Showing posts with label தாய்லாந்து. Show all posts
Showing posts with label தாய்லாந்து. Show all posts

Saturday, 15 April 2017

பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?

பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?

சோழர் காலத்தில் தாய்லாந்து சென்ற சைவப் பார்ப்பனர் இன்றும் இருக்கிறார்கள்.

தமிழை மறந்துவிட்டாலும் இன்று வரை அவர்கள் மார்கழி மாதத்தில் திருவெம்பாவையை ஓதி வருகின்றனர்.
(1952ல் தமிழகத்திலிருந்து குழு சென்று மந்திரங்களை மீண்டும் கற்பித்துவிட்டு வந்தனர்)

தலைநகரான பேங்காக் நகரில் சைவ மதத்தவர் (மற்றும் இந்துக்கள்) கூடி திருவெம்பாவை ஓதி ஊஞ்சலாட்டு விழா நடத்துகிறார்கள்.
(தமிழகத்தில் கோவிலில் சிலைகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டும் சடங்கு உள்ளதே அதே போன்று)
நகரின் மத்தியில் பெரிய ஊஞ்சலும்  உள்ளது.

சோழர்காலம் வரை பார்ப்பானர் தமிழில்தான் ஓதி பூசை செய்துள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறதா?

தாய்லாந்து மன்னர் நடராஜர் சிலைக்கு முன்பாக யாகம் வளர்த்து அரண்மணைப் பெட்டகத்தில் பழைய தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தேவாரம், திருவாசகம், திருப்பாவை என தமிழ் மந்திரங்களை ஓதி பார்ப்பனர்கள் முடிசூட்டிவிடுவர்.

இது தமிழ் மன்னர்கள் முடிசூட்டிக்கொண்ட முறை ஆகும்.
குறிப்பாக
"தோடுடைய செவியன்" என்று தொடங்கும் சம்பந்தர் பாடலும்
"பித்தா பிறை சூடி" என்று தொடங்கும் சுந்தரர் பாடலும் மனப்பாடமாக ஓதுகிறார்கள்.

சமஸ்கிருதத்தை வளர்த்ததும் திணித்ததும் வடுகரே!

  தமிழகத்தில் பூசை முறைகளில் சமஸ்கிருதத்தைப் புகுத்தி தமிழ்ப் பார்ப்பனர்கள் மீது சமஸ்கிருதம் திணிக்கப்பட்டது 500 ஆண்டுகள் முன்பு தெலுங்கர் ஆட்சியில்தான் நடந்தது.

ஆனாலும் பார்ப்பனர்கள் தமிழை விட்டுக்கொடுக்கவில்லை.
இன்றுவரை தமிழை அழியாமல் தாங்கும் சமூகம் பார்ப்பனர் சமூகம்.

பார்ப்பனர் வேறு
பிராமணர் வேறு

பார்ப்பனர் தமிழரே!

படம்: 1925ல் மன்னர் நடராசர் சிலை முன் முடிசூடலுக்காக அமர்ந்திருக்கும் காட்சி

நன்றி: தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்! _indosri

Wednesday, 11 May 2016

தாய்லாந்து (தாய்)மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்

தாய்லாந்து (தாய்)மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்
------------------------------------
தங்கம் -> தொங்கம்
கப்பல் -> கம்பன்
மாலை -> மாலே
கிராம்பு -> கிலாம்பு
கிண்டி -> கெண்டி
அப்பா -> பா
தாத்தா -> தா
அம்மா -> மே, தான்தா
பட்டணம் -> பட்டோம்
ஆசிரியர் -> ஆசான்
பாட்டன் -> பா, புட்டன்
திருப்பாவை -> திரிபவாய்
வீதி -> வீதி
மூக்கு -> சாமுக்
நெற்றி -> நெத்தர்
கை -> கை
கால் -> கா
பால் -> பன்
கங்கை -> கோங்கா
தொலைபேசி -> தொரசாப்
தொலைக்காட்சி -> தொரதாட்
குலம் -> குல்
நங்கை -> நங்
துவரை -> துவா
சிற்பம் -> சில்பா
நாழிகை -> நாளிகா
வானரம் -> வானரா
வேளை -> வேளா
மல்லி -> மல்லி
நெய் -> நெய்யி
கருணை -> கருணா
விநாடி -> விநாடி
பேய்/பிசாசு -> பிச/பிசாத்
கணம் -> கணா
விதி -> விதி
போய் -> பாய்
சந்திரன் -> சாந்
ரோகம் -> ரூகி
தூக்கு -> தூக்
மாங்காய் -> மாங்க்
மேகம் -> மேக்,மீக்
பிரான், -> எம்பிரான் பிரா
யோனி -> யூனி
சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா
சங்கு -> சான்க்
தானம் -> தார்ன்
பிரேதம் -> பிரீதி
நகரம் -> நகான்
பார்வை -> பார்வே
ஆதித்தன் -> ஆதித்
உலகம் -> லூகா
மரியாதை -> மார-யார்ட்
தாது -> தாட்
உலோகம் -> லூகா
குரோதம் -> குரோதீ
சாமி -> சாமி
பார்யாள் -> பார்ய
திருவெம்பாவை -> த்ரீயம்பவாய்

