Showing posts with label மன்னர். Show all posts
Showing posts with label மன்னர். Show all posts

Monday, 11 September 2017

ஆளும் பரம்பரை

ஆளும் பரம்பரை

தனிநாடு அமைய யார் பெரிய பங்களிப்பைச் செய்கிறார்களோ!
அவரையும் அவரது சந்ததிகளையும் மன்னர் பரம்பரையாக அறிவிக்கவேண்டும்.

இது எங்கும் நடக்காத விநோதம் இல்லை.
இப்போதும் பல நாடுகளில் (ஏதோ பெயருக்கு) மன்னர் குடும்பமும் அவர்களுக்கு தனியாக சலுகைகளும் அதிகாரங்களும் உள்ளன.

அதே போல நமது தமிழர்நாடு அமைவதில் யாரொருவர் பெரும்பங்கு வகிக்கிறரோ (அதாவது ராணுவத் தலைமை),
அவருக்கு பெரிய அரண்மனை கட்டிக்கொடுத்து (அவர் அதிபராக இருக்க விரும்பினால் அவர் ஓய்வு பெற்றபிறகு) முடிசூட்டி மன்னராக அறிவிக்கவேண்டும்.

(இரண்டு, மூன்று தலைவர்கள் இருந்தால் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி தேர்ந்தெடுக்கலாம்)

முதல் மன்னரே தமிழினத்தின் தலைவர்.
*தமிழினத் தலைவர்* என்று அவர் மட்டுமே என்றென்றும் குறிப்பிடப்படுவார்.
(பிற மன்னர்களுக்கு அல்லது அதிபர்களுக்கு இந்த பட்டமோ அல்லது இதை ஒத்த பட்டமோ கிடையாது)

அவருக்குப் பிறகு அவரது வாரிசுளில் மூத்தவர் (ஆணோ பெண்ணோ) மூடிசூட்டிக்கொள்ள வேண்டும்.

மன்னர் குடும்பத்திற்கு தனியே பாதுகாப்புப்படை, சிறிய அளவு ஆளும் பகுதி, அரசியல் தலையீடு, சிறப்பு சலுகைகள், பொருளாதார ஒதுக்கீடு போன்றவற்றை வழங்குவதா வேண்டாமா அல்லது எந்த அளவு வழங்கவேண்டும் என்பதை தமிழர்நாடு அமைந்ததும் (அதாவது தமிழர் தாய்நிலம் தமிழரின் ராணுவக் கட்டுப்பாட்டில் வந்ததும்) உலக மன்னர் குடும்பங்களைப் பற்றி ஒப்பிட்டு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவெடுக்கவேண்டும்.

(மக்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருப்பார்கள் எனவே) மன்னர் குடும்பத்திற்கு அதிக சலுகை வழங்கக்கூடாது என்பது என் கருத்து.

நான் பரிந்துரைப்பது,

* தமிழர்நாட்டில் முதல் மன்னரின் வாரிசுகள் மட்டுமே ஆளும் பரம்பரை அல்லது ஆண்ட பரம்பரை.
மற்ற யாரும் அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது.

* மன்னர் குடும்பத்திற்கு ஒரு மிகப்பெரிய அரண்மனை.
ஏதாவது ஒரு ஆற்றின் நடுவே தீவு போல இருக்கும் பகுதியைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதில் நமது பண்பாடு கலாச்சாரம் கலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட அரண்மனை ஆடம்பரமாகக் கட்டவேண்டும்.
ஆற்றிற்கு கீழே இருகரைகளுக்கும் சுரங்கப்பாதைகள் அமைக்கவேண்டும்.
மேல் தளத்தில் உலங்கு வானூர்தி (ஹெலிகாப்ட்டர்) இறங்கும் வசதி இருக்கவேண்டும்.

* அரண்மனைக்கு தனியாக நல்ல ராணுவப் பயிற்சி பெற்ற 500 பேர் கொண்ட காவல்படை அரசு நியமிக்கவேண்டும்.
அதில் 5 பேரை மன்னர் தனிப்பட்ட மெய்க்காப்பாளராக நியமித்துக்கொள்ள வேண்டும்.

