Showing posts with label பொய். Show all posts
Showing posts with label பொய். Show all posts

Wednesday, 24 July 2019

சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு

சமணர் கழுவேற்றம் - சான்றுகளுடன் மறுப்பு

பாண்டிய மன்னன் நெடுமாறன் என்ற கூன் பாண்டியன் என்பவன் திருஞானசம்பந்தன் என்ற பார்ப்பன சைவ குரவரின் பேச்சைக் கேட்டு எண்ணாயிரம் சமணர்களை கழுமரத்தில் ஏற்றிக் கொன்றதாகக் கூறப்படுவது உண்மையா???

இல்லை!

சமணர் கழுவேற்றம் என்பது உண்மையில் நடந்த சம்பவமல்ல.

அது ஒரு கற்பனையான பழைய நம்பிக்கை மட்டுமே!
அதை தொன்மம் என்று கூறமுடியுமே தவிர வரலாறு என்று ஒத்துக்கொள்ள ஆதாரங்கள் வேண்டும்.
 
சமணர்கள் கழுவேற்றப்பட்டமைக்கு ஆதாரமாக திராவிட தத்துவவாதிகள் காட்டுவது கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சைவ சமய பக்தி இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைக்குறிப்புகளில் உள்ள கற்பனைகளைத் தான்.

ஆனால் சமணரை வாதத்தில் வென்ற  (கி.பி. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த) அப்பர், திருஞானசம்பந்தர் ஆகியோர் பாடிய பாடல்களில் கழுவேற்றம் குறித்த குறிப்புகள் ஏதுமில்லை.
அவர்கள் சமணர்களை வாதத்தில் வென்று அவமதிக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகள் மட்டுமே செய்துள்ளனர் என அறியமுடிகிறது.

250 ஆண்டுகள் கழித்து கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் நாயன்மார்களின் இலக்கியங்களை சேகரித்து தொகுத்து அதற்கு அவர் உரை எழுதுகிறார்.
அதுவே பெரிய புராணம் ஆகும்.

அதில்தான் நாயன்மார்களுக்கு ஆன்மீக சக்தி இருப்பதாகக் காட்ட பல புனைவுக் கதைகள் செருகப்பட்டன.
  சுண்ணாம்புக் காளவாசலுக்குள் இருந்து உயிருடன் வந்தது,
வெள்ளெலும்பை ஒரு பெண்ணாக மாற்றியது,
கோயில்க் கதவுகளைத் திறக்கவும் மூடவும் பாடியது,
சமணர் கழுவேற்றம் போன்ற பல கற்பனைக் கதைகள் பின்னிட்டு சேர்க்கப்பட்டன.
இவற்றை ஆதாரங்களாக எந்த வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்கமாட்டார்கள் (திராவிட தத்துவவாதிகளைத் தவிர!).

கழுவேற்றம் நடந்தது குறித்த கல்வெட்டுகளோ, செப்பேடுகளோ எதுவுமே இல்லை.
சமணர்களின் நூல்களில் கூட கழுவேற்றம் நடந்தது குறித்த சான்றுகள் காணப்படவில்லை.

இச்சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரும் பல நூற்றாண்டுக்காலம் சமணம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது.

கழுகுமலை உட்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் சமண மடாலயங்களும், சமணக் கோயில்களும் கி.பி. 10ம் நூற்றாண்டு முதல் கி.பி. 14ம் நூற்றாண்டு வரையிலான காலங்களில் செழிப்புடன் இருந்துள்ளன என்பதை கோ.செங்குட்டுவன் எழுதிய "சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்றுத் தேடல்" எனும் நூல் ஆதாரங்களுடன் பதிவு செய்கிறது.

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குலோத்துங்கச் சோழன் கூட ஒரு சமணன் தான்.

