Wednesday, 16 July 2025
பெண்ணுரிமை என்று ஈவேரா உளறியவை
Tuesday, 21 January 2020
கற்பு கூடாது என இந்து மத எதிர்ப்பு ஊர்வலத்தில் கூறிய ஈ.வே.ரா
செங்கோட்டை ஸ்ரீராம்்
Wednesday, 31 July 2019
ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை
ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை
--------------------------
"பெண்ணுரிமைப் போராளி" முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த நாள்
30.7.1886
முத்துலெட்சுமி எழுதிய
சுயசரிதையில்
சொல்லப்படாத இருவர்...
1.சத்திய மூர்த்தி ஐயர்
2.ஈ.வெ.ராமசாமி
-------
தேவதாசிமுறை ஒழிப்புக்காக பாடுபட்டவர் முத்துலெட்சுமி அம்மையார். இவர் 1927இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமாவர்.
இவர் தேவதாசி ஒழிப்புக்காக சட்ட முன்வரைவை கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்தவர் என்று கூறப்படுபவர் சத்திய மூர்த்தி ஐயர்.
இவர் "இறைவனுக்கு ஆற்றும் பணியை தடுக்கக்கூடாது" என்று சொன்னதாகவும்,
அதற்குப் பதிலடியாக முத்துலெட்சுமி அம்மையார் "உங்கள் ஆத்துப் பெண்களை இறைப்பணி செய்ய அனுப்புங்களேன்" என்று கூறி அவரின் வாயடைத்தார் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர்.
குறிப்பாக, ஈ.வெ.ராமசாமிதான் முத்துலெட்சுமியை தூண்டிவிட்டு கேட்கச் சொன்னதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
இது பற்றி ஆராய்வோம்!
முத்துலெட்சுமி அம்மையார் 1964ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் சுயசரிதை நூல் எழுதியுள்ளார்.
அந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது.
அந்நூலிலே, முத்துலெட்சுமி அம்மையார் சத்திய மூர்த்தி ஐயரிடம் இப்படியொரு விவாதம் நடத்தப்பட்டதை எங்கும் குறிப்பிடவே இல்லை,
(ஓரிடத்தில் தன்னுடைய வகுப்புத் தோழர் அரசியல்வாதியான சத்திய மூர்த்தி என்று மட்டும் குறித்துள்ளார் ).
அதுபோல் முத்துலெட்சுமிக்கு ஆதரவாக "குடியரசு" ஏட்டில் எழுதி தொடர்ந்து குரல் கொடுத்ததாக கூறப்படும் ஈ.வெ.ரா. குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.
---------
ஆம்.
முதலில் அவரைத் தூண்டியதாக அவர் கூறும் இருவரும் பார்ப்பனர்!
லேடி சதாசிவ ஐயரின் தலைமையில் அகில இந்திய மாதர் சங்கத்தை துவக்கியதாகவும்,
பெண்களுக்கு இல்லம் அமைப்பதற்கு ஶ்ரீனிவாச சாஸ்திரியார் முன்னெடுத்ததை அறிந்த பிறகே தாம் செயல்படத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.
--------
அவர் வழிகாட்டியாக சுட்டுவது காந்தியை!
அவர் சட்டமன்றத்தில், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக தீர்மானங்கள் கொண்டுவர முயன்ற போது கடும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும்,
அச்சமயத்தில் காந்தியிடமிருந்தே ஆதரவைப் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார்.
பெண்ணுரிமைக்குப் போராடும் வலுவான போராளி என்று புகழாரம் அனைத்தையும் காந்தியாருக்கே சூட்டி மகிழ்கிறார்.
'யங் இந்தியா' ஏட்டில் தமக்கு ஆதரவாக காந்தியார் எழுதியதையும் விரிவாகக் கூறுகிறார்.
--------
முன்னோடிகளாக அவர் சுட்டியோர் திராவிடவாதிகள் அல்லர்!
