Thursday 9 August 2018

ஈழ ஆதரவினால் ஆட்சியை இழந்தவரா கருணாநிதி?!

ஈழ ஆதரவினால் ஆட்சியை இழந்தவரா கருணாநிதி?!

கருணாநிதி ஈழ ஆதரவினால் ஆட்சியை இழந்ததாகக் கூறுவது பொய்.

  1991 இல் லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் (திராவிடநாடு) பிரிவினை ஆகிய காரணங்களுக்காகவே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

இதோ சான்று படம்

[ மக்கள் குரல் (பத்திரிக்கை) தலையங்கம்

லஞ்சம் - அதிகார துஷ்பிரயோகம் - பிரிவினை
கருணாநிதி மந்திரிசபை டிஸ்மிஸ்
ஜனாதிபதி ஆட்சி அமுல் ]

(நன்றி: வடிவேலன் கலியபெருமாள் )

இதுபோக,
கருணாநிதியின் ஈழ வெறுப்பு மனநிலைக்கு ஏகப்பட்ட சான்றுகள் உண்டு.

1989 இல் திமுக வில் இருந்த வைகோ (இந்திய உளவுத்துறை உதவியுடன்) ஈழத்திற்கு பயணம் செய்கிறார்.

[ சான்று படம்:
இந்திய உளவாளி வைகோ
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_1.html ]

வைகோவின் இந்த செயலைக் கடுமையாக விமர்சித்தார் கருணாநிதி.
வைகோ சென்றதுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்.

இதற்குப் பிறகு விடுதலைப் புலிகள் வைகோ மூலம் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம் சுமத்திவந்தார் கருணாநிதி.

வைகோ தனக்கு புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று பலமுறை விளக்கமளித்தார்.

[ சான்று படம்:
எனக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை - வைகோ
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_77.html ]

ஆயினும் அவரைக் கட்சியை விட்டே நீக்கினார் கருணாநிதி.
இதனால் 1993 இல் வைகோ புதுக் கட்சி தொடங்கினார் வைகோ.

அப்போதும் அவர் புலிகளின் கையாள் என்று குற்றம் சுமத்தினார் கருணாநிதி.
புலிகளுடன் தொடர்புடையோர் ம.தி.மு.க வை விட்டு விலகுமாறு வைகோ அறிவித்தார்.

[ சான்று படம்:
புலிகளுடன் தொடர்புடையோருக்கு ம.தி.மு.க.வில் இடமில்லை - வைகோ
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_10.html ]

1997 ல் இனத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் பழ.நெடுமாறன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி புலிகளின் 50 லட்ச ரூபாய் வரையான பணத்தையும் மருந்தையும் அதை வாங்க வந்த போராளிகளையும் பிடித்துவைத்துள்ளதாக எழுதியுள்ளார்.

[ சான்று:
பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" என்ற நூல்
படம்:
http://vaettoli.blogspot.com/2018/07/blog-post_55.html ]

கருணாநிதி ஆட்சியைக் கலைக்க கூறப்பட்ட பல காரணங்களில் ஒன்று அவர் தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்பதும் ஒன்று.

அதை வைத்துக்கொண்டு தி.மு.க வினர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதை யாரும் நம்பவேண்டாம்.

No comments:

Post a Comment