எண்ணாயிரம் என்பது வணிகர் குலப்பெயர்.
அக்காலங்களில் வணிகர்கள் பெரும்பாலும் சமண சமயத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர் (எ-டு: கோவலன்).
வணிகர்கள் எண்ணாயிரத்தவர் கூட்டம் நாலாயிரத்தவர் கூட்டம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டனர் என்பதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன.
கொள்ளையர்களை எதிர் கொள்வதற்காக அன்றைய வணிகர்கள் பத்தாயிரம் நபர்கள் முதல் நானூறு நபர்கள் வரையுள்ள குழுக்களாகத் தான் இருப்பார்கள்.
ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சிறிய போர்ப்படையாகவே அவர்கள் இருப்பார்கள்.
(கோவலனுடைய இது போன்ற வணிகப் படையே மதுரையை எரித்திருக்கலாம் எனக் கூறுவோரும் உண்டு)
அது போன்ற ஒரு எண்ணாயிரத்தவர் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வணிகன் (எண்ணாயிரம் சமணன்) செய்த ஏதோவொரு குற்றத்திற்காக அவன் கழுவேற்றப்பட்டிருக்கலாம்.

அதை வைத்துக் கொண்டு எண்ணாயிரம் சமணர்கள் கூட்டம் கூட்டமாக கழுவேற்றப்பட்டார்கள் என்ற திரைக்கதை உருவாக்கப்பட்டு பரப்புரை நடபெறுவதாகவே ஊகிக்க முடிகிறது.

இந்த கட்டுக்கதையை தமிழ்ச் சமூகம் எந்தவித ஆய்வுமின்றி ஏற்றது தான் திராவிடத்தின் திட்டமிட்ட சதி.

  தில்லை நடராஜர் கோவிலில் கனகசபை பிரகாரத்தில் வடக்கு
மண்டபச் சுவரிலும்,
புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலிலும்,
திருச்செந்தூர் கோயிலிலும்,
வைகுந்த பெருமாள் கோவிலும்
காஞ்சி கோவிலிலும் (இதன் தலை சிதைக்கப்படுள்ளது) கழுவேற்ற சிலைகள் உள்ளன.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்துக்கு அருகே ஆயிரங்கால் மண்டபத்தில் கழுவேற்றும் ஓவியங்கள் உள்ளன.
 
மேற்கண்ட அனைத்திலுமே கழுவேற்றப்பட்ட மனிதனின் சிலை நீளக்குடுமி,மீசை தாடியுடன் காணப்படுகிறது.

சமண முனிவர்கள் மீசை மழித்து மொட்டையடித்து இருப்பவர்கள்.
ஆகவே இதை எப்படி ஆதாரமாகச் சொல்கிறார்கள் என்பது புரியவேயில்லை.

எந்த மூல ஆதாரங்களையும் காட்டாமல் இப்படியான பிற்கால பின்னொட்டு சான்றுகளை மட்டுமே அடுக்கிக்கொண்டே போவது எந்த வகையில் அறிவுடைமை ஆகும்?!

உண்மையில் சமணர் மொட்டைத் தலையுன் இருந்தனரா?!

இதற்கு ஒரு சான்றினைப் பார்ப்போம்.
12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி.
(சமணர் அதிகம் வாழ்ந்த ஊர்.
இங்கே இருக்கும் சமண கோவில் இன்றும் இயங்கிவருகிறது.
செயங்கொண்டார் சமணரா என்பது தெரியவில்லை)

இவர் பாடிய கலிங்கத்துப் பரணி சமணரின் தோற்றம் பற்றி கூறுகிறது.
அதாவது முதலாம் குலோத்துங்க சோழனிடம் தோற்ற கலிங்கத்து படைவீரர்கள் தலையை மழித்துக்கொண்டு தாங்கள் சமணர் என்று பொய்கூறி தப்பிக்கப் பார்த்ததாக கூறியுள்ளார்.

சரி! இந்த சமணர் கழுவேற்றத் திரைக்கதையை திராவிட தத்துவவாதிகள் இன்றும் ஓட்டி வரக் காரணம் என்ன??

தமிழ் வளர்த்த சைவ சமயத்தை பார்ப்பன மயமானது என்றும் பார்ப்பனர்கள் மற்றும் பாண்டியர்கள் இனப்படுகொலை செய்யுமளவு கொடூரமானவர்கள் என்றும் நம்பவைப்பதற்காக மட்டுமே இந்தச் “சமணர் கழுவேற்றம்” என்ற பொய்யை திராவிட தத்துவவாதிகள் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.

