இல் வெளிவந்தது ருத்ரதாண்டவம் திரைப்படம்.

அப்போதே தமிழர்கள் தனிநாடு கோரிவந்தனர்.
அதற்கு பதிலடி கூறும் விதமாக இப்படத்தில் ஒரு காட்சி உள்ளது.
அது வருமாறு,

நாகேஸ்வர ராவ்: ஆண்டவனே! இந்தியா பெரிய நாடு.
இத ஒருத்தர் ஆள்றத விட மாகாணங்கள தனித்தனியா பிரிச்சுகுடுத்திட்டா வம்பில்லாம போய்டும்ல?!

வி.கே.ராமசாமி (சிவன்): பூசாரி! நீ மசால்வட சாப்டிருக்கியா?

நாகேஷ்: மசால்வடன்னா எனக்கு உயிராச்சே!

வி.கே.ராமசாமி: ஆல் இண்டியா பேசிஸ் ல அந்த மசால்வட தயாராகுது.
இந்தியாவில உள்ள 62கோடி கரங்கள் அந்த மசால்வடைல பட்ருக்கு.
மசால்வட செய்றதுக்கு முக்கியமா என்னென்ன தேவனு சொல்லுபாப்போம்

நாகேஷ்: மசால்வட செய்றதுக்கு முக்கியமா கடலபருப்பு

வி.கே.ராமசாமி: அது எந்த மாகாணத்துல வெளையுது?

நாகேஷ்: மஹாராஷ்ட்ரா

வி.கே.ராமசாமி: துவரம்பருப்பு?

நா: மத்திய மாகாணம்

வி.கே.ரா: கடுகு?

நா: கல்கட்டா

வி.கே.ரா: வெங்காயம் பச்சமொளா?

நா: ஆந்திர பிரதேசம்

வி.கே.ரா: எண்ணெய்?

நா: குஜராத்

வி.கே.ரா: எரிகட்ட?

நா: அதுவொரு மாகாணம்

வி.கே.ரா: இருப்புச்சட்டி?

நா: ரூர்கிலா (Rourkela, ஒரிசா)

வி.கே.ரா: அரிகரண்டி

நா: பிலாய் (bhilai, சத்தீஸ்கர்)

வி.கே.ரா: அரவ மாஸ்டர்

நா: ராமநாதபுரம்

வி.கே.ரா: சரக்கு மாஸ்டர்

நா: திருவனந்தபுரம்

வி.கே.ரா: ஓட்டல் மாஸ்டர்

நா: உடுப்பி

வி.கே.ரா: ஒரு மசால்வடைக்கே இத்தன மாகாணங்கள் ஒண்ணுசேரவேண்டி இருக்கே!
மாகாணங்கள பிரிச்சு குடுத்துட்டா மசால்வட எப்பிடி சாப்பிடுவ?!
-----------------------------

இந்த வாதம் நகைச்சுவையாக இருந்தாலும் கருத்துடன் உள்ளது.

இதுபற்றி இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம்.

தமிழகத்தில் மேற்கண்ட பொருட்கள் எதுவுமே கிடைக்காதா?

எல்லாமே கிடைக்கிறது.
பருப்பைத் தவிர.

குளித்தலை பக்கம் மட்டும் துவரம்பருப்பு விவசாயம் நடக்கிறது.
குறிப்பாக தோகைமலை ஒன்றியத்தில் இனுங்கூர், நல்லூர், பணிக்கம்பட்டி, நச்சலூர், சேப்பளாப்பட்டி, நெய்தலூர், முதலைபட்டி, தோகைமலை, கழுகூர், நாகனூர், பொருந்தலூர், பாதிரிபட்டி, பில்லூர், வடசேரி, புழுதேரி, ஆர்ச்சம்பட்டி, ஆலத்தூர், தளிஞ்சி, கள்ளை, புத்தூர், கூடலூர், கல்லடை, சின்னையம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகள் துவரை விளைச்சலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

  இது தமிழகத்தின் 10% பருப்பு தேவையைக் கூட பூர்த்தி செய்வதில்லைதான்.
இதேபோல இந்தியா முழுவதும் பருப்பு தட்டுப்பாடு உள்ளது.
அதாவது பருப்பு தேவையில் 30% மட்டுமே பூர்த்தியாகிறது.

சுருங்கச் சொன்னால் நம்மால் தமிழகத்திலேயே மசால்வடை தயாரிக்க முடியாது என்றில்லை.
ஆனால் இன்றைய நிலையில் விலை இருமடங்கு அதிகமாக இருக்கும்.

விவசாயம் என்றாலே நாம் அரிசி பற்றி நினைக்கிறோம்.
ஆனால் குழம்புக்கு தேவையான பருப்பு பற்றி நாம் யோசிப்பதில்லை.

அரிசிச் சோறும் குழம்பும் நமது உணவுக் கலாச்சாரத்தில் 50 ஆண்டுகள் முன்புவரை கிடையாது.
கூழாக குடிக்கும் தானிய உணவுமுறையே நமது பண்பாடு.

அரிசி உணவை முக்கியமான சில நாட்களில் மட்டுமே உண்டுள்ளோம்.

ஏனென்றால் தமிழகத்தில் டெல்டா பகுதியில் வளமான வண்டல் மண் நமக்கு தாராளமான அரிசி தரும் அளவு இருந்தாலும் தமிழகத்தின் முக்கிய மண்வகை செம்மண் ஆகும்.
இது தமிழக மண்பரப்பில் ஏறத்தாழ 60% ஆகும்.
இதில் தற்போது பெரும்பாலும் பருத்தி விளைவிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் சோளம், கம்பு ஆகியவையும் நன்கு விளையும்.
பருப்பு கூட விளையும்.
தண்ணீரும் அதிகம் தேவைப்படாது.

நான் வேளாண் அறிஞன் இல்லை.
தெரிந்தவரை கூறியுள்ளேன்.

என் நோக்கம் நாம் தனிநாடாகும்போது எதற்கும் கையேந்தாமல் இருக்கவேண்டும்.

அதற்கு நாம் நமது மண்சார்ந்த உணவுமுறைக்குத் திரும்ப வேண்டும்.

No comments:

Post a Comment