நன்றி: தமிழ்த் தொண்டு (முகநூல்)

Friday, 16 October 2015

தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ்

தாய்லாந்து(தாய்) மொழியில் தமிழ் சொற்களின் வேர்கள்
------------------------------------
1. தங்கம் -> தொங்கம்
2. கப்பல் -> கம்பன்
3. மாலை -> மாலே
4. கிராம்பு -> கிலாம்பு
5. கிண்டி -> கெண்டி
6. அப்பா -> பா
7. தாத்தா -> தா
8. அம்மா -> மே, தான்தா
9. பட்டணம் -> பட்டோம்
10. ஆசிரியர் -> ஆசான்
11. பாட்டன் -> பா, புட்டன்
12. திருப்பாவை -> திரிபவாய்
13. வீதி -> வீதி
14. மூக்கு -> சாமுக்
15. நெற்றி -> நெத்தர்
16. கை -> கை
17. கால் -> கா
18. பால் -> பன்
19. கங்கை -> கோங்கா
20. தொலைபேசி -> தொரசாப்
21. தொலைக்காட்சி -> தொரதாட்
22. குலம் -> குல்
23. நங்கை -> நங்
24. துவரை -> துவா
25. சிற்பம் -> சில்பா
26. நாழிகை -> நாளிகா
27. வானரம் -> வானரா
28. வேளை -> வேளா
29. மல்லி -> மல்லி
30. நெய் -> நெய்யி
31. கருணை -> கருணா
32. விநாடி -> விநாடி
33. பேய்/பிசாசு -> பிச/பிசாத்
34. கணம் -> கணா
35. விதி -> விதி
36. போய் -> பாய்
37. சந்திரன் -> சாந்
38. ரோகம் -> ரூகி
39. தூக்கு -> தூக்
40. மாங்காய் -> மாங்க்
41. மேகம் -> மேக்,மீக்
42. பிரான், -> எம்பிரான் பிரா
43. யோனி -> யூனி
44. சிந்தனை -> சிந்தனக்கம், சிந்தனா
45. சங்கு -> சான்க்
46. தானம் -> தார்ன்
47. பிரேதம் -> பிரீதி
48. நகரம் -> நகான்
49. பார்வை -> பார்வே
50. ஆதித்தன் -> ஆதித்
51. உலகம் -> லூகா
52. மரியாதை -> மார-யார்ட்
53. தாது -> தாட்
54. உலோகம் -> லூகா
55. குரோதம் -> குரோதீ
56. சாமி -> சாமி
57. பார்யாள் -> பார்ய
58. திருவெம்பாவை -> த்ரீயம்பவாய்

நன்றி: தமிழ்த்தொண்டு-Tamil Thondu

கிழக்காசியாவில் தமிழ்க் கல்வெட்டுகள்

கிழக்காசியாவில் தமிழ்க் கல்வெட்டுகள்

சுமத்ரா பகுதியில், பாருஸ் அருகே லோபோ துவா என்ற இடத்தில் காணப்படும் ஒரு கல்வெட்டு 1088ம் ஆண்டு நிறுவப்பட்டது அதும் கூறும் செய்தி,

தற்போதைய நடைமுறைத் தமிழ் மொழிபெயர்ப்பு:

நிகழும் சக வருடம் ௧0௧0 மாசி மாதம்..,

நாங்கள் ஆயிரம் திசை ஐந்நூற்றுவர் மாதங்கிரி வல்லவ தேசி உய்யக் கொண்ட பட்டினம் எனப்படும் வாரோச்சிலுள்ள வேளாபுரத்தில் சந்தித்து, எங்கள் பிள்ளைகளான நகர சேனாபதி நாட்டுச் செட்டியார் பதிநெண்பூமி தேசி அப்பர் மட்டும் மாவெட்டுகள்

(ஒவ்வொரு) கப்பலுடைய தலைவனும், கேவிகளும், அஞ்சு துண்டையம் தங்கம் அந்த கஸ்தூரி முதலானவைக்கு செலுத்திவிட்ட பிறகுதான், கீழே இறங்கவேண்டும்.

