Showing posts with label தமிழியம். Show all posts
Showing posts with label தமிழியம். Show all posts

Tuesday, 12 September 2017

நடைமுறை ஆரியம்

நடைமுறை ஆரியம்

ஹிந்தியத்தை திராவிடம் காப்பது எப்படி தெரியுமா?

ஓநாய் (ஹிந்தியா) தாக்கவரும்போது

என்றோ இறந்த வேறொரு ஓநாயின்(ஆரியம்) தோலை

பிராமணன்(வடுகன்) மீது போர்த்தி

அவனை பார்ப்பானை(தமிழன்) பின்னாலிருத்து கட்டிப் பிடித்துக்கொள்ள சொல்லி

திசைதிருப்புவான் திராவிடன்(வந்தேறி வடுகன்)

தமிழனும் உண்மையான ஓநாயை விட்டுவிட்டு செத்த ஓநாயின் தோலினுள் இறுக்கமாக பிடிக்கப்பட்டிருக்கும் தன்னினத்து பார்ப்பானைப் போட்டு அடிவெளுப்பான்.

ஆரியம் என்றோ அழிந்தொழிந்து போய்விட்டது!

ஹிந்தி மக்களின் ஆதிக்கம் அதாவது ஹிந்தியம் என்பதே நடைமுறை ஆரியம் !

அதன் அடியாட்கள் வடுக பிராமணீயம் மற்றும் வடுக திராவிடம் !

ஹிந்திய, வடுகத்தின் பல்வேறு வடிவங்களை தொடக்கத்திலிருந்து இன்றுவரை எதிர்த்து நிற்பது தமிழியம்!

அதில் பார்ப்பனரும் ஒரு அங்கம்!

Friday, 22 April 2016

சீமானின் தெலுங்கு மனைவி?!

ஆயிரம் தடவை கூறிவிட்டேன்.
தமிழர்கள் இனம் தாண்டி திருமணம் செய்யத் தடையேதும் இல்லை.
தமிழ்தேசியம் இனவெறிக் கொள்கை இல்லை.
சீமான் அண்ணனின் மாமியார் தெலுங்கு என்றே கொண்டாலும் சீமானின் மனைவி 50% தமிழர், சீமானின் பிள்ளைகள் 75% தமிழர்,
அப்பிள்ளைகள் தமிழரை மணந்து மீண்டும் தமிழினத்தில் முழுமையாக இணையமுடியும்.

இதைப்பற்றி தெலுங்கர்கள் பேசத் தேவையில்லை.


இரண்டாண்டு முன்பே விளக்கியாகிவிட்டது

https://m.facebook.com/photo.php?fbid=346073908829602&id=100002809860739&st=14&_rdr

Wednesday, 9 March 2016

தமிழியம் மனிதநேயத்திற்கு எதிரானதா?

தமிழியம் மனிதநேயத்திற்கு எதிரானதா?

தமிழர்கள் தோன்றிய வரலாறு பழமையானது
-மனிதன் தோன்றிய வரலாறு அதைவிட பழமையானது.

தமிழ் முதலில் தோன்றிய மொழி
-மனிதன் குரல் எழுப்பி வார்த்தைகளைப் பரிமாறிய ஒலிகள் அதைவிடப் பழமையானது.

தமிழர்கள் வீரம் மிக்கவர்கள்
-தமிழர்களை விடவும் வீரமானவர்கள் பல இனங்களில் தோன்றியுள்ளனர்.

தமிழர்கள் வல்லரசாகத் திகழ்ந்தவர்கள்
-மனித வரலாறு அதை விடவும் பெரிய பெரிய அரசுகளைப் பார்த்துள்ளது.

தமிழர்கள் அறிவாளிகள்
-மனித இனத்தில் தமிழரை விடவும் பல அறிவாளிகள் தோன்றியுள்ளனர்

தமிழர்கள் உலகம் முழுவதும் பரவிய இனம்
-மாந்த இனம் உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவி உள்ளது.

என்றால் எல்லாமனிதனும் ஒரே இனம்தானே?

தமிழ் இனத்திற்கு மற்ற இனங்களிடம் இல்லாத சிறப்பு என்னதான் உள்ளது?

