Showing posts with label நீதிக் கட்சி. Show all posts
Showing posts with label நீதிக் கட்சி. Show all posts

Friday, 10 January 2025

நீதிக்கட்சி தெலுங்கர் ஆதிக்கம் ஈவேரா ஆதரவு

நீதிக்கட்சி தெலுங்கர் ஆதிக்கம் ஈவேரா ஆதரவு

 1929 இலிருந்து ஈவேரா சுயமரியாதை இயக்கம் நடத்திக் கொண்டு நீதிக் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
 நீதிக் கட்சி ஆட்சியில் 1931 இல் பொப்பிலி ராஜா வட்டமேசை மாநாடு லண்டன் இல் நடந்தபோது அங்கே சென்றுவிட்டார். இந்த இரண்டு மாத இடைவெளிக்காக தற்காலிக பிரிமீயர் (அன்றைய முதலமைச்சருக்கு நிகரான பதவி) ஆக பி.டி.ராசன் எனும் தமிழர் பொறுப்பேற்கிறார். 
 இதைக்கூட பொறுக்க முடியாத தெலுங்கர்கள் அவரை எதிர்க்கிறார்கள். நீதிக் கட்சியில் இருந்த தமிழருக்கும் தெலுங்கருக்கும் முரண்பாடுகள் தோன்றுகின்றன.

 அதே நேரம் பொப்பிலி ராஜா லண்டனில் வட்டமேசை மாநாட்டிலேயே தெலுங்கருக்கு தனி மாநிலம் கேட்டு கோரிக்கை வைத்தார். பொப்பிலி ராஜாவை ஈவேரா எதிர்க்கவில்லை. ஆனால் நீதிக்கட்சி ஆட்சியில் தமிழர்கள் தமக்கான அரசியல் நலன்களைப் பேசியபோது 16.12.1934 பகுத்தறிவு இதழில் "ஆந்திரர் தமிழர் என்று பிரிக்கப் பார்ப்பதா" என்று கட்டுரை எழுதினார் ஈ.வெ.ரா. 
 அதில் "ஜஸ்டிஸ் கட்சியில் தமிழர்களை விட ஆந்திரர்கள் அதிகமாக சாதித்துக்கொண்டதாக சொல்லமுடியாது. உதாரணமாக ஒரு ஆந்திரர் பனகல் ராஜா முதல்மந்திரி ஆனார் என்றால் தமிழர் சுப்பராயன் முதல்மந்திரி ஆகியுள்ளார்"
 இதில் கவனிக்க வேண்டியது சுப்பராயன் நீதிக் கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சையாக வென்று சுதந்திரா கட்சியிலிருந்து சுப்பையா முதலியார் ஆதரவுடன்தான் முதல்வர் ஆனார் (இந்த சுப்பையா முதலியார்தான் நீதிக் கட்சி வெறும் பெயருக்கு வடிவமைத்து கிடப்பில் போட்டிருந்த இடவொதுக்கீடு திட்டத்தை அரசாணை இட்டு நடைமுறைக்கு கொண்டுவந்தவர். இடவொதுக்கீடு நீதிக்கட்சி கொண்டுவந்தது அல்ல).

மேலும் ஈவேரா எழுதுவது "மந்திரிகளில் ஆந்திராவைச் சேர்ந்த பனகால், சர்.பந்த்ரோ, முனுசாமி நாயுடு, சர்.கே.வி.ரெட்டி, பொப்பிலி ஆகிய 5 பேர் மந்திரி ஆகியுள்ளனர். தமிழர்களில் சுப்புராயலு ரெட்டியார், சிவஞானம்பிள்ளை, டாக்டர் சுப்பராயன், முத்தையா முதலியார், சேதுரத்தினம் ஐயர், பி.டி.ராஜன், குமாரசாமி ரெட்டியார் ஆகிய 7 பேர் மந்திரி ஆகி இருக்கிறார்கள்"
இங்கே கவனிக்க வேண்டியது இந்த 7 பேரில் சிவஞானம்பிள்ளை நீதிக் கட்சியைச் சேர்ந்தவரே கிடையாது. இருவர் ரெட்டியார்கள்.
ஒருவர் ஐயர் அதாவது பார்ப்பனர் தமிழரே கிடையாது அவர்கள் ஆரியர் என்று கூறிவந்த ஈவேரா இப்போது மட்டும் ஒரு பார்ப்பனர் தமிழர் என்கிறார்.

 மேலும் அவர் "நிர்வாக கவுன்சில் மெம்பர்களில் ஆந்திரர் கே.வி.ரெட்டியார் இருந்தார் என்றால் தமிழர்களில் சீனிவாச ஐயங்கார், சர்.உஸ்மான், சர்.சி.பி.ராமசாமி ஐயர், கே.ஆர்.வெங்கட்ராம சாஸ்திரி, கிருஷ்ணன் நாயர், பன்னீர்செல்வம் ஆகியோர் இருந்தனர்"
 இப்போதும் ஒரு ஐயங்கார், ஐயர் ஆகிய பார்ப்பனர்கள் தமிழர்கள் என்று தம் கொள்கை மாறிப் பேசுகிறார். 
 உஸ்மான், வெங்கட்ராம சாஸ்திரி, கிருஷ்ணன் நாயர் ஆகியோர் தமிழர் கிடையாது. அவர்களையும் தமிழர் என்கிறார் ஈவேரா.