1946இல் சென்னையில் இந்தி பிரச்சார சபை வெள்ளி விழா கூட்டத்திற்கு காந்தியார் வருகை தந்த கூட்டத்தில், முத்து லெட்சுமி அம்மையார் பெண்விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களாக இராஜராம் மோகன்ராய், பண்டிட் வித்யாசாகர், சுவாமி தயானந்த சரசுவதி ஆகியோரையே குறிப்பிட்டு பேசுகிறார்.
-------
ஈ.வே.ரா பற்றி பத்தோடு பதினொன்றாக கூட குறிப்பிடவில்லை!
திராவிடவாதிகளில் நீதிக்கட்சி தலைவர் பனகல் அரசர் தமக்கு ஆதரவாக செயல்பட்டதை ஓரிடத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.
அதே நேரத்தில் மற்றொரு திராவிடவாதியான நீதிக்கட்சியைச் சார்ந்த கிருஷ்ணன் நாயர் முத்துலெட்சுமி அம்மையார் தமது மசோதாவை தாமதப்படுத்த முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
காங்கிரசு கட்சி சட்டமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் தமக்கு ஆதரவளித்த வெங்கையா, ஏ.பி.ஷெட்டி,.ஆர். நாகன் கெளடா, நடேச முதலியார், ஏ.ரங்கநாத முதலியார், கே.உப்பி சாஹிப் ஆகியோரை நன்றியோடு நினைவு கூறுகிறார்.
இந்தியாவிற்கு முன்மாதிரியாக நீதிக்கட்சிதான் தேவதாசிமுறையை ஒழித்ததாக திராவிட இயக்கத்தவர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால் முத்துலெட்சுமி அம்மையாரோ தேவதாசிமுறையை முதன்முதலாக ஒழித்தது 1909இல் மைசூர் சமஸ்தானமே என்று பாராட்டு தெரிவிக்கிறார்.
1930களில் கொச்சி சமசுதானத்தில் அடியோடு தேவதாசிமுறை ஒழிக்கப்படும் போது, அதுபோல ஆங்கிலேயரால் ஏன் சாதிக்க முடியவில்லையே? என கேள்வி எழுப்புகிறார்.
ஒருவேளை யாரையும் விமர்சிக்க மனமில்லாமல் சத்தியமூர்த்தி ஐயரை விட்டிருக்கலாமோ என்று நினைத்தால் அதுவும் இல்லை.
அவர் குற்றம் சாட்டும் ஒரே நபர் இராசாசி.
1937இல் முதல்வராக இராசாசி பதவி வகித்த போது தேவதாசி ஒழிப்புமுறை சட்டத்தை தடுத்ததாகவும், பெண்கள் சீர்திருத்தத்திற்கு எதிரானவர் இராசாசி என்றும் கடுமையாகச் சாடுகிறார்.
பின்னர், 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதல்வராக இருந்த போதுதான் தேவதாசி சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு பெண்கள் தேவதாசி முறையிலிருந்து விடுபட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.
ஈ.வெ.ரா எந்த இடத்திலும் அம்மையாரின் நினைவுக்கு வரவில்லை.
என்றால் ஈ.வெ.ரா குரல்கொடுக்கவே இல்லையா?!
அல்லது முத்துலட்சுமி அம்மையார் குறிப்பிடும் அளவுக்கு அது வலுவாக இல்லையா?!
இது போன்ற கேள்விகள் முத்துலெட்சுமி அம்மையார் எழுதிய சுயசரிதை நூலைப் படிக்கும் போது எழுகின்றன.
"பெரியாரின் ஆலோசனையின்படியே, சத்திய மூர்த்தி ஐயரின் குடும்பத்தை நோக்கி, முத்துலெட்சுமி அம்மையார் கேள்விகள் கேட்டார்" என்று பலரும் கூறி வருகின்றனர்.
முத்துலெட்சுமி அம்மையாரின் எழுத்திலும், பேச்சிலும் நாகரிக வார்த்தைகளே இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.
சத்திய மூர்த்தி ஐயரையே விமர்சிக்கத் தயங்குபவர் "உங்க ஆத்துப் பெண்கள் இத்தொழிலை செய்யட்டும்" என்று கூறியிருப்பாரா? என்ற ஐயம் எழுகிறது.
