Sunday 12 July 2015

தேவையற்ற தங்கம் ஒழிக

தேவையற்ற தங்கம் ஒழிக

தமிழர் நாடு தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்ததும்

போரில் நம்மைத் தோற்கடிப்பது முடியாது என்று உணர்ந்தபிறகு

சுற்றியிருக்கும் நாடுகள் நம்மைத் தனிமைப்படுத்துவார்கள்
பொருளாதாரத் தடைவிதிப்பார்கள்

உணவுக்கு நம் தாய்மண் இருக்கிறது
பொருளாதாரத்திற்கு என்ன செய்வது?

அதற்குதான் காலம் காலமாக நாம் சேர்த்துவைத்திருக்கும் தங்கத்தை 80% தமிழ் அரசிடம் ஒப்படைக்கவேண்டும்

அதை வெளியே விற்று நமக்கு தேவையான ஆயுதங்களையும் போர்தளவாடங்களையும் மற்றும் வெளிநாட்டிலிருந்து எதையெல்லாம் கொண்டுவரவேண்டுமோ அவற்றையெல்லாம் கொண்டுவரவேண்டும்

ஆப்பிரிக்க நாடுகளில் ஆயுதக் குழுக்கள் வைரத்தை தமது பொருளாதாரத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்
(blood diamond, அயன் போன்ற படங்களில் காட்டியிருப்பார்கள்)

நம்மிடம் இருப்பது தங்கம்தான்.

தமிழர்கள் தங்கத்தின் மீதுள்ள ஆசையை துறக்கவேண்டும்.
ஐரோப்பிய நாடுகளில் தங்க மோகம் கிடையாது.
அங்கே அழகுக்கென்று வேறு பல பொருட்கள் பயன்படுகின்றன.

இங்கேயோ தங்க மோகம் தலைவிரித்தாடுகிறது.
ஒரு பெண்ணின் திருமணத்திற்கு நகை சேர்க்க பெற்றோர்கள் முழுவாழ்க்கையையும் உழைத்தே தொலைக்கவேண்டியுள்ளது.

தங்கம் அணிவது அழகு என்ற மனப்பான்மை மாறவேண்டும்.
தங்கம் வைத்திருப்பது சொத்து என்ற மனப்பான்மையும் மாறவேண்டும்.

தங்கத்தின் விலை கூடுகிறதே தவிர
தங்கத்தை பெரும்பொருள் கொடுத்து வாங்கி அதை அணிந்து சிறிது காலத்திற்குப் பிறகு விற்பவருக்கு நட்டம்தான் ஏற்படுகிறது.
பணத்தை முதலீடு செய்து பெருக்க தங்கம் வாங்குவதைவிடவும் எத்தனையோ உபயோகமான வழிகள் உள்ளன.

தமிழ்மண்ணில் தங்கத்திற்கு தனிமதிப்பு இருக்கக்கூடாது.
ஏன் உலகில் முழுவதுமே தங்கம் வைரம் போன்றவை ஒழிக்கப்படவேண்டியவை.

தங்கத்தை எடுக்கிறோம் என்ற பெயரில் நிலத்தைத் தோண்டிக்கொண்டே போகிறோம்.
தங்கம் கிடைப்பது அரிதாகிக்கொண்டே போகிறது ஆனாலும் அதற்கான தேவை இருக்கிறது
இதன் காரணமாக அதன் விலை உயர்ந்துகொண்டேபோகிறது.
ஆனால் தங்கச்சுரங்கங்களும் வைரச்சுரங்கங்களும் பல கிலோமீட்டர் ஆழத்திற்கு தோண்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

அந்த மண்ணை வேளாண்மைக்கும் குடியிருக்கவும் இன்னும் எத்தனையோ நன்மைகளுக்கும் பயன்படுத்தலாம்.

தமிழர்கள் வாழும்பகுதியான கோலார் பகுதி கன்னடரிடம் பறிபோய் இருத்த தங்கம் அத்தனையும் தீர்ந்தபிறகு அப்படியே கைவிடப்பட்டுள்ளது.
கோலார் தமிழர்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மண் பாழானதுதான் மிச்சம்.

இதேபோல இயற்கை வளங்கள் அனைத்தும் அப்பகுதி மக்களுக்கு நன்மையாக அமையவிடாமல் பெருமுதலாளிகள் கொள்ளையடித்து தங்கள் வங்கிக்கணக்கில் அளவுக்கதிகமாக பணமாக மாற்றி தூங்கவைத்துள்ளனர்.

மண்ணைத் தோண்டவேண்டும் என்பதற்காக மக்கள் விரப்படுகிறார்கள்.
ஏமாற்றப்படுகிறார்கள்.
அடக்குமுறையை எதிர்கொள்கிறார்கள், போரை எதிர்கொள்கிறார்கள், பொருளாதார சுற்றிவளைப்பை எதிர்கொள்கிறார்கள்.
உயிரிழக்கிறார்கள், உடமைகளை இழக்கிறார்கள்.

இறுதியில் அரைவயிறு கஞ்சிக்கும் அற்ப கூலிக்கும் சொந்தமண்ணைத் தோண்டும் தொழிலாளியாக ஆகி கடினமாக வேலைவாங்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான செயல்களில் புகுத்தப்பட்டு உடல் வலு இழந்து உயிரைவிடுகிறார்கள்.

இதுவரை உலகில் தோண்டியெடுக்கப்பட்ட தங்கள் எகிப்தில் இருக்கும் பிரமீடு அளவு கூட கிடையாது.
ஆனால் அதற்காகப் பாழாக்கப்பட்ட மண் பல ஆயிரம் பிரமீடுகள் அளவு.

தங்கம் உடலுக்கு பெரிய அழகோ நன்மையோ அளிப்பதில்லை.

தங்கம் ஒரு மாயை அதை ஒழிப்போம்.
தங்கம் ஒரு பாவப்பொருள் அதை வெறுப்போம்.
மண்ணை அழித்து அழகைப் பெறும் முட்டாள்களாக நாம் இருக்கவேண்டாம்.

உலகம் திருந்தும் முன் நாம் திருந்துவோம்.
நம் மண்ணை நாம் பாதுகாக்க தங்கத்தை பயன்படுத்துவோம்.
தங்கம் அணியத் தடைவிதிப்போம்.

ஒரு நாட்டின் உண்மையான செல்வம் என்பது அதன் இயற்கைவளங்கள் ஆகும்.
ஒரு நாட்டின் உண்மையான ஆடம்பரம் என்பது அதனுடைய மக்களின் உடல் ஆரோக்கியம் ஆகும்.

நம்மைப் பார்த்து உலகம் திருந்தும்.
தங்கம் வைரம் போன்றவை ஒழியும்.
மண் காப்பாற்றப்படும்.
அதன் மீது வாழும் மக்கள் காப்பாற்றப்படுவர்.
சுரங்கத் தோண்டும் அடிமைத் தொழிலாளர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும்.
ஏழை பணக்காரன் தோற்ற வேறுபாடு குறையும்.
தங்கம் அணிவது கைவிடப்பட்டால் தங்கம் ஒரு வெறும் உலோகமே என்பது புரியும்.
அதன் தேவை குறையும்.
விலை குறையும்.
இறுதியில் அது ஒழிந்துபோகும்.

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

பணம் ஒழிக்கப்பட்ட தமிழ்க்குடியரசு
https://m.facebook.com/photo.php?fbid=373157656121227&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13&__tn__=E

No comments:

Post a Comment