* அரண்மையைச் சுற்றிய இரண்டு மூன்று கிராமங்களின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் அரண்மனை செலவுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
மன்னருக்கு அந்த கிராமங்களின் மீது எந்த அதிகாரமும் கிடையாது.

* அரசு எடுக்கும் முடிவை மாற்றும் அதிகாரம் மன்னருக்குக் கிடையாது.
ஆனால் எல்லா முடிவுகளையும் விமர்சிக்க வேண்டும்.
மன்னரது விமர்சனம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் ஊடகம் மூலம் போய்ச்சேரவேண்டும்.

* மன்னர், அவரது வாழ்க்கைத் துணை, அவரது நேரடிக் குழந்தைகள், அவரது நேரடி பேரப்பிள்ளைகள் மட்டுமே அரண்மனையில் இருக்கலாம்.
மற்றபடி முதல் மன்னனின் நேரடி வம்சாவழிகள் எத்தனை தலைமுறைக்கும் அவரது பெயரை (அல்லது சிறப்புப் பெயரை) தமது பெயருடன் இணைத்துக் கொள்ளலாம்.
(மன்னரது உடன்பிறப்புகள் திருமணம் முடியும் வரை அரண்மனையில் இருக்கலாம்)

* மன்னர் தேர்தலில் போட்டியிட விரும்பினால் தமது குடும்பத்தில் வேறொருவருக்கு முடிசூட்ட வேண்டும்.
ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டால் (வென்றாலும் தோற்றாலும்) பிறகு அவருக்கு அரண்மனையில் இடம் கிடையாது.
(முதல் மன்னருக்கு மட்டும் விதிவிலக்கு.
ஆனால் இரண்டு பதவிகள் கிடையாது.
எதாவது ஒன்றுதான்.)

* மன்னர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை தவிர அரண்மனையில் மற்றவர்கள் சாதாரண குடிமக்கள் போலவே மதிக்கப்படுவர்.
அதாவது அரண்மனைக்கு வெளியே எந்த சலுகையும் அவர்களுக்கு கிடையாது.

* மன்னர் எப்போது வேண்டுமானாலும் அதிபரைச் சந்திக்கலாம் என்ற ஒரு சலுகையைத் தவிர வேறு எந்த அரசியல் சலுகையும் கிடையாது.
(சந்திப்பு அதிபர் மாளிகையிலோ அல்லது அரண்மனையிலோ நடக்காது பொதுவான ஒரு இடத்திற்கு இருவரும் வந்து நடக்கவேண்டும்)

* மன்னர் பிறருக்கு அளிக்கும் பரிசு அவருடன் விருந்துண்ணல் மற்றும் அரண்மனையில் தங்கியிருத்தல் மட்டுமே

* அரண்மனை வேலைக்காரர்கள் தவிர மன்னர் மற்றும் அவரது துணைக்கு மட்டுமே தனிப்பட வேலைக்காரர்கள் மீது அதிகாரம் உண்டு.
மன்னருக்கு மட்டும் ஒரு உதவியாளர் உண்டு.
(பிறருக்கு வேலைக்காரர்கள் மீது அதிகாரம் கிடையாது)

* மன்னருக்கு ஆடம்பரமான ஒரு உந்து(car) வழங்கப்படும்.
அது உள்நாட்டில் தனித்துவமாக ஆடம்பரமாகத் தயாரிக்கப்படும்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும்.
ஓட்டுநர் உண்டு.

* மன்னர் குடும்பத்திற்கும் அரண்மனைக்கும் ஆகும் செலவு ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும்.
அந்த செலவு ஒரு சாதாரண குடிமகனின் வீடு மற்றும் குடும்பச் செலவு போல 10 மடங்கு வரை இருக்கலாம்.

* மன்னர் குடும்பம் தமது அன்றாட வாழ்வில் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் பின்பற்ற வேண்டும்.
அதாவது மன்னர் என்பவர் பண்பாட்டுச் சின்னம்.