இந்தத் தகவலை பிராமண எதிர்ப்புக்காக தீவிரமாகப் பரப்பி வரும் திராவிட இயக்கத்தினர் மூலச் சான்றுகளோடு விளக்கம் அளித்தால் நல்லது!
(டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சுயசரிதை, எஸ். இராஜலெட்சுமி (தமிழில்), அவ்வை இல்லம், ராஜ லெட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை)
தகவல்களுக்கு நன்றி:-
Tamilthesiyan.wordpress.com
Tuesday, 17 April 2018
ஏன் என்று ஆசிபா சம்பவத்திற்கு பிறகு புரிந்தது
தன் சிறுவயது மகளுக்கு தலைவர் துப்பாக்கி பயிற்சி அளிக்கும் படம்.
ஏன் என்று ஆசிபா சம்பவத்திற்கு பிறகு புரிந்தது
Sunday, 6 August 2017
பெண்ணுரிமை என்ற பெயரில் ஈ.வே.ரா உளறியவை
பெண்ணுரிமை என்ற பெயரில் ஈ.வே.ரா உளறியவை
"பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும்.
அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
------------------
"தவிர 'பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது'
என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள்.
உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்?
மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்?"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-------------------
"பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக்காரனாய் இருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான்.
அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது"
- ஈ.வே.ரா (குடி அரசு,12-08-1928)
-----------------
"ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக வேஷ்டி கட்டவேண்டும்.
ஜிப்பா போடவேண்டும்.
உடைகளில் ஆண், பெண் வித்தியாசம் இருக்கக்கூடாது.
நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி அலங்கார வேஷங்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்.
பெண்கள் எல்லாம் ஆறடி, ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது அநாகரிகமாகும் – தேவையற்ற தொல்லையுமாகும்.
ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ளவேண்டும்"
- ஈ.வே.ரா (நூல்: பெரியார் ஒரு வாழ்க்கை நெறி)
--------
"பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?
தலைமயிரை வெட்டிவிட்டால் அதிகநேரம் மீதியாகும்.
பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
அவர்களுக்கு ஒரு குப்பாயம்(மேல்சட்டை) போட்டுவிட்டால் கைக்கு ஓய்வுகிடைத்துவிடும்.
(இல்லாவிட்டால் அடிக்கடி மார்பு சீலையை இழுத்துப் போடுவதே வேலையாகும்)"
- ஈ.வே.ரா (குடியரசு, 16-11-1930)
--------
"பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழைக்காமல் ஆண் என்றே அழைக்கவேண்டும்.
பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இடவேண்டும்"
- ஈ.வே.ரா (குடியரசு, 21-09-1946)
--------
"100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி, ரோட்டில் கல் உடைத்து, வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல்,
பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள்"
- ஈவெரா (விடுதலை 6.3.1962)
---------
"ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று ஆசைநாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.
உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றிவிடும்.
பிறகு கஷ்டமே இருக்காது"
- ஈ.வே.ரா (குடி அரசு 8-2-1931)
---------
"திருமணம் என்பது மனிதத்தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமைகொள்ளவே ஏற்பட்டது. அது ஆண்களுக்கு நன்மையாகவும் பெண்களுக்குக் கேடாகவும் இருக்கிறது’’
--------
"உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது.
உத்தி யோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள்.
பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள்.”
- ஈ.வே.ரா 17-3-1970
----------
"தாலி என்பது நாய்க்கு நகராண்மைக்கழகம் கட்டும் பட்டை போன்றது.
தாலி பெண்ணை அடக்கி ஆளும் மூர்க்கத் தனத்தின் சின்னம்.
தாலிபற்றிப் புலவர்கள் பேசும்போது காளையை அடக்குதல், புலிவேட்டையாடுதல் போன்ற பொருத்தமற்ற இலக்கிய ஆதாரங்களை அள்ளி வீசுவார்கள்.
