Showing posts with label நாதக. Show all posts
Showing posts with label நாதக. Show all posts

Saturday, 16 May 2026

2026 இல் குழப்பத்தில் இருக்கும் மக்களுக்கு

2026 இல் குழப்பத்தில்  இருக்கும் மக்களுக்கு....

 
 இந்த நாட்டில் தேர்தல் உட்பட எல்லாமே நேர்மையாக நடக்கிறது என்று கூறுவோர் இதைப் படிக்க வேண்டாம்!
 வாக்குச் சீட்டு மூலம் தேர்தல் நடத்தும் அமெரிக்கரும் ஜப்பானியரும் மின்னணு வாக்குப்பதிவு (EVM)  நடத்தும் நம்மை விட முட்டாள்கள் என்று கூறுவோரும் இந்த பதிவை தவிர்த்து விடுங்கள்!
 ஒரு சினிமா பிரபலம்! கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் எந்தவித மக்கள் பணியும் செய்யாமல் பெரும்பான்மை அளவுக்கு தேர்தலில் ஜெயிக்க முடியும் என்று நம்புவோரும் இதைப் படிப்பது வீண்!

 மற்றபடி 'தேர்தல் முடிவுகள் எதுவும் நம்பும்படி இல்லை! ஏதோ திரைமறைவில் நடக்கிறது' என்று சந்தேகப் படுபவர்கள் இந்த பதிவைப் படிக்கவும்!

 'உங்கள் (நாம் தமிழர்) கட்சி ஜெயிக்கவில்லை என்றதும் EVM மேல் பழிபோடுகிறாயா?' என்று கேட்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 பரிச்சையில் நன்றாக எழுதி தேறாமல் போனவன்தான் மறுகூட்டல் செய்ய கோரிக்கை வைப்பான்!
 சரியான நேரத்துக்கு வராத தொடர்வண்டியில் தான் பழுது இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.
 
 EVM பற்றியும் SIR பற்றியும் எப்போதும் விமர்சித்தே வந்துள்ளோம்! அது உங்கள் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம்! ஒரு மணிநேரம் மக்கள் பிரச்சனைகளைப் பேசிவிட்டு ஒரு நிமிடம் ஒரு நடிகனைப் பற்றி பேசினால் அந்த ஒரு நிமிடம் மட்டும் எல்லாருக்கும் போய் சேருகிறதே அதுபோல..

 விசயம் என்னவென்றால் உங்களைச் சுற்றி நடந்தவற்றை கவனியுங்கள்.
 எதாவது நம்பும்படி இருக்கிறதா?!
 தவெக இத்தனை பெரிய வெற்றி பெற்றதை அந்த கட்சியனரே கூட கொண்டாடவில்லையே! 
 முகம் தெரியாத வேட்பாளர்கள் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் கட்சியின் வேட்பாளர்களை இவ்வளவு எளிதில் வீழ்த்த முடியுமா?!
 எதிரியே ஆனாலும் ஸ்டாலின் தோல்வி சந்தேகத்தை ஏற்படுத்துகிறதே?!

 இவை மட்டுமில்லை எங்கள் வாக்குவங்கி குறையாது என்று உறுதியாக கூறிவந்த நாதக வினரும் சீமானும் கூட மறு எண்ணிக்கை (அதாவது வாக்கு பட்டனை அழுத்தியதும் வரும் vvpad எனும் துண்டு சீட்டை) கோரிக்கை வைக்கவில்லை என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
tvk வெற்றி என்பது எந்தவிதத்திலும் நம்ப முடியவில்லை.
 ஊரில் வெட்டியாத் திரியும் பத்து தற்குறிப் பயல்கள் அவர்கள் கட்சியை வெல்லவைத்து விட்டார்கள் என்பதும்.... 
 இன்ஸ்டாகிராமில் வைரல் வீடியோ செட் செய்து ரூட் மாபியா எனும் இணையதளக் கூலிப்படை மக்களை நம்பவைத்து வீட்டனர் என்பதும்....
 நாலு ஜூனியர் ஆர்டிஸ்ட்களை நைட்டி போட்ட குடும்ப பெண்கள் போல பேச வைத்து பெண்கள் வாக்குகளை எல்லாம் பெற்றுவிட்டனர் என்பதும்....
 வீட்டில் குழந்தைகள் அடம்பிடித்ததால் முதியவர்கள் விஜய்க்கு வாக்களித்து விட்டனர்  என்பதும்....
 விஜய் பெரிய ஆணழகன் அவர் கவர்ச்சியில் மயங்கி இளம்பெண்கள் வாக்களித்தனர் என்பதும்...
 இந்த கால இளைஞர்கள் எல்லாரும் சினிமா பைத்தியங்கள் அந்த ரசிக மனப்பான்மையில் விஜய்க்கு வாக்களித்தனர் என்பதும்...
 பரம்பரை திமுக குடும்பங்கள் கூட விஜய் நல்லது செய்வார் என்று நம்பி வாக்களித்தனர் என்பதும்...
 ஸ்டாலின் தோல்வி ஆனால் உதயநிதி வெற்றி என்பதும்...
 சுத்தமாக நம்பும்படி இல்லை!
 
 இந்த வெற்றிக்கு கொஞ்சம் நம்பும்படி இருப்பது விஜய் நிறுத்திய வேட்பாளர்கள் அனைவருமே அந்தப் பகுதி பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த அரசியல் பின்னணி உள்ள பணக்கார வேட்பாளர்கள் என்பது மட்டுமே! 

 இருந்தாலும் இத்தனை பெரிய வெற்றி?!!!!

சரி! இத்தனை பெரிய வெற்றி என்றால் அது மக்களின் மிகப் பெரிய எழுச்சி என்று ஆகிறது.
என்றால் தமிழகத்தின் பாதி மக்கள் அதைக் கொண்டாடியிருக்க வேண்டுமே?!
 எங்குமே அத்தனை பெரிய கொண்டாட்டங்கள் இல்லையே?!
 
 இந்தியாவை ஆளும் கார்ப்பரேட் முதலாளிகளின் தலைமை பீடம் இதை செய்வதாக நான் நம்புகிறேன்!

 ஏற்கனவே இவர்கள் பற்றி நான் கூறிவருவது என்னவென்றால் தேர்தல் நடத்தி அதன் முடிவுகளை கொஞ்சம் கூட்டி குறைத்து அறிவிப்பார்கள்!
 இதை செட் செய்ய தேர்தல் முடிந்ததும் சில நாட்கள் எடுத்துக்கொண்டு உளவுத்துறை மூலம் மக்கள் மனநிலையை கண்கானித்து பிறகு வெளிவிடப்போகும் முடிவுக்கேற்ப மக்களை ட்யூன் செய்து முடிவுகளை அறிவிப்பர்.
 அதாவது நாம் தமிழர் 15% வாங்கியிருந்தால் அதை 7,8  என்றாக்குவர், திமுக, அதிமுகவில் எங்கே யார் தேவையோ அதற்கு ஏற்றாற்போல ஏற்றி இறக்கி வெளியிடுவர்.

 மக்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதில் கவனமாக இருப்பர்!
 ஏனென்றால் எத்தனை பெரிய அரசு என்றாலும் மக்கள் சக்திக்கு மீறி நிலைக்க முடியாது!

 ஆனால் இந்தமுறை...?!
 
 இந்த முறை முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக முடிவுகளை வெளியிட்டுள்ளனர். 
 மக்கள் இதை கண்டறிகின்றனரா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

 சிலருக்கு இப்போது சந்தேகம் வரத் தொடங்கியுள்ளது. 
 அதை சரிகட்டவே விஜய் அப்படி ட்ரிக் செய்தார் இப்படி செட்டப் செய்தார் அதனால் வாக்கு பெற்று வென்றுவிட்டார். 
 மக்கள் அவரிடம் ஏமாந்துவிட்டனர் என்று குழப்ப நினைக்கின்றனர்.

 எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது!
 என் தமிழ் மக்கள், என் தமிழினம் இத்தனை முட்டாள்த் தனமான முடிவெடுக்க வாய்ப்பே இல்லை! 
 
 என் மக்கள் திராவிடத்திடம் ஏமாந்தனர் என்பதை ஏற்றுக் கொள்ள முடியும்!

 ஆனால் போயும் போயும் ஒரு நடிகரிடம் ஏமாந்துவிட்டனர் என்பதை என்னால் ஒருக்காலும் ஏற்கமுடியாது!
 தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் எத்தனையோ நடிகர்கள் கட்சி தொடங்கி படாத பாடு பட்டும் பெறமுடியாத வெற்றியை விஜய் பெற்றுவிட்டார் என்பதை எப்படி உங்களால் நம்ப முடிகிறது?!

 புதுச்சேரியில் புஸி ஆனந்த் செல்வாக்கு இருந்தும் அஞ்சலையம்மாள் அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தாலும் தவெக 17% வாக்கு மட்டுமே பெற்றுள்ளது.

 எம்.ஜி.ஆர் இங்கே ஒப்பிடக்கூடிய ஒருவர் என்றாலும் அவரது அரசியல் பயணம் நீண்ட நெடியது! படிப்படியாகவே அவர் அந்த இடத்தை அடைந்தார்!
 விஜயகாந்த் கூட அவ்வாறே! 
படிப்படியாக வளர்ந்துதான் எதிர்க்கட்சி தலைவர் ஆனார்!
 சினிமாவில் ஒரு பாட்டில் பணக்காரன் ஆனதுபோல விஜய் ரெண்டே வருடத்தில் டைரக்ட்டா சிஎம் ஆய்விட்டார் என்பதெல்லாம் கற்பனையில் கூட நடவாத காரியம்!

 ஆம் ஆத்மி கேஜரிவாலுடன் இவரை ஒப்பிடலாம் என்றால் அவரது கல்வி தகுதியும் அவரது அரசியல் நடவடிக்கைகளும் அவர் பதவிக்கு வந்த பிறகு செய்த அதிரடியாக செயல்களும் இன்றுவரை அவர் மீது நடக்கும் அடக்குமுறைகளும் அவர் எத்தனை ஆளுமை படைத்த மனிதர் என்பதைக் காட்டும்!
 
 நாம் தமிழர் தம்பிகளே!
கவனமாகக் கேளுங்கள்!
எது நடந்தால் நீங்கள் அரசியலை விட்டே வெறுத்து ஒதுங்குவீர்களோ மிகச் சரியாக அது நடத்தப் பட்டுள்ளது!
 எது நடந்தால் நாம் அதிர்ச்சியில் உறைந்து துவண்டு போவோமோ அது நடத்தப் பட்டுள்ளது!
 எது நடந்தால் நமக்கு மக்கள் மீதும்
 நம் குடும்பத்தினருக்கு நம் மீதும் 
கடுங்கோபம் வருமோ அது நடத்தப்பட்டுள்ளது!

 இது சதி! 
மக்கள் நமக்கு முன்பை விட பல மடங்கு வாக்களித்துள்ளனர்!
 விஜய் பெற்ற வாக்குகள் அத்தனை கட்சிகளும் பெற்ற வாக்குகளில் கொஞ்சம் கிள்ளிப்போட்டு நாதக வாக்குகளை மட்டும் அள்ளிப்போட்டு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

 மக்களுக்கு இந்த சதியைப் புரியவையுங்கள்!

 மக்கள் புதியவருக்கு வாய்ப்பளித்தே வந்துள்ளனர்.
 எடப்பாடி தேர்வான போது அவர் ஆட்சிக்கு புதியவர்!
ஸ்டாலின் தேர்வானபோதும் அவர் ஆட்சிக்கு புதியவர்!
 அப்படி இந்த முறை சீமானை தேர்ந்தெடுக்கவே மக்கள் வாக்களித்திருக்க வேண்டும்!
 அதை விஜய்க்கு மாற்றிவிட்டனர்.

 தமிழினத்தின் கடைசி நம்பிக்கையான சீமான் அவர்களே!
 நீங்கள் இந்த கோணத்தில் சிந்திக்காதது கட்சிக்குள்ளேயே உங்கள் மீதான சந்தேகத்தை வளர்க்கும்!
 இதோடு உங்கள் அரசியல் வாழ்க்கையே முடியப் போகிறது எனும நிலைக்கு வந்துவீட்டீர்கள்!
 இனியாவது உண்மையை உணருங்கள்! 
கள நிலவரம் உங்களுக்கு தெரியாமல் இருக்காது!
 
 உங்கள் வாக்கு சதவீதம் இவ்வளவு கீழறங்க வாய்ப்பில்லை!
அதிலும் உங்கள் தொகுதியில் உங்கள் நிலை இவ்வளவு பரிதாபமாக மாற வாய்ப்பே இல்லை!

 விஜய்க்கு விழுந்த வாக்குகள் எப்படிப் பார்த்தாலும் கூட்டணி இல்லாமல் திராவிடத்தை எதிர்த்து பணம் கொடுக்காமல் சாதி மத கணக்குகளைத் தாண்டி பெறப்பட்ட வாக்குகள்!
 எனவே நம்பிக்கை கொள்ளுங்கள்!

