Showing posts with label தாலி. Show all posts
Showing posts with label தாலி. Show all posts

Sunday, 6 August 2017

பெண்ணுரிமை என்ற பெயரில் ஈ.வே.ரா உளறியவை

பெண்ணுரிமை என்ற பெயரில் ஈ.வே.ரா உளறியவை

"பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
------------------
"தவிர 'பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது'
என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள்.
உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்?
மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-------------------
"பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்காரனாய் இருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான்.
அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-----------------
"ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும்.
ஜிப்பா போடவேண்டும்.
உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது.
நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்.
பெண்கள் எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகமாகும் – தேவையற்ற தொல்லையுமாகும்.
ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ளவேண்டும்"
- ஈ.வே.ரா (நூல்: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி)
--------
"பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

தலைமயிரை வெட்டிவிட்டால் அதிகநேரம் மீதியாகும்.

பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
அவர்களுக்கு ஒரு குப்பாயம்(மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வுகிடைத்துவிடும்.
(இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்)"
- ஈ.வே.ரா (குடியரசு, 16-11-1930)
--------
"பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும்.
பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்"
- ஈ.வே.ரா (குடியரசு, 21-09-1946)
--------
"100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி, ரோட்டில் கல் உடைத்து, வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல்,
பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள்"
- ஈவெரா (விடுதலை 6.3.1962)
---------
"ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.
உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றிவிடும்.
பிறகு கஷ்டமே இருக்காது"
- ஈ.வே.ரா (குடி அரசு 8-2-1931)
---------
"திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக் கேடாகவும் இருக்கிறது’’
--------
"உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது.
உத்தி யோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள்.
பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள்.”
- ஈ.வே.ரா 17-3-1970
----------
"தாலி என்பது நாய்க்கு நகராண்மைக்கழகம் கட்டும் பட்டை போன்றது.
தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம்.
தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள்.
பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது"
- ஈ.வே.ரா (நூல்: நாய்க்கு லைசன்ஸ் பெண்ணுக்குத் தாலி)
-----------
"உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கியாளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ,
அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும்"
- ஈ.வே.ரா ( நூல்: மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்)
-----------

'பெண்களே உங்களுடைய கர்ப்பப் பைகளை வெட்டி எறியுங்கள்'

‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ (தலைப்பு)

‘ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது’

(நூல்: பெண் ஏன் அடிமையானாள்)
----------------
சுருக்கமாக,
உலகத்தில் ஆண்கள் இருக்கக்கூடாது.
ஆண்கள் போல பெண்கள் மாறி அவர்கள் செய்வதை விட கூடுதலாக அட்டூழியம் செய்யவேண்டும்.
யாரும் குழந்தையும் பெறக்கூடாது.
திருமணம் செய்யாமல் ஒழுக்கமின்றி வாழவேண்டும்.

இதுதான் ஈ.வே.ரா முன்வைக்கும் பெண்விடுதலை.

Monday, 3 April 2017

தாலி அறுத்தான் சந்தை

தாலி அறுத்தான் சந்தை

குமரி மாவட்டம் மலையாளிகள் பிடியில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பெண்கள் மார்பு அளவிற்கேற்ப முலைவரி வசூலிக்கப்பட்டது.

மார்பை மூடவும் அனுமதி இல்லை.

அந்நிலையில் ஒரு சந்தையில் மலையாள சண்டியர்கள் அமர்ந்துகொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக்கொண்டு பரிகாசம் செய்துவந்தனர்.

அச்சந்தை  இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

இந்த முலைவரி நாஞ்செலி அல்லது நங்கெலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி கட்டமுடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் எழுந்த பெரும்போராட்டத்திற்குப் பிறகு (தோள்சீலைக் கலகம்) விலக்கப்பட்டது.

  1950 களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது.

Monday, 13 July 2015

ஆண்களும் அணிந்த தாலி

ஆண்களும் அணிந்த தாலி

! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : ! : !

தாலி என்பது கழுத்து நகையைக் குறிக்கும் பெயர்ச்சொல்.

இதை பழங்காலத்தில் ஆண்களும் பெண்களும் அணிந்தனர்.

ஒரு பெண் ஒரு ஆணை "நான் உன்னைக் கட்டிக்கொள்கிறேன்" என்று கூறுவது முரண்பாடான ஒன்று கிடையாது.
ஆணுக்கு பெண் தாலி அணிவிக்கும் வழக்கத்தையே குறிக்கிறது.
பிறகு இதுவே ஆணின் காலில் பெண் மெட்டி அணிவிக்கும் வழக்கம் வந்தது.
பிறகு அதுவும் பெண்களுக்கு போனது.

புலிப்பல் "தாலி" என்ற அணியைஆண், பெண்
இரு பாலாரும் அணிந்திருந்தனர்
என்பது பண்டைத்தமிழ் இலக்கியங்களில்
இருந்து தெரியவருகிறது .

