Showing posts with label பழ.நெடுமாறன். Show all posts
Showing posts with label பழ.நெடுமாறன். Show all posts

Saturday, 29 June 2019

எழுவர் தூக்கு விடயத்தில் வஞ்சகம் செய்த கருணாநிதி - பழ.நெடுமாறன் எழுத்துகளில்

எழுவர் விடுதலையை தடுத்த" துரோகி கருணாநிதி"


எழுவர் விடுதலையை கருணாநிதி எப்படியெல்லாம் தடுத்தார் என்பது ஐயா பழ நெடுமாறன் எழுதிய நூலிலிருந்து நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் முழுதாக விடுவிக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டவர் ஐயா பழ நெடுமாறன் அவர்கள்.
அவர் இதற்காக பலரையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய சட்டப்போராட்டம் நடத்தி, இப்போது இருக்கும் எழுவரை தவிர மீதி உள்ளவர்களை விடுதலை செய்ததில் ஐயாவின் பங்களிப்பு முக்கியமானது.


அப்படியானவர் தூக்கு கொட்டடியிலிருந்த பேரறிவாளன் சாந்தன் முருகன் நளினி ஆகியோர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்து எப்படியாவது விடுவித்துவிட வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் என்னவெல்லாம் செய்தோம் என்பதை தினமணியில் கட்டுரையாக எழுதியுள்ளார். 

அதுவே தினமணி கட்டுரை என்ற நூலாக வெளிவந்துள்ளது. 

அதைப் படிக்கப் படிக்க, கருணாநிதி என்ற துரோகி எழுவர் விடுதலை விஷயத்தில் செய்த அத்தனை அயோக்கியத்தனத்தையும் புறிந்து கொள்ளமுடிகிறது.


சரி வாருங்கள் நூலுக்கு செல்வோம்.


-------


அவர்களை விடுவிக்க என்னவெல்லாம் செய்யலாம் என்று புறப்பட்ட போது முதலாவதாக முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களின மருமகளும் மனித உரிமை ஆர்வலருமான மோகினி கிரி அம்மையார் அவர்களை சந்திக்க முடிவு செய்தோம் மோகினிகிரி சோனியா காந்தி அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று அறிந்து, நாங்கள் அவர்களை சந்தித்தால் இந்த வழக்கு விரைவில் முடித்து அவர்களை வெளியில் எடுத்து விடலாம் என்று நம்பிக்கையோடு நாங்கள் அவர்களை சென்று சந்தித்தோம்.


அவரிடம் இந்த நால்வரின் மரண தண்டனை தொடர்பாக பேசினேன்.
அதன் விளைவாக அவர் இந்த நால்வரையும் சிறையில் சந்திக்க விரும்பினார்


வழக்கறிஞர் கோபியுடன் அவரை வேலூர் சிறைக்கு அனுப்பி வைத்தேன்.
இந்த நால்வரையும் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற மூவரையும் சந்தித்துப் பேசிவிட்டு வந்த அவர் பெரிதும் நெகிழ்ந்து போய் இருந்தார்.
அதிலும் கற்றறிந்த நளினியின் சந்திப்பு அவர் உள்ளத்தையும் மிகவும் தொட்டிருந்தது. என்னிடம் அவர்களைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசினார்.
திருமதி சோனியா அவர்களிடம் இது குறித்து பேசுவதாக கூறினார். அதன்படியே பேசி திருமதி சோனியா அவர்களும் இந்த நால்வருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பினார்.

இந்த நால்வரின் சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பி வைத்தோம்


மேலும் டெல்லிக்கு சென்று பிரதமர் வாஜ்பாய் உட்பட அமைச்சர்கள் அனைவரையும் சந்தித்து முறையிடுவது என முடிவு செய்தோம், அதற்கிணங்க மணியரசன், தியாகு, கார்முகில் ஆகியோருடன் நானும் டெல்லி சென்று நண்பர் வைகோ அவர்களின் உதவியுடன் பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, ராணுவத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ராம்ஜெத்மலானி மற்றும் பல்வேறு அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து மனுக்கள் அளித்தோம்.

சட்டத்துறை அமைச்சர் ஜெத் மாலினியை சந்தித்தபோது அவர் எங்களிடம்,

"ஏன் உங்கள் முதலமைச்சரே இதை செய்யலாமே என்று கூறினார்"


என்ன காரணத்தினாலோ அவர் தயங்குவதாக நாங்கள் தெரிவித்தபோது


"முதலமைச்சரின் தொலைபேசி எண்ணை கேட்டு வாங்கிக் கொண்டார், அவரே உடனடியாக அந்த எண்ணுடன் தொடர்பு கொண்டபோது சிறிது நேரத்தில் முதலமைச்சர் கருணாநிதி அவரிடம் பேசினார்


"எதற்காக தயங்குகிறீர்கள்" "தைரியமாக செய்யுங்கள்" " நான் உங்கள் பக்கம் இருக்கிறேன்" என்று ஜெத்மாலனி கூறினார் ஆனால் முடிவில்


"அவர் நீங்களே செய்யுங்கள் என்று கூறி பேச்சை முடித்துக் கொண்டார்" என்று எங்களிடம் கூறினார்.


திருமதி சோனியா காந்தி அவர்கள் நால்வருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று கடிதம் எழுதிய செய்திக்குப் பிறகு, நளினியின் தண்டனை மட்டும் குறைக்க கருணாநிதி முன் வந்தாரே தவிர மற்றவர்களின் தண்டனையை குறைத்து மரண தண்டனையை ஒழிக்க முன்வரவில்லை.


ஆனால் மரண தண்டனைக்கு எதிராக முழங்கியவர் கருணாநிதி.


ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட போது அதை கண்டித்தவர் கருணாநிதி.


பாகிஸ்தான் சிறையில் வாடும் சரண்தீப் சிங் தூக்குத் தண்டனையை குறைக்க உலகநாடுகள் குரலெழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்து சிறந்த மனிதராக தன்னை காட்டிக் கொண்டவர் கருணாநிதி.


அண்மையில் சென்னையில் நடந்த மரண தண்டனைக்கு எதிரான கருத்தரங்கில் கலந்துகொண்ட முதல் அமைச்சரின் மகள் திருமதி கனிமொழி அவர்கள் தூக்கு மேடையின் நிழலில் நிற்கும் பேரறிவாளனின் நூலை வெளியிட்டு மரணதண்டனைக்கு எதிரான கருத்துக்களை கூறினார்.
இதன் மூலம் மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் புதிய நம்பிக்கை பெற்றார்கள்.


அண்ணா நூற்றாண்டில் தமிழ் நாட்டில் மரண தண்டனை பெற்றவர்கள் அனைவருக்கும் விடிவு காலம் பிறக்கும் என நம்பினர்.
ஆனால் அந்த நம்பிக்கை அடியோடு தொலைந்து விட்டது


உலக அளவில் மதிக்கப்படும் முன்னாள் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ண ஐயர் அவர்கள் அண்ணா நூற்றாண்டில் பேரறிவாளன் உட்பட மூவருக்கும் கருணை காட்ட வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார்.
ஆனால் அந்த கடிதத்துக்கும் அவர் எந்த மதிப்பும் தரவில்லை.

17 ஆண்டுகாலத்திற்கு மேலாக சிறையில் வாடும் இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என எழுத்தாளர்கள் கலைஞர்கள் கவிஞர்கள் கையெழுத்திட்ட வேண்டுகோள் கடிதத்தை தியாகு மற்றும் அவரது துணைவியார் திருமதி தாமரை ஆகியோர் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து கொடுத்த போது,


"தான் எதுவும் செய்வதற்கில்லை டெல்லி தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பிவிட்டார்.

எல்லோரிடமும் இவ்வாறு கூறுகிறார் இது உண்மையா இந்தக் கூற்றில் கொஞ்சமும் உண்மை கிடையாது.


கிரிமினல் சட்ட விதிகளின் மத்திய மாநில அரசுகளுக்கு பொதுவான பட்டியல் உள்ளன.
எனவே தமிழ்நாட்டில் மரண தண்டனையை ஒழிப்பது குறித்து சட்டத்தை தமிழக சட்டமன்றமே இயற்ற முடியும்


இதுதான் சட்டம் அறிந்த வல்லுனர்களின் கருத்தாகும்.
ஆனால் அவ்வாறு செய்வதற்கு முதலமைச்சருக்கு துணிவுமில்லை மனமுமில்லை


நால்வரின் கருணை மனுவை அன்றைய ஆளுநர் தள்ளுபடி செய்த போது உயர் நீதிமன்றம் அந்த ஆணை செல்லாது என்று தீர்ப்பளித்தது.
கருணை மனுக்கள் மீது முடிவு செய்யும் அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு என்று கூறியும் அந்த அதிகாரத்தை பயன்படுத்த முதல்-அமைச்சர் கருணாநிதி முன்வரவில்லை அதைத் தட்டிக் கழித்தார்


அண்ணா நூற்றாண்டு விழாவிலும் அதையே செய்கிறார்.

மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநகராட்சி உறுப்பினரான லீலாவதியை பட்டப் பகலில் நட்டநடு வீதியில் படுகொலை செய்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட திமுகவினரை 7 ஆண்டுகளில் விடுதலை செய்ய அவரால் முடிகிறது இவர்களுக்காக ஆயுள் தண்டனை பெற்ற அனைவருமே 7 ஆண்டுகளில் விடுதலை பெற்று விட்டார்கள்.


தனது கட்சிக்காரர் களுக்காக சட்டத்தையே வளைத்தும், திறமை வாய்ந்த முதலமைச்சருக்கு நியாயத்தின் அடிப்படையில் கூட மரண தண்டனையை ஒழிக்க மனமில்லை.

வாய்ச்சொல் வீரராக சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப ஏமாற்றுபவராக விளங்கும் ஒருவரால் மனிதநேயத்தோடு ஒரு போதும் செயல்பட முடியாது என்பதைத்தான் அவர் நிரூபித்திருக்கிறார்.


பழ. நெடுமாறன்


தென்செய்தி


அக்டோபர் 1. 15. 2010


******************************

எம்மை பொறுத்தவரை கருணாநிதி ஒரு தெலுங்கு இனப் பற்றாளர்,
அத்தோடு சுயநலவாதி.
இந்த நால்வரையும் விடுதலை செய்தால் தனக்கு ஆயிரம் கோடி கிடைக்கும் என்றால் உடனே விடுதலை செய்திருப்பார்.