 அதாவது பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து தொடங்கப்பட்ட நீதிக் கட்சியில் பிராமணரல்லாதோர் பெறவேண்டிய பதவிகளில் தெலுங்கர் உட்கார்ந்துகொண்டு பதவி பங்கீட்டு கணக்கு காட்டும்போது பிராமணரில் இருக்கும் தமிழரையும் கணக்கு காட்டுகின்றனர்.

 1930 களில் நீதிக் கட்சிக்கு ஆதரவளித்த காலகட்டத்தில் தெலுங்கருக்காக இவ்வாறு பரிந்து பேசிய ஈவேரா தெலுங்கர் தனி மாநிலமே கேட்டபோது பிரிவினை என்று கண்டிக்கவில்லை.

 ஆனால் 1950 களில் தமிழர் தனிமாநிலம் கேட்டு போராடிய போதும் எல்லை மாவட்டங்களை இழக்க நேரிட்ட சூழலில் அதை தடுக்க முற்பட்டபோதும் மிகக் கடுமையாக எதிர்த்தார் ஈ.வெ.ரா.

 தகவல்களுக்கு நன்றி:-  ராவணா வலையொளி மகிழன் அவர்களது பேட்டி 

Monday, 9 September 2024

தமிழ்நாடு பல்கலைக்கழகம் அமைப்போம்

தமிழ்நாடு பல்கலைக்கழகம் 

13.07.2015 அன்றைய பதிவு

1926ல் 'ஆந்திரப் பல்கலைக்கழகம்' தெலுங்கர்களால் வெற்றிகரமாக அமைக்கப்பட்டது.

தெலுங்கு மாணவர்கள் தமக்கென்று தனியாக 'ஆந்திரப் பல்கலைக் கழகம்' அமைந்துவிட்டபோதும் சென்னை பல்கலையிலும் இடம்பிடிப்பது தொடர்கிறது.

இதன்பிறகு மலையாளிகள் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தை 'கேரளா பல்கலைக் கழகம்' ஆக்கிக்கொண்டனர்.

கன்னடர்களும் தார்வார் பல்கலைக் கழகத்தை 'கர்நாடகப் பல்கலைக்கழகம்' ஆக்கிக்கொண்டனர்.

இவர்களைப் போலவே குஜராத், மகாராஷ்ட்டிரா,ஒரிசா, காஷ்மீர், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய இனவாரி-மாநில-தலைமை பல்கலைக் கழகங்கள் தோன்றின.

இவைகளில் அம்மாநில மொழிக்கும் அம்மாநிலத்து மாணவருக்குமே முதல் உரிமை.

தமிழகம் மட்டும் 'தமிழ்நாடு பல்கலைக்கழகம்' இன்றுவரை அமைக்கவில்லை.

தமிழரான சுப்பராயன் ஆட்சியில் 1929ல் தமிழகத்திற்கு தனியாக ஒரு பல்கலைக்கழகம் அமைக்க குழு ஒன்று அமைக்கப்பட்டபோது 'அண்ணாமலைப் பல்கலைக்கழகம்' நிறுவினால் போதும் என்று அக்குழு பரிந்துரைத்தது. அக்குழுவினர் ஜஸ்டிஸ் கட்சி உறுப்பினர்கள்.

(இதுவரை ம.பொ.சி அவர்களது நூலில் உள்ள தகவல்கள்)

 இன்றுவரை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஒரு பொதுசத்திரம் போன்றது. அங்கே தமிழுக்கு முதலிடம் கிடையாது.

இதேபோலத்தான் தந்தை செல்வா 1956ல் 'திரிகோணமலைப் பல்கலைக்கழகம்' கேட்டார். இன்றுவரை அது கிடைக்கவில்லை.

சிறிலங்காவின் மொத்தம் 15 பல்கலைக்கழகங்களில் சிங்கள மாநிலங்களின் பெயர்தாங்கிய பல்கலைக்கழகங்களே அதிகம். ஆனால் மட்டக்களப்பு பல்கலையின் பெயர் 'கிழக்குப் பல்கலைக் கழகம்' அதன் ஒரு வளாகம் திரிகோணமலையில் இயங்குகிறது.
தமிழர்களுக்கு அங்கே இருப்பது 'யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்' மட்டும்தான்.
அதாவது அங்கேயும் ஒரு 'தமிழ்ப் பல்கலைக் கழகத்தை' நம்மால் நிறுவமுடியவில்லை.

தமிழர்களுக்கென்று ஒரு நாடு!
கல்விக்குத் தலைமையிடமாக ஒரு பல்கலைக்கழகம்!
அதில் உலகின் அத்தனை துறைகளையும் தாய்மொழியில் கற்கும் வசதி!
இதை நாம் சாதிக்கவேண்டும்!

---------------------------

மேலும் சில தகவல்கள்,

(பிரிட்டிஷ் ஆண்ட) இந்தியாவின் முதல் பட்டதாரி, சென்னை பல்கலைக்கழகத்தில் 1857ல் இளங்கலை (B.A) பட்டம் பெற்ற சி.வை.தாமோரம் பிள்ளை ஆவார்.

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழர். தமிழ்த் தாத்தாவுடன் துணைநின்று தமிழ்த்தொண்டு ஆற்றியவர்.