சமணர் கழுவேற்றம் எனும் கட்டுக்கதை உருவானதும் பரவியதும் எப்படி?!

இக்கதையை முதன்முதலாக உருவாக்கிய நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரும் திருஞானசம்பந்தருக்கு 350 ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்கள்.
இதனாலேயே இவர்களது நம்பகத்தன்மை வெகுவாகக் குறைந்து விடுகிறது.

  நம்பியாண்டார் நம்பி முதன்முதலில் தனது சம்பந்தர் புகழ்மாலைப் பாடல்களில் இப்படி ஒரு கற்பனையைப் பதிவு செய்கிறார்.

சேக்கிழார், பரஞ்சோதி முனிவர் (திருவிளையாடற்புராணம்) ஊடாக, மதுரை உத்சவத்தில் திருவிழாவாகக் கொண்டாடச் செய்கிறார்.

பிற்பாடு அருணகிரிநாதர் கூட இந்த கழுவேற்றத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கழுவேற்றம் எனும் சடங்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயில், திருமங்கலம் பத்திரகாளியம்மன் கோயில் ஆகிய கோவில்களில் நடத்தபடும் திருவிழா நாடகங்களில் இடம்பெற்று வந்தது.

பெரியபுராணம் 1860 களில் அச்சில் வெளிவந்த பிறகு மீண்டும் இந்த கட்டுக்கதை மக்களிடையே பிரபலமாகிறது.

வள்ளலார் இது பற்றி மனம் பதறி சிவனிடம் முறையிடுவது போல எழுதியுள்ளார்.

அதன்பிறகு தமிழறிஞர்களுக்கு இடையே நடந்த விவாதங்களில்
அ. ஈசுவரமூர்த்திப் பிள்ளை, சி.கே.சுப்பிரமணிய முதலியார், க.வெள்ளைவாரணர், மயிலை. சீனி.வெங்கடசாமி போன்றோர் சமண கழுவேற்றம் உண்மை என்று வாதிட்டுள்ளனர்.
ஆனால் திரு.வி.க, வையாபுரிப்பிள்ளை, நீலகண்ட சாஸ்திரி, ரா.ராகவையங்கார், கா.சு.பிள்ளை, கலாநிதி கைலாசபதி, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆகிய பெரும்பாலோர் சமணர் கழுவேற்றம் நடந்திருப்பதாக கூறுவதை மறுத்திருக்கின்றனர்.
இதையெல்லாம் விட தமிழ்ச் சமண அறிஞரான டி.எஸ்.ஸ்ரீபால் அவர்களும் நன்கு ஆராய்ந்து "இது வரலாற்றுச் சம்பவம் அல்ல" என்று முடிவாகக் கூறியுள்ளார்.

ஆக,

சம்பந்தர் , அப்பர் தேவாரங்களில் வாதத்தில் தோற்ற சமணர் தண்டிக்கப்பட்டதற்கான அகச்சான்றுகள் இல்லை.

பல்லவ , பாண்டிய, சோழர்கள் வெட்டிய அனைத்து கல்வெட்டுகளிலும் இந்தச் சம்பவத்தைக் குறித்து எந்த ஆதாரமும் இல்லை.

சமணர்களை கழுவிலேற்றிக் கொன்றதாக பாண்டியர்கள் மீது வீண்பழி போடப்படுகிறது.
  ஆனால் உண்மையில் 7 ஆம் நூற்றாண்டுக்கு பிறகும் சமணர்க்கு குகைகளும் கற்படுக்கைகளும் பாண்டியர்கள் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
அவை வருமாறு,