இல்லை பாதிக்கப்பட்டு தூக்கு கொட்டடியில் இருப்பவர்கள் தெலுங்கர்களாக இருந்தால் அவர் விடுதலை செய்து இருப்பார்.


கருணாநிதியை நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.


தமிழர் அல்லாத அனைவருக்கும் மனிதநேயம் காட்டுவார், இரக்கம் காட்டுவார், எல்லாம் காட்டுவார்.
தமிழர்கள் என்றால் 'செத்து ஒழியட்டும் நாய்கள்' என்று இருப்பார் அந்த துரோகி கருணாநிதி


இந்த மண்ணில் பிறக்கின்ற பச்சைத் தமிழ் குழந்தைகள் ஒவ்வொருவரும் இந்த கருணாநிதியின் துரோகம் பற்றியும்,
தெலுங்கு இன அரசியல் ஆதிக்கம் பற்றியும் தெரிந்து கொள்ளும் வரை எமது போராட்டம் தொடரும்.

அதியமான்

பொதுச் செயலாளர்


தமிழர் முன்னேற்ற கழகம்


Friday, 25 January 2019

பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்

பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்

வரலாற்று ஆய்வாளர் H.G.Wells என்பவர் உலகில் மாந்தர் பரவல் பற்றிய தமது கருத்தை கீழ்க்கண்டவாறு முன்வைக்கிறார்,

"For thousands of years, from 15,000 to 10,000 BC., such a heliolithic Neolithic culture and its brownish possessors may have been oozing round the globe through the warmer regions of the word, drifting by canoes often across wide stretches of sea"

"கி.மு 15,000 முதல் கி.மு. 10,000 வரையான புதிய கற்கால (அல்லது கதிரவக் கற்கால) காலகட்டத்தில் பழுப்பு மேனியுடையோர் சிறிய ரக படகுகள் மூலம் கடலில் துடுப்பாட்டியே வெப்பநாட்டிலிருந்து உலகெங்கும் பரவினார்கள்"

அத்தோடு நில்லாமல் இந்த பழுப்பு மனிதர்கள் இந்தியா முதல் எகிப்து மற்றும் ஸ்பெயின் வரை தொடர்ச்சியாக வாழ்ந்ததாக பிற ஆய்வாளரும் கருதுவதாகக் கூறியுள்ளார்,

"Wilfred scaven Blunt says that huxley had a long suspected a common origin of Egyptians and Dravidians of india, perhaps along belt of brown skinned men from india to spain in very early days"

Book: The outline of History
Page: 138 & 140

(கால்டுவெல் காலத்திற்கு முந்தைய ஆய்வாளர்கள் 'தமிழிய' என்று அழைத்தனர்.
அவர் காலத்திற்கு பிறகே 'திராவிட' எனும் பொருத்தமற்ற பெயர் நம்மீது திணிக்கப்பட்டு அதுவே மேலைநாட்டார் வழக்கத்திலும் உள்ளது)

நன்றி: பழந்தமிழர் பரவிய நாடுகள் - பழ.நெடுமாறன்

Saturday, 28 July 2018

கருணாநிதியைத் தண்டிக்க முடியாதா?

கருணாநிதியைத் தண்டிக்க முடியாதா?

கருணாநிதி தொடக்கத்தில் இருந்தே தமிழின எதிரி.
1997 இல் புலிகளின் மருந்தையும் பணத்தையும் பறித்து சிறைப்படுத்தியது அந்த கருநாகம்!

ஆம்.
தமிழகத்திற்கு மருந்துவாங்க வந்த புலிகளைப் பிடித்து சிறையிலடைத்து 50 லட்சம் ரூபாய் பணத்தை பிடுங்கிக்கொண்டதை நமது தேசியத்தலைவர் பிரபாகரனார் பழ.நெடுமாறன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
---------------

23–7–97.
தமிழீழம்

நான் நலமேயுள்ளேன்.
அதுபோல் நீங்களும் நலமேயிருக்க தமிழ் அன்னையை வேண்டுகிறேன்.
இங்கு இப்போது. மருந்துப் பொருட்களுக்குத்தான் பெரிய தட்டுப்பாடு.
அண்ணா, நீங்கள் அருட்பிதா சேவியர் மூலம் ஒழுங்கு செய்த மருந்துப் பொருட்கள் எமக்குக் கிடைத்தன.
நான் அதற்குரிய ஒரு நன்றிக்கடிதம் அவருக்கு கொடுத்துள்ளேன்.
அண்ணா அதை அவரிடம் நீங்களே நேரில் கொடுத்து விடுங்கள்.

மற்றும் மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு, இதுவரை ஐம்பது லட்சம் வரையான பணம், தமிழ்நாட்டு போலீசாரிடம் பிடிபட்டுள்ளது.
எமக்கு இங்கு இருக்கும் எவ்வளவோ பணக்கஸ்டத்தின் மத்தியிலும், மருந்து பொருட்கள் வாங்க அனுப்பிய பணம், தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலேயே பறிக்கப்படுவதுதான், வேதனையை தருகிறது.