1905ல் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழை நீக்க வந்தேறிகள் செய்த சதியை பாண்டித்துரைத் தேவர், பூரணலிங்கம் பிள்ளை ஆகியோரின் உதவியுடன் பெருமுயற்சி செய்து தடுத்து நிறுத்தியவர் பார்ப்பனரான சூரியநாராயண சாஸ்திரி அதாவது திரு.பரிதிமாற்கலைஞர்.

Thursday, 12 September 2019

ஈ.வே.ரா ஒரு கம்யூனிஸ்டாம்

ஈ.வே.ரா ஒரு கம்யூனிஸ்டாம்

வந்தேறி:-
உங்களுக்கு தெரியாது தோழர்!
ஈ.வே.ரா மாதிரி ஒரு கம்யூனிஸ்ட்ட பாக்கவே முடியாது.
அவரு ஆங்கிலேயர் ஆட்சியை முழுமையா ஆதரிச்சாரு.
அவங்களும் அவர மதிச்சாங்க.
ஆனா பாருங்க! அவர் வாழ்நாள்லயே ஒரே ஒரு தடவ அவருக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் பிரச்சன வந்தது.
அது ஏன்னா கம்யூனிச ஆதரவு பேசினப்பதான்.
அப்பறம் 26.02.1966 ல "ரஷ்யப் படையெடுப்பை வரவேற்கிறேன்" அப்டின்ற தலைப்புல புரட்சிகரமா ஒரு கட்டுரை எழுதிருக்காரு பாருங்க.
"இந்தியா மீது ரஷ்யா படையெடுத்து வருமானால், அதை நான் எதிர்க்க மாட்டேன்; வரவேற்பேன்!
ஏனென்றால், நானே ரஷ்யா சென்றிருந்தபோது, கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஆனவன்தான்!" அப்டினு எழுதிருக்கார்.

தமிழன்:-
டேய்! டேய்! ரொம்ப பூ சுத்தாதீங்கடா!
அந்த ஆளு வெள்ளக்காரனுக்கு விசுவாசமா கடைசிவரைக்கும் இருந்தாரு!
நல்ல வருமானம் சேந்துச்சு!
என்ஜாய் பண்ண வெளிநாடெல்லாம் சுத்திபாத்தாரு.
அப்படி உலக பயணம் போனப்ப ரஷ்யாவுக்கு போய் எட்டிபாத்துட்டு வந்தாரு.
அதுக்கே மூணாங்கிளாஸ் தாண்டாத அவர ரஷ்யாக்காரன் ஆலத்தி எடுத்து வரவேற்று 3000 பேர் கூடி சொற்பொழிவு ஆத்த சொன்னாங்கனு ஏற்கனவே ஒரு முழம் பூவ காதுல சுத்திட்டிங்க.

அவரு சுற்றுலா முடிஞ்சி திரும்பி வந்து அந்த அறுபவத்த எழுதறப்போ கம்யூனிசம் பத்தி ஏதோ கிறுக்கினாரு.
கம்யூனிசம் புடிக்காத வெள்ளக்காரன் தன் அடிமைனு கூட பாக்காம தன்னோட கைப்பாவை அரசான ஜஸ்டிஸ் கட்சியை விட்டு அந்தாள உள்ள தூக்கி போட்டுட்டான்.
வெளிய வந்து பேசாம இருக்கலாம்னா ஜீவானந்தம் வந்து உண்மையான கம்யூனிஸ்ட்டான பகத் சிங் எழுதின "நான் ஏன் நாத்திகன்" புத்தகத்த வெளியிட கூப்டுறாரு.
ஈ.வே.ரா பயந்துகிட்டு தான் போகாம தன் பத்திரிக்கை ஆசிரியரான தன்னோட சகோதரன அனுப்புறாரு.
அவரும் போய் மேடைல ஓரமா உக்காந்துட்டு வந்துடுறாரு.
பகத் சிங் பேர கேட்டதும் கொலவெறியான வெள்ளைக்காரன் அத வெளியிட்ட அத்தனபேரயும் புடிச்சுட்டு போய் தேசதுரோகம் பண்ணதா கேஸ் போட்டு நொங்க பிதுக்கிட்டான்.
ரெண்டுபேரும் "தெரியாம பண்ணிட்டோம்" னு கெஞ்சி மன்னிப்பு கேட்டாங்க.
  அத எழுதி வாங்கின வெள்ளக்காரன் பத்திரிக்கைல இத போடணும்னு கட்டளை போட்டான்.

அதுபடி 24.03.1935 அன்னக்கி ஈ.வே.ரா பத்திரிக்கைல மன்னிப்பு கேட்ட செய்திய வெளியிட்டாரு.
அப்பறம் கம்யூனிசம் பத்தி மூச்சு கூட விடலயே!
வெள்ளக்காரன் போயி 20 வருசம் கழிச்சுதான் மறுபடி வாயத் தொறக்கறாரு.

அதுவும் ஏன்?!
சீனாவோட போர்ல இந்தியா தோத்துருது.
திராவிட இயக்கங்கள் இத வச்சிகிட்டு நேருவ நக்கல் பண்றானுக.
கடுப்பான நேரு தனிநாடு பேசுறவங்க தேர்தல்ல போட்டிபோட முடியாதபடி பிரிவினைவாத தடுப்பு சட்டம் போடுறாரு.

அண்ணாதுரை உடனடியா "திராவிட நாடு" கோரிக்கையை கைவிடுறோம் னு அறிக்கை விட்டுட்டு நேரு கால்ல விழுறாரு.