மகிபாலன்பட்டிக் குடைவரை
அரளிப்பாறைக் குடைவரை
திருமெய்யம் குடைவரைகள்
கழுகுமலைக் குடைவரை
திருத்தங்கல் குடைவரை
செவல்பட்டிக் குடைவரை
திருமலைக் குடைவரை
திருச்செந்தூர் வள்ளிக்கோயில் குடைவரை
மனப்பாடுக் குடைவரை
மூவரை வென்றான் குடைவரை
சித்தன்னவாசல் குடைவரை
( சீமாறன் சீவல்லபன் காலத்தில் விரிவாக்கப்பட்டது)
ஐவர் மலைக் குடைவரை
அழகர் கோயில் குடைவரை
ஆனையூர்க் குடைவரை
வீர சிகாமணிக் குடைவரை
திருமலைப்புரம் குடைவரை
அலங்காரப் பேரிக் குடைவரை
குறட்டியாறைக் குடைவரை
சிவபுரிக் குடைவரை
குன்றக்குடிக் குடைவரைகள்
பிரான்மலைக் குடைவரை
திருக்கோளக்குடிக் குடைவரை
அரளிப்பட்டிக் குடைவரை
அரிட்டாபட்டிக் குடைவரை
மாங்குளம் குடைவரை
குன்றத்தூர் குடைவரை
கந்தன் குடைவரை
(யானைமலை நரசிங்கர் குடைவரை
பராந்தகன் நெடுஞ்சடையனின் இரட்டைத் தளபதிகளான மாறன் காரியும், மாறன் எயினனும் கட்டியது)
தென்பரங்குன்றம் குடைவரை
வடபரங்குன்றம் குடைவரை.

இத்தனை குழப்பத்திற்கும் காரணம் யார்?!

12 ஆம் நூற்றாண்டில் சோழர்களுடன் திருமண உறவின் மூலம் கலந்த சாளுக்கியர் அநாபய சாளுக்கியன் காலத்தில் சோழ அரசைக் கைப்பற்றி சோழர் என்ற பெயரிலேயே ஆட்சி செய்கிறார்கள்.
இவர்கள் சைவ  மதவெறியர்கள்.
பாண்டியநாடு வரை இவர்கள் ஆட்சியே என்பதால் பாண்டியர் மீது களங்கம் கற்பிக்கும் இந்த கழுவேற்ற கட்டுக்கதை இவர்கள் தூண்டுதலால் உருவாக்கப்படுகிறது.

மற்றபடி சமணரே கூட இப்படி ஒரு பழியை பாண்டியர் மீது போடவில்லை.
சமண மதம் சார்ந்த புராணங்களிலேயோ நூல்களிலோ  கல்வெட்டுகளிலேயோ கூட கழுவேற்ற சம்பவத்தைப் பற்றி
எந்தக் குறிப்புகளும் இல்லை.

கழுவேற்றம் நடந்ததாகக் கூறப்படும் 7 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சமணர்கள் தமிழில் எழுதிய நூல்கள் வருமாறு,
1. சிந்தாமணி
2. வளையாபதி
3. நீலகேசி
4. யசோதர காவியம்
5. உதயணகுமார காவியம்
6. சூளாமணி
7. பெருங்கதை
8. நன்னூல்
9. சூடாமணி நிகண்டு
10. யாப்பெருங்கலக் காரிகை
11. யாப்பெருங்கலம்
12. அமுதசாகரம்
13. அருங்கலச் செப்பு
14. அறநெறி சாரம்
15. திருநூற்றந்தாதி
16. திருப்புகழ்ப் புராணம்
17. மேருமந்தர புராணம்
18. திருக் கலம்பகம்
19. தீபக்குடி பத்து
20. ஸ்ரீ புராணம்

சமணர்கள் கழுவேற்றப்பட்டதாகச் சொல்லும் இடங்களில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு பின் வந்த நூற்றாண்டுகளில் பல புதிய சமணக் கல்வெட்டுகள் அதிகரித்திருக்கின்றன.

சமணர்கள் அழிக்கப்பட்டிருந்தால் எப்படி இத்தனைக் கல்வெட்டுகளை ஏற்படுத்த முடியும்?

கழுவேற்றம் நடந்த காலக்கட்டத்தைப் பற்றி எழுதிய ஏழு வரலாற்றாசிரியர்கள் இந்தச்சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

இவர்களுள் ரொமிலா தாபரும் (தீவிர இந்து மதவாதி) ஜைன வரலாற்றின் வல்லுனர் என அறியப்படும் பால் டுண்டாஸும் அடங்குவர்.

இந்தக் காரணங்கள் இன்று வரை யாராலும் சான்றுகளுடன் மறுக்கப்படவில்லை.
சமணர் கழுவேற்றம் உண்மைதான் என்று தீக்கதிரில் கட்டுரை எழுதிய (தெலுங்கரான) கம்யூனிஸ்டு
அருணன் கூட சரியான முறையில் இதுவரை இதை மறுக்கவில்லை.

