Showing posts with label விஜய். Show all posts
Showing posts with label விஜய். Show all posts

Sunday, 27 October 2024

ரசிக மனப்பான்மை

ரசிக மனப்பான்மை

  குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என்கிற ஆசை எல்லா மனிதனுக்கும் உண்டு அதுவும் இளைஞரான ஒருவன் ஏதோ ஒரு கூட்டத்திற்குள் போய் சேர்ந்து கொள்வது இயல்பான எண்ணம்.
 சங்கம், இயக்கம், நிறுவனம், மடம், கட்சி, சமூக சேவை என எதிலாவது சேர்ந்து குடும்பத்துக்கு வெளியே ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொள்வது அவசியம்.
 அதிலும் குறிப்பாக ஆண்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்கள் தமது தொடர்பு வட்டத்தை பெரிதாக்குவது மிக அவசியம்.
 குழுவில் அங்கமாக இருக்கும் ஒருவனைத்தான் ஒரு பெண்ணும் விரும்புவாள். இதை 'Women like men in umiform' என்பர்.
 ஆனால் இவற்றில் எதில் இணைய வேண்டும் என்றாலும் அடிப்படையான சில தகுதிகள் தகுதிகள் வேண்டும்.
சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களில் சேர்வதும் உண்டு.
 அதற்கும் கூட சில தகுதிகள் வெண்டும்.
இப்படி எந்த தகுதியுமே இல்லாதவர்கள் தேர்ந்தெடுப்பது ரசிகர் குழு.
  எவன் வேண்டுமானாலும் சேரலாம் சேர்ந்த பிறகும் எதுவும் செய்யவேண்டியது இல்லை. பொழுதுபோக்கலாம் கூத்தடிக்கலாம் அவ்வளவுதான்.
 தொண்டனுக்கும் ரசிகனுக்கும் சிறிய வேறுபாடு இருக்கிறது. 
 தலைவன் சொன்னால் தொண்டர் அதை பின்பற்ற முயல்வான் ஆனால் ரசிகன் தன் தலைவன் கூறினாலும் செய்ய முயல்வது கிடையாது.
 இளைஞர்களுக்கு ஹீரோ ஆகவேண்டும் என்கிற எண்ணமும் இயல்பானது. அந்த எண்ணம் சமூகத்திற்கு நன்மை செய்யவும் வழிவகுக்கும்.
 ஆனால் ரசிகன் என்பவன் தன் மனதிற்குள் இருக்கும் ஹீரோவை கொன்றவன்.
 எந்த கொடுமையைக் கண்டாலும் பயந்து ஓடுகிற கோழை!
 துளியும் தன்னம்பிக்கை இல்லாதவன். உளவியல் ஊனமுற்றவன்.  சினிமாவை உண்மையென்று நினைப்பவன் அதாவது கனவுக்கும் நிஜத்திற்கு வேறுபாடு அறியாத குழந்தை!
 இத்தகையவர்கள் இக்காலத்தில் மிக அதிகம்!
இவர்களை கருத்தில் கொள்ளவேண்டும் 'do not underestimate stupid people in large number' என்பதற்கு ஏற்ப.
 இவர்கள் தலைவராக ஏற்றுக் கொண்டவர் இவர்களை பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்வார்.
 வெகு சிலரே தனது ரசிகர்களை நிஜமாகவே நல்வழிப்படுத்த முயல்வார்கள்.
 வெகு சில ரசிகர்களும் பிற்பாடு பக்குவப்பட்டு சராசரி மனிதனாக மாறுவதும் உண்டு.
 நடிகர் விஜய் இப்போது வரை தன் ரசிகர்களை முறைப்படுத்த முயன்றது இல்லை.
  ரிட்டையர்ட் நடிகர்கள் வழக்கமாக செய்வது போல அவர் நடிப்பு வாழ்க்கை முடிந்த பிறகு அரசியலுக்கு வரவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ளும்போது ஒரு நம்பிக்கை பிறக்கிறது.
 இன்று நடந்த மாநாடு கூட அதன் திட்டமிடல், நிகழ்வுகள், பேச்சு என்று பார்த்தால் நம்பிக்கை தருவதாக உள்ளது.
 எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார் என்றால் அவர் ஒரு கட்சியில் பல ஆண்டு பயணித்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பிறகுதான் கட்சி தொடங்கினார்.
 விஜய் ஒரு தேர்தலை சந்தித்த பிறகுதான் அவருக்கு அரசியல் பிடிபடும்.
 இப்போதே அவரைப் பற்றி கணிப்பது சரியாக இருக்காது.
 பொறுத்திருந்து பார்ப்போம்!
 