பெண்களுக்கு அறிவு வந்தாலொழியத் தாலியை நீக்கமுடியாது"
- ஈ.வே.ரா (நூல்: நாய்க்கு லைசன்ஸ் பெண்ணுக்குத் தாலி)
-----------
"உலகில் ‘கற்பு’, ‘காதல்’ என்பன போன்ற வார்த்தைகளை எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கியாளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ,
அது போலவேதான் ‘ஒழுக்கம்’ என்னும் வார்த்தையும்"
- ஈ.வே.ரா ( நூல்: மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்)
-----------
'பெண்களே உங்களுடைய கர்ப்பப் பைகளை வெட்டி எறியுங்கள்'
‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ (தலைப்பு)
‘ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்க முடியாது’
(நூல்: பெண் ஏன் அடிமையானாள்)
----------------
சுருக்கமாக,
உலகத்தில் ஆண்கள் இருக்கக்கூடாது.
ஆண்கள் போல பெண்கள் மாறி அவர்கள் செய்வதை விட கூடுதலாக அட்டூழியம் செய்யவேண்டும்.
யாரும் குழந்தையும் பெறக்கூடாது.
திருமணம் செய்யாமல் ஒழுக்கமின்றி வாழவேண்டும்.
இதுதான் ஈ.வே.ரா முன்வைக்கும் பெண்விடுதலை.
Thursday, 10 July 2014
இசுலாமியத் தமிழரே

தமிழ்ப் பேசும் இசுலாமியரே,
உங்களுக்கு ஒரு தமிழ்ச் சகோதரனின் வணக்கம்.
சமீபத்தில் காசுமீரின் விடுதலைப் போராளியான திரு.யாசின் மலிக் அவர்களை மதிப்பிற்குரிய திரு.சீமான் அவர்கள் தமிழகத்தில் பேச அழைத்து வந்தார்.
எந்தவிதத்திலும் தவறேயில்லாத, வரலாற்றில் கரையாமல் நிலைத்து நிற்கப்போகிற அந்த நிகழ்வில் ஏவப்பட்ட வன்முறையும் அதன் தொடர்பான கடுமையான விமர்சனங்களும் அனல்பறக்கும் இந்நேரத்தில் நான் யோசிப்பது என்னவென்றால்,
ஏன் இசுலாமியர் மீது மட்டும் இத்தனை விமர்சனம்?
இந்தக்கேள்வி மனதை உறுத்திக் கொண்டேயிருக்கிறது.
தமிழ்த் தாயின் பிள்ளைகளில் இரு சமூகம் மட்டும் மற்றத் தமிழர்களிடமிருந்து தூரமாக விலகிப் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்ப் பார்ப்பனரும் தமிழ் இசுலாமியரும் மற்றத் தமிழரிடமிருத்து அந்நியப்பட்டு நிற்கின்றனர்.
என் அறிவுக்கு எட்டியவரை முடிவேயில்லாத ஒரு கேள்விக்கு இங்கே விடைதேட முயல்கிறேன்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் மருகால் தெருவில் ஒரு முனையில் தேவாலயமும் மறுமுனையில் பள்ளிவாசலும், ஒருபக்கத்தில் சுடலைமாடன் கோவிலும் மறுபக்கத்தில் இலங்கத்தம்மன் கோவிலும் முத்தாரம்மன் கோவிலும், நடுவில் சிறிய ராமர் கோவிலும் இருக்கும், மூன்று மதத்தினரும் அருகருகே வாழும் ஒரு தெருவில் பிறந்தவன் நான்.
சுவையான நோன்புக்கஞ்சி வாங்க சிறுவயதில் பள்ளிவாசலுக்கு சென்றிருக்கிறேன்; சிஎஸ்ஐ தேவாலயம் நடத்தும் பள்ளியில் படித்தபோது மழையில் பள்ளிக்கூரை ஒழுகும்போது தேவாலயத்தினுள் அடைக்கலமும் புகுந்துள்ளேன்.
தாத்தா அருள் வந்து சாமியாடும் தளவாய்மாடன் கோவிலுக்கு பால்குடமும் எடுத்திருக்கிறேன்.
பாங்கு ஓதும்போது அங்குமிங்கும் ஓடாமல் ஓரிடத்தில் நிற்கவும், தேவாலயத்தில் மேடைமீதேறி பைபிளின் வசனத்தை வாசிக்கவும் பயிற்றுவிக்கப்பட்டேன்;
என் உயிர்நண்பர்களில் என் பள்ளித்தோழர் ஒரு கிறித்தவரும் என் கல்லூரி நண்பர் ஒரு உருதுமுசுலீமும் அடக்கம்.
இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால் நான் எந்தவகையிலும் எந்த மதத்தையும் குறைகூற இதை எழுதவில்லை என்பதைத் தெரிவிக்கத்தான்;
தவிர நான் கடவுள் நம்பிக்கையை வெறுக்கும் தீவர நாத்திகன்;
என்னுடைய அனுபவத்திலிருந்து நான் அறிந்துகொண்டதைக் கூறுகிறேன். என்னதான் தமிழ்இசுலாமியர் மற்றத் தமிழரோடு தமிழராகக் கலந்து வாழ்ந்தாலும் அவர்கள் மிகவும் தவறான பாதையில் போய்க் கொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது;
அதுவும் ஒரு தீவிரத் தமிழ்த் தேசியவாதியாக தமிழ்இசுலாமியரை பார்க்கும்போது எனக்கு வேதனையாகவே உள்ளது.
அவர்கள் தமிழ்க் கலாச்சாரத்தை புறக்கணித்து மெல்ல மெல்ல அராபியர்களாக மாற்றப்பட்டு வருவதாக எனக்குப் படுகிறது;
எனது தாய்பிறந்த ஊரான செங்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் இந்துத்துவ மனப்பான்மையும் வேரூன்றி வருவதைப் பார்க்கும்போது அச்சமே உண்டாகிறது;
வடயிந்தியாவில் உதவிப்பொறியாளராகப் பிழைப்பு நடத்திவரும் நான் இங்கு இந்து-முசுலீம் மதவெறி அதிகமாக மக்கள் மனதில் வேறூன்றி இருப்பதையும் தமிழ்நாட்டில் பெரும்பாலும் அத்தகைய மனப்பான்மை இல்லை என்பதையும் உணர்ந்துகொண்டவன்;
இருந்தாலும் தமிழ்இசுலாமியர் இவ்வளவு அந்நியமாகத் தெரியக் காரணம் என்னவென்று யோசித்து பார்த்தபோது என் மூளைக்கு எட்டும் காரணங்களைக் கூறுகிறேன்.
முதலில் இசுலாமியர் யாரும் தமது தாய்மொழியில் பெயர் வைத்துக்கொள்வதில்லை; அவர்கள் இசுலாமிய மகான்களின் பெயரை வைத்துக் கொண்டால்கூடப் பரவாயில்லை ஆனால் அவர்கள் சாதாரணப் பெயரை அரபியில் வைத்துக்கொண்டுள்ளனர்.
சாதிக் பாட்ஷா- உண்மை அரசன்
கமால்- திறமையானவன்
ஜமீலா - அழகி
சுல்தான்- மன்னன்
மேற்கண்ட பெயர்களுக்கும் இசுலாமிய மதத்திற்கும் இசுலாமிய தலைவருக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை.
பிறகு ஏன் சம்பந்தமே இல்லாத அராபியச் சொற்களில் பெயர்வைக்கவேண்டும்.
மற்ற மதத்தவரும் வேறுமொழிப்பெயர்களை வைக்கின்றனரே என்று கூறி மழுப்பவியலாது. கிறித்துவர்களும் அழகானத் தமிழில் பெயர்வைத்துள்ளனர்.
செல்லத்துரை, அருள்செல்வி, அடைக்கலம்,பேரின்பம் என்றெல்லாம் கூட பெயர் வைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், இசுலாமியர் 99.99% அராபியப் பெயர்களை வைத்துள்ளனர்.இன்னொரு காரணம் தமது பிள்ளைகளை பள்ளிவாசலுக்கு அனுப்பி அரபி அல்லது உருது படிக்கவைப்பது, இதை மட்டும் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
தாய்மொழியைப் போலப் பற்றுடன் சொல்லிக் கொடுக்கக் காரணம் எனக்கு விளங்கவில்லை.