முடிவாக,
கன்னட சாளுக்கியரால் உருவாக்கப்பெற்று
மதுரை தெலுங்கு நாயக்கர்களால் பரப்பப்பட்டு
வந்தேறி திராவிடவாதிகளால் மெருகேற்றப்பட்டு
தமிழர் மீது போடப்படும் வீண்பழியே "சமணர் கழுவேற்றம்" எனும் கட்டுக்கதை!

Friday, 21 September 2018

உனக்கேன் கொடுப்பது கிஸ்தி என கேட்டது கள்ளர் கூட்டமைப்பு

உனக்கேன் கொடுப்பது கிஸ்தி என கேட்டது கள்ளர் கூட்டமைப்பு

"வானம் பொழிகிறது! பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி"
இந்த வசனத்தை உண்மையில் பேசியது மதுரை கள்ளர்கள்.
இது ஆங்கிலேயர் ஆவணத்தில் பதிவாகி உள்ளது.

இந்த வசனத்தை காப்பி அடித்து சம்மந்தம் இல்லாமல் கட்டபொம்மு பேசியதாக கதை அமைத்து அதையும் ஒரு கள்ளர் (சிவாஜி கணேசன்) வாயாலேயே பேச வைத்துவிட்டார் இயக்குனர் தெலுங்கு பந்துலு.

Source :The Madura Country: A Manual.

நன்றி: Karthik Thevar

------------------------

 1750களில் பிரிட்டிஸார் மதுரை மண்டலத்தில் வரி வசூல் செய்யும்உ ரிமையை பெற்று தன்னரசு கள்ளர்நா ட்டிற்கு வந்த பொழுது பிரிட்டீஸார்க ள்ளர் நாட்டாரிடம் வரி கேட்ட போது அவர்கள் அளித்த பதில் என்னவென்று பிரிட்டிஸாரே புத்தகம் எழுதியுள்ளனர்.

 ராபர்ட் ஓர்ம், s.c ஹீல், எட்கர் தர்ட்சன்எ ழுதிய நூல்களில் பிரிட்டீஸ் அரசு தன்னரசு கள்ளர்களிடம் வரியை கேட்டது அதற்கு அவர்கள் அவமானம்  அளிக்கும் வார்த்தைகளால் பதிலை அளித்தார்கள் என்று கூறுகிறார்கள்.

கள்ளர்களின் பதில்:

“வானம் பூமிக்கு மழையைத் தருகிறது,

எங்கள் வயலை நாங்கள் உழுது பயிரிட்டு உழைக்கிறோம். 

அதனால் கிடைக்கும் பிரதிபலனை எங்கள் மக்கள் அனுபவிக்கிறார்கள். 

இதில் என்ன காரணம் உள்ளது நாங்கள் உங்களுக்கு கீழ்பணிந்து வரி செலுத்துவதற்கு?”

மேலும் அந்த புத்தகத்தில் அவர்கள் அந்த பதிலுக்கு ஏற்றார்போல் எங்களிடம் சண்டையிட்டார்கள் என்றும் கூறுகின்றனர்.

சான்றுகள்:-

The rebel commandant by S.C Hill

East india magazine by R.Alexander

Castes and Tribes of south India by Edger thurston

நன்றி:-

சோழ பாண்டியன்

ஏழுகோட்டை நாடு




Saturday, 18 August 2018

வெள்ளத்திலும் கரையாத மலையாள இனவெறி

வெள்ளத்திலும் கரையாத மலையாள இனவெறி
-----------------------
முல்லைப் பெரியாறுக்கு குறுக்கே சட்டவிரோதமாக 3 அணைகள்!

வெள்ளத்திற்கு காரணம் முல்லைப் பெரியாறு என்ற பொய்ப்பிரச்சாரம் !

  அணை உடையுமென ஊடகங்கள் பயமுறுத்தல் !

தமிழக எல்லைக்குள் அணையை உடைத்து மின்சார ஆலைக்கு தண்ணீர் ஏற்பாடு!

முல்லைப் பெரியாறு தேக்க நீர்மட்டத்தைக் குறைக்க வழக்கு!