ஆனாலும், உங்கள் உதவி எமக்கு ஒரு நம்பிக்கையையும், ஆறுதலையும் தருகிறது.
எங்களுக்கு இங்கு இப்போதைக்கு தேவையானது, மருந்துப் பொருட்கள்தான்.
தொடர்ந்தும் இது போல எமக்கு மருந்துப் பொருட்கள் கிடைக்க உதவி செய்யுங்கள், அண்ணா.
அது இங்கு எமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் அண்ணா.

இப்படிக்கு,
வே.பிரபாகரன்.
------------

பழ.நெடுமாறன் எழுதிய "பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம்" என்ற நூலில் இக்கடிதம் இடம்பெற்றுள்ளது.

2009 இல் உலகமே பார்க்க 1,75,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அதற்கு முக்கிய காரணமான கருணாநிதியை நம்மால் தண்டிக்க முடியவில்லை.
அவனும் ஆண்டு அனுபவித்து இறந்துவிட்டான்.

ஆனாலும் ஒருநாள் நமக்கான நாடும், ராணுவமும், உளவுத்துறையும் நாம் அமைப்போம்.
அப்படி அமைத்துக் கொண்ட பிறகு நாம் கருணாநிதி வம்சத்தையே கருவறுக்கவேண்டும்.

இது நியாயமா என்று சிலர் கேட்கலாம்.

எப்படி ஈழத்தமிழரைக் கொலை செய்து அரசியலில் வெற்றிபெற்று ராஜபக்ச இலங்கையிலேயே பணக்காரன் ஆனானோ,
அதுபோல  ஈழத்தமிழரையும் தமிழகத்தமிழரையும் கொன்று சுரண்டி கருணாநிதி ஆசியாவிலேயே பெரிய பணக்காரன் ஆனான்.

அவனது உறவினர்களான மாறன் சகோதரர்கள் இந்தியாவிலேயே முக்கிய பணக்காரர்களாக ஆயினர்.

இந்த பணம் யாருக்கு போகும்?

இவர்களது வாரிசுகளுக்குத்தானே?!

எனவே பாவமும் அவர்களையே சேரும்.

இதேபோல தமிழினத்தைக் கொலைசெய்த வேற்றினத்தவர் அவரது பிள்ளைகள், அவர்களது பிள்ளைகள் என நேரடி வாரிசுகள் உலகில் எந்த மூலையில் எத்தனை பேர் எந்த நிலையில் இருந்தாலும் தமிழர்நாட்டு உளவுத்துறையால் அழித்தொழிக்கப்படுவர்.

தமிழர்களே!
இந்த சிந்தனையை மனதில் இறுத்திக் கொள்ளுங்கள்!

பெற்றோர் பாவம் பிள்ளைகளைச் சேரும்!

இதுவே நமது தண்டிக்கும் நடைமுறை.

இதை அனைவரும் உணர்ந்தால் குற்றம் குறையும்.

தமிழர்நாடு!
இரும்புநாடு!

Monday, 3 April 2017

தாலி அறுத்தான் சந்தை

தாலி அறுத்தான் சந்தை

குமரி மாவட்டம் மலையாளிகள் பிடியில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பெண்கள் மார்பு அளவிற்கேற்ப முலைவரி வசூலிக்கப்பட்டது.

மார்பை மூடவும் அனுமதி இல்லை.

அந்நிலையில் ஒரு சந்தையில் மலையாள சண்டியர்கள் அமர்ந்துகொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக்கொண்டு பரிகாசம் செய்துவந்தனர்.

அச்சந்தை  இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.

இந்த முலைவரி நாஞ்செலி அல்லது நங்கெலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி கட்டமுடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் எழுந்த பெரும்போராட்டத்திற்குப் பிறகு (தோள்சீலைக் கலகம்) விலக்கப்பட்டது.

  1950 களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது.

Wednesday, 28 September 2016

ஈழப்போரில் தமிழகம் (சரியான வரிவடிவம்)

ஈழப்போரில் தமிழகம்

1970 களில் இருந்து 1982 வரை புலிகள் இயக்கம் வளர ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழகம் அவர்களுக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று அனைவருக்கும் தெரியும்.

அது தொடர்பான ஒரு விளக்கமான பதிவு.

**பழ.நெடுமாறன் அவர்களின் பங்களிப்பு முதன்மையானது.
பலமுறை புலிகளுக்கும், தலைவருக்கும் உணவு, இடம் என பல ஆதரவுகளை வழங்கியவர்.

**25-6-82ல்  உமாமகேசுவரனும் பிரபாகரனும் சென்னை பாண்டிபசாரில் மோதிய வழக்கில் அவர்கள் கைதாக, நெடுமாறன் வீட்டில் விசாரணை நடந்த போது
"ஆமாம், அவர்கள் ஆயுதப் போராளிகள் என்று தெரிந்துதான் உதவினேன்;
தமிழனாக நான் செய்த கடமைக்கு எந்த விளைவையும் சந்திக்க ஆயத்தமாயிருக்கிறேன்"
என்று உறுதியாகக் கூறிவிட்டு அவர்களைப் பிணையில் எடுக்கப்போனபோதுதான் தாம் உதவி வந்த இளைஞர்களில் ஒருவர்தான் பிரபாகரன் என்று தெரியவருகிறது.