கல்வெட்டில் உள்ள தமிழ்:

1 ஸ்வஸ்தி ஸ்ரீ சகரை
2 ஆண்டு ஆயிரத்து[ப்ப]
3 த்துச் செல்லாநி[ன்]
4 ற மாசித் திங்கள்
5 வாரோசாந மாதங்
6 கரி வல்லவத் தேசிஉ
7 ய்யக் கொண்ட பட்
8 டி நத்து வேளாபுரத்து
9 கூடி நிரந்த தே[சித் திசை]
10 விளங்கு திசை ஆயி
11 த்தைஞ்ஞூற்றுவரோ
12 ம் நம்மகநார் நகர ஸேநாப
13 தி நாட்டுசெட்டி
14 யார்க்கும் பதிநெண்பூமி
15 தேசி அப்பர்க்கு மா[வெ]த்
16 துகளுக்கும் நா வைத்துக்
17 குடுத்த பரிசாவது மரக்க
18 ல... ... ...
19 ல மரக்கல நாயநுங் கேவி
20 களும் கஸ்தூ[ரி] விலை மு[தல]கப்ப[ட]
21 அஞ்சு துண்[டா]யம் பொன்னும் கு[டு]
22 த்துப் பாவாடை ஏறக்கடவதாகவும்
23 இப்படிக்கு [இ]க்கல் எழுதி நாட்டி
24 க் குடுத்தோம் பதிநெண்பூமி தேசித் திசை விள
25 ங்கு திசை ஆயிரத்தைந்த்நூற்றுவரோம் அ
26 றமற வெற்க அறமேய் துணை.

ஆங்கிலத்தில்:

'Lobo Tuwa' Tamil inscription
Period: 11th Century CE
Script: Tamil-Grantha
Language: Tamil
Found in: Lubo Tuwa, Sumatra, Indonesia.
Material: Stone
Present Location / Lender Museum Nasional Indonesia, Jakarta, Indonesia

This Tamil inscription was found at the early port site of Lobo Tuwa near Barus (Baros) of northwestern Sumatra.

The date of the text falls within the reign of Kulottunga Chola of Tamilnadu. It is dated 1088 CE.

Translation of the available Text portion:
In the Saka year 1010 current, month Masi,
we, the Five Hundred of the Thousand Directions,
having met at the Velapuram in Varosu (Barus), also called ‘the pattinam (commercial town) for the welfare of the merchant body blessed by Matankari (Durga)’,
decided to grant as follows to ‘our sons’, the nagara-senapati Nattu-cettiyar, to Patinen-bumi-desi-appar(?), and to the mavettugal (elephant trainers?):
[On each of the] ships’ [cargoes?], the ship’s captain and crew will pay the fee anjutundayam in gold, pegged to the price of kasturi (musk), and [then only] may ‘step on the cloth spread’ (ie. enter the settlement to trade).
Thus we, the Five Hundred of the Thousand Directions, known in every direction in all Eighteen Lands, had the stone inscribed and planted.
Do not forget charity; charity alone will help you.

இதிலிருந்து அறியமுடிவது,
உய்யங்கொண்ட பட்டிணம் என்ற தமிழ் வணிகக் குடியிருப்பு இருந்துள்ளது.
அதில் தமிழ் வம்சாவழிகளுக்கு (பிள்ளைகள்) வரி செலுத்தி கப்பல் வணிகம் செய்துள்ளனர்.

இதே போல இந்தோனேசியாவின் Neusu aceh, Porlak dolok போன்ற இடங்களிலும் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

மலேசியாவின் Batu bapahatல் பாறையில் தமிழ் எழுத்துகள் காணப்படுகின்றன.

இதேபோல தாய்லாந்தில் Takua pa
பகுதியில் ஒரு தமிழ் கல்வெட்டும்

சீனாவின் Quanzhou  ஒரு பகுதியில் ஒரு தமிழ் கல்வெட்டும் உள்ளன.

பர்மாவில் Pagan பகுதியிலும் ஒரு கல்வெட்டு உள்ளது.

ஆங்கிலத்தில் விரிவாக
ismail.net/Source/0104c.html

நன்றி
aatputhan.blogspot.in/2008/05/blog-post_26.html?m=1
https://en.m.wikipedia.org/wiki/Tamil_inscriptions_in_the_Malay_world

Saturday, 25 July 2015

பெரும்பட்டன் கல்

தாய்லாந்தில்
க்வான் லுட் பட் (khwan lut pat)
என்ற இடத்தில் அருங்காட்சியகத்தில்
கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த
'பெரும்பட்டன் கல்' என்ற படிமம் வைக்கப்பட்டுள்ளது.

2200 ஆண்டுகள் பழமையான தமிழர்-தாய்லாந்து தொடர்பு ஆதாரம்

2200 ஆண்டுகள் பழமையான தமிழர்-தாய்லாந்து தொடர்பு ஆதாரம்

தாய்லாந்தில் முனைவர்.பெல்லினா என்ற பிரெஞ்சு அகழ்வாய்வாளரால் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடு தமிழ்-பிராமி எழுத்துக்களைக் கொண்டுள்ளது.
மொழி=தமிழ், எழுத்துமுறை= பிராமி (ப்யூலர் என்ற வெள்ளைக்காரன் வைத்த பெயர்),

இது கி.மு.இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இதில் காணப்படும் எழுத்துக்கள் து-ர-ஓ.