எங்கள் தெருவில் அரபி கற்றுக் கொடுக்கவே இரண்டு பெண்களை அழைத்துவந்து ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். அதுதான் அரபிக் கல்லூரியாம்.அந்தப் பெண்களை கணவரைத் தவிர யாரும் பார்க்கக் கூடாதாம்.உலகில் வேகமாகப் பரவிவரும், அடிப்படையில் ஒரு சீர்திருத்த மார்க்கமான இசுலாம் இப்படி ஒரு கட்டாயக் கல்வியை வலியுறுத்தாது என்று நான் நம்புகிறேன்.
மூன்றாவது நெருடல் தமதுப் புனித நூலை பாதித்தமிழும் பாதி அரபியும் கலந்து மொழிபெயர்த்து வைத்திருப்பது.
குர்ஆன் மிகச்சிறந்தநூல் என்று பலரும் புகழ்வதைக் கேட்டு அதைப்படிக்க முயன்றேன்.
அதிலே பாதி அரபிச்சொற்களால் நிறைந்திருந்தது. படிக்கப் படிக்க எரிச்சலே மிஞ்சியது.கிறித்தவர்கள் தமது வேதநூலையே தமிழில் மொழிபெயர்த்து அதைக் கற்றுக் கொடுக்கும்போது இசுலாமியர் அதை ஏன் செய்யவில்லை?
மொழிபெயர்ப்பில் முழுப் பொருள் சிறிது மாறிவிடும் என்று சப்பைக்கட்டு கட்டக் கூடாது. தமிழில் அத்தகைய சொல்வளம் இல்லையா என்ன?
இதே காரணத்தை வைத்தே ஆரியத்தால் சமசுக்கிருதம் தமிழரின் சாபக்கேடாக தமிழர்தலையில் கட்டப்பட்டது.
கிறித்துவர் வேதநூலில் தனிநபர் பெயர்களைக்கூட தமிழ்ப்படுத்த முயன்றுள்ளனர்.
ஜீசஸ்- ஏசு
ஜான்- யோவான்
மேத்யூ- மத்தேயு
பிறகு ஏன் வேற்றுமொழிக் கலப்பேயில்லாத ஒரு புனிதநூலை உருவாக்க இயலாது ?
மற்றொன்று பெண்கள் மீதான அடக்குமுறை. பள்ளிவாசலுக்குப் போக பெண்களுக்கு முழுஉரிமை அளித்துள்ளது இசுலாம். ஆனால் எந்த பெண்ணும் பள்ளிவாசலுக்குப்போய் நான் பார்த்ததேயில்லை. தேவாலயத்திற்கு பெண் பிரசங்கிகளே மேடையேறி பிரச்சாரம் செய்யும்போது பள்ளிவாசலில் ஏனிப்படி?
தவிர சித்திரை மாதவெயிலில் பெண்கள் உடையணிந்து அதன்மேல் வெப்பத்தை ஈர்க்கும் புர்க்கா (அ) பர்தா அணிந்துகொண்டு செல்வதைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. நாகரீகமான உடையணிந்தால் போதாதா?
நான்காவது தமது கலாச்சாரத்தை மறந்தது. வணக்கத்திற்குப் பதிலாக குதாஹாபிஸ் சொல்வது, திருமண சடங்குகள் ஈமச்சடங்குகளில் தனிமுறை,உறவுமுறைகளில் தனிவழக்கம் ,தாய்தந்தையை வேற்றுமொழியில் அழைப்பது என்று. ஆனாலும் தமிழ்இசுலாமியர் தனித்தன்மையான சில தமிழ்ச்சொற்களையும் அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதையும் மறுக்கவியலாது.
ஐந்தாவது, தோற்றம்;
அராபியர் போல உடையணிவதும், மீசையில்லாதத் தாடியும், தோளில் துண்டு அணியும் முறை, சாரம்(கைலி) அணியும் முறை, என்று வேறுபட்டுத் தோற்றமளிப்பதை விரும்புகின்றனர்
எனக்கும் தெரிந்து மற்ற மக்கள் இசுலாமியரை அந்நியராக நினைக்கக் காரணம் இத்தகைய மாறுபட்டத் தோற்றமேயாகும்.
