Thursday 19 October 2017

அரசியலும் திரைத்துறையும்

அரசியலும் திரைத்துறையும்

திராவிடத்தின் காலம் முடிந்துவிட்டது.
வெற்றிடம் உருவாகிவிட்டது.

ஹிந்தியர், வடுகர், தமிழர் மூவரும் காய்நகர்த்துவது தொடங்கிவிட்டது.

இது அனைத்து துறைகளிலும் நடக்கிறது.

உலகத் தமிழர்களை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் இரண்டு விடயங்கள் தமிழ்மொழி மற்றும் பிரபாகரன் எனும் பெயர் என்பார் அண்ணன் சீமான்.

மூன்றாவதும் ஒன்று இருக்கிறது.
அதுதான் தமிழ் திரைத்துறை.

இதில் திறமையும் உழைப்பும் பெரும்பாலும் தமிழருடையது.
(அதாவது இயக்கம், வசனம், இசை, தொழில்நுட்பம், சண்டைப் பயிற்சி)

புகழும் பணமும் பெரும்பாலும் வந்தேறிகளுக்கு
(தயாரிப்பு, நடிப்பு, நிதி, வெளியிடல்)

இதிலே வடுகம் முதலில் களமிறக்கிய தெலுங்கர் விஜயகாந்த் புத்தி பேதலித்துவிட்டதால் தோல்வியடைந்தார்.
ஆனாலும் வடுகம் திறமையாக காய்நகர்த்தி அசல் தெலுங்கர் விசாலை தலைமைக்கு உயர்த்தி தமிழ் சினிமாவை ஒழிக்க என்னவெல்லாம் செய்யவேண்டுமோ எல்லாம் செய்கிறது. 
தனுஷ், ஜெயம் ரவி போன்ற தெலுங்கர்களை முன்னணிக்கு கொண்டுவந்தது.
நன்கு வளர்ந்துவந்த தமிழர் சந்தானத்தை வீழ்த்தி அந்த இடத்தில் தெலுங்கன் சிவகார்த்திகேயனை கொண்டுவந்தது
அதற்கடுத்து தெலுங்கர் சமுத்திரகனி, கன்னடர் ஹிப்ஹாப் ஆதி, தெலுங்கர் விஜய் சேதுபதி என அடுத்தடுத்த வாரிசுகளை உருவாக்கி வைத்துள்ளது.
(இதில் ஆதி சல்லிக்கட்டு போராட்டத்தில் அம்பலப்பட்டு விட்டார்).
தமிழருக்காக குரல் கொடுத்த சத்யராஜை மன்னிப்பு கோரவைத்தது,
ஒரு நடிகை தண்ணீர் பிச்சை எடுப்பவர்கள் என தமிழரை பேசவைத்தது,
தற்போது மெர்சல் பேனர்களை கிழித்தது என கன்னடர் வெளிப்படையான இனவெறுப்பையும்
தெலுங்கர் மறைமுகமான இனவெறுப்பையும் காட்டிவருகின்றனர்.
ஆந்திரா உடைந்தபோது இறங்கியிருந்த தெலுங்கரின் திமிர் பாகுபலி வந்ததும் மீண்டும் கூடிவிட்டது.

தமிழ்தேசியம் முதல் அடியே பேரடியாக சீமானை களத்தில்  இறக்கியது.
இளைய தலைமுறை மத்தியில் அரசியலை கைப்பற்றி வருகிறது.
(இங்கே தமிழர் முருகதாஸ் எடுத்து தமிழர் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தை இந்த இடத்தில் குறிப்பிடலாம்)
அமீர், பாரதிராஜா போன்ற இயக்குநர்களையும் அவ்வப்போது குரல் கொடுக்க வைத்து கருத்துக் களத்தில் இறக்கியது.
(அதையும் ஒரு தமிழனான ரஞ்சித்தை வைத்தே குழப்பியது ஹிந்தியம்).
பாதி தெலுங்கரான டி.ஆர் மற்றும் அவரது மகன் சிம்பு அவ்வப்போது தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.

மிக மொக்கையாக காய்நகர்த்திய ஹிந்தியம் மராத்தியன் ரஜினியை முன்னிறுத்தியது.
அவன் களத்திலும் இறங்காமல் சும்மாவும் இருக்காமல் பம்மாத்து காட்டிவருகிறான்.
(அவன் குடும்பத்தை ஏற்கனவே வடுகம் வளைத்துவிட்டது).
பிறகு தமிழரான கங்கை அமரனை இறக்கியது.
அதுவும் தோல்வியில் முடிந்தது.

கடைசியாக திராவிடம் கன்னடன் கமலஹாசனை களத்தில் இறக்கியது.
இந்த இடத்தில் திராவிடம் சறுக்கிவிட்டது.

இந்த சரியான நேரத்தில் தற்போது தமிழ்தேசியம் தமிழர்களான அட்லி மற்றும் ரகுமானுடன் அதிரடியாக தமிழரான விஜயை களத்தில் இறக்கியுள்ளது.

விஜய் இதுவரை தமிழர்களுக்காக குறிப்பிடும் அளவில் எதையும் செய்யாதவர் என்றாலும் அடிப்படை தமிழ் உணர்வு உள்ளவர்.
இனத்திற்கு எதிரானவர் கிடையாது.
ஆக தமிழ்தேசியத்தின் திரைப்பட அடையாளமாக உருவெடுக்க அவர் எல்லாவிதத்திலும் பொருத்தமானவர்.
மலையாளி அஜித்தின் போட்டியை மிக அழகாக சமாளித்து ஒரு படி மேலே நிற்பதே விஜயின் வெற்றிக்குக் காரணம்.

அரசியலும் திரைத்துறையும் மிக நெருக்கமானது.
தெலுங்கர் கருணாநிதி, தெலுங்கர் விஜயகாந்த், மலையாளி எம்.ஜி.ஆர், கன்னடர் ஜெயலலிதா என பலர் திரைத்துறையில் அடைந்த புகழ் மூலமாக அரசியலுக்கு வந்தவர்கள்தான்.

விஜய் இந்த முறை ஓரளவு வெற்றிதான் அடையமுடியும்.
தொடர்ந்து தமிழ்தேசிய சிந்தனையை ஒட்டியவாறு பயணித்தால் குறுகிய காலத்தில் தமிழ்த் திரைத்துறையின் உச்சத்தைத் தொடலாம்.

அரசியலில் அவர் நேரடியாக இறங்குவது அவசியமற்றது என்றே கூறுவேன்.

No comments:

Post a Comment