**அந்த வழக்கை நடத்தி மதுரையில் தமது வீட்டிலும் தமது உறவினர்கள் வீட்டிலும் பிரபாகரன்,ரகு,தங்கவேலாயுதம், அன்டன், மாத்தையா, செல்லக்கிளி ஆகியோரைத் தங்கவைத்தவர்.

**போராளிகளை பிடித்துச் செல்ல சிங்கள அரசு ஆளனுப்ப 1-6-82 ல் 20கட்சிகளைக் கூட்டி தீர்மானம் போட்டு அதை பிரதமரான இந்திராகாந்திக்கு அனுப்பி போராளிகளைக் காத்தவர்.

**கிட்டு, ரஞ்சன், பண்டிதர், சீலன், புலேந்திரன், பொன்னம்மான், இளங்குமரன் போன்ற முக்கிய போராளிகளை பாபநாசத்தில் தமது இல்லத்தில் மறைத்து வைத்தவர்.

**மதுரையில் தமது வீட்டிலும் ஒன்றுவிட்ட தம்பி திரவியம் வீட்டிலும் பிரபாகரனைத் தங்கவைத்தவர்.

**காங்கிரசு பிரமுகர் வி.கே.வேலு அம்பலம் என்பவர் வீட்டில் இளங்குமரன் மற்றும் தோழர்கள் தங்கவைத்தவர்.

**தமது தம்பியின் மாமனர் ஊரான அவினாபுரியில் புலிகளுக்கு முகாம் அமைத்து தந்தவர்.

**தமது தோழர் சந்திரபால் என்பவர் வீட்டில் சீலனுக்கு சிகிச்சை செய்வித்தவர்

**உறவினர் பாண்டியன் என்பவர் வீட்டில் இந்திய-புலிகள் போரின்போது முக்கிய ஆவணங்களை மறைத்துவைத்தவர்.

**பிரபாகரனின் தாய்தந்தையரை தம்மோடு வைத்துகொண்டவர்.

**அ.அமிர்தலிங்கம் அவர்களுக்கும் பிரபாகரனுக்கும் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியையும் புலிகளையும் இணைக்க முயன்றவர்.

**ரஞ்சன், பஷீர்காகா, சந்தோசம், புலேந்திரன் ஆகியோருக்கு பிரபாகரன் தலைமையில் திருப்பங்குன்றம் அருகேயுள்ள காடுகளில் பயிற்சிக்கு உதவியவர்.

**1985ல் புலிகள் பாதுகாப்பில் ஈழத்தில் சுற்றுப்பயணம் நேரடியாக செய்து தமிழர் நிலையை  'சுதந்திரக் காற்று' என்ற பெயரில் ஆவணப்படமாக்கி இந்தியா முழுவதும் தடையை மீறித் திரையிட்டவர்.

**1983 ஜூலைக் கலவரம் நடந்தபோது 5,000 இளைஞர்களைத் திரட்டி மதுரையிலிருந்து மக்கள் பேராதரவுடன் நடை ஊர்வலமாக இராமேசுவரம் வந்து எவர் தடுத்தும் நிற்காமல் அங்கிருந்து பல படகுகளில் கடலில் ஈழம்நோக்கி பாதி தூரம் வந்து இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டவர்.

** திலீபன் உண்ணோநோன்பு இருந்தபோது நேரில் சென்றவர்
என இவரைப் பற்றி தனி புத்தகமேபோடலாம்.

**1970களிலேயே தமிழர் மாணவர் பேரவை நிறுவனர் சத்தியசீலன் போன்ற பல போராளிகளுக்கு உதவியதோடு நில்லாமல் ஆன்டன் பாலசிங்கம் மற்றும் புலிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அறைகள் வழங்கிய மத்திய இணையமைச்சர் செஞ்சி இராமச்சந்திரன்.

**அந்த சமயத்தில் போராளிகளுக்கு அருகேயிருந்து உதவிய புலமைப்பித்தன்.

**உமாமகேசுவரன் விடுதலைப்புலிகள் இயக்கப்பெயருக்கு உரிமைகொண்டாடியபோது அவரை சரிசெய்து ப்ளோட் இயக்கம் தோற்றுவிக்கக் காரணமாயிருந்த அருகோ (எழுகதிர் ஆசிரியர்).

**இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ப.மாணிக்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் என்.டி.வானமாமலை பிரபா-உமா வழக்கை நடத்தினார்.

**அமைச்சர் காளிமுத்து பிரபாகரனுக்கு நேரடியாக பல உதவிகள் செய்தவர்.

**மருத்துவக் கல்லூரி மாணவனான திண்டுக்கல் சந்திரன் தோழமையுடன் பிரபாகரனுக்கு பல உதவிகள் செய்தவர்.

**நெடுமாறன் அவர்களின் தோழர்கள் மீனாட்சி சுந்தரம், ஜெயப்பிரகாசம், தமிழ்க்கூத்தன் ஆகியோரும் உள்ளூருக்குள் பிரபாகரனுக்குப் பல உதவிகள் செய்தனர்.

**புலிகளின் கொடியை வரைந்து தந்த ஓவியர் நடராசன்.

**புலிகளின் உடையை வடிவமைத்த மதுரை தங்கராசு.

**முதல் மாவீரன் சங்கருக்கு மதுரையில் தோட்டா நீக்கி சிகிச்சை போன்ற பல முக்கிய மருத்துவ உதவிகளைச் செய்த புலிகளுக்காகவே ரகசிமாக இயங்கிய மருத்துவமனையின் பொறுப்பாளர் மரு.என்.எஸ்.மூர்த்தி.

**இசைநிகழ்ச்சி நடத்தி புலிகளுக்கு நிதி திரட்ட உதவிய இளையராஜா.

**1980ல் சீரணியரங்கில் முதன்முதலாக புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் கூட்டிய பழநி பாபா (அகமது அலி).

**1995ல் யாழ்இடப்பெயர்வு மக்களை தமிழகம் ஏற்றுக்கொள்ள முதன்முதலாகத் தீக்குளித்த அப்துல் ரவூப்.

**புலிகளுக்கும் தமிழக விடுதலை இயக்கங்களுக்கும் பாலமாக விளங்கிய சுப.முத்துக்குமார்.

**2009ல் முத்துக்குமார் உட்பட தீக்குளித்த 17 ஈகிகள்.

**ராசீவு காந்திக்கு உயிருடன் இருக்கும் போதே அறம்பாடிய,
தனுவுக்கு கவியாரம் சூட்டிய பெருஞ்சித்திரனார்.

**The History of Thamiraparni எனும்ஈழத்தமிழர்களின் வரலாற்றை எழுதிய, தனி ஈழத்துக்காக தீவிரமாகப் போராடிய, புலிகளால் மாமனிதர் பட்டம் அளிக்கப்பட்ட ஆ.இராசரத்தினத்துக்கு 1973லிருந்து கடைசிவரை அடைக்கலம் வழங்கிய திரு இரா.ஜனார்த்தனம் மற்றும் மணவைத்தம்பி.

**புலிகளின் பாடல்களுக்கு இசையமைத்துத் தந்த தேனிசைச் செல்லப்பா.

**சிறுமலை என்ற ஊரில் பயிற்சிக்கு தன் இடத்தை வழங்கிய, புலிகளால் ஈழத்துணை விருது வழங்கி மேன்மைப்படுத்தப்பட்ட திண்டுக்கல் அழகிரிசாமி.

**அப்போது முகாமுக்கு உணவு வழங்கிய திண்டுக்கல் வணிகர் சங்கத் தலைவர் மணிமாறன்,

**ஈழத்திற்கு சென்று மரணப்படுக்கையில் இருந்த பிரபாகரனின் தாயாரைப் பல தடைகளை மீறி சந்தித்த வழக்கறிஞர்.அங்கயற்கண்ணி.

**1986ல் சார்க் மாநாடு பெங்களூரில் நடைபெற்றபோது ஜெயவர்த்தனாவுக்கு ஆயிரக்கணக்கானோரோடு கறுப்புக்கொடி காட்டிய கர்நாடகத் தமிழ்ப்பேரவைப் பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம்.

**1996ல் புலிகளுக்கு ஜீப் வண்டி நன்கொடையளித்த பி.எல்.ராமசாமி (திராவிடர் கழகம்).

**இந்திய அமைதிப்படை அட்டூழியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க 1988ல் கொடைக்கானல் குண்டுவெடிப்பு நடத்தி சிறைசென்ற தோழர்.பொழிலன்.

**சென்னை தெற்குப்பகுதியில் கடற்கரைக்கு சற்று தொலைவில் உள்ள சவுக்குத் தோப்புகளில் புலிகள் பயிற்சிபெற உதவிய சென்னைத் தமிழர் பலர் (திருமதி.அடேல் பயிற்சி பெற்ற இடம்)

**டெலோ சிறீசபா ரத்தினம் சில பெண்களை பயிற்சிக்காக சென்னை அழைத்து வந்தபோது டெலோ இயக்கம் பெண்போராளிகள் மீது ஆர்வம் காட்டாதபோது சென்னையில் தாழ்த்தப்பட்ட கத்தோலிக்கர் அவர்களைப் புலிகளுடன் சேர்த்துவிட்டனர்
(முதல் பெண்புலி பிரிவு, சோதியா, சுகி, தீபா, இமெல்டா, வசந்தி போன்றோர் இதில் அடங்குவர்).

**1984ல் திருவான்மியூரில் பெண்போராளிகளுடன் தங்கியிருந்த அடேல் மீது தவறான சந்தேகத்தோடு கூடி வந்து தாக்க முற்பட்ட அந்தப் பகுதி தமிழர்கள் அங்கே பொன்னம்மான் தாங்கள் ஈழப்போராளிகள் என்று கைத்துப்பாக்கியை எடுத்துக்காட்ட மன்னிப்பு கேட்டு வருந்தியபடி கலைந்துசென்றனர்.

**பாலா-அடேல் தங்கியிருந்த வீட்டில் குண்டுவெடித்தபோது அக்கம்பக்கத்து தமிழர்கள் வந்து நலம் விசாரித்தனர்.
வேறொரு இசுலாமியத் தமிழ்க்குடும்பம் துணிந்து வீடுகொடுத்தது.
இதையடுத்து எம்ஜிஆர் காவல்துறையை முடுக்கிவிட இதற்கு காரணமானவர் இலங்கை அமைச்சர் லலித் அதுலத் முதலி என தெரியவர அவர்மீது வழக்குபோடவிடாமல் இந்திய அரசாங்கம் தடுத்துவிட்டது.

