Saturday 25 July 2015

தமிழ் எழுத்துகள் பிராமி ஆனது எப்படி?

தமிழ் எழுத்துகள் பிராமி ஆனது எப்படி?

1850-களில் ஜேம்ஸ் ப்ரின்ஸெட் என்பவர்தான் இந்தியாவில் காணப்படும் கல்வெட்டு எழுத்துகளை பிராஹ்மி என்றே குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு முன்பே இப்பெயரானது ப்யூலர் என்ற ஆய்வாளரால் வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் காணப்பட்ட ஆரம்பகாலக் கல்வெட்டுகள் ப்ராஹ்மி வகையினதாக இருந்தாலும், ப்ராகிருத மொழிக்கான ப்ராஹ்மி எழுத்துகளிலிருந்து மாறுபட்டிருந்தது.

1924-ல் கே.வி.சுப்பிரமணிய ஐயர், இதற்குத் தீர்வுகாண தமிழ்-பிராஹ்மி என்று தனியாக பெயரிட்டு வகைப்படுத்தினார்.

கி.மு.300 வாக்கில் எழுதப்பட்டதான 'சமவயங்க சுத்த' என்ற சமண நூலில் 18 வகையான எழுத்துகள் குறிக்கப்பட்டுள்ளன.
பம்பி, தாமிலி போன்றவை அதில் இடம்பெற்றுள்ளன.

அதில் 'பம்பி' என்பது பிராகிருத எழுத்தையும்,
'தாமிலி' என்பது தமிழ் எழுத்தையும் குறிக்கிறது என்று கொள்ளலாம்.

இது தமிழர்கள் அக்காலத்தில் பயன்படுத்திய எழுத்துமுறை 'தமிழி' என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ண இடமளிக்கிறது.

ஆக அவ்வெழுத்துக்களை தமிழ்பிராமி என்றழைக்காது தமிழி என்றே அழைக்கலாம்.

No comments:

Post a Comment