ஈ.வே.ரா ஒடனே "பாக்கிஸ்தானோ, சீனாவோ இந்தியாமீது படையெடுத்தால், முறியடித்துத் துரத்திடவே நான் விரும்புகிறேன்;
அதற்காக ஒத்துழைக் கிறேன்.
ஆனால் இந்தியாமீது ரஷ்யா படையெடுத்து வருமானால், அதை நான் எதிர்க்க மாட்டேன்; வரவேற்பேன்!" அப்டினு எழுதுறாரு.

அதாவது "நா அடுத்தவனுக்கு அடிமையா இருப்பேன் ஆனா தனிநாடு கேட்கமாட்டேன்"னு சுத்திவளைச்சு சொல்றாரு.

நேரு காலடில அண்ணாதுரை ஸ்ட்ரெயிட்டா சம்மர் சால்ட் அடிச்சாருன்னா
ஈவேரா தலைகீழா சம்மர் சால்ட் அடிச்சிருக்கார்.
அவ்ளதான்.

புகைப்படத்திற்கு நன்றி: கதிர் நிலவன்

Wednesday, 31 July 2019

ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை

ஈ.வே.ரா. ஆதரவில் முத்துலெட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தி ஐயரை எதிர்த்ததாக கட்டுக்கதை
--------------------------

"பெண்ணுரிமைப் போராளி" முத்துலெட்சுமி அம்மையார் பிறந்த நாள்

30.7.1886

முத்துலெட்சுமி எழுதிய
சுயசரிதையில்
சொல்லப்படாத இருவர்...

1.சத்திய மூர்த்தி ஐயர்
2.ஈ.வெ.ராமசாமி
-------
தேவதாசிமுறை ஒழிப்புக்காக பாடுபட்டவர் முத்துலெட்சுமி அம்மையார். இவர் 1927இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமன்ற உறுப்பினருமாவர்.

இவர் தேவதாசி ஒழிப்புக்காக சட்ட முன்வரைவை கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்தவர் என்று கூறப்படுபவர் சத்திய மூர்த்தி ஐயர்.

இவர் "இறைவனுக்கு ஆற்றும் பணியை தடுக்கக்கூடாது" என்று சொன்னதாகவும்,
அதற்குப் பதிலடியாக முத்துலெட்சுமி அம்மையார் "உங்கள் ஆத்துப் பெண்களை இறைப்பணி செய்ய அனுப்புங்களேன்" என்று கூறி அவரின் வாயடைத்தார் என்றும் பலரும் சொல்லி வருகின்றனர்.

குறிப்பாக, ஈ.வெ.ராமசாமிதான் முத்துலெட்சுமியை தூண்டிவிட்டு கேட்கச் சொன்னதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

இது பற்றி ஆராய்வோம்!

முத்துலெட்சுமி அம்மையார் 1964ஆம் ஆண்டு ஆங்கிலத்தில்  சுயசரிதை நூல் எழுதியுள்ளார்.
அந்நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்துள்ளது.

அந்நூலிலே, முத்துலெட்சுமி அம்மையார் சத்திய மூர்த்தி ஐயரிடம் இப்படியொரு விவாதம் நடத்தப்பட்டதை எங்கும் குறிப்பிடவே இல்லை,
(ஓரிடத்தில் தன்னுடைய வகுப்புத் தோழர் அரசியல்வாதியான சத்திய மூர்த்தி என்று மட்டும் குறித்துள்ளார் ).

அதுபோல் முத்துலெட்சுமிக்கு ஆதரவாக "குடியரசு" ஏட்டில் எழுதி தொடர்ந்து குரல் கொடுத்ததாக கூறப்படும் ஈ.வெ.ரா. குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.
---------
ஆம்.

முதலில் அவரைத் தூண்டியதாக அவர் கூறும் இருவரும் பார்ப்பனர்!

லேடி சதாசிவ ஐயரின் தலைமையில் அகில இந்திய மாதர் சங்கத்தை துவக்கியதாகவும்,
பெண்களுக்கு இல்லம் அமைப்பதற்கு ஶ்ரீனிவாச சாஸ்திரியார் முன்னெடுத்ததை அறிந்த பிறகே தாம் செயல்படத் தொடங்கியதாக குறிப்பிடுகிறார்.
--------
அவர் வழிகாட்டியாக சுட்டுவது காந்தியை!

அவர் சட்டமன்றத்தில், பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காக தீர்மானங்கள் கொண்டுவர முயன்ற போது கடும் எதிர்ப்பைச் சந்தித்ததாகவும்,
அச்சமயத்தில் காந்தியிடமிருந்தே ஆதரவைப் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார்.

பெண்ணுரிமைக்குப் போராடும் வலுவான போராளி என்று  புகழாரம் அனைத்தையும் காந்தியாருக்கே சூட்டி மகிழ்கிறார்.
'யங் இந்தியா' ஏட்டில் தமக்கு ஆதரவாக காந்தியார் எழுதியதையும் விரிவாகக் கூறுகிறார்.
--------

முன்னோடிகளாக அவர் சுட்டியோர் திராவிடவாதிகள் அல்லர்!

