குடாரப்பு சமர்
'--' '--' '--' '--' '--' '--'
புலிகளின் வெற்றிகளிலேயே தலைசிறந்தது 2000ஆம் ஆண்டு ஏப்ரலில் இலங்கைத் தீவிலேயே பெரிய படைத்தளமான ஆனையிறவை அதிரடியாகக் கைப்பற்றியது ஆகும்.
இது ஏன் சிறப்பானது என்பதைப் பார்ப்போம்.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வெற்றிக்கேணியிலிருந்து பெண்களும் ஆண்களுமாக 1200 புலிகளை கடல்வழியே சுற்றுப்பாதையில் குடாரப்பு பகுதியில் புலிகளின் கடற்படை இறக்கியது.
பிரிகேடியர் பால்ராஜ் தலைமையில் அப்படையினர் அங்கு இறங்கும் முன்னரே சிங்கள அரசின் படைகளுக்குத் தகவல் கிடைத்து கடலிலேயே மோதல் தொடங்கிவிட்டது.
ஆனாலும் கடல்புலிகள் அவர்களை வெற்றிகரமாகத் தரையிறக்கிவிட்டுத் திரும்பினர்.
இறங்கிய புலிகள் அங்கே சண்டைசெய்து குறுகிய பகுதியில் நிலையெடுத்தனர்.
இவர்கள் நிலையெடுக்குமுன் பெரிய எதிர்ப்பு எதுவும் வரக்கூடாது என்பதற்காக ஏற்கனவே இரகசியமாக ஊடுறுவி இருந்த பளை படைமுகாமை பத்துபேர் கொண்ட கரும்புலிகள் தாக்கி அதன் தளவாடங்களை நாசமாக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் தரையிறக்கம் நிகழ்ந்தது. கரும்புலிகளில் ஒருவர் உயிரிழக்க ஒன்பதுபேர் பாதுகாப்பாக புலிகள் பகுதிக்கு இரகசியமாகத் திரும்பிவிட்டார்கள்.
(இவர்கள் எந்தவழியைப் பயன்படுத்தி வந்துபோனார்கள் என்பது ஒரு புரியாத புதிர்).
இவர்கள் போனதும் படைகள் திரும்பவும் பளையைக் கைப்பற்றினர். ஆனால் அங்கே அனைத்து தளவாடங்களும் செயலிழக்கப்பட்டோ அழிக்கப்பட்டோ இருந்தன.
இந்தநிலையில் பால்ராஜ் தலைமையில் ஒரு பிரிவினர் சிறிய நீரேரியைக் கடந்து பளைக்கு அருகே வந்துவிட்டனர்.
ஒரு பிரிவு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியுடன் இணைப்பை ஏற்படுத்த திரும்பி நிலவழியாக வெற்றிலைக்கேணியை நோக்கி தெற்கில் முன்னேறியது.
இதோடு கைகோர்க்கும் வகையில் 400பேர் கொண்ட புலிகளின் இன்னொருபகுதி பிரிகேடியர் தீபன் தலைமையில் வடக்கு நோக்கிமுன்னேறியது.
பால்ராஜ் அணி நீரேரிக்கு அப்பால் தனித்துவிடப்பட்டிருந்தது.
அவர்களில் 1000பேர் கூட இல்லை.
அவர்களுக்குத் தெற்கே 23கிமீ நீளமும் 8கிமீ அகலமும் கொண்ட ஆனையிறவு முகாமில் மட்டும் 15,000 சிங்களப் படையினர் இருந்தனர்.வடக்கிலோ
யாழ்குடாப் பகுதி முழுவதும் மேலும் 20,000 படையினர் இருந்தனர்.
சிங்கள படையினரிடம் அத்தனை தளவாடங்களும் இருந்தன.
பால்ராஜ் படையணி கடலாலும், நிலத்தாலும், வான்வழியாகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது.
அவர்கள் நின்றிருந்ததும் திறந்தவெளி பகுதி.
ட,ப வடிவில் குழிதோண்டி நிலையெடுத்து மூன்றுபக்கமும் வான்வழியாகவும் வரும் தாக்குதலைச் சமாளித்துக்கொண்டு தாம் கொண்டுவந்திருந்த தளவாடங்களையும், உணவையும், மருந்தையும் வைத்துக்கொண்டே அப்புலிகள் தாக்குப்பிடித்தார்கள்.