Sunday, 4 February 2024

மீனவர் கொலை இலங்கையை கண்டித்த விஜய்

மீனவர் கொலை இலங்கையை கண்டித்த விஜய் 

 2011 இல் மீனவர் படுகொலை அதிகம் நடந்தபோது நாகைப்பட்டிணத்தில் இலங்கை அரசைக் கண்டித்து விஜய் மக்கள் இயக்கம் நடத்திய கூட்டத்தில் விஜய் பேசினார்.

அதன் சாராமசம்,

 "தமிழனாக இங்கே வந்திருக்கிறேன்"
"540 மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் 1000 மீனவர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்"
"மத்திய மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பது புரியவில்லை"
"பொறுமையை சோதிக்காதீர்கள் இலங்கை என்கிற நாடு வரைபடத்தில் இல்லாமல் போய்விடும்"
"ரசிகர்கள் பிரதமருக்கும் முதல்வருக்கும் தந்தி கொடுககும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டுகிறேன்"
 

மேலும், 2009 இல் ஈழம் இனப்படுகொலை க்கு உள்ளான போது கண்டுகொள்ளாமல் இருந்தது தமிழ் திரைத்துறை!
 ஏனென்றால் அது வந்தேறிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கிறது!
இருந்தும் திரைத்துறையில் முதன்முதலாக தனி மனிதனாக தன் தாயுடன் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தவர் விஜய்!
 

Thursday, 19 October 2017

அரசியலும் திரைத்துறையும்

அரசியலும் திரைத்துறையும்

திராவிடத்தின் காலம் முடிந்துவிட்டது.
வெற்றிடம் உருவாகிவிட்டது.

ஹிந்தியர், வடுகர், தமிழர் மூவரும் காய்நகர்த்துவது தொடங்கிவிட்டது.

இது அனைத்து துறைகளிலும் நடக்கிறது.

உலகத் தமிழர்களை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் இரண்டு விடயங்கள் தமிழ்மொழி மற்றும் பிரபாகரன் எனும் பெயர் என்பார் அண்ணன் சீமான்.

மூன்றாவதும் ஒன்று இருக்கிறது.
அதுதான் தமிழ் திரைத்துறை.

இதில் திறமையும் உழைப்பும் பெரும்பாலும் தமிழருடையது.
(அதாவது இயக்கம், வசனம், இசை, தொழில்நுட்பம், சண்டைப் பயிற்சி)

புகழும் பணமும் பெரும்பாலும் வந்தேறிகளுக்கு
(தயாரிப்பு, நடிப்பு, நிதி, வெளியிடல்)

இதிலே வடுகம் முதலில் களமிறக்கிய தெலுங்கர் விஜயகாந்த் புத்தி பேதலித்துவிட்டதால் தோல்வியடைந்தார்.
ஆனாலும் வடுகம் திறமையாக காய்நகர்த்தி அசல் தெலுங்கர் விசாலை தலைமைக்கு உயர்த்தி தமிழ் சினிமாவை ஒழிக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ எல்லாம் செய்கிறது. 
தனுஷ், ஜெயம் ரவி போன்ற தெலுங்கர்களை முன்னணிக்கு கொண்டுவந்தது.
நன்கு வளர்ந்துவந்த தமிழர் சந்தானத்தை வீழ்த்தி அந்த இடத்தில் தெலுங்கன் சிவகார்த்திகேயனை கொண்டுவந்தது
அதற்கடுத்து தெலுங்கர் சமுத்திரகனி, கன்னடர் ஹிப்ஹாப் ஆதி, தெலுங்கர் விஜய் சேதுபதி என அடுத்தடுத்த வாரிசுகளை உருவாக்கி வைத்துள்ளது.
(இதில் ஆதி சல்லிக்கட்டு போராட்டத்தில் அம்பலப்பட்டு விட்டார்).
தமிழருக்காக குரல் கொடுத்த சத்யராஜை மன்னிப்பு கோரவைத்தது,
ஒரு நடிகை தண்ணீர் பிச்சை எடுப்பவர்கள் என தமிழரை பேசவைத்தது,
தற்போது மெர்சல் பேனர்களை கிழித்தது என கன்னடர் வெளிப்படையான இனவெறுப்பையும்
தெலுங்கர் மறைமுகமான இனவெறுப்பையும் காட்டிவருகின்றனர்.
ஆந்திரா உடைந்தபோது இறங்கியிருந்த தெலுங்கரின் திமிர் பாகுபலி வந்ததும் மீண்டும் கூடிவிட்டது.

