Showing posts with label தமிழ்ப் பற்று. Show all posts
Showing posts with label தமிழ்ப் பற்று. Show all posts

Saturday, 15 April 2017

பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?

பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?

சோழர் காலத்தில் தாய்லாந்து சென்ற சைவப் பார்ப்பனர் இன்றும் இருக்கிறார்கள்.

தமிழை மறந்துவிட்டாலும் இன்று வரை அவர்கள் மார்கழி மாதத்தில் திருவெம்பாவையை ஓதி வருகின்றனர்.
(1952ல் தமிழகத்திலிருந்து குழு சென்று மந்திரங்களை மீண்டும் கற்பித்துவிட்டு வந்தனர்)

தலைநகரான பேங்காக் நகரில் சைவ மதத்தவர் (மற்றும் இந்துக்கள்) கூடி திருவெம்பாவை ஓதி ஊஞ்சலாட்டு விழா நடத்துகிறார்கள்.
(தமிழகத்தில் கோவிலில் சிலைகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டும் சடங்கு உள்ளதே அதே போன்று)
நகரின் மத்தியில் பெரிய ஊஞ்சலும்  உள்ளது.

சோழர்காலம் வரை பார்ப்பானர் தமிழில்தான் ஓதி பூசை செய்துள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறதா?

தாய்லாந்து மன்னர் நடராஜர் சிலைக்கு முன்பாக யாகம் வளர்த்து அரண்மணைப் பெட்டகத்தில் பழைய தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தேவாரம், திருவாசகம், திருப்பாவை என தமிழ் மந்திரங்களை ஓதி பார்ப்பனர்கள் முடிசூட்டிவிடுவர்.

இது தமிழ் மன்னர்கள் முடிசூட்டிக்கொண்ட முறை ஆகும்.
குறிப்பாக
"தோடுடைய செவியன்" என்று தொடங்கும் சம்பந்தர் பாடலும்
"பித்தா பிறை சூடி" என்று தொடங்கும் சுந்தரர் பாடலும் மனப்பாடமாக ஓதுகிறார்கள்.

சமஸ்கிருதத்தை வளர்த்ததும் திணித்ததும் வடுகரே!

  தமிழகத்தில் பூசை முறைகளில் சமஸ்கிருதத்தைப் புகுத்தி தமிழ்ப் பார்ப்பனர்கள் மீது சமஸ்கிருதம் திணிக்கப்பட்டது 500 ஆண்டுகள் முன்பு தெலுங்கர் ஆட்சியில்தான் நடந்தது.

ஆனாலும் பார்ப்பனர்கள் தமிழை விட்டுக்கொடுக்கவில்லை.
இன்றுவரை தமிழை அழியாமல் தாங்கும் சமூகம் பார்ப்பனர் சமூகம்.

பார்ப்பனர் வேறு
பிராமணர் வேறு

பார்ப்பனர் தமிழரே!

படம்: 1925ல் மன்னர் நடராசர் சிலை முன் முடிசூடலுக்காக அமர்ந்திருக்கும் காட்சி

நன்றி: தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்! _indosri

Monday, 13 July 2015

தமிழ்நாடு பல்கலைக்கழகம் ?!

தமிழ்நாடு பல்கலைக்கழகம் ?!

1926ல் 'ஆந்திரப் பல்கலைக்கழகம்' தெலுங்கர்களால் வெற்றிகரமாக அமைக்கப்பட்டது.

தெலுங்கு மாணவர்கள் தமக்கென்று தனியாக 'ஆந்திரப் பல்கலைக் கழகம்' அமைந்துவிட்டபோதும்
சென்னை பல்கலையிலும் இடம்பிடிப்பது தொடர்கிறது.

இதன்பிறகு மலையாளிகள் திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தை 'கேரளா பல்கலைக் கழகம்' ஆக்கிக்கொண்டனர்.

கன்னடர்களும் தார்வார் பல்கலைக் கழகத்தை 'கர்நாடகப் பல்கலைக்கழகம்' ஆக்கிக்கொண்டனர்.

இவர்களைப் போலவே குஜராத், மகாராஷ்ட்டிரா,ஒரிசா, காஷ்மீர், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய இனவாரி-மாநில-தலைமை பல்கலைக் கழகங்கள் தோன்றின.

இவைகளில் அம்மாநில மொழிக்கும் அம்மாநிலத்து மாணவருக்குமே முதல் உரிமை.

தமிழகம் மட்டும் 'தமிழ்நாடு பல்கலைக்கழகம்' இன்றுவரை அமைக்கவில்லை.