தமிழ் மக்கள் அத்தனை மதத்தையும் கைவிட்டுஇயற்கையை நன்றிதெரிவிக்கும் விதமாக வழிபடும் தமது பழமையான நெறிக்குத் திரும்பவேண்டும் என்பது என் நோக்கம்.
எனது சொந்தக்காரர்களில் வறுமையில் வாடிய சிலர் பணம் கொடுக்கப்பட்டு கிறித்தவராக்கப்பட்டதையும் , என் நண்பனின் நண்பன் குடும்பம் வறுமையில் இருந்தபோது அவனுக்கும் அவனது அண்ணனுக்கும் அரேபியாவில் வேலைவாங்கித் தந்து கைமாறாக மதம் மாறச் செய்ததையும் கண்ணால் கண்டவன்.
தேவாலயக் கோபுரமும் பள்ளிவாசல் கோபுரமும் போட்டிபோட்டுக் கொண்டு வளர்வதையும் அதில் காதைக்கிழிக்கும் ஒலிபெருக்கிகளில் பாடல்களும் பிரச்சாரங்களும் ஒலிபரப்பப்படுவதும்
தம்மை இந்துக்கள் என்று அப்பாவியாக நம்பிவரும் மற்றத் தமிழர்களிடம் கோவில்வரி, கொடைவரி, பூசைவரி என்று அரங்காவலர்களும் பூசாரிகளும் சுரண்டி வருவதையும், பண்டிகைகளின் பேரில் நடக்கும் கேலிக்கூத்துக்களையும் பார்த்துப் பார்த்து மனம் பொங்கி நாத்தினாக மாறினேன்.
மூடநம்பிக்கைகளும், புளுகுப் புராணங்களும், தேவையற்ற சடங்குகளும் ,பணவிரயமும், நேரவிரயமும் அத்தனை மதங்களிலும் நிரம்பியுள்ளன.
மற்ற மதத்தினரை விட ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இசுலாம் வலியுறுத்துகிறது.
அதற்காக தமிழ்இசுலாமியர் கொடுக்கும் விலை அதிகம்.
2008 ல் தென்காசியில் நடந்த இந்து இசுலாமிய மோதலும், மேலப்பாளையத்தில் அராபியமுறையிலான கொடூர தண்டனைகளும், இசுலாமியத் தெருக்களில் ஒபாமா வாயில் நாய் மூத்திரம் போவது போன்ற சுவரொட்டிகளும் எனக்கு எதையோ எச்சரிக்கை செய்வதாகத் தோன்றுகிறது.
நேர்மையான பதில்களை எதிர்பார்க்கிறேன்.
மதச்சண்டை வேண்டாம்.
நான் சொல்வதில் தவறெதுவும் இருந்தால் எடுத்துக் கூறவும்
நன்றி.
கீழ்க்காணும் தரவுகளை தமிழ்இசுலாமியருக்கா அளிக்கிறேன்.
உங்களைத் தமிழ்ப்பற்றில்லாதவர் என்று எவன் சொன்னாலும் பதிலடி கொடுக்க இவற்றை வைத்துக் கொள்ளுங்கள்
http://ta.m.wikipedia.org/
http://ta.m.wikipedia.org/
http://ta.m.wikipedia.org/
பெருமகன் காயிதே மில்லத்
http://siragu.com/?p=3534
http://ta.m.wikipedia.org/
குணங்குடி மஸ்தான்
http://puthu.thinnai.com/
பழந்தமிழ் கடலோடி வக்குசு
http://en.m.wikipedia.org/
ஆஸ்கர் மேடையில் ரகுமான்
http://m.youtube.com/
விடுதலைப்புலி இம்ரான்
http://
முல்லைப்பெரியாறு அரண் கே.எம்.அப்பாஸ்
http://
தமிழக அரசியல் தலைவர் ஜவஹருல்லா
http://
ஈழத்திற்காக முதலில் தீயைத் தழுவி அணைத்துக் கொண்ட அப்துல் ரவூப்
http://ta.m.wikipedia.org/
கவிக்கோ அப்துர் ரகுமான்
http://ta.m.wikipedia.org/
https://www.facebook.com/photo.php?fbid=336032163167110&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13