ஆதிமனிதர் தாம் வேட்டையாடிய சில விலங்குகளின் எலும்புகள் , பற்கள் , நகங்கள் போன்றவற்றை அணிகலன்களாக்கி அணிந்தணர்.

குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த வேட்டுவர்கள் தமது பிள்ளைகளுக்குப் புலிப்பல் தாலி அணிவித்தது சங்க இலக்கியங்களிலிருந்தும் தெளிவாகிறது.
ஆனால், சிறுவரும், சிறுமியரும் புலிப்பல் தாலி அணிந்தமையால் மறக் குலத்தின் வழிவந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக  அணிவிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இவ்வழக்கமே பிற்காலத்தில் "ஐம்படைத் தாலியாக" வளர்ச்சியடைந்தது.
புலிப்பல் தாலி என்னும் காப்பணி ஐம்படைத் தாலிக்கு முற்பட்டது ஆகும்.

ஐம்படைத் தாலி என்பது பண்டைக் காலத்திலிருந்தே தமிழரிடையே வழக்கில் இருந்த ஒருவகை அணிகலன் ஆகும்.
சிறுவர்களின் கழுத்தில் காவலுக்காக இது அணியப்பட்டதாகத் தெரிகிறது .

புறநானூற்றுப் பாடல் ஒன்றில் "தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்" மிக இளம் வயதிலேயே போருக்குச் சென்றதைக் காட்டுமுகமாக,
"தாலி களைந்தன்று மிலனே"
என்று அவன் தாலியை இன்னும் களையாத சிறுவயதினனாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வாலிபப் பருவம் அடைந்தவுடன் தாலியைக் களைந்துவிட்டே கால்களில் கழல் அணியும் வழக்கம் இருந்தது .

"தாலம்" என்ற சொல் புல்வகையைச் சார்ந்த பனை போன்ற தாவரங்களைக் குறிப்பது.
ஒரு காலத்தில் பனை ஓலையைச் சுருட்டி நூலில் கட்டிக் கழுத்தில் அணிந்தமையாலேயே தாலி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்தும் உண்டு.

நோய்வராமல் தடுப்பதற்காக மந்திர ஓலைச் சுருளைக் கை,கால், கழுத்து போன்ற உறுப்புக்களில் அணிந்துகொள்வது பழங்காலத்தில் வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.
எனவே "தாலம்" என்ற சொல்லிலிருந்து காப்பு அணிகளைக் குறிக்கும் "தாலி".என்ற பொதுச் சொல் தோன்றியிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு.

தற்காலத்தில் தமிழ்நாட்டில் ஐம்படைத் தாலி அணியும் வழக்கம் இருப்பதாகத்.தெரியவில்லை.

(பெரிய இடத்து இளைஞர்கள் புலிப்பல் போன்ற அமைப்பை சங்கிலியில் அணிவது காணப்படுகிறது.
இதை மைனர் செயின் என்கிறார்கள்)

மிகவும் அண்மைக்காலம் வரை செட்டிநாடு போன்ற தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவ்வழக்கம் இருந்துள்ளது.

ஆனாலும், இலங்கையில் இன்னும் பஞ்சாயுதம் என்ற பெயரில் இவ்வணி புழக்கத்தில் உள்ளது.

யாழ்ப்பாணத்து நகைக்கடைகளில், முக்கிய அணி வகைகளுள் ஒன்றாகப்.பல்வேறு வடிவமைப்புக்களைக் கொண்ட பஞ்சாயுதங்களை இன்றும் காண முடியும்.

இத்தகைய பஞ்சாயுத அணிகளில் கதாயுதத்திற்குப் பதிலாக ஈட்டி, சூலம் போன்ற ஆயுதங்கள் காணப்படுவதும் உண்டு.
சூலம் சிவனுக்கு உரியது என்பதும், யாழ்ப்பாண மக்கள் சைவ மரபைப் பின்பற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே வேளை, சிலப்பதிகாரம் கொற்றவை என்னும் பழந்தமிழர் தெய்வத்தின் ஆயுதங்களாக, சூலம், வாள், வில், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றிச் சிங்களவர்களும் பஞ்சாயுதம் அணியும் வழக்கத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது (!!)

பழங்காலத்தைப் போலவே சிறுவர்களுக்கே இது அணிவிக்கப்படுகிறது.
பதக்க வடிவில் பொன்னால் செய்யப்படும் இதனைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணிவிப்பர்.

குழந்தை பிறந்து பொதுவாக 31 ஆவது நாள் துடக்குக் கழிவுச் சடங்கின்போது பஞ்சாயுதம் அணிவிப்பது வழக்கமாக உள்ளது.

http://ta.m.wikipedia.org/wiki/புலிப்பல்_தாலி
http://ta.m.wikipedia.org/wiki/ஐம்படைத்_தாலி