தமிழரான சுப்பராயன் ஆட்சியில் 1929ல் தமிழகத்திற்கு தனியாக ஒரு பல்கலைக்கழகம் அமைக்க குழு ஒன்று அமைக்கப்பட்டபோது 'அண்ணாமலைப் பல்கலைக்கழகம்' நிறுவினால் போதும் என்று அக்குழு பரிந்துரைத்தது.
அக்குழுவினர் ஜஸ்டிஸ் கட்சி உறுப்பினர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஒரு பொதுசத்திரம் போன்றது.
அங்கே தமிழுக்கு முதலிடம் கிடையாது.

இதேபோலத்தான் தந்தை செல்வா 1956ல் 'திரிகோணமலைப் பல்கலைக்கழகம்' கேட்டார்.
இன்றுவரை அது கிடைக்கவில்லை.

சிறிலங்காவின் மொத்தம் 15 பல்கலைக்கழகங்களில் சிங்கள மாநிலங்களின் பெயர்தாங்கிய பல்கலைக்கழகங்களே அதிகம்.
ஆனால் மட்டக்களப்பு பல்கலையின் பெயர் 'கிழக்குப் பல்கலைக் கழகம்' அதன் ஒரு வளாகம் திரிகோணமலையில் இயங்குகிறது.
தமிழர்களுக்கு அங்கே இருப்பது 'யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்' தான்.
அதாவது அங்கேயும் ஒரு 'தமிழ்ப் பல்கலைக் கழகத்தை' நம்மால் நிறுவமுடியவில்லை.

தமிழர்களுக்கென்று ஒரு நாடு.

கல்விக்குத் தலைமையிடமாக ஒரு பல்கலைக்கழகம்.

அதில் உலகின் அத்தனை துறைகளையும் தாய்மொழியில் கற்கும் வசதி.

இதை நாம் சாதிக்கவேண்டும்.

---------------------------

மேலும் சில தகவல்கள்,

(பிரிட்டிஷ் ஆண்ட) இந்தியாவின் முதல் பட்டதாரி,
சென்னை பல்கலைக்கழகத்தில் 1857ல் இளங்கலை (B.A) பட்டம் பெற்ற சி.வை.தாமோரம் பிள்ளை ஆவார்.

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழர்.
தமிழ்த் தாத்தாவுடன் துணைநின்று தமிழ்த்தொண்டு ஆற்றியவர்.

1905ல் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழை நீக்க வந்தேறிகள் செய்த சதியை பாண்டித்துரைத் தேவர், பூரணலிங்கம் பிள்ளை ஆகியோரின் உதவியுடன் பெருமுயற்சி செய்து தடுத்து நிறுத்தியவர் பார்ப்பனரான
சூரியநாராயண சாஸ்திரி
அதாவது திரு.பரிதிமாற்கலைஞர்.

Wednesday, 20 August 2014

செக் நாட்டுத் தமிழறிஞர்

செக் நாட்டுத் தமிழறிஞர்

*==*===*==*==*==*==*

கமில் சுவலபில் (நிரம்ப அழகியர்)
எமனோ,பர்ரோ,மார், கமில்
சுவலபில் ,சுசுமு ஓனோ,குரோ,
அலெக்சாண்டர் துபியான்சுகி, உருதின்,
சாங்க்சிலின்,தக்காசி உள்ளிட்டவர்கள்
தமிழ்மொழியை,தமிழ் இலக்கியங்களைப் பிற
மொழியினர்க்கு அறிமுகம்
செய்து வைத்தனர்///

செக்கோசுலேவியா நாட்டில் உள்ள
பிராகா(Prague) என்னும் மாநகரில் 17-11-1927
ஆம் ஆண்டில் பிறந்தவர்///

சமற்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்
(1952).பின்னர் திராவிட மொழியியலில்
இரண்டாவது முனைவர் பட்டத்தையும்
பெற்றவர்(1959).
1952 முதல் 1970 வரை செக்கோசுலேவியாவில்
அமைந்துள்ள கீழையியல் துறையில் தமிழ்
திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப்
பணிபுரிந்தார்///

கிரேக்கம்,இலத்தீன், செருமன், ஆங்கிலம்,
உருசியன், சமற்கிருதம்,தமிழ் முதலிய
மொழிகள் நன்கு தெரியும்.மலையாளம், இந்தி,
பிரஞ்சு,இத்தாலியன்,போலிசு உள்ளிட்ட
மொழிகளையும் அறிவார்///