ஒருநாள் இரண்டுநாள் அல்ல கிட்டத்தட்ட 30நாட்கள்!
தீபனின் புலிப்படையுடன் கைகோர்க்கும் முன்பே பால்ராஜ் கடுமையாகப் போரிட்டுக்கொண்டே எதிரிகளிடம் ஆயுதங்களைக் கைப்பற்றி கைப்பற்றியே இயக்கச்சி வரை முன்னேறிவிட்டார்.
இந்த நிலையில் ஆனையிறவு சிங்களப் படையினர் தப்பியோடத் தொடங்கிவிட்டனர்.
வடக்கு நோக்கி முன்னேறி வந்த தீபன் படையினருடன் கைகோர்த்து புலிகள் பகுதியுடன் இணைப்பை ஏற்படுத்தி, இயக்கச்சியைக் கைப்பற்றி ஆனையிறவைச் சுற்றிவளைத்து முற்றுகை போட்டார்கள் புலிகள்.
குடிநீர் வரத்தையும் தடைசெய்தனர்.
வெளியிலிருந்து எந்த உதவியும் வரவிடாமல் ஆனையிறவு படையினரைக் கலங்கவைத்து அதன்பிறகு அவர்களைத் தாக்கி முறியடித்தனர்.
22-4-2000 அன்று அம்முகாம் புலிகள் கைக்கு வந்தது.
1991ல் 53நாட்கள் போர்புரிந்தும் மீட்கமுடியாத ஆனையிறவை இப்போது புலிகள் மீட்டுவிட்டனர்.
இந்தச் சமரில் கிட்டத்தட்ட 3000 வரைக்குமான படையினர் கொல்லப்பட்டனர்.
பெரிய முகாமையும் அதன் கனரகத் தளவாடங்களையும் கணிசமான அளவு நிலத்தையும் புலிகள் மீட்டனர்.
சமர் முடிந்து அங்கே வந்த தேசியத் தலைவர் ஒரு ஒலிநாடாவை ஓடவிட்டார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் ஜெனரல் ஹெட்டியாராச்சி என்பவருக்கும் நடந்த உரையாடல் வேவுப்புலிகளால் ஒட்டுக்கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதில் அந்த செயலாளர் "வெளி உதவி எதுவுமே இல்லாத ஆயிரம் பேரை நீங்கள் 40,000 பேர் தோற்கடிக்க முடியவில்லையா?" என்று கேட்கிறார்.
அதற்கு அந்த ஜெனரல் "பிரபாகரன் வந்தால் கூட தோற்கடிக்கலாம் ஆனால் வந்திருப்பது பால்ராஜ் அவனை விரட்டுவது அவ்வளவு எளிதல்ல, நீங்கள் பலாலி இருந்துகொண்டு பேசுவதை விட்டுவிட்டு இங்கே வந்து நேரில் பார்த்தால் புரியும்" என்று பதிலளிக்கிறார்.
உடனே அந்த ஜெனரலுக்கு கெட்டவார்த்தையில் திட்டு விழுகிறது.
(பிற்பாடு வேலையிலிருந்தும் தூக்கிவிட்டார்கள்).
அப்படி எதிரியே பாராட்டிய வீரன்தான் பால்ராஜ்.
போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்தில் பால்ராஜ் வெளிநாட்டில் சிகிச்சைக்காக அனுப்பட்டு திரும்பி வரும்போது கொழும்பு வானூர்தி நிலையத்தில் வந்திறங்கினார்.
இதைக் கேள்விப்பட்டு அங்கே விரைந்து வந்த சிங்கள படைத்தலைவர்கள் பலரும் வந்து அவரைச் சூழ்ந்துநின்று வியப்புடன் இமைகொட்டாமல் பார்த்தார்களாம்.
நாம் நமது தமிழர்நாட்டை மீட்டபிறகு நமது திரைத்துறை மூலம் பால்ராஜ் அவர்களின் வாழ்க்கையை சிறந்த தரத்துடன் திரைப்படமாக எடுத்து தலைநகரான சென்னையில் அரசு சார்பாக விழா எடுத்து வெளியிடவேண்டும்.
(ஐந்துநாள் பாய்ச்சல்
https://m.facebook.com/photo.php?fbid=416300595140266&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13 )
Wednesday, 15 July 2015
குடாரப்பு சமர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment