தமிழ்தேசிய சொர்க்கம்
அன்று பூவுலகை விட்டு விண்ணுலகம் வந்த தமிழர்கள் அவர்களது 'இனநலன் கணக்கு' பார்க்கப்பட்டு சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அனுப்பட்டுக் கொண்டு இருந்தனர்.
ஒருவர் பேன்ட் சர்ட் போட்டு கறுப்பு கண்ணாடி போட்டிருந்தார். ஆங்கிலம் கலந்து பேசிக்கொண்டு இருந்தார்.
அவரை சொர்க்கத்துக்கு அனுப்பினார்கள்.
இன்னொருவர் வேட்டி சட்டையில் தூய தமிழில் பேசிக் கொண்டு இருந்தார். அவரை நரகத்துக்கு அனுப்பினார்கள்!!
இவர்களுக்கு பின்னால் நின்ற ஒருவர் எனக்குத் தெரிந்தவர் அவரை கணக்கு பார்த்து பூவுலகிற்கே அனுப்பிவிட்டனர்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
அங்கே நீதிபதி போல தமிழ்த்தாய் அமர்ந்திருந்தார்.
முதலில் மூன்றாவது நபரைப் பற்றி கேட்டேன்.
"அவர் இனத்திற்கென்று எதுவும் செய்யவில்லை.
சாமானியனாக வாழ்ந்தார். அதனால் மீண்டும் பிறக்க அனுப்பிவிட்டேன்" என்றார் தமிழ்த்தாய்.
நான் "அவர் ஜாதி பட்டத்தை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டவர் ஆயிற்றே" என்று கேட்டேன்.
அதற்கு "உலகம் முழுவதும் அப்படித்தானே?!
உலகின் மிக மதிக்கப்படும் தலைவர்கள் தம் பெயரையும் தம் குடிப்பட்டத்தையும் சேர்த்துதானே வைத்திருந்தனர்! சாதிப் பட்டத்தை பயன்படுத்துவது தவறில்லை பிற சாதிகளை மேலாகவோ கீழாகவோ எண்ணுவதுதான் தவறு!"
"சரி! இன்னொருவரை நரகத்திற்கு அனுப்பினீர்களே அவர் யார்?!"
"அவர்தான் எழுத்தாளர் தூயத்தமிழன்!"
"அவரா?! அவர் எழுத்துகளை வாசித்திருக்கிறேனே?!
நல்ல எழுத்தாளர்தானே?! இன உணர்வு உள்ளவர்தானே?! பிறகு ஏன் அவரை நரகத்தில் தள்ளினீர்கள்?!"
"அவர் மொழிப்பற்றாளர்! மொழிபற்று மட்டுமே இன உணர்வு ஆகாது! தமிழில் கோர்வையாக நான்கு வரி எழுதத்தெரியாதவர்கள் கூட இனத்திற்காக பெரும் போராட்டங்களைச் செய்யவில்லையா?!
அவர் தூய தமிழில் பேசுகிறார் மகிழ்ச்சிதான்! ஆனால் 'தமிழ் பேசுவோரெல்லாம் தமிழர்' என்றும் 'சாதியை விட்டொழிப்பதே தமிழ்தேசியம்' என்றும் 'தமிழர் தூய தமிழில் பேச வேண்டும்' என்றும்
'கடவுள் நம்பிக்கையை விடவேண்டும்' என்றும் பேசியும் எழுதியும் வந்தார்"
"சரியாகத்தானே இருந்துள்ளார்?!"
"என்ன சரி?! இவரால் இயல்பான இனவுணர்வுடன் போராட வந்த பலரும் தலைதெறிக்க ஓடிவிட்டனர்"
"எப்படி?"
"இன அடையாளமான குடிப்பட்டத்தை மறைத்துக்கொண்டு....
தமிழை நன்கு கற்று சிறப்பாகப் பேசத் தெரிந்த வேற்றினத்தவரை எல்லாம் ஆதரித்து...
இயல்பான சாதிய மத பற்றுடன் இருந்தவர்களை வெறியர்கள் என்று தூற்றி...
ஆங்கில சொற்களை கலந்து பேசினால் அவன் பிறப்பையே சந்தேகப்பட்டு...
என் வயிற்றுப் பிள்ளைகளான பார்ப்பனர்களை வேற்றினம் என்று வெறுப்பை பரப்பி...
'தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான்' என்று முட்டாள்த்தனமாக எண்ணிக்கொண்டு....
இனப்பற்றை புறந்தள்ளி மொழிப்பற்றை முதன்மையாகக் கொண்டு...
ச்சே ச்சே இத்தக்கைய நபர்களால்தான் தமிழினத்தில் புகுந்த வந்தேறிகள் அதிகாரத்திற்கு உயர்ந்து இனத்தையே அழிக்கின்றனர்"
"என்றால் மொழி பெரிது இல்லையா?! அதுதானே இனத்தின் உயிர்?"
"இனம் என்பது ஒரு மனிதன் என்றால் மொழி என்பது அவனது முகம்!
இனம் எனும் உயிர் வாழவேண்டும்! மொழி எனும் அடையாளம் அவ்வளவு முக்கியமில்லை"
"சரி அந்த கறுப்புக் கண்ணாடி ஆசாமியை சொர்க்கத்துக்கு ஏன் அனுப்பினீர்கள்?!"
"முதலில் அவர் தன் குடிப்பட்டத்தை சேர்த்துக் கொண்டு வாழ்ந்ததால் வந்தேறிகள் ஊடுறுவலைத் தடுத்து நிறுத்தினார்"
"அதைத்தானே பூமிக்கு திரும்பச் சென்றவரும் செய்தார்?!"
"ஆம்! ஆனால் இவர் இனத்திற்கு பெரிய நன்மை ஒன்றைச் செய்துள்ளார்!"
"அப்படி ன்ன செய்தார்?!"
"நான்கு பிள்ளைகள் பெற்றுள்ளார்!"
"அட! இது பெரிய இனத்தொண்டா?!"
"என்ன இப்படி கேட்டுவிட்டாய் இனம் பெருக வேண்டும் இல்லாவிட்டால் அழிவுதான்!"
உனக்கு எளிதாக புரியவைக்கிறேன்!
இனம் என்பதை ஒரு மனிதனாக கற்பனை செய்துகொள்!
அவனுக்கு உயிர் வேண்டும்!
உயிரைக் காத்துக் கொள்ளும் தற்காப்பு சிந்தனை வேண்டும்!
அவன் பலசாலியாக இருக்க வேண்டும்!
அவன் அறிவாளியாகவும் இருக்க வேண்டும்!
அதன் பிறகுதான் அவன் அழகாக இருக்கிறானா?! பாடுகிறானா?! ஆடுகிறானா?! என்ற தகுதிகள் எல்லாம்!
அதே போல,
தமிழினம் வாழ இனம் பெருக வேண்டும்! மக்கட்தொகை பெருக வேண்டும்!
பிற இனங்களுடன் போட்டி போடும் வலு வேண்டும்!
அதாவது இனத்திற்கு அரசும் ராணுவமும் வேண்டும்!
அறிவியலும் தொழில்நுட்பமும் வேண்டும்!
அதற்குப் பிறகுதான் அது தாய்மொழியை வளர்க்கிறதா?! சமத்துவத்தைப் பேணுகிறதா?! பழமையை நிறுவுகிறதா?! பிற இனங்களுக்கு உதவுகிறதா? என்பதெல்லாம் கணக்கில் வரும்"
இதைவிட வேறொரு நன்மையும் இனத்திற்கு செய்துள்ளார்"
"அது என்ன?!"
"வேறொரு இனத்தில் பிறந்த பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார். அவள் மூலம் பிறந்த அந்த நான்கு குழந்தைகளையும் தமிழினத்திலேயே மணம் முடித்துள்ளார்"
"புரியவில்லையே?!"
"அதாவது ஒரு பெண் மூலம் வேறொரு இனம் விருத்தியாவதை தடுத்து தன் இனத்தில் அந்த விருத்தியைக் கொண்டுவந்துள்ளார்.
அந்த நால்வரும் அம்மாவழியில் திருமணம் செய்திருந்தால் அவரை நரகத்தில் போட்டிருப்பபேன்!"
"என்றால் வேற்றின பெண்களை குறிவைக்க சொல்கிறீர்களா?!"
"அட முட்டாள்! தமிழினத்தில் பிறந்த ஆணோ பெண்ணோ வேறு இனத்தில் திருமணம் செய்து தமது சந்ததிகளை தமிழினத்தில் மணமுடித்து அடுத்த சந்ததிகளை உருவாக்குவது இனத்திற்கு பெரிய நன்மை!"
"தமிழ்த்தாயே நீங்கள் கூறுவது பூலோகத்தில் பலரும் தமிழ்தேசியம் என்றால் என்ன என்று கூறும் வரையறைக்கு மாறாக இருக்கிறதே?!"
"தமிழ்த்தாயே எனக்கும் உங்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று ஆசை! நான் இனத்திற்குள்ளேயே திருமணம் செய்துவிட்டேன்! அதிக பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் வயதையும் கடந்துவிட்டேன்! தமிழிலும் புலமை கிடையாது! நான் என்ன செய்ய?!"
"இனப்பற்றோடு இரு! இன அரசியல் பற்றி அறிந்திரு! என்றாவது ஒருநாள் என் வயிற்றில் பிறந்த வீரமறவர்கள் இனம் காக்க வீறுகொண்டு எழுவார்கள்! அப்போது முடிந்தால் அவர்களுடன் சேர்ந்துகொள்! அல்லது முடிந்த அளவு உதவி செய்! நீ என்ன சாதியோ மதமோ எந்த நாட்டில் வாழுகிறாயோ அதையெல்லாம் இரண்டாம் இடத்தில் வை! நீ ஒரு தமிழன் என்ற இன உணர்வை முதல் இடத்தில் வை!
எனக்கு ஆங்கிலேயர் போல உலகை தம் மொழியும் தம் இனமும் தம் மதமும் ஆள வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லை!
என் நிலத்தில் என் மக்கள் தனி நாடு அமைத்து பாதுகாப்பாக நிம்மதியாக வாழவேண்டும்!
அவ்வளவுதான் என் ஆசை!
" இதை என்னால் முடிந்த அளவு மக்களிடம் கொண்டுசெல்கிறேன் அன்னையே! நன்றி!"
No comments:
Post a Comment