சுருக்கமாக,
மன்னர் என்பவர் கம்பீரமாக அரியணையில் வீற்றிருக்க வேண்டும்.
ஆடம்பரமாக தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எந்த கவலையும் இன்றி வாழவேண்டும்.
நாட்டு நடப்பினை அறிந்து அதற்குத் தக்க யோசனையோ விமர்சனமோ வெளியிடவேண்டும்.
தமிழ்ப் பண்பாட்டினை அப்படியே பின்பற்றவேண்டும்.

தற்போதைய ஆந்திராவின் பெண்ணாறு முதல் தற்போதைய இலங்கையின் கும்புக்கண் ஆறு வரை பரந்து விரிந்த தமிழர் நாட்டை ஆளப்போகும் அந்த முதல் மன்னனே ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவன்.

நமக்குள் ஒருவன்தான் அவன்.

Saturday, 15 April 2017

பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?

பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?

சோழர் காலத்தில் தாய்லாந்து சென்ற சைவப் பார்ப்பனர் இன்றும் இருக்கிறார்கள்.

தமிழை மறந்துவிட்டாலும் இன்று வரை அவர்கள் மார்கழி மாதத்தில் திருவெம்பாவையை ஓதி வருகின்றனர்.
(1952ல் தமிழகத்திலிருந்து குழு சென்று மந்திரங்களை மீண்டும் கற்பித்துவிட்டு வந்தனர்)

தலைநகரான பேங்காக் நகரில் சைவ மதத்தவர் (மற்றும் இந்துக்கள்) கூடி திருவெம்பாவை ஓதி ஊஞ்சலாட்டு விழா நடத்துகிறார்கள்.
(தமிழகத்தில் கோவிலில் சிலைகளை ஊஞ்சலில் வைத்து ஆட்டும் சடங்கு உள்ளதே அதே போன்று)
நகரின் மத்தியில் பெரிய ஊஞ்சலும்  உள்ளது.

சோழர்காலம் வரை பார்ப்பானர் தமிழில்தான் ஓதி பூசை செய்துள்ளனர் என்பது இதிலிருந்து தெரிகிறதா?

தாய்லாந்து மன்னர் நடராஜர் சிலைக்கு முன்பாக யாகம் வளர்த்து அரண்மணைப் பெட்டகத்தில் பழைய தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் தேவாரம், திருவாசகம், திருப்பாவை என தமிழ் மந்திரங்களை ஓதி பார்ப்பனர்கள் முடிசூட்டிவிடுவர்.

இது தமிழ் மன்னர்கள் முடிசூட்டிக்கொண்ட முறை ஆகும்.
குறிப்பாக
"தோடுடைய செவியன்" என்று தொடங்கும் சம்பந்தர் பாடலும்
"பித்தா பிறை சூடி" என்று தொடங்கும் சுந்தரர் பாடலும் மனப்பாடமாக ஓதுகிறார்கள்.

சமஸ்கிருதத்தை வளர்த்ததும் திணித்ததும் வடுகரே!

  தமிழகத்தில் பூசை முறைகளில் சமஸ்கிருதத்தைப் புகுத்தி தமிழ்ப் பார்ப்பனர்கள் மீது சமஸ்கிருதம் திணிக்கப்பட்டது 500 ஆண்டுகள் முன்பு தெலுங்கர் ஆட்சியில்தான் நடந்தது.

ஆனாலும் பார்ப்பனர்கள் தமிழை விட்டுக்கொடுக்கவில்லை.
இன்றுவரை தமிழை அழியாமல் தாங்கும் சமூகம் பார்ப்பனர் சமூகம்.

பார்ப்பனர் வேறு
பிராமணர் வேறு

பார்ப்பனர் தமிழரே!

படம்: 1925ல் மன்னர் நடராசர் சிலை முன் முடிசூடலுக்காக அமர்ந்திருக்கும் காட்சி

நன்றி: தாய்லாந்தில் புதிய மன்னரும் - தமிழர்களின் வரலாற்று பெருமையும்! _indosri