எவனாவது இப்படி வாதாடுவான் என்று நானும் பார்க்கிறேன்.
எவனுமே இல்லை.

அதாவது தமிழ்த் தேசியத்திற்கு எதிராக சர்வதேசியத்தை,
தமிழியத்திற்கு எதிராக மாந்தநேயத்தை நிறுத்துவது.

அப்படி நிறுத்தினால் நமது கொள்கைகள் தோற்றுப்போகுமா?

தமிழியம் என்பது அனைத்து வேறுபாடுகளையும் கடந்து மாந்தர் ஒன்றுபட தடைக்கல்லா?

இல்லை. உண்மையில் தமிழியம் உலக ஒற்றுமையின் முதல் படி ஆகும்.

தமிழினம் சிறந்த இனமென்றால் மற்ற இனங்கள் கீழானவையா?

இல்லை. தமிழினமும் மற்ற இனங்கள் அளவுக்கு தன்னகத்தே பல சிறப்புகளைப் பெற்றுள்ளது.

எனவே, நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்று கூறவே எங்கள் பெருமைகளை வெளிக்கொணர்கிறோம்.

எந்த இனமும் கீழானதோ மேலானதோ கிடையாது.

இன்று உலகமே ஒரு சிற்றூர் எனுமளவுக்கு சுருங்கிவிட்டது.
தகவல்தொடர்பும் போக்குவரத்தும் தொழில்நுட்பமும் பல மடங்கு முன்னேறி இன்று மனிதர்கள் ஒரே இனமாகவும் உலகமே ஒரே நாடாகவும் ஆகும் சூழல் உருவாகிவருகிறது.

வரலாற்றுப்படி பார்த்தால் முதலில்
1)மாந்தன் தோன்றினான்.

2)பிறகு இனங்கள் தோன்றின.
(நாடு என்பது காலத்துக்கு காலம் மாறுவது)

3)பிறகு சாதி தோன்றியது.

4)பிறகு பொருளாதார ஏற்றத்தாழ்வு தோன்றியது.

5)பிறகு மதம் தோன்றியது.

6)கடைசியாக சாதிய உட்பிரிவுகள் தோன்றின.

இவ்வாறு பல பிளவுகள் தோன்றி தோன்றி எண்ணிலடங்கா பிரிவுகள் உண்டாகிவிட்டன.

மாந்த ஒருமைப்பாட்டை நிறுவ இதைத் தலைமாற்றிச் செய்யவேண்டும்.

முதலில் சாதிய உட்பிரிவுகளைக் கடந்து சாதியாக இணைதல்.

பிறகு மதங்களைக் கடத்தல்.

பிறகு சாதி, மதம் கடந்து இனமாக இணைதல்.
(இதைத்தான் தமிழியம் வலியுறுத்துகிறது)

பிறகு (தமக்கான அரசை நிறுவி) பொருளாதார வேறுபாட்டினை ஒழித்தல்.
(இது தமிழ்தேசியம் வலியுறுத்துவது)

அதன் பிறகு இனங்களைக் கடந்து மனிதர்கள் அனைவரும் ஓரினமாதல்.

இது கட்டாயம் நடந்தே தீரும்.
மனிதர்கள் ஒரே பேரினத்தைச் சேர்ந்தவர்கள்.
உலகில் எந்த மூலையில் பிறந்த ஆணும் எந்த மூலையில் பிறந்த பெண்ணும் இணைந்து குழந்தை பெற முடியும்.

ஒரு மனிதன் புன்னகைப்பது இன்னொரு மனிதனுக்குப் புரியும்.
எந்த ஒரு மனிதனாலும் எந்த ஒரு மனித மொழியையும் கற்றுக்கொள்ளமுடியும்.
மனிதருக்கான உணர்ச்சிகள் பொதுவானவை.
பிற இனம் கலவாத 100% தூய்மையான இனம் என்று எதுவும் கிடையாது.

உலக மாந்தர் தமக்குள்ளான வேறுபாடுகளைக் கடந்து
எந்த இனத்திலும் திருமணம் செய்யலாம்
எந்த நாட்டிலும் குடியேறலாம்
எந்த தொழிலையும் செய்யலாம்
எந்த வாழ்க்கை முறையையும் பின்பற்றலாம் என்ற நிலை உருவாகி
ஒரே மொழி, ஒரே நாடு என ஓரினமாக ஒன்றிணைதல் காலத்தின் கட்டாயம்.

தமிழினம் இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமையமுடியும்.

இனிவரும் காலத்தில் சாதியை ஒழிப்பதுதான் எளிது
அதைக் காப்பாற்றுவதே கடினம்.

மனிதன், தான் ஒரு மாந்த இனம் என்ற வரையறைக்குப் பிறகு,
இனம் என்ற வரையறைக்குள் வருகிறான்.

இனம் என்பது இயற்கையான எல்லைகளால் வரையறுக்கப்பட்ட தாய்நிலத்தில்
பொதுவான மொழி,
பொதுவான பழக்கவழக்கங்கள் கொண்ட மக்களைக் குறிக்கிறது.

ஒரு இனம் தன் தாய்நிலத்தை (ராணுவ பலத்தால்) பாதுகாத்துக்கொள்வதும்
தமது நிலத்தின் வளங்களை (சரியான முறையில்) பயன்படுத்தி வாழ்ந்துகொள்வதும்
அடிப்படை உரிமை ஆகும்.

ஒரு இனத்திற்குள் இருக்கும் மக்கள் சாதி, மதம், பொருளாதாரநிலை ஆகியவற்றைக் கடந்து ஒரே அடையாளத்தை ஏற்பது மிக மிக எளிது.

உலகின் ஒரு மூலையில் இருக்கும் இனம் மற்றொரு மூலையில் இருக்கும் இனத்துடன் ஒரே அடையாளத்தின் கீழ் இணைவது சற்று கடினம்.

ஆனால் இரு இனங்கள் தத்தமது அடையாளத்துடன் ஒற்றுமையாக இருக்கமுடியும்.

இனங்களின் ஒற்றுமை நீடிக்க நீடிக்க அருகாமை இனங்களிடையே கலப்பும் பொதுமைத் தன்மையும் இயல்பாக ஏற்படும்.

தமிழியம் மாந்தவியத்தின் முதல்படியே ஆகும்.

முதல்படியில் ஏறி இரண்டாவது படியில் மனித ஒற்றுமையை அடைந்துவிடமுடியும்.

Friday, 27 November 2015

தமிழியத்தின் வகைகள்

தமிழியத்தின் வகைகள்:

தமிழியம் மூன்று வகைப்படுகிறது.
அவையாவன,

அ) தமிழ்நாட்டாண்மை அல்லது தமிழ்த் தேசியம்.
ஆ) தனித் தமிழியம்
இ) தீவிரத் தமிழியம்.

முதலில் தமிழ்நாட்டாண்மை என்பது,
 
தமிழரின் தாயக நிலத்தில் பல்வேறு இனங்களை இணைத்து தலைமையை தமிழரிடம் வைத்து ஆட்சி செய்யும் ஒரு நாட்டை அமைப்பது ஆகும்.
இது இருவகைப்படும்.
அ) அறவழித் தமிழ்நாட்டாண்மை
ஆ) ஆயுதவழித் தமிழ்நாட்டாண்மை

இரண்டாவது தனித்தமிழியம்,
 
தமிழரின் தாயக நிலத்தில் தமிழரல்லாதோரை அவரவர் தாய்நிலத்திற்கு அனுப்பிவிட்டு பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த தமிழ்க்குடிகளை தமிழ்த் தாயக நிலத்திற்கு மீள்குடியேற்றி தமிழரே தமிழரை 100% ஆளும், ஆளப்படும் நாட்டை நிறுவுவது.

மூன்றாவது தீவிரத் தமிழியம்,
 
நாடு என்கிற வரையறையில்லாத உலகில் உள்ள அத்தனை மக்களும் தமிழரின் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவந்து உலகைத் தமிழர் ஆள்வதை வலியுறுத்துவது.

இதில் எது சரி எது தவறு என்பதை காலம் முடிவு செய்யும்.

தனித்தமிழியம் மற்றும் தீவிரத் தமிழியத்திற்கு அறவழி என்பது கிடையாது.

மக்கள் எந்தவொரு கொள்கையிலும் மென்மையில் இருந்து தீவிரத்திற்கு நகர்வார்கள்.

நாம் அறவழித் தமிழ்நாட்டாண்மையிலும் ஆயுதவழித் தமிழ்நாட்டண்மையிலும் தோற்றுவிட்டோம்.

இப்போது அடுத்த கட்டமான தனித்தமிழியத்திற்கு காலம் நம்மை நகர்த்துகிறது.

இதிலும் தோற்றால் தீவிரத்தமிழியத்தைத் தமிழர்கள் கையிலெடுக்கும் நிலை வரலாம்.

அப்போது,
ஒன்று உலகம் என்றுமில்லாத நன்மையை அடையும்
அல்லது என்றுமில்லாத நாசத்தை அடையும்.
.

Wednesday, 15 July 2015

அரசியலும் அரசு பேருந்தும்..

அரசியலும் அரசு பேருந்தும்..

சீர்திருத்தம், அரசியல் மாற்றம் இவற்றை விளங்க எளிய உதாரணத்தின் மூலம் எடுத்துக்கூறுகிறேன்.

பொழுதுபோக்காக படித்தாலும் சரி.

திருநெல்வேலியில் இருந்து மதுரைக்குப் போகும் கூட்டம் நிறைந்த ஒரு பேருந்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

டிராபிக் ராமசாமி முதல் சகாயம் வரை
ஷங்கர் முதல் பாலா வரை
தினமலர் முதல் டைம்பாஸ் வரை
கோபிநாத் முதல் அப்துல்கலாம் வரை
கோருகிற சீர்திருத்தம் எப்படி என்றால்,
வரிசையில் நின்று ஏறுங்கள்
கையை வெளியே நீட்டாதீர்
மகளிர் இருக்கையில் பெண்களை அமரச்செய்வீர்
பயணச்சீட்டு வாங்குங்கள்
படியில் தொங்காதீர்கள்
பெண்களை உரசாதீர்கள்
என்று கூறுவது போன்றது.
மேற்கண்ட அறிவுரைகள் எந்தவிதத்திலும் தவறானவை அல்ல.
ஆனால், இது தேவையில்லாதவை.
கூட்டம் நிறைந்த பேருந்தில் ஒரு ஆண் பெண் பக்கத்தில் நின்றால் உரசத்தான் தோன்றும்.
ஒழுக்கத்தை வலியுறுத்துவதன் மூலம் இதை முழுவதும் தீர்க்கமுடியாது.

பிறகு இதை எப்படி சரிசெய்வது,
நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தினமும் பேருந்து நிலையம் சென்று இதேபோல கசக்கிப் பிழியப்பட்டு கல்லூரி சென்றவன்தான்.
அதை நாங்கள் மாற்றியமைத்தோம்.
எங்கள் கல்லூரி மாணவர்கள் ஒன்றாக சேர்ந்தோம்.
நாங்களே ஒரு வண்டியை ஏற்பாடு செய்தோம்.
கட்டணம் அதேதான்.
பேருந்து நிலையம்வரை போகவேண்டாம் முக்கிய சாலைவரை வந்தால் போதும்.
போகும்போது பாட்டு கேட்டுக்கொண்டே போகலாம்.
ஒரு மாணவன் வர தாமதமாகிவிட்டால் காத்திருந்து அழைத்துச் சென்றோம்.
வழியில் ஓரிடத்தில் தேநீருக்காக நிறுத்துவோம்.
அந்த கடைக்காரர் வியாபாரம் கிடைப்பதால் சலுகை விலையில் தந்தார்.
சுருக்குவழியே போய் கல்லூரி வாசல்முன்பே இறங்கலாம். பாதி நேரம் மிச்சம். நெருக்கடி இல்லை. வருமானம் பெருகவே வண்டிக்காரர் டிவிடி ப்ளேயர் வாங்கி படங்கள் ஒளிபரப்பினார்.
வண்டியை அழகுபடுத்தினார்.
வண்டியில் ஊதுபத்தி கொளுத்தினார். சொகுசு இருக்கைகள் அமைத்தார். குடிநீர் வைத்தார்.
பெண்பிள்ளைகள் கூட வந்தனர்.
ஒரு ஊனமுற்ற மாணவியைக்கூட வண்டியில் ஏற உதவி எங்களால் அழைத்துச்செல்ல முடிந்தது.
களைப்போ சோர்வோ இல்லாமல் சுறுசுறுப்பாக நாங்கள்  அன்றைய தினத்தை ஆரம்பிக்கமுடிந்தது.
கட்டணம் அதேதான். அதுவும் மாதாமாதம் கொடுத்தால் போதும்.
இதுதான் மாற்றம். எல்லாவற்றையும் அடியோடு மாற்றுவது.

நல்ல அரசாங்கமாக இருந்தால், திருநெல்வேலியிருந்து மதுரைக்கு ஒருநாளைக்கு இத்தனை மக்கள் செல்கிறார்கள்,
அவர்கள் கட்டணம் வழங்க தயாராக இருக்கிறார்கள்.
தேவையான வண்டியை அமர்த்தி ஓட்டுநர் அமர்த்தி அதற்கு எரிபொருள், பராமரிப்பு செலவுபோக அரசுக்கு லாபமும் வரவேண்டும்.
அதாவது நீங்கள் கொடுக்கும் அதே கட்டணத்தில் உங்களுக்கு கூட்டமில்லாத, பழுதில்லாத, வசதிகள் கூடிய பேருந்து கிடைத்திருக்கவேண்டும்.
ஆனால், பணமும் கொடுத்து பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு பாடு பட வேண்டியுள்ளதே?!
என்றால் முட்டாள் யார்?
இது போக்குவரத்து துறை மட்டும்தான். இதேபோல குப்பையள்ளுவது முதல் ராணுவம் வரை இந்தநிலையில்தான் இருக்கிறது.

மதுரையிலிருந்து சென்னை செல்லும் தொடர்வண்டியைப் பாருங்கள். அதில் கழிவறை வரை நிரம்பிவிடுகிறது கூட்டம்.
இதற்குக் காரணம் என்ன?
விவசாயத்தின் கழுத்தை நெறுத்துக் கொலைசெய்தாயிற்று. விவசாய குடும்பங்களின் வாரிசுகள் நகரத்திற்கு ஓடி பத்துரூபாய்க்கு உழைத்துக்கொடுத்து எட்டுரூபாய் சம்பளம் வாங்குவதை விரும்புகிறார்கள்.
திருநெல்வேலிக்காரன் வேலைதேட சென்னைவரை ஓடவேண்டியுள்ளது.
ம.பொ.சி தெலுங்கரிடம் பறிபோகாமல் சென்னையை காப்பாற்றினார். இதேபோல நம் திருவனந்தபுரத்தை மலையாளிகளிடம் இருந்து காப்பாற்றியிருந்தால் பாதிகூட்டம் அங்கே போயிருக்கும்.
தொடர்வண்டி கொடுமைகளின் மொத்த உருவமாகும்.
அதில் பயணச்சீட்டுவாங்க 50நாள் முன்பே பதிவு செய்யவேண்டும்.
ஹிந்திய ஒன்றியத்தில் தொடர்வண்டி, விமான, பேருந்து போக்குவரத்துநிலை என்னவென்றால் டெல்லியில் வேலைபார்க்கும் ஒரு தமிழன் தாயின் மரணத்திற்கு வரவேண்டுமானால் கூட ஒன்றரை நாளாகும்.
அதாவது கடல்கடந்த நாட்டிலிருந்து ஒருவன் வர ஆகும் நேரத்தை விட அதிகம்.

இதே நாம் தனிநாடாக இருந்தால் மாவட்டங்கள் மாநிலத்தகுதி பெறும்.
திருநெல்வேலியின் முதலமைச்சரும் மன்னாரின் முதலமைச்சரும் பேசி இராமேசுவரம் வழியாக கடலில் பாலம் கட்டுவார்கள்.
அம்பாறை முதல்வரும் பெங்களூர் முதல்வரும் விமான சேவையைத் தொடங்குவார்கள்.
சென்னை முதல்வரும் திரிகோமலை முதல்வரும் கடல்வழிப் போக்குவரத்தைத் தொடங்குவார்கள்.
ஆற்றுநீரை தரமறுத்தால் போர்வெடிக்கும்.

