Showing posts with label தமிழன் இழந்த மண். Show all posts
Showing posts with label தமிழன் இழந்த மண். Show all posts

Monday, 3 April 2017

தாலி அறுத்தான் சந்தை

தாலி அறுத்தான் சந்தை

குமரி மாவட்டம் மலையாளிகள் பிடியில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பெண்கள் மார்பு அளவிற்கேற்ப முலைவரி வசூலிக்கப்பட்டது.

மார்பை மூடவும் அனுமதி இல்லை.

அந்நிலையில் ஒரு சந்தையில் மலையாள சண்டியர்கள் அமர்ந்துகொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக்கொண்டு பரிகாசம் செய்துவந்தனர்.

அச்சந்தை  இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

இந்த முலைவரி நாஞ்செலி அல்லது நங்கெலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி கட்டமுடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் எழுந்த பெரும்போராட்டத்திற்குப் பிறகு (தோள்சீலைக் கலகம்) விலக்கப்பட்டது.

  1950 களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது.

Friday, 19 August 2016

அனுராதபுரம் தமிழர் மண்ணாக இருந்தது

அனுராதபுரம் தமிழர் மண்ணாக இருந்தது

□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□

1679 ல் அனுராதபுரம் வந்த ஆங்கிலேயர் அங்கே ஒருவருக்கும் சிங்களம் புரியவில்லை என்று கூறியுள்ளார்.

1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும்,
தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவுசெய்துள்ளார்.

ஆனால் இன்று அனுராதபுரம் சிங்களவர் பெரும்பான்மை மண்.
அருவியாற்றுக்கு அந்தப்பக்கம் இருந்த சிங்கவன் இன்று அதற்கு மறுமுனையில் உள்ள திருகோணமலை வரை எப்படி பெரும்பான்மை ஆனான்?

  சிங்களவர் வதவதவென்று பிள்ளைகளைப் பெற்று தமிழர் மண்ணில் குடிபுகுந்து குடிபுகுந்து மெல்ல மெல்ல நம் நிலத்தை விழுங்கி இன்று கச்சத்தீவு வரை வந்துவிட்டனர்.

Population density map of sri lanka என்று தேடுங்கள்.
இலங்கைத் தீவில் சிங்களப்பகுதியில் மக்களுக்கு இடநெருக்கடி அளவுக்கதிமாக இருப்பதும்
தமிழர் பகுதி நெருக்கடி இல்லாமல் இருப்பதும் புரியும்.

இந்த 'பெருகி குடியேறி ஆக்கிரமிக்கும்' திட்டம் அண்டை இனங்களால் கடந்த சில நூற்றாண்டுகளாக தமிழ் மண்மீது நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது.
தமிழர்கள் இனப்பெருக்கம் இயற்கையாக பெருகுகிறது.

ஆனால் நம்மைச் சுற்றியுள்ள இனங்கள் இயற்கையை முறி அளவுக்கதிகமாக இனப்பெருக்கம் செய்து வருகின்றனர்.
ஹிந்தியர், தெலுங்கர், மலையாளி, கன்னடவர், சிங்களவர் என நம்மைச் சுற்றியுள்ள எல்லா இனங்களும் இதையே செய்கின்றன.

திருவனந்தபுரம், இடுக்கி, பாலக்காடு, மைசூர், மாண்டியா, பெங்களூர், கோலார், சித்தூர், நெல்லூர், பொலநறுவை, அனுராதபுரம், புத்தளம் என இன்றைய தமிழக மாநிலத்தைப் போல பாதிஅளவு பெரிய நிலம் இவ்வாறே பறிபோனது.

தமிழகத்தில் திட்டமிட்டு குடும்பக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தி இன்று இந்திய ஒன்றியத்தில் மக்கட்தொகைக் குறைப்பில் முதல் மாநிலமாக ஆக்கிவிட்டனர்.
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அந்நியர்கள் குடிவந்துகொண்டே இருக்கிறார்கள்.

ஆகவே தமிழர் நிலத்தில் வந்து குடியேறும் வேற்றின வந்தேறிகள் எவருக்கும் இனி ஆதரவளிக்காதீர்கள்.
நீங்கள் இரக்கம் பார்க்கலாம் ஆனால் காலூன்றியதும் எவனும் நன்றியை நினைக்கமாட்டான்.

முக்கியமாக, குறைந்தது இரண்டு பிள்ளைகளாவது கட்டாயம் பெற்றுக்கொள்ளுங்கள்.

திண்ணை வரை கொடுத்துவிட்டோம், வீட்டையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள் தமிழர்களே!

Monday, 25 July 2016

மாண்டியாவும் தமிழும் மாலியமும்

மாண்டியாவும் தமிழும் மாலியமும்

தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பார்,

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் "மேல்கோட்டை" எனும் ஊரில் உள்ள "செல்லப்பிள்ளை" கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்றுவரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்துகொண்டு பிறகு சிந்திக்கவும்.

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி,
செல்லப்பிள்ளை செலுவநாராயணா ஆகி,
சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.)

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறியபிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்தபெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்தபோது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்.

அவர்கள் இன்றும் தமிழராகத்தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது.

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின.
ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்கவேண்டாம்.
நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்.
அதாவது வைணவ பார்ப்பனர்கள்.
அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்.

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே.

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது.
பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப்போராடியது.

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.

Sunday, 3 April 2016

தமிழர் புவிப் பரவல் (வரைபடம்)

தமிழர் புவிப் பரவல் (வரைபடம்)

புவியியல் ரீதியாக தமிழர் பரவல்
(geographical distribution of tamil people)
படத்துடன் தமிழக மாநிலத்தின் வரைபடத்தைப் பொருத்திப் பார்த்தபோது கிடைக்கும் விடை.