வெள்ளத்திலும் கரையாத மலையாள இனவெறி!
--------------
தலைப்பு: மலையாளத்துரோகம் ஓயாதா?!

பதிவர்கள்:
தேனியிலிருந்து ச.அன்வர் மற்றும் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி

பொறுமையாகத்தான் இருக்கிறோம்...

எதுவும் பேசிவிடக்கூடாது...

அப்பாவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்...

உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் அதிக அளவில் இருக்கிறது...

மழையும் நின்றபாடில்லை என்பதால் அளவுகடந்த பொறுமையோடு அமைதிகாக்கிறோம்...

ஆலுவாவையும் எர்ணாகுளத்தையும் தண்ணீர் சூழ முல்லைப்பெரியாறு அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரே காரணம் என்று சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் மலையாள இனவெறிக் கும்பல்களை கிழித்து தொங்கவிட ரொம்ப நேரமாகாது....

ஆனாலும் நடப்பது என்ன....?

Malayala varthaikal என்கிற மலையாள செய்திச்சேனலில் தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை உடையப்போகிறது என செய்தி போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

Shanis india என்கிற சேனலிலோ பிரபல முன்னறிவிப்பாளர் நாஸ்டர்டாமே 2020 ம் ஆண்டு ஜீலை 6,7,8 ஆகிய தேதிகளில் முல்லைப்பெரியாறு அணை உடையும் என்று சொல்லியிருக்கிறாராம்.

இன்னொரு பேப்பயலோ breaking mullaiperiyar in hd என்று அணை உடைந்து போகுமாறு கிராபிக்ஸ் செய்து காட்சிப்படுத்தியிருக்கிறான்.

பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் பிஜீமோளும்
தேவிகுளத்து ராஜேந்திரனும்
உடும்பஞ்சோலை எம்.எம்.மணியும் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதோ உடையப்போகிறது அணை...
அதோ உடையப்போகிறது என்று இந்த அரைவேக்காடுகள் ஊளையிட ஆரம்பித்து 38 ஆண்டுகள் முடியப்போகிறது.

ஆனால் ஒரு சிறு கீறல்கூட இன்றுவரை விழவில்லை.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இடுக்கியைச்சேர்ந்த ரசூல் என்கிற அறிவாளி நேராக உச்சநீதிமன்றம் சென்று அணையின் நீர்மட்டத்தை 142 லிருந்து 139 ஆக குறைக்கவேண்டும் என்று மனுப்போட்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இந்த மனுமீது தீர்ப்பளித்த நீதியரசர் தீபக் மிஸ்ரா மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய குழுவின் வழிகாட்டுதல்படி நீர்மட்டத்தை குறைப்பது குறித்து தமிழக-கேரள அரசின் தலைமைச்செயலாளர்களுடன் முல்லைப்பெரியாறின் பேரிடர் மேலாண்மைக்குழு உடனடியாக ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

கண்டிப்பாக தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாகவே வர வாய்ப்புள்ளது.

மலையாளிகளின் வஞ்சகத்திற்கு ஒரு எல்லையே கிடையாதா என மனம் கொதிக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைக்கு வரக்கூடிய தண்ணீரை மறித்து இடுக்கி அணைக்கு கொண்டு செல்வதற்காக இதே மலையாளிகள் 1971 லிருந்து 1984 வரை மூன்று அணைகளைக்கட்டியதை வசதியாக மறந்துவிட்டார்கள்.

கட்ச் அணை, சபரிகிரி அணை, ப்ளீச்சிங் அணை என்கிற மூன்று அணைகளும் முல்லைப்பெரியாறை மறித்து கட்டிய அணைகளாகும்.

மேற்கண்ட இந்த மூன்று அணைகளும் கடந்த ஜூலை இறுதியிலேயே நிரம்பிவிட்டது.

ஆனால் முல்லைப்பெரியாறு 142 அடியை எட்டியது ஆகஸ்ட் 15 ம் தேதிதான்.
ஜீலையிலேயே மேற்கண்ட மூன்று அணைகளிலிருந்தும் உபரி நீரை திறக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதனால்தான் முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறக்காமலேயே இடுக்கி அணை தன் முழுக்கொள்ளளவை எட்டியது.