செக்நாட்டில் தூதுவரகத்தில் பணிபுரிந்த தமிழ்
அன்பர் ஒருவர் வழியாக தமிழ் கற்கத் தொடங்கிய
கமில் அவர்கள் வானொலி வழியாகவும் நூல்கள்
வழியாகவும் தமிழ் படிக்கத் தொடங்கினார்.
தமிழ் பற்றி பிரஞ்சுமொழியில்
பியாரே மெய்லே(Perre Meile) என்பவர் எழுதிய
Introduction an Tamoul என்ற நூல்
வழியாகவும் தமிழ் அறிமுகம் கிடைத்தது.
தென்னிந்தியாவிற்கு பலமுறை களப்பணி ஆய்வுக்காக
வந்துள்ளவர்.
சென்னைக்கு இவர் வருகை தரும்பொழுதுதமிழ
கத்து அறிஞர்கள்
இவருக்கு வரவேற்பு நல்கியும்
பாராட்டு வழங்கியும் பன்முறை ஊக்குவித்துப்
போற்றியுள்ளனர்///

தமிழ்மொழி,இலக்கியம் பற்றிய ஆராய்ச்சிகள்
செய்து வெளியிட்டிருக்கிறார்.
நற்றிணை, புறநானூறு நன்கு அறிந்தவர்.
சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்து வருகிறார்.
கல்கியின் நாவல்களையும்
மொழிபெயர்த்து வருகிறார்.தானே தமிழ்
கற்றவர்.தமிழ் ஒலியே கேட்காத நாட்டிலிருந்துக
கொண்டே தமிழ் கற்றவர்///

செக் மொழியில் குழந்தைகளுக்குத்
தென்னிந்தியா பற்றி ஒரு நூல்
எழுதியுள்ளதையும்,கடந்த நான்காண்டுகளில்
உருசியா, செக்,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில்
தமிழ் வளர்ச்சி பற்றி பேசியுள்ளார்///

தமிழின் மிகப்பெரும் இலக்கண நூலான
தொல்காப்பியத்தை மொழிபெயர்க்கும்
அளவிற்கு இவருக்குத் தமிழ்ப்புலமையும்
ஆங்கிலப்புலமையும்
இருந்துள்ளமை நமக்கு வியப்பளிக்கின்றது///

தமிழ் நூல்கள் பலவற்றை ஆங்கிலத்திற்கும்
செக்மொழிக்கும் பெயர்த்துள்ளார்.
கமில் சுவலபில் அவர்கள் தமிழ்
இலக்கியம்,இலக்கணம்.ஆகியவற்றில் கவனம்
செலுத்தியதுடன் மொழியியல் நோக்கிலும்
இம்மொழியையும் இலக்கியங்கள்,இல
க்கணங்கள், நாட்டுப்புறவியல் சார்ந்த
செய்திகளையும் ஆய்வுக்கு உட்படுத்திப்
பார்த்துள்ளார்.
இவர் மொழிபெயர்த்த தொல்காப்பியம் உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பிய
உரைவளத்தில் எடுத்தாளப்பட்டு
ள்ளது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்////

தமிழ்க்கடவுளான
முருகனிடத்து இவருக்கு மிகுந்த
ஈடுபாடு உண்டு.திருமுருகன் பற்றி இவர்
எழுதியுள்ள ஆங்கில நூலில் முருகபெருமான்
குறித்த அனைத்துச் செய்திகளும்
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
சிவன், முருகன்,வள்ளியை மணம் முடித்தல்
தொடர்பான புராண,இதிகாச் செய்திகள்
விளக்கப்பட்டுக் களப்பணிகள் வழியாகச்
செய்திகள் சிறப்புடன் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கிய
வரலாற்றை எழுதும் கமில்.சுவலபில் அவர்கள்
Smile of Murugan
என்று பெயரிட்டுள்ளமை இவரின் முருக
ஈடுபாட்டுக்கு மற்றொரு சான்றாகும்.
அதுபோல் நடராசரின் ஆனந்த தாண்டவம்
பற்றி மிக விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ளார்///

தமிழ் யாப்புப் பற்றி அறிஞர் சிதம்பரநாதன்
செட்டியார் அவர்கள் வழியாக
ஈடுபாடு வரப்பெற்ற கமில் சுவலபில் தமிழ்
யாப்புப் பற்றியும் விரிவாக ஆங்கிலத்தில்
எழுதியுள்ளார்///

தமிழ்-சப்பானிய மொழி உறவு குறித்த கருத்தில்
நல்ல கருத்து கமில் சுவலபில்
அவர்களுக்கு இருந்துள்ளது.
அறிஞர் தமிழண்ணல் சப்பான் தலைநகர்
டோக்கியோவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில்
கமில்சுவலபில் அவர்களைக் கண்டு பழக
ஒரு கிழமை வாய்ப்புக்
கிடைத்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார்///

