கள்ளழகர் கதை ஒரு பொய்க்கதை
திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்,
மாசி மாதத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடக்கும்
இரண்டு மாதம் கழித்து,
சித்திரை மாதத்தில் அழகர் ஆற்றில் இறங்குவார்
என்றால் கள்ளழகர், மீனாட்சி கல்யாணத்தைப் பார்க்க வருகிறார் என்ற கதை பொய்தானே?!
திருமலை நாயக்கர் இந்த இரண்டு விழாவையும் ஒன்றாக்கி சித்திரையில் கொண்டாடுமாறு மாற்றியமைத்துள்ளார்.
மீனாட்சியம்மனும் சுந்தரேஸ்வரரும் தம்பதிகளாக ஊர்வலம் வரும் தெருக்கள் இன்றும் மாசிவீதிகள் என்று அழைக்கப்படுகின்றன.
மீனாட்சி அழகரின் தங்கை என்பதற்கு எனக்குத் தெரிந்தவரை எந்த சான்றும் கிடையாது.
இதேபோல இராசராசனின் சதய திருவிழாவும் மாதம் மாற்றப்பட்டுள்ளது.
கடவுள்கள் வரலாறை ஆள்பவன் நினைத்தால் மாற்றமுடிகிறதே?!
வந்தேறிகள் இப்படித்தான் ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களின் ஒவ்வொரு விழாவையும் குழப்பி வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment