Monday 5 October 2015

ஒருலட்சம் ஆண்டுகள் பழமை

ஒரு லட்சம் ஆண்டு பழமை

சென்னை அருகே ஒரு நூறாயிரம் ஆண்டுகள் பழமையான குகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பழைய கற்கால மாந்தர்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன.

சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில் குடியம் (கூடியம் என்றும் கூறுகிறார்கள்) சிற்றூரிலிருந்து 4.கி.மீ தொலைவில் உள்ள இரண்டு குகைகள் நூறாயிரம் (1,00,000)ஆண்டுகள் பழமையானது என்றால் நம்பமுடிகிறதா?
நுழையமுடியாத அளவு இன்னும் 16குகைகள் உள்ளனவாம்.
இந்த இரண்டு குகைகளுக்கும் செல்ல ஒற்றையடிப் பாதையில் நடந்துதான் செல்லவேண்டும்.
மாணிச்சம்மன் கோவில் என்ற ஒரு சிறிய கோவில் உள்ளது.
அதனால் குடியம் மக்கள் அவ்வப்போது போய்வருகிறார்கள்.

இதை முதன்முதலில் கண்டறிந்தவர் வழக்கம்போல ஒரு பிரிட்டிஷ்காரர் ராபர்ட் ப்ரூஸ் பூட் (Sir.Robert Bruce Foote) என்பவர்.
1863ல் கண்டறிந்தாராம்.

ராபர்ட் ப்ரூஸ் ஃபுட் தனது வாழ்நாள் முழுதும் சேகரித்த தொல்லியல் தடய பொருட்களின் எண்ணிக்கையானது இந்தியாவில் இருந்து 4135,
இலங்கையில் இருந்து 128 ஆகும்.

இவை அனைத்தையும் 1904 -ல் சென்னை அருங்க்காட்சி ( Chennai Museum) வசம் ஒப்படைத்துள்ளார்.
இவை அனைத்தும் பல ஆண்டுகளாக பூட்டி வைக்க பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அவ்வப்போது ஆய்வுகள் நடபெற்று வந்தாலும், 1965க்குப் பிறகு இப்படி ஒரு குகை இருந்தது என்பதையே தமிழக அரசு மறந்துவிட்டது.
நன்றாக புதர்மண்டிய பிறகு இதை புலிக்குன்றம் 'பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி' வேறு ஆக்கிவிட்டார்கள்.

இந்தநிலையில் இது பற்றி கேள்விப்பட்ட தகவல் தொழில்நுட்பத் (I.T)துறையில் இருக்கும் திரு.ரமேஷ் யந்த்ரா என்பவர் விக்கிபீடியாவில் தேடிப்பார்த்துள்ளார்.
எதுவுமே கிடைக்கவில்லை.
இப்படி ஒரு பெருமை உலகிற்கு தெரியாமல் உள்ளது என்பது அவரால் தாங்கமுடியவில்லை.

தானே இதை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டுவது என்று முடிவுக்கு வந்தார்.
தனது நண்பரான திரு.வசந்தகுமார் என்பவரை சேர்த்துக்கொண்டார்.

இதை சாதிக்க அத்தனை எளிதாக விட்டுவிடுவார்களா அரசு அதிகாரிகள்?
முடிந்தவரை முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
ஒருமுறை இசைவு (அனுமதி)கொடுத்துவரச் சொல்லி எல்லாம் ஆயத்த(தயார்) நிலையில் இருக்கும்போது இசைவு இல்லை என்று திரும்பிப்போகச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி பல அரசு அதிகாரிகளின் அசட்டைப் போக்கையும் மீறி,
தானே பொருள் செலவு செய்து,
நேரத்தை கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்து,
அலைந்து திரிந்து,
பல தமிழார்வலர்களிடம் உதவி கேட்டு,
மூன்றாண்டுகள் படாதபாடு பட்டு தனி ஒருவனாக ஒரு தரமான ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார்.

‘Gudiyam Caves: Stone age rock shelter of South India'
எனும் இவரின் ஆவணப்படம், கடந்த மே மாதம் (பிரான்சில்)நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டையும் பெற்றுள்ளது.

"வந்தேறிகளின் தேசமாக பல நாடுகள் இருக்கின்றன.
தொடர்ச்சியாக மனித குலம் வாழ்ந்துகொண்டிருக்கும் பிரதேசங்கள் இந்த பூமியில் மிகக் குறைவு.
அவற்றில் தமிழகமும் ஒன்று.
கற்காலத்திலிருந்து மனிதன் நம் மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் வாழும் மண் இது என்பதை அடித்துச் சொல்கிறது குடியம் குகை!’’
- ரமேஷ் யந்திரா.
(குங்குமத்திற்கு அளித்த பேட்டியில்)

https://ta.m.wikipedia.org/wiki/குடியம்_குகை
http://gudiyamcaves.rameshyanthra.com/
www.rameshyanthra.com

நிஜம் நிகழ்ச்சியில்
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=Vsm-yYIYGk8

2014ல் இங்கே மக்களைக் கூட்டிச்சென்று புகைப்படம் எடுத்துக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திரு.வீரராகவ ராவ்,
மக்கள் வந்து பார்த்து செல்ல இப்பகுதி சுற்றுலாத் தலமாக ஆக்கப்பட்டு அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்று கூறினார்.

ஒரு மண்ணாக்கட்டியும் நடக்கவில்லை
www.dinamani.com/tamilnadu/2015/09/25/அறிவித்து-ஓராண்டு-ஆகியும்-ச/article3045921.ece

மறுபடியும் புதர்மண்டிப் போகுமோ?????

No comments:

Post a Comment