தமிழுக்கு அமைந்த செவ்வியல்
பண்புகளைத் தொடக்கத்தில்
சான்றுகள்வழி விளக்கியவரும் கமில்
சுவலபில் அவர்களே///

தமிழண்ணல் அவர்களிடம் மதுரையில் சங்க
இலக்கியம் கற்ற தக்ககசி அவர்கள்(சப்பான்) கமில்
சுவலபில் அவர்களிடம் சங்க இலக்கியம்
பற்றி முனைவர் பட்ட
ஆய்வு மேற்கொண்டவர்///

இவர்தம் நூல்கள் கட்டுரைகள்
பல்லாயிரம் பக்கங்களில் வெளிவந்து தமிழின்
சிறப்பை உலகிற்கு வெளிக்காட்டுவனவாகும்.
தமிழின் எல்லாத்துறை பற்றியும்
மேலைநாட்டிற்கு அறிமுகம் செய்தவர் கமில்
சுவலபில்///

தமிழ் வழக்குச்சொற்கள் பற்றியும்
எழுதியுள்ளார். அறிஞர் வானமாமலை அவர்கள்
தமிழில் எழுதிய நாட்டுப்புறவியல் சார்ந்த பல
கட்டுரைகளை ஆங்கிலத்திலும்
செக்மொழியிலும் மொழிபெயர்த்துள்ளதாக
அறியமுடிகிறது.
குறிப்பாக முத்துப்பட்டன்
கதை பற்றி வானமாமலை அவர்கள்
சரசுவதி ஏட்டில் எழுதிய கட்டுரைகளைக்
கண்ட கமில் சுவலபில் அவர்கள்
அக்கதையை உலகிலேயே மிகச்சிறந்த
கதைப்பாடல்களுள்
இது ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்///

பாரதியார் பற்றி 1952 அளவில் மிகச்சிறந்த
ஆய்வுகளை நிகழ்த்தி தரமான
கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதிப் பாரதிப்
புகழை உலகிற்கு உணர்த்தியவர்.
'தமிழ்.கல்சர்' என்னும் இதழில்
பாரதி குறித்து பல கட்டுரைகளைக் கமில்
சுவலபில் எழுதியுள்ளார்.பாரதி பாடல்கள்
(bharathi s Poems) என்னும் தலைப்பில் இவர்
எழுதியுள்ள
கட்டுரை பாரதியை நன்கு அறிமுகம்
செய்கிறது///

உ.வே.சா வின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும்
என் சரித்திரம் என்னும் நூலை கமில் சுவலில்
அவர்கள் The Story of My Life என்னும் பெயரில்
மொழிபெயர்த்துள்ளார்///

500 க்கும் மேற்பட்ட
படைப்புகளை வழங்கியவர்///

கமில் சுவலபில் நூல்கள் சில:
1.Siddha Quest for Immortality Sexual,
Alchemical and Medical Secrets of the Tamil ///

5.Tamil Literature, E.J. Brill,Leiden, 1975,
6.Companion Studies to the History of Tamil
Literature,
7.The Smile of Murugan: On Tamil Literature of
South India,
8.The Poets of the Powers: Magic, Freedom, and
Renewal,
9.Literary Conventions in Akam Poetry
10.Two Tamil Folktales: The Story of King
Matanakama, the Story of Peacock Ravana,
11.Lexicon of Tamil Literature,
12.Nilgiri areal studies,
13.Introducing Tamil literature,
14.Ananda-tandava of Siva-sadanrttamurti: The
development of the concept of Atavallan-Kutta
perumanatikal in the South Indian textual and
iconographic tradition,
15.Introduction to the Historical Grammar of
the Tamil Language,
16.The Irulas of the Blue Mountains, Foreign &
Comparative Studies
17.Tamulica et Dravidica: A Selection of Papers
on Tamil and Dravidian Linguistics,
18.Classical Tamil Prosody An Introduction
19.The Story of My Life (2volumes)
20. History of Tamil Literature
21.Tirumurugan
22.The Poets of Powers
23.Tamil Literature
24.Tolkappiyam - collatikaram
25.Tamil Trations on Subrahmannya Murugan
முழுதும் படிக்க:
http://muelangovan.blogspot.com.es/2008/11/
17-11-1927.html?m=1
( முழுதும் படித்தால் தமிழின்
பெருமைகளையெல்லாம் எந்த
அளவுக்கு திராவிடம் விழுங்கியுள்ளது
என்று புரியும்;
தமிழின் கால்தூசு பேறாத சமஸ்க்ருதம்
தமிழை பின்னுக்குத் தள்ளியுள்ளமையும்
புரியும்).

https://m.facebook.com/photo.php?fbid=478626512241007&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739