Wednesday 15 July 2015

அரசியலும் அரசு பேருந்தும்..

அரசியலும் அரசு பேருந்தும்..

சீர்திருத்தம், அரசியல் மாற்றம் இவற்றை விளங்க எளிய உதாரணத்தின் மூலம் எடுத்துக்கூறுகிறேன்.

பொழுதுபோக்காக படித்தாலும் சரி.

திருநெல்வேலியில் இருந்து மதுரைக்குப் போகும் கூட்டம் நிறைந்த ஒரு பேருந்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

டிராபிக் ராமசாமி முதல் சகாயம் வரை
ஷங்கர் முதல் பாலா வரை
தினமலர் முதல் டைம்பாஸ் வரை
கோபிநாத் முதல் அப்துல்கலாம் வரை
கோருகிற சீர்திருத்தம் எப்படி என்றால்,
வரிசையில் நின்று ஏறுங்கள்
கையை வெளியே நீட்டாதீர்
மகளிர் இருக்கையில் பெண்களை அமரச்செய்வீர்
பயணச்சீட்டு வாங்குங்கள்
படியில் தொங்காதீர்கள்
பெண்களை உரசாதீர்கள்
என்று கூறுவது போன்றது.
மேற்கண்ட அறிவுரைகள் எந்தவிதத்திலும் தவறானவை அல்ல.
ஆனால், இது தேவையில்லாதவை.
கூட்டம் நிறைந்த பேருந்தில் ஒரு ஆண் பெண் பக்கத்தில் நின்றால் உரசத்தான் தோன்றும்.
ஒழுக்கத்தை வலியுறுத்துவதன் மூலம் இதை முழுவதும் தீர்க்கமுடியாது.

பிறகு இதை எப்படி சரிசெய்வது,
நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தினமும் பேருந்து நிலையம் சென்று இதேபோல கசக்கிப் பிழியப்பட்டு கல்லூரி சென்றவன்தான்.
அதை நாங்கள் மாற்றியமைத்தோம்.
எங்கள் கல்லூரி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்தோம்.
நாங்களே ஒரு வண்டியை ஏற்பாடு செய்தோம்.
கட்டணம் அதேதான்.
பேருந்து நிலையம்வரை போகவேண்டாம் முக்கிய சாலைவரை வந்தால் போதும்.
போகும்போது பாட்டு கேட்டுக்கொண்டே போகலாம்.
ஒரு மாணவன் வர தாமதமாகிவிட்டால் காத்திருந்து அழைத்துச் சென்றோம்.
வழியில் ஓரிடத்தில் தேநீருக்காக நிறுத்துவோம்.
அந்த கடைக்காரர் வியாபாரம் கிடைப்பதால் சலுகை விலையில் தந்தார்.
சுருக்குவழியே போய் கல்லூரி வாசல்முன்பே இறங்கலாம். பாதி நேரம் மிச்சம். நெருக்கடி இல்லை. வருமானம் பெருகவே வண்டிக்காரர் டிவிடி ப்ளேயர் வாங்கி படங்கள் ஒளிபரப்பினார்.
வண்டியை அழகுபடுத்தினார்.
வண்டியில் ஊதுபத்தி கொளுத்தினார். சொகுசு இருக்கைகள் அமைத்தார். குடிநீர் வைத்தார்.
பெண்பிள்ளைகள் கூட வந்தனர்.
ஒரு ஊனமுற்ற மாணவியைக்கூட வண்டியில் ஏற உதவி எங்களால் அழைத்துச்செல்ல முடிந்தது.
களைப்போ சோர்வோ இல்லாமல் சுறுசுறுப்பாக நாங்கள்  அன்றைய தினத்தை ஆரம்பிக்கமுடிந்தது.
கட்டணம் அதேதான். அதுவும் மாதாமாதம் கொடுத்தால் போதும்.
இதுதான் மாற்றம். எல்லாவற்றையும் அடியோடு மாற்றுவது.

நல்ல அரசாங்கமாக இருந்தால், திருநெல்வேலியிருந்து மதுரைக்கு ஒருநாளைக்கு இத்தனை மக்கள் செல்கிறார்கள்,
அவர்கள் கட்டணம் வழங்க தயாராக இருக்கிறார்கள்.
தேவையான வண்டியை அமர்த்தி ஓட்டுநர் அமர்த்தி அதற்கு எரிபொருள், பராமரிப்பு செலவுபோக அரசுக்கு லாபமும் வரவேண்டும்.
அதாவது நீங்கள் கொடுக்கும் அதே கட்டணத்தில் உங்களுக்கு கூட்டமில்லாத, பழுதில்லாத, வசதிகள் கூடிய பேருந்து கிடைத்திருக்கவேண்டும்.
ஆனால், பணமும் கொடுத்து பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு பாடு பட வேண்டியுள்ளதே?!
என்றால் முட்டாள் யார்?
இது போக்குவரத்து துறை மட்டும்தான். இதேபோல குப்பையள்ளுவது முதல் ராணுவம் வரை இந்தநிலையில்தான் இருக்கிறது.

மதுரையிலிருந்து சென்னை செல்லும் தொடர்வண்டியைப் பாருங்கள். அதில் கழிவறை வரை நிரம்பிவிடுகிறது கூட்டம்.
இதற்குக் காரணம் என்ன?
விவசாயத்தின் கழுத்தை நெறுத்துக் கொலைசெய்தாயிற்று. விவசாய குடும்பங்களின் வாரிசுகள் நகரத்திற்கு ஓடி பத்துரூபாய்க்கு உழைத்துக்கொடுத்து எட்டுரூபாய் சம்பளம் வாங்குவதை விரும்புகிறார்கள்.
திருநெல்வேலிக்காரன் வேலைதேட சென்னைவரை ஓடவேண்டியுள்ளது.
ம.பொ.சி தெலுங்கரிடம் பறிபோகாமல் சென்னையை காப்பாற்றினார். இதேபோல நம் திருவனந்தபுரத்தை மலையாளிகளிடம் இருந்து காப்பாற்றியிருந்தால் பாதிகூட்டம் அங்கே போயிருக்கும்.
தொடர்வண்டி கொடுமைகளின் மொத்த உருவமாகும்.
அதில் பயணச்சீட்டுவாங்க 50நாள் முன்பே பதிவு செய்யவேண்டும்.
ஹிந்திய ஒன்றியத்தில் தொடர்வண்டி, விமான, பேருந்து போக்குவரத்துநிலை என்னவென்றால் டெல்லியில் வேலைபார்க்கும் ஒரு தமிழன் தாயின் மரணத்திற்கு வரவேண்டுமானால் கூட ஒன்றரை நாளாகும்.
அதாவது கடல்கடந்த நாட்டிலிருந்து ஒருவன் வர ஆகும் நேரத்தை விட அதிகம்.

இதே நாம் தனிநாடாக இருந்தால் மாவட்டங்கள் மாநிலத்தகுதி பெறும்.
திருநெல்வேலியின் முதலமைச்சரும் மன்னாரின் முதலமைச்சரும் பேசி இராமேசுவரம் வழியாக கடலில் பாலம் கட்டுவார்கள்.
அம்பாறை முதல்வரும் பெங்களூர் முதல்வரும் விமான சேவையைத் தொடங்குவார்கள்.
சென்னை முதல்வரும் திரிகோமலை முதல்வரும் கடல்வழிப் போக்குவரத்தைத் தொடங்குவார்கள்.
ஆற்றுநீரை தரமறுத்தால் போர்வெடிக்கும்.

இன்று என்ன நிலை?
ஹிந்தியாவின் காலடியில் உட்கார்ந்திருக்கும் தமிழக முதல்வர் என்ன செய்யமுடியும்?
ஹிந்தியாவின் ஒரு முடிவு தமிழகத்திற்கு பாதகமாக இருந்தால் எதிர்ப்பைத் தெரிவிக்க அனைத்துக்கட்சி தீர்மானம் ஒன்றைப் போடலாம் அவ்வளவுதான்.
அதை ஹிந்தியா மதிக்கவேண்டிய அவசியம்கூட இல்லை.
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தபோது இதுதான் நடந்தது.
இன்று அங்கே மீன்பிடிக்கப்போகும் நம் அண்ணனும் தம்பியும் சுடப்பட்டு சாகிறான்.
கூடங்குளம் அணுவுலை, நெய்வேலி அனல்மின் நிலையம் என நமது மண்ணில் நாம் சுற்றுச்சூழல் மாசடையச்செய்து மற்ற மாநிலங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கிறோம்.

தமிழகத்தில் வாழ்வது ஒரு வாழ்க்கையா?
உங்கள் அக்கா தங்கச்சிகளை பேருந்தில் கண்டவன் உரசுவான்.
உங்கள் அண்ணன் தம்பி அடிபட்டு நடுவீதியில் கிடந்தாலும் எவனும் உதவமாட்டான்.
பள்ளிக்கூடங்களை விட சாராயக்கடைகள் அதிகம்.
உங்கள் தாய்தந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய உங்கள் கையிலிருந்துதான் பணம் போடவேண்டும்.
மற்றநாடுகள் போல மருத்துவத்தில் 80%மாவது அரசு அளிக்காது ஆனால் தமிழில் பெயர்வைக்காத சினிமாவுக்குக் கூட அதற்கான வரிச்சலுகை உண்டு.
அரசு அலுவலகத்தில் லஞ்சமும் வாங்கிக்கொண்டு நாயினும் கேடாக அலையவைப்பார்கள்.
ரேஷன்கடை அரிசி வாயில்வைக்கமுடியாது.
திருடனை விட போலீசைக் கண்டால்தான் அடிவயிறு கலங்கும்.

நெருக்கடியான பேருந்தில் பர்சை அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான்.
பணமிருப்பவன் கொலைசெய்தால்கூட வெளியவந்துவிடலாம் என்ற நிலையில் சட்டமிருந்தால் அவன் கொலைச்செய்யத்தான் செய்வான்.
ஊழல் செய்பவன் தண்டனை பெறமுடியாத நிலையில் நீதித்துறை இருந்தால் ஊழல் நடக்கத்தான் செய்யும்.
பெண்கள் கல்விகற்று தன்காலில் நிற்கமுடியாத சூழலில் சமூகமிருந்தால் பெண்ணைப்பெற்றோர் வரதட்சணை கொடுக்கவே வாழ்க்கை முழுவதையும் தொலைக்கத்தான் வேண்டும்.
நியாமாகத்தரவேண்டிய தண்ணீரை உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி தராத நாட்டுடன் இணைந்திருந்தால் நம்விவசாயிகள் தற்கொலை செய்துகொட்டு சாகத்தான் செய்வார்கள்.

தேசியத் தலைவர் ஆண்ட ஈழமண் எத்தனை சிறப்புடன் இருந்தது தெரியுமா?
வீரப்பனார் ஆண்டகாட்டில்தான் பல்லுயிர்ப் பெருக்கம் செழிப்பாக இருந்ததாக க்ரீன்பீஸ் அமைப்பு கூறியது.
புலிகள் ஆண்ட கடலில்தான் மீன்கள் இனவிருத்தி செழிப்பாக இருப்பதாக ஹிந்திய மீன்வளத்துறை தலைமை அதிகாரி கூறினார்.
மக்களை ஆள மக்களில் இருந்து ஒருவன் வருவதே சரி.
தன் நிலத்தின் மீதான தனிஉரிமையை ஒரு இனம் கோருவது எந்தவிதத்தில் தவறு?
மக்களிடம் கொள்ளை அடித்துவிட்டு இருப்பதற்குள் ஒழுக்கமாக இருங்கள் என்று அறிவுரை வேறு.
நமக்குத் தேவை சீர்த்திருத்தம் அல்ல. அரசியல் மாற்றம்.

ஹிந்தியா தூக்கிப்போடும் எச்சில் இலைக்கு அடித்துக் கொள்ளும் அமைப்புகளும் கட்சிகளும் இனியேனும் திருந்துங்கள்.

ஹிந்தியா என்கிற கூட்டம் நிறைந்த இந்த ஓட்டைப் பேருந்திலிருந்து இறங்குங்கள்.
நாம் விமானமே கட்டலாம்.
இருக்கைகளுக்காக அடித்துக்கொள்ளவேண்டாம். மோசமான சாலைகளைப் பற்றி கவலைவேண்டாம்.
வானமே எல்லையாக நாம் மேகங்களைக் கிழித்துக்கொண்டு முன்னேறலாம்.

( நமக்குத் தேவை
'விடுதலை நாள்'
'ஸ்வதந்த்ர தின்' அல்ல.
https://m.facebook.com/photo.php?fbid=475448882558770&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
திருவனந்தபுரம் தமிழன் சொத்து
https://m.facebook.com/photo.php?fbid=505955586174766&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )

No comments:

Post a Comment