 மீண்டும் எழுந்து வாருங்கள்!
இடைத்தேர்தலில் வாக்கு மோசடி நடந்துள்ளது என்ற கோணத்தில் பிரச்சாரம் செய்து களம் காணுங்கள்!
 இது மோசடியான தேர்தல் என்று ஆதாரங்களைத் திரட்டி சட்டரீதியாகவும் எதிர்வினை ஆற்றுங்கள்!

 நீங்கள் பெற்று விஜயிடம் பறிகொடுத்த வாக்கு உங்கள் உழைப்பு மட்டுமில்லை 15 ஆண்டுகளாக தன் சந்தோசத்தையும் பணத்தையும் வாழ்க்கையையும் உங்களுக்காகத் தொலைத்த தம்பிகளின் வாக்கு! 
  
 உங்களையே நம்பியிருக்கும் வருங்கால சந்ததிகளின் வயிற்றுக்கு போகவேண்டிய சோறு!

 குடியால் அல்லல் படும் பல தாய்மார்களின் தாலி!

 இதை பறிகொடுத்துவிட்டு உங்களால் எப்படி பேசாமல் இருக்க முடிகிறது?! 

 அதிமுக வினரே! குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களே!
 இடைத்தேர்தலை நீங்கள் புறக்கணித்த போதும் உங்கள் ஆதரவை நாதகவுக்கு வழங்க உங்களுக்கு மனமில்லை!
 அன்று அதைச் செய்திருந்தால் நாம் தமிழருடன் கூட்டணி கூட அமைந்திருக்கலாம்.
 இன்று உங்கள் நிலை என்ன?!
கட்சி பிளந்து உங்களையே வெளியே தள்ளும் நிலை!
அந்த இடைத் தேர்தலில் விஜய் மைக் சின்னத்தை கையிலெடுத்து மறைமுக ஆதரவு கொடுத்த போதும் உங்களுக்கு மனம் வரவில்லை.
 கடைசியில் கடிபட்ட அதே பாஜக எனும் பாம்புக்கே பால் வார்த்து இன்று மீண்டும் கடிபட்டு நிற்கிறீர்கள்!

 விஜய் கூட்டணி வருவார் என்று கணக்கு போட்டு அவர் கரூர் நிகழ்வில் பேடித்தனமாக ஓடி பொதுவெளியில் வசமாக சிக்கியபோது விமர்சிக்காமல் தப்பவிட்டீர்கள்!
 இன்று அவரது ஏளனப் பார்வைக்கு ஆளாகி நிற்கிறீர்கள்.

 வரும் இடைத் தேர்தலிலாவது மீண்டும் அதே தவறைச் செய்யாமல் சீமான் அவர்களை ஆதரித்து செயல்படுங்கள்! 

 விஜய் ரசிகர்களே!
 இதை உங்கள் வெற்றியாக பார்ப்பது தவறு!
 விஜய் தரப்பு வாக்கு கொடுத்தபடி எந்த ரசிகருக்கும் கட்சி பதவியோ வேட்பாளர் வாய்ப்போ எம்.எல்.ஏ பதவியோ வழங்கவில்லை!
 அவருடைய டிரைவர், திரையுலக நண்பர், ஜோசியர் என அடிபொடிகளுக்கு கூட பதவி வழங்கியுள்ளார். 
 வாக்குறுதிகளை நிறைவேற்றவும் போவதில்லை அதற்கும் நீங்கள்தான் வசவு வாங்கவேண்டும். 
 சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறு!
தீவிர விஜய் ரசிகராக இருந்தும் அரசியலுக்கு அவர் சரிப்பட மாட்டார் என்று நேர்மையாக வாக்களித்த பலரை எனக்கு தெரியும்!
 இன்று பலருக்கு விஜய் மீது இருக்கும் வெறுப்பும் கூட அவர் சம்பாதித்து இல்லை உங்கள் நடத்தையால் ஏற்பட்டதுதான்.
 இனியாவது திருந்துங்கள்!
மாயையில் இருந்து வெளியே வாருங்கள்!

 விஜய்க்கு ஓட்டுபோட்ட மக்களே!
  விஜய் காலில் இருக்கும் செருப்பைக் கழட்டி அடித்தால் கூட சந்தோசமாக வாங்கிக் கொள்ளும் ஈனப் பிறவிகள் நீங்கள்! 
 சீமானை விடுங்கள்! 
 இந்த திராவிட காட்டுமிராண்டி அரசை எதிர்த்து களத்தில் இத்தனை ஆண்டுகள் உயிரைக் கொடுத்து போராடிய நாம் தமிழர் தம்பிகளை விட்டுவிட்டு கண்ட கழிசடைக்கும் வாக்கு போட்ட நீங்களெல்லாம் பெற்ற தாயை.....
வேண்டாம் விடுங்கள்
 உங்களைத் திட்டி வார்த்தைகளை வீணாக்க விரும்பவில்லை!


 தமிழர்களே! நம்மை ஒரு தமிழன் ஆளவேண்டும் என்று எவ்வளவோ முயற்சித்தோம்!
 ஆனால் தமிழன் என்பதைத் தவிர வேறு ஒரு தகுதியும் இல்லாத ஒருவரை நம் தலையிலே கட்டிவிட்டனர். 
 ஏன் விஜய்?!
 விஜய்க்கு சமூக பின்புலம் கிடையாது! 
 தாய், தந்தை, மனைவி, பிள்ளை என எந்த ஆதரவும் கிடையாது!
 அவர் ஒரு எடுப்பார் கைப்பிள்ளை! 
 விஜயின் அப்பா விஜய் பெயரில் கட்சி தொடங்கிய போது அதை கடுமையாக எதிர்த்து அவர் மீதே வழக்கு போட்டவர் விஜய்! 
 அடுத்த ஓராண்டுக்குள் கட்சி தொடங்கினார் என்றால் யோசித்துப் பாருங்கள்!
 யாருடைய அழுத்தமோ இதற்கு காரணம் என்று யூகிக்கலாம்.
அரசியலும் தெரியாது மக்கள் மீது அக்கறையும் கிடையாது!
 தனக்காக மட்டுமே வாழ்பவர்!  
 சேர்த்திருப்பதும் கருப்பு பணம்!
அவரை அதிகாரத்தில் அமரவைக்க எந்த நிபந்தனை கூறினாலும் ஏற்கும் நிலையில் உள்ளவர்.

 இது தமிழ்தேசிய வெற்றி அல்ல! ஏமாற்று! 
 ஆரம்பத்தில் விஜயை சீமான் ஆதரிக்க காரணம் அவருக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் இருந்த மோதல் அதனால் அவர் சந்தித்த இடைஞ்சல்கள்.
 அவர் தமிழ்தேசிய கட்சி தொடங்கி அரசியலுக்கு வராத இளைஞர்களை தமிழ்தேசியத்தின் பக்கம் கொண்டுவருவார் என்றுதான்!

 சீமான் செய்த மிகப்பெரிய தவறு அது! 

 எது எப்படியோ குறைகள் பல இருந்தாலும் இன்று சீமானைத் தவிர வேறு நல்ல அரசியல் தலைவர் இல்லை! 

 எனவே இனியும் தொடர்ச்சியாக சீமானை ஆதரிப்பதைத் தவிர வேறுவழி இல்லை! 
 
 இந்த பதிவை நம்பாதவர்கள் கொஞ்சம் பொறுங்கள்!
 விஜயை ஏன் முதலமைச்சர் ஆக்கினர் என்பதை அவர் வந்தபிறகு எதைக் கொண்டுவரப் போகிறார் என்பதை வைத்து அறிந்து கொள்ளலாம்.

 மக்களுக்கு மிகவும் கேடான கார்ப்பரேட்டுகளுக்கு மிக நன்மையான திராவிட கட்சிகளே கொண்டுவரத் தயங்கும் எதோ ஒன்றை விஜயை வைத்து கொண்டுவரப் போகின்றனர்.

 அன்று நான் சொல்வது உங்களுக்குப் புரியும்! 
 
 

Sunday, 14 December 2025

செங்கோட்டை சபிக்

 செங்கோட்டை சபிக் 

 செங்கோட்டை யில் கன்னட கொடியுடன் வலம் வந்த வண்டியை மறித்து கொடியை அகற்ற வைத்த நாம் தமிழர் மூத்த நிர்வாகி அண்ணன் முகமது சபிக் அவர்கள் சிறையில் அடைக்கப் பட்டார்.

 தென்காசி பொறுப்பாளர் வின்சென்ட் அவர்கள் பிணை எடுக்க ஆவன செய்துள்ளார்.
 இவ்வழக்கில் மேலும் சேர்க்கப்பட்டவர்கள் செங்கோட்டை பகுதி நிர்வாகிகள் காமராசு மற்றும் ஜெயசெல்வன் ஆகியோர் ஆவர்.
 (அதாவது ஒரு இசுலாமியர், ஒரு தேவேந்திரர், ஒரு கிறித்தவ நாடார்) 
 
 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் செங்கோட்டை பகுதி  பொறுப்பாளர்கள் மற்றும் கடையநல்லூர் நிர்வாகிகள் என 8 பேர் அண்ணன் சபிக் அவர்களது இல்லம் சென்று சிறிதளவு நிதி உதவி செய்துவிட்டு நாளை மறுநாள் பிணை கிடைத்துவிடும் என்று தைரியம் சொல்லிவிட்டு வந்தோம்.
 பிணையும் கிடைத்துவிட்டது.
 
 பி.கு: சமூக வலைகளில் இச்செய்தி பரவியதே கைதுக்கு காரணம் என்பதால் இச்செய்தி ஒரு வாரம் தாமதமாக பகிரப்படுகிறது 

 


 

Friday, 17 October 2025

சீமானை சோதிக்காதீர்கள்

 சீமானை சோதிக்காதீர்கள்

 சீமான் ஸ்டைல் அரசியலை புரிந்து கொள்ள முயல்வோம்!
சீமானிடம் இருப்பதெல்லாம் கொள்கைதான்! 
ஆனால் கொள்கையை வைத்தே பணபலமும் அதிகார வலுவும் கிளப்ப முடியாத சூறாவளியை அவரால் கிளப்ப முடியும்!
 அவருக்கு எப்போது தேவையோ அப்போது ஊடகத்தையும் மக்களின் கவனத்தையும் தன் மீது திருப்ப முடியும்!

 ஒரு தளபதி சூழ்நிலைக்கு தகுந்தபடி கனரக ஆயுதங்களை களத்தில் இறக்குவது போல அண்ணன் கொள்கைகளில் மாற்றம் அல்லது தீவிரம் என்று நிலைப்பாடு எடுப்பார்!
 இப்படித்தான் பாஜக வின் அடிப்படையைத் தகர்த்த 'முப்பாட்டன் முருகன்' நிலைப்பாடு!
 இப்படித்தான் புயலைக் கிளப்பிய 'ராஜீவ் காந்தியை கொன்றோம்' என்ற நிலைப்பாடு!
 இப்படித்தான் 'ஆடு மாடு மேய்த்தல் அரசுவேலை' நிலைப்பாடு!
 இப்படித்தான் 15 ஆண்டுகள் காத்திருந்து அடித்த 'ஈ.வே.ரா பிம்பம்' மீதான அடி!
இப்படித்தான் கள் இறக்கும் போராட்டம்! 
இப்படித்தான் மாடு, மலை, தண்ணீர் மாநாடு!

 கொள்கை மட்டுமல்ல சில வார்த்தைகளைப் போட்டு அதிர்வை கிளப்புவதும் உண்டு! 
இப்படித்தான் 'ஆமைக்கறி'...!
இப்படித்தான் 'ஏகே74'..!
இப்படித்தான் 'டேய் ஸ்டாலின்'..!
 இப்படித்தான் 'சாத்தானின் பிள்ளைகள்'..!
 இப்படித்தான் 'எம்ஜிஆர் சனியன்'...!
இப்படித்தான் 'டீவிக்க...! தலைவிதி'...!"
இப்படித்தான் 'அண்ணனை முறைச்சா அடிப்பேன்'..!

 இனி வரும் காலங்களிலும் அண்ணாயிசம், எம்ஜியாரிசம், திருமாயிசம், அம்பேத்கரிசம் என எல்லா இசங்களும் நொறுக்கப்படும்! 

 அண்ணனிடம் இருப்பதெல்லாம் உடலும் அறிவும் தான்!
அதாவது மக்களைப் பற்றிய ஆழமான புரிதலும் மணிக்கணக்காக பேசும் திறனும் சுற்றுப்பயணத்திலேயே இருக்கும் கடின உழைப்பும் கொள்கைகளின் பலம் பற்றிய புரிதலும்தான்!
 அதனால்தான் உயிர் போகும் அளவு ரிஸ்க் எடுக்கும் கதாநாயகன் போல 'தனித்து' என்கிற தற்கொலை முடிவில் உறுதியாக இருக்கிறார்!
 ஏனென்றால் அதுதான் அவரது அடையாளம்! 
அதுதான் அவர் அரசியலின் உயிர்நாடி!
 ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக கவலைக்கிடமான நிலையில் இருந்தபோது யாராவது எடப்பாடி பழனிச்சாமியிடம் திமுகவுடன் கூட்டணி அமைக்க கோரினார்களா?!
இரு கட்சிகளும் இணைந்தால் தமிழகத்தை யாராலும் அசைக்க முடியாதே?! 
 ஏன் அது மட்டும் நடக்கவே நடக்காது?!
ஏனென்றால் அதுதான் அவர்களின் அடையாளம்! 
சீமானின் அடையாளமும் அத்தகையதே! 

 
 ஒரு நொடி ஆகாது...  'மக்களாவது மண்ணாவது' என்று தூக்கியெறிந்து விட்டு அதிமுக வுடன் கூட்டணி போட்டு பதவி பணம் அதிகாரம் என கைப்பற்றி தன் குடும்பத்தையும் கட்சியின் மேல்மட்டத்தையும் வளப்படுத்தி கொள்ள ஒரு நொடி ஆகாது!
 அதன்பிறகும் கூட 50 ஆண்டுகள் அரசியல் செய்ய முடியும்!
 விசிக போல மானங்கெட்டு போகாமல் பாமக போல கௌரவமாக அமர்ந்து மிதமான அரசியல் செய்ய முடியும்!
 தமிழர் அல்லாதோருக்கு எதிராக சிவசேனா பாணி கலவர அரசியலைச் செய்ய முடியும்! 
 அல்லது 'கன்னட ரக்சின வேதிகே' போல அரசியலுக்கு வெளியே இருந்தே கூட அரசியலை ஆட்டுவிக்க முடியும்! 
 ஆனால் அண்ணனோ 'தலைகீழாகத்தான் குதிப்பேன்' என்கிறார்!
 எங்கள் இலக்கு ஆழமானது!
  முத்து எடுக்க தலைகுப்புற விழுந்து மூச்சை அடக்கித்தான் ஆக வேண்டும்.

 அண்ணன் இந்த இறுமாப்பாலேயே எல்லா ஆதரவையும் இழந்துவிட்டார்!
இன்று அண்ணனுக்கு ஆதரவாக இருப்பது மாற்றத்தை விரும்பும் தம்பிகள்! அவர்கள் திரட்டும் சிறிய அளவு நிதி! அதைவிட அண்ணனின் சர்வாதிகாரத்தை சகித்துக் கொள்ளும் தம்பிகளின் அசாத்திய பொறுமை! 
 எதிர்கட்சி ஆட்களையும் பாராமுகம் காட்டும் மக்களையும் மண்ணையும் மரத்தையும் கூட மரியாதையாக பேசும் அண்ணன் தம்பிகளை மட்டும்தான் 'இருந்தா இருடா பிசிறு! இல்லாட்டி போய்ட்டே இரு!' என்று எடுத்தெறிந்து பேசுவார்!
 அண்ணன் தவறு செய்யும் போது கேள்வி கேட்கும் உரிமை இருந்தாலும் நாங்கள் பலமுறை மௌனமாகவே கடந்து செல்கிறோம்!
அண்ணனின் இந்த அலட்சிய போக்கு பல முறை எங்களை காயப்படுத்தி இருக்கிறது! 
 கரூர் சம்பவத்திற்கு பிறகு அவரது சர்வாதிகாரம் இல்லாவிட்டால் நாங்களும் அப்படியான ஒரு கும்பலாகத்தான் ஆகியிருப்போம் என்று மனதைத் தேற்றிக் கொள்கிறோம்!
 மாடுகளைத் திரட்டி மாநாடும் ஊர்வலமும் நடத்தியபோது கூட சிறு கீறல் இல்லை என்றால் அதுதான் சீமான் உருவாக்கிய கட்டுப்பாடு!

 என்ன செய்வது அண்ணனை எங்களால் கைவிட முடியாதே?!
 ஆம்! உங்கள் குருட்டு கண்களுக்கு தெரிகிறதா?!
சீமானுக்கும் 60 வயதாகிவிட்டது! 
தம்பிகளும் இளமைக் காலத்தை தொலைத்துவிட்டு 40களில் அதாவது முதுமைக்கு வந்துவிட்டனர்! 
 தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் நல்ல அரசியல்வாதிக்கு மரணவலி கொடுக்கின்றனர்.
இப்படித்தான் வ.உ.சி!
இப்படித்தான் பாரதியார்!
இப்படித்தான் ஜீவானந்தம்!
இப்படித்தான் மபொசி!
இப்படித்தான் பாரதிதாசன்!
இப்படித்தான் நல்லகண்ணு! 
இப்படித்தான் தமிழரசன்! 
இப்படித்தான் கலியபெருமாள்! 
இப்படித்தான் நம்மாழ்வார்!

 தமிழக வாக்காள பெருமக்களுக்கு ஏதோ தாம் பெரிய சிவபெருமான் என்றும் ஓட்டுக் கேட்டு நிற்பவன் தன் பக்தன் என்றும் எண்ணிக்கொண்டு உயிர் போகும் அளவு சோதிக்கின்றனர்.
 அவன் உங்களை காப்பாற்றத்தான் உங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான் மக்களே!
 இதுவே சீமான் ஒரு வந்தேறியாக இருந்திருக்க வேண்டுமே?! 
 அன்று வைகோவுக்கும் விஜயகாந்துக்கும் இன்று கமலஹாசனுக்கும் விஜய்க்கும் அளித்த ஆதரவைக் கூட சீமானுக்கு அளிக்கவில்லை இந்த கேடுகெட்ட தமிழினம்! 
 வடவரில் கொஞ்சம் அறிவுள்ள டெல்லி மக்கள் ஓரிரு ஆண்டுகளிலேயே பாஜக- காங்கிரஸ் இரண்டும் ஒன்றே என்று அறிந்து கேஜரிவால் கைகளில் ஆட்சியைக் கொடுத்து இன்று பஞ்சாபை அவர்கள் வென்று நல்லாட்சி நடத்தவில்லையா?!
 ஒன்றில்லை ரெண்டில்லை 16 ஆண்டுகள் சீமானை சோதித்துவிட்டீர்கள்! 
வேறொரு இனமென்றால் இந்நேரம் சீமானை வைத்து தனிநாடே வாங்கியிருக்கும்!
 1971 இல் ஒரு 16 வயது சிறுவனை 13 ஆண்டுகள் சோதித்த ஈழத் தமிழினம் 1983 இல் அவரை தலைவனாக ஏற்றுக்கொண்டது!
சீமானும் அப்படியானவரே!
அவர் பாதையில் சறுக்கி இருக்கலாம் ஆனால் தடம் மாறவில்லை! 
 ஆனால் தமிழகத்தில் ஆண்கள் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் பெண்கள் ஆயிரத்துக்கும் ரெண்டாயிரத்துக்கும் ஓட்டு விபச்சாரம் செய்வதே அரசியல் என்று நினைக்கின்றனர்!
 பலமுறை 'ஒருவேளை கருணாநிதியும் ஜெயலலிதாவும் கூட ஆரம்பத்தில் மக்களுக்கு நல்லது செய்ய வந்து இவர்களின் புத்தி தெரிந்து கெட்டவர்களாக மாறிவிட்டார்களோ!' என்று எண்ணத் தோன்றுகிறது!
 நான் சீமானாக இருந்திருந்தால் இந்நேரம் ஒரு கருணாநிதியாக மாறியிருப்பேன்!
  சீமான் சமரசம் செய்யாமல் இருப்பதால் தான் இங்கே தமிழ்தேசியம் உயிரோடு இருக்கிறது!
 இல்லையென்றால் அவர் இடத்தில் வைகோ இருந்திருப்பார்!
 அந்த பிழைப்பு பிழைக்க எங்களுக்கு மனம் வரவில்லை!
ஆனால் சமரசம் செய்து கொண்டவர்களை புத்திசாலிகள் என்று கருதும் சிலர் உண்டு
அந்த வகையில் 'இப்படி இருந்தால் வெல்ல முடியாது!
இது திமுகவுக்கே சாதகமாக முடியும்!'
என்றெல்லாம் 'நடைமுறை' யில் நின்று பேசும் அதிமேதாவிகள்  நிதானமாக சிந்திக்கவும்!
 முதலில் ஒரு சிந்தனை வலுவாக நிற்காமல் அது நடைமுறையை மாற்ற முடியாது!
 அசாத்திய கனவுகள்தான் சாத்தியக் கூறுகளை மாற்றி அமைத்து நடைமுறையாக மாறுகின்றன!
 மன்னராட்சி காலத்தில் மக்களாட்சியே பெரும் கனவுதான்! 
 சரி சித்தாந்தங்களை விடுவோம்! எளிமையாக புரியும்படி சொல்கிறேன்!
 நீங்கள் சொல்வது போல திமுக அத்தனை பெரிய அரக்கன் என்றால் ஏன் மேற்குவங்க கம்யூனிஸ்ட்கள் போல தொடர்ந்து 30 ஆண்டுகள் வெல்ல முடிவதில்லை! 
அடுத்த பெரிய கட்சி அதிமுக என்றால் ஏன் தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் கூட ஆட்சியில் இல்லை?! 
 ஒரு தேர்தலில் அமோக வெற்றி அடுத்த தேர்தலில் படுதோல்வி என்று மாறி மாறி சந்திக்கிறார்களே அது யாரால்?! 
 என்னதான் பெரிய கட்சி, என்னதான் தொண்டர் பலம், என்னதான் கட்டமைப்பு, என்னதான் பணபலம் இருந்தாலும் சூழ்நிலை பொறுத்து தன் வாக்கை மாற்றிப்போடும் மக்களை விலைக்கு வாங்க முடியாது!
 திமுக வின் வாக்கு வங்கி அப்படியே இருக்கும்!
அதிமுக வின் வாக்குவங்கியும் அப்படியே இருக்கும்!
இருபுறமும் சாராத மக்கள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றனர்.
 இவர்கள் நாம் தமிழர் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு இருக்கின்றனர்.
 இவர்களே சீமான் வாங்கிய 35 லட்சம் வாக்கு!
இவர்கள் நினைத்தால் அடுத்த தேர்தலிலேயே நாம் தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்!
 சீமானின் இலக்கு இவர்கள்தான்! 
சீமான் முன்வைக்கும் பெருங்கனவு மாநில ஆட்சி அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டது!
 அவர் 10 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்து முழு சர்வாதிகாரியாக நடந்தால்தான் அவர் விரும்பும் மாற்றத்தில் கால்வாசியையாவது கொண்டுவர முடியும்!
 அத்தகைய மனிதனை கேவலம் அதிமுக வுடன் கூட்டணி வைக்கவில்லை என்று கரித்து கொட்டுவது எத்தனை பெரிய மூடத்தனம்!
 கட்சியே பிழைக்காது சின்னமே கிடைக்காது என்ற நிலையில் கூட உறுதியாக இருந்து அங்கீகாரத்தையும் சின்னத்தையும் பெற்றுவிட்டோம்!
  தனித்து தன் கால்களில் தன்மானத்தோடு நிற்கும் எங்களை குறைசொல்லும் நீங்கள் யார்?!
கூட்டத்தோடு கோவிந்தா போடுவது போல எல்லாரும் எவனுக்கு வாக்களிக்கிறானோ அவனுக்கே வாக்களித்துவிட்டு ஏதோ முதலமைச்சரை தான் ஒருவனே கைப்பிடித்து அரியாசனத்தில் அமர்த்தியது போல ஒரு திமிரோடு திரிபவர்கள்!
  சிலர் ஒருமுறை நாதக வுக்கு வாக்கு போட்டு அவர்கள் தோற்றதும் ஏதோ தன் அப்பன் தந்த சொத்து வீணாகிவிட்டது போல புலம்பல்!
 நாதக சின்னத்தில் நோகாமல் ஒரு ஓட்டு குத்திய உங்களுக்கே அது வெல்லாத போது இவ்வளவு கோபம் வருகிறதே!
 உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இறைக்கும் நாதக தம்பிகளுக்கு எப்படி இருக்கும்?!
 குடும்ப மானம் வரை குதறப்பட்ட அண்ணனுக்கு எப்படி இருக்கும்?!  

 'நடைமுறை' நாயகர்களே! 
 அப்படியே யோசித்தாலும் எடப்பாடியார் என்ன பெரிய தமிழ்தேசிய நடவடிக்கை செய்தார்?!
 ஜெயலலிதா வை சீமான் ஆதரித்த போது அதிமுக தலைமை எத்தனை உறுதியான நிலைப்பாட்டுடன் இருந்தது?!
 மத்திய அரசு நடுநடுங்கும் படி செயல்பட்டாரே?!
 எடப்பாடியின் நான்காண்டு ஆட்சி அத்தகையதா?!
 சீமான் ஏன் அவருடன் சேரவேண்டும்?! 
 மராத்தான் ஓட தகுதியும் வலுவும் பொறுமையும் உள்ள ஒருவன் ஏன் ஸ்லோசைக்கிள் ஓட்டுபவனுடன் இணைய வேண்டும்?!
 உங்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி பிடிக்கும் என்றால் ஆதரியுங்கள் ஆனால் அதுதான் தமிழ்தேசியம் என்றும் அதுதான் நடைமுறைச் சாத்தியம் என்றும் நாம் தமிழர் தம்பிகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம்!
 டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், நீட் 7.5% இடவொதுக்கீடு, தமிழ்நாடு நாள் அறிவிப்பு என எடப்பாடியாரின் தமிழ்தேசிய நடவடிக்கைகள் என்று நீங்கள் தரும் பட்டியலை விட கொஞ்சம் பெரிய பட்டியல் திமுக விடமும் உள்ளது!
 முதன்மைக் கொள்கை என்ன?!
தமிழினத்தின் தலையாய பிரச்சனைகளான காவிரி நதிநீர் மற்றும் முல்லைப் பெரியாறு நீர் பங்கீடு, மீனவர் தாக்குதல், கல்வி மத்திய அரசு பட்டியலில் இருப்பது அதனால் நீட் ,வரிக்கொள்ளை, சாராய விற்பனை, மலைகள் அழிப்பு என ஒவ்வொரு தமிழனின் மூச்சையும் ரத்தத்தையும் பாதிக்கும் பிரச்சனைகளுக்கு அதிமுக முன்வைக்கும் தீர்வு என்ன?
 மாநிலம் அதிகாரம் தாண்டிய நடவடிக்கை என்ன?! 
 'திமுக வை விட பரவாயில்லை' என்பதைத் தவிர அதிமுக வின் தகுதி என்ன?!
 அப்படியே பார்த்தாலும் திமுக, அதிமுக வை விட நாதக பரவாயில்லை என்று எங்கள் பக்கம்தானே வரவேண்டும்! 
 நீங்கள் ஏற்காவிட்டாலும் எங்கள் தகுதி தமிழ்நாட்டை ஆள்வதற்கும் மேலானது! இந்திய இனங்களுக்கே முன்மாதிரி கட்சி நாங்கள்!
 எங்கள் இலக்கு மிகப் பெரியது!
'வெற்றி அல்லது வீர மரணம்' என்று கூட இல்லை 'வீர மரணம் அல்லது வெற்றி' என்கிற நிலைப்பாடு தான் தம்பிகளின் நிலைப்பாடு!
 சீமான் இதிலிருந்து பின்வாங்கினாலும் தம்பிகள் பின்வாங்க விடமாட்டார்கள்! 
 அத்தனை உறுதியும் பொறுமையும் இல்லாதவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி எதிரிக் கட்சிகளிடமே தஞ்சம் புகுந்துவிட்டனர்.
 இதில் அதிமுக விடம் தஞ்சமடைந்தவர்கள் மட்டும் புனிதமாகி விடுவார்களா?! 
 திராவிடம் இரட்டைத் தலை பாம்பு ! திமுக அதிமுக இரண்டிற்கும் தலைகள் வேறு வேறாக தெரியலாம் ஆனால் உடல் ஒன்றுதான்!
 இங்கே இருப்பவன் அங்கே போவான்! 
அங்கே இருப்பவன் இங்கே வருவான்! 
அங்கிருந்து பணம் இங்கு வரும்!
 இங்கிருந்து ஒப்பந்தங்கள் அங்கு போகும்! 
 இவன் துப்பாக்கிச்சூடு நடத்துவான் அவன் தண்டனை வழங்காமல் பதவியுயர்வு வழங்குவான்! 
 இவன் நீட் கொண்டுவர கையெழுத்து போடுவான்!  அவன் அதை நடைமுறைப் படுத்துவான்! 
 இவன் சாராயம் தயாரிப்பான் அவன் அதை விற்பான்! 
 தமிழகத்தின் அத்தனை பிரச்சனைகளிலும் இருவரும் பங்காளிகள்! 
 இவர்களிடமா நாங்கள் மண்டியிட வேண்டும்?! 

 ஆதித்தனார் முதல் தவாக வேல்முருகன் வரை செய்து தோற்ற ஒரு அரசியல் நகர்வையே சீமானையும் செய்யச் சொன்னால் எப்படி செய்வார்?!
 திருந்த வேண்டியது மக்கள் தான்!
நாம் தமிழர் ஆட்சியில் அமராத ஒவ்வொரு நாளும் தமிழினத்துக்கு இழப்புதான்! 

 ஒன்று சீமானின் நல்லாட்சி அல்லது பீகார் போலக் கூட இல்லை சோமாலியா போல ஆகும் தமிழ்நாடு!
 
 இனத்தின் கடைசி வாய்ப்பு சீமான்! 
மங்குனி மக்களே! சீக்கிரமாகத் திருந்தித் தொலையுங்கள்! 
 ஒரு முதலாளி, பரம்பரைத் திருடன் என்று தெரிந்த ஒருவனை வேலைக்கு வைப்பாரா அல்லது நல்லவனா கெட்டவனா என்று தெரியாத ஒரு புது ஆளை வேலைக்கு வைப்பாரா?! 
 அப்படி திமுக அதிமுக ஊழல் கட்சிகள் என்று தெரிந்த பின்னும் அவர்களுக்கே வாக்களிக்காமல் சீமான் திருடனா இல்லையா என்று வாய்ப்பு வழங்கி முடிவு செய்யலாமே?! 
 பிற இனங்கள் நல்லாட்சியே கொடுத்தாலும் தொடர்ந்து ஒருவனை அதிகாரத்தில் நீடிக்கவிடுவதில்லை இதைவிட நல்லவன் ஒருவன் இருப்பானோ என்று புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவர்.
 காட்டாட்சி வழங்கி அதிமுக கேடுகெட்ட ஆட்சி வழங்கிய திமுக இவர்களையே மாறி மாறி தேர்ந்தெடுப்பது ஏன்?!
 தமிழர்கள் என்ன இவர்களுக்கு அடிமை சாசனம் கையெழுத்திட்டு வழங்கியுள்ளோமா?!

 இந்த தேர்தலில் தோல்வி என்றால் சீமான் தாங்கிக்கொள்வாரா தெரியாது ஆனால் அடுத்த தேர்தலிலும் தோல்வி என்றால் சீமானால் சத்தியமாகத் தாங்க முடியாது! 

 ஒரு தலைவன் உயிரோடு இருக்கும்போது ஏறெடுத்து கூட பார்க்காமல் அவன் செத்த பிறகு சாமியாக்கி கும்பிடுவது தான் நமக்கு வழக்கம்!
 இந்த முறையும் அதுதான் உங்கள் முடிவா?! 

 சீமான் ஸ்டைலில் சொல்கிறேன்!
மக்களே! காதல் வந்தால் சொல்லி அனுப்புங்கள்!
உயிரோடு இருந்தால் சீமான் வருவான்! 
 
 
 
 

Saturday, 1 February 2025

ஒரு நொடி சிந்திப்பீர் ஈரோடு மக்களே!

 ஒரு நொடி சிந்திப்பீர் ஈரோடு மக்களே!

 நீங்கள் ஒரு நொடி சிந்திப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் பெரும்பான்மையான துன்பங்கள் தீரும் என்பதை அறிவீர்களா?!
 உங்கள் வாழ்வில் பெரும்பாலான துன்பங்கள் தவறான வேட்பாளருக்கு வாக்களித்ததினால் மட்டுமே வந்தடைந்தன என்பது தெரியுமா?
  நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 கடந்த பல ஆண்டுகளாக மக்களை ஆண்டு வரும் கட்சிகள் மாறி மாறி கொள்ளையடித்ததை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்பதை குழந்தை கூட அறியும்!
 ஜனநாயக மணிமகுடம் ஆள்பவர் தலையிலிருந்து தேர்தல் காலத்தில் சில நாட்கள் மட்டும் வாக்காளர் தலைக்கு மாறிவிடுகிறது.
 இப்போது கிரீடம் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் தலையில் அமர்ந்துள்ளது.
 நீங்கள் வாக்களித்த மறுநொடி அதுவும் அதன் சக்தியும் கைமாறிவிடும்.
 பிறகு தலைக்கு வர சில ஆண்டுகள் ஆகும். அதுவரை ஆள்பவன் செருப்பு உங்கள் தலையை அழுத்தியபடி இருக்கும்.

எனவே வாக்களிக்கும் முன் ஒரு நொடி சிந்தியுங்கள்!
உங்களுடைய மற்றும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அதாவது கல்வி, வருமானம், வாழ்க்கைத் தரம், பிற வசதிகள் என அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான முடிவு இது!

 அதுவரை நீங்கள் ஜனநாயக குடிமகனாக பல தவறுகள் செய்திருக்கலாம்! லஞ்சம் கொடுத்திருக்கலாம், வரி ஏய்ப்பு செய்திருக்கலாம், சாலை விதிகளை மீறியிருக்கலாம், ஓட்டுக்குப் பணம் வாங்கியிருக்கலாம்! 
பரவாயில்லை! போனது போகட்டும்!

 வேட்பாளர் பட்டியலைப் பாருங்கள்! அதில் நல்லவர் அல்லது குறைந்தபட்ச கெட்டவரைத் தேர்ந்தெடுங்கள்! அவர் கண்டிப்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக வேட்பாளராக நிச்சயம் இருக்கமாட்டார்! ஒன்று சுயேட்சையாக இருப்பார்! அல்லது நாதக போன்ற சிறிய கட்சி வேட்பாளராக இருப்பார்.
 
 உங்களுக்கு முதல்வன் அர்ஜுன் போன்றோ, சர்கார் விஜய் போன்றோ, ஆய்த எழுத்து சூர்யா மாதிரியோ எவரும் வரப்போவதில்லை. இருப்பதில் சிறந்தவரைத் தேர்ந்தெடுங்கள். அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பரவாயில்லை.
 100% திருடன் என்று தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை விட இவன் திருடனா இல்லையா என்று சந்தேகம் இருக்கும் ஒருவருக்கு வாக்களியுங்கள்.
 ஓட்டு வீணாகும் என்று நினைக்க வேண்டாம். இந்த ஒரு தவறான சிந்தனைதான் நாடே நாசமாக காரணம். எல்லாரும் இப்படி நினைத்துதான் நாட்டை வீணாக்கி வைத்துள்ளாம். நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு ஓட்டு வீணாவது பெரிய இழப்பில்லை.

 ஒரு உண்மையைக் கூறவா? மக்கள் மாற்று சக்திகளுக்கு வாக்களித்தே வந்துள்ளனர்! ஆனால் அது குறைத்து காட்டப்பட்டு வருகிறது. இந்த நாட்டில் எது நேர்மையாக நடக்கிறது? தேர்தல் முடிவுகள் மட்டும் நேர்மையாக வெளிவருமா? இருந்தாலும் பெரும்பாலான வாக்குகள் கட்சிமாறினால் அதை மறைக்க முடியாது. 

 நான் நா.த.க அடிப்படை உறுப்பினர். நாம் தமிழர் வந்துவிட்டால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறமாட்டேன். அவர்கள் வந்தால் இந்த அளவுக்கு மோசமாக இருக்கமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. நீங்களும் அப்படியே நம்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நான் சீமான் அவர்களுக்கு வாக்களிக்கத் தொடங்கியதில் இருந்து நாட்டில் நடக்கும் அநியாயங்களைக் கண்டால்  'இதற்கு நான் காரணமில்லை' என்கிற ஆறுதல் கிடைத்துவிட்டது. நீங்கள் வாக்களித்தால் குறைந்தபட்சம் குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்கலாம் என்று கருதுகிறேன். வேட்பாளர் நல்லவர் ஆனால் கட்சித் தலைமை சரியில்லை என்றாலும் அவரைத் தேர்ந்தெடுக்க  வேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதனால் நாம் தமிழருக்கு ஒரு வாய்ப்பளித்துப் பார்ப்பது சரியாக இருக்கும் என்பது என் பரிந்துரை. இதை யோசித்துப் பார்ப்பது உங்கள் விருப்பம்.

 வாக்களிக்கும் முன் நீங்கள் மதம், சாதி, இனம், கட்சி, பாலினம், பொருளாதாரம் என எந்த பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அந்த நொடி உங்கள் தலையில் ஜனநாயக கிரீடம் இருக்கும் போதே உடனடியாக உங்கள் மனசாட்சியை செயல்பட விடுங்கள்! உங்கள் முடிவு பல லட்சம் பேர் வருங்காலத்தை ஏன் பல ஆயிரம் உயிர்களை பாதிக்கும் முடிவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

 கொள்கை, கோட்பாடு என்று கூட சிந்திக்க வேண்டாம். இதுவரை பிரதான கட்சிகள் கடந்து வந்த பாதையை நினைத்துப் பாருங்கள். வேட்பாளர் பட்டியலில் உள்ளவரில் கெட்டவர் என்று நன்கு தெரிந்தவரை விட்டுவிட்டு பிறருக்கு வாக்களியுங்கள்.
 நோட்டாவை அழுத்துவதால் பலன் எதுவும் இல்லை.  எல்லா ஓட்டும் நோட்டாவுக்கு விழுந்து ஒரே ஒரு ஓட்டு ஒருவருக்கு விழுந்தாலும் அதைப் பெற்றவர் வெற்றி பெறுவார். அந்த முட்டாள்த் தனத்துக்கு வாக்களிக்காதீர்கள். அதற்கு பேசாமல் வீட்டிலியே இருக்கலாம்.
 
 வாக்காளர் என்றில்லை வேட்பாளர்களுக்கும் இதைக் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கே வாக்களிக்கு முன்  உங்கள் மனசாட்சியை ஒருமுறை கேளுங்கள். உங்களை விட சிறந்த வேட்பாளர் ஒருவர் இருந்தால் அவருக்கு ஓட்டு போடுங்கள்.  

 ஒரு வேட்பாளர் ஏற்கனவே  பதவியில் இருந்தவர் என்றால் செய்த நன்மைகள் தீமைகளைப் பட்டியலிட்டு நன்மைகள் அதிகம் இருப்பவரைத் தேர்ந்தெடுங்கள். தீமைகள் அதிகம் என்றால் அவர் எவ்வளவு நெருக்கமானவர் என்றாலும் விட்டுவிடுங்கள். 

 கெட்டவர்கள் செய்த சில நன்மைகளை நினைத்துப் பார்ப்பது அறிவாளித்தனம் இல்லை. சிலரது ஒப்பீடு மிகவும் தவறு. பீகாரை விட நாம் முன்னேறியிருக்கிறோம் என்றால் சோமாலியாவை விட பீகார் முன்னேறி இருக்கிறது!
 இது எப்படி இருக்கிறது என்றால் "நான் நினைத்தால் உன்னை அதிகம் சீரழித்திருப்பேன். குறைவாக சீரழித்தமைக்காக எனக்கு மறுபடி வாய்ப்பு கொடு" என்று மிரட்டி கேட்பது போல இருக்கிறது.

 வெள்ளைக்காரன் காலத்திலேயே நாம் அதிக வரி கட்டி வந்த முன்னேறிய மாநிலம். நாம் முன்னேறியிருக்க  பொதுமக்களாகிய நாமே காரணம்.
 காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என இதுவரை ஆண்ட அனைவரும் நாம் உழைத்து முன்னேறுவதைத் தடுத்து கொள்ளையடித்தே வந்துள்ளனர்.
 எல்லா கட்சிகாரர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து விட்டனர். பத்து தலைமுறைக்கு சேர்த்துவிட்டு பதினொராவது தலைமுறைக்கு தற்போது வியாபாரத்தைத் தொடங்கிவிட்டனர். 
 அவர்களிடமிருந்து ஒரு பைசாவை கூட நம்மால் திருப்பி வாங்க முடியாது என்பதே உண்மை.
 எனவே அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை விட்டுவிட்டு மூன்றாவது நபருக்கு வாய்ப்பு கொடுக்கும் தருணத்தில் இருக்கிறோம்.

 இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஒருமுறை வாய்ப்பு கேட்டு அமர்ந்தவர்கள்தான். ஒருமுறை பதவியில் அமர்ந்தவர்களை நம்மால் அசைக்க முடியாது. ஒருமுறை தேர்ந்தெடுத்தவர் சரியில்லை என்றால் வேறொருவரை மாற்றுவதே புத்திசாலித்தனம். அப்படிப் பார்த்தால் திமுக, அதிமுக கட்சிகளை நாம் என்றைக்கோ மாற்றியிருக்க வேண்டும். அந்த வகையில் நாம் அடிமுட்டாள்களாக இருந்துள்ளோம். இனியாவது அறிவாளிகளாக புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்! 

 ஒருவருக்கு வாக்களிப்பதால் உங்களுக்கு தனிப்பட்ட நன்மை கிடைக்கலாம். ஆனால் வாக்களிக்கும் அந்த நொடி சுயநலத்தை விடுத்து மனசாட்சியை தட்டிக் கேளுங்கள்!  
 மேலே சொன்ன எல்லா கணக்குகளையும் மனசாட்சி ஒரு நொடியில் போட்டு விடையைக் கூறிவிடும்.

 ஒரு நொடி உங்கள் மனசாட்சிக்கு அதிகாரம் கொடுங்கள். அது யாரைச் சொல்கிறதோ கண்ணை மூடிக்கொண்டு அழுத்திவிடுங்கள்!  இதுவே புரட்சி! ஒவ்வொருவரும் தத்தமது கடமையை சரியாக செய்துவிட்டால் பெரிய புரட்சியெல்லாம் தேவைப்படாது என்பது தலைவர் பிரபாகரன் கூறியது! தவறான நபர்களைப் பதவியில் அமர்த்தி விட்டு பிறகு அதிகாரத்திற்கு எதிராக திரைப்படங்களில் கதாநாயகர்கள் செய்யும் புரட்சியை ரசிப்பது வேடிக்கையானது!  மாற்றி சிந்திப்பதே புரட்சி! இந்த தைரியமான முடிவு ஆயுதப் புரட்சிக்கு சற்றும் குறைந்தது அல்ல! ஜனநாயக மாற்றம் வராதபோதுதானே ஆயுதப் புரட்சி அவசியம்! அதை முன்னரே அதாவது இப்போதே செய்துவிட்டால்...

முடிவை மாற்றுங்கள்!
மனசாட்சியைக் கேட்போம்!
மாற்றிப் பார்ப்போம்! 

19.02.2023 
 

Thursday, 6 June 2024

அண்ணாமலை vs சீமான் சவால்கள்

அண்ணாமலை vs சீமான்  சவால்கள்

2016 இல் பாமக தனித்து நின்று 5.3% வாக்குகளைப் பெற்றது.
2021 இல் அமமுக தனித்து நின்று 2.3% வாக்குகளைப் பெற்றது.
இந்த முறை இவை பாஜக வுடன் சேர்ந்து 11.1% என்றால் பாஜக 3.5% என்று பொருள்.
பாஜக தனித்து நின்றிருந்தாலும் 4% தாண்டியிருக்காது.
தனித்து நின்று தன்னை விட ஒரு வாக்கு அதிகமாக வாங்கிக்காட்ட சீமான் சவால் விட்டார்.
சீமான் 8% வாங்கியுள்ளார்!
 இந்த சவாலில் சீமான் வெற்றி பெற்றார் என்று சொல்லலாம்.

 சீமானின் சவாலுக்கு அண்ணாமலை பதிலளிக்கும் பேட்டியில் (கூட்டணிக்கு ஒதுக்கியது போக) பாஜக போட்டியிடும் 23 இடங்களில் தாங்கள் வாங்குவது போல 50% வாக்குகளாவது நாதக வாங்கிக்காட்டுமாறு சவால் விட்டார்.

 இதில் சீமான் வெற்றி பெற்றாரா என்று பார்ப்போம்

திருவள்ளூர் 
நாதக- 8.50  பாஜக- 15.86  (வெற்றி)

வடசென்னை 
நாதக-  10.63 பாஜக- 12.52  (வெற்றி)

தென்சென்னை 
நாதக-   7.64 பாஜக- 26.44 (தோல்வி)

மத்திய சென்னை 
நாதக- 6.30   பாஜக- 23.16  (தோல்வி)

வேலூர் 
நாதக- 4.72  பாஜக- 31.25 (தோல்வி)

கிருஷ்ணகிரி 
நாதக- 9.18 பாஜக- 18.36 (வெற்றி)

திருவண்ணாமலை 
நாதக-  7.32  பாஜக- 13.67 (வெற்றி)

நாமக்கல் 
நாதக-  8.34 பாஜக-  9.13 (வெற்றி)

திருப்பூர் 
நாதக-  8.38 பாஜக- 16.22 (வெற்றி)

நீலகிரி 
நாதக- 5.77  பாஜக- 22.83  (தோல்வி)

கோயம்புத்தூர் 
நாதக-  6.02 பாஜக- 32.79 (தோல்வி)

பொள்ளாச்சி 
நாதக- 5.17  பாஜக- 19.84  (தோல்வி)

கரூர் 
நாதக- 7.73  பாஜக- 9.05  (வெற்றி)

பெரம்பலூர் 
நாதக- 10.02  பாஜக-  14.33 (வெற்றி)

சிதம்பரம் 
நாதக-  5.62 பாஜக- 14.44 (தோல்வி)

நாகப்பட்டினம் 
நாதக- 13.49  பாஜக- 10.5 (வெற்றி)

தஞ்சாவூர் 
நாதக- 11.69  பாஜக- 16.59 (வெற்றி)

சிவகங்கை 
நாதக- 15.51  பாஜக- 18.59  (வெற்றி)

மதுரை 
நாதக- 9.41  பாஜக- 22.38 (தோல்வி)

விருதுநகர் 
நாதக- 7.25 பாஜக- 15.66 (தோல்வி)

தென்காசி 
நாதக- 12.54 பாஜக-  20.10 (வெற்றி)

திருநெல்வேலி 
நாதக- 8.21 பாஜக- 31.54 (தோல்வி)

கன்னியாகுமரி 
நாதக- 5.12  பாஜக-  35.6 (தோல்வி)
 
மொத்தம் 12 வெற்றிகள் 11 தோல்விகள்.
இதன்படி மயிரிழையில் சீமான் வென்றார்.
மொத்தமாக 23 தொகுதிகளையும் பார்த்தால் சராசரியாக நாதக - 8.45  பாஜக 19.60.
இதன்படி அண்ணாமலை தனது சவாலில் மாபெரும் வெற்றி பெற்றார்.

 முதலில் கூறியது போல பாஜக பெற்ற 11.1% வாங்குகளில் பாஜக வின் பங்களிப்பு 4% தான் எனவே அண்ணாமலை அதில் 50% உரிமை கோருவது சரி இல்லை.
 ஆனாலும் 23 இல் 22 தொகுதிகளில் பாஜக நாதக வை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
 
 எனவே இவ்விருவரையும் ஒப்பிடுகையில் சீமான் ஒரு படி முன்னேறி இருக்கிறார்.
 
 ஆனாலும் நாதக வை விட இரு மடங்குக்கும் மேல் வாக்குகள் பெற்றிருப்பது கூட்டணிகளால் மட்டும் சாத்தியம் அல்ல.
தென்தமிழகத்தை உற்று நோக்கினால் இது புரியும்.
இது பாஜக வின் வளர்ச்சியைக் காட்டுகிறது.

 பாஜக வையும் அண்ணாமலையையும் குறைத்து எடை போடக்கூடாது என்பதை நாதக வினர் புரிந்துகொள்ள வேண்டும்.

Sunday, 19 February 2023

ஒரு நொடி சிந்திப்பீர் ஈரோடு மக்களே

 ஒரு நொடி சிந்திப்பீர் ஈரோடு மக்களே!

 நீங்கள் ஒரு நொடி சிந்திப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் பெரும்பான்மையான துன்பங்கள் தீரும் என்பதை அறிவீர்களா?!
 உங்கள் வாழ்வில் பெரும்பாலான துன்பங்கள் தவறான வேட்பாளருக்கு வாக்களித்ததினால் மட்டுமே வந்தடைந்தன என்பது தெரியுமா?
  நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 கடந்த பல ஆண்டுகளாக மக்களை ஆண்டு வரும் கட்சிகள் மாறி மாறி கொள்ளையடித்ததை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என்பதை குழந்தை கூட அறியும்!
 ஜனநாயக மணிமகுடம் ஆள்பவர் தலையிலிருந்து தேர்தல் காலத்தில் சில நாட்கள் மட்டும் வாக்காளர் தலைக்கு மாறிவிடுகிறது.
 இப்போது கிரீடம் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் தலையில் அமர்ந்துள்ளது.
 நீங்கள் வாக்களித்த மறுநொடி அதுவும் அதன் சக்தியும் கைமாறிவிடும்.
 பிறகு தலைக்கு வர சில ஆண்டுகள் ஆகும். அதுவரை ஆள்பவன் செருப்பு உங்கள் தலையை அழுத்தியபடி இருக்கும்.

எனவே வாக்களிக்கும் முன் ஒரு நொடி சிந்தியுங்கள்!
உங்களுடைய மற்றும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை அதாவது கல்வி, வருமானம், வாழ்க்கைத் தரம், பிற வசதிகள் என அனைத்தையும் தீர்மானிக்கும் முக்கியமான முடிவு இது!

 அதுவரை நீங்கள் ஜனநாயக குடிமகனாக பல தவறுகள் செய்திருக்கலாம்! லஞ்சம் கொடுத்திருக்கலாம், வரி ஏய்ப்பு செய்திருக்கலாம், சாலை விதிகளை மீறியிருக்கலாம், ஓட்டுக்குப் பணம் வாங்கியிருக்கலாம்! 
பரவாயில்லை! போனது போகட்டும்!

 வேட்பாளர் பட்டியலைப் பாருங்கள்! அதில் நல்லவர் அல்லது குறைந்தபட்ச கெட்டவரைத் தேர்ந்தெடுங்கள்! அவர் கண்டிப்பாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக வேட்பாளராக நிச்சயம் இருக்கமாட்டார்! ஒன்று சுயேட்சையாக இருப்பார்! அல்லது நாதக போன்ற சிறிய கட்சி வேட்பாளராக இருப்பார்.
 
 உங்களுக்கு முதல்வன் அர்ஜுன் போன்றோ, சர்கார் விஜய் போன்றோ, ஆய்த எழுத்து சூர்யா மாதிரியோ எவரும் வரப்போவதில்லை. இருப்பதில் சிறந்தவரைத் தேர்ந்தெடுங்கள். அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் பரவாயில்லை.
 100% திருடன் என்று தெரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதை விட இவன் திருடனா இல்லையா என்று சந்தேகம் இருக்கும் ஒருவருக்கு வாக்களியுங்கள்.
 ஓட்டு வீணாகும் என்று நினைக்க வேண்டாம். இந்த ஒரு தவறான சிந்தனைதான் நாடே நாசமாக காரணம். எல்லாரும் இப்படி நினைத்துதான் நாட்டை வீணாக்கி வைத்துள்ளாம். நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஒரு ஓட்டு வீணாவது பெரிய இழப்பில்லை.

 ஒரு உண்மையைக் கூறவா? மக்கள் மாற்று சக்திகளுக்கு வாக்களித்தே வந்துள்ளனர்! ஆனால் அது குறைத்து காட்டப்பட்டு வருகிறது. இந்த நாட்டில் எது நேர்மையாக நடக்கிறது? தேர்தல் முடிவுகள் மட்டும் நேர்மையாக வெளிவருமா? இருந்தாலும் பெரும்பாலான வாக்குகள் கட்சிமாறினால் அதை மறைக்க முடியாது. 

 நான் நா.த.க அடிப்படை உறுப்பினர். நாம் தமிழர் வந்துவிட்டால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று கூறமாட்டேன். அவர்கள் வந்தால் இந்த அளவுக்கு மோசமாக இருக்கமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை. நீங்களும் அப்படியே நம்ப வேண்டும் என்கிற அவசியம் இல்லை. நான் சீமான் அவர்களுக்கு வாக்களிக்கத் தொடங்கியதில் இருந்து நாட்டில் நடக்கும் அநியாயங்களைக் கண்டால்  'இதற்கு நான் காரணமில்லை' என்கிற ஆறுதல் கிடைத்துவிட்டது. நீங்கள் வாக்களித்தால் குறைந்தபட்சம் குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்கலாம் என்று கருதுகிறேன். வேட்பாளர் நல்லவர் ஆனால் கட்சித் தலைமை சரியில்லை என்றாலும் அவரைத் தேர்ந்தெடுக்க  வேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து. அதனால் நாம் தமிழருக்கு ஒரு வாய்ப்பளித்துப் பார்ப்பது சரியாக இருக்கும் என்பது என் பரிந்துரை. இதை யோசித்துப் பார்ப்பது உங்கள் விருப்பம்.

 வாக்களிக்கும் முன் நீங்கள் மதம், சாதி, இனம், கட்சி, பாலினம், பொருளாதாரம் என எந்த பின்புலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி அந்த நொடி உங்கள் தலையில் ஜனநாயக கிரீடம் இருக்கும் போதே உடனடியாக உங்கள் மனசாட்சியை செயல்பட விடுங்கள்! உங்கள் முடிவு பல லட்சம் பேர் வருங்காலத்தை ஏன் பல ஆயிரம் உயிர்களை பாதிக்கும் முடிவு என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

 கொள்கை, கோட்பாடு என்று கூட சிந்திக்க வேண்டாம். இதுவரை பிரதான கட்சிகள் கடந்து வந்த பாதையை நினைத்துப் பாருங்கள். வேட்பாளர் பட்டியலில் உள்ளவரில் கெட்டவர் என்று நன்கு தெரிந்தவரை விட்டுவிட்டு பிறருக்கு வாக்களியுங்கள்.
 நோட்டாவை அழுத்துவதால் பலன் எதுவும் இல்லை.  எல்லா ஓட்டும் நோட்டாவுக்கு விழுந்து ஒரே ஒரு ஓட்டு ஒருவருக்கு விழுந்தாலும் அதைப் பெற்றவர் வெற்றி பெறுவார். அந்த முட்டாள்த் தனத்துக்கு வாக்களிக்காதீர்கள். அதற்கு பேசாமல் வீட்டிலியே இருக்கலாம்.
 
 வாக்காளர் என்றில்லை வேட்பாளர்களுக்கும் இதைக் கூறுகிறேன். நீங்கள் உங்களுக்கே வாக்களிக்கு முன்  உங்கள் மனசாட்சியை ஒருமுறை கேளுங்கள். உங்களை விட சிறந்த வேட்பாளர் ஒருவர் இருந்தால் அவருக்கு ஓட்டு போடுங்கள்.  

 ஒரு வேட்பாளர் ஏற்கனவே  பதவியில் இருந்தவர் என்றால் செய்த நன்மைகள் தீமைகளைப் பட்டியலிட்டு நன்மைகள் அதிகம் இருப்பவரைத் தேர்ந்தெடுங்கள். தீமைகள் அதிகம் என்றால் அவர் எவ்வளவு நெருக்கமானவர் என்றாலும் விட்டுவிடுங்கள். 

 கெட்டவர்கள் செய்த சில நன்மைகளை நினைத்துப் பார்ப்பது அறிவாளித்தனம் இல்லை. சிலரது ஒப்பீடு மிகவும் தவறு. பீகாரை விட நாம் முன்னேறியிருக்கிறோம் என்றால் சோமாலியாவை விட பீகார் முன்னேறி இருக்கிறது!
 இது எப்படி இருக்கிறது என்றால் "நான் நினைத்தால் உன்னை அதிகம் சீரழித்திருப்பேன். குறைவாக சீரழித்தமைக்காக எனக்கு மறுபடி வாய்ப்பு கொடு" என்று மிரட்டி கேட்பது போல இருக்கிறது.

 வெள்ளைக்காரன் காலத்திலேயே நாம் அதிக வரி கட்டி வந்த முன்னேறிய மாநிலம். நாம் முன்னேறியிருக்க  பொதுமக்களாகிய நாமே காரணம்.
 காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என இதுவரை ஆண்ட அனைவரும் நாம் உழைத்து முன்னேறுவதைத் தடுத்து கொள்ளையடித்தே வந்துள்ளனர்.
 எல்லா கட்சிகாரர்களும் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்து விட்டனர். பத்து தலைமுறைக்கு சேர்த்துவிட்டு பதினொராவது தலைமுறைக்கு தற்போது வியாபாரத்தைத் தொடங்கிவிட்டனர். 
 அவர்களிடமிருந்து ஒரு பைசாவை கூட நம்மால் திருப்பி வாங்க முடியாது என்பதே உண்மை.
 எனவே அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை விட்டுவிட்டு மூன்றாவது நபருக்கு வாய்ப்பு கொடுக்கும் தருணத்தில் இருக்கிறோம்.

 இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஒருமுறை வாய்ப்பு கேட்டு அமர்ந்தவர்கள்தான். ஒருமுறை பதவியில் அமர்ந்தவர்களை நம்மால் அசைக்க முடியாது. ஒருமுறை தேர்ந்தெடுத்தவர் சரியில்லை என்றால் வேறொருவரை மாற்றுவதே புத்திசாலித்தனம். அப்படிப் பார்த்தால் திமுக, அதிமுக கட்சிகளை நாம் என்றைக்கோ மாற்றியிருக்க வேண்டும். அந்த வகையில் நாம் அடிமுட்டாள்களாக இருந்துள்ளோம். இனியாவது அறிவாளிகளாக புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போம்! 

 ஒருவருக்கு வாக்களிப்பதால் உங்களுக்கு தனிப்பட்ட நன்மை கிடைக்கலாம். ஆனால் வாக்களிக்கும் அந்த நொடி சுயநலத்தை விடுத்து மனசாட்சியை தட்டிக் கேளுங்கள்!  
 மேலே சொன்ன எல்லா கணக்குகளையும் மனசாட்சி ஒரு நொடியில் போட்டு விடையைக் கூறிவிடும்.

 ஒரு நொடி உங்கள் மனசாட்சிக்கு அதிகாரம் கொடுங்கள். அது யாரைச் சொல்கிறதோ கண்ணை மூடிக்கொண்டு அழுத்திவிடுங்கள்!  இதுவே புரட்சி! ஒவ்வொருவரும் தத்தமது கடமையை சரியாக செய்துவிட்டால் பெரிய புரட்சியெல்லாம் தேவைப்படாது என்பது தலைவர் பிரபாகரன் கூறியது! தவறான நபர்களைப் பதவியில் அமர்த்தி விட்டு பிறகு அதிகாரத்திற்கு எதிராக திரைப்படங்களில் கதாநாயகர்கள் செய்யும் புரட்சியை ரசிப்பது வேடிக்கையானது!  மாற்றி சிந்திப்பதே புரட்சி! இந்த தைரியமான முடிவு ஆயுதப் புரட்சிக்கு சற்றும் குறைந்தது அல்ல! ஜனநாயக மாற்றம் வராதபோதுதானே ஆயுதப் புரட்சி அவசியம்! அதை முன்னரே அதாவது இப்போதே செய்துவிட்டால்...

முடிவை மாற்றுங்கள்!
மனசாட்சியைக் கேட்போம்!
மாற்றிப் பார்ப்போம்! 
 

Sunday, 1 December 2019

15 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் பேட்டி கண்ட சீமான்

15 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் பேட்டி கண்ட சீமான்

2004 லேயே சீமான் அண்ணன் புலிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

புலிகளுக்காக அவர் அளித்த பேட்டியை இங்கே இணைத்துள்ளேன்.

ஆம்.

தமிழினத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு
புலிகள் நடத்திவந்த "நிதர்சனம்" தொலைக்காட்சி 2 மணிநேரம் நீளமுள்ள ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டது.
(அதன் தலைப்பு "தலைநிமிர்வு" என்பது.
இணையத்தில் அது Prabhakaran undying symbol of tamil resistance என்ற பெயரில் இருந்தது.
தற்போது நீக்கப்பட்டுவிட்டது.
ஆனால் என்னிடம் உள்ளது.)

இந்த ஆவணப் படம் பல அரிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம்
ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றையும்
தலைவரது வாழ்க்கை வரலாற்றையும்
எடுத்துரைக்கிறது.

அப்போது புலிகளுக்கும் இலங்கைக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து போர் ஓய்ந்திருந்த காலம்.

புலிகள் இலங்கை அரசுக்கு சமமான பலத்துடன் உலக நாடுகள் ஏறத்தாழ அங்கீகரித்துவிட்ட ஒரு அரசாங்கத்தை நடத்தி வந்தனர்.

அப்போது வெளியிடப்பட்ட இந்த ஆவணப் படத்தில் தலைவரை வாழ்த்தி 2 சிங்களவர் உட்பட 36 பேர் பேசியிருக்கின்றனர்.
அதில் 13 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
அண்ணன் சீமானும் அதில் பேசியிருக்கிறார்.

இந்த 13 பேரில் தலைவரை ஈழத்திற்கு சென்று நேரடியாகச் சந்தித்தோர் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சீமான் ஆகிய நால்வர் மட்டுமே!

அதில் பேட்டி அளித்தோர் முழுப் பட்டியல் வருமாறு

1. மறவன்புலவு திரு.சச்சிதானந்தம் (தமிழகம்)

2. திருமதி. தாமரைச் செல்வி
எழுத்தாளர்

3. திரு. மருசலீன்
மாவீரர் லெப்.கேணல் விக்டரின் தந்தை

4. ஜனாப். சலீம்
பத்திரிக்கையாளர்

5. திரு. தர்மலிங்கம்
மூத்த பத்திரிக்கையாளர்

6. திரு. காசி ஆனந்தன்
உணர்ச்சிக் கவிஞர்

7. திரு. புகழேந்தி
கவிஞர் (தமிழகம்)

8. திரு.வேணுகோபால்
ஆசிரியர்

9. திரு.வை.கோபாலசாமி
பொதுச் செயலாளர் - ம.தி.மு.க (தமிழகம்)

10. திரு.முல்லைமணி
எழுத்தாளர்

11. திரு.சதாசிவம்
மாவீரர் லெப். அருச்சுனாவின் தந்தை

12. இன்குலாப்
கவிஞர் (தமிழகம்)

13. திரு.சீமான்
திரைப்பட இயக்குனர் (தமிழகம்)

14. வைத்தியர். ஜெயகுலராசா
வைத்திய அதிகாரி

15.திரு.கனகரவி
ஊடகவியலாளர்

16. திருமதி. மனோன்மணி சண்முகதாஸ்
விரிவுரையாளர் - யாழ் பல்கலை

17. திரு. சூரியதீபன்
(தமிழகம்)

18. மோகனதாஸ்
துணைவேந்தர் - யாழ் பல்கலை

19. திருமதி. யோகம்மா

20. திரு. சித்தி.அமரசிங்கம்
எழுத்தாளர்

21. திரு. அறிவுமதி
கவிஞர் (தமிழகம்)

22. ஜனாப். அப்துல் சயான்

23. திரு. டி.சிவராம்
இராணுவ ஆய்வாளர்

24. திரு. சுப. வீரபாண்டியன்
தமிழ் தமிழர் தேசிய இயக்கம் (தமிழகம்)

25. திரு. கலாநிதி விக்கிரபாகு குணரட்ண

26. திரு. தணிகாசலம்
கவிஞர்

27. ஆண்டகை. இராயப்புஜோசப்
ஆயர். மன்னார்

28. பாஷண அபேய குணவர்த்தன
பத்திரிக்கை ஆசிரியர்

29. திரு.தியாகு
தமிழ் தமிழர் இயக்கம் (தமிழகம்)

30. திரு. திலகவதி
எழுத்தாளர்

31. திரு. சந்திரசேகரன்

32.திரு. மனோ கணேசன்

33. திரு. பழ.நெடுமாறன்
தலைவர் - தமிழ் தமிழர் இயக்கம் (தமிழகம்)

34. திரு. ராமதாஸ்
தலைவர். பா.ம.க (தமிழகம்)

35. திரு. திருமாவளவன்
தலைவர் வி.சி. (தமிழகம்)

36. திரு. மணியரசன்
தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி (தமிழகம்)

இதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து 2008 இல் புலிகள் திரைப்படம் எடுத்த போது சீமான் அங்கு சென்றார்.
அப்போது தலைவரையும் சந்தித்தார்.

புலிகளின் முப்படையில் ஒன்றான கடற்படையின் தலைவர் திரு. சூசை அவர்கள் கடைசி குரல்பதிவில் "சீமானை முன்னெடுக்க சொல்லு" என்று கூறியுள்ளார்.

இந்த பதிவு இப்போது ஏனென்றால்
சீமான் பற்றி புலிகளுக்கு எதுவுமே தெரியாது என்றும்
  அவர் ஏதோ கேமரா பிடிக்க போனபோது தற்செயலாக தலைவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது போலவும் பதிவுகள் வருகின்றன.

சீமான் அண்ணனை தர்க்க ரீதியாக எதிர்கொள்ள முடியாமல்
வெறும் நக்கல் நையாண்டி செய்தே வீழ்த்திவிடலாம் என்கிற எண்ணத்தில் சிலர் அலைகின்றனர்.

சீமான் மீது வைக்கப்படும் உருப்படியான விமர்சனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் மற்றபடி எல்லாமே நக்கல் நையாண்டி பதிவுகள்தான்.

அவர்களுக்கு உரைக்கவே இந்த பதிவு.

சீமான் புலிகளின் ஆள்தான்!

https://m.facebook.com/story.php?story_fbid=2024288354341474&id=100002809860739

Friday, 25 May 2018

ஏகே74 உண்மை

ஏகே74
ண்ணன் சீமானை இழிவு படுத்துவதற்காக சவுக்கு சங்கர் போன்றவர்கள் AK 74 துப்பாக்கியே இல்லை என்பது போல் பதிவிட்டு வருகின்றனர்.

AK 74 துப்பாக்கி குறித்த தகவல்களின் சுட்டி இதோ.
https://en.wikipedia.org/wiki/AK-74

மேலும் 2009-ஆம் ஆண்டு புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் பட்டியலில் AK-74 ரக துப்பாக்கிகளும் அடங்கும்
(பார்க்க படம்).

அண்ணன் சீமானை பற்றி வதந்தி பரப்புவதே முழுநேர வேலையாக கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் அதன் உண்மைத்தன்மை ஆராய்ந்து பேச வேண்டும்.

நன்றி: Karthik Ganesan

Saturday, 9 December 2017

நாம்தமிழர் தெலுங்கு பிரச்சாரம்

நாம்தமிழர் தெலுங்கு பிரச்சாரம்

ஆர்.கே.நகரில் நாம்தமிழர் மேடையில் தெலுங்கில் பேசி வாக்குசேகரித்த காணொளி பரவலாகி வருகிறது.

ஒரு தெலுங்கரை தெலுங்கு அடையாளத்தோடு கட்சியில் சேர்த்து
அவரைவிட்டு தெலுங்கில் பேசவைத்து தெலுங்கரிடம் ஓட்டுக் கேட்பது தவறில்லைதான்.

ஆனால் 'நாம் தமிழர்' என்று பெயரை வைத்துக் கொண்டு இவ்வாறு செய்வதற்கான அவசியம் என்ன என்றுதான் புரியவில்லை.

  முதலில் தெலுங்கரைத் தவிர்த்துவிட்டு இங்கே அரசியல் செய்யமுடியாது என்ற நிலை இல்லை என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

தமிழர் பாதிக்கு பாதி வாழ்ந்த எல்லைப் பகுதிகளை அண்டைமாநிலங்கள் பறித்துக்கொண்டுவிட்டன.
இதனாலேயே பிற மாநிலங்களை விட அதிக 'மண்ணின் மைந்தர் பெரும்பான்மை' தமிழகத்திடம் உள்ளது.

(இதையும் விடாது வந்தேறிகள் குடியேற்றம் தொடர்ந்து நடத்தப்பட்டு தமிழகத்தில் தமிழர் செறிவு நீர்த்துப்போக அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்படுகின்றன.
தற்போது 4 தொகுதிகளில்

நா.த.க முதலில் தமிழரை (மட்டும்) முழுமையாக ஓரணியில் திரட்டும் முயற்சியைச் செய்யுங்கள்.
வந்தேறிகள் கடைசியில் தானாக வந்து ஒட்டிக் கொள்வார்கள்.

பிறமொழியாளருக்கு இப்போதே (234 இல்) 15 இடங்களில் நிற்க வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று உங்கள் வியனரசு வெளிப்படையாக கூறியுள்ளார்.
அவர்களெல்லாம் நீங்கள் அவரவர் மொழியில் பேசியதால்தான் உங்கள் கட்சி சார்பில் நிற்க முன்வந்தார்களா?

ஒருபேச்சுக்கு தெலுங்கர் 15% க்கு மேல் என்று வைத்துக்கொண்டாலும் அவர்கள் தமிழ் தெரிந்தவர்கள்தானே?!
தமிழிலேயே வாக்கு கேட்கவேண்டியதுதானே?!

தெலுங்கருக்கு உங்கள் கட்சி என்ன செய்யும்? அவர்களிடம் என்ன நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தமிழிலேயே விளக்குங்கள்.

இலங்கை உட்பட முழு தென்னிந்திய துணைக்கண்டமும் தமிழ் புரியும்.
எல்லாவனும் வெட்டி பந்தாவுக்கு தமிழ் புரியாதமாதிரி நடிக்கத்தான் செய்கிறான்.

நீங்கள் பிற மொழியில் பேசி வாக்கு கேட்பதை தமிழக எல்லைக்கு வெளியே வாழும் தமிழர்களிடம் வேண்டுமானால் செய்யுங்கள்.
ஆனால் தமிழகத்திற்கு உள்ளே தெலுங்கு பேசி உங்கள் கட்சியை வளர்க்கவேண்டிய அவசியம் இல்லை.

"இல்லைங்க!
எங்களுக்கு மொழிவெறி இல்லைனு வெளிய காட்டிக்கணும்!
தமிழர்கள் எங்க மேல வைச்சிருக்க நம்பிக்கை குறைஞ்சாலும் பரவாயில்ல!
தெலுங்கர் மனசுலயும் துண்டுபோட்டு வெப்போம்!" என்றால், நீங்கள் மாநில ஆட்சியைப் பிடிப்பது அதிசயமாக நடந்தாலும் நடக்கும்,
தமிழர் மனதில் இடம்பிடிப்பது நடக்காது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Thursday, 21 September 2017

நாம்தமிழர் மீதான குற்றச்சாட்டுகள்

நாம்தமிழர் மீதான குற்றச்சாட்டுகள்
. . . . . . . . . . . . . . . . .
குற்றச்சாட்டு: நாம்தமிழர் தனித்தமிழ்நாடு பற்றி பேசுவதில்லை.
தமிழரசன், சுப.முத்துக்குமார் படங்களை பயன்படுத்துவதில்லை

பதில்: தனித்தமிழ்நாடு பேசினால் பிரிவினைவாதி என்று முத்திரை குத்தப்பட்டு தேர்தலில் போட்டியிட முடியாதபடி தடை செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு விடுதலை அடைய போராடிய தலைவர்களை அவர்கள் வெளிப்படையாக முன்னிறுத்த முடியாது.
அதனால் அவர்கள்
"இந்தியன் எனும் இனம் கிடையாது.
இந்திய ஒன்றியத்தை தேசிய இனங்கள் மாநில அதிகாரங்களுடன் ஆள வேண்டும்"
என்று மறைமுகமாக தேசியவாதத்தை வலியுறுத்துகிறார்கள்.
காஷ்மீர் போராளிகளுக்கு ஆதரவு, சீக்கியர்களுக்கு ஆதரவு என காய்நகர்த்துகிறார்கள்.
. . . . . . . . . .

கு: ஓட்டுக்கு அரசியல் செய்கிறார்கள்.
முதலமைச்சர் பதவிதான் தமிழ்தேசியம் என்று கூறுகிறார்கள்

ப: நடைமுறையில் தமிழகத்தின் முதலமைச்சர் பதவிதான் உலகத் தமிழர்களுக்கு தலைமையாக உள்ளது.
அதை வேற்றின வந்தேறிகளே ஆக்கிரமித்து வருகின்றனர்.
அதை கைப்பற்றுவது தமிழ்தேசியத்தின் முதல்படி ஆகும்.
ஓட்டுதான் ஒரு சாதரண குடிமகனின் பலம் அதை திரட்ட ஓட்டரசியல்தான் செய்யவேண்டும்.
. . . . . . . . . . .

கு: வேற்றின வேட்பாளர்கள் 15 பேரை நிறுத்தினர்

ப: ஜனநாயகத்தில் தமிழக குடிமக்களில் வேற்றினத்தார் எத்தனை சதவீதம் உள்ளனரோ அதற்கான பிரதிநிதித்துவத்தை கொடுத்துதான் ஆகவேண்டும்.
234ல் 15 என்பது கொஞ்சம் அதிகம் என்றாலும் ஏற்கக்கூடியதுதான்.
. . . . . . . . . . . . . .

கு: எந்த பிரச்சனையையும் கையிலெடுத்து இறுதிவரை போராடுவதில்லை

ப: நாம்தமிழரும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வசதியானவர்களோ பதவி உள்ளவர்களோ கிடையாது.
அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்தேவருகிறார்கள்.
. . . . . . . . .

கு: சீமான் பாதி-தெலுங்கச்சியை திருமணம் செய்துள்ளார்.

ப: சீமானுடைய மாமியார் தெலுங்கர் என்பது உண்மை கிடையாது.
அவர் தமிழ்க்குடியான கம்மாளர் சாதியைச் சேர்ந்தவர்.
அவரது மாமனார் ஒரு மறவர் குலத் தமிழர்.
தவிர எந்த தமிழரும் எந்த இனத்திலும் திருமணம் செய்யலாம்.
அப்படி வேற்றினத்தில் திருமணம் செய்தால் பிறக்கும் வாரிசை மீண்டும் தமிழினத்தில் மணமுடிக்க மட்டுமே தமிழ்தேசியம் வலியுறுத்துகிறது.
தூய்மையான ரத்தம், இனக்கலப்பின்மை போன்றவை நடைமுறையில் 100% சாத்தியமில்லை.
. . . . . . . . . . .

கு: சீமான் தமிழினப் பகைவர் ஈ.வே.ரா வை ஏற்றுக்கொண்டார்

ப: தற்போது அந்த நிலைப்பாட்டை அவர் கைவிட்டுவிட்டார்.
தொடக்கத்தில் திராவிட சிந்தனைகளின் தாக்கம் அவரிடம் இருந்தது.
தற்போது அவர் தெளிவாகிவிட்டார்.
. . . . . . . . . .

கு: சீமான் இனவெறி பிடித்தவர்.
தமிழன் ஆளவேண்டும் என்று ஏன் கூறுகிறார்.

ப: சீமான் கேட்பது ஒரு ஒன்றியத்தின் கீழ் வாழும் தேசிய இனத்திற்கான ஆகக்குறைந்த உரிமை ஆகும்.
இதைக் கூட தரமுடியாது என்பது ஒரு இனத்திற்கு எதிரான ஒடுக்குமுறைப் போக்கே ஆகும்.
சீமான் எந்த இனத்திற்கும் எதிரானவர் கிடையாது.
தன் இனத்திற்கான உரிமையைக் கேட்கிறார் அவ்வளவுதான்.
. . . . . . . . .

கு: சீமான் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்.
ஆனால் ஈழத்திற்காக எதையும் செய்யவில்லை.