1946இல் சென்னையில் இந்தி பிரச்சார சபை வெள்ளி விழா கூட்டத்திற்கு காந்தியார் வருகை தந்த கூட்டத்தில், முத்து லெட்சுமி அம்மையார் பெண்விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களாக இராஜராம் மோகன்ராய், பண்டிட் வித்யாசாகர், சுவாமி தயானந்த சரசுவதி ஆகியோரையே குறிப்பிட்டு பேசுகிறார்.
-------
ஈ.வே.ரா பற்றி பத்தோடு பதினொன்றாக கூட குறிப்பிடவில்லை!

  திராவிடவாதிகளில் நீதிக்கட்சி தலைவர் பனகல் அரசர் தமக்கு ஆதரவாக செயல்பட்டதை ஓரிடத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.

அதே நேரத்தில் மற்றொரு திராவிடவாதியான நீதிக்கட்சியைச் சார்ந்த கிருஷ்ணன் நாயர் முத்துலெட்சுமி அம்மையார் தமது மசோதாவை தாமதப்படுத்த முயல்வதாகவும் குற்றம் சாட்டுகிறார்.

காங்கிரசு கட்சி சட்டமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதால் தமக்கு ஆதரவளித்த வெங்கையா, ஏ.பி.ஷெட்டி,.ஆர். நாகன் கெளடா, நடேச முதலியார், ஏ.ரங்கநாத முதலியார், கே.உப்பி சாஹிப் ஆகியோரை நன்றியோடு நினைவு கூறுகிறார்.

இந்தியாவிற்கு முன்மாதிரியாக நீதிக்கட்சிதான்  தேவதாசிமுறையை ஒழித்ததாக திராவிட இயக்கத்தவர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆனால் முத்துலெட்சுமி அம்மையாரோ தேவதாசிமுறையை முதன்முதலாக ஒழித்தது 1909இல் மைசூர் சமஸ்தானமே என்று பாராட்டு தெரிவிக்கிறார்.

1930களில் கொச்சி சமசுதானத்தில் அடியோடு தேவதாசிமுறை ஒழிக்கப்படும் போது, அதுபோல ஆங்கிலேயரால் ஏன் சாதிக்க முடியவில்லையே? என கேள்வி எழுப்புகிறார்.

ஒருவேளை யாரையும் விமர்சிக்க மனமில்லாமல் சத்தியமூர்த்தி ஐயரை விட்டிருக்கலாமோ என்று நினைத்தால் அதுவும் இல்லை.

அவர் குற்றம் சாட்டும் ஒரே நபர் இராசாசி.
1937இல் முதல்வராக இராசாசி பதவி வகித்த போது தேவதாசி ஒழிப்புமுறை சட்டத்தை தடுத்ததாகவும், பெண்கள் சீர்திருத்தத்திற்கு எதிரானவர் இராசாசி என்றும் கடுமையாகச் சாடுகிறார்.

பின்னர், 1947இல் ஓமந்தூர் இராமசாமி முதல்வராக இருந்த போதுதான் தேவதாசி சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு பெண்கள் தேவதாசி முறையிலிருந்து விடுபட்டதாகவும் மகிழ்ச்சி பொங்க குறிப்பிடுகிறார்.

ஈ.வெ.ரா எந்த இடத்திலும் அம்மையாரின் நினைவுக்கு வரவில்லை.

  என்றால் ஈ.வெ.ரா குரல்கொடுக்கவே இல்லையா?!
அல்லது முத்துலட்சுமி அம்மையார் குறிப்பிடும் அளவுக்கு அது வலுவாக இல்லையா?!

இது போன்ற கேள்விகள் முத்துலெட்சுமி அம்மையார் எழுதிய சுயசரிதை நூலைப் படிக்கும் போது எழுகின்றன.

"பெரியாரின் ஆலோசனையின்படியே, சத்திய மூர்த்தி ஐயரின் குடும்பத்தை நோக்கி, முத்துலெட்சுமி அம்மையார் கேள்விகள் கேட்டார்" என்று பலரும் கூறி வருகின்றனர்.
முத்துலெட்சுமி அம்மையாரின் எழுத்திலும், பேச்சிலும் நாகரிக வார்த்தைகளே இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.
சத்திய மூர்த்தி ஐயரையே விமர்சிக்கத் தயங்குபவர் "உங்க ஆத்துப் பெண்கள் இத்தொழிலை செய்யட்டும்" என்று கூறியிருப்பாரா? என்ற ஐயம் எழுகிறது.

இந்தத் தகவலை பிராமண எதிர்ப்புக்காக தீவிரமாகப் பரப்பி வரும் திராவிட இயக்கத்தினர் மூலச் சான்றுகளோடு விளக்கம் அளித்தால் நல்லது!

(டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சுயசரிதை, எஸ். இராஜலெட்சுமி (தமிழில்), அவ்வை இல்லம், ராஜ லெட்சுமி சீனிவாசன் நினைவு அறக்கட்டளை)

தகவல்களுக்கு நன்றி:-
Tamilthesiyan.wordpress.com

Monday, 9 July 2018

காமராசரைக் கொல்லத்துணிந்த திராவிடம்

காமராசரைக் கொல்லத்துணிந்த திராவிடம்

“ஒரு முறை விருதுப்பட்டி சந்தைக்குச் சென்ற வண்டிகள் இரவில் திரும்பி வருகிறபோது,
ஊர் சாலையில் ஒரு மனிதர் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்ட வண்டிக்காரர்கள், ஓடோடி அருகில் சென்று பார்த்தபோது, சாலையில் கிடந்தவர், தலையில் அடிபட்டு வெளியேறிய ரத்தம் உடலெங்கும் பரவிப் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போய்விட்டார்கள்.
மெல்லப் புரட்டிப் பார்த்தபோது, பி.எஸ்.கே. வீட்டிற்கு அடிக்கடி விருதுப்பட்டியிலிருந்து வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் காமராஜ் என்பதை அடையாளம் தெரிந்து, திகைத்துப் பின், தூக்கி வண்டியில் கிடத்தினார்கள்.

