Wednesday, 15 July 2015

வெதுப்பகம்

வெதுப்பகம்

(/(/(/(/(/(/(/(/(/(/(/(/(/(/(/(/(/(/(/(

புலிகள் மீட்ட தமிழ் மண்ணில் எல்லாவற்றையும் தமிழ்மயப் படுத்தினர்.

பேக்கரி என்பதை "வெதுப்பகம்" என்று ஆக்கினர்.

தொடக்கத்தில் "வெதுப்பகம்" என்றாலே மக்கள் சிரித்தார்களாம்.

புலிகள் பெயர்பலகைகளில்  "வெதுப்பகம்" என்று எழுதச் சொன்னார்கள்.

புலிகள் இயக்கத்தவர் அனைவரும் "வெதுப்பகம்" என்பதைத் தயங்காமல் சொல்லத் தொடங்கினர்.

தமிழ் ஆர்வலர்கள் "வெதுப்பகம்"என்றே பேசவும் எழுதவும் செய்தார்கள்.

கடை உரிமையாளர்களும் "வெதுப்பகம்" என்று கூற அறிவுறுத்தப்பட்டார்கள்

நாளடைவில் மக்கள் "வெதுப்பகம்" என்ற வார்த்தைக்குப் பழகியிருந்தார்கள்.

வெளியாள் யாராவது அங்கே வந்து 'பேக்கரி'என்று கூறினால் கேலியாகச் சிரித்தார்கள்.

ஆள்பவன் மொழியும் ஆளும்.

தமிழகத்தில் வாழும் தெலுங்கர்கள் 400வருடங்களாகத் தம் தாய்மொழியை மறவாமல் பேசக் காரணம் ஆட்சி அவர்கள் கையில் இருப்பதுதான்.
தெலுங்கு பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறார்கள்.

கவனம்,சொகுசு, எச்சரிக்கை,துரை,  வாடிக்கை, கொஞ்சம்
முதலியன தெலுங்குச் சொற்கள் என்பது தெரியுமா?

மரிமரி நின்னே மொரலிட
மானஸ ஸஞ்சரரே
என்று தமிழிசையை கர்நாடக இசை என்று பெயரிட்டு தெலுங்கு கீர்த்தனைகள் பாடப்படுகின்றன.

அவ்வளவு ஏன்? தமிழகத்தில் மீனவர்களும், கன்னியாக் குமரிக் காரர்களையும், கொங்குப் பகுதியையும், பாலக்காட்டையும் தவிர்த்து பெரும்பாலானோர் பேசும் தமிழ் தெலுங்குநடையில் பேசப்படுகிறது.
(CYCLE என்பதை அவர்கள் சைக்கிளு என்றுதான் உச்சரிப்பார்கள்)
அதாவது ஒரு தெலுங்கன் தமிழ் கற்றுக்கொண்டு பேசினால் எப்படிப் பேசுவானோ அப்படி.

உண்மையான தமிழ்நடை மலையாள நடையுடன் ஒத்துப்போவது, அது ஈழத்தில்தான் பேசப்படுகிறது.

நீ பேசுறதே தெலுங்குதான்டா தமிழா.

No comments:

Post a Comment