ப: சீமான் தமிழக முதலமைச்சராக ஆனாலும் கூட ஈழத்தில் நேரடியாக பெரிதாக எதையும் செய்யமுடியாது.
முதலில் ஈழத்திற்காக அரசியலுக்கு வந்தார்தான்.
ஆனால் தற்போது தமிழகமும் ஈழத்தைப் போலவே அடக்குமுறைகள் சுமத்தப்பட்டு ஒரு இனப்படுகொலையை எதிர்நோக்கியுள்ளதை அறிந்து அவர் தமிழக அரசியலில் முழு கவனத்தையும் செலுத்துகிறார்.
ஈழத்தமிழர்களும் சீமானை நம்பி இல்லை.
எம்.ஜி.ஆர் போல தமிழகத்திற்குள் ஈழத்தமிழருக்கு தேவையான ஆதரவை வழங்க சீமான் தயாராக இருக்கிறார்.
தமிழகத் தமிழருக்கு ஈழத்தின் நிலையை புரியவைத்ததில் சீமானின் பங்கு மறுக்கமுடியாது.
நாம்தமிழர் புலம்பெயர் தமிழகத் தமிழர்களிடம் நல்லதொரு கட்டமைப்பை உருவாக்கி ஈழத்தமிழரையும் சேர்த்துக்கொண்டு இயங்குகிறது.
அதற்குக்கூட விடாமல் அவரது பாஸ்போர்ட்டை முடக்கிவிட்டனர்.
. . . . . . . . . .

கு: சீமான் ஒரு கிறித்தவர் அவர் உண்மையான பெயரான சைமன் என்பதை மறைக்கிறார்.

ப: சீமானின் உண்மையான பெயர்  'செபாஸ்டியன் சீமான்' என்பதே.
அவரது தாய் பெயர் அன்னம்மாள்.
தந்தை பெயர் செந்தமிழன்.
அவரது குடும்பம் கிறித்தவத்திற்கு மாறியபிறகு செபாஸ்டியன் என்ற பெயர் சேர்க்கப்பட்டது.
மற்றபடி சைமன் என்பது அவரது பெயர் கிடையாது.
அவர் தொடக்கத்தில் திராவிடக் கட்சியில் இணைந்து கடவுள் நம்பிக்கையை கைவிட்டார்.
பைபிளை கூட விமர்சித்துள்ளார்.
. . . . . . . .

கு: நாத்திகரான சீமான் முருகனை தூக்கிப்பிடிக்கிறார்

ப: முருகன் உயிருடன் வாழ்ந்த மனிதன்.
தமிழர்களின் தலைவன்.
சீமான் முருகனை வணங்கச்சொல்லவில்லை.
முன்னோராக முப்பாட்டனாக ஏற்கும்படி சொல்கிறார்.
திருமாலையும் அவ்வாறே முன்வைக்கிறார்.
மற்றபடி அவர் இப்போதும் இறைமறுப்பாளர்தான்.
. . . . . . . . .

கே: சீமான் தலைவருடன் புகைப்படம் எடுத்ததைத் தவிர வேறு என்ன சாதித்தார்

ப: சீமான் தொடக்கத்தில் இருந்தே ஈழ ஆதரவாளர்.
புலிகளின் திரைத்துறை திரைப்படங்களை எடுத்தபோது சீமான் அங்கே பல நாட்கள் தங்கி இயக்குநராக பணியாற்றினார்.
தலைவர் பிரபாகரனின் 50வது பிறந்தநாளை ஒட்டி (2004ல்) புலிகள் வெளியிட்ட காணொளியில் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சுப.வீ போன்றோருடன் சீமானின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது.
. . . . . . . . . .

கே: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் நடிகருக்கும் சீமானுக்கும் என்ன பெரிய வேறுபாடு

ப: 1996 முதல் இயக்குநராக பல படங்களை இயக்கியிருந்தாலும்
2009 இராமேஸ்வரத்தில் தன் இனம் படுகொலை செய்யப்படுவதை பொறுக்கமுடியாமல் சீமான் பேசிய உணர்ச்சிமயமான பேச்சு சமூக ஊடகங்களில் பரவும்வரை சீமான் எப்படி இருப்பார் என்பதுகூட பலருக்குத் தெரியாது.
அவரது அடையாளம் திரையின் மூலம் மக்கள் மனதில் பதிந்தது கிடையாது.
சினிமா மூலம் பிரபலமாகி நன்றாக சம்பாதித்து நாடிநரம்பு அடங்கியபிறகு ஓட்டு அறுவடை செய்ய அரசியலுக்கு வரவிரும்பும் நடிகர் போல அவர் சுயநலவாதி கிடையாது.
. . . . . . . . . .

கே: சீமானை விட்டு பல இனவுணர்வாளர்கள் விலகியது ஏன்

ப: அவசரம்தான் காரணம். தமிழினத்தின் அரசியல் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது.
காலம் தேவை.
இனத்தின் மீது அதிக பற்று கொண்டோர் அந்த அளவு பொறுமையாக இருக்கமுடியவில்லை.
வெளியே வந்தவர்கள் பெரிதாக சாதிக்கவும் இல்லை.
. . . . . . . . . .

கே: சீமான் முதலமைச்சர் ஆகிவிட்டால் தமிழ்தேசியம் அமைந்ததாக ஆகிவிடுமா?

ப: சீமான் முதலமைச்சராவது தமிழ்தேசியத்தில் 5% ஐக் கூட பூர்த்தி செய்யாது.
ஆனால் முதல்படியாக அமையும்.
அதாவது மக்களிடம் இனவுணர்வும் மொழியுணர்வும் அரசியல் விழிப்புணர்வும் பொருளாதார பலமும் ஏற்படுவது முதல் அடி ஆகும்.
. . . . . . . .

கே: சீமான் பெரிதாக வாக்கு பெறவில்லையே!?

ப: இங்கே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நம்பத் தகுந்தவை கிடையாது.
அதிலும் ஊழல் நடக்கிறது.
ஒரு கட்சி 50% மக்களின் ஆதரவைப் பெற்றால்தான் அவர்களுக்கு 20% ஓட்டாவது விழும்.
அதாவது நாம்தமிழருக்கு போடப்பட்ட ஓட்டில் மூன்றில் ஒன்றுதான் நாம்தமிழருக்கு பதிவாகும்.
திரும்ப சரிபார்க்க எந்த வழியும் கிடையாது.
அதனால்தான் வளர்ந்த நாடுகள் போல வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர பல்வேறு கட்சிகள் கோருகின்றன.
. . . . . . . .

கே: சீமான் மலையாளி என்கிறார்களே?

ப: சீமான் தமிழர்தான்.
அவர் பிறந்த நாடார் குலம் கேரளாவிலும் உள்ளதால் அதைவைத்து குழப்புகிறார்கள்.
கேரளாவில் பாதி தமிழர் மண்.
அதில் வாழும் நாடார்கள் உட்பட பல்வேறு தமிழ் பேசும் சாதிகள் தமிழர்களே!
பிரபாகரனே மலையாளிதான் என்று கதைகட்டி அவரது உறவினர்கள் என்று சில மலையாளிகளைப் பேட்டி எடுத்து வடயிந்திய ஊடகங்கள் வெளியிட்டன.
ஆனால் பிரபாகரன் குடும்பம் வல்வெட்டித்துறையில் பாரம்பரியமான பிரபலமான குடும்பம் ஆகும்.
சீமான் மலையாளி என்பதும் அதுபோல எந்த அடிப்படையும் இல்லாத கட்டுக்கதை.
. . . . . . .

கே: சீமான் தமிழர் என்ற ஒரு தகுதி போதுமா?

ப: போதாதுதான்.
சீமான் மாநில உரிமைகள் மூலம் முன்வைக்கும் திட்டங்களும் தீர்வுகளும் இதுவரை எந்த முதலமைச்சர் வேட்பாளரும் முன்வைத்த ஆட்சிமுறையை விட சிறப்பாக உள்ளன.
யார் யாருக்கோ வாய்ப்பு கொடுத்துவிட்டோம்.
சீமானுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பதில் என்ன தவறு?
வாய்ப்பு கொடுக்குமுன்னே குற்றம்சாட்டுவது நிராகரிப்பது எந்தவகையில் நியாயம்?
. . . . . . . .

கே: சீமான் எந்த குறையுமே இல்லாதவர் என்கிறீர்களா?

ப: இல்லை. குறைகளை விட நிறைகள் அதிகம் எனலாம்.
குறையே இல்லாத சொக்கத் தங்கம்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்றால் அப்படி ஒருவர் வரவே போவதில்லை.
. . . . . . . . . . 

கே: சீமான் மாவீரரான ஒரு ஈழப்போராளியின் மனைவிக்கு வாழ்க்கை கொடுப்பதாக இருந்ததே!
பிறகு ஏன் வசதியான வீட்டில் பெண் எடுத்தார்?

ப: சீமான் ஒரு ஈழத்தமிழரை மறுமணம் செய்வதற்கு பேச்சு நடந்தது. ஆனால் அந்த பெண் மறுத்துவிட்டார்.
பேச்சு ஆரம்பத்திலேயே முறிந்துவிட்டது.
இதேபோல விஜயலட்சுமி என்ற பெண்ணும் சீமான் மீது புகார் கொடுத்து அது ஆதாரம் எதுவுமில்லாமல் தள்ளுபடி ஆனது.
சீமான் மீது அவதூறு சுமத்தவே இவை பெரிதாக்கப்படுகின்றன.
. . . . . . . . . . .

கே: சீமான் தனித்தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் தொடங்கினால் ஆதரிப்பாரா?

ப: சீமான்தான் இந்தியாவிற்கு நாம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு.
சீமான் பதவியில் அமர்ந்து ஜனநாயக வழியில் காவிரி பங்கீடு மறுப்பு , மீனவர் கொலை, பேரழிவு திட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவார்.
இந்தியாவில் ஜனநாயகம் பெரும்பாலும் நசுக்கவே படும்.
சீமான் முன்வைக்கும் மாநில உரிமைகள் மூலமான தீர்வு எடுபடாத பிறகு மக்கள் புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி விடுதலைக்காகப் போராடுவார்கள்.
ஈழத்தில் தந்தை செல்வா போல தமிழகத்திற்கு சீமான் அமையவுள்ளார்.
அவ்வளவுதான்.

(நான் நாம்தமிழர் கட்சியில் இல்லை. ஆதரவாளன் மட்டுமே)

Thursday, 19 May 2016

சீமான் ஏன் தோற்றார் தெரியுமா?

சீமான் ஏன் தோற்றார் தெரியுமா?

கொஞ்சநாளைக்கு கட்சி அரசியல் பேசுறத விட்ரலாம்னு யோசிச்சேன்.

அப்றம்தான் புரிஞ்சது
நாமதான் கட்சி அரசியல் பேசினதே இல்லையே!

சீமான் அண்ணனுக்கு சாதகமா 3,4 பதிவு போட்டேன்.

மற்றபடி ஆயுத அரசியல்தான் எப்போதும் பேசுறேன்.

ஓட்டு அரசியல்லாம் சரி வராது.
விடுதலை ஆயுதம் ஏந்தினாதான் கிடைக்கும்னு முடிவு பண்ணினது எவ்வளவு சரியா இருக்குது.

ஆம்ம்ம்மா....??????

பத்துவயசு பையன் வரைக்கும் காறி காறி துப்பின தி.மு.க காங்கிரஸ் கூட்டணி இவ்வளவு இடம் வெல்றதும் ?!

அ.தி.மு.க மீது மக்களுக்கு இருந்த வெறுப்பையும் மீறி அது பெருவாரியா வெல்றதும் ?!

பா.ம.க ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாம தோற்கறதும் ?!

திருமாவளவன், கிருஸ்ணசாமி வெறும் 100 வாக்குகள்ல தோக்றதும்

நாம் தமிழர் எந்த இடத்திலும் 10,000 வாக்குகூட வாங்காம போனதும் கூட ஏத்துக்கலாம்

சீமான் தோற்றதகூட ஏத்துக்கலாம்

ஆனா எந்த ஊடகமும் இல்லாமலே 2லட்சம் பேர் வரை மக்களைக் கூட்டி மேடைபோட்ட சீமானுக்கு வைப்புதொகை(டெபாசிட்) கூட கிடைக்காம போனதுலாம் ரொம்ம்ம்ம்ம்ப அதிகம்.

இத ஒரு நேர்மையான தேர்தல்னு கேணப்பயதா நம்புவான்

அதெப்படிப்பா முன்னேறிய நாடுகள் கூட வாக்குசீட்டு பயன்படுத்தும்போது

தொடர்வண்டி பயணச்சீட்டை பதிவு பண்ணும் அரச இணையதளம் கூட உருப்படியா வடிவமைக்கத் துப்பில்லாத இவனுக வாக்கு இயந்திரம் சொந்தமா தயாரிச்சு பயன்படுத்துறது??

அதுல மாற்றி வாக்குபதிவு ஆகும்னு ரெண்டுபேர் நிரூபிச்ச பிறகும் அந்த வாக்கு இயந்திரத்த நாங்க நம்பணுமா??

#விலைக்கு_வாங்கப்பட்ட_தேர்தல்
#ஆயுதமே_ஒரே_வழி