தமிழ்தேசியம் முதல் அடியே பேரடியாக சீமானை களத்தில்  இறக்கியது.
இளைய தலைமுறை மத்தியில் அரசியலை கைப்பற்றி வருகிறது.
(இங்கே தமிழர் முருகதாஸ் எடுத்து தமிழர் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தை இந்த இடத்தில் குறிப்பிடலாம்)
அமீர், பாரதிராஜா போன்ற இயக்குநர்களையும் அவ்வப்போது குரல் கொடுக்க வைத்து கருத்துக் களத்தில் இறக்கியது.
(அதையும் ஒரு தமிழனான ரஞ்சித்தை வைத்தே குழப்பியது ஹிந்தியம்).
பாதி தெலுங்கரான டி.ஆர் மற்றும் அவரது மகன் சிம்பு அவ்வப்போது தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.

மிக மொக்கையாக காய்நகர்த்திய ஹிந்தியம் மராத்தியன் ரஜினியை முன்னிறுத்தியது.
அவன் களத்திலும் இறங்காமல் சும்மாவும் இருக்காமல் பம்மாத்து காட்டிவருகிறான்.
(அவன் குடும்பத்தை ஏற்கனவே வடுகம் வளைத்துவிட்டது).
பிறகு தமிழரான கங்கை அமரனை இறக்கியது.
அதுவும் தோல்வியில் முடிந்தது.

கடைசியாக திராவிடம் கன்னடன் கமலஹாசனை களத்தில் இறக்கியது.
இந்த இடத்தில் திராவிடம் சறுக்கிவிட்டது.

இந்த சரியான நேரத்தில் தற்போது தமிழ்தேசியம் தமிழர்களான அட்லி மற்றும் ரகுமானுடன் அதிரடியாக தமிழரான விஜயை களத்தில் இறக்கியுள்ளது.

விஜய் இதுவரை தமிழர்களுக்காக குறிப்பிடும் அளவில் எதையும் செய்யாதவர் என்றாலும் அடிப்படை தமிழ் உணர்வு உள்ளவர்.
இனத்திற்கு எதிரானவர் கிடையாது.
ஆக தமிழ்தேசியத்தின் திரைப்பட அடையாளமாக உருவெடுக்க அவர் எல்லாவிதத்திலும் பொருத்தமானவர்.
மலையாளி அஜித்தின் போட்டியை மிக அழகாக சமாளித்து ஒரு படி மேலே நிற்பதே விஜயின் வெற்றிக்குக் காரணம்.

அரசியலும் திரைத்துறையும் மிக நெருக்கமானது.
தெலுங்கர் கருணாநிதி, தெலுங்கர் விஜயகாந்த், மலையாளி எம்.ஜி.ஆர், கன்னடர் ஜெயலலிதா என பலர் திரைத்துறையில் அடைந்த புகழ் மூலமாக அரசியலுக்கு வந்தவர்கள்தான்.

விஜய் இந்த முறை ஓரளவு வெற்றிதான் அடையமுடியும்.
தொடர்ந்து தமிழ்தேசிய சிந்தனையை ஒட்டியவாறு பயணித்தால் குறுகிய காலத்தில் தமிழ்த் திரைத்துறையின் உச்சத்தைத் தொடலாம்.

அரசியலில் அவர் நேரடியாக இறங்குவது அவசியமற்றது என்றே கூறுவேன்.