“முதல் உதவியாக சில பச்சிலைகளைப் பறித்து வந்து அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள். வண்டியை விரைவாக ஓட்டினார்கள்.
‘பளபள’வென விடிகிற நேரத்தில், பி.எஸ்.கே. வீட்டு முன்னர் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று தகவலைத் தெரிவித்ததும், ஓடி வந்தார் பி.எஸ்.கே.
வண்டியை நேராக மருத்துவமனைக்கு விடும்படி வேண்டினார்.
மருத்துவமனையில் ஏறத்தாழ நாற்பது நாள்கள் இருந்த காமராஜ், அங்கிருந்து ‘காங்கிரஸ் மாளிகை’க்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர் விருதுப்பட்டிக்குச் சென்றார்.

விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், விடுதலைப் போராட்டக் காங்கிரஸ் பணிகளை விருதுப்பட்டியில் விறுவிறுப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் காமராஜை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்களென்பதைக் காங்கிரஸ் போராட்ட வீரர்கள் பின்னால் அறிந்து கொண்டனர்.”
– இவ்வாறு ‘பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாற்று நூல்” தெரிவிக்கிறது.

(அக்காலத்தில் விருதுநகரை விருதுப்பட்டி என்று அழைப்பது வழக்கம்.)

Tuesday, 1 August 2017

காமராசரை அடித்துப்போட்ட ஜஸ்டிஸ் கட்சி, அதிஸ்டவசமாக உயிர்தப்பிய நிகழ்வு

“ஒரு முறை விருதுப்பட்டி சந்தைக்குச் சென்ற வண்டிகள் இரவில் திரும்பி வருகிறபோது,
ஊர் சாலையில் ஒரு மனிதர் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்ட வண்டிக்காரர்கள்,
ஓடோடி அருகில் சென்று பார்த்தபோது, சாலையில் கிடந்தவர், தலையில் அடிபட்டு வெளியேறிய ரத்தம் உடலெங்கும் பரவிப் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போய் விட்டார்கள்.
மெல்லப் புரட்டிப் பார்த்தபோது, பி.எஸ்.கே. வீட்டிற்கு அடிக்கடி விருதுப்பட்டியிலிருந்து வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் காமராஜ் என்பதை அடையாளம் தெரிந்து, திகைத்துப் பின், தூக்கி வண்டியில் கிடத்தினார்கள்.
முதல் உதவியாக சில பச்சிலைகளைப் பறித்து வந்து அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள்.
வண்டியை விரைவாக ஓட்டினார்கள்.
‘பளபள’வென விடிகிற நேரத்தில், பி.எஸ்.கே. வீட்டு முன்னர் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று தகவலைத் தெரிவித்ததும், ஓடி வந்தார் பி.எஸ்.கே.. வண்டியை நேராக மருத்துவமனைக்கு விடும்படி வேண்டினார்.
மருத்துவமனையில் ஏறத்தாழ நாற்பது நாள்கள் இருந்த காமராஜ், அங்கிருந்து ‘காங்கிரஸ் மாளிகை’க்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர் விருதுப்பட்டிக்குச் சென்றார்.
விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், விடுதலைப் போராட்டக் காங்கிரஸ் பணிகளை விருதுப்பட்டியில் விறுவிறுப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் காமராஜை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்களென்பதைக் காங்கிரஸ் போராட்ட வீரர்கள் பின்னால் அறிந்து கொண்டனர்.”
– இவ்வாறு ‘பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாற்று நூல்' தெரிவிக்கிறது.
(அக்காலத்தில் விருதுநகரை விருதுப்பட்டி என்று அழைப்பது வழக்கம்.)

இதேபோல ம.பொ.சி எழுதிய 'எனது போராட்டம்' நூலிலும் தன்னை ஜஸ்டிஸ் கட்சி வீடு புகுந்து தாக்கி கொல்ல முயன்றதை 'கொலை முயற்சி' எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.

Sunday, 13 November 2016

திராவிடம் கூட்டுவைத்த பிராமணர்கள்

திராவிடம் கூட்டுவைத்த பிராமணர்கள்

"நெல்லூர் மகாநாட்டில் பார்ப்பனர்களை சட்டச்சபைக் கட்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற தீர்மானம் தென்னிந்திய நல உரிமைச்சங்க நிர்வாக சபையின் பேரால் பிரேரேபிக்கப்பட்டு,
என்னால் ஆமோதிக்கப்பட்டு அது விஷயாலோசனைக் கமிட்டியில் ஒரு ஓட்டில் தோல்வியடைந்து விட்டது."
- ஈ.வே.ரா 'எனது தோல்வி' என்ற தலைப்பில் 'குடியரசு' ஏட்டில் 13.10.1929 இல் எழுதியது.