ஆகஸ்ட் 15 ல் தான் பெரியாறு அணை திறக்கப்பட்டது.
ஆனால் ஆலுவாவையும் எர்ணாகுளத்தையும் நெடும்பாசேரி விமான நிலையத்தையும் வெள்ளம் சூழ்ந்தது ஆகஸ்ட் 6.
மறக்க வேண்டாம்.

மேற்கண்ட மூன்று அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர் வண்டிப்பெரியாறு இரும்புபாலத்தின் கீழே கரைபுரண்டு ஜூலை 20 முதல் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது பிஜீமோள் கண்களுக்கு தெரியவில்லையா.

இதற்கெல்லாம் மேலாக ஆனையிறங்கல் அணை நீர், குளமாவு அணை நீர், செருதோணி அணை நீர், கல்லாற்றில் பெருக்கெடுத்து ஓடும் நீர், பாம்பனாறு சுரங்கம் வழியாக செல்லும் நீர், மாட்டுப் பெட்டி மற்றும் குண்டல அணைகளிலிருந்து வெளியேறும் நீர் என கிட்டத்தட்ட எண்பதாயிரம் கனஅடி தண்ணீர் இடுக்கியை முற்றுகையிட்டதாலேயே இடுக்கி அணை நிரம்பியது.

மிகத்தந்திரமாக மலையாள அரசியல்வாதிகள் செய்த இந்த செயல்களே இன்றைக்கு அவர்களுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

தமிழக எல்லைக்குள் வாசுதேவநல்லூர் அருகே இருந்த செண்பகவல்லி அம்மன் கோவில் அணைக்கட்டை உடைத்து அதையும் இடுக்கி அணைக்கு கொண்டுவந்து சேர்த்தவர்கள்தான்,
இன்றைக்கு யோக்கியர்கள் போல வேசமிட்டுக்கொண்டு நடிக்கிறார்கள்.

முதல்வர் பினராயி விஜயனின் தடிப்போ திலகனின் நடிப்பைத்தாண்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் திறக்கப்படும் நீரால் நாற்பது லட்சம் மக்கள் மாண்டுபோவார்கள் என பொய்ப்பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு களரி ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

அட முட்டாள்களே...!

முல்லைப்பெரியாறு நீர் பள்ளத்தாக்கில் பாயும் ஒரு ஆறு என்பது ஏன் உங்கள் மண்டைகளுக்கு உறைப்பதில்லை.

பெரியாற்றில் திறந்துவிடப்படும் நீர் புல்மேடு, வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, உப்புத்துறை, தேங்காய்க்கல், பசுமலை, நேரிகுளம் வழியாக இடுக்கி அணைக்கு செல்கிறது.

வழிநெடுகிலும் பெரியாற்று நீரால் எவருக்கும் துளி அளவு பாதிப்பில்லை என்று தெரிந்தும் மலையாள வெறியர்கள் முல்லைப்பெரியாறை குறிவைக்க காரணம் இடுக்கி அணையின் மூலம் வரும் 780 மெகாவாட் மின்சாரமே.

ஆகவே மலையாள வெறியர்களே முல்லைப்பெரியாறு அணையை உடைக்கும் முன்பு கேரள அரசு சட்டவிரோதமாக கட்டியிருக்கும் கட்ச் அணை சபரிகிரி அணை மற்றும் பிளீச்சிங் அணைகளை இடித்து தரைமட்டமாக்குங்கள்.

ஆலுவாவும் எர்ணாகுளமும் தண்ணீரில் மூழ்கக்காரணம் இந்த மூன்று அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர்தான்.

அதிலும் இந்த ஏசியாநெட் சேனல்கார பொறுக்கிகளின் அடாவடியும் மலையாள மனோரமா என்கிற மஞ்சள் பத்திரிக்கை நடத்துகின்ற மாமாக்கள் செய்கிற அட்டகாசமும் கொஞ்சநஞ்சமல்ல.

மழை வெள்ள சேதத்திற்கு நிவாரணம் தேடச்சொன்னால் மானங்கெட்டவனுக முல்லைப்பெரியாறை உடைக்கணும்கிறான்.