இன்று என்ன நிலை?
ஹிந்தியாவின் காலடியில் உட்கார்ந்திருக்கும் தமிழக முதல்வர் என்ன செய்யமுடியும்?
ஹிந்தியாவின் ஒரு முடிவு தமிழகத்திற்கு பாதகமாக இருந்தால் எதிர்ப்பைத் தெரிவிக்க அனைத்துக்கட்சி தீர்மானம் ஒன்றைப் போடலாம் அவ்வளவுதான்.
அதை ஹிந்தியா மதிக்கவேண்டிய அவசியம்கூட இல்லை.
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்தபோது இதுதான் நடந்தது.
இன்று அங்கே மீன்பிடிக்கப்போகும் நம் அண்ணனும் தம்பியும் சுடப்பட்டு சாகிறான்.
கூடங்குளம் அணுவுலை, நெய்வேலி அனல்மின் நிலையம் என நமது மண்ணில் நாம் சுற்றுச்சூழல் மாசடையச்செய்து மற்ற மாநிலங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கிறோம்.

தமிழகத்தில் வாழ்வது ஒரு வாழ்க்கையா?
உங்கள் அக்கா தங்கச்சிகளை பேருந்தில் கண்டவன் உரசுவான்.
உங்கள் அண்ணன் தம்பி அடிபட்டு நடுவீதியில் கிடந்தாலும் எவனும் உதவமாட்டான்.
பள்ளிக்கூடங்களை விட சாராயக்கடைகள் அதிகம்.
உங்கள் தாய்தந்தைகளுக்கு அறுவைசிகிச்சை செய்ய உங்கள் கையிலிருந்துதான் பணம் போடவேண்டும்.
மற்றநாடுகள் போல மருத்துவத்தில் 80%மாவது அரசு அளிக்காது ஆனால் தமிழில் பெயர்வைக்காத சினிமாவுக்குக் கூட அதற்கான வரிச்சலுகை உண்டு.
அரசு அலுவலகத்தில் லஞ்சமும் வாங்கிக்கொண்டு நாயினும் கேடாக அலையவைப்பார்கள்.
ரேஷன்கடை அரிசி வாயில்வைக்கமுடியாது.
திருடனை விட போலீசைக் கண்டால்தான் அடிவயிறு கலங்கும்.

நெருக்கடியான பேருந்தில் பர்சை அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான்.
பணமிருப்பவன் கொலைசெய்தால்கூட வெளியவந்துவிடலாம் என்ற நிலையில் சட்டமிருந்தால் அவன் கொலைச்செய்யத்தான் செய்வான்.
ஊழல் செய்பவன் தண்டனை பெறமுடியாத நிலையில் நீதித்துறை இருந்தால் ஊழல் நடக்கத்தான் செய்யும்.
பெண்கள் கல்விகற்று தன்காலில் நிற்கமுடியாத சூழலில் சமூகமிருந்தால் பெண்ணைப்பெற்றோர் வரதட்சணை கொடுக்கவே வாழ்க்கை முழுவதையும் தொலைக்கத்தான் வேண்டும்.
நியாமாகத்தரவேண்டிய தண்ணீரை உச்சநீதிமன்ற தீர்ப்பையும் மீறி தராத நாட்டுடன் இணைந்திருந்தால் நம்விவசாயிகள் தற்கொலை செய்துகொட்டு சாகத்தான் செய்வார்கள்.

தேசியத் தலைவர் ஆண்ட ஈழமண் எத்தனை சிறப்புடன் இருந்தது தெரியுமா?
வீரப்பனார் ஆண்டகாட்டில்தான் பல்லுயிர்ப் பெருக்கம் செழிப்பாக இருந்ததாக க்ரீன்பீஸ் அமைப்பு கூறியது.
புலிகள் ஆண்ட கடலில்தான் மீன்கள் இனவிருத்தி செழிப்பாக இருப்பதாக ஹிந்திய மீன்வளத்துறை தலைமை அதிகாரி கூறினார்.
மக்களை ஆள மக்களில் இருந்து ஒருவன் வருவதே சரி.
தன் நிலத்தின் மீதான தனிஉரிமையை ஒரு இனம் கோருவது எந்தவிதத்தில் தவறு?
மக்களிடம் கொள்ளை அடித்துவிட்டு இருப்பதற்குள் ஒழுக்கமாக இருங்கள் என்று அறிவுரை வேறு.
நமக்குத் தேவை சீர்த்திருத்தம் அல்ல. அரசியல் மாற்றம்.

ஹிந்தியா தூக்கிப்போடும் எச்சில் இலைக்கு அடித்துக் கொள்ளும் அமைப்புகளும் கட்சிகளும் இனியேனும் திருந்துங்கள்.

ஹிந்தியா என்கிற கூட்டம் நிறைந்த இந்த ஓட்டைப் பேருந்திலிருந்து இறங்குங்கள்.
நாம் விமானமே கட்டலாம்.
இருக்கைகளுக்காக அடித்துக்கொள்ளவேண்டாம். மோசமான சாலைகளைப் பற்றி கவலைவேண்டாம்.
வானமே எல்லையாக நாம் மேகங்களைக் கிழித்துக்கொண்டு முன்னேறலாம்.

( நமக்குத் தேவை
'விடுதலை நாள்'
'ஸ்வதந்த்ர தின்' அல்ல.
https://m.facebook.com/photo.php?fbid=475448882558770&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739
திருவனந்தபுரம் தமிழன் சொத்து
https://m.facebook.com/photo.php?fbid=505955586174766&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 )

சிங்களவருக்கு நன்றி

சிங்களவருக்கு நன்றி

ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

மனமுடையத் தேவையில்லை, சோர்ந்துபோகத் தேவையில்லை.

நடந்த எல்லாவும் நமக்கு நல்லதாகவே அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் சராசரி மனநிலை தமிழிய சிந்தனை என்று கொண்டால்,
தமிழியம் தொடக்கத்திலிருந்தே சிறப்பாகக் காய்நகர்த்திவருகிறது.
தமிழினப் படுகொலை அதில் ஒரு பகுதி ஆகும்.

இன்று தமிழியம் தனது முழுமையான தன்மையை அடைந்துள்ளது.

ஒரு இனத்தின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு குர்த் மக்களுக்குப் பிறகு இன்று தமிழினமே ஆகும்.
மற்ற இனங்கள் மதம் கடந்துகூட ஒன்றிணைவது இல்லை.
தமிழரிடம் ஒற்றுமை இல்லை என்ற போலிப் பேச்சை இனியும் நம்பவேண்டாம்.

சேர,சோழ,பாண்டியராக தமக்குள் அடித்துக்கொண்ட காலத்தை விட இன்று தமிழியம் தனது இனத்தை உலகளாவிய அளவில் சாதி,மத,நாடு வேறுபாடுகள் கலந்து திரட்டிவிட்டது.

தமிழியம் தனக்குள்ளே அடித்துக்கொள்வதைத் தடுக்க வேற்றினத்திடம்(நாய்க்கெர் ஆட்சியிடம்) தானே அடிமைப்பட்டு பிறகு (ஆங்கிலேய)தொலையாதிக்கத்திற்கு அடிமையாகிக்கொண்டது.

பிறகு பஞ்சம் ஏற்படும் அளவு சுரண்டப்பட்டு தனது அண்டையினங்களைத் திரட்டி தொலையாதிக்கத்தை விரட்டியது.
காந்தியை உருவாக்கியது தென்னாப்பிரிக்கத் தமிழரே.
நேதாசியை உருவாக்கியதும் தமிழரே.
ஆக அது நேரடியாக இல்லாமல் வேற்றினத்தாரை(வடயிந்தியர்) முன்வைத்து தொலையாதிக்கத்தை விரட்டி அவர்களை ஆட்சியில் அமர்த்தியது.

பாகிஸ்தான் பிரிந்தபோது கோடிக்கணக்கான உயிர்கள் பறிபோனது.
பஞ்சாபி, வங்காளி ஆகிய பேரினங்கள் மதவழி இரண்டாக உடைக்கப்பட்டன.
இது குசராத்தி, மராத்தி இனங்கள் மதவழி அடித்துக்கொள்ள வழிவகுத்தது.