இதன் பிண்ணனியை சிறிது ஆராய்வோம்.

தென்னிந்திய நல சங்கம் (எ) நீதிக்கட்சியில் இருந்து 1923ஆம் ஆண்டு ஒரு குழு சி.ஆர்.ரெட்டி என்ற தலைமையில் பிரிந்து 'ஜனநாயக நீதிக் கட்சி' என்ற ஒன்றைத் துவக்கி அப்போது மெட்ராஸ் மாகாண (பழைய தமிழக மாநிலம்) ஆட்சியில் இருந்த பனகல் அரசர் பனங்கன்டி ராமராயநிங்கார் என்ற தெலுங்கர் தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராய் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவருகின்றனர்.

பனகல்ராஜா பதவியைக் காப்பாற்ற பார்ப்பனர் கால்களில் போய் விழுந்தார்.
'தி இந்து' கஸ்தூரி அய்யங்காரின் ஆதரவைப் பெற்றதோடு மற்றொரு காங்கிரஸ் பத்திரிகையாளர் மலையாள பிரமணரான பணிக்கருக்கு சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் பதவியளித்தார்.
பல்வேறு சலுகைகளை அவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அளித்து தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டார்.
(The politics of south india 1920 -1937
By Christopher John Baker, page70)

பிறகு 1926இல் அறநிலையக் குழுவிற்கு முதல் தலைவராக நீதிபதி சர்.டி.சதாசிவ ஐயர் நியக்கமிக்கப்பட்டு, ஐயர்-ஐயரல்லாதார் உறவு பலப்படுத்தப்பட்டது.

1926இல் ஆறாண்டு கால ஆட்சியை நீதிக்கட்சி இழந்தது.
திரும்பவும் அதிகாரத்தைக் கைப்பற்ற பிராமணர்களுடன் கைகோர்க்க நீதிக்கட்சியினர் தயாராய் இருந்தனர்.

1928 மதுரையில் ஜனவரி மாதம் கூடிய நீதிக்கட்சி 10வது மாநாட்டில் பார்ப்பனர்களைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என்னும் தீர்மானம் பனகல் அரசரால் கொண்டு வரப்படுகிறது. ஆனால் தோற்கடிக்கப்படுகிறது.

  ஓராண்டு கழித்து 1929ஆம் ஆண்டு நெல்லூரில் நடைபெற்ற நீதிக்கட்சி 11வது மாகாண மாநாட்டில் இந்த தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டு தோல்வி அடைந்தது.

இதைத்தான் ஈ.வே.ரா குடியரசு ஏட்டில் எழுயுள்ளார்.
ஆக முதல் திராவிட கட்சி தனது பிராமண எதிர்ப்பைக் கைவிட்டு பிராமணர்களையும் தம்மோடு சேர்த்துக்கொண்டதை ஈ.வே.ரா எதிர்க்கவில்லை ஆமோதித்துள்ளார்.
ஆனாலும் நீதிக் கட்சியிலிருந்த பிராமண எதிர்ப்பாளர்கள் இந்த முயற்சியை இருமுறை தடுத்துள்ளனர்.

1929இல் செங்கற்பட்டில் ஈ.வே.ரா நடத்திய முதல் சுய மரியாதை மாநாட்டிலும் தெலுங்கரான மணத்தட்டை சேதுரத்தின ஐயர் தலைமை தாங்கினார்.
அதாவது இதற்கு முன்னர் மதுரையில் (1926) மற்றும் கோவையில் (1927 ) நடத்திய முதல் இரண்டு மாநாடுகளை 'பிராமணரல்லாதார் மாநாடு' என்று நடத்திய ஈ.வே.ரா மூன்றாவது மாநாட்டை 'சுயமரியாதை மாநாடு' என்று பெயர்மாற்றி ஒரு பிராமணரையே தலைமையும் தாங்கவைத்தார்.

அடுத்த ஆண்டு 1930ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு லாகூரில் நடைபெற்றது.
அதில் போடப்பட்ட தீர்மானப்படி மெட்ராஸ் மாகாணத்திலிருந்த காங்கிரஸ் மத்திய சட்டசபை உறுப்பினர்கள் டாக்டர் யூ.ராமராவ் (தெலுங்கர்) மற்றும் ராமதாஸ் பந்துலு(தெலுங்கர்) ஆகியோர் ராஜினாமா செய்து விட்டனர்.

அதனால் காலியான இரண்டு இடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி ஏ.ராமசாமி முதலியாரையும்  டி.ஆர்.ராமச்சந்திர ஐயரையும் நிறுத்துகிறது.
எத்தனையோ பிராமணரல்லாதார் இருக்க டி.ஆர்.ராமச்சந்திர ஐயரை நிறுத்தவேண்டிய அவசியம்
ஏன் வந்தது?
இத்தனைக்கும் டி.ஆர்.ராமச்சந்திரையர் இந்து வருணாசிரம ஸ்தாபன தலைவர் ஆவார்.

இதே 1930ல் இரண்டாவது சுயமரியாதை மாநாடு நடந்தபோதும் அதில் மணத்தட்டை சேதுரத்தின ஐயர் முன்னிலை வகித்தார்.

தஞ்சை ஜில்லா சார்பில் இந்திய சட்டசபைக்கு சர்.சி.பி.ராமசாமி ஐயர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கவும் நீதிக்கட்சி ஆதரவு தந்தது.