இனி பொறுப்பதற்கில்லை.
மலையாள துரோகங்களை இனி சகிக்கமுடியாது.
யூடியூபில் முல்லைப்பெரியாறு அணையைப்பற்றி தவறாக பிரச்சாரம் செய்தால் முதலில் செருப்பால் அடிப்போம்.
பின்னர் உச்சநீதிமன்றம் செல்வோம்.

பி. கு-
இதைப் படித்த பிறகும் "ஐயைய்யோ கேரளா முங்குதே" எவனாவது முனங்கினா
அவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
-------------

படம்: தமிழகத்திலிருந்து கேரளா நோக்கி செல்லும் பேரியாறு நீரோட்டத்தைத் தடுத்து தமிழகத்திற்கே திருப்பும் முல்லைப்பெரியாறு அணையின் மாதிரி வடிவம்

Thursday, 9 August 2018

ஈழ ஆதரவினால் ஆட்சியை இழந்தவரா கருணாநிதி?!

ஈழ ஆதரவினால் ஆட்சியை இழந்தவரா கருணாநிதி?!

கருணாநிதி ஈழ ஆதரவினால் ஆட்சியை இழந்ததாகக் கூறுவது பொய்.

  1991 இல் லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் (திராவிடநாடு) பிரிவினை ஆகிய காரணங்களுக்காகவே அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.

இதோ சான்று படம்

[ மக்கள் குரல் (பத்திரிக்கை) தலையங்கம்

லஞ்சம் - அதிகார துஷ்பிரயோகம் - பிரிவினை
கருணாநிதி மந்திரிசபை டிஸ்மிஸ்
ஜனாதிபதி ஆட்சி அமுல் ]

(நன்றி: வடிவேலன் கலியபெருமாள் )

இதுபோக,
கருணாநிதியின் ஈழ வெறுப்பு மனநிலைக்கு ஏகப்பட்ட சான்றுகள் உண்டு.

1989 இல் திமுக வில் இருந்த வைகோ (இந்திய உளவுத்துறை உதவியுடன்) ஈழத்திற்கு பயணம் செய்கிறார்.

[ சான்று படம்:
இந்திய உளவாளி வைகோ
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_1.html ]

வைகோவின் இந்த செயலைக் கடுமையாக விமர்சித்தார் கருணாநிதி.
வைகோ சென்றதுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்.

இதற்குப் பிறகு விடுதலைப் புலிகள் வைகோ மூலம் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக தொடர்ந்து குற்றம் சுமத்திவந்தார் கருணாநிதி.

வைகோ தனக்கு புலிகளுடன் எந்த தொடர்பும் இல்லை என்று பலமுறை விளக்கமளித்தார்.

[ சான்று படம்:
எனக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை - வைகோ
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_77.html ]

ஆயினும் அவரைக் கட்சியை விட்டே நீக்கினார் கருணாநிதி.
இதனால் 1993 இல் வைகோ புதுக் கட்சி தொடங்கினார் வைகோ.

அப்போதும் அவர் புலிகளின் கையாள் என்று குற்றம் சுமத்தினார் கருணாநிதி.
புலிகளுடன் தொடர்புடையோர் ம.தி.மு.க வை விட்டு விலகுமாறு வைகோ அறிவித்தார்.

[ சான்று படம்:
புலிகளுடன் தொடர்புடையோருக்கு ம.தி.மு.க.வில் இடமில்லை - வைகோ
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_10.html ]

1997 ல் இனத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் பழ.நெடுமாறன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி புலிகளின் 50 லட்ச ரூபாய் வரையான பணத்தையும் மருந்தையும் அதை வாங்க வந்த போராளிகளையும் பிடித்துவைத்துள்ளதாக எழுதியுள்ளார்.

[ சான்று:
பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" என்ற நூல்
படம்:
http://vaettoli.blogspot.com/2018/07/blog-post_55.html ]

கருணாநிதி ஆட்சியைக் கலைக்க கூறப்பட்ட பல காரணங்களில் ஒன்று அவர் தமிழ்த் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்பதும் ஒன்று.

அதை வைத்துக்கொண்டு தி.மு.க வினர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதை யாரும் நம்பவேண்டாம்.