**பயிற்சிக்கு தமது சொந்த இடத்தைக் கொடுத்த கொளத்தூர் மணி.

**கொளத்தூரில் பயிற்சி நடந்தபோது 150 போராளிகளுக்கு மூன்று ஆண்டுகள் சகலதேவைகளையும் நிறைவேற்றியதோடு மட்டுமன்றி தம்மோடு பழகிய பொன்னம்மான் ஈழத்தில் இறந்தபோது நினைவிடம் அமைத்த கொளத்தூர் தமிழ்மக்கள்.

**அதே நேரத்தில் திருவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பில் உள்ள முகாமுக்கு உதவிகளனைத்தும் செய்த அப்பகுதி தமிழர்.

**அமைச்சராக இருந்தபோது புலிகளுக்கு உதவியதால் 1992ல் 'தடா'வில் கைது செய்யப்பட்ட சுப்புலட்சுமி, அவரது கணவர் செகதீசன்.

**கௌதமி, கலாராம், குமார் என்ற மூன்று ஊனமுற்ற ஈழவர் தடாவில் கைது செய்யப்பட்டபோது போராடி விடுதலை பெற்ற வழக்கறிஞர் கே.சந்துரு (தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி).

**பிரபாகரன், மாத்தையா உள்ளிட்ட முதல் பிரிவு இந்தியாவுக்கு பயிற்சிக்கு வந்தபோதும், இந்திய இலங்கை-ஈழப்போராளிகள் பேச்சுவார்த்தையின் போதும் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்த எஸ்.சந்திரசேகரன்(ரா உயரதிகாரி)

**புலிகளின் ஆயுதங்கள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டபோதும்,
புலிகள் இந்தியாவிடம் பயிற்சி பெறவும் பல உதவிகள் செய்த தமிழக காவல்துறை உயரதிகாரி அலெக்சாந்தர்.

**1983ல் ஐநா பேரவைக் கூட்டத்தில் 70நாட்கள் பன்னாட்டு தலைவர்களுடன் பேசி,
உரையாற்றி ஐநா பொதுச்செயலர் ஃபெரஸ் டி.கொய்லர் இலங்கை தமிழர் பிரச்சனை மனித உரிமை மீறல் தொடர்பானது என்று ஒப்புக்கொள்ளவைத்த பண்ருட்டி.ராமச்சந்திரன்.

**1985ல் திம்பு மாநாட்டில் ஈழ ஆயுதக்குழுக்கள் ஒன்றிணைந்ததைக் கெடுக்க இந்திய அரசு பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகியோரை நாட்டைவிட்டு வெளியேறச் சொன்னபோது பொங்கியெழுந்த தமிழகம் போராடி அதைத் தடுத்தது.
பத்துமணிநேரத்தில் பத்துலட்சம் தமிழர்கள் மெரீனாவில் கூடினர்.

**கறுப்பு யூலையின்போது அதுவரை தமிழகத்தில் நடக்காத அளவு முழுஅடைப்பும், பல்வேறு போராட்டங்களும் நடந்தன.

**இந்திரா காந்தியின் ஆலோசகரான ஜி.பார்த்த
சாரதி தமிழர் ஆதரவு செயல்பாட்டினால்
செயவர்த்தனாவால்
குற்றம்சாட்டப்பட்டு பதவி விலகினார்.

**ராசீவ் காந்தியால்
வெளியுறவுத்துறை அமைச்சரான
ஏ.பி.வெங்கடேசன் தமிழர்
ஆதரவு செயல்பாட்டால்
பதவி விலக்கப்பட்டார்.

**கவிஞர்.காசிஆனந்தனுக்கு ஆதரவும் அடைக்கலம்
தந்துள்ளது தமிழகம்.

**இந்திய அமைதிப்
படை ஈழத்தில் நடத்திய கொடுமைகள்
பற்றி புலிகள் வெளியிட்ட 'சாத்தானின்
படைகள்' நூலுக்கு ஓவியம்
வரைந்துகொடுத்ததற்காக இந்திய
உளவுத்துறையால் கைது செய்யப்பட்டு பல
கொடுமைகளுக்கு ஆளான ஓவியர்.வசந்தன்.

**ஈழ-இந்தியப் போரில் தப்பிவந்த
அத்தனை பேருக்கும் தமிழகம் உதவியது
(காட்டாக அப்போது பாலசிங்கம்
தம்பதி தப்பி தமிழகம்
வந்து வீட்டுக்காவலில் இருந்த
கிட்டுவை சந்தித்துவிட்டு காலாவதியான
கடவுச்சீட்டு மூலம் வேறு பெயரில்
பயணச்சீட்டு எடுத்து சென்னையிலிருந்து
இலண்டன் சென்றனர்).

**போர்நடந்தபோது அங்கே களநிலவரம் அறிய மத்திய
ரிசர்வு போலீசு உயரதிகாரி கார்த்திகேயன்
என்பவரை இந்திய டி.என்.சேஷன் அனுப்பினார்,
1989ல் ரகசியமாக போர்ப்பகுதியில்
சுற்றிவிட்டு தமிழர்கள் கேட்கும்
உரிமைகளைத் தருவதே தீர்வென்றும்,
புலிகளின் பலத்தையும், இந்தியப்
படையினரின் மனமொடிந்த நிலையையும்
கூறி போர் முடிவுக்கு வர முக்கிய காரணமாக
இருந்தார்.

**1988ல் சிறிலங்க அரசில்
அமைச்சராக இருந்த பக்ருதீன்
முகமது தலைமையில் இலங்கை இசுலாமியர்
பற்றி பேச சென்னையில் கிட்டுவை சந்திக்க
வந்தபோது அப்துல்சமத் என்ற 'இந்திய
முசுலீம் லீக்' தமிழகக் கிளை தலைவர் அந்தப்
பேச்சுவார்த்தையை பழ.நெடுமாறன் கேட்டுக்
கொண்டதன்பேரில்
நடத்தி புலிகளுக்கு ஈழத்தமிழ் இசுலாமியர்
பக்கபலமாக இருக்க உதவியவர்.

**இந்திரா கொல்லப்பட்டபோது நடந்த
சீக்கியப்படுகொலை போல்
இராசீவு படுகொலையின்போது தமிழர்
படுகொலை போன்ற தீவிர நடவடிக்கை வராமல்
பார்த்துக்கொண்டவர் அப்போதைய குடியரசுத்
தலைவர் ஆர்.வெங்கட்ராமன்.

**2002ல் சென்னை ஆனந்த் திரையரங்கில்
புலிகள் ஆதரவு கூட்டம் நடத்திய தமிழ்
முழக்கம் சாகுல் அமீது, பழ.நெடுமாறன், மரு.தாயப்பன், பாவாணன் ஆகியோர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

**1990களில் புலிகள் கல்வித்திட்டத்தில் தமிழக கல்வியாளர்கள் பாடத்திட்டம், புத்தகங்கள், பயிற்சி என பல வகைகளில் உதவினர்;
இராணுவ விஞ்ஞானம் பற்றிய பாடத்திட்டங்களை தீட்டி அளித்தவர் சென்னையில் இதே துறையின் தலைவராக இருந்த பேரா.மனோகரன்.

**நுண்கலைக் கல்லூரி ஒன்றை புலிகள் ஆரம்பிக்க பேரா.விசயகோபால் திட்டவரைவு வழங்கினார்.

**நீர்மேலாண்மை பற்றிய பாடத்திட்டம் நெடுமாறனின் தம்பி முனைவர்.பழ.கோமதிநாயகம் என்பவர் தீட்டியது.

**தமிழ் பாடத்துக்கு கடையம் பேரா.அறிவரசன், ஆங்கிலத்துக்கு பேரா.அ.அய்யாச்சாமி போன்றோர் ஈழத்திற்கே சென்று ஆண்டுக்கணக்கில் தங்கி உதவினர்.

**புலிகள் மீதான பல்வேறு வழக்குகளை தாமே முன்வந்து நடத்தியவர் எஸ்.சந்திரசேகரன், இவரும் இவரது உதவி வழக்கறிஞர் கோபிகிருஷ்ணனும் 2004ல் தலைவரை சந்தித்தனர்.

**இயக்குநர்கள் பாரதிராசா, மகேந்திரன், மணிவண்ணன் போன்றோர் தலைவரைச் சந்திக்கச் சென்று தமிழீழக் கலை பண்பாட்டுத் துறை நடத்தும் பூலித்தேவன் நாடகம், இலக்கிய விருதுகள், முத்தமிழ் விழா, பொங்கல் விழா போன்றவை கண்டு வியந்து வாழ்த்துகளும், ஆலோசனைகளும் வழங்கினர்.

**புலிகள் 1995ல் வேலூர் கோட்டையிலிருந்து தப்பி காட்டுக்குள் தப்பியபோது கொளத்தூர் மணி மற்றும் நெடுமாறன் போன்ற பலரின் உதவியால் ஈழம்போய்ச்சேர்ந்தனர்.
(இவர்கள் சேலம் காடுகளில் பதுஙங்கியிருந்தபோது எதேச்சையாக வீரப்பனார் அவர்களைச் சந்திக்க மிகவும் மகிழ்ந்து வேண்டிய உதவிகளைச் செய்தார், இவர்களில் பிடிபட்டவர் மாறன் தற்போது லண்டனில் வசிக்கிறார்)

**பிரேமா என்ற பெண்புலிக்கு குண்டு அகற்றி தமது பொறுப்பில் பாதுகாத்த பழ.நெடுமாறனின் தோழர் மரு.பொ.முத்துசெல்வம்.

**சமரச முயற்சிகளை முன்னெடுத்த நீதியரசர்.வி.ஆர்.கிருஸ்ணய்யர்.

இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டேபோகலாம்!!!!

இலங்கையின் முதல் தமிழ்ப் பத்திரிக்கை ஆரம்பித்து தமிழர்களுக்காகக் குரல்கொடுத்த வைத்தியநாதய்யர் முதல் கரும்புலி செங்கண்ணன் வரை தமிழகம் ஈழத்திற்காகத் தம்மால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது.

மேலும் சீமான், வைகோ, ஜெகத் கஸ்பர், எம்ஜிஆர் போன்றவர்களின் பங்களிப்பு பலருக்கும் தெரியுமாதலால் அவற்றை விளக்கவில்லை.