ஆனால், இலங்கை தனிநாடானபோது தமிழியம் அமைதிகாத்தது. அதன் காரணம் இப்போது புரிகிறது.

வடயிந்தியரிடமிருந்து பிரிய தமிழியம், தென்னிந்தியர் யாருமே கண்டுகொள்ளாத திராவிட கொள்கைக்கு ஆதரவு கொடுத்து வடயிந்திய ஆதிக்கத்தை மட்டுப்படுத்தியது.
இதற்கு விலையாக தனது 35% பகுதிகளை அண்டைமாநிலத்தில் இழந்தது.
தனது ஆட்சியை அண்டையினங்களிடம் கொடுத்தது.

பிறகு தமிழியம் தனது எதிர்ப்புணர்வை வெளிக்கொணர்ந்தது.
முழு அளவில் கொண்டுவரவில்லை.
தனித்தமிழகம் போராளிகள் வென்றிருந்தால் ஈழமும் பறிபோன தமிழ்ப்பகுதிகளும் கிடைக்காமல் போயிருக்கும்.
புலிகள் வென்றிருந்தால் சின்னஞ்சிறிய ஈழம்தான் கிடைத்திருக்கும்.
2000களில் தமிழகக் குழுக்கள் முடிவுக்கு வந்தன.
2009ல் ஈழத்தில் படுகொலை நடந்தது.

தான் தமிழன்தான் என்ற ஐயமில்லாமல் கூறும் அசல் தமிழர்கள் ஆறரைக்கோடி.
ஆறரைக் கோடி மக்களின் எழுச்சிக்கு இரண்டு இலக்கம் ஈழமக்களின் படுகொலை மிகவும் குறைந்த விலை.

இதற்கான நன்றியை நாம் (வட்டியும் முதலுமாக திருப்பிவாங்கப்போகும்)சிங்களவருக்குத்தான் கூறவேண்டும்.

மற்ற இனங்களைப் போல இனவெறி பிடித்த முரடர்களாக நாம் இருந்தால் என்ன கிடைத்திருக்கும்.
இந்தியாவின் காலடியில் ஒரு மாநிலம்.
ஆனால், நாம் முழுவிடுதலைப் பற்றி நினைத்திருக்கமாட்டோம்.

இன்று நாம் தெளிந்துவிட்டோம்.
நாம் நமது அண்டை இனங்களை விடவும் ஒரு பலமடங்கு வலிமை மிக்க பெரிய வல்லரசாக உருவெடுக்கவுள்ளோம்.
நமது கொள்கைகள் மூலம் உலக இனங்களுக்கு விடுதலை பெற்றுத்தந்து நாம் மறைமுகமாக உலகையே ஆளப்போகிறோம்.
விடுதலைப் போரில் வெற்றிபெற்ற வியட்நாம், கியூபா, தென்சூடான், எரித்ரியா போன்ற நாடுகள் அதன்பிறகு எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லை.
ஆனால், நாம் சாதிப்போம்.

தமிழியம் எதை நம்பி இவ்வளவு அழிவின் விளிம்பிற்குச் சென்றது?
தமது இளைய தலைமுறை தம்மை மீட்கும் என்ற நம்பிக்கையில்தான்.

தமிழினம் இன்று அழிவின் விளிம்பிற்கு வந்து நிற்கிறது. மீட்கும் பொறுப்பு இன்று நம் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ் இளைஞர்கள் கணிசமான அளவு விழிப்புணர்வுடன் உள்ளனர்.

பதுங்கிக் கிடந்த புலி பாய்வதற்கு தன் முன்னங்காலை எடுத்துவைக்கிறது.
-----------------------------------

(( தமிழரொற்றுமை
https://m.facebook.com/photo.php?fbid=519294914840833&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13
தமிழியத்தின் பிரித்தாளுதல்
http://vaettoli.blogspot.in/2014/11/blog-post.html?m=1
தமிழ்க் குடியரசின் முப்படை அதிபர்
https://m.facebook.com/photo.php?fbid=349035085200151&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13 ))