1934 செப்டம்பர் மாதம் சென்னையில் பொப்பிலி ராஜா தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் மூன்றாவது முறையாக பிராமணர்களைக் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியே விட்டனர் நீதிக்கட்சினர்.

நீதிக்கட்சி 1944ஆம் ஆண்டில் சேலத்தில நடந்த மாநாட்டில் நீதிக்கட்சி ஈ.வே.ரா தலைமையில் திராவிடர் கழகமாகப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

பிறகு ஈ.வே.ரா வின் ஆதரவுடன் 1946ல் தெலுங்கு பிராமணரான தங்கதூரி பிரகாசம் பந்துலு (இடைக்கால) சென்னை மாகாண அரசின் தலைமை அமைச்சரானார்.
(திராவிட சதிவேலையின் காரணமாக காங்கிரசு ராஜாஜி மற்றும் காமராசர் குழுவாக பிளவுபட்டிருந்தது).
என்னயிருந்தாலும் ஒரு பெயருக்கேனும் அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிருக்கலாம்
ஆனால் மூச்சுகூட விடவில்லை திராவிடக் கட்சியினர்.

பிறகு ஈ.வே.ரா தனது வளர்ப்பு மகளை திருமணம் செய்ததும் அண்ணாதுரை பிரிந்து சென்று 1949ல் தி.மு.க என்று கட்சி தொடங்கினார்.
இதனால் ஈ.வே.ராமசாமி  அண்ணாதுரையை எதிர்த்து செயல்பட பிராமணர் காலில் போய் விழுந்தார்.

1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்றத் தொகுதியியல் சி.என்.அண்ணாத்துரையை எதிர்த்துக் காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான மருத்துவர் பி.எசு. சீனிவாசனை ஆதரித்து ஈ.வெ.ரா. நேரடியாகவே வாக்குக் கேட்டார்.
இருந்தாலும் அண்ணாதுரை வென்றார்.

இதே 1957இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் போட்டியிட்ட பி.பாலசுப்பிரமணியத்தை தோற்கடிக்க காங்கிரஸின் காலில் விழுந்தார் ஈ.வே.ரா.
காங்கிரசு தரப்பில் போட்டியிட்ட பிராமணரான டி.டி.கிருஷ்ணமாச்சாரியை ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக்கேட்டார்.
அதோடு நில்லாது பி.பாலசுப்பிரமணியத்தைத் தோற்கடிக்க வேண்டுமென்றே சுயேட்சையாக எஸ்.இராமநாதன் என்பவரை என்ஜின் பெட்டிச் சின்னத்தில் போட்டியிட வைத்தார் ஈ.வே.ரா.

அண்ணாதுரையும் இதற்கு விதிவிலக்கில்லை.
1957ல் நெடுஞ்செழியனின் தோல்வி குறித்து வழக்கு வாதிட வந்த பிராமணரான வி.பி.ராமனை அண்ணாதுரை கட்சியில் சேர்த்துக்கொண்டார்.
கட்சி கூடல்கள் அனைத்தும் அவர் வீட்டிலேயே நடந்தன.

1959 ல் தி.மு.க 90 இடங்களில் வென்றது.
காமாட்சி ஜெயராமன் என்ற பிராமணப் பெண்ணை மேயராக்கினார் அண்ணாதுரை.

1967ஆம் ஆண்டு அண்ணாதுரையின் பிராமணரான ராஜாஜியின் சுதந்திராக் கட்சி உடன் ஏற்படுத்திக் கூட்டு ஏற்படுத்திக்கொண்டது.

இதே காலத்தில் அதாவது 1967இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சைத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க உறுப்பினர் எஸ்.டி. சோமசுந்தரத்தை எதிர்த்துக் காங்கிரசு கட்சியின் சார்பில் இந்திராகாந்தியால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிராமணராகிய ஆர்.வெங்கட்ராமனை நேரடியாக ஆதரித்து ஈ.வெ.ரா. வாக்குக் கேட்டார்.
தேர்தல் பரப்புரை செய்த ஈ.வெ.ரா,
“கழுதைகளாக இருந்தாலும் பிராமணராக இருந்தாலும் எல்லாக் காங்கிரசு வேட்பாளர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

தி.மு.க காஷ்மீர் பண்டித பிராமணரான இந்திராகாந்தியுடன் கூட்டுவைத்ததை நாடறியும்.

இதன் பிறகு  1972ல் தொடங்கப்பட்ட திராவிட கட்சியான அ.தி.மு.க இரண்டாக உடைந்து எம்.ஜி.ஆர் மனைவியான மலையாள பிராமணர் ஜானகி ராமச்சந்திரன் தலைமையிலும்
கன்னட பிராமணரான ஜெயலலிதா தலைமையிலும் செயல்பட்டு
இன்று தமிழகமே திராவிடத்தின் பெயரில் பிராமணரால் ஆளப்படுகிறது.

ஆக தொடக்கத்தில் இருந்து இறுதிவரை திராவிடம் பிராமணருடன் கூட்டுசேர்ந்தே இயங்கிவருகிறது.

நன்றி: கு.காமராஜ்,
("அந்திமழை" இதழ் சூன் 2015)
நன்றி: செ. அருள்செல்வன்,
(அண்ணாவின் அரசியல் குரு, பக்கம் 212.)
நன்றி: முகநூல் தமிழ்தேசிய பதிவர்கள்