Monday 3 April 2017

தாலி அறுத்தான் சந்தை

தாலி அறுத்தான் சந்தை

குமரி மாவட்டம் மலையாளிகள் பிடியில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பெண்கள் மார்பு அளவிற்கேற்ப முலைவரி வசூலிக்கப்பட்டது.

மார்பை மூடவும் அனுமதி இல்லை.

அந்நிலையில் ஒரு சந்தையில் மலையாள சண்டியர்கள் அமர்ந்துகொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக்கொண்டு பரிகாசம் செய்துவந்தனர்.

அச்சந்தை  இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

இந்த முலைவரி நாஞ்செலி அல்லது நங்கெலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி கட்டமுடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் எழுந்த பெரும்போராட்டத்திற்குப் பிறகு (தோள்சீலைக் கலகம்) விலக்கப்பட்டது.

  1950 களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது.

2 comments:

  1. மலையாளிகள் என்று பதிவிடுவது தவறு. சனாதனிகள் என்று குறிப்பிடலாம். கீழ்சாதி எனப்படும் சில சாதியினர் மேலாடை அணிவது திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கீழ்சாதி பெண் மேலாடை அணிந்து வந்ததால் அறுக்கப்பட்டதுதான் அந்த நிகழ்வு.

    ReplyDelete
  2. அப்போ திருவிதாங்கூர் சமஸ்தானம் யாருடைய ஆட்சி?

    ReplyDelete